என்ன கொடுமை சரவணன்??? என்னைய பார்த்து உங்கிட்ட இருக்கிற 5 விசித்திரமான குணம் என்னனு சொல்ல சொல்லிருக்கான் நம்ம பாசக்கார பையன் "ஜி". இதுக்கு முன்னாடி 9 விசித்திரமான குணங்களை சொல்ல சொல்லிருந்தாரு பாபா. அதுக்கே என்ன எழுதறதுனு தெரியாம எஸ்ஸாயிட்டேன். அவரும் பெருந்தன்மையா சின்ன பையன்னு விட்டுட்டாரு. சரி இப்ப ரெண்டு பேருக்காகவும் சேர்ந்து எழுதிடலாம்...
ஏற்கனவே நான் ப்ளாக் படிச்சிட்டு சிரிக்கறதை பார்த்த என் புது ரூமேட் என்னை விசித்திரமாத்தான் பாக்கறாரு. சரி இருந்தாலும் சொல்றேன்...
1. ராமாயணம், மகாபாரதம் - இந்த கதைகள் ஓரளவுக்கு தெரியும். அதனால எங்க வீட்ல இருக்கற பெரியவங்களுக்கு (எங்க பாட்டி, எங்க அக்கா மாமியார்) எல்லாருக்கும் நல்லா கதை சொல்லுவேன். நான் சொல்றதை கேட்க கேட்க அவுங்களுக்கு அப்படியே ஆனந்தமா இருக்கும். அதுல நிறைய நீதிய வேற சொல்லுவேன். கடைசில சொல்லி முடிச்சிட்டு இதெல்லாம் வெறும் கதை தான். உண்மையா நடக்கல. அதே மாதிரி இது ஒரு ஆள் எழுதின கதையில்லை. பல வருடங்களாக சொல்லப்பட்ட கதைகள். அதனால தான் ஓரளவுக்கு எல்லா பாத்திரங்களோட வெற்றி தோல்விக்கும் சரியான காரணங்கள் இருக்குனு சொல்லிடுவேன். அவுங்களுக்கு இதுக்கு இவன் சொல்லமலே இருந்திருக்கலாம்னு தோனும்.
2. கோவில் - நான் கோவிலுக்கு போகும் போது அங்க கூட்டமே இருக்கக்கூடாதுனு நினைப்பேன். விசேஷ நாட்களில் கோவிலுக்கு போவது சுத்தமாக பிடிக்காது. கோவில்ல நான் மட்டும் தனியா இருந்தா போதும்னு தான் ஆசைப்படுவேன். அதே மாதிரி கோவில்ல எவ்வளவு நெருக்கமானவர்களை பார்த்தாலும் பேச பிடிக்காது. ஆனா நிறைய பேர் அங்க தான் வந்து பாசமா பேசுவாங்க.
3. மதிப்பெண் - மார்க்குக்கு அதிகமா முக்கியத்துவம் கொடுக்காத மாதிரி இருந்தாலும், லேப்ல 90க்கு கீழ போட அனுமதிக்கவே மாட்டேன். அனுமதிக்க மாட்டேனா மார்க் ஷீட்டை புடுங்கிக்குவன்னு இல்லை. அந்த அளவுக்கு பெர்ஃபார்ம் பண்ணனும்னு ஆசைப்பட்டு செய்வேன். ஆனா தியரிக்கு படிக்க மாட்டேன். அதே மாதிரி ப்ராப்ளமேட்டிக் சப்ஜக்டா இருந்தா அதுல க்ளாஸ்ல முதல் மார்க் வரணும்னு படிப்பேன். தியரில மார்க் எடுக்கறது எல்லாராலையும் முடியும் ஆனா திறமை இருக்கவன் மட்டும் தான் ப்ராப்ளமாட்டிக் சப்ஜக்ட்ளையும், லேப்லயும் (சோப்பு போடாம) மார்க் வாங்க முடியும்னு ஒரு நினைப்புல திரியுவேன்.
4. சோம்பேறி - என் அளவுக்கு யாராவது இருப்பாங்களானு தெரியல. காலேஜ்ல சேர்ந்த புதுசுல காலேஜ் முடிஞ்சி வந்து 5 மணிக்கு படுத்து அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு எழுந்த நாட்கள் ஏராளம். இப்பவும் சனி, ஞாயிரெல்லாம் 1 மணிக்குத்தான் எழுந்திரிப்பேன். சாப்பிட சோம்பேறித்தனப்பட்டு சாப்பிடாம இருந்த நாட்கள் எல்லாம் உண்டு.
5. சினிமா - பிடித்த படங்களை எத்தனை முறை போட்டாலும் பார்ப்பேன். குறிப்பா பழைய படங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூணு பேரையும் ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி ரஜினி, கமல் படங்களும் ரொம்ப பிடிக்கும். பாட்ஷா படத்தை 100 முறைக்கு மேல பார்த்திருப்பேன். இப்ப போட்டாலும் முதல் தடவை பார்க்குற மாதிரி பார்ப்பேன். இதுக்கு தான் வீட்ல திட்டு விழும். பார்த்த படத்தையே எத்தனை தடவை பார்ப்பனு. பாட்டு கேக்க மாட்டேன். காமெடி சீன் எத்தனை தடவை போட்டாலும் பார்ப்பேன். காமெடி ரொம்ப பிடிக்கும்.
6. பொறுப்பு - ரொம்ப பொறுப்பான பிள்ளை மாதிரி திரியுவேன். பெங்களூர்ல இருக்கற வரைக்கும் ரூம்ல அக்கவுண்ட் எல்லாம் நான் தான் பார்த்துக்குவேன். அதே மாதிரி தினமும் ரூம்ல சமைக்கிறது எல்லாமே என்னை கேட்டுதான் நடக்கும். என்னைவிட பொறுப்பானவங்க இருந்தா நான் எந்த பொறுப்பையும் ஏத்துக்க மாட்டேன். அதே மாதிரி எனக்கு கொடுத்த பொறுப்புல யாரும் தலையிட்டாலும் பிடிக்காது.
யாராவது அவுங்க கஷ்டத்தை சொன்னா அவுங்களைவிட அந்த பிரச்சைனையை தீர்க்க நான் அதிகம் சிந்திப்பேன், முயற்சி செய்வேன். இதுவே பல நேரங்களில் பிரச்சனையாகிவிடும். ரூம்ல வேலை தேடறவங்க யாராவது படிக்கலைனா பயங்கரமா திட்டுவேன். கூப்பிட்டு வெச்சி தனியா பயங்கரமா அட்வைஸ் பண்ணுவேன். பூச்சாண்டி வராங்கற ரேஞ்ச்ல பாலாஜி வரானு சில சமயம் ரூம்ல வேலை தேடறவங்களை பயமுறுத்துற சம்பவங்களும் நடந்திருக்கு. இப்பவும் சில சமயம் பசங்களுக்கு வேலை தேடறதுக்கு எது படிக்கனும்னு போன் பண்ணி சொல்லுவேன். அவங்க மனசுல திட்னாலும் திட்டுவானுங்க. இருந்தாலும் கவலைப்பட மாட்டேன்.
7. ராகு காலம் - கடலூர்ல ஹாஸ்டல்ல சேர்ந்தப்ப, ஒவ்வொரு வாரமும் உடம்பு சரியில்லாம போயிடும். ஒரே காரணம் டான்சில்ஸ் தான். ஆனா ஞாயித்தி கிழமை ராகு காலத்துல போறதாலதான் உடம்பு சரியில்லாம போயிடுதுன்னு வீட்ல சொல்லி சொல்லி எதை செஞ்சாலும் ராகு காலம் பார்த்து செய்ய ஆரம்பிச்சிட்டேன். ஆனா பாருங்க எங்க காலேஜ் எல்லா செமெஸ்டரும் ராகு காலத்துல தான் ஆரம்பிப்பானுங்க. இதனால தான் எனக்கு சரியா மார்க் வர மாட்டிங்குதுனு வீட்ல கதை விடுவேன். கொஞ்சம் செண்டிமெண்ட் பார்ப்பேன்.
8. காபி - எனக்கு காபி ரொம்ப பிடிக்கும். ஆனா அது இப்படித்தான் இருக்கனும்னு ஒரு ரூல்ஸ் இருக்கு. பால்ல தண்ணி ஊத்த கூடாது. நல்ல ஸ்ட்ராங்க இருக்கனும். சக்கரை அதிகமா இருக்கக்கூடாது. காபினா கொஞ்சம் கசக்கனும். கோவை அண்ணபூர்ணால காப்பி குடிச்சிருக்கீங்களா??? அந்த மாதிரினு வெச்சிக்கோங்க.
9. மொக்கை - ஓவரா மொக்கை போடுவேன். ஹாஸ்டல்ல எவனுக்கு போர் அடிச்சாலும் எங்க ரூம்ல எங்கிட்ட பேச வந்திடுவானுங்க. பரிட்ச சமயம்னா எவனும் ரூம் பக்கமே வரமாட்டானுங்க. என் ரூமேட்ஸ் கூட வேற ரூமுக்கு ஓடிடுவானுங்க. அப்பறம் வேற வழியில்லாம ரூமுக்கு வெளிய டேபிலும் சேரும் எடுத்து போட்டு போற வரவன வம்புக்கு எழுத்துட்டு இருப்பேன்.
சரி அடுத்த 5 பேரை கூப்பிடனுமாம். நான் கூப்பிடறேன். நீங்க எழுதிருந்தா ஃபிரியா விடுங்க. இல்லைனா கண்டிப்பா எழுதுங்க...
1. கப்பி
2. தம்பி
3. ஜொள்ளு பாண்டி
4. KRS
5. செந்தழல் ரவி
60 comments:
அய்யே... பண்டு பயலா நீ???
பல குணங்கள விசித்திர குணம்னு ஒத்துக்க முடியாது. சிலத மட்டும்தான் ஒத்துக்க முடியும்....
இந்தப் பரீட்சைல ஃபெயில்தான்.... நோ மதிப்பெண்...
// கோவில்ல நான் மட்டும் தனியா இருந்தா போதும்னு தான் ஆசைப்படுவேன். //
ஆனால் பாலாஜி கோவிலுக்குத்தான் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்களாம் ;-)))
//ஜி - Z said...
அய்யே... பண்டு பயலா நீ???
பல குணங்கள விசித்திர குணம்னு ஒத்துக்க முடியாது. சிலத மட்டும்தான் ஒத்துக்க முடியும்....
இந்தப் பரீட்சைல ஃபெயில்தான்.... நோ மதிப்பெண்... //
எலேய்,
நீ என்னுமே பெருசா விசித்திர குணத்த சொன்ன மாதிரி இல்ல பில்ட் அப் கொடுக்குற...
எனக்கு எப்பவுமே இண்டர்னெல் கம்மியாத்தான் போடுவாங்க. நீ போட்டது இண்டர்னல் மார்க். அது இருபதுக்குத்தான்.
மக்கள் வந்து மீதி 80க்கு போடுவாங்க. அதுல அசால்டா பாஸாயிடுவோம் ;)
// பாலராஜன்கீதா said...
// கோவில்ல நான் மட்டும் தனியா இருந்தா போதும்னு தான் ஆசைப்படுவேன். //
ஆனால் பாலாஜி கோவிலுக்குத்தான் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்களாம் ;-))) //
ஆஹா.. இதை நான் யோசிக்கவே இல்லையே :-))
hi vetti!!
nalla ezhuthi irukeenga..
idula vichitra gunamnu eduvume irukura mathiri theriyala...
seri ellaroda viewvum pakalam
Hi...
Neenga rombha nalla ezhudhareenga... naan un blogla neraya padikaren..... ungalukku external marks.. oru 65/80 podalam..... so first classla pass panniteenga...
congrats.. and thanks for writing.. nalla pozhudhu pogudhu.. Aani pudigittu vandhu unga blog padicha konjam sirikalam...
நான் மட்டும் தனியா இருந்தா போதும்னு தான் ஆசைப்படுவேன்.//
சாமி கூட வேண்டாமா?
சாமி கூட வேண்டாமா?
அந்த அளவுக்கு பெர்ஃபார்ம் பண்ணனும்னு ஆசைப்பட்டு செய்வேன். ஆனா தியரிக்கு படிக்க மாட்டேன். அதே மாதிரி ப்ராப்ளமேட்டிக் சப்ஜக்டா இருந்தா அதுல க்ளாஸ்ல முதல் மார்க் வரணும்னு படிப்பேன். தியரில மார்க் எடுக்கறது எல்லாராலையும் முடியும் ஆனா திறமை இருக்கவன் மட்டும் தான் ப்ராப்ளமாட்டிக் சப்ஜக்ட்ளையும்,//
நான் அப்படியே ஆப்போஸிட்டு
எனக்கு காபி ரொம்ப பிடிக்கும். ஆனா அது இப்படித்தான் இருக்கனும்னு ஒரு ரூல்ஸ் இருக்கு. பால்ல தண்ணி ஊத்த கூடாது.//
நமக்கும் தான் ப்ரூ காப்பி ரெண்டு கிளாஸ் குடிச்சே ஆவனும் ..இப்போ மனைவி வந்த பிறகு காபிலாம் வேணாம்னு பூஸ்ட் கொடுக்க ஆரம்பிச்சுட்டு ..இப்போ பூஸ்ட் ரெண்டு கிளாஸ் ஹி ஹி
சரி அடுத்த 5 பேரை கூப்பிடனுமாம். நான் கூப்பிடறேன். நீங்க எழுதிருந்தா ஃபிரியா விடுங்க. இல்லைனா கண்டிப்பா எழுதுங்க...
//
நம்மள மறந்துடீங்களல்லா ? ,ராகவன் கூப்பிடாருல்லா!!
ஆமாம் வெட்டி, இதுல நிறைய விசித்திரத்துல சேராது.. choose any five மாதிரி போட்டுட்டீங்க :)
என்ன கொடுமை சரவணன்??? 5 போட்டு இருப்பன்னு வந்து பார்த்த 9 போட்டு வச்சிருக்க ;-))
சரி....சரி....நான் உனக்கு மார்க் போடுறேன் செல்லம் ;-))
ஒவ்வொரு குணத்திற்கும் 100 மார்க்
1. எங்கக்கிட்ட தான் நல்லா கதை விடுவன்னு பார்த்தா வீட்டுலையும் அப்படி தானா, பாவம் அந்த பாட்டி - 35 மார்க்
2. \\கோவில்ல நான் மட்டும் தனியா இருந்தா போதும்னு தான் ஆசைப்படுவேன். அதே மாதிரி கோவில்ல எவ்வளவு நெருக்கமானவர்களை பார்த்தாலும் பேச பிடிக்காது. \\
இதுலா நிறைய உள்குத்து இருக்கும் போல இருக்கு???.....அதனால இதுல மார்க் கொஞ்சம் கம்மி தான் - 25
3. இதுல கொஞ்சம் உண்மை இருக்கு அதனால - 45
4. உன் அளவுக்கு இல்லைன்னாலும் ஒர் அளவுக்கு எனக்கும் இருப்பதால் - 55
5. சினிமா - என் இனம்டா நீ - 80
6. வெட்டி பாலாஜி இன்று முதல் பூச்சாண்டி பாலாஜின்னு அழைக்கப்படுவார் ;-)))
வெட்டி உண்மையிலே இது பாராட்ட வேண்டிய குணம்....வாழ்த்துக்கள் - 90
7. செண்டிமெண்ட் எல்லாத்துக்கும் இருக்கும் அதனால மார்க் கொஞ்சம் கம்மி தான் - 50
8. உனக்கு காபியா??? எனக்கு டீ - சேம் பிளட் - 75
9. மொக்கை - சாரி இதுக்கு மட்டும் நான் மார்க் போட மாட்டேன்............ஏன்னா.....ஏன்னா....!!!!!
//சினிமா - பிடித்த படங்களை எத்தனை முறை போட்டாலும் பார்ப்பேன். குறிப்பா பழைய படங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூணு பேரையும் ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி ரஜினி, கமல் படங்களும் ரொம்ப பிடிக்கும். பாட்ஷா படத்தை 100 முறைக்கு மேல பார்த்திருப்பேன். இப்ப போட்டாலும் முதல் தடவை பார்க்குற மாதிரி பார்ப்பேன். இதுக்கு தான் வீட்ல திட்டு விழும். பார்த்த படத்தையே எத்தனை தடவை பார்ப்பனு. பாட்டு கேக்க மாட்டேன். காமெடி சீன் எத்தனை தடவை போட்டாலும் பார்ப்பேன். காமெடி ரொம்ப பிடிக்கும்.
//
அட! நம்மாளு.. ஆயிரத்தில் ஒருவன், குடியிருந்த கோயில், அன்பே வா.. எத்தனை முறை இந்த படங்களைப் பார்த்திருப்பேன் நான்..
இதெல்லாம் விசித்திரமான குணம்னு யார் சொன்னது..
கோயில் மேட்டர் மட்டும் ஒனக்கும் எனக்கும் ஒத்து போகுது.
//சரி அடுத்த 5 பேரை கூப்பிடனுமாம். நான் கூப்பிடறேன். நீங்க எழுதிருந்தா ஃபிரியா விடுங்க. இல்லைனா கண்டிப்பா எழுதுங்க...//
பாசக்கார பயக எத்தனை முறைதான் கூப்பிடுவிங்க? ஏற்கனவே கோபி இழுத்துட்டாரு. நீயுமா
சரி விடு அஞ்சுக்கு பத்தா போட்டுடறேன்.
2,4,5,8,9...சேம் பிளட்...:-)
நீங்க சொல்றத பாத்தா...கம்ப ராமாயனம் மாதிரி வெட்டிராமாயனம்னு ஒன்னு எழுதலாம் போல இருக்கு :-)
வாப்பா விசித்ரகுப்தா..இன்னைக்குக் காலைல நான் பதிவு போட்டேன். இப்பப் பாத்தா நீ போட்டுருக்க. கலக்குற போ. ஆனாலும் ஜியோட கருத்துதான் என்னோட கருத்தும். :-) விசித்திரம்னாலே அபூர்வமா இருக்குறது. இப்படிச் சகட்டுமேனிக்கு விசித்திரங்களா அள்ளி விட்டா எப்படி?
நாங்கள்ளாம் சிவாஜி, எம்.ஜி.ஆர்னு சொல்வோம். நீ மாத்திச் சொல்ற...பழகுன தோசத்துக்கு மன்னிக்கிறேன்.
/// மொக்கை - ஓவரா மொக்கை போடுவேன்////
ம்... நல்லாவே தெரியுது ..
சும்மா தமாசு :))
மக்களே ஆணி ரொம்ப அதிகமா போச்சி...
விசித்திரமா இல்லைனு சொல்றவங்களுக்கு...
1. எத்தனை பேர் 19 - 20 வயசுல 60 - 70 வயசுக்காரவங்களுக்கு மகாபாரத கதையை சந்தானு மன்னன்ல ஆரம்பிச்சி பரிக்ஷித்து வரைக்கும் சொல்வீங்கனு எனக்கு தெரியல.
2. கோவிலுக்கு போறதுல இத்தனை கண்டிஷன் எத்தனை பேருக்கு இருக்கும்னு தெரியலை.
3. நல்லா படிக்கிறவன் எல்லாத்துலையும் மார்க் எடுக்கனும்னு பார்ப்பான். படிக்காதவன் எதையும் பத்தி கவலைப்படமாட்டான். ஆனா குறிப்பிட்ட இந்த பாடத்துல எடுக்கனும்னு ஆசைப்படறது வித்யாசம் இல்லையா?
4. இது பொதுவா எல்லாருக்கும் இருக்கறது தான். ஆனா எங்க வீட்ல என்னை தவிர மத்தவங்க எல்லாம் சுறுசுறுப்பு ;)
5. ஒரு படத்தை எத்தனை பேரால 100 தடவையெல்லாம் பார்க்க முடியும். தில்லு முல்லு இந்த ஒரு வருஷத்துல மட்டும் 50 தடவைக்கு மேல பார்த்திருப்பேன்.
6. நோ கமெண்ட்ஸ்... ரொம்ப பில்ட் அப் கொடுக்குற மாதிரி இருக்கும்
7. இன்னைக்கு விழாயக்கிழமைனு சொன்னா உடனே 1:30 - 3 ராகு காலம்னு எத்தனை பேரால சொல்ல முடியும்னு எனக்கு தெரியல...
வேணும்னா பாட்டை சொல்லித்தரேன்
திருநாள் சந்தடியில் வெயிலில் புரண்டு விளையாட செல்வது ஞாயமா?
தி - 7:30 - 9
ச - 9 - 10:30 ...
8. காபில இப்படி எத்தனை பேர் கண்டிஷன் போடுவீங்கனு தெரியல. பொதுவா நான் வெளிய போனா இந்த காரணத்துக்காகவே சில சமயம் காபி குடிக்கிற பழக்கம் இல்லைனு சொல்லிடுவேன்... நம்ம கண்டிஷனுக்கு கிடைக்கிறது கஷ்டம் :-)
9. எத்தனை பேர் காலேஜ்ல "பசங்க" கூட விடிய விடிய மொக்கைய போடுவீங்கனு தெரியல :-)
வெட்டிப்பதிவிற்கு (மன்னிக்கவும் நண்பர் வெட்டி அவர்களின்) பின்னூட்டமெல்லம் அடுத்து போடுறேன், அதென்னா ஆளாளுக்கு சரவணன் பெயரைக் கொடுமைப் படுத்துறீங்க! நானும் வலையுலகிற்க்கு வந்த நாள்ல இருந்து பார்க்கிறேன், தலைவன் ஒரு டைம் சொல்லிட்டன்கிறதுக்காக ஒரு அளவில்லையா? "என்ன கொடுமைங்க சரவணன்" அப்படிங்கிற வசனத்தை பயன்படுத்துறவங்களை என்ன பண்ணலாம் நீயே ஒரு யோசனை சொல்லு!
அன்புடன்...
சரவணன்.
யோவ் வெட்டி, உனக்கு பல மைலுக்கு ஒரு பதில் அடிச்சேன்ய்யா, ப்ளாக்கர் வந்து புடுங்கிட்டு போயிடுச்சு.
சரி இரு பசியாறிட்டு வந்து தெம்பா மறுக்கா போடுறேன்.
//"என்ன கொடுமைங்க சரவணன்" அப்படிங்கிற வசனத்தை பயன்படுத்துறவங்களை என்ன பண்ணலாம் நீயே ஒரு யோசனை சொல்லு!//
சரா, அவர் பெயர் தான் வெட்டி, ஆளு ஒன்னும் வெட்டிக் கிடையாது. நீ வேற யாரைச்சும் போய் கேளு.
கிறுக்குத்தனமா பதிவு போட உன்னையும் கூப்பிட்டு இருக்கேன், நம்ம வூட்டாண்ட வந்து பாரு.
//எத்தனை பேர் 19 - 20 வயசுல 60 - 70 வயசுக்காரவங்களுக்கு மகாபாரத கதையை சந்தானு மன்னன்ல ஆரம்பிச்சி பரிக்ஷித்து வரைக்கும் சொல்வீங்கனு எனக்கு தெரியல.//
வேணாம், இது எனக்கு தெரியாது, விட்டுட்டு. :-)
// கோவிலுக்கு போறதுல இத்தனை கண்டிஷன் எத்தனை பேருக்கு இருக்கும்னு தெரியலை.//
எனக்கு இருக்கு, இன்னும் கூடவே இருக்கு. நானும் என் நண்பனும் வெள்ளி, ஞாயிறு மாரியம்மன் கோவிலுக்கு போவது வழக்கம். இரவு நடை அடைப்பதற்கு ஒரு 5, 10 நிமிடம் முன்பு தான் செல்வோம். கோவிலே அமைதியாக இருக்கும், மனமும் அமைதியாகும்.
// நல்லா படிக்கிறவன் எல்லாத்துலையும் மார்க் எடுக்கனும்னு பார்ப்பான். படிக்காதவன் எதையும் பத்தி கவலைப்படமாட்டான். ஆனா குறிப்பிட்ட இந்த பாடத்துல எடுக்கனும்னு ஆசைப்படறது வித்யாசம் இல்லையா?//
சரி தான். இது போல போட்டி போட்டு ஏதாவது ஒரு பாடத்தை எடுத்து படித்து முதல் மார்க் வாங்கி
அனுபவம் எமக்கும் உண்டு.
// இது பொதுவா எல்லாருக்கும் இருக்கறது தான். ஆனா எங்க வீட்ல என்னை தவிர மத்தவங்க எல்லாம் சுறுசுறுப்பு ;)//
இந்த விசயத்தில் நான் உனக்கு மிக கடுமையான போட்டி கொடுப்பேன் வெட்டி. ;-)
// ஒரு படத்தை எத்தனை பேரால 100 தடவையெல்லாம் பார்க்க முடியும். தில்லு முல்லு இந்த ஒரு வருஷத்துல மட்டும் 50 தடவைக்கு மேல பார்த்திருப்பேன்.//
என் இனம்டா நீ, இதை எல்லாம் போய் கணக்கு வச்சுக்கிட்டு என்ன போ நீ. அதிலும் இந்த தில்லுமுல்லு, தளபதி இருக்கே, என்னத்த சொல்ல...
//நோ கமெண்ட்ஸ்... ரொம்ப பில்ட் அப் கொடுக்குற மாதிரி இருக்கும் //
சொல்லுறதையும் சொல்லிட்டு இப்படி தன்னடக்கத்துக்கும் கீழ போறீயே ;-)
நான் உன் அளவுக்கு திட்ட எல்லாம் மாட்டேன், பல இடத்துக்கு ரெப்பர் பண்ணுவேன். அப்புறம் தனியா கூப்பிட்டு, மச்சி என்ன பிரச்சனைனு தனியா யோசி, அத சரி பண்ணு ஒகே ஆகும் சொல்வேன். தன் தவறு நமக்கு தெரிந்தால் முன்னேற முடியும் என்பது என் கருத்து.
// இன்னைக்கு விழாயக்கிழமைனு சொன்னா உடனே 1:30 - 3 ராகு காலம்னு எத்தனை பேரால சொல்ல முடியும்னு எனக்கு தெரியல...//
காலண்டர பக்கத்தில் வச்சு இருக்கீயா, சரி விடு, ஒவ்வொருவருக்கும் ஏதாச்சும் ஒரு செண்டிமெண்ட். எனக்கு 8 :-)
// காபில இப்படி எத்தனை பேர் கண்டிஷன் போடுவீங்கனு தெரியல. பொதுவா நான் வெளிய போனா இந்த காரணத்துக்காகவே சில சமயம் காபி குடிக்கிற பழக்கம் இல்லைனு சொல்லிடுவேன்... நம்ம கண்டிஷனுக்கு கிடைக்கிறது கஷ்டம் :-)//
இதில் ரொம்ப கஷ்டப்பட்டவன் வெட்டி நானு. வீட்டில் ப்ரஷ்னா பில்டர் காபி குடிச்சே படுக்கை விட்டு எழுந்தவன் நான். என் காபி கதை பற்றி ஒரு பதிவே போடுறேன். இப்ப நம்ம பொழப்பு Nescafe Gold, Cappuccino னு பொழப்பு ஒடுது. :-()
// எத்தனை பேர் காலேஜ்ல "பசங்க" கூட விடிய விடிய மொக்கைய போடுவீங்கனு தெரியல :-) //
நான் இருக்கேன் செல்லம். அது என்ன பசங்க அப்படிங்குறதுல ஒரு உள்குத்து.
சரி இரண்டும் உண்டு. ஆனா இன்னொரு மேட்டர் காலேஜ்ல மட்டும் இல்ல எல்லா இடத்திலும் தான்.
அது போகட்டும் நீ ரொம்ப மொக்கை போடுவீய்யா என்ன? ;-)
//dubukudisciple said...
hi vetti!!
nalla ezhuthi irukeenga..
idula vichitra gunamnu eduvume irukura mathiri theriyala...
seri ellaroda viewvum pakalam //
சுதாக்கா,
விசித்திரம்னு இல்லை.. ஆனா கொஞ்சம் வித்யாசமா இருக்கும் ;)
// Rasigan said...
Hi...
Neenga rombha nalla ezhudhareenga... naan un blogla neraya padikaren..... ungalukku external marks.. oru 65/80 podalam..... so first classla pass panniteenga...
//
மிக்க நன்றி...
எனக்கு நல்ல மார்க் போட்டு நீங்க ஒரு நல்ல ரசிகன்னு நிருபிச்சிட்டீங்க ;)
//
congrats.. and thanks for writing.. nalla pozhudhu pogudhu.. Aani pudigittu vandhu unga blog padicha konjam sirikalam... //
அதுக்கு தாங்க எழுதிட்டு இருக்கேன் :-)
கொஞ்சம் ரிலாக்ஸாக மக்கள் ஒதுங்கற ஒரு இடமா இருக்கட்டுமேனு :-)
//கார்த்திக் பிரபு said...
சாமி கூட வேண்டாமா?
சாமி கூட வேண்டாமா?
//
நானே சாமி தான் ;)
//நமக்கும் தான் ப்ரூ காப்பி ரெண்டு கிளாஸ் குடிச்சே ஆவனும் ..இப்போ மனைவி வந்த பிறகு காபிலாம் வேணாம்னு பூஸ்ட் கொடுக்க ஆரம்பிச்சுட்டு ..இப்போ பூஸ்ட் ரெண்டு கிளாஸ் ஹி ஹி//
நமக்கு பூஸ்டே பிடிக்காது. அப்பறம் இந்த மாதிரி கண்டிஷன் போடறதும் பிடிக்காது ;)
நீ நல்லா பூஸ்ட் குடிச்சி தெம்பா போஸ்ட் போடுப்பா.. அப்பறம் கவிதையெல்லாம் என்னாச்சு?
//பொன்ஸ் said...
ஆமாம் வெட்டி, இதுல நிறைய விசித்திரத்துல சேராது.. choose any five மாதிரி போட்டுட்டீங்க :) //
பொன்ஸக்கா,
விசித்திரம்னா என்ன சொல்ல முடியும்? எனக்கு மூணு தலை, நாலு கண்ணுனா???
விசித்திரம் இல்லைனாலும் unusual ஆ உங்களுக்கு தெரியலையா?
இது பாபாவோட விருப்பத்திற்கிணங்க :-)
// கோபிநாத் said...
என்ன கொடுமை சரவணன்??? 5 போட்டு இருப்பன்னு வந்து பார்த்த 9 போட்டு வச்சிருக்க ;-)) //
இது பழைய கணக்குப்பா :-)
கோபி,
உனக்கு பிடிச்சதுக்கெல்லாம் நிறைய மார்க் போட்டுட்ட...
என்னை பொறுத்த வரை முதல் பாயிண்டுக்குத்தான் அதிக மார் கொடுக்கனும்...
வயசான காலத்துல பேசறதுக்கே ஆள் இல்லாம இருக்கறவங்களுக்கு உக்கார்ந்து பக்தி கதைகளை சொல்லி பார்த்தால் அது புரியும் ;)
//அட! நம்மாளு.. ஆயிரத்தில் ஒருவன், குடியிருந்த கோயில், அன்பே வா.. எத்தனை முறை இந்த படங்களைப் பார்த்திருப்பேன் நான்..//
தலைவா,
நான் இப்ப அடிமைப்பெண் பார்த்திட்டு இருக்கேன்...
ஒரு மாசம் முன்னாடி நாடோடி மன்னன் பார்த்தேன் :-)
//தம்பி said...
இதெல்லாம் விசித்திரமான குணம்னு யார் சொன்னது..
//
எலேய் பதிவ படிச்ச இல்லை??? அப்பவே தெரியல அதை சொன்னது நான் தான்னு ;)
இது என்ன கூட்டு வலைப்பதிவா??? யார் சொன்னதுனு தெரியாம முழிக்கற ;)
//
கோயில் மேட்டர் மட்டும் ஒனக்கும் எனக்கும் ஒத்து போகுது.
//
சரி விடு. தெரியாம எழுதிட்டேன் ;)
//
//சரி அடுத்த 5 பேரை கூப்பிடனுமாம். நான் கூப்பிடறேன். நீங்க எழுதிருந்தா ஃபிரியா விடுங்க. இல்லைனா கண்டிப்பா எழுதுங்க...//
பாசக்கார பயக எத்தனை முறைதான் கூப்பிடுவிங்க? ஏற்கனவே கோபி இழுத்துட்டாரு. நீயுமா
சரி விடு அஞ்சுக்கு பத்தா போட்டுடறேன். //
பத்து மட்டும் நீ போடல... அப்பறம் உனக்கு பத்து தான் ;)
//Syam said...
2,4,5,8,9...சேம் பிளட்...:-) //
Great people live alike ;)
//Syam said...
நீங்க சொல்றத பாத்தா...கம்ப ராமாயனம் மாதிரி வெட்டிராமாயனம்னு ஒன்னு எழுதலாம் போல இருக்கு :-) //
அது வயசான உடனே எழுதலாம் நாட்டாமை :-)
//G.Ragavan said...
வாப்பா விசித்ரகுப்தா..இன்னைக்குக் காலைல நான் பதிவு போட்டேன். இப்பப் பாத்தா நீ போட்டுருக்க. கலக்குற போ. ஆனாலும் ஜியோட கருத்துதான் என்னோட கருத்தும். :-) விசித்திரம்னாலே அபூர்வமா இருக்குறது. இப்படிச் சகட்டுமேனிக்கு விசித்திரங்களா அள்ளி விட்டா எப்படி?
//
அபூர்மா இருக்கறது நான் என்ன அன்னப்பறவையா???
நீங்க எல்லாம் சொல்றதால இதுக்கு பதில் ஒரு பதிவ போடலாம் ;)
//
நாங்கள்ளாம் சிவாஜி, எம்.ஜி.ஆர்னு சொல்வோம். நீ மாத்திச் சொல்ற...பழகுன தோசத்துக்கு மன்னிக்கிறேன். //
எப்பவுமே எம்.ஜி.ஆர், சிவாஜி தான் ஜி.ரா...
படம் பார்த்தா வாழ்க்கையில கண்டிப்பா ஜெயிக்க முடியும்னு ஒரு பாசிட்டீவ் வேவ்லெங்த்தை உருவாக்குபவர் தான் மக்கள் தலைவர் :-)
// Abul said...
/// மொக்கை - ஓவரா மொக்கை போடுவேன்////
ம்... நல்லாவே தெரியுது ..
சும்மா தமாசு :)) //
அபுல்,
உண்மையாத்தான் சொல்றேன் :-)
இந்த ஆறாவதா சொல்லியிருக்கீங்களே. அதே மாதிரி என்னோட கல்லூரியில படிச்ச நண்பன் ஒருத்தன் இருந்தான். தேர்வுகளுக்கு முன்னாடி விடுதியில் ஒவ்வொரு அறைக்கும் சென்று எல்லாரையும் படிக்கச் சொல்லி விரட்டுவான். அவனோட கொஞ்ச நாள் சென்னையில தங்கியிருந்தேன். சமையல் அவன் தான் செய்வான். நாங்க எல்லாம் அவனை 'அம்மா'ன்னு கூப்புடுவோம். :-)
திருநீறு பூசுவீங்கள்ல? அப்ப நீங்களும் பூச்சாண்டி தான்! :-) (புரியும்ன்னு நினைக்கிறேன். புரியலைன்னா உங்க மேலாளர் வந்து சொல்லுவார்)
//ராமாயணம், மகாபாரதம் - இந்த கதைகள் ஓரளவுக்கு தெரியும். //
தமிழிலா? தெலுங்கிலா?
2) மீ டூ
3)//ஆனா திறமை இருக்கவன் மட்டும் தான் ப்ராப்ளமாட்டிக் சப்ஜக்ட்ளையும், லேப்லயும் (சோப்பு போடாம) மார்க் வாங்க முடியும்னு ஒரு நினைப்புல திரியுவேன/
நெனப்புதான் பொழப்ப கெடுக்குமாம் :))
4) நீர் சொல்லும் டயம் எல்லாம் நமக்கு சர்வ சாதாரணம்.
5) மீ டூ. பாட்ஷா, தேவர் மகன், குணா, ம.ம.க.ராஜன்(காமேஸ்வரனுக்காகவே) என ஒரு பட்டியலே இருக்கு.
6) //அக்கவுண்ட் எல்லாம் நான் தான் பார்த்துக்குவேன்// மீ டூ
7) இந்த ஆட்டத்தில் நானில்லை.
8) மீ டூ. ஸ்டார்பக்ஸில் நம்ம ஊர் காப்பிக்கு வழி இருக்கு தெரியுமா? :))
9) //மொக்கை - ஓவரா மொக்கை போடுவேன்.// இதுக்கு மட்டும் என்னால மீ டூன்னு சொல்லவே முடியாது. (வேணுமுன்ன பதிவு நீளத்துக்கு மொக்கைப் பின்னூட்டம் போடுவேன்னு வேணா சொல்லிக்கலாம்.)
//நல்லா படிக்கிறவன் எல்லாத்துலையும் மார்க் எடுக்கனும்னு பார்ப்பான் .// you too?!!!
//விசித்திரமா இல்லைனு சொல்றவங்களுக்கு...//
வெட்டி, உண்மையாச் சொல்லறேன். நீர் சொல்லும் விஷயங்கள் பல எனக்கு அப்படியே அப்ளை ஆகுது. அதுப்படி பார்த்தா நாமெல்லாம் நினைக்கற அளவு வித்தியாசமானவர்கள் இல்லையோன்னு தோணுது.
//வெட்டி, உண்மையாச் சொல்லறேன். நீர் சொல்லும் விஷயங்கள் பல எனக்கு அப்படியே அப்ளை ஆகுது. அதுப்படி பார்த்தா நாமெல்லாம் நினைக்கற அளவு வித்தியாசமானவர்கள் இல்லையோன்னு தோணுது.//
அதுக்குத் தான் நான் அப்பவேச் சொன்னேன் பூராக் கூட்டம் கிறுக்குப் புடிச்சக் கூட்டமாத் தான் இருந்து இருக்குன்னு.. இப்போ நமக்கு நாமே பட்டியல் போட்டு போஸ்ட்டர் ஒட்டியாச்சு அவ்வளவு தான் :-)
நீ நல்லா பூஸ்ட் குடிச்சி தெம்பா போஸ்ட் போடுப்பா.. அப்பறம் கவிதையெல்லாம் என்னாச்சு?
//
கல்யாணத்துக்கு அப்புறம் கவிதை தோணமாட்டிக்கு பா :(
ஹாய் வெட்டி,
//என் அளவுக்கு யாராவது இருப்பாங்களானு தெரியல..//
இருக்காங்களே... என் நண்பர் அதுவும் IAF ல வேல பண்ணுறாரு..ஆரம்பத்துல நான் பாத்து ஆச்சர்ய்யப் பட்டுருக்கேன் ..இப்பவும்சரி தூக்கத்துல மன்னன்.ஒரு இடத்துக்கு 8 மணிக்கு வர சொன்னா ஐய்யா 12 மணிக்குத் தான் வருவாரு.அவ்வளவு சுறுசுறுப்பு..
அதே மாதிரி சென்டிமென்ட்லயும் சரி...
மிஞ்ச முடியாது.
//1.கடைசில சொல்லி முடிச்சிட்டு இதெல்லாம் வெறும் கதை தான். உண்மையா நடக்கல.//
படிக்கிறது இராமாயணம் இடிக்கறது பெருமா கோயிலு! :-)
//2.கோவில்ல நான் மட்டும் தனியா இருந்தா போதும்னு தான் ஆசைப்படுவேன்//
ஜிரா கிட்ட சொல்லி 2007 இல் இருந்து திருக்கோவில்களில் தரிசனத்துக்கு ஆளாளுக்கு ஒரு cubicle வைக்கச் சொல்லுறேன் :-)
//3.ப்ராப்ளமேட்டிக் சப்ஜக்டா இருந்தா அதுல க்ளாஸ்ல முதல் மார்க் வரணும்னு படிப்பேன்//
ஓ; அதான் விடயமா? இப்ப புரியுது பதிவர் பாலாஜி எப்படி இப்படிக் கலக்கறாருன்னு!
//4.சாப்பிட சோம்பேறித்தனப்பட்டு சாப்பிடாம இருந்த நாட்கள் எல்லாம் உண்டு//
எழுத சோம்பேறித்தனப்பட்டு ப்ளாக் எழுதாம இருந்ததுண்டா? இல்லையே! ஆகவே எங்கள் அண்ணன் பதிவர் பாலாஜி ஒரு அயராத உழைப்பாளி! லோவெல்லில் லோ லோ என்று உழைப்பவர்! :-)
//5. குறிப்பா பழைய படங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூணு பேரையும் ரொம்ப பிடிக்கும்//
இது அப்பட்டமான பொய்.
ராமாராவ், சிரஞ்சீவி, நாகார்ஜுனா என்று சொல்லுங்கள், நம்புகிறோம்! :-)
//6.அதே மாதிரி தினமும் ரூம்ல சமைக்கிறது எல்லாமே என்னை கேட்டுதான் நடக்கும்//
உங்களைக் கேட்டு, உங்களுக்கு ஆக்கிப் போடுவாங்க! அதானே சொல்றீங்க? :-)
//7.ஆனா பாருங்க எங்க காலேஜ் எல்லா செமெஸ்டரும் ராகு காலத்துல தான் ஆரம்பிப்பானுங்க//
பதிவு எழுதக் கூட ராகு காலம் பாப்பீங்களா பாலாஜி ? :-)
//8. காபினா கொஞ்சம் கசக்கனும்//
வாய்யா, போய் Starbucks-ல கேளுங்க! கொடுப்பாய்ங்க!
//9.ஹாஸ்டல்ல எவனுக்கு போர் அடிச்சாலும் எங்க ரூம்ல எங்கிட்ட பேச வந்திடுவானுங்க//
அப்பவே நீங்க தான் சிறந்த பதிவர்ன்னு முடிவாயிடுச்சு போல!
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க, விளையும் பயிர் முளையிலே தெரியும்னு :-)))
ஆட்டத்துக்கு அழைத்ததுக்கு நன்றி பாலாஜி. ஜெட் லாக் எல்லாம் முடிந்து இந்த வாரம் தொடங்குகிறேன்.
//உங்கள் நண்பன் said...
வெட்டிப்பதிவிற்கு (மன்னிக்கவும் நண்பர் வெட்டி அவர்களின்) பின்னூட்டமெல்லம் அடுத்து போடுறேன், அதென்னா ஆளாளுக்கு சரவணன் பெயரைக் கொடுமைப் படுத்துறீங்க! நானும் வலையுலகிற்க்கு வந்த நாள்ல இருந்து பார்க்கிறேன், தலைவன் ஒரு டைம் சொல்லிட்டன்கிறதுக்காக ஒரு அளவில்லையா? "என்ன கொடுமைங்க சரவணன்" அப்படிங்கிற வசனத்தை பயன்படுத்துறவங்களை என்ன பண்ணலாம் நீயே ஒரு யோசனை சொல்லு!
அன்புடன்...
சரவணன். //
சரவணா,
ஏன் இப்படி பொங்கற??? உன் பேர் இவ்வளவு பிரபலமா இருக்கேனு சந்தோஷப்படு.
அப்பறம் பிரபு தான் உனக்கு தலைவனா???
//நாகை சிவா said...
யோவ் வெட்டி, உனக்கு பல மைலுக்கு ஒரு பதில் அடிச்சேன்ய்யா, ப்ளாக்கர் வந்து புடுங்கிட்டு போயிடுச்சு.
சரி இரு பசியாறிட்டு வந்து தெம்பா மறுக்கா போடுறேன். //
பாசக்கார புலி,
நல்லா தெம்பாத்தான் பின்னூட்டம் போட்டுருக்க....
//
எனக்கு இருக்கு, இன்னும் கூடவே இருக்கு. நானும் என் நண்பனும் வெள்ளி, ஞாயிறு மாரியம்மன் கோவிலுக்கு போவது வழக்கம். இரவு நடை அடைப்பதற்கு ஒரு 5, 10 நிமிடம் முன்பு தான் செல்வோம். கோவிலே அமைதியாக இருக்கும், மனமும் அமைதியாகும்.//
ரொம்ப கரெக்ட் புலி...
இப்படி அமைதியா இருக்கும் போது போனா தான் ஒரு சந்தோஷமே!!!
//சரி தான். இது போல போட்டி போட்டு ஏதாவது ஒரு பாடத்தை எடுத்து படித்து முதல் மார்க் வாங்கி
அனுபவம் எமக்கும் உண்டு. //
ஆஹா... இதுக்குத்தான் Great people think alike னு அப்பவே வெள்ளக்காரன் சொன்னான் :-)
//// இது பொதுவா எல்லாருக்கும் இருக்கறது தான். ஆனா எங்க வீட்ல என்னை தவிர மத்தவங்க எல்லாம் சுறுசுறுப்பு ;)//
இந்த விசயத்தில் நான் உனக்கு மிக கடுமையான போட்டி கொடுப்பேன் வெட்டி. ;-)//
இருந்தாலும் நான் கடுமையா போராடுவேன்.. தூங்கிக்கிட்டு தான் :-)
//
என் இனம்டா நீ, இதை எல்லாம் போய் கணக்கு வச்சுக்கிட்டு என்ன போ நீ. அதிலும் இந்த தில்லுமுல்லு, தளபதி இருக்கே, என்னத்த சொல்ல...//
இத சொல்லனுமா???
தளபதி, மை.ம.கா.ரா, பாட்ஷா இதெல்லாம் கணக்கு வழக்கு இல்லாம பார்த்திருக்கேன் :-)
//
நான் உன் அளவுக்கு திட்ட எல்லாம் மாட்டேன், பல இடத்துக்கு ரெப்பர் பண்ணுவேன். அப்புறம் தனியா கூப்பிட்டு, மச்சி என்ன பிரச்சனைனு தனியா யோசி, அத சரி பண்ணு ஒகே ஆகும் சொல்வேன். தன் தவறு நமக்கு தெரிந்தால் முன்னேற முடியும் என்பது என் கருத்து.//
திட்றதுனா முதல் முறையே திட்ட மாட்டேன் புலி. ஒரு 4-5 முறை அமைதியா பேசி டைம் டேபில் எல்லாம் போட்டு கொடுப்பேன். அப்பறம் அதை படிக்காம விட்டா தான் கடுப்பாவேன். இந்த சேப்டர் இன்னைக்கு படிக்கனும்னு கரெக்டா சொல்லுவேன். அப்பறம் எந்த இண்டர்வியூவிற்கு எதை படிக்கனும்னும் சொல்லுவேன்.
//காலண்டர பக்கத்தில் வச்சு இருக்கீயா, சரி விடு, ஒவ்வொருவருக்கும் ஏதாச்சும் ஒரு செண்டிமெண்ட். எனக்கு 8 :-)//
காலண்டர் தேவையில்லை புலி
இந்த பாட்டை படிச்சி பாரு புரியும்...
திருநாள் சந்தடியில் வெயிலில் புரண்டு விளையாட செல்வது ஞாயமா?
இதுல முதல் வார்த்தைகளை பார்
தி, ச, வெ, பு, வி, செ, ஞா
திங்கள், சனி, வெள்ளி, புதன்...
7:30-9, 9-10:30, 10:30 - 12....
//இதில் ரொம்ப கஷ்டப்பட்டவன் வெட்டி நானு. வீட்டில் ப்ரஷ்னா பில்டர் காபி குடிச்சே படுக்கை விட்டு எழுந்தவன் நான். என் காபி கதை பற்றி ஒரு பதிவே போடுறேன். இப்ப நம்ம பொழப்பு Nescafe Gold, Cappuccino னு பொழப்பு ஒடுது. :-()//
சரி சீக்கிரமே ஒரு பதிவு போடு...
நமக்கும் Cappiccino (Starbucks) தான்
//நான் இருக்கேன் செல்லம். அது என்ன பசங்க அப்படிங்குறதுல ஒரு உள்குத்து.
சரி இரண்டும் உண்டு. ஆனா இன்னொரு மேட்டர் காலேஜ்ல மட்டும் இல்ல எல்லா இடத்திலும் தான்.
//
புலி,
பொண்ணுங்க கூட விடிய விடிய பேசறவங்க நிறைய பேரை பார்த்திருக்கேன்... அதனால தான் தனியா பசங்கனு சொன்னேன் :-)
//
அது போகட்டும் நீ ரொம்ப மொக்கை போடுவீய்யா என்ன? ;-)//
உனக்கு தெரியாதா என்ன???
//குமரன் (Kumaran) said...
இந்த ஆறாவதா சொல்லியிருக்கீங்களே. அதே மாதிரி என்னோட கல்லூரியில படிச்ச நண்பன் ஒருத்தன் இருந்தான். தேர்வுகளுக்கு முன்னாடி விடுதியில் ஒவ்வொரு அறைக்கும் சென்று எல்லாரையும் படிக்கச் சொல்லி விரட்டுவான். அவனோட கொஞ்ச நாள் சென்னையில தங்கியிருந்தேன். சமையல் அவன் தான் செய்வான். நாங்க எல்லாம் அவனை 'அம்மா'ன்னு கூப்புடுவோம். :-)
//
ஆஹா இப்படி ஒரு நண்பரா???
பாராட்டப்பட வேண்டியவர்...
//
திருநீறு பூசுவீங்கள்ல? அப்ப நீங்களும் பூச்சாண்டி தான்! :-) (புரியும்ன்னு நினைக்கிறேன். புரியலைன்னா உங்க மேலாளர் வந்து சொல்லுவார்) //
திருநீறுக்கும் பூச்சாண்டிக்கும் என்ன சம்பந்தம்???
சொ.செ சீக்கிரம் வாங்க...
//இலவசக்கொத்தனார் said...
//ராமாயணம், மகாபாரதம் - இந்த கதைகள் ஓரளவுக்கு தெரியும். //
தமிழிலா? தெலுங்கிலா?
//
ஏன் இந்த கொல வெறி??? நான் அப்பாவித்தமிழன்!!!
//
2) மீ டூ
//
நல்லவங்க எல்லாம் ஒரே மாதிரி (புலி உன்னையும் சேர்த்துக்கிட்டேன்)
//
3)//ஆனா திறமை இருக்கவன் மட்டும் தான் ப்ராப்ளமாட்டிக் சப்ஜக்ட்ளையும், லேப்லயும் (சோப்பு போடாம) மார்க் வாங்க முடியும்னு ஒரு நினைப்புல திரியுவேன/
நெனப்புதான் பொழப்ப கெடுக்குமாம் :))
//
இதத்தான் எங்கப்பா சொல்லுவாரு...
//
4) நீர் சொல்லும் டயம் எல்லாம் நமக்கு சர்வ சாதாரணம்.
//
கொத்ஸ் இதை விட ரெக்கார்ட் எல்லாம் இருக்கு. இது மினிமம் டைம் ;)
//
5) மீ டூ. பாட்ஷா, தேவர் மகன், குணா, ம.ம.க.ராஜன்(காமேஸ்வரனுக்காகவே) என ஒரு பட்டியலே இருக்கு.
//
ஆஹா என்ன ஒரு ஒத்துமை...
தேவர் மகன் போன வாரம் கூட ஒரு தடவை பார்த்தேன் ;)
//
6) //அக்கவுண்ட் எல்லாம் நான் தான் பார்த்துக்குவேன்// மீ டூ
//
ஹும்ம்ம்ம்....
//
7) இந்த ஆட்டத்தில் நானில்லை.
//
உண்மையாலுமே ரொம்ப நல்லது :-)
//
8) மீ டூ. ஸ்டார்பக்ஸில் நம்ம ஊர் காப்பிக்கு வழி இருக்கு தெரியுமா? :))
//
அது தெரியாம போகுமா???
வாரத்துல மூனு நாலு நாள் அங்க தான் :-)
//
9) //மொக்கை - ஓவரா மொக்கை போடுவேன்.// இதுக்கு மட்டும் என்னால மீ டூன்னு சொல்லவே முடியாது. (வேணுமுன்ன பதிவு நீளத்துக்கு மொக்கைப் பின்னூட்டம் போடுவேன்னு வேணா சொல்லிக்கலாம்.)
//
கொத்ஸ்,
இதை நீங்க சொல்லித்தான் தெரியனுமா??? ;)
//நல்லா படிக்கிறவன் எல்லாத்துலையும் மார்க் எடுக்கனும்னு பார்ப்பான் .// you too?!!! //
//
//நல்லா படிக்கிறவன் எல்லாத்துலையும் மார்க் எடுக்கனும்னு பார்ப்பான் .// you too?!!!//
ஏன்??? இல்லை ஏன்னு கேக்கறேன் :-)
//இலவசக்கொத்தனார் said...
//விசித்திரமா இல்லைனு சொல்றவங்களுக்கு...//
வெட்டி, உண்மையாச் சொல்லறேன். நீர் சொல்லும் விஷயங்கள் பல எனக்கு அப்படியே அப்ளை ஆகுது. அதுப்படி பார்த்தா நாமெல்லாம் நினைக்கற அளவு வித்தியாசமானவர்கள் இல்லையோன்னு தோணுது. //
கொத்ஸ்,
அப்படி இல்லை.. ஒவ்வொருத்தரும் தனித்துவமானவர்கள்.. மேம்போக்கா பார்த்தா ஒரே மாதிரி தெரியலாம் ;)
//கார்த்திக் பிரபு said...
நீ நல்லா பூஸ்ட் குடிச்சி தெம்பா போஸ்ட் போடுப்பா.. அப்பறம் கவிதையெல்லாம் என்னாச்சு?
//
கல்யாணத்துக்கு அப்புறம் கவிதை தோணமாட்டிக்கு பா :( //
இதுக்கு தான் காதலித்துப்பார் கவிதை வரும்னு சொன்னவன் கல்யாணம் பண்ணி பார் கவிதை வராதுனு சொல்லாம ஏமாத்திட்டான் :-)
// Sumathi said...
ஹாய் வெட்டி,
//என் அளவுக்கு யாராவது இருப்பாங்களானு தெரியல..//
இருக்காங்களே... என் நண்பர் அதுவும் IAF ல வேல பண்ணுறாரு..ஆரம்பத்துல நான் பாத்து ஆச்சர்ய்யப் பட்டுருக்கேன் ..இப்பவும்சரி தூக்கத்துல மன்னன்.ஒரு இடத்துக்கு 8 மணிக்கு வர சொன்னா ஐய்யா 12 மணிக்குத் தான் வருவாரு.அவ்வளவு சுறுசுறுப்பு..
அதே மாதிரி சென்டிமென்ட்லயும் சரி...
மிஞ்ச முடியாது. //
சுமதி அக்கா,
நாங்கெல்லாம் 8:45 களாசுக்கே 9:30க்கு தான் போவோம் ;)
8 மணிக்கெல்லாம் அப்பாயிண்மெண்டே வைக்க மாட்டோம் :-)
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//1.கடைசில சொல்லி முடிச்சிட்டு இதெல்லாம் வெறும் கதை தான். உண்மையா நடக்கல.//
படிக்கிறது இராமாயணம் இடிக்கறது பெருமா கோயிலு! :-)
//
கதை பிடிச்சிருக்கு படிக்கறேன்... அதுல இருக்கறதை நம்ப முடியல அதனால அதை பொய்னு சொல்றேன் :-)
// //2.கோவில்ல நான் மட்டும் தனியா இருந்தா போதும்னு தான் ஆசைப்படுவேன்//
ஜிரா கிட்ட சொல்லி 2007 இல் இருந்து திருக்கோவில்களில் தரிசனத்துக்கு ஆளாளுக்கு ஒரு cubicle வைக்கச் சொல்லுறேன் :-)
//
ஆளாளுக்கு வேணாம்... எனக்கு மட்டும் தனியா ;)
// //3.ப்ராப்ளமேட்டிக் சப்ஜக்டா இருந்தா அதுல க்ளாஸ்ல முதல் மார்க் வரணும்னு படிப்பேன்//
ஓ; அதான் விடயமா? இப்ப புரியுது பதிவர் பாலாஜி எப்படி இப்படிக் கலக்கறாருன்னு!
//
ஆஹா... அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை...
//
//4.சாப்பிட சோம்பேறித்தனப்பட்டு சாப்பிடாம இருந்த நாட்கள் எல்லாம் உண்டு//
எழுத சோம்பேறித்தனப்பட்டு ப்ளாக் எழுதாம இருந்ததுண்டா? இல்லையே! ஆகவே எங்கள் அண்ணன் பதிவர் பாலாஜி ஒரு அயராத உழைப்பாளி! லோவெல்லில் லோ லோ என்று உழைப்பவர்! :-) //
நிறைய இருக்கு... பாபாகிட்ட கேட்டா ஒரு பெரிய லிஸ்டே தருவார்...
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//5. குறிப்பா பழைய படங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூணு பேரையும் ரொம்ப பிடிக்கும்//
இது அப்பட்டமான பொய்.
ராமாராவ், சிரஞ்சீவி, நாகார்ஜுனா என்று சொல்லுங்கள், நம்புகிறோம்! :-)
//
லிஸ்ட் அது இல்லை KRS...
காந்தா ராவ், NTR, ANR (நாகேஸ்வர ராவ்), கிருஷ்ணா...
//
//6.அதே மாதிரி தினமும் ரூம்ல சமைக்கிறது எல்லாமே என்னை கேட்டுதான் நடக்கும்//
உங்களைக் கேட்டு, உங்களுக்கு ஆக்கிப் போடுவாங்க! அதானே சொல்றீங்க? :-)
//
ஆமாம்... வீட்ல குக் இருந்தாங்க... அங்க வாழ்ந்தது ராஜ வாழ்க்கை :-)
//
//7.ஆனா பாருங்க எங்க காலேஜ் எல்லா செமெஸ்டரும் ராகு காலத்துல தான் ஆரம்பிப்பானுங்க//
பதிவு எழுதக் கூட ராகு காலம் பாப்பீங்களா பாலாஜி ? :-)
//
இப்ப எல்லாம் பார்க்கிறது இல்லை KRS... இன்னொரு செண்டிமெண்ட் சனிக்கிழமை முழுசும் எந்த நல்ல காரியம் செஞ்சாலும் சக்ஸஸாகும்னு...
//
//8. காபினா கொஞ்சம் கசக்கனும்//
வாய்யா, போய் Starbucks-ல கேளுங்க! கொடுப்பாய்ங்க!
//
இப்பல்லாம் அங்க தான் குடிக்கிறது... இன்னைக்கு கூட குடிச்சேன் :-)
//
//9.ஹாஸ்டல்ல எவனுக்கு போர் அடிச்சாலும் எங்க ரூம்ல எங்கிட்ட பேச வந்திடுவானுங்க//
அப்பவே நீங்க தான் சிறந்த பதிவர்ன்னு முடிவாயிடுச்சு போல!
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க, விளையும் பயிர் முளையிலே தெரியும்னு :-)))
//
ஆஹா... அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை... அந்த ஃபிரெண்ட்ஸ் எல்லாம் ப்ளாக் எழுத ஆரம்பிச்சா நானெல்லாம் ஒரே நாள்ல அவுட் ஆயிடுவேன் :-)
//
ஆட்டத்துக்கு அழைத்ததுக்கு நன்றி பாலாஜி. ஜெட் லாக் எல்லாம் முடிந்து இந்த வாரம் தொடங்குகிறேன். //
சீக்கிரம்... சீக்கிரம் :-)
சாப்பிட சோம்பேரித்தனமா? டூ மச்சு.
////நல்லா படிக்கிறவன் எல்லாத்துலையும் மார்க் எடுக்கனும்னு பார்ப்பான் .// you too?!!! //
கொத்ஸ் டச்:-)))
Kovil ah amaithiya irukkanumunu naanum ninaipaen..Adhula oru sandoosham irukku...
Aana neenga konjam vithiyasamaa yaarumae irukka koodadhunu sollureenga ...
வெட்டி,
என்னப்பா இது? ஒனக்கு இருக்கிற எல்லாமே எனக்கும் அப்ளை ஆகுதுப்பா:)
very kalakkal habbits vetti..
( ennoda vithiyasamana habbit ithu thaan, thanklish sa irukum. summa naanum think panninean unga blog parthutu :0 )
am wondering about your groups, how you people made private n/w in blog. its amazing.. is you all from same college / company.
any how am reading your blog regularly, ur way of writting is good
Post a Comment