இப்ப எல்லா டீவிலயும் ஏதாவது ஒரு ப்ரோக்ராம் நடத்தி முடிஞ்சிடுச்சினா, உடனே சீசன் 2, சீசன் 3னு ஆரம்பிச்சி டார்ச்சர் பண்றானுங்க. அதான் சரி நாமலும் கவுண்டர்’ஸ் டெவில் ஷோ சீசன் 2 ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு. சரி யாரை இந்த ஷோவுக்கு கூப்பிடலாம்னு யோசிக்கும் போது போன ரவுண்ட்ல எஸ்கேப்பான ”தல”யை பிடிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு. சரி நிகழ்ச்சிக்கு போகலாமா?
கவுண்டர் : வாப்பா அஜித். உட்காரு.
தல : உட்காரலாம். யார் வேணா உட்காரலாம். ஆனா நான் உட்காரணும்னா சூப்பர் ஸ்டார் நாற்காலில தான் உட்காருவேன்.
க : டேய் தல மண்டையா. நீ திருந்தவே மாட்டியா? இப்படி கேவலமா பேசறதுமட்டுமில்லாம உனக்கு சூப்பர் ஸ்டார் நாற்காலி வேணுமா. குசேலனுக்கு அப்பறம் அவரே அந்த நாற்காலில உட்காரதில்லையாம். சரி, நீ நின்னுட்டே பேசு. அப்பறம் அது என்னடா எப்ப பார்த்தாலும் கோட் போட்டுக்கிட்டே சுத்திட்டு இருக்க. காலைல கக்கூஸ்க்கு கோட் சூட் போட்டுட்டு தான் போகறயாம்.
தல : கோட் சூட். பில்லா படத்துல நடிச்சுதுக்கு காசுக்கு பதில் கிடைச்சது. கோட் சூட்.
க : ஓ அது தான் நீ கோட் சூட் போட்டு சுத்தறதுக்கு காரணமா. ஏன்டா பில்லா படத்துக்கு அப்பறம் ஸ்டைலா பேசறனு இப்படி பேசி கொல்லற. உன் ஸ்டைல்ல பேசுடா. அதை ரசிக்க தான் இங்க கூட்டமே
தல: அது! நான் பாத்து பாத்து பேசற வீட்டு மன்ஷனில்ல. தானா பேசற காட்டு மன்ஷன்.
க: டேய். ஸ்டாப் திஸ் பஞ்ச் டயலாக்ஸ். அப்பறம் அது என்னடா உன்னை எல்லாரும் தல, தலனு கூப்பிடறாங்க? ஏன் எங்களுக்கு எல்லாம் உடம்புக்கு மேல தல இல்லாம வாலா இருக்கு?
தல: சின் வயசுல என்ன எல்லாம் தறுதல தறுதலனு கூப்பிடுவாங்க. அது இப்ப ஷார்டா ஆகி தலனு எல்லாரும் கூப்பிடறாங்க.
க: ஓ இதுக்கு இப்படி ஒரு கேவலமான ஃபிளாஷ் பேக் இருக்கா? சரி விடு. அப்பறம் எல்லாரும் ஆரம்பத்துல கேவலமான படத்துல நடிச்சிட்டு அப்பறம் நல்ல படத்துல நடிப்பாங்க. நீ மட்டும் ஆரம்பத்துல நல்ல படத்துல நடிச்சிட்டு இப்ப கேவலமான படத்துல நடிக்கிற. அது எப்படிடா?
தல: ஏ! நான் ஒண்ணும் கேவலமான படத்துல நடிக்கல. எல்லாமே ஓப்பனிங்ல ரெக்கார்ட் பண்ணுது.
க: ஆமாண்டா. உன் ரசிகர்னு சுத்தற கூட்டம் எல்லாம் என்னுமோ ரெண்டாவது நாள் போனா டிக்கெட் கிடைக்காதுனு நினைச்சிக்கிட்டு முதல் நாளே போயிடறானுங்க. ரெண்டாவது நாள் தியேட்டர்ல ஈ ஓடுது. சரி, உனக்கு சனி பிடிச்சது சிட்டிசன் படத்துல தான். அங்க இருந்து நாம ஆரம்பிப்போம். அது ஏன்டா அந்த சிக்கி முக்கி கல்லு மோதுதே பாட்டுல அப்படி ஒரு காஸ்ட்யூம்ல நடிச்ச?
தல: வசுந்தரா தாஸுக்கு என்னைவிட பெரிய தொப்பைனு எல்லாரும் சொன்னாங்க. அதான் யாரோடது பெருசுனு மக்களே முடிவு பண்ணிக்கிட்டும்னு அப்படி ஒரு பாட்டு வெச்சோம். நான் தனி ஆள் இல்லை.
க: அது அந்த படத்தை பார்த்தாலே தெரியுது. அப்பறம் அந்த டயலாக் சொல்லி சொல்லி அன்லிமிடட் மீல்ஸ் நாலஞ்சி வாங்கி சாப்பிட்டதால தான் அப்படி ஆகிடுச்சி. சரி அது பரவாயில்லை, அந்த ரெட்னு ஒரு படம் நடிச்சியே. அது எப்படிடா அந்த மாதிரி ஒரு கொடுமை எல்லாம் நடிக்க முடியுது?
தல : ரெட். R for Revolution, E for Education, D for Development.
க: அதெல்லாம் இருக்கட்டும். அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? நீ என்ன புரட்சி பண்ணிருக்கியா? இல்லை ஒழுங்கா பத்தாவதாவது பாஸ் பண்ணயா? இல்லை இந்த சமுதாய வளர்ச்சிக்கு உதவனியா? அதுல உனக்கும் எதுக்கும் சம்பந்தமில்லை. அப்பறம் ஏன் ராசா இந்த மாதிரி பில்ட் அப் எல்லாம்?
தல: !
க: அது சரி. அப்பறம் அது என்னடா ஆஞ்சனயானு ஒரு படம் நடிச்சியே? அந்த படத்துக்கும் பேருக்கும் என்னடா சம்பந்தம்? ஆஞ்சனெயர் என்னைக்குடா பொண்ணுங்க பின்னாடி பாவாடை, பஞ்சவர்ணம்னு பாட்டு பாடிட்டு போனாரு?
தல: அவன் மட்டும் கில்லினு பேர் வெச்சிட்டு கபடி ஆடலாம். என்னை மட்டும் கேள்வி கேக்கறீங்க?
க: டேய்! அவனே ஒரு குருவி மண்டையன். அவனோட ஏன்டா கம்பேர் பண்ணற? அப்பறம் அந்த ஜனானு ஒரு கொடுமை படம். அதுல நீ சாயந்தரம் கோட், சூட் போட்டு கண்ணாடி போட்டா யாருக்கும் உன்னை அடையாளம் தெரியாதா? அந்த காலத்துல MGR கூட ஒட்டு தாடி, மரூ எல்லாம் வெச்சிட்டு வருவாரேடா?
தல: அவன் மீசையை ட்ரிம் பண்ணிட்டு, கைல டேட்டு குத்திட்டு, கட் பணியன் போட்டு மார்கெட்ல ஆடனாவே தமிழ்நாட்டு போலிஸால கண்டு பிடிக்க முடியல. நான் கண்ணாடி போட்டு, கோட் சூட் போட்டிருக்கேன் என்னை எப்படி கண்டுபிடிக்க முடியும்?
க: டேய் பில்லா ரீமேக் மண்டையா, அந்த காலத்துல MGR, சிவாஜி, ரஜினி, கமல் போட்டியெல்லாம் மக்களை யார் அதிகமா எண்டர்டெயின் பண்றதுனு இருந்துச்சு. நீங்க ரெண்டு பேரும் யார் அதிகமா டார்ச்சர் பண்றதுனு போட்டி போடறீங்களேடா. அப்பறம் அது என்னடா காட் ஃபாதர் படத்துல, கடைசியா அப்பா செத்து காட் ஆகிட்டாரு, காட் ஃபாதர்னு சொல்லி முடிச்சீங்க?
தல: படத்துக்கு முதல்ல பேர் வெச்சாச்சி. அப்பறம் எப்படி யோசிச்சும் கதை வரலை. அதான் கடைசியா அப்பாவை சாகடிச்சி காட் ஃபாதர் ஆக்கிட்டோம்.
க: டேய் காட் ஃபாதர் மண்டையா. இந்த கொடுமையெல்லாம் காதுல கூட விழக்கூடாதுனு தாண்டா மரியோ புசோ செத்து போயிட்டாரு. சரி, அப்பறம் ”ஜி”னு ஒரு படத்துல நடிச்சியே. அதுக்கு அப்பறம் உன்னை எல்லாம் ஜினு தான் கூப்பிடுவாங்கனு அந்த டைரக்டர் கூட சொன்னாரே. அது என்னடா ஜி?
தல: எம்.’ஜி’.ஆர், ர’ஜி’னி, அ’ஜி’த் மூணு பேர்லயும் நடுவுல வர எழுத்து தான் ’ஜி’.
க: அட ச்சீ. இதுக்கு இப்படி ஒரு கேவலமான காரணம் இருக்கா? இந்த பேர் ஆராய்ச்சி பண்ற நேரத்தை கதை கேக்கறதுல பண்ணிருந்தா இந்நேரம் நீ எங்கயோ போயிருப்ப. அப்பறம் அது என்னடா ஆழ்வார் படத்துல சாமி வேஷம் போட்டு துப்பாக்கியால சுட்டுட்டு ”நான் கட்வுள்”, “நான் கட்வுள்”னு சொல்லிட்டு இருந்த?
தல: சாமி வேஷம் போட்டா அடையாளம் தெரியாதுனு தான் அப்படி போட்டேன்.
க: டேய் டேய்... ஏகன் மண்டையா, சாமி வேஷம் போட்டா அடையாளம் தெரியாதுனு சொன்னா ஒத்துக்கறோம். நீ சொல்ற “நான் கட்வுள்”, “நான் கட்வுள்” ஸ்லேங்கை வெச்சே சின்ன சூச்சூ கூட இது அஜித்னு கண்டுபிடிச்சிடுமே. தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா ராசா. அது எப்படி நீ பேசினா கண்டுபிடிக்காம போயிடுவாங்க? சரி நீ ஏன் அப்படி பேசனனு மக்களுக்கு தெரியும். நான் கடவுள் படத்துல நீ தொப்பையோட தலைக்கீழ நின்னா எப்படி இருந்திருக்கும்னு நீயே நினைச்சி பாரு. அந்த படமே காமெடி படம் ஆயிருக்காது? அதனால தான் பாலா வேண்டாம்னு சொல்லிட்டாரு. அது தெரியாம இப்படி “நான் கட்வுள்”, “நான் கட்வுள்”னு சொல்லிட்டு இருந்தா நல்லாவா இருக்கு?
தல: அது டைரக்டர் சொன்னது.
க: தப்பிச்சிட்டாண்டா. சரி இனிமே அந்த மாதிரி கேவலமான டைரக்டர் படத்துல எல்லாம் நடிக்காத. அப்பறம் இந்த பி.வாசு, பேரரசு, ராஜு சுந்தரம் கூட எல்லாம் சகவாசம் வெச்சிக்காத. சரியா?
தல: முழிச்சிட்டேன். தோ வரேன்.
க: டேய் தல மண்டையா. இவ்வளவு நேரம் தூங்கிட்டு தான் பேசிட்டு இருந்தியா?
தல: ஏன்ணே நீங்க வேற? இது பஞ்ச் டயலாக். நான் பஞ்ச் டயலாக் பேசினா எல்லாமே காமெடியா போயிடுது.
க: டேய். இந்த ஸ்கிரின பாத்து பேசி மக்களை டார்ச்சர் பண்ணது போதும்டா. இனிமேவாது கதையை கேட்டு நடிச்சி மக்களுக்கு கொஞ்சம் நல்லது பண்ணுங்கடா. இல்லைனா அடுத்த தடவை நான் பேச மாட்டேன். என் கால் தான் பேசும்.
கவுண்டர் காலை தூக்க, தல எஸ்கேப் ஆகிறார்.
66 comments:
ஹா ஹா ஹா....
நான் தான் first ஆ?
//ஏன் எங்களுக்கு எல்லாம் உடம்புக்கு மேல தல இல்லாம வாலா இருக்கு?//
//நீங்க ரெண்டு பேரும் யார் அதிகமா டார்ச்சர் பண்றதுனு போட்டி போடறீங்களேடா.//
//அட ச்சீ. இதுக்கு இப்படி ஒரு கேவலமான காரணம் இருக்கா? //
//ஸ்லேங்கை வெச்சே சின்ன சூச்சூ கூட இது அஜித்னு கண்டுபிடிச்சிடுமே. தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா //
அய்யோ! டெர்ரரு...
//சின் வயசுல என்ன எல்லாம் தறுதல தறுதலனு கூப்பி/வாங்க. அது இப்ப ஷார்டா ஆகி தலனு எல்லாரும் கூப்பிடறாங்க.//
LOL :D
நல்லவேளையா இந்த லிஸ்ட்ல காட்ஃபாதர் தவிர நான் வேற எந்த படத்தையும் பாக்கல...
"அது" அத விட்டுட்டீங்களா?
:))
//அது என்னடா ஜி?
தல: எம்.’ஜி’.ஆர், ர’ஜி’னி, அ’ஜி’த் மூணு பேர்லயும் நடுவுல வர எழுத்து தான் ’ஜி’.//
கலக்கல் பாலாஜி
:-)
'தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா'
-superb!! உங்களுக்கு நக்கல் ரொம்ப இயல்பா வருது ;)
தல: சின் வயசுல என்ன எல்லாம் தறுதல தறுதலனு கூப்பிடுவாங்க. அது இப்ப ஷார்டா ஆகி தலனு எல்லாரும் கூப்பிடறாங்க.
:))))))))))))))
//சரவணகுமரன் said...
ஹா ஹா ஹா....//
மிக்க நன்றி சரவணகுமரன் :)
//Divyapriya said...
நான் தான் first ஆ?//
இல்லம்மா... செகண்ட் :)
// சரவணகுமரன் said...
//ஏன் எங்களுக்கு எல்லாம் உடம்புக்கு மேல தல இல்லாம வாலா இருக்கு?//
//நீங்க ரெண்டு பேரும் யார் அதிகமா டார்ச்சர் பண்றதுனு போட்டி போடறீங்களேடா.//
//அட ச்சீ. இதுக்கு இப்படி ஒரு கேவலமான காரணம் இருக்கா? //
//ஸ்லேங்கை வெச்சே சின்ன சூச்சூ கூட இது அஜித்னு கண்டுபிடிச்சிடுமே. தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா //
அய்யோ! டெர்ரரு...//
கவுண்டர்னாவே டெரர்தானே :)
// Divyapriya said...
//சின் வயசுல என்ன எல்லாம் தறுதல தறுதலனு கூப்பி/வாங்க. அது இப்ப ஷார்டா ஆகி தலனு எல்லாரும் கூப்பிடறாங்க.//
LOL :D
நல்லவேளையா இந்த லிஸ்ட்ல காட்ஃபாதர் தவிர நான் வேற எந்த படத்தையும் பாக்கல...
//
தப்பிச்சிட்டயேமா :)
//"அது" அத விட்டுட்டீங்களா?
//
இருக்கேமா...
“தல: அது! நான் பாத்து பாத்து பேசற வீட்டு மன்ஷனில்ல. தானா பேசற காட்டு மன்ஷன்”
// ILA said...
:))//
அண்ணே நன்றி :)
//பாலராஜன்கீதா said...
//அது என்னடா ஜி?
தல: எம்.’ஜி’.ஆர், ர’ஜி’னி, அ’ஜி’த் மூணு பேர்லயும் நடுவுல வர எழுத்து தான் ’ஜி’.//
கலக்கல் பாலாஜி
:-)//
மிக்க நன்றி பாலராஜன்கீதா :)
//Anonymous said...
'தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா'
-superb!! உங்களுக்கு நக்கல் ரொம்ப இயல்பா வருது ;)//
மிக்க நன்றி நண்பரே...
நமக்கு வரதே அது மட்டும் தான் :)
//ஸ்ரீதர்கண்ணன் said...
தல: சின் வயசுல என்ன எல்லாம் தறுதல தறுதலனு கூப்பிடுவாங்க. அது இப்ப ஷார்டா ஆகி தலனு எல்லாரும் கூப்பிடறாங்க.
:))))))))))))))//
மிக்க நன்றி ஸ்ரீதர்கண்ணன் :)
தல : ரெட். R for Revolution, E for Education, D for Development.
க: அதெல்லாம் இருக்கட்டும். அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? நீ என்ன புரட்சி பண்ணிருக்கியா? இல்லை ஒழுங்கா பத்தாவதாவது பாஸ் பண்ணயா? இல்லை இந்த சமுதாய வளர்ச்சிக்கு உதவனியா? அதுல உனக்கும் எதுக்கும் சம்பந்தமில்லை. அப்பறம் ஏன் ராசா இந்த மாதிரி பில்ட் அப் எல்லாம்?
Superuuuuuuu

Dank u Sridhar ;)
வெட்டி அசத்திட்டீங்க. ரீவைண்ட் பண்ணிப் பார்த்து பார்த்து சிரிக்கிறேன்.
\\டேய் பில்லா ரீமேக் மண்டையா, அந்த காலத்துல MGR, சிவாஜி, ரஜினி, கமல் போட்டியெல்லாம் மக்களை யார் அதிகமா எண்டர்டெயின் பண்றதுனு இருந்துச்சு. நீங்க ரெண்டு பேரும் யார் அதிகமா டார்ச்சர் பண்றதுனு போட்டி போடறீங்களேடா\\
\\தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா ராசா\\
கலக்கல் வெட்டி. விஜய் டெவில் ஷோ வுக்கும் இதுக்கும் சரியான போட்டி
// முரளிகண்ணன் said...
வெட்டி அசத்திட்டீங்க. ரீவைண்ட் பண்ணிப் பார்த்து பார்த்து சிரிக்கிறேன்.//
மிக்க நன்றி முக. நிறைய பேருக்கு இதுல இருக்கற படமெல்லாம் புரியாது. அதனால கொஞ்சம் ரெஸ்பான்ஸ் குறைவா இருக்கு. உங்களை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் கண்ணு முன்னாடி வந்து நிக்குமே :)
// முரளிகண்ணன் said...
\\டேய் பில்லா ரீமேக் மண்டையா, அந்த காலத்துல MGR, சிவாஜி, ரஜினி, கமல் போட்டியெல்லாம் மக்களை யார் அதிகமா எண்டர்டெயின் பண்றதுனு இருந்துச்சு. நீங்க ரெண்டு பேரும் யார் அதிகமா டார்ச்சர் பண்றதுனு போட்டி போடறீங்களேடா\\
\\தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா ராசா\\
கலக்கல் வெட்டி. விஜய் டெவில் ஷோ வுக்கும் இதுக்கும் சரியான போட்டி
//
மறுபடியும் வந்து படிச்சி பாராட்டியதற்கு நன்றி முக... அதுக்கு நிகரா பண்ணனும்னு எடுத்த முயற்சி தான் இது. உங்க பின்னூட்டத்தை பார்த்ததும் மகிழ்ச்சி :)
////ஸ்லேங்கை வெச்சே சின்ன சூச்சூ கூட இது அஜித்னு கண்டுபிடிச்சிடுமே. தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா //
சான்ஸே இல்லப்பா... வரிக்கு வரி சூப்பர்.
சான்ஸ்-ஏ இல்லீங்க ,வரிக்கு வரி சிரித்தேன்.
முதல்ல இந்த கவுண்டர் ஷோ மூலமாதான் ,உங்க பக்கம் நமக்கு ரொம்ப பிடிச்சது
// கைப்புள்ள said...
////ஸ்லேங்கை வெச்சே சின்ன சூச்சூ கூட இது அஜித்னு கண்டுபிடிச்சிடுமே. தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா //
சான்ஸே இல்லப்பா... வரிக்கு வரி சூப்பர்.
//
மிக்க நன்றி தல :)
திரிம்ப திரும்ப படித்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.
LOL.... கலக்கல்'ப்பா.... :))
அது என்னடா காட் ஃபாதர் படத்துல, கடைசியா அப்பா செத்து காட் ஆகிட்டாரு, காட் ஃபாதர்னு சொல்லி முடிச்சீங்க?//
இது வேறயா? எனக்கு இப்ப தான் தெரியும்.
நல்ல காமெடி.
கலக்கல் தல :)
/தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா ராசா. /
சிரிச்சு சிரிச்சு ஒரே வயித்து வலி தாங்க போங்க...........
ஹாஹா....கவுண்டர் rocks!::)
//தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா
ROFL. :))
முட்யல. அவன் பேஸ்றா மாத்ரியே இருந்துச்சு
விஜய் டெவில் ஷோ அளவுக்கு இல்லேன்னாலும் (அது க்ளஸ்டர் பாம்லாடே:-) இதுவும் தௌசண்ட் வாலாதான் வெட்டி. ரசிச்சு சிரிச்சேன்
இயல்பான நகைச்சுவை சிலருக்கு மட்டும்தான் வரும் - உங்க்ளுக்கு இயல்பே நகைச்சுவைதான் போல :-)
கலக்கீட்டீங்க தல !!
Good job! Excellent one! LOL.
நல்லா இருந்தது!!!!!!!!!
ஆனா பாவங்க தல :((((( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஏய்ய்ய்...இந்த பதிவு ஒர் கர்ப்பு சரித்ரம். இனி நான் பேஸ் மாட்டேன், என் படம் தான் பேஸ்ஸும்...அது
//தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா ராசா//
மொத்தத்தையும் ரசிச்சுப் படிச்சேன். ஆனா இந்த வரியில சிரிக்க ஆரம்பிச்சவன் இன்னும் நிறுத்தல்.
கலக்கல் பாலாஜி.
ரசிக்கும் படியாக இல்லை , ஒருவரின் தனி மனித சுயசரிசத்தை இகழ்வது நகைச்சுவை ஆகாது , இது அஜித்தின் மேல் உள்ள உங்களின் வெறுப்பையே காட்டுகிறது
//அப்பாவி தமிழன் said...
ரசிக்கும் படியாக இல்லை , ஒருவரின் தனி மனித சுயசரிசத்தை இகழ்வது நகைச்சுவை ஆகாது , இது அஜித்தின் மேல் உள்ள உங்களின் வெறுப்பையே காட்டுகிறது
//
aamanga.. enakum Ajithkum superstar naarkaaliku sandai nadakuthu. antha verupula thaan ithellam ezhuthinen :)
BTW, intha Ajith padamellam paathutu vaanga. apparam ungaluku verupu varuma illaiyanu sollunga
Red
Raja
Anjenaya
Jana
ji
Thirupathi
Paramasivan
aalwar
Aegan
intha onbathu padamum avar kadaisiya nadicha 15 padathula iruku...
Personally I like Ajith but intha maathiri padu mokkai padathula nadicha kandipa koba padama iruka mudiyathu.
Also Kavundar's devil showna ippadi thaan irukum. yaara irunthalum kizhikapaduvargal.
ya dats wat i meant if u dint lke the movie den don watch it pls ...did he came and ask you to watch his films .and i aceept the flop list of films but the comment about the ajith and his carrer is totaaly unfair in ur post . i have mentioned that only , coz i felt its so resentfully and outragedto an individual person .u can comment about abt his films der is some limit friend .any way nothing personal its my opinion only don mind

Porul santhaiku vanthuduchina athai ellarum vimarsika thaane seivaanga (neenga intha postku comment poadara maathiri).
Kireedam padam attakasama irukunu naan vimarsanam ezhuthiruken. but paakave mudiyatha mokkai padathai continuousaa kodutha vera vazhi illai. ellathukum oru limit irukunu neenga solra maathiri thalai kevalamana padangala thodarnthu nadikarathukum oru limit vechi niruthinarna nalla irukum :)
BTW, avaroada personal life pathi ithula ethavathu iruntha sollunga. athai remove pannalam.
Moreover intha maathiri Devil showna ippadi thaan irukum. unga manasu kashtapadara maathiri iruntha, Devil show posts padikatheenga. Kavundar style appadi. Sorry I cant help it :(
நல்லாயிருந்தது பாலாஜி...
ஆனா பாவம் நீங்க.. இவ்வளவு மொக்க படத்தையும் பார்த்து இருக்கீங்க....நான் இதுல ஒன்று கூட பார்த்தது இல்ல...
//முட்யல. அவன் பேஸ்றா மாத்ரியே இருந்துச்சு//
ஆமா இந்த பதிவு நம்ம சகா வுக்கு திருமண பரிசா......
:))
//ஆஞ்சனெயர் என்னைக்குடா பொண்ணுங்க பின்னாடி பாவாடை, பஞ்சவர்ணம்னு பாட்டு பாடிட்டு போனாரு?//
அருமை, செம காமெடி சார் நீங்க
//பாபு said...
சான்ஸ்-ஏ இல்லீங்க ,வரிக்கு வரி சிரித்தேன்.
முதல்ல இந்த கவுண்டர் ஷோ மூலமாதான் ,உங்க பக்கம் நமக்கு ரொம்ப பிடிச்சது
//
மிக்க நன்றி பாபு. இனிமே அடிக்கடி கவுண்டர் வருவார் :)
//வித்யா said...
திரிம்ப திரும்ப படித்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.
12:00 AM//
மிக்க நன்றி வித்யா...
நாலு பேரை சிரிக்க வெக்கனும்னா எதுவுமே தப்பில்ல :)
//இராம்/Raam said...
LOL.... கலக்கல்'ப்பா.... :))
12:09 AM//
ராயலண்ணே,
மிக்க நன்றி :)
//ஆ! இதழ்கள் said...
அது என்னடா காட் ஃபாதர் படத்துல, கடைசியா அப்பா செத்து காட் ஆகிட்டாரு, காட் ஃபாதர்னு சொல்லி முடிச்சீங்க?//
இது வேறயா? எனக்கு இப்ப தான் தெரியும்.
நல்ல காமெடி.
//
நீங்க ரொம்ப புத்திசாலி போல. அஜித் படமே பாக்க மாட்டீங்களா? God Father இத்தனைக்கு ஹிட் படமாச்சே :)
// நான் ஆதவன் said...
கலக்கல் தல :)
12:40 AM//
மிக்க நன்றி நான் ஆதவன்...
இதுல ”தல”னு யாரை சொன்னீங்க?
//keerthi said...
/தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா ராசா. /
சிரிச்சு சிரிச்சு ஒரே வயித்து வலி தாங்க போங்க...........//
மிக்க நன்றி கீர்த்தி :)
//Thamizhmaangani said...
ஹாஹா....கவுண்டர் rocks!::)
//
Yes.. He always :)
// Karthik said...
//தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா
ROFL. :))//
மிக்க நன்றி கார்த்திக் :)
//கார்க்கி said...
முட்யல. அவன் பேஸ்றா மாத்ரியே இருந்துச்சு//
நன்றி கார்க்கி... இந்த பேஸ்ற மேட்டரை மிஸ் பண்ணிட்டேன் :(
// ஆசிப் மீரான் said...
விஜய் டெவில் ஷோ அளவுக்கு இல்லேன்னாலும் (அது க்ளஸ்டர் பாம்லாடே:-) இதுவும் தௌசண்ட் வாலாதான் வெட்டி. ரசிச்சு சிரிச்சேன்
இயல்பான நகைச்சுவை சிலருக்கு மட்டும்தான் வரும் - உங்க்ளுக்கு இயல்பே நகைச்சுவைதான் போல :-)
//
மிக்க நன்றி அண்ணாச்சி. விஜய் நமக்கு நிறைய ஸ்கோப் கொடுக்கறாரு. அஜித் அந்த அளவுக்கு சான்ஸ் கொடுக்கறது இல்லை. அதுவுமில்லாம அஜித்க்கு எழுதும் போது ஏதோ தடுக்குது :)
உங்க வாழ்த்தை படிக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனிமே அடிக்கடி டெவில் ஷோ வரும். நீங்க எல்லாம் அதுக்கு தானே வறீங்க :)
//Bhuvanesh said...
கலக்கீட்டீங்க தல !!//
மிக்க நன்றி புவனேஷ் :)
//MSV Muthu said...
Good job! Excellent one! LOL.//
மிக்க நன்றி முத்து... Back to Form போல :)
// Kamal said...
நல்லா இருந்தது!!!!!!!!!
ஆனா பாவங்க தல :((((( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
8:42 AM//
கமல்,
இந்த மாதிரி தல நமக்கும் பாவம் பார்க்கலாம் இல்லை :)
// Bleachingpowder said...
ஏய்ய்ய்...இந்த பதிவு ஒர் கர்ப்பு சரித்ரம். இனி நான் பேஸ் மாட்டேன், என் படம் தான் பேஸ்ஸும்...அது
9:29 AM//
ப்ளீச்சிங் பவுடர்,
வெயிட்டு... தீவிரமான அஜித் ஃபேனா இருப்பீங்க போல :)
//வடகரை வேலன் said...
//தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா ராசா//
மொத்தத்தையும் ரசிச்சுப் படிச்சேன். ஆனா இந்த வரியில சிரிக்க ஆரம்பிச்சவன் இன்னும் நிறுத்தல்.
கலக்கல் பாலாஜி.//
அண்ணாச்சி,
மிக்க நன்றி...
//Kathir said...
நல்லாயிருந்தது பாலாஜி...
ஆனா பாவம் நீங்க.. இவ்வளவு மொக்க படத்தையும் பார்த்து இருக்கீங்க....நான் இதுல ஒன்று கூட பார்த்தது இல்ல...
//
ஆஹா.. தப்பிச்சிட்டீங்களே :)
////முட்யல. அவன் பேஸ்றா மாத்ரியே இருந்துச்சு//
ஆமா இந்த பதிவு நம்ம சகா வுக்கு திருமண பரிசா......
:))//
இல்லை.. அவருக்கு டெவில் ஷோ விஜய் பார்ட் 3 :)
// Triumph said...
he he//
மிக்க நன்றி Triumph :)
//கிஷோர் said...
//ஆஞ்சனெயர் என்னைக்குடா பொண்ணுங்க பின்னாடி பாவாடை, பஞ்சவர்ணம்னு பாட்டு பாடிட்டு போனாரு?//
அருமை, செம காமெடி சார் நீங்க//
நன்றி கிஷோர் :)
I like ajith. He gave so many flop movies but still he is a min grantee hero; This article is for fun so its ok. No one can carry the scene of proposing in kreedom like ajith did right. Only for that you can watch the movie again and again. I personally dont like vjay. It is not that i dont like him because I like vijay. It is just I dont like him. I dont like many heroes. I have not watched any tamil movies for long time. For last 4 years, I have watched M.Kumaran, azhakiga theeye, mozhi, kreedom and abiyum naanum (disappointed with the last movie)
Goundamani slang sooper... gounder marupidium paartha effect...
g8 keep going
ஹா ஹா ஹா....
superb
Post a Comment