தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, October 19, 2006

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!


என் இனிய வாசகர்களே உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

எனக்கு நினைவு தெரிந்த நாளாக என் பிறந்த நாளைவிட நான் அதிகம் ஆவலுடன் எதிர்பார்த்தது தீபாவளி திருநாளைத்தான். இப்ப அதை மிஸ் பண்றோம்னு ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. சரி.... அடுத்த வருஷம் கண்டிப்பா அங்க இருப்பன்னு நம்பறேன்.

இந்தியால இருக்கவங்களுக்கு எல்லாம் என்னோட வேண்டுகோள். தயவு செய்து வீட்டிற்கு போய் அப்பா, அம்மாவோட சந்தோஷமா கொண்டாடுங்க. ஃபிரெண்ட்ஸ்க்கு எல்லாம் போன் பண்ணி பேசுங்க. அதுக்காக வழக்கம் போல கடலை போட ஆரம்பிச்சிடாதீங்க. எல்லா ஃபிரெண்ட்ஸ்க்கும் ஒரு 2 நிமிஷமாவது பேசுங்க. (ஒரு சில நாயிங்க.. நம்ம போன் பண்ணவுடனே ரொம்ப நேரம் மொக்கைய போடுவாங்க... அவுங்க எல்லாருக்கும் மச்சி, அவசரமா வெளிய போகனும் வந்து குப்பிடறேன்னு கட் பண்ணிடுங்க ;) )

பஸ் கூட்டமா இருக்கும், பிராஜக்ட் டெலிவரி, ரிட்டன் டிக்கட் கிடைக்கலைனு வீட்டுக்கு போகாமல் இருந்துடாதீங்க. எப்படியாவட்து வீட்டுக்கு போங்க... வீட்ல போய் நல்லா பலகாரம் சாப்பிட்டு, அம்மா அப்பாவோட நல்லா சந்தோஷமா பேசி கொண்டாடுங்க. டீவி முன்னாடியே உக்காந்திருக்காதீங்க. என்னாட இவன் அட்வைஸ் பண்றானேனு பாக்காதீங்க... நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்...

போன வருஷ தீபாவளியன்னைக்கு எனக்கு சத்தியமா அடுத்த வருஷம் நாம இங்க இருக்க மாட்டோம்ன்னு தெரியாது. அடுத்த வருஷம் உங்கள்ல யாராவது இந்த பதிவ போடலாம்... (நாங்க பின்னூட்டம் போடுவோம் ;)) அதனால இப்பவே சந்தோஷமா கொண்டாடுங்கோ!!!

மீண்டும்...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

41 comments:

Unknown said...

நல்லா சொன்னீங்க பாலாஜி.பயங்கர ஹோம்சிக் வந்து இப்பதான் இந்தியாவுக்கு ஃபோன் பண்ணி பேசினேன். ஆயிரம் இருந்தாலும் நம்ம ஊரில் புதுதுணி போட்டு, குடும்பத்தோட கோயிலுக்கு போயி, சாயந்திரம் பட்டாசு வெடிச்சு, இனிப்பு சாப்பிடுற தீபாவளி மாதிரி வருமா?

நம்ம ஊரு தான் சொர்க்கம்.

நியூஜெர்சி மாதிரி இந்தியர்கள் அதிகமாக உள்ள ஏரியாக்களில் தீபாவளியன்று திருவிழா மாதிரி இருக்கும்னு சொன்னாங்க. உண்மையான்னு தெரியலை.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி said...

நல்லா சொன்னீங்க செல்வன்...
நமக்கும் அதே கதைதான்.... நான் சின்ன வயசுல இரூந்து ஹாஸ்டல்ல படிச்சதால தீபாவளினா வீட்ல ஜாலியா இருக்கலாம்னுதான் ஞாபகம் வரும்...

வீட்டுக்கு பேசனா அம்மா ரொம்ப ஃபீலிங் ஆகிடுவாங்க... நாளைக்கு கூப்பிடனும்...

எப்படியும் தீபாவளிக்கு பக்கத்துல ஃபிரெண்ட் வீட்டுக்கு இன்வைட் பண்ணியிருக்காங்க... ஓரளவு தேத்திக்கலாம்...

Anonymous said...

பாலாஜி, நான் தான் முதல் போனியா!!
உனக்கு இது 'தல' தீபாவாளில அதான் ரொம்ப மிஸ் பண்றேனு நினைக்கிறேன். முதல் தீவாளி தான் இப்படி இருக்கும். தினமலர், தினமணினு ஏதாவது பேப்பர் பார்த்து மனச தேத்திக்கோ!! அப்புறம் இதுவே பழகிடும் :) கண்டுகாதே!!

ஏன்னா இது எனக்கு ரெண்டாவதாக்கும் :(

-விநய்*

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

பாலாஜி, நான் தான் முதல் போனியா!!
உனக்கு இது 'தல' தீபாவாளில அதான் ரொம்ப மிஸ் பண்றேனு நினைக்கிறேன். முதல் தீவாளி தான் இப்படி இருக்கும். தினமலர், தினமணினு ஏதாவது பேப்பர் பார்த்து மனச தேத்திக்கோ!! அப்புறம் இதுவே பழகிடும் :) கண்டுகாதே!!

ஏன்னா இது எனக்கு ரெண்டாவதாக்கும் :(

-விநய்*//
ஆமாம் இது 'தல' தீபாவளிதான்... வரலாறு ரிலிஸ் ஆகுது இல்ல ;)

அனுபவம் சொல்றீங்க... பாக்கலாம் அடுத்த வருஷம் எங்கனு???

முதல்வன்ல சொல்ற மாதிரி வாழ்க்கைல VCRல வர மாதிரி ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் :-(

நாடோடி said...

சே நான் இல்ல முதல் போனி!
இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்...வேறென்ன உன் ப்ளாக் மூலமா எல்லாருக்கும் 'இனிய தீபாவளி வாழ்த்துக்கள்' தான்

-விநய்*

நாமக்கல் சிபி said...

//விநய்? said...

சே நான் இல்ல முதல் போனி!//
No feelings ;)

யாரு நம்ம செல்வன் அண்ணன் தானே முதல் போனி ;)

Anonymous said...

//
ஆமாம் இது 'தல' தீபாவளிதான்... வரலாறு ரிலிஸ் ஆகுது இல்ல ;)
//
வரலாறா?? இப்போ தான் இங்க GodFather ரிலீஸ் ஆகுது!

//
வெட்டிப்பயல் said...
//விநய்? said...
சே நான் இல்ல முதல் போனி!//
No feelings ;)
//

நமக்கெல்லாம் எங்கிருந்து வந்தது பீலிங்ஸ்!! எல்லாம் சும்மா ஒரு பில்டப் தான் :)

-விநய்*

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

//
ஆமாம் இது 'தல' தீபாவளிதான்... வரலாறு ரிலிஸ் ஆகுது இல்ல ;)
//
வரலாறா?? இப்போ தான் இங்க GodFather ரிலீஸ் ஆகுது!//
பேர மாத்தியாச்சுங்க... இப்ப அந்த படத்துக்கு பேரு "வரலாறு"

படம் எப்படியும் வெற்றி பெற வேண்டும்!!!

Syam said...

//போன வருஷ தீபாவளியன்னைக்கு எனக்கு சத்தியமா அடுத்த வருஷம் நாம இங்க இருக்க மாட்டோம்ன்னு தெரியாது. அடுத்த வருஷம் உங்கள்ல யாராவது இந்த பதிவ போடலாம்... (நாங்க பின்னூட்டம் போடுவோம் ;)) அதனால இப்பவே சந்தோஷமா கொண்டாடுங்கோ!!!//

கரெக்ட்டா சொன்னீங்க அடுத்த வருச தீவாளிக்கு ஊருக்கு போய்டலாம்னே..அஞ்சு தீவாளி ஓடி போச்சு...பார்க்கலாம் அடுத்த வருசமாவது.....

உங்களூக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

ஜோ/Joe said...

வலைப்பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் அவர் தம் குடும்பத்தினர்களுக்கும் உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

கப்பி | Kappi said...

பாம்பு மாத்திரை கொளுத்த வேண்டிய நேரத்துல கொசுவத்தி சுத்தி பீல் பண்ண வைக்கறீங்களே :D


அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பஸ் கூட்டமா இருக்கும், பிராஜக்ட் டெலிவரி, ரிட்டன் டிக்கட் கிடைக்கலைனு வீட்டுக்கு போகாமல் இருந்துடாதீங்க. எப்படியாவட்து வீட்டுக்கு போங்க//

ஆகா, பாலாஜி, நீங்களே டிக்கெட் எடுத்துக் கொடுத்து, லக்கேஜ் பேக் பண்ணி, வண்டியில் ஏத்திவிட்டு விடுவீர்கள் போல இருக்கே....ச்ச்ச்ச்ச்சும்மா...

உண்மை...நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். Lowell-இல் நல்ல வெயிலில் தீபாவளி கொண்டாடுங்கள். :-))

உங்களுக்கும், வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள்!

நாடோடி said...

//
பேர மாத்தியாச்சுங்க... இப்ப அந்த படத்துக்கு பேரு "வரலாறு"
//
ஓ சொல்லவே இல்லை..கொஞ்ச நாளா கோடம்பாக்கம் சைடு போகலையா எதுவுமே தெரிய மாட்டேங்கிது..இதெல்லாம் உன் ப்ளாக்ல போட்றதில்லையா :-D
ஏன்னு தெரியல, இங்க இருக்கிற தியேட்டர்ல 'Godfather'னு தான் ரிலீஸாகுது!!

சரி நீ 'தலை' விசிறியா?
தலைவருக்கும் விசிறியா??

-விநய்*

Anonymous said...

//
பேர மாத்தியாச்சுங்க... இப்ப அந்த படத்துக்கு பேரு "வரலாறு"
//
ஓ சொல்லவே இல்லை..கொஞ்ச நாளா கோடம்பாக்கம் சைடு போகலையா எதுவுமே தெரிய மாட்டேங்கிது..இதெல்லாம் உன் ப்ளாக்ல போட்றதில்லையா :-D
ஏன்னு தெரியல, இங்க இருக்கிற தியேட்டர்ல 'Godfather'னு தான் ரிலீஸாகுது!!

சரி நீ 'தலை' விசிறியா?
தலைவருக்கும் விசிறியா??

-விநய்*

Anonymous said...

//
பேர மாத்தியாச்சுங்க... இப்ப அந்த படத்துக்கு பேரு "வரலாறு"
//
ஓ சொல்லவே இல்லை..கொஞ்ச நாளா கோடம்பாக்கம் சைடு போகலையா எதுவுமே தெரிய மாட்டேங்கிது..இதெல்லாம் உன் ப்ளாக்ல போட்றதில்லையா :-D
ஏன்னு தெரியல, இங்க இருக்கிற தியேட்டர்ல 'Godfather'னு தான் ரிலீஸாகுது!!

சரி நீ 'தலை' விசிறியா?
தலைவருக்கும் விசிறியா??

-விநய்*

Boston Bala said...

இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

//கரெக்ட்டா சொன்னீங்க அடுத்த வருச தீவாளிக்கு ஊருக்கு போய்டலாம்னே..அஞ்சு தீவாளி ஓடி போச்சு...பார்க்கலாம் அடுத்த வருசமாவது.....
//
நமக்கும் அதே நிலைமை வர சான்ஸ் உண்டுனு சொல்றீங்களா???

பாக்கலாம்...

//உங்களூக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!! //
மிக்கா நன்றி ஸ்யாம்!!

நாமக்கல் சிபி said...

//
ஜோ / Joe said...
வலைப்பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் அவர் தம் குடும்பத்தினர்களுக்கும் உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி!!!

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...
பாம்பு மாத்திரை கொளுத்த வேண்டிய நேரத்துல கொசுவத்தி சுத்தி பீல் பண்ண வைக்கறீங்களே :D
//
பாம்பு மாத்திரை கொளுத்த முடியாததாலதான் கொசுவத்தி சுத்தறேன்ப்பா!!!

//
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!! //
மிக்க நன்றி!!!

நாமக்கல் சிபி said...

//ஆகா, பாலாஜி, நீங்களே டிக்கெட் எடுத்துக் கொடுத்து, லக்கேஜ் பேக் பண்ணி, வண்டியில் ஏத்திவிட்டு விடுவீர்கள் போல இருக்கே....ச்ச்ச்ச்ச்சும்மா...
//
ஏதோ நம்மால முடிஞ்ச நல்ல விஷயம்...

//
உண்மை...நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். Lowell-இல் நல்ல வெயிலில் தீபாவளி கொண்டாடுங்கள். :-))
//
இங்க வெயிலே இல்லை... மழை பெஞ்சிட்டு இருக்கு ;)

//உங்களுக்கும், வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள்! //
மிக்க நன்றி!!! தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

கைப்புள்ள said...

//எனக்கு நினைவு தெரிந்த நாளாக என் பிறந்த நாளைவிட நான் அதிகம் ஆவலுடன் எதிர்பார்த்தது தீபாவளி திருநாளைத்தான். இப்ப அதை மிஸ் பண்றோம்னு ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. சரி.... அடுத்த வருஷம் கண்டிப்பா அங்க இருப்பன்னு நம்பறேன்.//

கட்டர் பாய்!
அடுத்த வருஷம் கண்டிப்பா இந்தியா தான். பின்னே தலை தீபாவளி மாமனார் வீட்டுல தானே கொண்டாடுவாங்க? அதுக்குன்னு அங்கேயே வெள்ளைக் கார மாமனாரு புடிச்சிக்கிட்டா நான் பொறுப்பில்லை.
:)

இனிய தீபாவளி வாழ்த்துகள். உங்க அட்வைசை ஏத்துக்கிட்டு ஏற்கனவே வீட்டுக்கு வந்தாச்சு குடும்பத்தோட தீபாவளி கொண்டாட.
:)

நாமக்கல் சிபி said...

//வைசா said...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

வைசா //
வைசா,
மிக்க நன்றி!!!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

கதிர் said...

வெட்டி,

ஏன் இந்த பீலிங்ஸ் ஆப் அமெரிக்கா?

நமக்கெல்லாம் இது தீபவலி, வலியிலயும் தீபத்த பாக்கறோம்னு சந்தோஷப்படு.

நாமக்கல் சிபி said...

//ஓ சொல்லவே இல்லை..கொஞ்ச நாளா கோடம்பாக்கம் சைடு போகலையா எதுவுமே தெரிய மாட்டேங்கிது..இதெல்லாம் உன் ப்ளாக்ல போட்றதில்லையா :-D
ஏன்னு தெரியல, இங்க இருக்கிற தியேட்டர்ல 'Godfather'னு தான் ரிலீஸாகுது!!
//
இதெல்லாம் தெரிஞ்சிக்காம சாப்ட்வேர் ஃபீல்ட்ல என்ன வேலை செய்யறீங்க??? இங்க அடுத்த வாரம்தான் ரிலிஸ்!!!

//சரி நீ 'தலை' விசிறியா?
தலைவருக்கும் விசிறியா??

-விநய்* //
நம்ம தலைவர் விசிறிதான் எப்பவும் :-)

நாமக்கல் சிபி said...

//Boston Bala said...
இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள். //

பாபா,
மிக்க நன்றி!!! தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

unga bloga padichathum manasu romba kastama irukkunga. namakku nejamave "Thalai" Deepavali...nga
En wife indiala nan inga... relaince calling card la than deepavalinnga...
mmm ennanga panrathunga. ithu enga ammava vittu veliaya irukkira muthal deepavalai..nga indiala irunthanga enna analaum deepavali anniku enga vettula amma kaiyla kalankathalanga asirwatham vanittunga idli mutton kulambu sapittu avangalai konjam vambadichu...enga.... alugai than varuthu ponga

நாமக்கல் சிபி said...

//கட்டர் பாய்!
அடுத்த வருஷம் கண்டிப்பா இந்தியா தான். பின்னே தலை தீபாவளி மாமனார் வீட்டுல தானே கொண்டாடுவாங்க? அதுக்குன்னு அங்கேயே வெள்ளைக் கார மாமனாரு புடிச்சிக்கிட்டா நான் பொறுப்பில்லை.
:)
//
தலை உன் தல தீபாவளியே இன்னும் பெண்டிங்ல இருக்கு... நமக்கு எல்லாம் இன்னும் ரொம்ப நாள் இருக்கு ;)
மத்ததுக்கு எல்லாம் நான் இப்பவே வாக்கு கொடுக்க முடியாது ;)

//
இனிய தீபாவளி வாழ்த்துகள். உங்க அட்வைசை ஏத்துக்கிட்டு ஏற்கனவே வீட்டுக்கு வந்தாச்சு குடும்பத்தோட தீபாவளி கொண்டாட.
:) //
இது தலக்கு அழகு

குமரன் (Kumaran) said...

தீபாவளி நல்வாழ்த்துகள் பாலாஜி.

என்னுடைய அமெரிக்க தலை தீபாவளி நினைவிற்கு வந்தது. அப்பா தான் அலுவலகத்திற்குத் தொலைபேசினார். அப்போது அவர் 'இது தான் நீ இல்லாமல் கொண்டாடும் முதல் தீபாவளி' என்ற போது தான் உறைத்தது. அது வரை நானும் ஜாலியா இந்த வார இறுதியிலே வான்கோழி வாங்கி பிரியாணி செய்யலாமா ரோஸ்ட் செய்யலாமா தீபாவளி பார்ட்டிக்குன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். (இங்க அப்ப இந்த ஹாலோவீன் நேரம் வேற. அதான் அந்த வான்கோழி பிரியாணி யோசனை). :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெட்டிப்பயல்!
தீபாவளி வாழ்த்துகள்!!
யோகன் பாரிஸ்

நாமக்கல் சிபி said...

//
தம்பி said...
வெட்டி,

ஏன் இந்த பீலிங்ஸ் ஆப் அமெரிக்கா?

நமக்கெல்லாம் இது தீபவலி, வலியிலயும் தீபத்த பாக்கறோம்னு சந்தோஷப்படு.///
தம்பி,
சரி நீ அங்க ரம்ஜான் கொண்டாடு, நான் இங்க கிருஸ்மஸ் கொண்டாடறேன்...

அடுத்த வருஷம் பாத்துக்கலாம் ;)

நாமக்கல் சிபி said...

//Akil S Poonkundran said...
unga bloga padichathum manasu romba kastama irukkunga. namakku nejamave "Thalai" Deepavali...nga
En wife indiala nan inga... relaince calling card la than deepavalinnga...
mmm ennanga panrathunga. ithu enga ammava vittu veliaya irukkira muthal deepavalai..nga indiala irunthanga enna analaum deepavali anniku enga vettula amma kaiyla kalankathalanga asirwatham vanittunga idli mutton kulambu sapittu avangalai konjam vambadichu...enga.... alugai than varuthu ponga //
அகில்,
பரவாயில்லை விடுங்க... அடுத்த வருஷம் தூள் கிளப்பிடலாம். எப்படியும் சிவாஜி தீபாவளிக்கு வந்துடும்... தலைவர் படத்தோட கொண்டாடிவோம் ;)

நாமக்கல் சிபி said...

//குமரன் (Kumaran)

குமரன் (Kumaran) said...
தீபாவளி நல்வாழ்த்துகள் பாலாஜி.

என்னுடைய அமெரிக்க தலை தீபாவளி நினைவிற்கு வந்தது. அப்பா தான் அலுவலகத்திற்குத் தொலைபேசினார். அப்போது அவர் 'இது தான் நீ இல்லாமல் கொண்டாடும் முதல் தீபாவளி' என்ற போது தான் உறைத்தது. அது வரை நானும் ஜாலியா இந்த வார இறுதியிலே வான்கோழி வாங்கி பிரியாணி செய்யலாமா ரோஸ்ட் செய்யலாமா தீபாவளி பார்ட்டிக்குன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். (இங்க அப்ப இந்த ஹாலோவீன் நேரம் வேற. அதான் அந்த வான்கோழி பிரியாணி யோசனை). :-)//

அனுபவஸ்தர்கள் சொல்றத பார்த்த அடுத்த வருஷமுன் நம்ம இந்த மாதிரி தான் பதிவு போடுவோம் போல இருக்கு...

பாக்கலாம்...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி said...

//Johan-Paris said...
வெட்டிப்பயல்!
தீபாவளி வாழ்த்துகள்!!
யோகன் பாரிஸ் //

யோகன் ஐயா,
மிக்க நன்றி!!!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

Hi vets

Ungalukum matrum anaithu blog nanbargalukum en iniya deepavali nal vazhthukkal

Yogen

Anonymous said...

Vetti,
Deepawali Wishes to you too

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
Hi vets

Ungalukum matrum anaithu blog nanbargalukum en iniya deepavali nal vazhthukkal

Yogen //

யோகன்,
மிக்க நன்றி!!!

நாமக்கல் சிபி said...

//தூயா said...
Vetti,
Deepawali Wishes to you too //

Thooya,
thx a lot!!!

G.Ragavan said...

இதுதான் அந்த தீபாவளி வாழ்த்துப் பதிவா! நல்லா வந்திருக்கு. பதிவுல இருக்குறதத்தான் நானும் செஞ்சேன். :-)

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...
இதுதான் அந்த தீபாவளி வாழ்த்துப் பதிவா! நல்லா வந்திருக்கு. பதிவுல இருக்குறதத்தான் நானும் செஞ்சேன். :-)
//
மிக்க நன்றி!!!
எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இந்த மாதிரி விசேஷ நாட்களில் அம்மா, அப்பாவோட கொண்டாடுற சுகமே தனி!!!
பாக்கலாம் அடுத்த வருஷம் எப்படி போகுதுனு...

tamilselvan said...

namma theepavali Nalla santhoshama Kondaduvoam.

tamilselvan said...

Eallarukkum Namma Theepavali Nalvazhuthkkal.