தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, March 12, 2009

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி!

நான் முதன்முதல்ல இந்த பிரியாணி சாப்பிட்டது பெங்களூர்ல எங்க ஆபிஸ்ல தான். அதுவரைக்கும் நம்ம ஊர் பிரியாணி தான் நம்ம ஃபெவரைட்டா இருந்தது. அது சாப்பிட்டதுக்கு அப்பறம் நம்ம லிஸ்ட்ல ஹைதரபாதி தம் பிரியாணி டாப் 10ல வந்துடுச்சி.

எங்க ஆபிஸ்ல திங்கள், புதன், வெள்ளி மூணு நாளும் ஹைதராபாத் தம் பிரியாணி போடுவாங்க (காசுக்குத் தான்). அதனால அந்த மூணு நாளும் அதை தவற விடாம இருந்தேன். இங்க வந்ததுக்கப்பறம் அதை சுத்தமா மிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். 

நம்ம ஸ்டைல் பிரியாணி சூப்பரா இல்லைனாலும் சுமாரா செய்வேன். ஆனா அதுல ஒரு திருப்தி இல்லை. அப்ப தான் யூ ட்யூப்ல தேடும் போது இந்த வீடியோவை பார்த்தேன். அப்ப வீட்டம்மா இங்க தான் இருந்தாங்க. சரி, ட்ரை பண்ணி பார்க்கலாம்னு முயற்சி செஞ்சாங்க (அவுங்க நம்மல விட நல்லா சமைப்பாங்க. இருந்தாலும் அதை நான் ஒத்துக்க மாட்டேன் ;) ). 

அந்த வீடீயோவை அப்படியே ஃபாலோ பண்ணாங்க. சூப்பரா வந்திருந்தது. அதுக்கு அடுத்து அவுங்க ஊருக்கு போனதுக்கப்பறம் நாங்க முயற்சி செஞ்சி பார்த்தோம். கேவலமா வந்திருக்கும்னு நினைக்கறீங்களா? அது தான் இல்லை. அதுவும் சூப்பரா வந்திருந்தது. ஏன்னா அது அவ்வளவு சுலபம். ஆனா உங்களுக்கு தேவைப் பொறுமை. அப்ப சிக்கன் வேணாமானு யாராவது கேட்டுடாதீங்கப்பூ.

இதை பார்த்து அப்படியே செஞ்சு பாருங்க. நிச்சயம் நல்லா வரும்.

 முடிஞ்சா இந்த வார இறுதில செஞ்சி பார்த்து சொல்லுங்க. 

41 comments:

SurveySan said...

ஹய்தராபாத் பிரியாணி சூப்பராதான் இருக்கும்.

இந்தாளு சொல்லிக் கொடுத்த வேர ஏதோ சிக்கன் ஐட்டம், ட்ரை பண்ணிருக்கேன். அதுவும் நல்லாதான் வந்துது.

ஆனாலும், எங்க வீட்ல பண்ற தம் பிரியாணி மாதிரி வேர எங்கையும் நான் சாப்பிட்டதில்லை. தயிர்ல ஊர செச்ச சிக்கனும், புதினா தேங்காவெல்லாம் போட்டு பண்ற மசாலாவும், டால்டா/நெய் போட்டு வறுத்து பண்ணுவாங்க பாருங்க, அடா அடா அடா அருமைய்யா இருக்கும்.

சீக்கிரம், நானும் வலையெத்துறேன் அந்த ரெசிப்பி.

சரவணகுமரன் said...

அட... நம்ம ஊருலயும் ஆம்பூர், திண்டுக்கல், சங்கரன்கோவில் பக்கம் பிரியாணி பேமஸ்... யாராச்சும் ப்ரோமோட் பண்ணுங்கப்பா...

வெட்டிப்பயல் said...

// SurveySan said...
ஹய்தராபாத் பிரியாணி சூப்பராதான் இருக்கும்.

இந்தாளு சொல்லிக் கொடுத்த வேர ஏதோ சிக்கன் ஐட்டம், ட்ரை பண்ணிருக்கேன். அதுவும் நல்லாதான் வந்துது.

ஆனாலும், எங்க வீட்ல பண்ற தம் பிரியாணி மாதிரி வேர எங்கையும் நான் சாப்பிட்டதில்லை. தயிர்ல ஊர செச்ச சிக்கனும், புதினா தேங்காவெல்லாம் போட்டு பண்ற மசாலாவும், டால்டா/நெய் போட்டு வறுத்து பண்ணுவாங்க பாருங்க, அடா அடா அடா அருமைய்யா இருக்கும்.

சீக்கிரம், நானும் வலையெத்துறேன் அந்த ரெசிப்பி.//

ஹா ஹா ஹா...

சீக்கிரம் போடுங்கப்பு :)

Chandran Rama said...

The presenter who demonstrated the making of the briyani was superb. His narration and demonstration was excellent. Good I really enjoyed the clip.

வெட்டிப்பயல் said...

//சரவணகுமரன் said...
அட... நம்ம ஊருலயும் ஆம்பூர், திண்டுக்கல், சங்கரன்கோவில் பக்கம் பிரியாணி பேமஸ்... யாராச்சும் ப்ரோமோட் பண்ணுங்கப்பா...

11:46 PM//

யாராவது சொல்லி கொடுத்தா செஞ்சி பார்த்தி ப்ரமோட் பண்ணிடுவோம். நமக்கு எந்த ஊர் சாப்பாடா இருந்தாலும் நல்லா இருந்தா சரி தான் ;)

மனுநீதி said...

ஹைதராபாத் பிரியாணினு சொன்ன உடனே நான் UKல இருந்த பொது பிரியாணிக்காக அலைஞ்ச ஞாபகம் வந்துடுச்சு . ஒரு பிரயாணி 10 பௌண்ட்ஸ், இப்ப நெனச்சாலும் வயிறு எரியுது.அவளோ கேவலமான பிரியாணிய என் வாழ்கையிலே சாப்பிட்டதே இல்ல.பிரியாணின்ற பேர்ல புளியஞ்சாதத்த போட்டு ஏமாத்திட்டான் பாவி.

ஆனா இப்போதைக்கு பிடிச்சது எங்க ஆபீஸ் பக்கத்துல இருக்க வாணியம்பாடி பிரியாணி தான் :)

வெட்டிப்பயல் said...

//arumugam said...
The presenter who demonstrated the making of the briyani was superb. His narration and demonstration was excellent. Good I really enjoyed the clip.//

மிக்க நன்றி ஆறுமுகம்... அவ்வளவு அழகா விளக்கறதால தான் அவ்வளவு சுலபமா செய்ய முடிஞ்சிது. அதான் உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொண்டேன் :)

வெட்டிப்பயல் said...

// உள்ளத்தில் இருந்து.. said...
ஹைதராபாத் பிரியாணினு சொன்ன உடனே நான் UKல இருந்த பொது பிரியாணிக்காக அலைஞ்ச ஞாபகம் வந்துடுச்சு . ஒரு பிரயாணி 10 பௌண்ட்ஸ், இப்ப நெனச்சாலும் வயிறு எரியுது.அவளோ கேவலமான பிரியாணிய என் வாழ்கையிலே சாப்பிட்டதே இல்ல.பிரியாணின்ற பேர்ல புளியஞ்சாதத்த போட்டு ஏமாத்திட்டான் பாவி.
//
அந்த மாதிரி நமக்கு இந்த ஏரியாவுல நிறைய டெர்ரர் நடந்திருக்கு. அதுக்கு அப்பறம் தான் இந்த வீடியோ பார்த்து செய்ய பழகிட்டோம்.

//ஆனா இப்போதைக்கு பிடிச்சது எங்க ஆபீஸ் பக்கத்துல இருக்க வாணியம்பாடி பிரியாணி தான் :)
//
வாவ் சூப்பர்... ஏதாவது சாப்பிட கிடைச்சா ஓகே தான் :)

Anonymous said...

ஆம்பூர் பிரியாணி is the best... I got the recipe from some aampur briyani shop (in aanatha vikatan)... I tried and it was awesome... It was very easy too. I noted in some book. Have to find out :-(

VahChef Sanjay Thumma is a professional chef. What you expect... he is just awesome :-)

முரளிகண்ணன் said...

கை நனைச்சுட்டு போங்க என்னும் கேப்ஷனுக்கு ஏற்ற பதிவு.

சங்கர் said...

நன்றி. செஞ்சி பார்த்துட்டா போச்சு, ம்ம் இன்னமும் 28 மணித்தியாலம் இருக்கே, அது வரை திரும்பவும் வீடீயோவை பார்ப்போம்.

நாகை சிவா said...

ரைட் செஞ்டுவோம் :)

சங்கர் said...

பிரியாணி ரெடியா??,
கை நனச்சிட்டு போங்க... என்றால் சாப்பிட்டு போங்க!!!

Kathir said...

//இதை பார்த்து அப்படியே செஞ்சு பாருங்க. நிச்சயம் நல்லா வரும்.//

செஞ்சு பார்த்தா போதுமா இல்ல சாப்பிட்டு பார்க்கனுமா????

:))))

மங்களூர் சிவா said...

/
அவுங்க நம்மல விட நல்லா சமைப்பாங்க. இருந்தாலும் அதை நான் ஒத்துக்க மாட்டேன் ;) ).
/

same blodd
:))))))))))

Karthik said...

நான் சாப்பிட போறேங்க. பசியை ஞாபகப்படுத்திட்டீங்க. :))

புருனோ Bruno said...

//அப்ப சிக்கன் வேணாமானு யாராவது கேட்டுடாதீங்கப்பூ.//

நற நற

குடுகுடுப்பை said...

போன வாரந்தான் மட்டன் பிரியாணி சாப்பிட்டேன்.இப்படி கெளப்பி உடுறீங்களேப்பா.

50கிலோ வில் இருந்து 80 கிலோ ஆனவன்.

? said...

//அந்த மாதிரி நமக்கு இந்த ஏரியாவுல நிறைய டெர்ரர் நடந்திருக்கு. அதுக்கு அப்பறம் தான் இந்த வீடியோ பார்த்து செய்ய பழகிட்டோம்.//

waltham-ல்லுள்ள kabab and tandoor -ல் ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டதுண்டா? நன்றாக இருக்கும்!

Divyapriya said...

எனக்கு நம்ம ஊர் style பிரியாணி செய்யத் தெரியும்...இதையும் செஞ்சு, ஒரு கை பாத்துட வேண்டியது தான் :)

வெட்டிப்பயல் said...

// Triumph said...
ஆம்பூர் பிரியாணி is the best... I got the recipe from some aampur briyani shop (in aanatha vikatan)... I tried and it was awesome... It was very easy too. I noted in some book. Have to find out :-(
//
எப்படியாவது தேடி கண்டுபிடிச்சி போடுங்களேன் பாஸ் :)

//VahChef Sanjay Thumma is a professional chef. What you expect... he is just awesome :-)//

yeah.. that too his explanation is very clear.

வெட்டிப்பயல் said...

// முரளிகண்ணன் said...
கை நனைச்சுட்டு போங்க என்னும் கேப்ஷனுக்கு ஏற்ற பதிவு.//

ஹி ஹி ஹி :)

வெட்டிப்பயல் said...

//சங்கர் said...
நன்றி. செஞ்சி பார்த்துட்டா போச்சு, ம்ம் இன்னமும் 28 மணித்தியாலம் இருக்கே, அது வரை திரும்பவும் வீடீயோவை பார்ப்போம்.

//

பொறுமையா செஞ்சி பாருங்க...

வெட்டிப்பயல் said...

// நாகை சிவா said...
ரைட் செஞ்டுவோம் :)

4:32 AM//

புலி,
நம்மல மாதிரி எக்ஸ்பெர்ட்க்கு எல்லாம் இது ஜிஜிபி :)

வெட்டிப்பயல் said...

//சங்கர் said...
பிரியாணி ரெடியா??,
கை நனச்சிட்டு போங்க... என்றால் சாப்பிட்டு போங்க!!!

4:53 AM//

வாங்க வாங்க...
வந்தீங்கனா போடாமலா போயிடுவோம் :)

வெட்டிப்பயல் said...

// Kathir said...
//இதை பார்த்து அப்படியே செஞ்சு பாருங்க. நிச்சயம் நல்லா வரும்.//

செஞ்சு பார்த்தா போதுமா இல்ல சாப்பிட்டு பார்க்கனுமா????

:))))//

செஞ்சு பாருங்க. சாப்பிடற மாதிரி இல்லைனா ஃபிரெண்ட்ஸை இன்வைட் பண்ணிடுங்க ;)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...
/
அவுங்க நம்மல விட நல்லா சமைப்பாங்க. இருந்தாலும் அதை நான் ஒத்துக்க மாட்டேன் ;) ).
/

same blodd
:))))))))))//

ஹா ஹா ஹா :)

வெட்டிப்பயல் said...

// Karthik said...
நான் சாப்பிட போறேங்க. பசியை ஞாபகப்படுத்திட்டீங்க. :))//

சமைச்சா இல்லை வெளியவா?

வெட்டிப்பயல் said...

//புருனோ Bruno said...
//அப்ப சிக்கன் வேணாமானு யாராவது கேட்டுடாதீங்கப்பூ.//

நற நற//

டாக்டர்,
எங்க தளபதி சிபி வந்தா இந்த மாதிரி தான் ஏதாவது கோக்கு மாக்கா கேப்பாரு. அதான் கொஞ்சம் முன்னெச்சரிக்கை :)

வெட்டிப்பயல் said...

//குடுகுடுப்பை said...
போன வாரந்தான் மட்டன் பிரியாணி சாப்பிட்டேன்.இப்படி கெளப்பி உடுறீங்களேப்பா.

50கிலோ வில் இருந்து 80 கிலோ ஆனவன்.

10:41 AM//

ஹா ஹா ஹா...

வாரத்துக்கு ஒரு தடவை சாப்பிட்டா பெருசா எதுவும் ஆகாதுனு நினைக்கிறேன் :)

வெட்டிப்பயல் said...

// நந்தவனத்தான் said...
//அந்த மாதிரி நமக்கு இந்த ஏரியாவுல நிறைய டெர்ரர் நடந்திருக்கு. அதுக்கு அப்பறம் தான் இந்த வீடியோ பார்த்து செய்ய பழகிட்டோம்.//

waltham-ல்லுள்ள kabab and tandoor -ல் ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டதுண்டா? நன்றாக இருக்கும்!//

இல்லைங்களே. இங்க லோவல்லயே ரெண்டு இருக்கு. இங்கயும் கபாப் இருக்கு. ஆனா அந்த அளவுக்கு நல்லா இருக்காது. கொஞ்சம் சுமார் தான். இப்பவெல்லாம் இந்தியன் ரெண்டாரெண்டே போகறதில்லை.

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
எனக்கு நம்ம ஊர் style பிரியாணி செய்யத் தெரியும்...இதையும் செஞ்சு, ஒரு கை பாத்துட வேண்டியது தான் :)

//

சூப்பர்... செஞ்சு பார்த்து சொல்லுமா :)

ஸ்ரீதர்கண்ணன் said...

அப்போ இந்த ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டுக்கு ஒரு விசிட் அடிக்க வேண்டும் போல இருக்கே :)

ஆ! இதழ்கள் said...

எனக்கும் அப்படித்தான். மதுரை அம்சவல்லி பிரியாணி தான் முதலில் ஃபேவரிட், ஹைதராபாதியை டேஸ்ட் செஞ்சவுடன் அதுவும் சேந்துருச்சு.

ஆனா எனக்கு புரியாதது பிரியாணியுடன் ஊறுகாயும் அப்பளமும் வைத்து சாப்பிடும் கேரளவாசிகளைத்தான். எப்படி அது?

எப்படி?

இருந்தாலும் எப்படி?

தமிழினி..... said...

இப்ப மைசூர் ல தினமும் இந்த பிரியாணி கிடைக்குது....கிடைக்குமிடம் FC1 .... :)

Anonymous said...

na senji pathen. namma tamil nattu biriyani mari illa. namma oor dhu than jodi no 1. err.. piirrriiiyani no 1.

Anonymous said...

Thala ,

http://vahrehvah.com/videos.php

Ivaruthan engallukku konja nala Theiyvam. Nreiya try pannuvom .

The Instructions are simple and easy to follow and he would also talk abt the products available in US .

பாண்டியன் புதல்வி said...

எனக்கு சரியா வரல சார்..சொதப்பிடுச்சி..இல்லனா எங்க டேஸ்ட்க்கு ஒத்துவரல்லை. நான் பன்னும் பிரியாணியில் தக்காளி போடுவேன். இவர் அதல்லாம் இல்லாமல் செய்யறார். எதுக்கும் இன்னும் ஒரு முறை செய்துப் பார்க்கனும்.

கைப்புள்ள said...

பாலாஜி,
உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்கேன். ஏத்துக்கும் படி கேட்டுக்கறேன். நன்றி.

http://kaipullai.blogspot.com/2009/03/blog-post_18.html

வெட்டிப்பயல் said...

// பாண்டியன் புதல்வி said...
எனக்கு சரியா வரல சார்..சொதப்பிடுச்சி..இல்லனா எங்க டேஸ்ட்க்கு ஒத்துவரல்லை. நான் பன்னும் பிரியாணியில் தக்காளி போடுவேன். இவர் அதல்லாம் இல்லாமல் செய்யறார். எதுக்கும் இன்னும் ஒரு முறை செய்துப் பார்க்கனும்.//

வரலைனா ஃபிரியா விட்டுடுங்க. சிக்கனை ஒரு தடவைக்கு ரெண்டு தடவை வேஸ்ட் பண்ணா எனக்கு தான் திட்டு விழும் :)

வெட்டிப்பயல் said...

//கைப்புள்ள said...
பாலாஜி,
உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்கேன். ஏத்துக்கும் படி கேட்டுக்கறேன். நன்றி.

http://kaipullai.blogspot.com/2009/03/blog-post_18.html//

கண்டிப்பா.. நீங்க சொல்லி ஏத்துக்காம போயிடுவோமா :)