தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, July 26, 2006

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-7!!!

Technical Interviewவிற்கு தயார் செய்வது எப்படினு முந்தைய பகுதியில் பார்த்தோம்.

நேர்முக தேர்வை (Personal Interview) அணுகுவது எப்படினு இந்த பகுதியில் பார்ப்போம்.

செய்யக் கூடாதவை:
-சரியான நேரத்தில் சென்றால் போதும் நினைக்காதீர்கள்.
-அடிக்கிற மாதிரி கலர்ல டிரஸ் போடதீர்கள். (நீங்கள் ராமராஜன், விஜயகாந்த், சிம்பு ரசிகரா இருக்கலாம். அதுக்காக உங்க பாசத்த இண்டர்வியூவில் காட்ட வேண்டாம்)
-இண்டர்வியூவின் போது சிவிங் கம் (Chewing Gum) சாப்பிடாதீர்கள்.
-உங்கள் வறுமை நிலைமையை சொல்லி வேலை கேட்காதீர்கள்.
-அதிக பிரசங்கி தனமாக எதுவும் பேசாதீர்கள். (Dont act over smart)
-இந்த ஊரில்தான் வேலை செய்வேன் என்று அடம்பிடிக்காதீர்கள்.

செய்யவேண்டியவை:
- 30 நிமிடத்திற்கு முன்னாதக இண்டர்வியூ நடக்கும் இடத்திற்கு சென்றுவிடவும்.
- Formalsல் செல்லவும். முழுக்கை சட்டை, பேண்ட், ஷீ அணியவும்.(Even if the company does not have dress code)
- தேவையான சர்ட்டிபிகேட் கையில் வைத்திருக்கவும். அதற்கு ஒரு செக்-லிஸ்ட் வைத்திருக்கவும். சர்ட்டிபிகேட்களை சரியான முறையில் அடுக்கி வைக்கவும். தேவைப்படும் போது எடுக்க வசதியாக இருக்கும்.
-உங்கள் பெயரை அழைத்தவுடன் உள்ளே செல்லவும்.
-உள்ளே சென்றவுடன் நட்புடன் சிரித்து வாழ்த்து சொல்லவும். (Have a Friendly Smile and Say "Hi/Hi, how r u doing?". Let it be casual)
-இண்டர்வியூ எடுப்பவர் கை கொடுத்தால் மட்டும் கை கொடுக்கவும்.
-கை கொடுக்கும் போது ஓரளவு இறுக்கமாக கை கொடுக்கவும் (Let it be Firm to show ur confident). பயம் வேண்டாம்.
-கேள்வி கேட்பவரின் கண்ணைப் பார்த்து பெசவும். 4-5 பேர் இண்டர்வியூ பேனலில் இருந்தால், கேள்வி கேட்பவரைப் பார்த்து பதில் சொல்லவும்.
-தன்னம்பிக்கையுடன் பதில் சொல்லவும். இதுவே வேலை வாங்குவதற்கு உதவும்.
-செல் போனை தவிர்க்கவும். எடுத்து சென்றாலும் அணைத்துவிடவும் (Switch it Off)
- முடிந்தவரை உண்மையை பேசவும்.

பெரும்பாலான கம்பெனிகளில் முதல் கேள்வி, உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்பதுதான். (Tell me about yourself)
என்னைக் கேட்டால் இந்த கேள்விக்கு பதிலை மனப்பாடம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒப்பிக்கற மாதிரி இருக்கக்கூடாது. பொறுமையா நிதானமாக சொல்வது மாதிரி இருக்க வேண்டும்.
(நான் மனசுக்குள்ளே இதை 100 முறையாவது சொல்லி இருப்பேன்).

Tell me about youselfல் நான் சொல்லியது இதுதான்:
என் பெயர்.
கல்வி விவரம் (கல்லூரி விவரம் போதும்)
குடும்பம் (அப்பா, அம்மா, சகோதர/சகோதிரியின் இன்றைய நிலை. அவர்கள் பேர் எல்லாம் சொல்ல தேவையில்லை. படிக்கிறார்கள் என்றால் படிக்கிறார்கள்/ வேலைக்கு செல்கிறார்கள் என்றால் என்ன வேலை அவ்வளவுதான்)
உங்கள் பொழுது போக்கு (அதிகமாக சொல்லாதீர்கள். உண்மையை சொல்லவும். நான் சொன்னது சமையல்)
உங்கள் பலம்.
அவர்கள் கேட்டால் பலவீனத்தை சொல்லவும். பலவீனமும் ஒரு வகையில் பலமாக இருக்குமாறு சொல்லவும். நான் சொன்னது, எனக்கு இரக்ககுணம் அதிகம், அதனால் மற்றவர்களுக்கு உதுவுகிறேன் பேர்வழியாக என்னையே கஷ்டப்படுத்தி கொள்வேன். ஆனால் அந்த பணி வெற்றியடைந்த பிறகு மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்.

முடிந்த அளவு 90-120 நொடிகளுக்குள் முடித்து கொள்ளவும். குறைந்த பட்சம் 20 முறையாவது சொல்லி பார்க்கவும்.

தன்னம்பிக்கையுடன் பேசவும், தலைகனத்துடன் வேண்டாம்.

சின்ன சின்ன டிப்ஸ்....

தொடரும்...

8 comments:

வடுவூர் குமார் said...

"உங்களைப்பற்றி சொல்லுங்கள்"-இங்கு தான் பலருக்கு உதைக்கிறது.
இந்த கேள்வியை இன்றும் என்னிடம் யாரவது கேட்டால் நிஜமாகவே உளறுவேன்.
எதைச்சொல்வது என்ற குழப்பம் தான் அதுமட்டிமில்லாமல் நம்மிடம் அவர்கள் எதை எதிர்பார்கிறார்கள் என்று சரியாக தெரியாததால் வரும் குழப்பம் இது.
வேலை தேடும் பையன்களுக்கு உங்கள் பதிவு ஒரு உரைக்கல்.

நாமக்கல் சிபி said...

குமார்,
மிக்க நன்றி.

நான் எதை சொன்னேன் என்று அப்டேட் செய்துள்ளேன். அனைவரும் தடுமாறுமிடம் இதுதான்

Unknown said...

Good posting balaji.I too have faced this menancing "tell me abt urself" many times.It has become a formality in many companies.I used to trumpet my skills when this question was asked saying "I love hardwork,challenges blah,blah.."which never failed to bring a smile in the faces of interviewers.They would have seen so many people blowing their own trumphets:-)

I have learnt to approach interviews as a casual chat nowadays.I will take them seriously,but not too formally.I will tell them who I am and nothing more and nothing less.At times I have answered something like

'All details about me which are relevent to this job are given in resume.Apart from those I would like to add that I value high work ethics and honesty.I have upheld these virtues in my life till now and I can assure you that I will approach this job with sincerity and honesty.I am an easy going person,dont get short tempered and have many good friends and healthy habits.If you want to ask anything specific about me you can do so"

நாமக்கல் சிபி said...

$elvan,
Thanks for sharing ur experience.

Most of the freshers will be always tensed when they attend the interview. they maainly think abt the consequences of the interview during the interview and they try to impress the interviewer.

but to be frank, if we r honest then we will definetely get the job.

Mostly our Eyes reveal the truth. Its always good ro be honest and its easy too.

நாமக்கல் சிபி said...

எ.பியாரே,
மிக்க நன்றி.

திருத்தம் செய்துவிட்டேன்.

சந்தனமுல்லை said...

முக்கியமாக நமது குரலை modulate செய்து பேசவேண்டும். monotonous ஸாக இல்லாமல், தன்னம்பிக்கை தொனிக்கும் விதத்தில் பேசவேண்டும்.


//அவர்கள் கேட்டால் பலவீனத்தை சொல்லவும். பலவீனமும் ஒரு வகையில் பலமாக இருக்குமாறு சொல்லவும்.//

முற்றிலும் சரி.

Hariharan # 03985177737685368452 said...

நேர்மையாய், உதவிகரமாய், வழிகாட்டுகிற மாதிரியான பதிவு.
வாழ்த்துக்கள். செய்க இம்மாதிரி கெட்டியான பணி.

எதைச்செய்யவேண்டும் என்பதோடு எது அவசியம் கூடாது, தவிர்க்கப்படவேண்டும் என்பது மிக முக்கியம்.

In the effort to succeed it is essential to unlearn a few things atleast at the crucial moments like interviews.

நாமக்கல் சிபி said...

சந்தனமுல்லை,
//முக்கியமாக நமது குரலை modulate செய்து பேசவேண்டும். monotonous ஸாக இல்லாமல், தன்னம்பிக்கை தொனிக்கும் விதத்தில் பேசவேண்டும்.
//
சரியாக சொன்னீர்கள். தன்னம்பிக்கையுடன் பேசினாலே வேலைக் கிடைப்பது பாதி உறுதியாகிவிடும்.

ஹரிஹரன்,
மிக்க நன்றி. தொடர்ந்து படித்து எதாவது தவறிருந்தால் சுட்டிக்காட்டவும்