தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, March 22, 2009

கசினோ, காதல் கதைகள்

வர வர ஆணி அதிகமாகி கடப்பாரை ரேஞ்சுக்கு ஆகிப்போச்சு. அதனால ஒரு வீக் எண்ட் வேலை இல்லைனாலும் பெரிய கொண்டாட்டமா தெரியுது. அப்படி இந்த வாரம் வேலை இல்லைனு தெரிஞ்சவுடனே என்ன பண்ணலாம்னு ப்ளான் பண்ணும் போது கசினோ போகலாம்னு முடிவாச்சி. புதன் கிழமையே ப்ளானை போட்டாச்சு. வெள்ளிக்கிழமை சாயந்தரம் கிளம்பறோம்னு. நான், என் ரூமெட்ஸ் செந்தில், சுந்தர் அப்பறம் கசினோல சில பல ஆயிரம் டாலர்களை சாதாரணமா சம்பாதிக்கிற தெலுகு ஃபிரெண்ட் ஒருத்தர். அவர் பேரு மொனிஷ்.

வெள்ளிக்கிழமை ஒரு எழரை மணிக்கு அட்லாண்டிக் சிட்டி கிளம்பினோம். இதை எழுதும் போது தான் தோணுது புறப்பட்ட நேரம் சரியில்லாததால தான் பெருசா ஜெயிக்க முடியலைனு. நிறைய ஜெயிச்சாலும் கடைசியா லம்பா ஜெயிக்கலாம்னு நான் சொன்ன ஐடியால ஜெயிச்சதெல்லாம் போயிடுச்சி. புறப்படும் போதே ஆயிரம் டாலர்க்கு மேல ஜெயிச்சா 50 இன்ச் டீவி வாங்கலாம்னு நான் சொன்ன ஐடியாவை நிறைவேத்த முடியல. மணி ரெண்டு ஆகிட்டதால புறப்பட்டோம். சரி அடுத்த மாசம் போயிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். 

வரும் போது வண்டி ஓட்றவர் தூங்கிட கூடாதுனு பேசிட்டே வரலாம்னு சொல்லி பேச ஆரம்பிச்சோம். நான் ஜாலியா ஒரு காதல் கதை எழுதி ரொம்ப நாள் ஆகிடுச்சினு சொன்னேன். உடனே செந்தில் நான் ஒரு கதை சொல்றேன். அடெலசண்ட்ஸ் கதை. அதை நீ எழுதனும்னு சொன்னாரு. சரி அந்த மாதிரி கதையை தான் நானும் எதிர்பார்த்துட்டு இருக்கேன், சொல்லுங்கனு சொன்னேன். உடனே அவர் ஒரு கதையை சொல்ல ஆரம்பிச்சாரு.

சென்னைல ஒரு பெரிய வீடு மாதிரி இருக்கும். அதுல நிறைய ஃபேமிலிஸ் எல்லாம் இருப்பாங்க அப்படினு ஆரம்பிச்சாரு. உடனே நான் கோட்ரஸ் மாதிரியா? அப்படினு கேட்டேன். கோட்ரஸ் மாதிரினு சொல்ல முடியாது. இது மிடிஸ் கிளாஸ் தங்கற மாதிரி ஒரு அறுநூறு சதுர அடி தான் இருக்கும். ஒரு வீட்ல இருந்து பார்த்தா அடுத்த வீடு தெரியும். மத்த ஊருல எல்லாம் இந்த மாதிரி நீ பாக்க முடியாது.

சத்தியமா அந்த வீடு எப்படி இருக்கும்னு எனக்கு புரியலை. சரி அது முக்கியமில்லை, நீங்க கதையை சொல்லுங்கனு சொன்னேன். 

“அங்க நம்ம ஹீரோ இருக்காரு”

”அந்த ஹீரோ நீங்க தானே” உடனே நானும் சுந்தரும் கோரஸா சொன்னோம்.

“அப்ப நீ எழுதற கதை எல்லாத்துலயும் நீ தான் ஹீரோவா”

“நீங்க என்னோட உங்களை கம்பேர் பண்ண முடியாது. நான் ஒரு பிறவி கலைஞன். நமக்கு கற்பனை ஊத்து தானா வரும்”

“ஏன் எங்களால எல்லாம் யோசிக்க முடியாதா?”

“முடியும். ஆனா முகத்துல இவ்வளவு பிரகாசம் தெரியாது” அப்படினு சொன்ன உடனே அவர் சிரிச்சிட்டு சொல்ல ஆரம்பிச்சாரு.

“ஹீரோ ஒன்பதாவது படிக்கிறாரு. அந்த காம்பௌண்ட்ல பக்கத்து வீட்ல இருக்குற பொண்ணு எட்டாவது படிக்குது. அந்த பையனுக்கு அந்த பொண்ணு மேல ஒரு அட்ராக்‌ஷன். அந்த பொண்ணு அவுங்க அம்மாக்கு ஹெல்ப் பண்றதை எல்லாம் அந்த பையன் தினமும் பார்ப்பான். அடுத்து அந்த பையன் அப்படியே பத்தாவது வரான். அந்த பொண்ணை பார்த்துட்டு எங்க போனாலும் அவனுக்கு நல்லதே நடக்குது. அந்த பொண்ணை பார்த்துட்டு ஹோம் வொர்க் பண்ணாம ஸ்கூலுக்கு போனா அங்க டீச்சர் ஹோம் ஒர்க் பத்தி எதுவும் கேக்க மாட்றாங்க. அந்த பொண்ணை பார்த்துட்டு பரிட்சை எல்லாம் எழுதினா எல்லாத்துலயும் நல்ல மார்க் வருது”

”What the fuck man? Its totally crap. There is no such thing called love." மொனிஷ் ஆரம்பிச்சாரு. வேற வழியில்லாம நான் செந்திலுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சேன்.

“அப்படினு அந்த ஹீரோ நம்பறான். அது அவனோட நம்பிக்கை மட்டும் தான்” 

உடனே மொனிஷ் சைலண்ட ஆகிட்டாரு. மறுபடியும் செந்தில் கதையை சொல்ல ஆரம்பிச்சாரு.

“பப்ளிக் எக்ஸாம் ஆரம்பிச்சிது. அந்த நேரத்துல பரிட்சைக்கு போகும் போது அவனால அந்த பொண்ணை பார்க்க முடியலை. அதனால அவனுக்கு மார்க் குறைஞ்சிடுச்சி. இப்ப அந்த பையன் பதினொன்னாவது வந்தான். இப்ப அந்த பையன் கொ எட்ல இருந்து பசங்க மட்டும் படிக்கிற ஸ்கூலுக்கு மாறினான். அவனால முன்னாடி மாதிரி பொண்ணுங்ககிட்ட பேச முடியறதில்லை. அவனுக்கு ஒரே பொழுது போக்கு அந்த பக்கத்து வீட்டு பொண்ணை பார்க்கறது தான். தினமும் அந்த பொண்ணை அவன் வீட்ல இருந்து பார்த்துட்டே இருப்பான்”

“அப்படி அவன் தினமும் பாக்கற அளவுக்கு அந்த பொண்ணு அப்படி என்ன இண்ட்ரஸ்டா பண்ணும்” எனக்குள்ள இருக்குற கதா அலர்ட்டா இருந்தான்.

“சாதாரணமா பண்றது தான். வீட்டுக்கு வந்தவுடனே அவுங்க அம்மாக்கு பாத்திரம் எல்லாம் விலக்கி ஹெல்ப் பண்ணுவா. எப்பவும் ரோஸ் கலர் நைட்டியும், டார்க் ப்ளூ நைட்டியும் தான் போட்டிருப்பா. அவளுக்கு அது அழகா இருக்கும்”

“ரொம்ப முக்கியம்” இது சுந்தர்.

“ஆமாப்பா. அடுத்து அந்த பையன் பனிரெண்டாவது போனான். அந்த பொண்ணு பிளஸ் ஒன். இப்ப அந்த பொண்ணு டியூசன் போனா. இந்த பையனும் அதுக்காகவே அந்த பொண்ணு டியூசனுக்கு போனான். அங்க அந்த பையன் டியூஷன் கிளாஸ் எல்லாம் வேணாம். நான் இங்க உட்கார்ந்து படிச்சிக்கிறேனு ஸ்பெஷலா கேட்டு அந்த பொண்ணை பார்த்துட்டே படிக்கிறான்”

”இதெல்லாம் ஒரு பொழுப்பு” மறுபடியும் சுந்தர்.

“டேய் இதெல்லாம் உனக்கு புரியாதுடா. இப்ப மறுபடியும் பப்ளிக் எக்ஸாம். முதல் கொஞ்ச பரிட்சைக்கு அவனால அந்த பொண்ணை பார்க்க முடியலை. அதனால லேங்வேஜ்ல எல்லாம் மார்க் குறைஞ்சிடுச்சி. அடுத்து வந்த பரிட்சை எல்லாம் அந்த பொண்ணை பார்த்துட்டு போய் எழுதினான். இப்ப எல்லாத்துலயும் நிறைய மார்க். கெமிஸ்ட்ரி பரிட்சைக்கு பார்க்க முடியலை. அதனால மார்க் குறைஞ்சிடுச்சி”

“ஓ! அதான் உங்களுக்கு கெமிஸ்ட்ரி பரிட்சைல மார்க் குறைஞ்ச காரணமா?” இந்த தடவை சுந்தர் நச்சுனு பிடிச்சிட்டார். பப்ளிக் எக்சாம் பத்தி பேச்சு வந்தப்ப செந்திலுக்கு கெமிஸ்ட்ரில மார்க் குறைஞ்சிடுச்சினு போன வாரம் தான் சொல்லிட்டு இருந்தாரு. 

“கதையை கேளுங்கப்பா”

“You don't write these stories man. Better write some sex story. Everyone will read it and they will like it. but they won't tell you that they have read your story" அப்படினு மொனிஷ் சொல்ல ஆரம்பிச்சிட்டாரு.

“ஆஹா. அந்த மாதிரி எல்லாம் நமக்கு எழுத வராது. நான் இப்படியே எழுதறேனே”

"what man, there is not even a kiss so far and that guy is an useless guy" அப்படினு எரிச்சலோட சொன்னாரு. செந்தில்கிட்ட இருந்து எந்த ரெஸ்பாண்டும் இல்லை. சரினு மொனிஷை கொஞ்சம் சமாதானப்படுத்தி செந்திலை கதை சொல்ல சொன்னேன்.

"அடுத்து எண்ட்ரன்ஸ் வந்துச்சி, அதுல அந்த பொண்ணை பார்த்துட்டு போயி இந்த பையன் நிறைய மார்க் எடுத்துட்டான். அவனுக்கு ஒரு நல்ல காலேஜ்ல இஞ்சினியரிங் சீட்டு கிடைச்சிது. ரொம்ப சந்தோஷமா இருந்தான். அந்த நேரம் பார்த்து அந்த பொண்ணுக்கு பர்த் டே வந்துச்சு. இந்த பையன் என்ன பண்ணான். ஒரு கிரிட்டிங் கார்ட் வாங்கி அதை அந்த பொண்ணோட கிளாஸ் மேட் ஒருத்தவன் கிட்ட கொடுத்து கொடுக்க சொல்லிட்டான். அந்த கிரிட்டிங் அந்த பொண்ணோட பெரியப்பாக்கிட்ட மாட்டிக்கிச்சு. அந்த பையனை கூப்பிட்டு நல்லா வாங்கு வாங்குனு வாங்கிட்டாரு.”

“அப்பறம் நீங்க என்ன பண்ணீங்க?” சுந்தர்

“அதுக்கப்பறம் அந்த பொண்ணுக்கூட டச்சே இல்லை” அப்படினு சொல்லி முடிச்சிட்டாரு.

“What is this story man? I will tell you a story" அப்படினு மொனிஷ் ஆரம்பிச்சாரு. சரி, இதுக்கு மேல தமிழ்ல சொல்றேன்.

“நானும் அந்த பொண்ணும் மூணாவதுல இருந்து பத்தாவது வரைக்கும் ஒண்ணா படிச்சோம். நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். நான் அந்த பொண்ணை பத்தாவதுல ப்ரொப்போஸ் பண்ணேன். அதை அவள் ஏத்துக்கல. அதுக்கு அப்பறம் காலேஜ் எல்லாம் வேற வேற இடத்துல. அதாவது டென் ப்ளஸ் டூ, இஞ்சினியரிங் எல்லாம். ஒரே ஏரியாவுல இருந்ததால அடிக்கடி பார்த்துக்குவோம். ஆனா பேசிக்கல. நான் யூ.எஸ்க்கு MS படிக்க புறப்பட்டேன். சரியா நான் செக் இன் பண்ண போறதுக்கு முன்னாடி எங்க இருந்தோ வந்தா. என் கைலை ஒரு பிள்ளையார் சிலையை கிப்ட் பண்ணா”

“வாவ்”

“நான் யூ எஸ் வந்த ஆறாவது நாள், சரியா அவளும் இங்க MS படிக்க வந்தா”

....

சரி இதுக்கு மேல எழுதினா உ.த அண்ணன் பதிவு மாதிரி ஆகிடும். இதை நாளைக்கு கண்டினியூ பண்றேன்.

(தொடரும்...)



22 comments:

ttpian said...

சந்தோசமா இருக்கிற நேரத்தில்....இது என்ன கொடுமை?
பேசாம "அன்க...இங....போனமா....கப்,சிப்ன்னு காரியத்தை முடிச்சமா...

Unknown said...

உங்க தமிழ் நண்பர் சொன்ன கதை என் கதை மாதிரி இருக்கு :) :)

Unknown said...

ஆகா முக்கியமான இடத்துல்ல தொடரும் போட்டுட்டானே... :))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நான் அந்த பொண்ணை பத்தாவதுல ப்ரொப்போஸ் பண்ணேன். அதை அவள் ஏத்துக்கல.//

குட் வொர்க்

மங்களூர் சிவா said...

தொடருங்க தொடருங்க சீக்கிரம்!

வெட்டிப்பயல் said...

// ttpian said...
சந்தோசமா இருக்கிற நேரத்தில்....இது என்ன கொடுமை?
பேசாம "அன்க...இங....போனமா....கப்,சிப்ன்னு காரியத்தை முடிச்சமா...//

ஏதோ கொலை வெறில இருக்கீங்கனு நினைக்கிறேன் :)

வெட்டிப்பயல் said...

//Manuneedhi said...
உங்க தமிழ் நண்பர் சொன்ன கதை என் கதை மாதிரி இருக்கு :) :)

//

ஓ! நீங்களும் இந்த மாதிரி கார்ட் கொடுத்துட்டு எஸ் ஆகிட்டீங்களா? :)

வெட்டிப்பயல் said...

//தேவ் | Dev said...
ஆகா முக்கியமான இடத்துல்ல தொடரும் போட்டுட்டானே... :))//

ஹி ஹி ஹி...

எத்தனை தொடர் எழுதிருக்கோம் :)

வெட்டிப்பயல் said...

// SUREஷ் said...
//நான் அந்த பொண்ணை பத்தாவதுல ப்ரொப்போஸ் பண்ணேன். அதை அவள் ஏத்துக்கல.//

குட் வொர்க்//

டாங்கிஸ் சுரேஷ்...

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...
தொடருங்க தொடருங்க சீக்கிரம்!//

இதோ இப்ப எழுதறேன்...

தமிழன்-கறுப்பி... said...

சரியான இடத்துல தொடரும் போட்டிங்கள்ளே பாஸ்... :)

தமிழன்-கறுப்பி... said...

அடுத்த பார்ட்டு இதைவிட தூக்கலா இருக்கும் போல...

நாகை சிவா said...

வெட்டி!

எனக்கு ஒரு உண்மைய மட்டும் சொல்லு... இந்த இரண்டு கதைக்கு அப்புறம் உன் காதல் கதையும் வரும்ல....

வரணும்....

வெட்டிப்பயல் said...

//தமிழன்-கறுப்பி... said...
சரியான இடத்துல தொடரும் போட்டிங்கள்ளே பாஸ்... :)//

அப்ப தானே பாஸ் அடுத்த பகுதிக்கு உடனே வருவீங்க :)

வெட்டிப்பயல் said...

//தமிழன்-கறுப்பி... said...
அடுத்த பார்ட்டு இதைவிட தூக்கலா இருக்கும் போல...

1:50 PM//

ஆமாம்... நிறைய தத்துவங்கள் :)

வெட்டிப்பயல் said...

// நாகை சிவா said...
வெட்டி!

எனக்கு ஒரு உண்மைய மட்டும் சொல்லு... இந்த இரண்டு கதைக்கு அப்புறம் உன் காதல் கதையும் வரும்ல....

வரணும்....//

ஹா ஹா ஹா

கடைசியா என்னோட முதல் காதல் கதை வரும்... ஐ மீன் நான் எழுதின முதல் காதல் கதை ;)

கார்த்தி said...

இந்த காசினோ மட்டும் புரியவே மாட்டேன்குது சார்.... பேசாம அங்க எப்புடி ஆட்டைய போடறதுன்னு ஒரு பதிவு போட்டுங்க சார்....

CVR said...

Interesting! :-)
Reminds me of my long drives with you!! :-)

மனுநீதி said...

//ஓ! நீங்களும் இந்த மாதிரி கார்ட் கொடுத்துட்டு எஸ் ஆகிட்டீங்களா? :)//

கார்ட்லாம் குடுக்கல. ஆனா அதைதவிர கதை அதே மாதிரி தான். கூடிய சீக்கிரம் இத பத்தி ஒரு சிறுகதைய நீங்க எதிர்பாக்கலாம். :) :)

FunScribbler said...

உங்க நண்பர் செந்தில் சொன்ன கதை...பேஷ் பேஷ் ரொம்மப நல்லா இருந்துச்சு! (அவ்வ்வ்வ்வ்வ்...)

Karthik said...

நைஸ்..! தோ, அடுத்த பார்ட் படிக்கப் போறேன். லேட்டா வந்தாலும் ஒரு சின்ன நல்ல விஷயம் இருக்கு. ;)

i Love my Frd said...

மொக்கை போடாதீங்கப்பா....