எங்க ஆபிஸ்ல திங்கள், புதன், வெள்ளி மூணு நாளும் ஹைதராபாத் தம் பிரியாணி போடுவாங்க (காசுக்குத் தான்). அதனால அந்த மூணு நாளும் அதை தவற விடாம இருந்தேன். இங்க வந்ததுக்கப்பறம் அதை சுத்தமா மிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.
நம்ம ஸ்டைல் பிரியாணி சூப்பரா இல்லைனாலும் சுமாரா செய்வேன். ஆனா அதுல ஒரு திருப்தி இல்லை. அப்ப தான் யூ ட்யூப்ல தேடும் போது இந்த வீடியோவை பார்த்தேன். அப்ப வீட்டம்மா இங்க தான் இருந்தாங்க. சரி, ட்ரை பண்ணி பார்க்கலாம்னு முயற்சி செஞ்சாங்க (அவுங்க நம்மல விட நல்லா சமைப்பாங்க. இருந்தாலும் அதை நான் ஒத்துக்க மாட்டேன் ;) ).
அந்த வீடீயோவை அப்படியே ஃபாலோ பண்ணாங்க. சூப்பரா வந்திருந்தது. அதுக்கு அடுத்து அவுங்க ஊருக்கு போனதுக்கப்பறம் நாங்க முயற்சி செஞ்சி பார்த்தோம். கேவலமா வந்திருக்கும்னு நினைக்கறீங்களா? அது தான் இல்லை. அதுவும் சூப்பரா வந்திருந்தது. ஏன்னா அது அவ்வளவு சுலபம். ஆனா உங்களுக்கு தேவைப் பொறுமை. அப்ப சிக்கன் வேணாமானு யாராவது கேட்டுடாதீங்கப்பூ.
இதை பார்த்து அப்படியே செஞ்சு பாருங்க. நிச்சயம் நல்லா வரும்.
முடிஞ்சா இந்த வார இறுதில செஞ்சி பார்த்து சொல்லுங்க.