தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, July 21, 2006

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-5!!!

சரி, ரெசுமே தயார் செய்வது எப்படினு பாத்தாச்சி.

முதல் சுற்றான Aptitude Testக்கு தயார் செய்வது எப்படினு பார்ப்போம்.

Aptitude Testல என்ன மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்கலாம்???
1) Numerical Problems (எண்கணிதம்)
2) Logical/Analytical Puzzles
3) Verbal skills
4) C Programming Fundamentals

இனி ஒவ்வொன்றுக்கும் தயார் செய்வது எப்படினு பார்ப்போம்:
1) எண்கணிதம்:
இதற்கு எனக்கு தெரிந்த ஒரே தெய்வம் "Qunatitative Aptitude" by R.S. Aggarwal
இதில் முதல் 4-5 chapters வெட்டி மாதிரி தெரியும். ஆனால் அதுதான் முக்கியமான ஒன்று. எல்லா கணக்கையும் போட்டு பாருங்கள். பார்த்தா தெரிஞ்ச மாதிரி இருக்கு அதனால போட்டு பார்க்க தேவையில்லைனு விட்டுவிடாதீர்கள்.
கணக்கை பொருத்தவரை திரும்ப திரும்ப போட்டு பார்த்தால்தான் வரும்.

எனக்கு தெரிந்த வரை முக்கியமான chapters:
1) Problems on Numbers.
2) Problems on Ages
3) Time and Work
4) Pipes and Cisterns
5) Percentages
6) Profit and Loss
7) Series or Find the Odd ones
8) Venn Diagram (Satyam, CTS...)

Probability & Permutation and Combination அந்த புத்தகத்தில் இருக்காது. அதனால் இதை CAT/GRE படிப்பவர்களிடமிருந்து நகல் எடுத்துக் கொள்ளுங்கள்.
HCL Cisco முதல் சுற்றில் 20ல் 14 கேள்விகள் Probability & Permutation and Combinationல் இருந்து வந்தன. அந்த தேர்வில் நான் தேர்ச்சி பெற அதுவே உதவியது. ஏனென்றால் அனைவரும் R.S. Aggarwal படித்திருந்தனர். (இண்டெர்வியுல ஊத்திக்கிச்சு :-))

2) Logical/Analytical Puzzles:
இதற்கு நான் பயன்படுத்தியது IMS GRE Material. நான் GRE படிக்கவில்லை. ஆனால் நண்பனிடமிருந்து வாங்கி பயன்படுத்திக் கொண்டேன். இதற்கு எல்லாம் பெரிய புத்திசாலிதனம் தேவையில்லை. எல்லாமே 8-10 மாணவர்கள்கூட போட்டுவிடுவார்கள்.
ஒவ்வொரு மாதிரியான puzzlesம் எப்படி அணுக வேண்டுமென்று அந்த புத்தகத்தில் இருக்கும். மகிழ்ச்சியாக படியுங்கள் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்.
படித்ததை தெரியாதவருக்கு சொல்லிக் கொடுங்கள்.

3) Verbal skills :
இதை பற்றி ஒரு பதிவே போட்டாச்சு.

4) C Programming Fundamentals:
"Let us C", "Pointers in C", "Test ur C Skills"- Yashwant Kanitkar.
இதற்கு மேல் எதுவும் தேவையில்லை. முதலில் "Let Us C"ல் ஆரம்பிக்கவும்.
பிறகு "Pointers in C". "Test ur C Skills"ல் கேள்வி பதில்கள் இருக்கும். தேர்வுக்கு முன்னால் கண்டிப்பாக ஒரு முறையாவது படிக்கவும்.

அடப்பாவி நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு இத்தனை புத்தகத்தை சொல்லிட்ட. படிக்கற கஷ்டம் எங்களுக்கு தான தெரியும்னு சொல்லறீங்களா?
கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது கண்ணா...

ஒரு நாள் முழுக்க Quants, அடுத்த நாள் Verbal, அடுத்து Analytical, அடுத்து technicalனு படிக்காதீங்க!!! தினமும் ஒவ்வொன்றிற்கும் 2-3 மணி நேரம் ஒதுக்கி படியுங்கள். இது பெங்களூர், சென்னைனு போய் mansionல தங்கி வேலை தேடுபவர்களுக்கான நேர ஒதுக்கீடு. மற்றவர்கள் அவரவருக்கு தகுந்த மாதிரி ஒதுக்கி கொள்ளவும்.

தொடரும்....

PS: கார்த்திக் அவர்களுக்கு நன்றி. நான் மறந்த பல விஷயங்களை நியாபகப்படுத்தியதற்காக

12 comments:

Vaikunth said...

1) "puzzles to puzzle you" - Shakuntala Devi இத விட்டுடீங்களே.
2) கணக்கு நல்லா பழகி போட்டா, வேகமா போடலாம். இதனால கஷ்டமான கேள்விகளுக்கு நிறைய நேரம் கிடைக்கும்.

//கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது கண்ணா...//
-அசால்டா ஒரு வாழ்கை தத்துவம் :)

நல்லா இருக்கு தொடருங்க.

நாமக்கல் சிபி said...

vaik,
மிக்க நன்றி. Puzzles to Puzzle You, More Puzzles, Puzzles and Teasers...
இதை எல்லாம் பற்றி ஒரு தனி பதிவே இருக்கு...

வடுவூர் குமார் said...

"கணக்கை பொருத்தவரை திரும்ப திரும்ப போட்டு பார்த்தால்தான் வரும்"
நான் படித்துக்கொண்டு இருந்த காலத்தில் ஒரு நண்பன் சொல்லிக்கொடுத்தது.அப்புறம் என்ன 100 தான்.இது நான் அவனிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடம்.

Unknown said...

Back home:-))

சாப்ட்வேர் எஞ்சினியர் ஆக இத்தனை கஷ்டப்படணுமா?

கணிதமும் கைப்பழக்கம்னு தான் சொல்லணும்.உக்காந்து படிச்சா கணிதமும்,வெர்பலும் ரொம்ப ஈசி.என்னக்கு பள்ளிக்கூடத்துல கணக்கே சுத்தமா வராது.ஆனா க்வான்ட்ஸ்லயும்,வெர்பல்லையும் தேர்ச்சி பெற சுத்தமா ஒரு வருஷம் கஷ்டப்பட்டு உக்காந்து படிச்சேன்.

நாமக்கல் சிபி said...

குமார்,
மிக்க நன்றி.
உங்களை மாதிரி 100 மார்க் எடுத்தவங்க சொன்னா எல்லாரும் கேட்பாங்க!!!

பரம பிதா,
அப்படி சொல்றவங்களை அந்த துறையை விட்டு வர சொல்லுங்கள். பிறகு பார்க்கலாம். கை நிறைய காசை அம்மா அப்பா கைல கொடுத்து அவுங்க சந்தோஷப்படுறத பார்க்கும் போது....பட்ட கஷ்டமெல்லாம் பறந்து போகும். இதை பற்றியும் ஒரு பதிவு கண்டிப்பா இருக்கு.

நாமக்கல் சிபி said...

//Back home:-))//
Great!!! இனி செத்தான் கருணாகரன் :-))
(கதையை சீக்கிரம் போடுங்க...)

//சாப்ட்வேர் எஞ்சினியர் ஆக இத்தனை கஷ்டப்படணுமா?
//
படிக்கிற காலத்துல ஒழுக்கமா படிச்சா இந்த கஷ்டமெல்லாம் தேவை இல்லை. 4 வருஷம் ஊர் சுத்திட்டு வேலை வேணும்னா கஷ்டப்பட்டுத்தான் ஆகணும்.

//கணிதமும் கைப்பழக்கம்னு தான் சொல்லணும்.உக்காந்து படிச்சா கணிதமும்,வெர்பலும் ரொம்ப ஈசி.என்னக்கு பள்ளிக்கூடத்துல கணக்கே சுத்தமா வராது.ஆனா க்வான்ட்ஸ்லயும்,வெர்பல்லையும் தேர்ச்சி பெற சுத்தமா ஒரு வருஷம் கஷ்டப்பட்டு உக்காந்து படிச்சேன். //
software fieldக்கு ஒழுங்கா 2-3 மாசம் படிச்சா போதும்!!!

Unknown said...

தலை

கதை திங்களன்று எழுதிடறேன்.

இது அருமையான பயனுள்ள பதிவு.அப்படியே இன்டவியூவில் தேர்வு செய்யப்படுவது எப்படின்னு எழுதினா நிறைய பேருக்கு பயன்படும்.(I am thinking of writing something like this,soon.)

நாமக்கல் சிபி said...

//கதை திங்களன்று எழுதிடறேன்//
இத்தனை நாள் விட்டதை படிக்க ரெண்டு நாள் போதுமா???

சரி திங்களுக்காக காத்திருக்கிறேன்.

//இது அருமையான பயனுள்ள பதிவு.//
மிக்க நன்றி.

//அப்படியே இன்டவியூவில் தேர்வு செய்யப்படுவது எப்படின்னு எழுதினா நிறைய பேருக்கு பயன்படும்//
அது இல்லனா நான் இவ்வளவு எழுதறதே வெட்டியாயிடும். கண்டிப்பா இண்டர்வியுவை பத்தி ஒரு பதிவு இருக்கு...

//I am thinking of writing something like this,soon//
கண்டிப்பா எழுதுங்க!!!
(I will forward that too all freshers i know)

Hariharan # 03985177737685368452 said...

//கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது கண்ணா...//

கண்டிப்பா எவ்வளவுக்கு எவ்வளவு சிரத்தையோடு தயார் செய்கிறோமோ அவ்வளவுக்கு வெற்றி கிடைக்கும்.

பல காலம் முன்பு 89-90ல் "டிஜிடல் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ்" சம்பந்தமாக (N)AND,OR,EXOR gates, Flipflops, Triac, diac, Silicon Controlled Rectifier போன்ற வற்றின் செயல்பாடுகள் இவைகள்
பற்றி கல்லூரியில் படித்ததை விட McGrawhill publication books தி.நகர் ரெங்கநாதன் தெரு மேன்ஷனில் படித்ததுதான் அதிகம்.

ஆரம்ப நிலை வேலைகள் சென்னையில் எப்பவேணும்னாலும் கிடைக்கும். கிராமத்து இளைஞன் சென்னைக்கு மேன்ஷனுக்கு வந்து விட்டாலே 50% வெற்றிதான்.

முயன்றால் முடியாதது இல்லை. முயற்சி செய்ய முறையான களம் /தளம் சென்னையில் மட்டும் தான் தேவையான அளவுக்கு உள்ளது.

நாமக்கல் சிபி said...

ஹரிஹரன்,
நீங்க சொல்வது 100% சரி. நான் இஞ்ஜினியரிங்கில் தெரிந்து கொண்டதைவிட...படித்து முடித்து வெலை தேடும் போது தெரிந்து கொண்டதே அதிகம்.

குமரன் (Kumaran) said...

//"Let us C", "Pointers in C", "Test ur C Skills"- Yashwant Kanitkar.
//

நான் படிக்கும் போது முதல் இரண்டு புத்தகங்களையும் படித்தேன். மூன்றாவது அப்போது வெளிவரவில்லை என்று நினைக்கிறேன். சி.ஐ.டி.யில் எம்.ஈ. படிக்கும் போது யஸ்வந்த் கனேட்கர் கல்லூரிக்கு வந்தார். அவர் வருகிறார் என்று நானும் நண்பர்களும் ஏதோ கடவுளே நேரில் வருவது போல் அலட்டிக் கொண்டதைப் பார்த்து பேராசிரியர்கள் கடுப்பானதை இப்போதும் புன்னகையுடன் நினைத்துக் கொள்கிறேன். :-)

நாமக்கல் சிபி said...

//நான் படிக்கும் போது முதல் இரண்டு புத்தகங்களையும் படித்தேன். மூன்றாவது அப்போது வெளிவரவில்லை என்று நினைக்கிறேன். //

நீங்கள் சொல்வது சரி என்றே நினைக்கிறேன். அது நம்ம கோனார் தமிழ் உரைல இருக்கிற கேள்வி-பதில் மாதிரி. கடைசி நேரத்தில் லாஜிக் மறந்துவிட்டால் உதவும்.