சின்ன சின்ன டிப்ஸ்:
- எந்த கம்பெனிக்கு ஆப்டிடுயுட் டெஸ்ட் (Aptitude Test)க்கு செல்வதென்றாலும் அதற்கு முன்பு அந்த கம்பெனி பழைய கேள்வித்தாள்களை படித்துவிட்டு செல்லவும். (நான் சிண்டல் (syntel) எழுத போகும்போது பழைய கேள்விகளை படித்துவிட்டு போனதால் எளிதாக தேர்வானேன். 50 கேள்விகளில் 30 கேள்விகள் பழைய கேள்விகளில் இருந்தே வந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நான் அதில் சேரவில்லை). www.freshersworld.com ல் பழைய கேள்வித்தாள்கள் இருக்கும்.
-முடிந்த வரை நண்பர்களுக்கு உதவவும். எந்த கம்பெனியாவது வாக் இன் (Walk In) நடத்தினால், நண்பர்கள் அனைவருக்கும் சொல்லவும். எங்கே அவர்கள் நமக்கு போட்டியாக வந்துவிடுவார்களோ என்று நினைக்கவேண்டாம். பொறாமை நம்மை அழித்துவிடும். (நண்பர்களுக்கு நான் எந்த கம்பெனிக்கு தயார் செய்யும் முறையை சொல்லி கொடுத்தேனோ அந்த கம்பெனியிலே சேர்ந்தேன்)
-1 மணி நேரத்தில் 50-60 கேள்விகள் என்று ஆப்டிடுயுட் டெஸ்ட் இருந்தால், முதலில் எல்லா கேள்விகளையும் வாசிக்கவும். ஏனெனில் ஒரு சில கேள்விகளுக்கு படித்தவுடனே விடை தெரிந்துவிடும் (Next day after Tuesday...1,3,5,?). அதனால் துவக்கத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் கேள்விகளில் நேரத்தை வீணாக்காதீர்கள்.
- இன்போஸிஸ் தயார் செய்ய: முதலில் Quantitative Aptitude, அடுத்து shakuntala Devi's Puzzle to Puzzle You & More Puzzles, அடுத்து Puzzles and Teasers by George Summers, மிக முக்கியமானது பழைய கேள்வித்தாள்கள்.
- சின்ன சின்ன ப்ரோகிராம் எந்த நேரத்தில் கொடுத்தாலும் போடுமாறு தெரிந்து வைத்துக் கொள்ளவும். (Fibanocci Series, Find Prime Number, find whether Palindrome, sum of a number...)
- வாக் இன் (Walk In) நடத்தினால் முடிந்தவரை சீக்கிரமாக சென்றுவிடவும். 10 மணி வாக் இன் என்றால் 7-8 மணிக்கே சென்றாலும் தப்பில்லை. அழைப்பின் பேரில் (Call Letter) சென்றால் 30 நிமிடம் முன்னால் சென்றாலே போதும்.
- ஒவ்வொரு கம்பெனியாக சென்று ரெசுமே கொடுத்து நேரத்தை வீணாக்காதீர்கள். பெரும்பாலான கம்பெனிகள் இ-மெயிலில் தான் ரெசுமே வாங்குகிறார்கள். அந்த நேரத்தில் உட்கார்ந்து படியுங்கள்.
-மீண்டும் சொல்கிறேன். தெரியாதவர்களுக்கு சொல்லி கொடுங்கள். நான் அனைத்தையும் படித்துவிட்டு சொல்லி தருவேன் என்று சொல்லாதீர்கள்.
இறுதியாக என் பள்ளியின் தாரக மந்திரமான "உழைப்பே உயர்வு தரும்" (Labor Omnia Vincit) என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
முடிந்தவரை நான் அனுபவித்ததை உங்களுடன் பகிர்ந்துவிட்டேன். சீக்கிரம் வாங்க உங்களுக்காக நிறைய Treat காத்துக்கிட்டு இருக்கு....
25 comments:
நானும் கூட எட்டிக் குதிக்க போறேன். :)
வா(ங்க) மணிகண்டன் வாங்க...
வெட்டிப்பயல் என்று பெயருள்ள நீங்கள் சற்றும் பெயருக்கு பொருத்தமில்லாதவர்... :-)
தங்கள் பதிவு கண்டு வியந்தேன். மிக உபயோகமான, அனுபவ பூர்வமான பதிவு.
எங்கள் காலத்தில் எல்லாம் இந்த மாதிரி டெஸ்ட்கள் ஏதோ பாங்க் பரீட்சைக்கு மட்டும் இருக்கும். வாக்-இன் மாதிரி சந்தைகள் எல்லாம் இல்லை.
நடைமுறையில் மிக உபயோகமான டிப்ஸைகளை கொடுத்திருக்கிறீர்கள். எனக்கு தெரியாத விஷயங்கள்.
நன்றி
மேலும் எழுதுங்கள்
ஜயராமன் ஐயா,
//வெட்டிப்பயல் என்று பெயருள்ள நீங்கள் சற்றும் பெயருக்கு பொருத்தமில்லாதவர்... :-)//
என் பேருக்கு ஏத்த மாதிரி பதிவு கண்டிப்பா போடுவேன்...பாத்துட்டே இருங்க :-))
//தங்கள் பதிவு கண்டு வியந்தேன். மிக உபயோகமான, அனுபவ பூர்வமான பதிவு.
//
மிக்க நன்றி.
//எங்கள் காலத்தில் எல்லாம் இந்த மாதிரி டெஸ்ட்கள் ஏதோ பாங்க் பரீட்சைக்கு மட்டும் இருக்கும். வாக்-இன் மாதிரி சந்தைகள் எல்லாம் இல்லை.
//
என்ன பண்றது??? நான் பார்த்த வாக்-இன் ஒன்னுல 10 பேர் தேர்வுக்கு 5000 பேர் வந்திருந்தாங்க!!! பெங்களுர் ITPL ஆடி போயிடுச்சி. காலைல இருந்து 10 மணியி இருந்து சாயுங்காலம் 4:30 வரை எதுவும் சாப்பிடாமல் கியுவில் நின்றிருந்தோம். கடைசியில் நாங்க கிட்ட போனவுடன், எல்லோரும் ரெசுமே குடுத்துட்டு போங்க நாங்க கூப்பிடறோம்னு சொல்லிட்டாங்க!!! பேருக்கு தான் Software Engineer :-(
//நடைமுறையில் மிக உபயோகமான டிப்ஸைகளை கொடுத்திருக்கிறீர்கள். எனக்கு தெரியாத விஷயங்கள்.//
நம்ம பட்ட கஷ்டம் நம்மள மாதிரி சின்ன காலேஜ்ல படிச்சவங்க படக்கூடாதுனுதான் இந்த பதிவு.
ஒருவகையில் இதுவும் சுயநலமே.
ஆன் - கேம்பஸில் சேர்ந்தவர்கள் இதெல்லாம் அனுபவித்திருக்கமாட்டார்கள்.
இதை தொகுத்து ஒரு தனி புத்தகமாகவே போடலாம்...am serious its such an useful post...
இது போன்ற தகவல்களை கூட்டாக எழுதினால் இன்னும் நல்ல பல விசயங்கள் வேலை தேடுவோருக்கு உதவியாக இருக்கும். தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்!!
//இதை தொகுத்து ஒரு தனி புத்தகமாகவே போடலாம்...am serious its such an useful post...
//
syam,
மிக்க நன்றி. அந்த மாதிரி எல்லாம் போடற அளவுக்கு நமக்கு விவரம் தெரியாது. நீங்க சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. யார் வேண்டுமென்றாலும் என்னுடைய இந்த பதிவை Freeயாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
//இது போன்ற தகவல்களை கூட்டாக எழுதினால் இன்னும் நல்ல பல விசயங்கள் வேலை தேடுவோருக்கு உதவியாக இருக்கும். தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்!!
//
மாஹிர்,
ஒரே பதிவுல சொன்னா ரொம்ப பெரிசா இருக்கும். அதனாலதான் இத்தனை பதிவுகள். இதுவே சுருக்கமா சொல்லனும்னு எங்க கதையெல்லாம் சொல்லாமல் விட்டுட்டோம்.
//ஆன் - கேம்பஸில் சேர்ந்தவர்கள் இதெல்லாம் அனுபவித்திருக்கமாட்டார்கள்.
//
உண்மையிலும் உண்மை.
Truth of Truth.
ஸத்யஸ்ய ஸத்யம்.
////ஆன் - கேம்பஸில் சேர்ந்தவர்கள் இதெல்லாம் அனுபவித்திருக்கமாட்டார்கள்.
//
சரிதான், ஆனால் 2 வது முறை முயற்சி பண்ணும்போது நிறைய உதவும் பாயிண்டுகள் இவை...
Good work Balaji!!!
நான் ரயிலை பிடிக்கமுடியாவிட்டாலும்,யாராவது கேட்டால் நிச்சயமாக வெ...பயல் வலைப்பூவைப்போய் பார் என்று சொல்லலாம் என்றுள்ளேன்.
குமரன், உதயகுமார்,
மிக்க நன்றி.
குமரன் ஐயா,
நான் நடுவில் இந்த தொடரை நிறுத்திவிடலாமா என்று நினைத்திருந்த போழுது, நீங்கள் தொடர்ந்து இட்டு வந்த பின்னூட்டமே எனக்கு முழுதாக எழுத ஊக்கமளித்தது. உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
வடுவூர் குமார்,
தொடர்ந்து படித்ததற்கு நன்றி. உங்களுடைய பின்னூட்டத்தால் எனக்கு பொறுப்பு கொஞ்சம் கூடியது.
ஆனால் உங்களுக்கு தேவையானதை தந்தேனா என்று தெரியவில்லை?
மீண்டும் ஒருமுறை...மிக்க நன்றி
பார்த்துக்கொண்டே இருக்கேன்.
நீங்கள் முதலில் சொன்ன புத்தகங்கள் இங்கு கிடைக்காது என்பதால் ஊருக்கு போகும் போது வாங்கிப்படிக்கலாம் என்றுள்ளேன்.
எனினும் விடுவதாக இல்லை.
நீங்கள் தொடருங்கள்.
என்றோ ஒரு நாள் தொட்டுவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
அது தான் வாழ்கை,வேலை என்றிருந்தால் ஒருவேளை இன்னும் முனைப்போடு இருப்பேனோ என்னவோ.
பாலாஜி. என் பெயருக்குப் பின்னால் ஐயா தேவையில்லை. :-)
வடுவூர்,
நீங்க இவ்வளவு ஆர்வமாக இருக்கும் போது, கண்டிப்பாகநீங்கள் இந்த துறையில் சாதிக்க முடியும். வேண்டுமென்றால் உங்கள் மெயில்-ஐடி கொடுங்கள் நான் இ-புக் அனுப்பி வைக்கிறேன்.
குமரன்,
உங்க படம் பார்த்தவுடனே மனசுல ஒரு மரியாதை தானா வந்துடுது. என்ன பண்ண???
thalaiva nanum oru pudhiya thodar eludh pogirane..adhuvum kitta thatta idhu madhir thaan aanla idheY illai
ungal udhavi adharku thevai neengal ivvlavu seekiram indha thodari muipeergal ena naan edirparka villai
கார்த்திக்,
உன் தொடரை நான் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் நான் முடித்து 3 வருடமாகிறது. நம் துறை வருடா வருடம் பல மாற்றங்களை சந்திக்கிறது. இப்பொழுது எப்படி இருக்கிறது என்று உன் மூலம் அரிய ஆசைப்படுகிறேன்.
என்னால் முடிந்த உதவிகளை கண்டிப்பாக நான் செய்கிறேன்.
ஹாய் நான் மேகங்கள்விஜய்--- கும்பகோணம்-- உன்
பிலாக்கை படித்தேன் நன்று ஒரு ஹைகூ பரிசு பிடி
ஹைக்கூ
-----------
மறக்காதிருக்க
கடவுச்சொற்க்கலளூக்கு
அவள் பெயர்
--------------
நன்றி
adutha murai yealuthumpoluthu keel kanda thagavalgalai thriyapaduthavum.
job position - Basic Duties - Back Ground and Knowledge Requirements - Skills required for its Sucees.
Ureaka.
ureaka said
//
job position - Basic Duties - Back Ground and Knowledge Requirements - Skills required for its Sucees.
//
ureaka,
Ok, I will try to give the basics of how S/W companies work.
thx for the comments
வெ.ப,
நல்ல பணி.நல்ல தொடர். தொடருங்கள். எம்மினத்தவர்கள் உங்களின் இப்பதிவைப் படித்து பயன்பெற உதவியாக இருக்கும். உங்களின் இந்த சேவைமனப்பான்மையைப் பாராட்டுகிறேன். உங்களை முன்னுதாரணமாகக் கொண்டு எம்மினத்தை முன்னேற்ற பலரும் முன் வரவேண்டும். மிக்க நன்றி.
வெற்றி,
மிக்க நன்றி.
//எம்மினத்தை முன்னேற்ற பலரும் முன் வரவேண்டும்//
அடுத்து கார்த்திக் பிரபு நான் எழுதியதைவிட இன்னும் ஆழமான(அருமையான) தொடர் ஒன்றை எழுத போகிறார். எல்லோரும் ஊக்குவித்தீர்கள் என்றால் அவரால் இன்னும் சிறப்பாக தரமுடியும்.
மிகவும் பயனுள்ள தொடர். தொடரின் 8 பகுதிகளும் எங்கள் கல்லூரி குழுமத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
http://pecalumni.blogspot.com/2006/08/tips-for-tomorrows-software-engineers.html
Post a Comment