இது எனக்கு என் நண்பன் ஒருவன் அறிமுகப்படுத்திய விளையாட்டு. பெறும்பாலான கேள்விகளுக்கு சரியாகவே இருந்தது. அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1) உங்களுக்கு பிடித்த விலங்கு ஒன்று? அந்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த 3 குணங்கள்? (உருவத்தை பற்றி அல்ல... குணத்தை பற்றி)
2) அடுத்ததாக உங்களுக்கு பிடித்த விலங்கு எது? அந்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த 3 குணங்கள்?
3) உங்களுக்கு பிடித்த நிறம் என்ன? உங்களை பொருத்தமட்டில் அந்த நிறம் எதனை குறிக்கிறது? (வெற்றி, அமைதி, சக்தி(பவர்)....)
4) நீரில் நனைவது உங்களுக்கு எந்த அளவுக்கு பிடிக்கும்?
5) நீங்கள் தனியாக ஒரு கடல் முன் நிற்கிறீர்கள். அப்போழுது உங்களுக்கு அந்த கடலை பார்க்கும் போது என்ன தோன்றும்? (பல சிந்தனைகள் தோன்றாலாம், அதை இவ்வாறு பிரிக்கவும். மகிழ்ச்சி, சோகம், வியப்பு, கோபம்....)
6) ஆள் அரவமற்ற ஒரு காட்டில் நீங்கள் தனியாக நடந்து செல்கிறீர்கள். அப்போழுது உங்களுக்கு ஒரு திறவுகோல் (சாவி) கிடைக்கிறது. அது பெரும் பொக்கிஷம் அடங்கியுள்ள ஒரு குகையின் சாவி. அந்த சாவி எவ்வாறு உள்ளது? (அதன் உறுதி... அதை உடைக்க எவ்வளவு சக்தி தேவைப்படும்?)
7) ஒரு அறையில் நீங்கள் தனியாக உள்ளீர்கள். அந்த அறையின் அனைத்து வழிகளும் அடைப்பட்டுள்ளன... (வழிகளே இல்லை என்று வைத்துக்கொள்ளவும்). அந்த அறையிலிருந்து தப்பிக்க வழியே இல்லை. அப்போழுது உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்?
சரி. இதற்கு பதில் என்னிடம் சொல்ல தேவையில்லை. நீங்களே நினைத்து கொள்ளவும். இதற்கான விளக்கத்தை நாளை சொல்கிறேன்...
20 comments:
Interesting Topic..
indha vilaayaatu kooda nalla iruke... :-)
வெட்டி,
விளக்கத்தை விரைவில் போடுங்கோ.
எனது குணாதிசயங்களை உடனே அறியாவிட்டால் தலை வெடித்துவிடும் போலுள்ளது.:)
நாளைக்குக் கட்டாயம் சொல்லிடுவீங்கள்ல? :-)
எல்லா கேள்விக்கும் பதிலை வெச்சிருக்கேன்.கடைசியில் நான் சரியில்லைன்னு சைக்காலஜி சொன்னா அப்புறம் பொல்லாதவனாயிடுவேன்.ஆமா:-)))
Sivabalan,
thx a lot
Syam,
பொறுமையா விளையாடலாம்... நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க
என்ன ஆப்பு வெயிட்டிங்ல இருக்கோ தெரியலயே...;)
வெற்றி,
கவலைப்படாதீர்கள் நாளைக்கு கண்டிப்பாக போட்டுவிடுகிறேன்...
குமரன்,
பல நாட்களுக்கு பின் நம் வலைப்பக்கம் வருகிறீர்கள்... எப்படியும் நாளைக்கு கட்டாயம் போட முயற்சி செய்கிறேன்
//செல்வன் said...
எல்லா கேள்விக்கும் பதிலை வெச்சிருக்கேன்.கடைசியில் நான் சரியில்லைன்னு சைக்காலஜி சொன்னா அப்புறம் பொல்லாதவனாயிடுவேன்.ஆமா:-)))
//
நீங்க நல்லவரு, வல்லவரு... நாலும் தெரிஞ்சவரு... சொல்றது சைக்காலஜி இல்ல பாலாஜி ;)
//கப்பி பய said...
என்ன ஆப்பு வெயிட்டிங்ல இருக்கோ தெரியலயே...;)
//
நீ என்ன நினைச்சயோ அதுக்கு ஏத்த மாதிரி வரும்... கவலைப்படாதே ;)
நீங்க நல்லவரு, வல்லவரு... நாலும் தெரிஞ்சவரு... சொல்றது சைக்காலஜி இல்ல பாலாஜி ;)////
படித்ததும் குபீரென சிரித்து விட்டேன்:-))
ஓகே..வெயிட்டிங் ஃபார் டுமாரோ:-))
நாளைக்கு வரைக்கும் காத்திருக்கனுமா?? சரி ஒரு நாள் தானே... அதுக்காக வெயிட் பண்ணலாம் முடியாது, நான் நாளைக்கு வந்து இந்த பதிவப் படிக்கிறேன் :-)
- விநய்*
இதுல காமெடி கீமெடி எதுவும் இல்லையே?
//சரி. இதற்கு பதில் என்னிடம் சொல்ல தேவையில்லை//
மெய்யாலுமே நீங்க நல்லவரு தான் பாலாஜி! எங்க விடைகளை எல்லாம் எடுத்து வச்சி, காமெடி கீமெடி ஏதோ பண்ணப் போறீங்களோ-ன்னு முதல்ல தோணிச்சு!
நாளைக்குக் கட்டாயம் சொல்லிடுங்க சைக்காலஜி, சாரி, பாலாஜி!
ஹான் ஜி :-))
இன்னிக்கு பிடிச்சதெல்லாம் நாளைக்கு மாறிடுச்சுன்னா... நான் நாளைக்கே வந்து இரண்டு பதிவுகளையும் இன்னோருக்கா படிச்சுக்கர்றேன்
//Anonymous said...
நாளைக்கு வரைக்கும் காத்திருக்கனுமா?? சரி ஒரு நாள் தானே... அதுக்காக வெயிட் பண்ணலாம் முடியாது, நான் நாளைக்கு வந்து இந்த பதிவப் படிக்கிறேன் :-)
- விநய்*
//
எல்லாரும் படிக்கனும்னு தான் ஒரு நாள் வரை காத்திருக்க சொல்கிறேன்... தவறாக நினைக்க வேண்டாம்
//NaagareegaKomaali-Thiagan said...
இதுல காமெடி கீமெடி எதுவும் இல்லையே?
//
இல்லைங்க... இது சீரியஸ் பதிவுதான்
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சரி. இதற்கு பதில் என்னிடம் சொல்ல தேவையில்லை//
மெய்யாலுமே நீங்க நல்லவரு தான் பாலாஜி! எங்க விடைகளை எல்லாம் எடுத்து வச்சி, காமெடி கீமெடி ஏதோ பண்ணப் போறீங்களோ-ன்னு முதல்ல தோணிச்சு!
நாளைக்குக் கட்டாயம் சொல்லிடுங்க சைக்காலஜி, சாரி, பாலாஜி!
ஹான் ஜி :-))
//
இது ஒரளவு உண்மையென்றே எனக்கு தோன்றுவதால் விடைகளை கேட்கவில்லை :-)
கண்டிப்பா சொல்லிடறேன்...
// ராசுக்குட்டி said...
இன்னிக்கு பிடிச்சதெல்லாம் நாளைக்கு மாறிடுச்சுன்னா... நான் நாளைக்கே வந்து இரண்டு பதிவுகளையும் இன்னோருக்கா படிச்சுக்கர்றேன்
//
அதுவும் சரிதான்... ஆனால் முதல்ல கேள்வியை படிச்சிட்டு அப்பறம் விடையை படிக்கவும்
//Divya said...
Hi Vetti,
Romba arumai aa irukirathu unga blog........keep up your good work!//
மிக்க நன்றி!!!
தொடர்ந்து படிக்கவும் :-)
Post a Comment