தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, February 14, 2007

காதலர் தினம்!!!

என்னை சூரியன் என்கிறாய்
வான வெளியில் என்ன
திடீர் மாற்றமா?
சூரியன் என்றிலிருந்து
நிலவை மட்டுமே
சுற்ற ஆரம்பித்தது?

வருடத்தில்
ஒரு நாள்
காதலர் தினம் கொண்டாடும்
ஏழைகள் அல்ல நாம்
வருடம் முழுவதையும்
காதலர் தினமாய்
கொண்டாடுவோம்!
முத்தத்தை பரிசாக கொடுத்து!!!

நம் அன்பின் ஆழத்தை
வார்த்தைகளினால் வடிக்க
முடியாது என்று உணர்ந்தே
மண்ணுலகை விட்டு
மறைந்தானாம் கம்பன்!!!

இலக்கிய காதலர்கள்
எல்லாம் பிராம்மா முன்
உண்ணா விரதமிருக்கிறார்களாம்
நம்மை காதலுக்கு
இலக்கணமாய் படைத்ததற்காக!!!

காதலர் தினம்
பிப் 14
குழந்தைகள் தினம்
நவம்பர் 14
கூட்டி கழித்து பார்
கணக்கு சரியாய் வரும்!!!

சரி... மேல இருக்கறதெல்லாம் எனக்கு தான் பயன்படல... உங்கள்ல யாருக்காவது பயன்பட்டா எடுத்துக்கோங்க...

கேவலமா இருக்கு. இத அனுப்பினா கண்டிப்பா செருப்படிதான்னு ஃபீல் பண்ணா கம்பெனி பொறுப்பில்லை.

இந்த நாள் நம்மல கேவல படுத்தத்தான்னு ஃபீல் பண்ணும் என் அருமை நண்பர்களே, பல்லு இருக்கவன் பகோடா சாப்பிடறான்னு ஃபில் பண்ணாம விட்டுடுவோம்...

34 comments:

Anonymous said...

nalla kavithai sollitu kadaisilae kavuthiteengae...nalla irukku...

Mani said...

வெட்டியா தானே இருக்கீங்க. "அனுப்பு" பட்டனை தட்டினால் இது தமிழ்மணத்தில் வரும் இல்லையா? அனுப்புங்க.

Princess said...

HAPPY VALENTINE'S DAY

nalla kavithai....
yaar ezhuthinathunu solla mudiyuma?

இம்சை அரசி said...

wow...

என்னாச்சு திடீர்னு வெட்டிக்கு???

வெட்டி சூரியன் சுத்தறது எந்த நிலாவை??? உண்மைய சொல்லுங்க...

இப்படி கடைசில ஒரு பிட்ட போட்டு வச்சா நாங்க நம்பிடுவோமா???

மக்கா எல்லாரும் கேளுங்க.

Chakra Sampath said...

Its my first time here and just read through many of your posts. Very well written. Keep writing!

Sumathi said...

ஹாய் வெட்டி,

//காதலர் தினம்
பிப் 14
குழந்தைகள் தினம்
நவம்பர் 14
கூட்டி கழித்து பார்
கணக்கு சரியாய் வரும்!!!//

ஆஹா...நல்லா வெவரமாத் தான் இருக்கீக..

ஆமாம், கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க... அதுவும் வெவரமா...ம்ம் ம்ம்

சரி சரி....எங்களையெல்லாம் கூப்பிடுவீங்களா?

அட வேற எதுக்கு,, கல்யாணத்துக்கு தாம்பா?

கருப்பையா said...

Happy Valentine's Day Vetti..
சும்மா யாருக்காவது ரோஸ் கொடுத்து பாருங்க, உங்க கவிதை உங்களுக்கு உதவலாம்.

Anonymous said...

HAPPY VALENTINE'S DAY

- Unmai

மு.கார்த்திகேயன் said...

இனிய அன்பர்கள் தினம் பாலாஜி..

நல்ல கவிதை.. நீங்க யாருக்கோ கொடுத்துட்டீங்க போல, ஏற்கனவே..

மு.கார்த்திகேயன் said...

//பல்லு இருக்கவன் பகோடா சாப்பிடறான்னு ஃபில் பண்ணாம விட்டுடுவோம்...
//

ரொம்பத் தான் நீங்க பீல் பன்றீங்க போல, வெட்டி

ஜி said...

பல் இருக்குறவன் பகோடா சாப்பிடுறான்...

அதுக்காக, எக்ஸிபிஷன் வச்சி பொக்க வாயன்கள வலுப்பங்காட்டியா சாப்டுறது ;))))

காதலர்கள் தின வாழ்த்துக்கள் வெட்டி...

நானும் கவிதை குளத்துல எறங்கி தாமரை எடுக்கலாம்னு பாக்குறேன்.. என்ன சொல்றீங்க???

மணிகண்டன் said...

Happy Valentines Day Balaji

இன்னைக்கு பச்சை கலர் ட்ரெஸ் போட்டுகிட்டு பாஸ்டன்ல சுத்தறதா கேள்விப்பட்டேன் :))

சிறில் அலெக்ஸ் said...

//காதலர் தினம்
பிப் 14
குழந்தைகள் தினம்
நவம்பர் 14
கூட்டி கழித்து பார்
கணக்கு சரியாய் வரும்!!!//

அட கணக்கு சூப்பர கீதேமா..
கவிதையும்..

இலவசக்கொத்தனார் said...

எச்சரிக்கை கவுஜன்னு தலைப்பில் போட்டு இருக்கலாமில்ல.

ஹச்சூ! ஹச்சூ!

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

nalla kavithai sollitu kadaisilae kavuthiteengae...nalla irukku...//

ரொம்ப நன்றிங்க...
சும்மா முயற்சி பண்ணலாமேனு தான் :-))

வெட்டிப்பயல் said...

//Mani said...

வெட்டியா தானே இருக்கீங்க. "அனுப்பு" பட்டனை தட்டினால் இது தமிழ்மணத்தில் வரும் இல்லையா? அனுப்புங்க.//

மக்கள் எல்லாம் பாவம்னு அனுப்பாம இருந்தேன்...

ஏன் மேல கொல வெறில இருக்கற யாரோ அனுப்பிட்டாங்க...

வெட்டிப்பயல் said...

//Princess said...

HAPPY VALENTINE'S DAY

nalla kavithai....
yaar ezhuthinathunu solla mudiyuma?//

இவ்ளோ நல்லவங்களா இருக்கீங்களே!!!
நான் எழுதினது தாங்க...

நான் எழுத மாட்டேனு இவ்வளவு நம்பிக்கையா???

வெட்டிப்பயல் said...

//இம்சை அரசி said...

wow...

என்னாச்சு திடீர்னு வெட்டிக்கு???

வெட்டி சூரியன் சுத்தறது எந்த நிலாவை??? உண்மைய சொல்லுங்க...

இப்படி கடைசில ஒரு பிட்ட போட்டு வச்சா நாங்க நம்பிடுவோமா???

மக்கா எல்லாரும் கேளுங்க.//

மனுசனுக்கு நம்பிக்கைதாங்க முக்கியம்... நம்புங்க!!!

வெட்டிப்பயல் said...

//Chakra Sampath said...

Its my first time here and just read through many of your posts. Very well written. Keep writing!//

Thx a lot Sampath...
keep visiting

வெட்டிப்பயல் said...

//Sumathi said...

ஹாய் வெட்டி,

//காதலர் தினம்
பிப் 14
குழந்தைகள் தினம்
நவம்பர் 14
கூட்டி கழித்து பார்
கணக்கு சரியாய் வரும்!!!//

ஆஹா...நல்லா வெவரமாத் தான் இருக்கீக..

ஆமாம், கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க... அதுவும் வெவரமா...ம்ம் ம்ம்

சரி சரி....எங்களையெல்லாம் கூப்பிடுவீங்களா?

அட வேற எதுக்கு,, கல்யாணத்துக்கு தாம்பா?

//

உங்களை எல்லாம் கூப்பிடாமலா???
ஆனா இன்னும் கொஞ்சம் வருஷமாகும் :-)

வெட்டிப்பயல் said...

//கருப்பையா said...

Happy Valentine's Day Vetti..
சும்மா யாருக்காவது ரோஸ் கொடுத்து பாருங்க, உங்க கவிதை உங்களுக்கு உதவலாம்.//

கருப்பையா,
நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா? என் மேல உங்களுக்கு இவ்வளவு கோபமா???

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

HAPPY VALENTINE'S DAY

- Unmai//

மிக்க நன்றி உண்மை!!!

வெட்டிப்பயல் said...

//மு.கார்த்திகேயன் said...

இனிய அன்பர்கள் தினம் பாலாஜி..

நல்ல கவிதை.. நீங்க யாருக்கோ கொடுத்துட்டீங்க போல, ஏற்கனவே..//

மிக்க நன்றி கார்த்திகேயன்... தங்களுக்கும் என் அன்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!

வெட்டிப்பயல் said...

//மு.கார்த்திகேயன் said...

//பல்லு இருக்கவன் பகோடா சாப்பிடறான்னு ஃபில் பண்ணாம விட்டுடுவோம்...
//

ரொம்பத் தான் நீங்க பீல் பன்றீங்க போல, வெட்டி//

ஹி ஹி... வேற என்ன பண்ண முடியும்?

வெட்டிப்பயல் said...

//ஜி - Z said...

பல் இருக்குறவன் பகோடா சாப்பிடுறான்...

அதுக்காக, எக்ஸிபிஷன் வச்சி பொக்க வாயன்கள வலுப்பங்காட்டியா சாப்டுறது ;))))
//

நோ ஃபீலிங்ஸ் :-)

//
காதலர்கள் தின வாழ்த்துக்கள் வெட்டி...
//
தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!!

//
நானும் கவிதை குளத்துல எறங்கி தாமரை எடுக்கலாம்னு பாக்குறேன்.. என்ன சொல்றீங்க???//

நீ தான் கவிஞர்னு நம்ம தம்பியே சர்டிபிகேட் கொடுத்துட்டாரே!!!

வெட்டிப்பயல் said...

//மணிகண்டன் said...

Happy Valentines Day Balaji

இன்னைக்கு பச்சை கலர் ட்ரெஸ் போட்டுகிட்டு பாஸ்டன்ல சுத்தறதா கேள்விப்பட்டேன் :))//

இன்னைக்கு இங்க பனிப்புயல்... வீட்டை விட்டு வெளியவே வரல...

தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!!

வெட்டிப்பயல் said...

//சிறில் அலெக்ஸ் said...

//காதலர் தினம்
பிப் 14
குழந்தைகள் தினம்
நவம்பர் 14
கூட்டி கழித்து பார்
கணக்கு சரியாய் வரும்!!!//

அட கணக்கு சூப்பர கீதேமா..
கவிதையும்..//

ரொம்ப டாங்க்ஸ் அலெக்ஸ்!!!

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

எச்சரிக்கை கவுஜன்னு தலைப்பில் போட்டு இருக்கலாமில்ல.

ஹச்சூ! ஹச்சூ!//

எனக்கு தெரியாமலே யாரோ தமிழ்மணத்துக்கு அனுப்பிட்டாங்க :-(

ஜி said...

//ஏன் மேல கொல வெறில இருக்கற யாரோ அனுப்பிட்டாங்க... //

//எனக்கு தெரியாமலே யாரோ தமிழ்மணத்துக்கு அனுப்பிட்டாங்க :-( //

இது நான் இல்ல.. நான் இல்ல...

dubukudisciple said...

hai vetti!!!
kavithai super!!!
analum romba nallavar pola iruku neenga!!!! nambaluku thaan help pannala aduthavangalukukavathu help pannatumnu ninaikareengale!!!!
ungalukum ambiya pola oru thangamani viraivil kitta en vazhthukal!!!

கார்த்திக் பிரபு said...

இம்சை அரசி said...
wow...

என்னாச்சு திடீர்னு வெட்டிக்கு???

வெட்டி சூரியன் சுத்தறது எந்த நிலாவை??? உண்மைய சொல்லுங்க...

இப்படி கடைசில ஒரு பிட்ட போட்டு வச்சா நாங்க நம்பிடுவோமா???

மக்கா எல்லாரும் கேளுங்க.
//

hi hi hi hiiiiiiiiii heeee heeeeee heeeeeeee

Anonymous said...

imm nalla thaan iruku ellam.
oru friend moola innaiku thaan un blog-a padichaen. very nice.

ennaya mathiri bench la irukuravangaluku time pass agum

good job. keep posting.

Cheers,
-Nazeer

தம்பி said...

எலே

ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி உன்னயும் இந்த காதல் கடிச்சி வச்சிடுச்சா?

கடைசில உனுக்கும் காதல் கவிதை எழுத வந்துடுச்சா!

இப்படிலாம் கேப்பன்னு நினைச்சியா?

கேக்க மாட்டேன்.

ஏன்னா???

நீயும் ஒரு கவுஜைக்காதலன்

அருட்பெருங்கோ said...

காதல் நாள் வாழ்த்துக்கள் வெட்டி!!!

கவிதையிலேயும் கலக்குறியேப்பா... என்ன தென்றல் எதுவும் வீசுதா?