தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, January 25, 2007

பகுத்தறிவு என்றால் என்ன???

சர்வேசன் அவர்களின் சர்வே தலைப்பை பார்த்து கொஞ்சம் குழம்பிய நிலையிலே இந்த பதிவை இடுகிறேன்...

பகுத்தறிவு என்றால் என்ன???
எனக்கு தெரிந்த வரை நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து அதன் படி நடப்பது தானே பகுத்தறிவு. ஒருவனுக்கு இறை நம்பிக்கையே நல்ல வழியில் அவன் வாழ்க்கையை நடத்த உதவுமெனில் அது அறிவின்மையா???

எவ்வளவு துன்பம் வாழ்வில் ஏற்பட்டாலும் நல்ல வழியில் வாழ்ந்தால் இறைவன் எப்படியும் உதவுவான் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையில் போராடும் ஒருவன் அந்த நம்பிக்கையின் காரணமாகவே வெற்றியடைகிறான் என்றால் அவனுக்கு பகுத்தறியும் ஞானமில்லை என்று அர்த்தமா???

இறை நம்பிக்கையின்மையா பகுத்தறிவு??? அது நாத்திகம் தானே?

கொஞ்சம் யாராவது உதவுங்களேன்!!!

128 comments:

k4karthik said...

அதுகுள்ள அடுத்த posta?

//இறைவன் எப்படியும் உதவுவான் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையில் போராடும் ஒருவன் அந்த நம்பிக்கையின் காரணமாகவே வெற்றியடைகிறான் என்றால் அவனுக்கு பகுத்தறியும் ஞானமில்லை என்று அர்த்தமா???//

தான் கொண்ட நம்பிக்கையினால் ஒருவன் வாழ்வில் போராடி வெற்றி பெறுவது பகுத்தறிவின் எடுத்துக்காட்டே.. அவருடைய நம்பிக்கை நாத்திகமாகவும் இருக்கலாம், ஆத்திகமாகவும் இருக்கலாம். அது பொருட்டே அல்ல..


ஆதலால் குழப்பத்திற்கு அவசியமில்லை..

Boston Bala said...

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்!
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்!!!

Unknown said...

மதங்களில் உள்ள அல்லவற்றை அகற்றி நல்லவற்றை பகுத்தாராய்ந்து ஏற்பதே பகுத்தறிவு.கடவுள் என்பதே நல்லதல்ல என வாதிடும் நாத்திகர்கள் அதனால் 'கடவுள் இல்லை என்பதே பகுத்தறிவு' என்கின்றனர்.ஆனால் நீங்கள் சொன்னதுபோல் 'ஒருவனுக்கு இறை நம்பிக்கையே நல்ல வழியில் அவன் வாழ்க்கையை நடத்த உதவுமெனில் அதுவும் பகுத்தறிவே'

கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள், அய்யா வைகுந்தர்,நாராயண குரு,விவேகானந்தர், ஆகியோரும் பகுத்தறிவுவாதிகளே.

SP.VR. SUBBIAH said...

பகுத்தறிவு என்பது அனைவருக்கும் பொ்ருந்தும்.
இறைநம்பிக்கை இல்லாதவர்களைக் குறிக்க நாத்திகவாதிகள் என்ற சொல் மட்டுமே பயன் படுத்தப்படவேண்டும்!
M.G.R பகுத்தறிவுப் பாசறையில் இருந்தவர்தான் - ஆனால் இறை நம்பிக்கை உடையவராக இருந்தவர்
அடிக்கடி மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வநதவர்
என்பதை நினைவு படுத்திக் கொள்ளூங்கள்.
ஆகவே பகுத்தறிவு வேறு - நாத்திகம் வேறு!

குமரன் (Kumaran) said...

நல்ல கேள்வி பாலாஜி. பலரைப் பல காலமாக நான் கேட்டு வரும் கேள்வி தான் இது. கடவுள் மறுப்பாளர்கள், நாத்திகர்கள் என்பதே இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு உரிய சரியான பெயர். அவர்கள் தங்களையே பகுத்தறிவாளர்கள் என்று அழைத்துக் கொள்ளத் தொடங்கி அதுவே இப்போது நிலைத்துவிட்டது.

இறைமறுப்பு என்பதற்கு பகுத்தறிவு என்பது Euphemism.

குமரன் (Kumaran) said...

Meaning of Euphemism from www.dictionary.com

eu·phe·mism /ˈyufəˌmɪzəm/ Pronunciation Key - Show Spelled Pronunciation[yoo-fuh-miz-uhm] Pronunciation Key - Show IPA Pronunciation
–noun 1. the substitution of a mild, indirect, or vague expression for one thought to be offensive, harsh, or blunt.
2. the expression so substituted: “To pass away” is a euphemism for “to die.”

வெற்றி said...

வெட்டி,
பின்னூட்டங்கள் குவியப் போகுது. அப்பிடி ஒரு தலைப்போட வந்திருக்கிறீங்கள்.

/*ஒருவனுக்கு இறை நம்பிக்கையே நல்ல வழியில் அவன் வாழ்க்கையை நடத்த உதவுமெனில் அது அறிவின்மையா??? */

நானும் இறை நம்பிக்கை உள்ளவன்தான். இறை நம்பிக்கை வழியில் வாழ்வது அறிவீனம் இல்லை.அதே நேரம், இறை நம்பிக்கை என்ற பெயரில் சில மூட நம்பிக்கைகளைப் புகுத்துவதுதான் அறிவீனம். குறிப்பாக, இறைவனுக்குப் பூசை செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இருந்து வருபவர்கள்தான் செய்யலாம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆலங்களுக்குள் செல்லக்கூடாது. அப்படிச் சென்றால் தீட்டாகிவிடும் என்பதை எல்லாம் இறைவழி என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? உண்மையில் இவை சைவ நெறிக்கு முரணானவை.

அத்துடன், பல இலட்சம் சிறார்கள் பட்டினியால் வாட , சைவ மற்றும் வைணவ ஆலயங்களில் பால் அபிசேகம் முதலியன செய்வது அறிவீனம் தான். சைவத்தின் தாரக மந்திரமே மக்கள் சேவையே மகேசன் பூசை என்பது. ஆக, அப்படிச் சைவநெறி சொல்லியிருக்கும் போது, சும்மா ஆலயங்களில் பால், பழ அபிசேகங்கள் தேவையில்லாதது. அது அறிவீனம்.இதைச் சிவனின் பெயரால் ஏழைகளுக்குக் கொடுக்கலாம். அப்படிச் செய்யாது இறைவனுக்கு இவற்றால் அபிசேகம் செய்வதை இறைவனே ஏற்றுக் கொள்ள மாட்டான்.

ஆக இறைவழி நிற்பவர்கள் முதலில் அவர்கள் வழிபடும் மார்க்கத்தின்[அவரவர் மதங்கள்] உண்மைப் பொருளை அறிய விளைய வேண்டும்.
எல்லா மதங்களும் நல்ல கருத்துக்களைத்தான் போதிக்கின்றன. ஆனால் பின்பற்றும் நாம்தான் நாம் பின்பற்றும் மார்க்கத்தின் மீது வெறி கொண்டு , பத்தி கொள்ளாமல், உண்மைப் பொருளை உணராது பல மூடச் செயல்களைச் செய்து வருகிறோம்.

வெட்டிப்பயல் said...

//k4karthik said...

அதுகுள்ள அடுத்த posta?
//
இது யோசிச்சி போட்டதெல்லாம் இல்லைங்க.. அந்த பதிவு தலைப்பை பார்த்தவுடனே வர வருத்ததுல போட்டது :-(

//
//இறைவன் எப்படியும் உதவுவான் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையில் போராடும் ஒருவன் அந்த நம்பிக்கையின் காரணமாகவே வெற்றியடைகிறான் என்றால் அவனுக்கு பகுத்தறியும் ஞானமில்லை என்று அர்த்தமா???//

தான் கொண்ட நம்பிக்கையினால் ஒருவன் வாழ்வில் போராடி வெற்றி பெறுவது பகுத்தறிவின் எடுத்துக்காட்டே.. அவருடைய நம்பிக்கை நாத்திகமாகவும் இருக்கலாம், ஆத்திகமாகவும் இருக்கலாம். அது பொருட்டே அல்ல..


ஆதலால் குழப்பத்திற்கு அவசியமில்லை..
//
இதுவே என் கருத்தும்!!!

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்!
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்!!! //

நச்!!!
ஆனா கேள்வி அது இல்லையே ;)

வெட்டிப்பயல் said...

//செல்வன் said...

மதங்களில் உள்ள அல்லவற்றை அகற்றி நல்லவற்றை பகுத்தாராய்ந்து ஏற்பதே பகுத்தறிவு.கடவுள் என்பதே நல்லதல்ல என வாதிடும் நாத்திகர்கள் அதனால் 'கடவுள் இல்லை என்பதே பகுத்தறிவு' என்கின்றனர்.ஆனால் நீங்கள் சொன்னதுபோல் 'ஒருவனுக்கு இறை நம்பிக்கையே நல்ல வழியில் அவன் வாழ்க்கையை நடத்த உதவுமெனில் அதுவும் பகுத்தறிவே'
//
ரொம்ப சரியா சொன்னீங்க செல்வன்...
கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களும் முழுதாக பகுத்தறிவாளர்கள் கிடையாது. அவர்களும் வாழ்க்கையில் சில விஷயங்களை அறிவை கேட்காமல் மனதை கேட்டே செயல்படுவார்கள்!!!

//
கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள், அய்யா வைகுந்தர்,நாராயண குரு,விவேகானந்தர், ஆகியோரும் பகுத்தறிவுவாதிகளே. //
நச்!!!

வெட்டிப்பயல் said...

//SP.VR.சுப்பையா said...

பகுத்தறிவு என்பது அனைவருக்கும் பொ்ருந்தும்.
இறைநம்பிக்கை இல்லாதவர்களைக் குறிக்க நாத்திகவாதிகள் என்ற சொல் மட்டுமே பயன் படுத்தப்படவேண்டும்!
M.G.R பகுத்தறிவுப் பாசறையில் இருந்தவர்தான் - ஆனால் இறை நம்பிக்கை உடையவராக இருந்தவர்
அடிக்கடி மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வநதவர்
என்பதை நினைவு படுத்திக் கொள்ளூங்கள்.
ஆகவே பகுத்தறிவு வேறு - நாத்திகம் வேறு! //
தெளிவாக சொன்னீர்கள் ஐயா!!!
ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்று சொன்ன அண்ணாவும் பகுத்தறிவு பாசறையிலே பயின்றவர் தான்!!!

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

நல்ல கேள்வி பாலாஜி. பலரைப் பல காலமாக நான் கேட்டு வரும் கேள்வி தான் இது. கடவுள் மறுப்பாளர்கள், நாத்திகர்கள் என்பதே இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு உரிய சரியான பெயர். அவர்கள் தங்களையே பகுத்தறிவாளர்கள் என்று அழைத்துக் கொள்ளத் தொடங்கி அதுவே இப்போது நிலைத்துவிட்டது.

இறைமறுப்பு என்பதற்கு பகுத்தறிவு என்பது Euphemism. //

குமரன்,
இத்தனை காலம் நான் இதை பற்றி பெரிதாக ஏதும் சிந்தத்தில்லை... இன்று சர்வேசனின் தலைப்பில் கடவுள் நம்பிக்கை எதிர்பதமாக இதை பார்த்தவுடனே தான் கொஞ்சம் அதிர்ந்து போனேன்!!!
நம்மால் பகுத்து அறிய முடியாததும் உலகில் நிறைய இருக்கிறது!!!

Boston Bala said...

---ஆனா கேள்வி அது இல்லையே---

அவுட் ஆஃப் சிலபஸ் எழுதி மதிப்பு கூட்டு மதிப்பெண் வாங்கலாம்னு நப்பாசை ; )

சிவபாலன் said...

பாலாஜி

கடவுள் சிலைகள் மீது ஊற்றப்படும் பால் ஆத்திகனைப் பொருத்தவரையில் அபிசேகம்..

நாத்திகனைப் பொருத்தவரை பால் வீணடிக்கப் படுகிறது.

ம்ம்ம்ம்...

இப்ப சொல்லுங்க பால் ஊற்றுவது பகுத்தறிவுவா? (நம்பிக்கை என்று கூறிவிடாதீர்கள்)

குமரன் (Kumaran) said...

சிவபாலன். அதே நாத்திகர்கள் பல கோடி ரூபாய்கள் செலவில் தங்கள் தலைவர்களின் பிறந்த நாட்களுக்கும் இறந்த நாட்களுக்கும் விழா கொண்டாடுகின்றனர். ஏழைகளுக்குச் செலவழிக்கலாமே அந்தப் பணத்தை.

தலைவர்களின் சிலைகளுக்கு மாலை மரியாதை செய்கின்றனர். குறைந்த பட்சம் அந்தப் பணத்தையாவது வீணடிக்காமல் ஏழைகளுக்குக் கொடுக்கலாமே.

இப்ப சொல்லுங்க இவ்விரண்டும் பகுத்தறிவா? (தலைவர்கள் மேலுள்ள மரியாதை என்று சொல்லிவிடாதீர்கள்)

நிர்மல் said...

பாலாஜி,

rational thinking க்கு தமிழில் என்ன சொல்வீர்கள்

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

---ஆனா கேள்வி அது இல்லையே---

அவுட் ஆஃப் சிலபஸ் எழுதி மதிப்பு கூட்டு மதிப்பெண் வாங்கலாம்னு நப்பாசை ; ) //

:-))
இது பரிட்சை இல்லையே :-)
ஏன்னா பரிட்சைல திருத்துபவருக்கு விடை தெரியும்... நமக்கு தான் தெரியாதே :-)

சிவபாலன் said...

குமரன் சார்

எனக்கு எந்த தலைவனும் இல்லை.. என்னைப் போல பல பேர் அது போல் உள்ளனர்.

ஆனால் பால் ஊற்றுவது வீண் என சொல்லும் ஆத்திகவாதி உண்டா?

உண்டு என்றால் மிக்க நல்லது.( அவன் கடவுள் மறுப்புக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறான் எனப் பொருள் கொள்ளலாம்)

வெட்டிப்பயல் said...

// Sivabalan said...

பாலாஜி

கடவுள் சிலைகள் மீது ஊற்றப்படும் பால் ஆத்திகனைப் பொருத்தவரையில் அபிசேகம்..

நாத்திகனைப் பொருத்தவரை பால் வீணடிக்கப் படுகிறது.

ம்ம்ம்ம்...

இப்ப சொல்லுங்க பால் ஊற்றுவது பகுத்தறிவுவா? (நம்பிக்கை என்று கூறிவிடாதீர்கள்) //

சிபா,
ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்கூடாது... எத்தனையோ குழந்தைகளுக்கு சாப்பாடு இல்லாத போழுது நம்ம வீட்டு குழந்தைக்கு நாம விளையாட வாங்கி தர பொம்மைய என்னனு சொல்லுவீங்க...

நாத்திகர்கள் அவர்கள் வீட்டில் இருக்கும் பாலை இல்லாதவர்களுக்கு முதலில் கொடுக்கட்டும்...

எத்தனையோ பேர் சாப்பாட்டுக்கு இல்லாத போது தண்ணி அடிச்சிட்டு சுத்தறவனை கேள்வி கேளுங்களேன்!!! ஏன் காசு உனக்கு என்னனு கேப்பான். அதுவே தான் இங்கயும்!!!

கால்கரி சிவா said...

//இப்ப சொல்லுங்க இவ்விரண்டும் பகுத்தறிவா? (தலைவர்கள் மேலுள்ள மரியாதை என்று சொல்லிவிடாதீர்கள்)//

சொல்லுங்க சிவபாலன்,

அந்த தலைவருக்கு சிலை, சமாதி, தலைவரின் பெயரில் தெரு பெயர் மாற்றங்கள் போன்ற செலவுகளையும் குறைத்து ஏழைக்களுக்கு தரலாமே. சொல்லுங்க சிவபாலன்.

வெட்டிப்பயல் said...

//நிர்மல் said...

பாலாஜி,

rational thinking க்கு தமிழில் என்ன சொல்வீர்கள் //

தெரியலையே!!!
பகுத்தறிவா???

சிவபாலன் said...

கால்கரி சிவா,

நீங்கள் சொல்லவரும் கருத்து ஏற்புடையதே..

அதே சமயத்தில், சிகாகோ போன்ற நகரங்களில் கட்டப்படும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்து கோயில்களையும் தாங்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

சிவபாலன் said...

பாலாஜி,

அவங்க கொடுக்கட்டும் முதலில் என்று நீங்கள் சொல்லும் போது மனிதனை வீட கடவுள் நம்பிக்கை பெரிதாகிவிட்டது. இது பகுத்தறிவா?

குமரன் (Kumaran) said...

சிவபாலன். நான் உங்களை நாத்திகன் என்றோ பகுத்தறிவாளன் என்று சொல்லிக் கொள்பவர் என்றோ சொன்னேனா? உங்களுக்குத் தலைவர் இல்லை என்று பதில் சொல்கிறீர்கள். நான் கேட்டதற்கு அதுவா பதில்? நான் கேட்டது பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் செய்வது பகுத்தறிவா என்பது. நீங்கள் அதற்கு பதில் சொல்லாமல் நழுவுவதிலேயே தெரிகிறது அவை பகுத்தறிவு செயல்கள் இல்லை என்று. அப்படியிருக்க அவர்கள் ஏன் தங்களை பகுத்தறிவாளர் என்று அழைத்துக் கொள்ள வேண்டும்?

கண்ணெதிரில் ஏழைக் குழந்தை பாலுக்கு அழும் போது அந்தப் பாலை கடவுளுக்கு அபிஷேகம் செய்வது தவறு என்று பல்லாயிரக்கணக்கான ஆத்திகர்கள் சொல்லுவார்கள். உங்களுக்கு உதாரணங்கள் வேண்டுமென்றால் நான், இராகவன், பாலாஜி, செல்வன் என்று வரிசையாக என்னால் சொல்ல இயலும். இப்படி சொல்லும் பல்லாயிரக்கணக்கான ஆத்திகர்கள் உங்களைப் பொறுத்தவரை பகுத்தறிவாளர்கள் தானே. அப்படி இருக்க நாத்திகர்கள் மட்டுமே பகுத்தறிவாளர் என்பது எப்படி சரி?

குமரன் (Kumaran) said...

நிர்மல்,

Rational Thinking என்பதற்கு எனக்குத் தெரிந்த வரையில் பகுத்தறிவு என்று தமிழில் சொல்லலாம். Rational Thinking நாத்திகர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இரண்டு பக்கமும் அது இருக்கிறது. அதனால் இருவரையுமே பகுத்தறிவாளர் எனலாம். இல்லை இருவரையுமே சொல்லாமல் விடலாம். ஒருவரைச் சொல்லி மற்றவரை விடுவது என்னவோ மற்றவர் பகுத்தறிவே இல்லாத மூடர் என்று சொல்வது போல் இருக்கிறது. Rational Thinking இருப்பவர்கள் அப்படி சொல்ல மாட்டார்கள்.

குமரன் (Kumaran) said...

சிவபாலன்.

நாமெல்லோருமே பகுத்தறிவு இல்லாதவர்களே. உலகத்தில் ஏழைகள் இவ்வளவு கஷ்டப்படும் போது பட்டினிச் சாவுகள் நடந்து கொண்டிருக்கும் போது நான் மட்டும் நம் தொப்பை பெருக்க வேளாவேளைக்குத் தின்னுவதும் பகுத்தறிவாகுமா? நாளை முதல் ஒரு வேளை தான் சாப்பிடுவது என்று உறுதி எடுத்துக் கொண்டு உணவை வீணாக்காமல் ஏழைகளுக்குக் கொடுக்கலாம். அது தான் பகுத்தறிவு. அப்படி தொடங்கி எல்லாவற்றையும் செய்யலாம். இதில் ஆத்திக நாத்திக வேறுபாடு இல்லை.

வெட்டிப்பயல் said...

சிபா,
வீண் விவாதங்கள் வேண்டாமே!!!

என் பணத்தை செலவு செய்ய சொல்லி தர உங்களுக்கு உரிமையில்லை. இது தான் என் வாதம்.

நான் சம்பாதிக்கும் பணத்திற்கு வரி கட்டிய பின் நான் கிழித்து கூட போடுவேன்!!! Its none of ur business to teach me how to spend my money.

(I know u wont take this as personal)

வெட்டிப்பயல் said...

// Sivabalan said...

பாலாஜி,

அவங்க கொடுக்கட்டும் முதலில் என்று நீங்கள் சொல்லும் போது மனிதனை வீட கடவுள் நம்பிக்கை பெரிதாகிவிட்டது. இது பகுத்தறிவா? //

சிபா,
நாம் கோவிலுக்கே அதிகம் போக மாட்டேன். அப்படி சென்றாலும் உண்டியலில் பணம் போட மாட்டேன். வெளியில் அதை எதிர்பார்ப்பவருக்கே என்னாலான உதவியை செய்வேன்.

நான் என்னை பற்றி மட்டும் இங்கே சொல்லவில்லை. கடவுள் நம்பிக்கை இருப்பவன் பகுத்தறிவாளன் இல்லை என்று சொல்வது எவ்வாறு சரியாகும் என்பதே என் வாதம்!!!

சர்வேசா,
இங்க கொஞ்சம் வாங்களேன்!!!

வெட்டிப்பயல் said...

குமரன்,
சிபா சொன்னதும் சரி நீங்கள் சொன்னதும் சரி என்னை பொறுத்தவரை தவறே!!!

ஆனால் அது தனிப்பட்ட மனிதனை பொறுத்தது... பசியால் அழுவும் ஒரு குழந்தையைவிட பொம்மைக்காக அழுவும் நம் குழந்தையின் அழுகையே நம் காதுக்கு அதிகமாக கேட்கும்!
நாம் எல்லாம் சுயநலவாதிகள் தானே!!!

சிவபாலன் said...

பாலாஜி

நான் எதோ சொல்ல வந்து அது எங்கோ போகிறது. மன்னிக்க.. பதிவை திசை திருப்புவது நோக்கமல்ல.. (உங்களுக்கு தெரியும்).

நீங்கள் எடுத்துக் கொண்ட தலைப்பு மிகப் பெரியது. (என்னைப் பொருத்தவரையில்)

மேலும் நல்ல விவாதங்கள் வரும் என நம்புவோம்..

நானும் படிக்க காத்திருக்கிறேன்.

Unknown said...

சாமி சிலைக்கு பால் அபிஷேகம் செய்வது தவறு என்பதை நான் ஏற்கமாட்டேன்.

பாலூற்றுவதாலும், பூமாலை போடுவதாலும், வெண்ணைக்காப்பு ஆகியவற்றை செய்வதாலும் கோயிலை சுற்றி உள்ள பல குடும்பங்கள் பிழைக்கின்றன. வெண்ணை என்பது நமது உடலுக்கு ஒவ்வாத கொழுப்பு.பாலும் என்ன ஒரு இரண்டு லிட்டர் சாமிக்கு ஊற்றுவார்களா?அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?

கோயிலை சுற்றி உள்ள எத்தனை பிச்சைக்காரர்களுக்கு பாலாபிஷேகம் செய்கிறவர்கள் தான தருமம் செய்கின்றனர் தெரியுமா?திருப்பதி கோயிலால் எத்தனை நற்காரியங்கள் நடைபெறுகின்றன என தெரியுமா?

கோயிலில் போகும்வழியில் பசியால் தவிக்கும் குழந்தை அழ அதை கண்டு "ஹி..ஹி" என அரக்கத்தனமாக இளித்துக்கொண்டு யாரும் பால்குடத்துடன் கோயிலுக்கு போவதில்லை.தமிழ் சினிமாவில் தான் அப்படி எல்லாம் காட்சிகள் வரும்:)

நான் அமெரிக்கா வருமுன் ஆஞ்சனேயர் கோயிலுக்கு வெண்ணைக்காப்பு சாத்தி விட்டும் கோவையில் உள்ள அனாதை விடுதி ஒன்றின் குழந்தைகளுக்கு கம்பளி, போர்வை, ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி மூட்டை ஆகியவற்றை கொடுத்துவிட்டுத்தான் வந்தேன்.இரண்டும் எனக்கு மிகவும் மனநிறைவளித்த செயல்கள்.

Unknown said...

பெரியார் சிலை வைக்க ஆன கல்லில் இரண்டு வீடுகளுக்கு அடித்தளம் போட்டு தந்திருக்கலாமே?பெரியார் சிலைக்கு நிழல் தர பயன்படும் தடுப்புகளை வைத்து இரண்டு குடிசைகளுக்கு கூரை போட்டிருக்கலாமே அவரது சிலைக்கு ரோஜா மாலை போடுவதற்கு பதில் அந்த ரோஜாக்களை வைத்து ஏழைகளுக்கு குல்கந்து தயாரித்து கொடுத்திருக்கலாமே என்றால் என்ன பதில்?

வெட்டிப்பயல் said...

//சிபா,
வீண் விவாதங்கள் வேண்டாமே!!!

என் பணத்தை செலவு செய்ய சொல்லி தர உங்களுக்கு உரிமையில்லை. இது தான் என் வாதம்.

நான் சம்பாதிக்கும் பணத்திற்கு வரி கட்டிய பின் நான் கிழித்து கூட போடுவேன்!!! Its none of ur business to teach me how to spend my money.

(I know u wont take this as personal)//

சிபா,
நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கனு தைரியத்திலதான் நான் மேல அப்படி சொல்லியிருக்கேன்!!!

ஏன்னா நான் கடவுள் நம்பிக்கையை சரியா தப்பானு இங்க பேச வரலை... என் கேள்வி பகுத்தறிவு என்றால் கடவுள் நம்பிக்கைக்கு எதிர் என்று அர்த்தமா என்றுதான்...

Unknown said...

//அதே சமயத்தில், சிகாகோ போன்ற நகரங்களில் கட்டப்படும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்து கோயில்களையும் தாங்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.//

பலகோடி செலவில் வள்ளுவருக்கு சிலை வைத்தார்கள் குமரியில். வ.உ.சிக்கும், சிவாஜி கணேசனுக்கும் இன்னும் பல தலைவர்களுக்கும் மணிமண்டபம் கட்டினார்கள். இதை கருத்தில் கொள்ள வேண்டாமா?

Boston Bala said...

---பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்து கோயில்களையும்---

இந்தக் கோவில்களை சமுதாயக் கூடங்களாகத்தான் இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள்.

நினைப்பது சாமி கும்பிட; நடப்பதோ 'ரம்மியமான ட்ரைவுடன் கூடிய... காலை சிற்றுண்டி + சினிமா அறிவிப்பு + விழாக் கூட்டம்'. புத்தர் இருக்கிறார்; ஜெயினக் கடவுள் உண்டு... அப்புறமும் இந்துக் கோவில்? : )

சிவபாலன் said...

பாபா

பிக்னிக் ஸ்பாட் என்று சொல்லறீங்க.. சரியா?

வெட்டிப்பயல் said...

மக்களே!!!
எல்லாரும் இந்த இடத்துல விவாதங்களை நிறுத்திட்டு என் கேள்விக்கு விடை சொல்லுங்களேன்!!!

ஏழைகளுக்கு எப்படியெல்லாம் உதவலாம்னு பின்னாடி விவாதிச்சிக்கலாம்!!!

வெற்றி said...

வெட்டி,
நான் ஒரு பின்னூட்டம் இட்டேனே! என்னாச்சு?!! :)

வெட்டிப்பயல் said...

// Sivabalan said...

பாலாஜி

நான் எதோ சொல்ல வந்து அது எங்கோ போகிறது. மன்னிக்க.. பதிவை திசை திருப்புவது நோக்கமல்ல.. (உங்களுக்கு தெரியும்).

நீங்கள் எடுத்துக் கொண்ட தலைப்பு மிகப் பெரியது. (என்னைப் பொருத்தவரையில்)

மேலும் நல்ல விவாதங்கள் வரும் என நம்புவோம்..

நானும் படிக்க காத்திருக்கிறேன். //

நீங்க எந்த விதத்தில் சொல்ல வந்தீர்கள் என்று எனக்கு நன்றாக புரிகிறது சிபா... தவறாக எடுத்து கொள்ளவில்லை.

பசியாய் இருப்பவனுக்கு உணவளிக்க வேண்டியது நம் கடமை. இந்த எண்ணத்தை எனக்கு உருவாக்கியது உன்னிலிருக்கும் இறைவனே அவனுள்ளும் இருக்கிறான் என்ற எண்ணமே!

மேலும் யாரொருவருக்கு நாம் உதவவதால் நமக்கு பிரதி உபகாரம் கிடைக்காதோ அவர்களுக்கு உதவுவதால் மட்டுமே நாம் இறைவனுக்கு தொண்டு செய்கிறோம் என்பதும் என் எண்ணம்!!!

இங்கே என்னை இயக்குவது இறை நம்பிக்கையே!!! இதை என்னவென்று சொல்வீர்கள்???

வெட்டிப்பயல் said...

// வெற்றி said...

வெட்டி,
நான் ஒரு பின்னூட்டம் இட்டேனே! என்னாச்சு?!! :) //

நான் எதுவும் பண்ணலையே :-/

இன்னொரு தடவை போட்டுடுங்களேன்!!! ப்ளீஸ் :-)

குமரன் (Kumaran) said...

//சாமி சிலைக்கு பால் அபிஷேகம் செய்வது தவறு என்பதை நான் ஏற்கமாட்டேன்.
//

Selvan, That is why I put the Qualifier 'கண்ணெதிரில் ஏழைக் குழந்தை பாலுக்கு அழும் போது'

:-)

துளசி கோபால் said...

//எனக்கு தெரிந்த வரை நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து
அதன் படி நடப்பது தானே பகுத்தறிவு//

அதே அதே.

இந்த அறிவால் இறைவனையும் பகுத்தறிந்து, பிற உயிருக்கும் பிற மனங்களுக்கும்
நன்மை செய்ய முடிஞ்சால் நன்மை. செய்ய முடியலைன்னா தீமையாவது செய்யாம
இருக்கறது. இதுதான் பகுத்தறிவு.

சிறில் அலெக்ஸ் said...

//ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்!
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்!!!//

:) பாபா இது குறும்பா இல்ல சீரியசா

நிர்மல் said...

இறை மறுப்பாளருக்கு இறை நம்பிக்கையிலிருந்து இறை மறுப்புக்கு செல்வதற்கு rational thinking உதவுவதால் இறை மறுப்பும் ,rational thinkingம் ஒரே போல் இருப்பதாய் எண்ண படிமங்கள் உருவாகலாம்.

இறை நம்பிக்கை உடையவருக்கு இறையிருப்பை rational thinking மூலம் நிலைநாட்ட முடிவதாய் எண்ணங்கள் அமைகையில் அவருடைய தரப்பும் நிறுவப்படுகின்றது.

rational thinking என்பது மனிதருக்கு மனிதர் மாறலாம். ஒரே கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் வெவ்வேறு மனிதர்களிடத்து அமைவதும் உண்டு. அப்படி அமையலாம் என்பதை ஏற்பதும் rational thinking தான்.

கண்மூடிதனமாய் ஏதையேனும் செய்து விட்டு யாரேனும் கேட்டால் விதி, தலையெழுத்து, அது அப்படிதான், ஆண்டாண்டு காலமாய் இப்படித்தான் என பதிலளிப்பது போன்றவைதான் rational thinking மரத்து போக செய்ய கூடியவை.

பின்குறிப்பு;

இதெல்லாம் பகுத்தறிவும், rational thinkingம் ஒன்றுதான் என்ற என் நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்பட்டது. ;-)

SurveySan said...

என்ன இங்க கூட்டம், என்ன இங்க கூட்டம்ம்ம்ம்? (கோவை சரளா ஸ்டைலில் படித்துக் கொள்ளவும்)

நானே என் கேள்விக்கு விடைகாண அப்பப்ப ஒரு சர்வே போடறேன். கேள்விக்குள்ளயே இன்னொரு கேள்வியா?. :)

ஹ்ம்.

//பகுத்தறிவு என்றால் என்ன???
எனக்கு தெரிந்த வரை நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து அதன் படி நடப்பது தானே பகுத்தறிவு//

மிகச்சரி. அதுதான் விலங்கிலிருந்து நம்மை வேறு படுத்துது என்று சிறு வயது பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்தார்கள்.

வெறும் இறை மறுப்பு என்பது நாத்திகம் தான்.

ஆனால் தான் ஒரு நாத்திகன் என்று தெளிவு படத்திக் கொள்ள உதவுவது பகுத்தறிவு.
so, all atheists are பகுத்தறிவாளன்s.

அப்ப, கடவுள நம்பரவனுக்கு பகுத்தறிவு இல்லியா? கண்டிப்பா இருக்கு, மத்த விஷயத்துக்கு.
இறைவழிபாட்டை பொறுத்த வரைக்கும், you and me have chosen the 'default' path which our ancestors have chosen.

but, நம்ம 'பகுத்தறிவு பாசரை' ப்ரதர்ஸ், have thought through the process and took the இறை மறுப்பு route, using their பகுத்தறிவு.

so, பகுத்தறிவாளன் belongs to atheist, when the subject is இறை மறுப்பு.

வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்கய்யா.. me the escape!!!!! :) ( இத, வடிவேலு ஸ்டைல்ல படிங்க )

:)


(on a serious note, you are right. பகுத்தறிவு is nothing but your capability to 'THINK, ANALYZE & DECIDE'. புலி சிங்கம் கூட discovery channel பாத்தா பகுத்தறிஞ்சு தான் மான கொல்ற மாதிரி தெரியுது. என்னமோ போங்க வெட்டி. இதுக்கு தனியா ஒரு சர்வே வேணா போடலாம்.)

வெட்டிப்பயல் said...

செல்வன்,
நாத்திகர்கள் செய்வது சரியா என்று நாம் கேட்பது இந்த இடத்தில் சரியல்ல :-)

ஆத்திகர்கள் பகுத்தறிவாளர்கள் இல்லையா என்பதே!!! அதற்கும் தாங்கள் அருமையாக விளக்கம் கொடுத்துவிட்டீர்கள்!!!

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

//சாமி சிலைக்கு பால் அபிஷேகம் செய்வது தவறு என்பதை நான் ஏற்கமாட்டேன்.
//

Selvan, That is why I put the Qualifier 'கண்ணெதிரில் ஏழைக் குழந்தை பாலுக்கு அழும் போது'

:-) //

செல்வனும் இதை மறுக்க மாட்டார் :-)

வெட்டிப்பயல் said...

// துளசி கோபால் said...

//எனக்கு தெரிந்த வரை நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து
அதன் படி நடப்பது தானே பகுத்தறிவு//

அதே அதே.

இந்த அறிவால் இறைவனையும் பகுத்தறிந்து, பிற உயிருக்கும் பிற மனங்களுக்கும்
நன்மை செய்ய முடிஞ்சால் நன்மை. செய்ய முடியலைன்னா தீமையாவது செய்யாம
இருக்கறது. இதுதான் பகுத்தறிவு. //

டீச்சர்,
நானும் இதே கட்சி தான் :-)

Mohandoss said...

இந்தக் கேள்விக்கு நான் கஷ்டப்பட்டு நல்லது கெட்டதயெல்லாம் யோசித்து ஒரு பதிவு போட்டிருக்கேன். இதை எழுத தூண்டியது உங்கள் பதிவு தான் என்பதால் இந்தப் பின்னூட்டம்.

வடுவூர் குமார் said...

நான் சம்பாதிக்கும் பணத்திற்கு வரி கட்டிய பின் நான் கிழித்து கூட போடுவேன்!!! Its none of ur business to teach me how to spend my money.

இது தான் சூப்பர் "நச்" நச்.
ஒன்று உள்ளே ஒன்று வெளியே.

CVR said...

பகுத்தறிவு என்ற வார்த்தையை நாத்திகவாதிகள் சொந்தம் கொண்டாடுவது எனக்கும் உடன்பாடில்லாத விஷயம்தான்.என்னை போன்ற பலரின் எண்ண ஒட்டத்தை உங்கள் பதிவு பிரதிபலிக்கிறது!! :)

இலவசக்கொத்தனார் said...

சங்கத்தில 100 அடிச்ச கையோட இங்க வந்தா இங்க 50 அடிக்க சான்ஸா! சூப்பர் மாம்ஸ்.

இங்க எல்லாரும் வந்து சொல்லியாச்சு
நானென்ன புதுசா சொல்லப் போறேன்.

எல்லாம் நல்லாயிருங்கடே!

கோவி.கண்ணன் [GK] said...

பழமை வாதம் ஒழித்து நல்நோக்கத்தை வெளிப்படுத்தும் ஆத்திக நாத்திகம் இரண்டின் வாதங்களும் பகுத்தறிவு !

SP.VR. SUBBIAH said...

rational thinking has been an invisible process. ... It helps us sort through multiple issues, clarify meaning to ensure common understanding, ...

பொதுவான சிந்தனை
எல்லோருக்கும் பிடிபடும் சிந்தனை----
இதுதான் rational thinking!

சரிதானா?

சாலிசம்பர் said...

//ஆத்திகர்கள் பகுத்தறிவாளர்கள் இல்லையா ?//

விசித்திர ஜந்துக்களை வணங்கும் ஆத்திகர்கள் பகுத்தறிவாளர்களா?

ஜோசியம் பார்க்கும் ஆத்திகர்கள் பகுத்தறிவாளர்களா?

ஜாதகம் பார்க்கும் ஆத்திகர்கள் பகுத்தறிவாளர்களா?

வரதட்சணை வாங்கும் ஆத்திகர்கள் பகுத்தறிவாளர்களா?

வெட்டிப்பயல் said...

//நிர்மல் said...

இறை மறுப்பாளருக்கு இறை நம்பிக்கையிலிருந்து இறை மறுப்புக்கு செல்வதற்கு rational thinking உதவுவதால் இறை மறுப்பும் ,rational thinkingம் ஒரே போல் இருப்பதாய் எண்ண படிமங்கள் உருவாகலாம்.

இறை நம்பிக்கை உடையவருக்கு இறையிருப்பை rational thinking மூலம் நிலைநாட்ட முடிவதாய் எண்ணங்கள் அமைகையில் அவருடைய தரப்பும் நிறுவப்படுகின்றது.//

நிர்மல்,
உங்களுடன் நான் உடன்படுகிறேன்...
நான் சொல்ல வருவதும் அதுவே!!!

குமரன் (Kumaran) said...

Jollyjumper,

Too much Jumping. Answers to your questions:

Yes
Yes
and
Yes.

And then No. Whoever it is (both Aththikar and Naaththikar) varathatsanai is a social evil.

வெட்டிப்பயல் said...

//வெறும் இறை மறுப்பு என்பது நாத்திகம் தான்.

ஆனால் தான் ஒரு நாத்திகன் என்று தெளிவு படத்திக் கொள்ள உதவுவது பகுத்தறிவு.
so, all atheists are பகுத்தறிவாளன்s.//

சர்வேசன்,
இது என்ன லாஜிக்???
நான் ஒரு ஆத்திகன் என் தெளிவு படுத்தி கொள்ள உதவுவதும் பகுத்தறிவு தானே!!!

//அப்ப, கடவுள நம்பரவனுக்கு பகுத்தறிவு இல்லியா? கண்டிப்பா இருக்கு, மத்த விஷயத்துக்கு.
இறைவழிபாட்டை பொறுத்த வரைக்கும், you and me have chosen the 'default' path which our ancestors have chosen//
அப்படியெல்லாம் இல்லைங்க...
சும்மா வீட்ல சொன்னாங்கனு கேக்கற டைப் இல்லை நான். என்னை கோவிலுக்கு கூப்பிட்டு போகறதுக்குள்ள எங்க வீட்ல படற கஷ்டம் அவுங்களுக்குத்தான் தெரியும்.

வெட்டிப்பயல் said...

//மோகன்தாஸ் said...

இந்தக் கேள்விக்கு நான் கஷ்டப்பட்டு நல்லது கெட்டதயெல்லாம் யோசித்து ஒரு பதிவு போட்டிருக்கேன். இதை எழுத தூண்டியது உங்கள் பதிவு தான் என்பதால் இந்தப் பின்னூட்டம். //

பரவாயில்லைங்க மோகன் தாஸ், ரவி அண்ணாவை பத்தி போடும் போது தான் சொல்லல.. இப்பவாவது சொல்லி ஒரு பின்னூட்ட எண்ணிக்கையையும் ஒரு ஹிட் கவுண்டையும் கூட்டினீங்களே!!! ரொம்ப சந்தோஷம் :-))

வெட்டிப்பயல் said...

//வடுவூர் குமார் said...

நான் சம்பாதிக்கும் பணத்திற்கு வரி கட்டிய பின் நான் கிழித்து கூட போடுவேன்!!! Its none of ur business to teach me how to spend my money.

இது தான் சூப்பர் "நச்" நச்.
ஒன்று உள்ளே ஒன்று வெளியே. //

குமார்,
நான் சொல்ல வருவது... கோவில்ல சாமிக்கு நகை போடறது வேஸ்ட், மாலை போடறது வேஸ்ட், அபிஷேகம் செய்யறது வேஸ்ட்... அதெல்லாம் ஏழைக்கு கொடுங்க அப்படினு யாரும் யாருக்கும் உத்தரவு போட தேவையில்லைனு தான்...

நாத்திகர்கள் (So called பகுத்தறிவாளர்கள்) பணத்தை எங்குமே விரயம் செய்யாத மாதிரியும், எல்லா பணத்தையும் ஏழைகளுக்கு செலவு செய்வது போலவும் பேசுவது தான் கொடுமையாக உள்ளது...

ஆத்திகர்களாவது புண்ணியம் வரும் என்று நம்பி ஏதாவது செய்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு அதிலும் நம்பிக்கையில்லை. அப்படியிருக்க மற்றவர்கள் பணத்தை செலவு செய்ய சொல்லி தர இவர்கள் யார்???

வெட்டிப்பயல் said...

//CVR said...

பகுத்தறிவு என்ற வார்த்தையை நாத்திகவாதிகள் சொந்தம் கொண்டாடுவது எனக்கும் உடன்பாடில்லாத விஷயம்தான்.என்னை போன்ற பலரின் எண்ண ஒட்டத்தை உங்கள் பதிவு பிரதிபலிக்கிறது!! :) //

மிக்க நன்றி CVR...

வெட்டிப்பயல் said...

// இலவசக்கொத்தனார் said...

சங்கத்தில 100 அடிச்ச கையோட இங்க வந்தா இங்க 50 அடிக்க சான்ஸா! சூப்பர் மாம்ஸ்.

இங்க எல்லாரும் வந்து சொல்லியாச்சு
நானென்ன புதுசா சொல்லப் போறேன்.

எல்லாம் நல்லாயிருங்கடே! //

சங்கத்தில் 100, இங்கே 50 என கலக்கியிருக்கும் கொத்ஸ் வாழ்க வாழ்க!!!

சும்மா நீங்களும் ஏதாவது கருத்து சொல்லிட்டு போங்க கொத்ஸ்.. அப்ப தானே ஏதாவது அடிச்சி ஆட முடியும் :-)

Anonymous said...

எல்லாம் இல்லை இல்லை என்பது கருப்பறிவு. அதை தான் பகுத்தறிவு என்கிறது வெங்காயச் சருகுகள்.

அமெரிக்கா என்ற ஒன்று உள்ளது. சரி அதை இந்தியாவில் இருந்து என் கண்களால் பார்க்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அமெரிக்கா என்பது பொய். இது தான் பாசறைகளின் வாதம்.

எங்களுக்கு மூளை இருக்கிறது என்கிறோம். ஆம் உள்ளது அதை நேரடியாக பார்க்காமால் போனாலும் சிந்தனைகளாலும் மற்ற்றும் பல காரணிகளாலும் அதை உணர்கிறோம்.

கடவுள் இல்லை என்று கூச்சலிடும் முன்ன்னே இருக்கிறதா இல்லையா என்று தேட வேண்டும். தேடுதலில் உமக்கு விடை கிட்டாமல் போனால் அப்போது நாத்திகம் பேசினால் அது பகுத்தறிவு.

யாரோ ஒருத்தன் சொன்னான்யாகடவுள் இல்லைன்னு... அதையே நானும் சொல்றேன்னு சொல்றது ஆட்டுமந்தைக் கூட்ட புத்தி.

கடவுள்னு யாரோ சொன்னான்னுட்டு நீ மட்டும் சொல்றியே இருக்குதுன்னு அடுத்த கேள்வி வரலாம். கடவுளை அறியும் முயற்சியில் கடவுளை சற்றேனும் உணர்ந்துள்ளேன். அதனால் என்னால் சொல்ல முடியும்.

என் பதிவில் இதை எழுத முயல்கிறேன். நேரம் இருந்தால் ..

ஜி said...

ellaarum ore matterathaan solraanga... naanum athaiye thiruppi sonna athu nalla irukaathu.. athukaaha enooda karutha vittuttu maatru karuthum ennaala solla mudiyaathu... so i'm the escape..

வல்லிசிம்ஹன் said...

எல்லோரும் இத்தனையும் சொல்லியாகி விட்டது.
பகுத்து அறிவதுதான் நமக்குத்தேவை.
உபகாரம் செய்ய வேண்டும்.
அபகாரம் செய்யக் கூடாது.
உயிர்களிடம் அன்பு.
இன்னும் எத்தனையோ செய்ய இருக்கும்போது , ஒலிபெருக்கியில் முழங்குவதால் மட்டும் அறிவை வளர்க்க முடியாது என்பதுதான் என் கருத்து.நல்ல விவாதத்தை ஆரம்பித்தீர்கள் பாலாஜி.

SurveySan said...

//அப்படியெல்லாம் இல்லைங்க...
சும்மா வீட்ல சொன்னாங்கனு கேக்கற டைப் இல்லை நான். என்னை கோவிலுக்கு கூப்பிட்டு போகறதுக்குள்ள எங்க வீட்ல படற கஷ்டம் அவுங்களுக்குத்தான் தெரியும்.
//

என்ன சொல்ல வரீங்க? நீங்களே ஆராய்ந்து/அனுபவித்து கடவுள் இருக்கார்னு கண்டுபிடிச்சு, பின் அந்த அடிப்படையில் ஆத்தீகர் ஆனீங்களா?

Your childhood brought up, has made you, what you are today.

தெருக்கு தெரு கோயில், ஒவ்வொருவர் நெத்தியிலும் விபூதி, குங்குமம் என்று ஆத்தீகம் ரொம்பி வழியும் நம் ஊரில், கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு தைரியமாக அந்த நம்பிக்கையை பின்பற்றி வாழும் நாத்தீகவாதியை, 'பகுத்தறிவாளன்' என்று சொல்வதில் தவறில்லை என்பதே என் கருத்து.

கடவுள் நம்பிக்கையை பொறுத்த வரையில், ஆத்தீகர்களாகிய நம்மில் பெரும்பாலானவர்கள், ஒரு நாள் கூட
"அட, ஏன் இன்னும் எனக்கு வேலை கெடைக்கல. ஏன் இன்னும் திருமணம் ஆகல. ஏன் இன்னும் XYZ... கடவுள் இருக்காரா இல்லியா? ஏன் நான் நாத்தீகன் ஆகி, கடவுள் போடோ எல்லாம் தூக்கி வெளியில் போடக் கூடாது. கடவுள் எல்லாம் ஏமாத்து வேலை" என்று 'rational thinking' செய்திருப்போமா?
கண்டிப்பாக இல்லை.

நாம் வளர்ந்த விதப்படி, பிள்ளையார் இஷ்ட தெய்வமா? வழில பிள்ளையார் கோயில் வந்தா, ஒரு silent கும்பிடு போடு. போயிட்டே இரு.. பிள்ளையார்கு ஏன் யானை தலை. எப்படி இதெல்லாம் possible என்ற ஆராய்ச்சி ஆத்தீகர்களில் பெரும்பாலானவர்கள் செய்ததில்லை. (செய்யத் தேவை இல்லை என்பதே என் கருத்தும்).

so, கடவுள் நம்பிக்கையை பொறுத்த மட்டில், 'பகுத்தறிவாளன்' என்பது நாத்தீகனுக்கே பொறுந்தும்.
இதுவே சர்வே-சனின் தீர்ப்பு.

வர்டா,

:)

Anonymous said...

1.pakuththaRivu=
pa+ku+th+hu+a+Ri+vu
this is called "பகுத்தறிவு".

2.பகுத்தறிவு = ப + குத்தறிவு.

3.பகுத்தறிவு =பகு+குத்து+அறிவு.

நாமக்கல் சிபி said...

கடவுள் இருக்கிறார். கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவோம் என்பது ஆத்திகம்.


கடவுளே இல்லை. கோவில்களுச் செல்லத் தேவை இல்லை என்பது நாத்திகம்.

கடவுளை வணங்கக் கோவிலுக்குச் செல்லலாம்தான். ஆனால் அங்கே செய்யும் பாலாபிஷேகத்தை ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் என்ன? என்பது பகுத்தறிவு!

வெட்டிப்பயல் said...

//கோவி.கண்ணன் [GK] said...

பழமை வாதம் ஒழித்து நல்நோக்கத்தை வெளிப்படுத்தும் ஆத்திக நாத்திகம் இரண்டின் வாதங்களும் பகுத்தறிவு ! //

நச்சென்று சொன்னீர்கள் கோவி!!!

வெட்டிப்பயல் said...

//SP.VR.சுப்பையா said...

rational thinking has been an invisible process. ... It helps us sort through multiple issues, clarify meaning to ensure common understanding, ...

பொதுவான சிந்தனை
எல்லோருக்கும் பிடிபடும் சிந்தனை----
இதுதான் rational thinking!

சரிதானா? //

பொதுவான சிந்தனையென்று சொல்வது rational thinking ஆகுமா???

வெட்டிப்பயல் said...

//ஜாலிஜம்பர் said...

//ஆத்திகர்கள் பகுத்தறிவாளர்கள் இல்லையா ?//

விசித்திர ஜந்துக்களை வணங்கும் ஆத்திகர்கள் பகுத்தறிவாளர்களா?

ஜோசியம் பார்க்கும் ஆத்திகர்கள் பகுத்தறிவாளர்களா?

ஜாதகம் பார்க்கும் ஆத்திகர்கள் பகுத்தறிவாளர்களா?

வரதட்சணை வாங்கும் ஆத்திகர்கள் பகுத்தறிவாளர்களா? //

:-)))

வரதட்சனை யார் வாங்கினாலும் தவறுதான். அதற்கும் பகுத்தறிவுக்கும் என்ன சம்பந்தம்...

மேலும் கடவுளை ஏற்பவர்கள் அனைவரும் ஜோதிடமும், ஜாதகமும் பார்ப்பார்கள் என்று உங்களுக்கு யார் சொன்னார்கள்? (கடவுள் என்றால் இந்து மதத்தை மட்டும் எடுத்து கொள்ளாதீர்கள் ஜாலி :-))

உங்களுக்கு முன்னாலிருந்தவர்கள் அனைவரும் முட்டாள்கள் அல்ல ஜாலி ஜம்பர். விசித்திர மிருகங்களை ஏன் வணங்கினார்கள் என்று உங்கள் பகுத்தறிவை கொண்டு சிந்தியுங்கள்!!!

நாம மட்டும் தான் புத்திசாலி நமக்கு முன்னால பொறந்தவனுக்கெல்லாம் அறிவில்லைனு நீங்க நினைச்சா அதுக்கு எதுவும் செய்ய முடியாது!!!

யானையை வணங்குபவர்கள் ஏன் சிங்கம், புலி, சிறுத்தையை வணங்குவதில்லை... கொஞ்சம் சிந்திக்கலாமே :-)

வெட்டிப்பயல் said...

வேழம்,
நமக்கு கடவுள் நம்பிக்கையில்லாமல் இருப்பவர்களை பற்றி கவலையில்லை...

பகுத்தறிவு என்றால் இறை நம்பிக்கைக்கு எதிரானதா என்பதே கேள்வி!!!

வெட்டிப்பயல் said...

ஜி,
எதிர் கருத்து சொல்வதால் எதிரி என்று அர்த்தமில்லை... தாராளமா சொல்லலாம் :-)

வெட்டிப்பயல் said...

//வல்லிசிம்ஹன் said...

எல்லோரும் இத்தனையும் சொல்லியாகி விட்டது.
பகுத்து அறிவதுதான் நமக்குத்தேவை.
உபகாரம் செய்ய வேண்டும்.
அபகாரம் செய்யக் கூடாது.
உயிர்களிடம் அன்பு.
இன்னும் எத்தனையோ செய்ய இருக்கும்போது , ஒலிபெருக்கியில் முழங்குவதால் மட்டும் அறிவை வளர்க்க முடியாது என்பதுதான் என் கருத்து.நல்ல விவாதத்தை ஆரம்பித்தீர்கள் பாலாஜி. //

வல்லி அம்மா,
நல்லா சொன்னீங்க...

வெட்டிப்பயல் said...

சர்வேசன்,
வாங்க! வாங்க!!!

கடவுள் நம்பிக்கை நான் உணர்ந்ததால் வந்ததே!!! உணர்தல் என்றால் கடவுளை பார்த்ததால் என்று அர்த்தமில்லை...
நல்லவர்கள் பல துயரங்கள் அடைந்தாலும் இறுதியில் அவர்களை இறைவன் கைவிட மாட்டான் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தால் வந்ததே!!!

எனக்கு வேலை கிடைக்கவில்லை, எனக்கு திருமணம் ஆகவில்லை. அதனால் கடவுள் இல்லை என்று தீர்மானிப்பதுதான் பகுத்தறிவா???

இதுக்கு நான் ஒரு வாரம் லீவு போட்டு சிரிக்கனும் போல இருக்கு!!!

//நாம் வளர்ந்த விதப்படி, பிள்ளையார் இஷ்ட தெய்வமா? வழில பிள்ளையார் கோயில் வந்தா, ஒரு silent கும்பிடு போடு. போயிட்டே இரு.. பிள்ளையார்கு ஏன் யானை தலை. எப்படி இதெல்லாம் possible என்ற ஆராய்ச்சி ஆத்தீகர்களில் பெரும்பாலானவர்கள் செய்ததில்லை. (செய்யத் தேவை இல்லை என்பதே என் கருத்தும்).//
தலிவா!!! தப்பு செய்யறீங்க.
யானையை மனிதன் வணங்குவதற்கும் காரணமிருக்கிறது. இன்றும் ஆதிவாசிகள் (இந்தியா, ஆப்பிரிக்கா...) யானையை வணங்குகிறார்கள். ஏனென்றால் யானை மனிதனுக்கு அதிகமாக உதவும் பிராணி...

யானையை பயன்படுத்தி அவன் வேட்டையாடுகிறான், மரங்களை உடைக்க அது அவனுக்கு பயன் தருகிறது.. மேலும் யானை மனிதனுடன் எளிதில் பழகக்கூடிய பிராணி!!! இன்னும் பல காரணங்கள் இருக்கிறது...

ஏன் வணங்கினான்னு யோசிச்சி அப்பறம் அதை வணங்கத்தேவையில்லைனு யோசிக்கிறவன் தான் பகுத்தறிவாளி!!!

உங்க வாதப்படி நாத்திகர்களுக்கும் இந்த காரணங்கள் தெரியாது... இதுக்கு முன்னாடி பிறந்தவனெல்லாம் முட்டாள்னு ஒரு அகம்பாவம்தான் எனக்கு தெரிகிறது!!!

Unknown said...

//விசித்திர ஜந்துக்களை வணங்கும் ஆத்திகர்கள் பகுத்தறிவாளர்களா?//

எந்த ஆத்திகனும் விசித்திர ஜந்துக்களை வணங்குவதில்லை. கடவுளை தான் வணங்குகிறான். அதை கும்பிடாதவனுக்கு தான் அது விசித்திர ஜந்துவாக தோற்றமளிக்கிறது

//ஜோசியம் பார்க்கும் ஆத்திகர்கள் பகுத்தறிவாளர்களா?//

ஜோசியம் பார்ப்பதில் தவறில்லை.ஜோசியகாரன் சொல்கிறான் என்று தொழில் துவக்காமல் இருப்பது, கல்யாணத்தை தள்ளிப்போடுவது ஆகிவற்றை செய்கிறவன் தான் முட்டாள்.நல்ல நாள் பார்ப்பது, நேரம் பார்ப்பது ஆகியவற்றை செய்வதில் எந்த தப்பும் இல்லை. சினிமாவுக்கு பூஜை போடும்போது ராகுகாலத்தில் பூஜை போட்டு பாருங்கள்.ரஜினி நடித்தால் கூட அந்த படம் விற்காது:).

//ஜாதகம் பார்க்கும் ஆத்திகர்கள் பகுத்தறிவாளர்களா?//

மேலே சொன்ன பதில் தான் இதற்கும்.

//வரதட்சணை வாங்கும் ஆத்திகர்கள் பகுத்தறிவாளர்களா?//

கொள்கை,கிள்கை என்று பேசி வரதட்சணை வாங்காமல் வலிய வரும் சீதேவியை எட்டி உதைப்பதுதான் பகுத்தறிவா? கிறுக்கன் தான் காசை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அது தான் பகுத்தறிவு என்பான். புத்திசாலியா வரதட்சணை வாங்குவது தான்யா பகுத்தறிவு (சத்தியமா தமாசுக்கு தான் சொன்னேன்.:))

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

1.pakuththaRivu=
pa+ku+th+hu+a+Ri+vu
this is called "பகுத்தறிவு".

2.பகுத்தறிவு = ப + குத்தறிவு.

3.பகுத்தறிவு =பகு+குத்து+அறிவு. //

ஏன் இப்படி???

Unknown said...

பழமை வாதம் ஒழித்து நல்நோக்கத்தை வெளிப்படுத்தும் ஆத்திக நாத்திகம் இரண்டின் வாதங்களும் பகுத்தறிவு ! //

பழமைவாதம் என இருந்தாலே அது மோசம் என்பது பகுத்தறிவல்ல.

பழசு, புதுசு இரண்டிலும் உள்ள நல்லதை ஏற்பதுதான் பகுத்தறிவு.

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...

கடவுள் இருக்கிறார். கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவோம் என்பது ஆத்திகம்.


கடவுளே இல்லை. கோவில்களுச் செல்லத் தேவை இல்லை என்பது நாத்திகம்.

கடவுளை வணங்கக் கோவிலுக்குச் செல்லலாம்தான். ஆனால் அங்கே செய்யும் பாலாபிஷேகத்தை ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் என்ன? என்பது பகுத்தறிவு! //
தள,
ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க!!!

ஆனா அது நம்ம ஊத்தற பாலா இருக்கனும். அடுத்தவன் ஊத்தற பாலை பத்தி நாம பேச தேவையில்லை என்பதே என் கருத்து!!!

நாமக்கல் சிபி said...

//ஆனா அது நம்ம ஊத்தற பாலா இருக்கனும். அடுத்தவன் ஊத்தற பாலை பத்தி நாம பேச தேவையில்லை என்பதே என் கருத்து//

ஆமா! நாம ஊத்துற பால்தான்!

நான் கோவிலுக்குப் ஒரு லிட்டர் பாலாபிஷேகம் செய்வதைவிட அதை 4 குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்று நினைப்பதுதான் சரி!

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...

//ஆனா அது நம்ம ஊத்தற பாலா இருக்கனும். அடுத்தவன் ஊத்தற பாலை பத்தி நாம பேச தேவையில்லை என்பதே என் கருத்து//

ஆமா! நாம ஊத்துற பால்தான்!

நான் கோவிலுக்குப் ஒரு லிட்டர் பாலாபிஷேகம் செய்வதைவிட அதை 4 குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்று நினைப்பதுதான் சரி! //

இதுதான் எனக்கு பிடித்ததும்!!!

SurveySan said...

//எனக்கு வேலை கிடைக்கவில்லை, எனக்கு திருமணம் ஆகவில்லை. அதனால் கடவுள் இல்லை என்று தீர்மானிப்பதுதான் பகுத்தறிவா???

இதுக்கு நான் ஒரு வாரம் லீவு போட்டு சிரிக்கனும் போல இருக்கு!!!//

இதில் சிரிக்க என்ன இருக்கு. அதெல்லாம் உதாரணங்கள் தம்பி.
தொடர்ந்து துன்பங்கள் மட்டுமே வரும்போது, கடவுள் இருக்கான். அவன் பாத்துப்பான் என்று எண்ணுவது ஆத்தீகம்.

தொடர்ந்து துன்பம் வரும்போதும், கடவுள் எல்லாம் கிடையாது, தன் திறமையே தனக்குதவி என்பது நாத்தீகவாதியின் பகுத்தறிவு சிந்தனை. கடவுள் இருந்தா துன்பம் வர விட்டிருப்பாரா?. சொமாலியாவில் நடக்கும் துன்பங்களை பார்க்கும்போது, எனக்கே அப்பப்ப டௌட் வருது ( பசிக்கு, மாட்டு சாணத்தை குழந்தைக்கு ஊட்டும் தாயின் நிலையை எண்ணிப் பாருங்கள். நம்ம கடவுள் என்ன வெகேஷன்ல இருக்காரா சொமாலியால? )

கடவுள் என்ற concept கண்டிப்பாக தேவை. பயமும், பக்தியும், பற்றும், நம்பிக்கையும் அதன் மீது தேவை.
Day after tomorrowல வர மாதிரி கடல் ஊருக்குள் புகுந்து, ஊரே மூழ்கும் நிலமை வந்தா, கத்தி கூப்பிட ஒரு ஆள் வேணும்ல. கடவுள தான் கூப்பிட முடியும், பகுத்தறிவு தலைவனையா கூப்பிட முடியும் அந்த வேளையில் :)

deviate ஆவுது. ஆமாம், உங்க கேள்விக்கு தான் பதில் கெடச்சாச்சே. கடவுள் இருக்காரா இல்லியான்னு இன்னொரு பதிவு தான் போடணும். this is getting diverted!

வெட்டிப்பயல் said...

சர்வேசன் அண்ணா,
கடவுள் வேலை வாங்கி தருவான் என்று வேலை தேடாமல் இருப்பது முட்டாள் தனம்... நான் மேலும் உழைத்தால் கண்டிப்பாக இறைவனின் அருளால் இதை விட நல்ல வேலை கிடைக்கும் என்று நம்பி வேலை வாங்கினால்???

எங்களுக்கு அந்த நம்பிக்கை இருந்ததால் தான் ஆறு மாதம் பெங்களூரில் வெறும் உப்புமா மற்றும் பிரட்டு மட்டுமே சாப்பிட்டு கொண்டு தங்கி இருந்தோம்!!!

கடவுளே இல்லை.. நமக்கு யாரும் உதவ மாட்டார்கள் என்று தற்கொலை செய்து கொண்டால் அது பகுத்தறிவா???

உழைப்புகெற்ற ஊதியம் கண்டிப்பாக கிடைக்கும்... சோமாலியாவின் வரலாறு எனக்கு தெரியாததால் நான் அதில் சொல்ல ஒன்றும் இல்லை...

சரி கடவுள் நம்பிக்கை இருக்கறவனுக்கெல்லாம் பகுத்தறிவு இல்லைனு நீங்க தீர்மானமா சொல்லும் போது , அதெல்லாம் இருக்கு நீங்க ஒத்துக்கணும்னு நான் சொன்னா சரியில்லை...

உங்க கருத்து உங்களுக்கு என் கருத்து எனக்கு.. அவ்வளவு தான் :-)

நீங்க ஆள்பவர் இல்லை... அளப்பவர் தானே :-)

நாமக்கல் சிபி said...

//ஆனா அது நம்ம ஊத்தற பாலா இருக்கனும்//

ஆமா! நாம ஊத்துற பால்தான்!

ஆனா நமக்கு ஊத்துற பாலை என்ன பண்ணலாம்னு நாம முடிவு பண்ண முடியாதே!

:((

ஒன்றுமில்லை said...

// பகுத்தறிவு தலைவனையா கூப்பிட முடியும் அந்த வேளையில் :)
//
rational thinking இருக்கும் போது தலைவனெல்லாம் இருக்க முடியாது. புதிய கருத்துக்கள் உருவாக்க உதவுபவர்கள்தான்(ஆசிரியர்களை ஒத்த) இருக்க முடியுமே தவிர வழிபடும் தலைவன் இருக்க இயலாது.

தலை மேல் தாங்க தலைவன் தேடினால் rational thiniking காலியாகி விடுகின்றது. அடிமை மனநிலை வந்து சேருகின்றது.

Anonymous said...

முதலில் அறிவு என்றால் என்ன?

அதன் பின்னர் பகுத்தறிவு,
வகுத்தறிவு,நல்லறிவு,பட்டறிவு, கெட்ட அறிவு,பார்த்த அறிவு,
உணர்ந்த அறிவைப் பற்றி பேசலாம்.

அறிவு என்பதற்கு சரியான பொருள் யாருக்காவது தெரியுமா?

சாலிசம்பர் said...

//you and me have chosen the 'default' path which our ancestors have chosen.//

surveysan அவர்களின் இந்தக்கருத்து வெட்டியின் கேள்விக்கு மிகச் சிறந்த பதில்.

மூடப் பழக்கவழக்கங்களில் நம்பிக்கையில்லாத ஒரு மனிதர் மதங்களுக்கு அப்பாற்பட்ட இறைவனை
வணங்கினால் அவர்கள் வெறும் ஆத்திகர்களோ அல்லது பகுத்தறிவாளர்களோ அல்ல.

தெய்வத்தன்மை பொருந்திய மனிதர்கள்.அதாவது நடமாடும் தெய்வங்கள்.

இந்த இடத்தில் இவ்வார தமிழ்ப்பூங்காவில் வெளியான திரு அவர்களின் கட்டுரையிலிருந்து சில வரிகள்.

"உருவமற்ற கடவுளை, யாரையும் ஒன்று போல் சிருஷ்டிக்கும் கடவுளை, காசு, பணம், செலவு செய்யாமல் வணங்கக்கூடிய கடவுளை, மூடநம்பிக்கைக்கு இடமில்லாத தன்மையில் யாரும் வணங்கலாம்"

சொன்னவர் பெரியார்.

SurveySan said...

:)

//சரி கடவுள் நம்பிக்கை இருக்கறவனுக்கெல்லாம் பகுத்தறிவு இல்லைனு நீங்க தீர்மானமா சொல்லும் போது , அதெல்லாம் இருக்கு நீங்க ஒத்துக்கணும்னு நான் சொன்னா சரியில்லை//

தீர்ப்பு இன்னொரு தடவ புரியர மாதிரி சொல்லிட்டு, மீ த எஸ்கேப்!

கடவுள் நம்பிக்கை இருக்கரவங்களுக்கு பகுத்தறிவு இல்லன்னு நான் சொல்லல.
விலங்கிலிருந்து மனிதனை வேறுபடுத்த, எல்லா மனிதனுக்கும் கடவுள் கொடுத்ததுதான் பகுத்தறிவு.

ஆனால், இறை நம்பிக்கை/மறுப்புன்னு வரும்போது, 'பகுத்தறிவாளன்' என்ற பட்டம் நாத்தீகவாதிக்கு தான் பொறுந்தும்.

ஆத்தீகவாதிகள் யாரும் பகுத்தறிவை யூஸ் பண்ணி கடவுள கும்பிடலாமா வேணாமான்னு ஆராய்ச்சி பண்ணல. இவர்களுக்கு, வளர்ந்த வளர்ப்பினால், தானாய் வந்தது ஆன்மீகம்.

ரெண்டும் தப்புல்ல.

அம்புடுதேன்.


(அப்போ, தி.க குடும்பத்தில் பிறந்து 'default'ஆ நாத்தீகவாதியானவனும் பகுத்தறிவாளன் கிடையாதா? என்று குசும்பாக யாராவது கேட்டால், சூனியம் வெச்சுடுவேன் சாக்குரத :) )

Unknown said...

//"உருவமற்ற கடவுளை, யாரையும் ஒன்று போல் சிருஷ்டிக்கும் கடவுளை, காசு, பணம், செலவு செய்யாமல் வணங்கக்கூடிய கடவுளை, மூடநம்பிக்கைக்கு இடமில்லாத தன்மையில் யாரும் வணங்கலாம்"//

உருவமுள்ள கடவுளை வணங்குவதில் என்ன மூடத்தனம் உள்ளது என்பதும் உருவமற்ற கடவுளை வணங்குவதில் என்ன பகுத்தறிவு உள்ளது என்பதும் ஜாலிஜம்ப்பருக்கே வெளிச்சம்

suvanappiriyan said...

மதங்களில் உள்ள அல்லவற்றை அகற்றி நல்லவற்றை பகுத்தாராய்ந்து ஏற்பதே பகுத்தறிவு.கடவுள் என்பதே நல்லதல்ல என வாதிடும் நாத்திகர்கள் அதனால் 'கடவுள் இல்லை என்பதே பகுத்தறிவு' என்கின்றனர்.ஆனால் நீங்கள் சொன்னதுபோல் 'ஒருவனுக்கு இறை நம்பிக்கையே நல்ல வழியில் அவன் வாழ்க்கையை நடத்த உதவுமெனில் அதுவும் பகுத்தறிவே'

வெற்றி said...

வெட்டி,
கருத்துச் சொல்ல வேண்டும் என்றுதான் உங்கள் பதிவுக்குள் நுழைந்தேன். ஆனா உங்கள் தளத்தின் தலைப்பில்
"பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது :-)" என்று சொல்லியுள்ளதால், சும்மா வாசித்து விட்டு கருத்துச் சொல்லாமல் திரும்புகிறேன். :))

jeevagv said...

இப்படி ஒரு கேள்வி கேட்டு, அதுக்கு கிட்டத்தட்ட நூறு மறுமொழிகளையும் வாங்கி விட்டீர், சாபஷ்!

கட்டதுரை said...

//பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது :-)" என்று சொல்லியுள்ளதால், சும்மா வாசித்து விட்டு கருத்துச் சொல்லாமல் திரும்புகிறேன். :))
//

அதேதான்!

Sivabalan said...

அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலே மதத்தின் பேராலே, சாதி வகுப்பின் பேராலோ மற்றெதன் பேராலே நடத்தப்படக் கூடாது.

கடவுள் சென்னது, மகான் சொன்னது, ரிஷி சென்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன்புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை.

மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழை ப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது.

மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும் ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராச்சி செய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும். by PERIYAR

Sivabalan said...

கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப் பற்றிய கதைகளை அப்படியே, அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக்கொ ண்டிருந்தவர்கள் கூட, இப்பொழுது அப்படியே நம்புவதற்கு வெட் கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன் மையை மறைத்துக் கொண்டு, விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு சிரமப்படுகிறார்கள். by PERIYAR

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...

//ஆனா அது நம்ம ஊத்தற பாலா இருக்கனும்//

ஆமா! நாம ஊத்துற பால்தான்!

ஆனா நமக்கு ஊத்துற பாலை என்ன பண்ணலாம்னு நாம முடிவு பண்ண முடியாதே!

:((//

ஓ!!! இது தான் பகுத்தறிவா???

வெட்டிப்பயல் said...

//நிர்மல் said...

// பகுத்தறிவு தலைவனையா கூப்பிட முடியும் அந்த வேளையில் :)
//
rational thinking இருக்கும் போது தலைவனெல்லாம் இருக்க முடியாது. புதிய கருத்துக்கள் உருவாக்க உதவுபவர்கள்தான்(ஆசிரியர்களை ஒத்த) இருக்க முடியுமே தவிர வழிபடும் தலைவன் இருக்க இயலாது.

தலை மேல் தாங்க தலைவன் தேடினால் rational thiniking காலியாகி விடுகின்றது. அடிமை மனநிலை வந்து சேருகின்றது.//
ஆமாம் நிர்மல்,
தலைவன் என்று ஒருவனை தீர்மானித்துவிட்டால் அவன் செய்யும் தவறுகளை கூட நியாயப்படுத்த முயலுவோம்!!!

அங்கேயே நாம் அடிமை புத்தியாகிவிடுகிறோம்!!!

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

முதலில் அறிவு என்றால் என்ன?

அதன் பின்னர் பகுத்தறிவு,
வகுத்தறிவு,நல்லறிவு,பட்டறிவு, கெட்ட அறிவு,பார்த்த அறிவு,
உணர்ந்த அறிவைப் பற்றி பேசலாம்.

அறிவு என்பதற்கு சரியான பொருள் யாருக்காவது தெரியுமா?//

இருக்கவங்க யாராவது சொல்லுங்கப்பா :-)

This is what I got when I searched for knowledge in Wikipidea

Knowledge is what is known. Like the related concepts truth, belief, and wisdom, there is no single definition of knowledge on which scholars agree, but rather numerous theories and continued debate about the nature of knowledge.

வெட்டிப்பயல் said...

//ஜாலிஜம்பர் said...

//you and me have chosen the 'default' path which our ancestors have chosen.//

surveysan அவர்களின் இந்தக்கருத்து வெட்டியின் கேள்விக்கு மிகச் சிறந்த பதில்.

மூடப் பழக்கவழக்கங்களில் நம்பிக்கையில்லாத ஒரு மனிதர் மதங்களுக்கு அப்பாற்பட்ட இறைவனை
வணங்கினால் அவர்கள் வெறும் ஆத்திகர்களோ அல்லது பகுத்தறிவாளர்களோ அல்ல.

தெய்வத்தன்மை பொருந்திய மனிதர்கள்.அதாவது நடமாடும் தெய்வங்கள்.
//

ஜாலி,
எதை மூட நம்பிக்கைனு நீங்க சொல்றீங்க???

உருவ வழிபாடு எதனால் வந்ததுனு கொஞ்சம் யோசிச்சி பார்த்து பேசுங்க. ஒரு நாள் உக்கார்ந்து ஒரு 5 நிமிடம் தியானம் செய்யுங்கள். எந்த ஒரு உருவமும் இல்லாத ஒரு பொருளின் மீது உங்களால் உங்கள் கவனத்தை செலுத்த முடிகறதா என்று பாருங்கள். பிறகு உருவ வழிப்பாட்டின் உண்மை காரணம் உங்களுக்கு விளங்க ஆரம்பித்துவிடும்.

மனதின் எண்ணங்களை ஏதாவது ஒரு பொருளின் மேல் குவித்தால் மனதை கட்டுப்படுத்த ஓரளவு எளிதாக முடியும். நீங்களும் யாரோ காட்டி சென்ற Default path தான் எடுத்துள்ளீர்கள்.

//
இந்த இடத்தில் இவ்வார தமிழ்ப்பூங்காவில் வெளியான திரு அவர்களின் கட்டுரையிலிருந்து சில வரிகள்.

"உருவமற்ற கடவுளை, யாரையும் ஒன்று போல் சிருஷ்டிக்கும் கடவுளை, காசு, பணம், செலவு செய்யாமல் வணங்கக்கூடிய கடவுளை, மூடநம்பிக்கைக்கு இடமில்லாத தன்மையில் யாரும் வணங்கலாம்"

சொன்னவர் பெரியார்.//

ஜாலி,
பெரியார் சமூக சீர்திருத்தவாதி... ஆன்மீகவாதியல்ல. கடவுளை எப்படி வணங்க வேண்டுமென்பது அவரவர் விருப்பம். பெரியாரின் வழியை default pathஆக எடுக்கும் நீங்களும் பகுத்தறிவாளி அல்ல...

இலவசக்கொத்தனார் said...

ஒண்ணு தெரியுதப்பா, இந்த மாதிரி எல்லாம் கொளுத்திப் போட்டா மக்கள் வந்து தானாவே கூட்டம் சேர்ந்து கும்மியடிப்பாங்க!

இலவசக்கொத்தனார் said...

எதுக்காக அதைச் சொன்னேன்னா அப்போதான் இது 99ஆவது பின்னூட்டமா வரும். அதான்.

இலவசக்கொத்தனார் said...

50 அடிச்ச நானே 100ம் அடிச்சுட்டேனா? எதனா பரிசு உண்டா?!! :))

வெட்டிப்பயல் said...

//SurveySan said...

:)

//சரி கடவுள் நம்பிக்கை இருக்கறவனுக்கெல்லாம் பகுத்தறிவு இல்லைனு நீங்க தீர்மானமா சொல்லும் போது , அதெல்லாம் இருக்கு நீங்க ஒத்துக்கணும்னு நான் சொன்னா சரியில்லை//

தீர்ப்பு இன்னொரு தடவ புரியர மாதிரி சொல்லிட்டு, மீ த எஸ்கேப்!

கடவுள் நம்பிக்கை இருக்கரவங்களுக்கு பகுத்தறிவு இல்லன்னு நான் சொல்லல.
விலங்கிலிருந்து மனிதனை வேறுபடுத்த, எல்லா மனிதனுக்கும் கடவுள் கொடுத்ததுதான் பகுத்தறிவு.

ஆனால், இறை நம்பிக்கை/மறுப்புன்னு வரும்போது, 'பகுத்தறிவாளன்' என்ற பட்டம் நாத்தீகவாதிக்கு தான் பொறுந்தும்.

ஆத்தீகவாதிகள் யாரும் பகுத்தறிவை யூஸ் பண்ணி கடவுள கும்பிடலாமா வேணாமான்னு ஆராய்ச்சி பண்ணல. இவர்களுக்கு, வளர்ந்த வளர்ப்பினால், தானாய் வந்தது ஆன்மீகம்.
//
சர்வேசன்,
எனக்கு எப்படி கடவுள் நம்பிக்கை வந்தது என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

நாத்திகர்கள் எத்தனை பேர் கடவுள் இருக்காறா இல்லையானு ஆராய்ச்சி பண்ணி பார்த்திருக்காங்க?

எனக்கு நல்லது நடக்கல அதனால கடவுள் இல்லைனு சொல்றது தான் ஆராய்ச்சியா?

இன்னைக்கு பாஸ்டன்ல சூரிய ஒளி வந்துச்சு, ஆனா வெப்பம் -25'C. அதனால சூரிய ஒளில வெப்பம் வராதுனு நான் சொன்னா நான் பகுத்தறிவாளியா??? என்னுமோ சொல்லனுமேனு சொல்லாதீங்க.

சரி பகுத்தறிவுனா என்னனு மட்டும் சொல்லுங்க. அப்பறம் நாம முடிவு பண்ணிக்கலாம்.

// ரெண்டும் தப்புல்ல.

அம்புடுதேன்.


(அப்போ, தி.க குடும்பத்தில் பிறந்து 'default'ஆ நாத்தீகவாதியானவனும் பகுத்தறிவாளன் கிடையாதா? என்று குசும்பாக யாராவது கேட்டால், சூனியம் வெச்சுடுவேன் சாக்குரத :) )//

:-))

பொன்ஸ்~~Poorna said...

ஒண்ணும் சொல்றதுக்கில்லை பாலாஜி.

என்னைப் பொறுத்தவரை, தமிழில் எழுதுவதை விட, ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கிலம் கலந்த தமிழிலோ பின்னூட்டம் இடுவதை வசதியாகக் கருதும் ஒரு நபர் "கடவுள் Vs பகுத்தறிவு" அப்டீன்னு தலைப்பு கொடுத்தால், கடவுளுக்கு எதிர்ப்பதம் பகுத்தறிவாகிடுமா? அதை ஒரு ஆதாரமா எடுத்துகிட்டு நீங்க கேள்வி வேற கேட்கணுமா?

கடவுள் நம்பிக்கை - கடவுள் நம்பிக்கையின்மை = Believer Vs Non believer அவ்வளவு தான். அறிவெல்லாம் அப்புறம் தான்.

//யானையை பயன்படுத்தி அவன் வேட்டையாடுகிறான், மரங்களை உடைக்க அது அவனுக்கு பயன் தருகிறது.. //
பாவம். என்னவோ ஆசைப்பட்டு தானா வந்து 'நான் செஞ்சு தரேன் தலைவான்னு' கெஞ்சிக் கேட்டு இதெல்லாம் செய்யுறது மாதிரி! யானை மட்டுமில்லை, இன்னும் மரங்கள், கடல், வானம், காற்று, பூமின்னு எல்லாவற்றையும் அவற்றின் நன்மையை யோசிக்காம, நமக்கு மட்டுமே வேண்டிய வகையில், வேண்டியதெல்லாம் செஞ்சு மாசுப்படுத்தியாச்சு. அதுக்கெல்லாம் பரிகாரம் மாதிரி அவற்றின் பெயரை இப்போ தெய்வம்னு சொல்லி அதுங்களை ஏமாற்றுவதா நினைச்சி நம்மையே ஏமாற்றிக்கிட்டிருக்கோம்!

கோயில் சிலை செய்யவா இருந்தா என்ன, பெரியார் சிலை செய்யுறதுக்கா இருந்தா என்ன, தகர்க்கப்படுவது இயற்கை அளித்த மலைகள். அழிக்கப்படுவது அந்த மலையின் காடு, மலை வாழ் விலங்குகள், அபூர்வச் செடிகள்..!! அப்புறம் மழை இல்லை, வெள்ளம் வந்திடுச்சின்னு புலம்ப வேண்டியது.

பின்னூட்டத்தின் முதல் வரியைப் படிச்சிக்குங்க.... :(

வெட்டிப்பயல் said...

//செல்வன் said...

//"உருவமற்ற கடவுளை, யாரையும் ஒன்று போல் சிருஷ்டிக்கும் கடவுளை, காசு, பணம், செலவு செய்யாமல் வணங்கக்கூடிய கடவுளை, மூடநம்பிக்கைக்கு இடமில்லாத தன்மையில் யாரும் வணங்கலாம்"//

உருவமுள்ள கடவுளை வணங்குவதில் என்ன மூடத்தனம் உள்ளது என்பதும் உருவமற்ற கடவுளை வணங்குவதில் என்ன பகுத்தறிவு உள்ளது என்பதும் ஜாலிஜம்ப்பருக்கே வெளிச்சம்//

உருவ வழிபாடு எதனால் வந்ததுனே தெரியாம பேசறவாங்ககிட்ட என்னத்த பேச???

ஒரு அரை மணி நேரம் தியானம் செய்தால் உருவ வழிப்பாட்டின் மகத்துவம் புரிய ஆரம்பித்துவிடும்...

Hariharan # 03985177737685368452 said...

//அறிவு என்பதற்கு சரியான பொருள் யாருக்காவது தெரியுமா?//

Body, Mind, Intellect உடல், மனம், புத்தி(அறிவு)எனும் மூன்றின் தொகுப்பு மனிதன்.

உடல் புலன்கள்+பொறிகளின் தொகுப்பு

மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு

எண்ணங்களின் உந்துதல்படி, உடல் பல்வேறு சூழல்களுக்கு உட்படுத்தப்பட்டுக் கிடைக்கும் அனுபவங்களின் தொகுப்பு, ரெபரன்ஸ் டேட்டாபேஸ், புத்தி எனப்படும் அறிவு எனப்படும் இண்டலெக்ட்.

என்னோட இரண்டனா

சாலிசம்பர் said...

//உருவமுள்ள கடவுளை வணங்குவதில் என்ன மூடத்தனம் உள்ளது என்பதும் உருவமற்ற கடவுளை வணங்குவதில் என்ன பகுத்தறிவு உள்ளது என்பதும் ஜாலிஜம்ப்பருக்கே வெளிச்சம் //

காமராஜர்,தேவர் போன்ற தலைவர்கள் தமிழக மக்கள் அனைவருக்கும் சொந்தம்.அவர்களை குறிப்பிட்ட ஜாதியினர் சொந்தம் கொண்டாடுவது அவர்கள் புகழை கெடுப்பதாகவே உள்ளது.

எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை குறிப்பிட்ட உருவத்தில் வணங்குவது உன் கடவுள் , என் கடவுள் என பேதத்திற்கு வழி வகுக்கிறது இல்லையா?

Thamizhan said...

நல்ல பதிவு.பெரும்பாலும் அமைதியான பின்னூட்டங்கள்.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
ஏன்,எதற்கு எப்படி என்று கேட்டுத் தெரிவது அறிவு.
நல்லதா கெட்டதா அத்னால் நமக்கு நன்மையா தீமையா இதெல்லாம் சிந்தித்து முடிவெடுப்பது பகுத்தறிவு.
எது நம்பிக்கை எது மூடநம்பிக்கை என்று சிந்தித்து தெளிவது பகுத்தறிவு.
இந்த முன்னேறிய நாட்களிலும் நம் ஊரிலே நான்கு பேரிடம் கேட்டுப்பாருங்கள் அணிலுக்கு முதுகிலே எப்படி கோடு வந்தது என்று உடனே தெரியும் எது அறிவு எது பகுத்தறிவு என்று.
நாமக்கல் சிபி முதல் பின்னூட்டத்தில் நன்றாகச் சொல்லியுள்ளார்.
பகுத்தறிவுள்ள ஆத்திகர்கள் காந்தி சொன்னார் உண்மையே கடவுள் என்று,பகுத்தறிவுப் புத்தர் சொன்னார் God is Love,ஒரளவு பகுத்தறிவுடன் திருமூலர் சொன்னார் அன்பே சிவம்.
பகுத்தறிவு வாதிகளில் சிலர் ஒரு படி மேலே போய் சிந்தித்துக் கடவுளினால் நடக்கும் கொடுமைகளைத் தாங்க முடியாமல் வேதனையுடனும் மனிதாபத்துடனும் சொன்னார்கள்"நான் ஏன் கிருத்துவனல்ல" பெர்ட்ரண்ட் ரச்சல்,"கடவுள் மனிதனின் உன்னதமான படைப்பு ஆனால் ஏமாற்று வாதிகளின் பிழைப்பாகி விட்டது"ராபர்ட் இங்கர்சால்,"கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்"பெரியார் போன்ற நாத்திகர்கள்.இன்று உலகிலே நடக்கும் அநியாயங்களிலே பல கடவுள் பெயராலும் உன் கடவுளா என் கடவுளா என்றும் உன் மதமா என் மதமா என்றும் நடப்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியுமா?
இனி வரும் உலகத்தில் மனித நேயம் தான் முன்னிலை வகிக்கும்.பில் கேட்சைப் பாருங்கள்.சென்னையில் உள்ள எய்ட்ச் நோயாளிகளுக்கு உதவுவதில்தான்,ஆப்பிரிக்காவில் வாடும் குழ்ந்தைகளைக் காப்பாற்றுவதில்தான் மகிழ்ச்சி அடைகிறார்.அமிதாப் பட்சனின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றினார்கள்.அவர் கோடிக்கணக்கில் வைர நகை திருப்பதியாருக்கு இதில் பகுத்தறிவும் மூட நம்பிக்கையுந்தெரிகிறதாக நாத்திகப் பகுத்தறிவு வாதிகள் சொல்வார்கள்தானே!

SurveySan said...

//என்னைப் பொறுத்தவரை, தமிழில் எழுதுவதை விட, ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கிலம் கலந்த தமிழிலோ பின்னூட்டம் இடுவதை வசதியாகக் கருதும் ஒரு நபர் "கடவுள் Vs பகுத்தறிவு" அப்டீன்னு தலைப்பு கொடுத்தால், கடவுளுக்கு எதிர்ப்பதம் பகுத்தறிவாகிடுமா?//

ஐ object திஸ்!!!

SP.VR. SUBBIAH said...

1.அறிவு
2.பட்டறிவு
3.பகுத்தறிவு
இவையனைத்தும் எல்லோருக்கும் பொதுவானதுதான்!

ஆத்திகமும், நாத்திகமும் தனிப்பட்ட
Subjects.

செல்வன் said...

//எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை குறிப்பிட்ட உருவத்தில் வணங்குவது உன் கடவுள் , என் கடவுள் என பேதத்திற்கு வழி வகுக்கிறது இல்லையா?//

உருவமற்ற வடிவத்தில் வணங்குவதும் அப்படிப்பட்ட பேதத்தை தானே ஏற்படுத்துகிறது?

எங்கும் நிறைந்திருக்கும் அன்பை தாய்வடிவில் நாம் காண்கிறோம்.நமது தாய் நமக்கு அன்பின் மொத்த உருவமாக தெரிகிறது.இன்னொருவனுக்கு அவனது தாய் அன்பின் மொத்த உருவமாக தெரியும்.

தாய்மை என்பது உருவமற்ற ஒரு குணம்.ஆனால் அதை நமது தாயின் வடிவத்தில் நேரே காண்கிறோம்.இதே போல் காதல் எனும் உருவமற்ற குணத்தை காதலி எனும் உருவின் வழியே காண்கிறோம்.அதேபோல் இறை எனும் எங்கும் நிறைந்த கோட்பாட்டை திருக்கோயில் விக்ரகங்கள் மூலம் காண்கிறோம்.

செல்வன் said...

//காமராஜர்,தேவர் போன்ற தலைவர்கள் தமிழக மக்கள் அனைவருக்கும் சொந்தம்.அவர்களை குறிப்பிட்ட ஜாதியினர் சொந்தம் கொண்டாடுவது அவர்கள் புகழை கெடுப்பதாகவே உள்ளது.//

திருவள்ளுவர் உலகம் முழுவதற்கும் சொந்தம்.அதனால் தமிழக மக்கள் அவருக்கு சொந்தம் கொண்டாடுவது அவரது புகழை கெடுப்பதாக உள்ளது என சொல்லலாமா?

ஜிடிநாயுடுவும், பொள்ளாச்சி மகாலிங்கமும் இந்தியா முழுவதற்கும் சொந்தம் கோவைக்காரர்கள் அவர்கள் மீது சொந்தம் கொண்டாடகூடாது என சொல்லமுடியுமா?

இந்தியா முழுக்க அவர்களை கொண்டாடட்டும்.கோவைக்காரர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமா கொண்டாடுவோம்.அந்த மாதிரிதான் கடவுளை சிவபெருமான், விஷ்ணு உருவத்தில் கொண்டாடுகிறவர்களும் சொல்கிறார்கள்.

உங்களுக்கு பிடித்த உருவத்தில் நீங்கள் வணங்குங்கள்.எங்களுக்கு பிடித்த ரூபத்தில் நாங்கள் வணங்குகிறோம் என்கிறார்கள்.

எம்ஜிஆருக்கு சிலைவைக்கும் போது ஏன் இரட்டை விரலை காட்டியதுபோல், கறுப்புகண்னாடி, தொப்பி என வைக்கிறார்கள்? பல வேஷங்களில் நடித்த எம்ஜிஆரை ஒரே மாதிரி உடையில் காட்டுவது சரியா என கேட்டால் என்ன பதில்?

எம்ஜிஆர் ஐந்துவயதுபையனாக இருந்தபோது இருந்த சிலையை வைத்தால் அது எம்ஜிஆர் என யாருக்கும் தெரியாது.
எல்லோருக்கும் புரியற மாதிரி இருக்கிற உருவத்தில் தானே சிலைவைக்கணும்?

இது எல்லாம் புரியாததால்தான் பகுத்தறிவு ஒரு கட்டத்தை தாண்டி வளராமல் நின்றுபோனது என சொல்கிறோம். பகுத்தறிவின் அடுத்த கட்டம் ஆன்மிகம் தான்:))

சாலிசம்பர் said...

//உங்களுக்கு பிடித்த உருவத்தில் நீங்கள் வணங்குங்கள்.எங்களுக்கு பிடித்த ரூபத்தில் நாங்கள் வணங்குகிறோம் என்கிறார்கள்.//

ஒரு மனிதன் என்று அறியப்படுவதை விட குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவன் என்று அறியப்படுவதை பெருமையாக கருத மாட்டான் பகுத்தறிவாளன்.

சாலிசம்பர் said...

//உருவமற்ற வடிவத்தில் வணங்குவதும் அப்படிப்பட்ட பேதத்தை தானே ஏற்படுத்துகிறது?//

அதனால் தான் கடவுள் நம்பிக்கையே வேண்டாம் என்கிறோம்.[திரும்ப ஆரம்பிச்சுட்டாண்டா].

//பகுத்தறிவின் அடுத்த கட்டம் ஆன்மிகம் தான்:)) //

தலைகீழாக சொல்கிறீர்கள்.இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆன்மீக அறிவு தான் ஆதிக்கம் செலுத்தியது.

சில நூறாண்டுகளாக தான் உலகம் பகுத்தறிவு பாதையில் செல்கிறது.இது தொடரும்.

Unknown said...

//ஒரு மனிதன் என்று அறியப்படுவதை விட குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவன் என்று அறியப்படுவதை பெருமையாக கருத மாட்டான் பகுத்தறிவாளன்//

எந்த மதம் என்றாலும் இழிவு இல்லை.அனைத்து மார்க்கமும் ஒரே இறைவனை அடையும் வழியை காட்டுவதால் அனைத்தும் ஒன்றே என நினைப்பான் ஆத்திகன்.

தன்மார்க்கத்தை விட மற்ற மார்க்கங்களில் இருப்பதை இழிவாக கருதுவது நாத்திகனின் மனப்பான்மை.அதைத்தான் நீங்கள் மறைமுகமாக பிரதிபலிக்கிறீர்கள்.

//அதனால் தான் கடவுள் நம்பிக்கையே வேண்டாம் என்கிறோம்.[திரும்ப ஆரம்பிச்சுட்டாண்டா].//

கடவுள் இல்லை என்பது வேறு, உருவமற்ற வழிபாடு, உருவவழிபாட்டை விட உயர்ந்தது என்பது வேறு.இரண்டாவதை நீங்கள் உயர்வாக சொன்னதால் தான் அது அப்படி இல்லை என சொல்ல நேர்ந்தது.

//தலைகீழாக சொல்கிறீர்கள்.இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆன்மீக அறிவு தான் ஆதிக்கம் செலுத்தியது.

சில நூறாண்டுகளாக தான் உலகம் பகுத்தறிவு பாதையில் செல்கிறது.இது தொடரும்.//

கடவுளின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்பது நாத்திகம்.கடவுளின் எண்ணிக்கை ஒன்று என்பது ஆத்திகம்.

பூஜ்ஜியத்துக்கு அடுத்த கட்டம் ஒன்றுதான். பூஜ்ஜியம் என்பதில் துவங்கும் தேடல் ஒன்றில் வந்து நின்று தனது அடுத்த கட்டத்தை அடைகிறது. ஒன்றே கடவுள் என்பது "இரண்டு.மூன்று,ஆயிரம்" என விரிவடைந்து காணும் பொருள் யாவிலும் கடவுளை காணும் பரந்த மனப்பான்மையாக மாறுகிறது. கடைசியில் பூரணத்தை நோக்கி சென்று "எங்கும் நிறைந்த பூரணமே கடவுள்" என்ற பேரமைதிக்கு மனிதனை கொண்டு செல்கிறது.அந்த பூரணத்தில் (infinity) நான், நீங்கள், இந்த உலகம், பிரபஞ்சம், அனைத்தும் அடங்கிவிடுகின்றன.

அதுதான் ஆன்மிகத்தின் இறுதிநிலை. அந்த நிலையில் பூஜ்ஜியம், ஒன்று, இரண்டு,ஆயிரம் என அத்தனை எண்களும் ஒன்றாகின்றன. பூரணமே பூஜ்ஜியமாகவும், ஒன்றாகவும், நான்காகவும் தோற்றமளித்தது என்பதை உணர்வோம்.

ஆத்திக, நாத்திக வாதங்கள் அனைத்தும் கடவுளின் எண்ணீக்கை எத்தனை ஒன்றா, பூஜ்ஜியமா என தான் விவாதம் அமைகிறது.ஒன்று என்கிறவனும், பூஜ்ஜியம் என்கிறவனும், மூன்று என்கிறவனும்,மூவாயிரம் என்கிறவனும் கடைசியில் பூரணத்தில் சந்திப்பார்கள்.

SP.VR. SUBBIAH said...

இருபதிலிருந்து முப்பதுவரை கடவுள் இல்லை என்று நாத்திகம் பேசிய பலர்
ஐம்பது வயதிற்கு மேல் பழுத்த ஆத்திகராக மாறிவிட்டதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன் செல்வன்

ஆகவே நீங்கள் ஆத்திகத்திற்காக யாரிடமும் போய் வாதிட வேண்டிய அவசியம் இல்லை! அவர்கள் 'கோண வழக்குதான'பேசுவார்கள்.
உங்களுக்குத்தான் Time & Energy வேஸ்ட ஆகும்!
ஆகவே விட்டு விடுங்கள்!
காலம் அவர்களை,மண்டியிட வைக்கும்!

சாலிசம்பர் said...

//அதனால் தான் கடவுள் நம்பிக்கையே வேண்டாம் என்கிறோம்.[திரும்ப ஆரம்பிச்சுட்டாண்டா].//

திரும்ப ஆரம்பிச்சுட்டாண்டா என்று என்னையே தான் நான் சொல்லிக்கொண்டேன்.

அன்பின் செல்வன் உங்களோடு வாதிடுவது மலையோடு மல்யுத்தம் செய்வதைப் போன்று உள்ளது.

கல்வெட்டு,தருமி போன்றோர் கலந்து கொண்டால் சிறந்த கருத்துக்கள் வெளிப்படும்.

G.Ragavan said...

வெட்டி, இந்தப் பதிவை நான் பார்த்து வருவதற்குள் நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் ஆகிவிட்டன. ஆகையால் நான் சொல்ல வந்ததை ஏற்கனவே ஆங்காங்கு சொல்லியிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். இருந்தாலும் என்னுடைய கருத்து இங்கே.

பகுத்தறிவு என்பது கடவுள் நம்பிக்கையின்மை இல்ல. atheist is different from rationalist. பகுத்தறிவு என்பது பகுத்து அறிவது. ஆகையால்தான் எல்லாக் கடவுள் நம்பிக்கையாளரும் பகுத்தறிவாளராக அறியப்படுவதில்லை. கடவுள் இல்லை என்று சொல்கின்றோரையும் பகுத்தறிவாளன் என்று சொல்வ ஒப்புவதில்லை.

செய்கிற ஒரு செயல்...நல்லதா கெட்டதா என ஆய்ந்து செய்வது அதில் நல்லதை மட்டுமே செய்வதே பகுத்தறிவு. அதையும் கடவுள் நம்பிக்கையையும் குழப்புவது கூட பகுத்தறிவின்மைதான்.

கடவுளை நம்பத்தான் வேண்டுமா என்று கேட்பதைப் பகுத்தறிவு எனலாம். அதற்குச் சரியான விடை சொல்ல வேண்டிய பொறுப்பு நம்பிக்கையாளர்களுக்கு உள்ளது. ஆனால் கடவுளை நம்பாமல் இருப்பது பகுத்தறிவு என்ற வாதம் ஏற்கப்படக் கூடாதது.

G.Ragavan said...

// //பகுத்தறிவின் அடுத்த கட்டம் ஆன்மிகம் தான்:)) //

தலைகீழாக சொல்கிறீர்கள்.இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆன்மீக அறிவு தான் ஆதிக்கம் செலுத்தியது.

சில நூறாண்டுகளாக தான் உலகம் பகுத்தறிவு பாதையில் செல்கிறது.இது தொடரும். //

ஜாலி ஜம்பர், இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆன்மீகம் ஆதிக்கம் செலுத்தியது என்பது சரியல்ல. உண்மையான ஆன்மீகம் ஆதிக்கம் செலுத்தாது. உண்மையான பகுத்தறிவும் ஆதிக்கம் செலுத்தாது. ஆகையால்தான் அவையிரண்டும் ஒன்றாகின்றன.

நாமக்கல் சிபி said...

////ஆனா அது நம்ம ஊத்தற பாலா இருக்கனும்//

ஆமா! நாம ஊத்துற பால்தான்!

ஆனா நமக்கு ஊத்துற பாலை என்ன பண்ணலாம்னு நாம முடிவு பண்ண முடியாதே!

:((//

ஓ!!! இது தான் பகுத்தறிவா???
//

இதை விட எளிமையாய் எப்படித்தான் விளக்குவது?

தருமி said...

ஜாலி ஜம்பர் 'வம்புக்கு' இழுத்தாலும் இந்த ஆட்டைக்கு வரவேண்டாமென்றுதான் நினைத்தேன். ஆனாலும் பார்ட்னர் செல்வனின் ஒரே ஒரு பின்னூட்டம் காலரைப் பிடிச்சி இழுத்து விட்டது. அதற்கு முன்னால் சர்வே-சன் எழுதிய ஒரு பின்னூட்டம் பிடித்தது: //...இறை மறுப்பு என்பது நாத்திகம் தான்.
ஆனால் தான் ஒரு நாத்திகன் என்று தெளிவு படத்திக் கொள்ள உதவுவது பகுத்தறிவு.// அப்படிப் பகுத்தறிந்து தெளிவு படுத்திக் கொண்டால் ...
//.. all atheists are பகுத்தறிவாளன்s.// அவரவர் பகுத்தறிவின்படி இதை ஒப்புக் கொள்ளவோ, புறந்தள்ளவோ செய்து விடலாம்.

ஆனால் எனக்கு 'அதிர்ச்சி' தந்தது செல்வனின் இக்கூற்று://சினிமாவுக்கு பூஜை போடும்போது ராகுகாலத்தில் பூஜை போட்டு பாருங்கள்.ரஜினி நடித்தால் கூட அந்த படம் விற்காது:).//
உண்மையாதான் சொல்றீங்களா, பார்ட்னர்? அப்டின்னா, ஜுராஸிக் பார்க், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ் போன்ற படங்களுக்குப் "பூஜை போடும்"போது நல்ல நேரம் எல்லாம் யார் பார்த்திருப்பாங்க?(ராகு காலத்துக்கு opposite என்னங்க?) (all time top box-office hits of hollywood லிஸ்ட் பார்க்க பொறுமையில்லாததால் இந்தப் படப்பெயர்களைக் கொடுத்துள்ளேன் - just some samples.) ஸ்பீல்பெர்க் படப் பூஜையெல்லாம் யாருங்க செஞ்சு வைக்க நம்ம ஊர்ல இருந்துதான் போறாங்களோ? என்னங்க பார்ட்னர், என்னென்னவோ பேசிட்டு இப்படி சொல்லீட்டீங்களே! என்னமோ போங்க...
இந்த நல்ல நேரம் பார்க்கிறதும் பகுத்தறிவில்தான் வருதா? இல்லை, அது அவுட் ஆஃப் போர்ஷனா?

et tu, selvan ??!! :(

Sridhar Narayanan said...

ஆஹா... ரொம்ப நாள் கழிச்சு நிறைய பேரு தத்துவார்த்தமாக பேசிட்டு இருக்காங்கப்பா. அவ்வப்போது இப்படி சில அபூர்வமான பதிவுகள் வந்தாதான் நமக்கு சுவாரசியமாயிருக்கும்.

இங்கு படித்த கருத்துக்கள்ல நிர்மலோட கருத்துகள் என்னுட்டைய கருத்துகளுக்கு மிகவும் அருகிலிருப்பது போல் தோன்றுகிறது.

Rationale Thinking-உம் நாத்திகமும் ஒன்று கிடையாது. ஆனால் சட்டென்று ஒட்டிக் கொள்ளக் கூடிய நன்பர்கள். இரண்டிக்கும் பொது எதிரியாக மதமும், சடங்கும், சம்பிரதாயமும், இன்ன பிற மூட நம்பிக்கைகளும் இருக்கிறது.


ஆன்மிகம் - institutionalization. நிறுவன படுத்துவது. இதன் அடிப்படை rationale thinking எனப்படும் பகுத்தறிவே. ஆனால் நிறுவனப்படுத்தியதால் குறிக்கோளை விட அதனடையும் பாதையை அதிகமாக முக்கிய படுத்துகிறது. இதனால் அடிப்படையிலிருந்து அது விலகிவிடும் சாத்தியங்கள் அதிகம். அர்த்தம் தெரியாமல் பின்பற்றும் சடங்கு சம்பிரதாயங்கள் தோன்ற வழி வகுத்து விடுகிறது.

நாத்திகம் - noninstitutionalization
கட்டுடைப்பது. நாத்திகத்தின் முக்கிய குறிக்கோளே ஆத்திகத்தை கட்டுடைப்பது. இதுவும் பகுத்தறிவின் பாற்பட்டதே. அதாவது ஆத்திகம் என்ற பெயரில் இருக்கும் அர்த்தமற்ற சடங்கு சம்பிரதாயங்களை கேள்விக்குறியாக்குவது.

ஆனால் ஆத்திகத்தை கட்டுடைத்ததோடு அது நின்று விடுகிறது. அதற்கு மேல் நாத்திகத்தின் வளர்ச்சி இல்லை. அந்த நிலையில் அதுவும் நிறுவனமாக்கப் படுகின்றது. A New institution has born. உதாரணம் - மேல்மருவத்தூர் அம்மா, ஐயா வழி வழிபாட்டு சமுதாயம் இன்ன பிற...

இப்படிப்பட்ட 'பகுத்தறிவால்தான்' ஆபிரகாமிய மதங்கள் ஒன்றுக்கு பின் ஒன்றாக உதித்திருக்க வேண்டும்.

ஒன்றை மறுக்கும் பொழுது இன்னொன்று தானாக உருவாகின்றது என்பதுதான் பகுத்தறிவு. இது ஆத்திகம், நாத்திகம் இரண்டிற்கும் பொது என்றுதான் தோன்றுகிறது.

இன்னும் கல்வெட்டு வரலயா? அவருடைய கருத்தை அறிய ஆவலாயிருக்கேன்.

Unknown said...

ஆனால் எனக்கு 'அதிர்ச்சி' தந்தது செல்வனின் இக்கூற்று://சினிமாவுக்கு பூஜை போடும்போது ராகுகாலத்தில் பூஜை போட்டு பாருங்கள்.ரஜினி நடித்தால் கூட அந்த படம் விற்காது:).//
உண்மையாதான் சொல்றீங்களா, பார்ட்னர்? அப்டின்னா, ஜுராஸிக் பார்க், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ் போன்ற படங்களுக்குப் "பூஜை போடும்"போது நல்ல நேரம் எல்லாம் யார் பார்த்திருப்பாங்க?//


பார்ட்னர்,

நான் எழுதியதை தவறாக புரிந்துகொண்டீர்கள்.

"அந்த படம் விற்காது" என்று சொன்னேனே தவிர "ஓடாது" என்று சொல்லவில்லை. ராகுகாலத்தில் பூஜை போடப்பட்ட படங்களை வினியோகிஸ்தர்கள் வாங்கமாட்டார்கள் என்பதைத்தான் "அந்த படம் விற்காது" என்று சொன்னேன். அதனால்தான் சத்யராஜ், மணிவண்ணன் மாதிரி சாமி நம்பிக்கை இல்லாத நடிகர்கள் கூட சாமிக்கு நல்லநேரத்தில் பூஜைபோட்டு வெள்ளிகிழமையில் தான் படத்தை ரிலீஸ் செய்வார்கள்.பெரியார் படமும் கடைசியில் சாமிகும்பிடும்படி சீன் வைத்து,கோயிலில் மங்களகரமாக எடுத்து முடித்திருக்கிறார்கள்.வழக்கப்படி வெள்ளிகிழமை தான் ரிலீஸ் ஆகும்:))

ஸ்பீல்பெர்க் படம் தமிழ்நாட்டுக்கு வந்தா கூட வெள்ளிகிழமை பூசணிக்காய் உடைச்சு தான் ரிலீஸ் ஆகும் :))நம்மூரில் நிலவும் (மூட?)நம்பிக்கையின் சக்தி அப்படிolyape

சாலிசம்பர் said...

என் வேண்டுகோளை ஏற்று கலந்து கொண்டதற்கு நன்றி தருமி அவர்களே.

சிரிதர் வெங்கட் அவர்களே,

தருமியின் "நான் ஏன் மதம் மாறினேன்" என்ற பதிவின் அனைத்து பகுதிகளையும் படித்து இன்புற வேண்டுகிறேன்.
http://dharumi.blogspot.com/2005/09/49-1.html

பதிவின் இறுதிப்பகுதியில் கல்வெட்டு அவர்களின் பின்னூட்டம் உள்ளது.

தருமி said...

அய்யா ஜாலி,
இப்படி ஒரு விளம்பரமா எனக்கு? நன்றி

Sridhar Narayanan said...

ஜாலி ஜம்பர் அவர்களே,

சுட்டிக்கு நன்றி! நீங்கள் குறிப்பிட்ட தருமி ஐயாவின் பதிவுகளை படித்திருக்கிறேன். முழுவதுமாக அல்ல. சீக்கிரமாக படிக்க வேண்டும்.

இங்கே பின்னூட்டம் இட்ட பிறகு இன்னும் நிறைய எழுத தோன்றியது. ஏதோ வெட்டிபயல் கொஞ்சம் எல்லாரையும் சிரிக்க வைத்து கொண்டிருக்கிறார். இப்படி சகட்டுமேனிக்கு எழுதி தள்ளி அவரையும் சங்கடத்துக்குள்ளாக்க வேண்டாம் என்பதால் இப்பொழுது நிறுத்திக் கொள்கிறேன்.

இந்த மாதிரி ஒரு சில விஷயங்களையாவது எனது வலைப் பூவில் எழுதலாம் என்று நெடு நாளாக நினைத்து கொண்டேடேடேடே இருக்கிறேன். நேரம் கனிந்த பாடில்லை.

நல்ல ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு மீண்டும் ஒரு நன்றி!!!

rahini said...

ஒவ்வொரு ஆக்கமும் சிந்திக்க வைத்து விழிப்புணர்வை தருகின்றது.
வாழ்த்துக்கள்

நட்புடன்
ராகினி
ஜேர்மனி

சிவசங்கர் said...

யாராலும் இதுவரை நிரூபிக்கப்படாத ஒரு நம்பிக்கை உண்டென்றால் அது கடவுள் தான். அது உணர்ச்சி நிலையின் ஒரு உச்ச நிலை.

ஆளாளுக்கு வெவ்வேறு விதமாக கடவுளை கற்பிதம் செய்து வைத்திருந்தாலும் அந்த உணர்வு நிலை ஒன்றாகவே இருக்கின்றது. எம்மால் எதையுமே இலகுவாக கடவுள் ஆக்கிவிட முடியும்.

இறை நம்பிக்கையாளரிடம் "பசி" தான் உலகை ஆட்டிப்படைக்கும் கடவுள் என்றால் நம்பத்தான் முடிகிறது. "நெருப்பு" தான் என்றால் அதையும் நம்ப முடிகிறது. இவ்வாறாக நீர், இயற்கை, அன்பு என்று எதை வேண்டுமானாலும் கடவுள் எனலாம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஏனெனில் எல்லாமுமே எல்லாவற்றுக்குமான அடிப்படையாக இருக்கின்றது.

இந்த நம்பிக்கை மத வெறிகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு நிலை. புத்தன் சொல்கிறான் "கடவுள் என்பவர் எதுவும் அற்ற யாரும் அற்ற ஒன்றுமே இல்லாதது" இதன் அர்த்தம் என்னவென்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

கடவுள் என்பதை இல்லை என்று யாராலும் நிரூபித்துவிட முடியாது ஏனென்றால் அது என்ன வென்றே யாராலும் வரையறுக்கப்படவில்லை. வேண்டுமானால் வரைவிலக்கணம் செய்ய முயன்ற மதங்களை பொய் என்று நிரூபிக்க முடியும்.

இந்திய கலாச்சாரத்தில் தோன்றிய மனதை ஆற்றுப் படுத்தும் தியான முறைகளுக்கும் கடவுளுக்கும் தொடர்புகள் கிடையாது. ஆனால் மதங்கள் அவற்றை பயன்படுத்துகின்றன. அவை தனியான மன வள பயிற்சிகள் மாத்திரமே. அதே போலவே யோகாசனம் போன்றவை உடல், மன வளப் பயிற்சிகள் மாத்திரமே.

மத நம்பிக்கை அற்றவர்கள் என்றும், கடவுள் மறுப்பாளர்கள் என்றும், கடவுள் வெறுப்பாளர்கள் என்றும், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்றும் பலவிதமான கடவுள் விமர்சகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையுமே ஒரே மாதிரியானவர்கள் என்று கூறிவிட முடியாது.

மத நம்பிக்கை அற்றவர்கள் மதங்களை மட்டுமே கேலி பேசுகின்றனர் கடவுளை அல்ல.. கடவுள் இருக்கிறார் ஆனால் நீங்கள் எவரும் சொல்வது போல் அல்ல என்பது அவர் தம் வாதம்.

அது போலவே கடவுள் வெறுப்பாளர்கள் கடவுளை நம்பி ஏமாந்து இனியும் ஏமாரத் தயார் இல்லை என்ற ரீதியில் வாழ்பவர்கள். இவர்களின் மனதில் எங்கோ ஒரு மூலையில் கடவுள் இருந்து கொண்டிருப்பார். ஆனால் எப்போது வெளி வருவார் என்று சொல்ல முடியாது. வெளிவரலாம்.

நான் குறிப்பிட்ட கடவுள் மறுப்பார்களுக்கும், கடவுள் நம்பிக்கை அற்றவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவருமே நம்பிக்கை அற்றவர்கள் தான் முதலாமவர் தீவிர கடவுள் எதிர்ப்பை கடைப்பிடிப்பவர்கள். இரண்டாமவர் கடவுள் பேசுபவரை.. பின்பற்றுபவரை தீவிர விமர்சனம் செய்வதில்லை.. சில வேளைகளில் அவர் ஒரு கடவுள் நம்பிக்கை அற்றவர் என்றே யாருக்கும் தெரியாத அளவில் வாழ்ந்து கொண்டிருப்பார்.

இன்னும் பலவிதமானவர்களும் இருக்கிறார்கள். சொல்லப்போனால் கடவுளை விமர்சிக்கும் ஒவ்வொருவருமே வித்தியாசமானவர்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவருக்கு கடவுள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்தே பார்க்க முடியாது. அதுவே நம்பிக்கையின் தொடர்ச்சிக்கும் காரணமாய் அமைந்துவிடுகிறது.

கடவுள் நம்பிக்கை அற்றவர்களை நாத்திகர் என்று சொல்லும் வழக்கம் உண்டு. ஆனால் அந்த சொல்லை பல நம்பிக்கை அற்றவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அது ஒரு சமஸ்கிருத சொல் அதன் மிகச்சரியான விளக்கம் எனக்குத் தெரியாது என்பதால் விட்டுவிடுகிறேன்.

"பகுத்தறிவாளர்கள்" என்ற சொல்லை இறை நம்பிக்கை அற்றவர்கள் ஏற்றுக்கொண்டாலும். இறை நம்பிக்கையாளர்களால் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகின்றது. இது தம்மைத்தாமே அறிவாளிகள் என்று குறிப்பிட்டு பெருமை பட்டுக்கொள்வதாக கூறப்படுகின்றது. கடவுள் நம்பிக்கையாளர்கள் யாரும் அறிவாளிகள் இல்லையா என்ற கேள்வியும் கூடவே கேட்கப்படுகிறது.

ஆனால் இதன் உள் அர்த்தம் வேறுமாதிரியானது. இறை நம்பிக்கையாளர்கள் எதை அலசி ஆராய்ந்தாலும், பகுத்து அறிந்தாலும் அவர்களால் கடவுளை விமர்சன கண்ணோட்டத்துடன் பார்க்க முடிவதில்லை. இறை அல்லது அது தொடர்பான எதையும் ஆராய மனம் விடுவதில்லை. அதனால் அவர்கள் முழுமையான பகுத்தறிவாளர்கள் அல்ல என்கின்றனர்.

பகுத்தறிவாளர் என்றால் அறிவால் கூடியவர்கள் என்று எந்த அர்தமும் இல்லை ஆனால் எந்த விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கடந்து வினா எழுப்ப முடிந்தவர்கள் என்று அர்தம் கொள்ளலாம். அது ஒன்று மட்டுமே பகுத்தறிவுக்கான அடிப்படையாய் இருக்கிறது...