ரொம்ப நாளாக அரசல் புரசலாக கேள்வி பட்ட விஷயம் தான். எந்த அளவிற்கு உண்மை என தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட அந்த எண்ணம் இன்று உச்சத்திற்கு சென்றதால் அதைப் பற்றி விசாரிக்கலாம் என முடிவு செய்து கிளம்பிவிட்டேன். மதன் தான் இதற்கெல்லாம் சரியான ஆள். அரசாங்க உத்தியோகத்தில், உயர்ந்த பணியில் இருக்கும் என் ஒரே நண்பன்.
சரியாக பதினெட்டு மணிக்கு அவன் அலுவலக கட்டிடத்திற்கு வந்துவிட்டேன். சோதனை செய்யும் ஸ்கானர் அருகே கண்ணை பொருத்திய இரண்டு நொடிகளுக்குள் அருகிலிருக்கும் லிப்ட் தானாக திறந்தது. உள்ளே நுழைந்தவுடன் கதவு மூடி சரியாக அவன் அறைக்கு முன் கதவு திறந்தது. நான் வெளியே வந்ததும் கதவு மூடி அந்த இடத்தில் ஒரு லிஃப்ட் வந்தததற்கோ கதவு திறந்ததற்கோ அறிகுறி இல்லாமல் மறைந்தது.
"டேய் ரகு. வாடா. உனக்காக தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" மேசை மீது இரண்டு பாட்டில் விஸ் இருந்தன.
"எப்படிடா இருக்க?"
"பார்த்தா எப்படி தெரியுது?"
"பாட்டில் எல்லாம் பார்த்தா அப்படியே தான் இருக்கற மாதிரி தெரியுது. ஆனா தொப்பை மட்டும் தான் கொஞ்சம் பெருசா இருக்கு"
என் பேச்சைக் கேட்டு சத்தமாக சிரித்தான். அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவியிலிருப்பவர்களுக்கு மட்டும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு கிடையாது என கேள்விப்பட்டது அவனைப் பார்த்ததும் உறுதியாகிவிட்டது.
"நீ இன்னும் அப்படியே இருக்க"
எனக்கு ஒரு கிளாஸ் கொடுத்துவிட்டு அவனும் ஆரம்பித்தான். மூன்று ரவுண்ட் முடியும் வரை பழைய கதைகளைப் பேசி கொண்டிருந்தோம். ஒரு வழியாக நான் வந்த விஷயத்தை பற்றி கேட்டான்.
"சொல்லுடா ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்ன?"
"பிராஜக்ட் EQH உண்மையாவே இருக்கா?"
"இருக்கு" அவன் முகத்தில் புன்னகை தோன்றி மறைந்தது.
"வெளில மக்கள் பேசிக்கிற அளவுக்கு இருக்கா?"
"வெளில மக்கள் என்ன பேசிக்கறாங்க?"
"நமக்கு யார் மேலயாவது கோபமோ, வெறுப்போ இருந்தா அதை இந்த ஹியுமனாய்ட்ஸ் மூலமா தீர்த்துக்கலாம்னு"
"இதெல்லாம் பழைய கதை. இப்ப எங்கயோ போயாச்சு"
"அதுல எதுவும் பிரச்சனையில்லைனா எனக்கு அதை பத்தி முழுசா சொல்லேன்"
"EQH இந்த நூற்றாண்டின் அற்புதமான கண்டுபிடிப்புனு நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். எந்த அளவுக்கு உண்மைனு தெரியல. இருந்தாலும் சொல்றேன் கேளு"
"ம்ம்"
"பெரும்பாலும் கொலைகள் கோபத்தாலும், வெறுப்பினாலும் தான் நடக்குது. அந்த மாதிரி இறந்தவங்களோட பிணத்தை பார்த்ததும், அவுங்களை கொல்லனும்னு நினைச்சவங்களுக்கு இறந்தவங்க மேல இருக்குற கோபம் மறைஞ்சி அனுதாபம் ஏற்படுது. ஆனா அதுக்கப்பறம் இறந்தவன் உயிரோட வர முடியுமா? "
"முடியாது"
"கரெக்ட். அதுக்கு கண்டுபிடிச்சது தான் இந்த பிராஜக்ட். Emotion Quenching Humanoids. இப்ப ஒரு காலேஜ் பொண்ணுக்கு அவ பாய் ஃபிரெண்டு மேல கோபம்னு வை. அந்த பையனை மாதிரியே அச்சு அசலா ஹியுமனாய்ட்ஸ் செஞ்சி அந்த பொண்ணுக்கு கொடுத்துடுவோம். அதை அவள் கோபம் தீர வரைக்கும் அடிச்சி உதைச்சி கொலையே செஞ்சி போடலாம். அப்படி அவன் செத்ததை பார்த்ததுக்கப்பறம் அவளுக்கு அவன் மேல இரக்கம் வந்துடுது. மறுபடியும் பழைய காதல். அவ்வளவு தான். ஒரு உயிரையும், காதலையும் காப்பாத்தியாச்சு"
"ஹியுமனாய்டை அடிக்கறதுக்கு அந்த பையனை நிஜமாலுமே அடிக்கறதுக்கும் வித்தியாசமிருக்குமில்லையா? அப்பறம் எப்படி அந்த பொண்ணுக்கு திருப்தி ஏற்படும்"
"எல்லாம் சைன்ஸ் நண்பா. ஹியுமனாய்ட், அச்சு அசலா அவ பாய் ஃபிரண்ட் மாதிரியே இருக்கும். சிலிக்கான் தோல். அடிச்சா வர ரத்தம் கூட நிஜ ரத்தம் மாதிரியே இருக்கும். டெஸ்ட் பண்ணா தான் கண்டுபிடிக்க முடியும். குரல் கூட அவன் குரலே தான். எல்லாருடைய தகவலும் அரசாங்கத்துக்கிட்ட இருக்கும் போது இதெல்லாம் சாதாரணம்."
"ம்ம்"
"இப்ப இதையெல்லாம் தாண்டி எங்கயோ போயாச்சு. பிடிச்ச பொண்ணு சொன்னா கூட செய்து கொடுப்பாங்க. எல்லாம் துட்டு தான். ஆனா இந்த மாதிரி வாங்கறவங்களை எல்லாம் அரசாங்கம் தீவிரமா கண்காணிப்பாங்க. எங்கே நிஜத்திலயும் செஞ்சிடுவாங்களோனு"
"அப்பறம் எதுக்கு செய்து கொடுக்கனும்"
"மக்களை திருப்திப்படுத்தனும்னு தான். அதுவும் நம்ம கேக்கற மாதிரி ப்ரோக்ராம் பண்ணி கொடுப்பாங்க. செக்ஸ்காக தயாரிச்சி கொடுக்கறதுல தான் வெரைட்டி ரொம்ப அதிகம். உன்னை விரும்பி வந்து உன் கூட படுக்கற மாதிரியும் பண்ணலாம், உன்னை பிடிக்காம லேசா திமிர மாதிரியும் நீ வலுக்கட்டாயமா மடக்கி சம்மதிக்க வைக்கற மாதிரியும் பண்ணலாம். போன வாரம் என் கீழ வேலை செய்யற ஒருத்தன் ஒரு பொண்ணை சொல்லி நான் அவளை ரேப் பண்ணனும். அதுக்கு ஏத்த மாதிரி ப்ரோக்ராம் பண்ணி கொடுனு சொல்லிருக்கான்"
"அப்பறம்"
"அது லேசா திமிரும்னு நினைச்சிருக்கான். கொஞ்சம் எடக்கு முடக்கானதுல அவனோட முன் பல்லு ஒண்ணு காலி"
"இவ்வளவு கஸ்டமைஸ்டா பண்ணி தருவாங்களா?"
"தருவாங்க. ஆனா அதுக்கு ஏத்த மாதிரி செலவாகும். அடுத்து அதுக்கு ஏத்த மாதிரி அரசாங்கம் உனக்கு தெரியாம உன்னை தீவிரமா கண்காணிக்கும்"
"வேற ஏதாவது பிரச்சனை?"
"வேற எதுவுமில்லை. ஏன் இவ்வளவு தீவிரமா விசாரிக்கற?"
சொல்லலாமா?
"ஒண்ணுமில்லை. என் கூட வேலை செய்யறவன் ஒருத்தன் சொன்னான், எனக்கு அந்த அளவுக்கு நம்பிக்கையில்லைனு சொல்லிட்டேன்"
"இது ஓரளவுக்கு பிரச்சனையில்லாதது தான். கவர்மெண்ட் சைட்லயே போட்டிருக்கான் இல்ல. ஆனா விலை அதிகம். இந்த மாதிரி கண்காணிப்பாங்கனு வெளிய தெரியாது. அவ்வளவு தான்"
"ஹிம்ம்ம்ம்"
வீட்டிற்கு வரும் வழியெல்லாம் அதே சிந்தனை மனதில் ஓடிக்கொண்டிருந்தது. செல்வி மேல் இவ்வளவு கோபம் வருமென்று கனவிலும் நினைத்து பார்த்ததில்லை. அவள் எனக்கு ஏதோ ஒரு வகையில் துரோகம் செய்கிறாள் என்று மனதில் பதிந்து விட்டது. அதற்கு காரணம் அவள் சென்ற வாரம் இரண்டு நாள் அலுவலகத்திற்கு செல்லாமல், சென்றேன் என்று பொய் சொன்னது தான் காரணமா இல்லை எனக்கு தெரியாது என்று நினைத்து கொண்டு அவள் இரவு நேரங்களில் பக்கத்து அறையில் செய்யும் அரட்டை தான் காரணமா என்று தெரியவில்லை. ஏதோ ஒரு காரணம். ஆனால் அவள் எனக்கு துரோகம் செய்வதாக என் மனதில் பதிந்து விட்டது. அதை நீக்க வேண்டும். அதுவும் நான் கொடுக்கும் தண்டனையை அவள் ஏற்ற பிறகு. என் காலில் விழுந்து கேட்கும் மன்னிப்பிற்கு பிறகு.
இதை என் செல்வி நிச்சயம் செய்ய மாட்டாள். நான் கொடுக்கும் தண்டனைக்கு பிறகு செல்வி என்ன, எந்த மனிதனாலும் மன்னிப்பு கேட்க முடியாது. அதனால் தான் ஹியுமனாய்டை தேர்வு செய்தேன்.
ஒரு வழியாக அரசாங்கத்திற்கு மனு போட்டு அதை அரசாங்கம் ஏற்று கொண்டுவிட்டது. மகிழ்ச்சி. இவ்வளவு தெளிவாக கேட்பார்கள் என்று நினைக்கவில்லை. சரியாக பதினைந்து மணிக்கு வீட்டிற்குள் வர வேண்டும். பயத்துடன் என் அருகில் வந்து, நின்று என் தலையை கோத வேண்டும். பிறகு நான் எனக்கு இப்படி துரோகம் செஞ்சிட்டியேனு அவளை மூன்று முறை கத்தியால் குத்துவேன். பிறகு என் காலில் விழுந்து, "நான் எந்த தப்பும் செய்யல, என்னை மன்னிச்சிடுங்க"னு சொல்லி சாக வேண்டும். அவ்வளவு தான். எவ்வளவு சுலபமான விஷயம் இல்லையா?
என்னை மாதிரி இவ்வளவு சுலபமான ப்ரோக்ராமிங் வேலை கொடுத்தவன் இந்த நூற்றாண்டில் எவனும் இருக்க மாட்டான். ஆனால் விலை தான் என் மூன்று மாத சேமிப்பை விழுங்கிவிட்டது. பரவாயில்லை.
இன்று அலுவலகத்தில் சொல்லி பதினான்கு மணிக்கே கிளம்பிவிட்டேன். நிஜ செல்வி எப்படியும் இருபத்தியொரு மணிக்கு குறைவாக வர மாட்டாள். அதற்குள் நான் ஒப்பாரியையே முடித்துவிடலாம். சரியாக பதினான்கு நாற்பத்தி ஐந்திற்கு டைனிங் டேபிள் அருகே கையில் கத்தியுடன் அமர்ந்துவிட்டேன்.
உள்ளே ஒரு பயம் தொற்றி கொண்டுவிட்டது. அரசாங்க அனுமதியுடன் கொல்வாதாக இருந்தாலும் எனக்கு முதல் கொலையல்லவா? அதுவும் செல்வியை போலவே இருக்கும் ஹியுமனாய்டு. அவர்கள் கொடுத்த எண்ணை அழைத்து வேண்டாம் என்று சொல்லிவிடலாமா? இல்லை. இதை செய்தாக வேண்டும். என் செல்விக்காகவாவது செய்தாக வேண்டும். அப்பொழுது தான் நான் அவளுடன் கவலையின்றி குடும்பம் நடத்த முடியும்.
சரியாக பதினைந்து மணி. கதவு திறந்தது. செல்வி பயம் நிறைந்த கண்களோடு என் அருகில் வந்தாள். அறைக்குள்ளிருக்கும் அத்தனை ஆக்சிஜனையும் என் நுறையிரலுக்குள் பாய்ச்சினேன்.
"எனக்கு துரோகம் பண்ணிட்டியே செல்வி" அவள் மேல் பாய்ந்து என் கையிலிருக்கும் கத்தியால் அவளை கோபம் தீரும் வரையில் குத்தினேன். என் கை முழுக்க சிவப்பு நிறமாயிருந்தது.
ரத்தம் வெளியேற வெளியேற சோகை படர கீழே விழுந்தாள் செல்வி. "என்னை மன்னிச்சுடுங்க.. என்னை விட்டுடுங்க". தத்ரூபமான நிரல்.. அருமை.
அழைப்பு மணி அடித்தது
53 comments:
This story was written for Sujatha Sci Fi competition...
Poatila oothikitathala namma bloguku vanthuduchi :)
Padichi karuthu sollitu poanga :)
//Emotion Quenching Humanoids.//
பதம் புதிதாக இருக்கிறதே
// புருனோ Bruno said...
//Emotion Quenching Humanoids.//
பதம் புதிதாக இருக்கிறதே
//
Dr, Still awake?
Athu naanum en roomieyum yosichi uruvaakana term :)
ரொம்ப நல்லா இருக்கு பாலாஜி. சூப்பர் கான்செப்ட். முடிவும் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு.
மகாபாரதத்துல பீமன இப்படி தான் திருதுராஷ்ட்ரன் கொல்லுவான்.
நல்ல முயற்சி....
வெட்டிப்பயல் மாதிரி ஒரு ஹ்யூமனாய்ட் உடனே ஆர்டர் பண்ணுங்க.. ஆசை தீர 4 சாத்து சாத்தணும்.. இந்தமாதிரி கதையெல்லாம் "அருமையா" எழுதறதுக்கு..
சீமாச்சு..
//மணிகண்டன் said...
ரொம்ப நல்லா இருக்கு பாலாஜி. சூப்பர் கான்செப்ட். முடிவும் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு.
//
மிக்க நன்றி மணிகண்டன்.
//
மகாபாரதத்துல பீமன இப்படி தான் திருதுராஷ்ட்ரன் கொல்லுவான்.
//
இல்லை இல்லை. பீமனை திருதுராஷ்டிரன் கொல்ல முயலும் போது கண்ணனின் முன் யோசனையால் பீமன் இப்படி தான் தப்பிப்பான் :)
ஆனா அது வெறும் இரும்பு சிலை. இது மனிதனை போல இயங்கும் பொம்மை :)
// Kalki said...
நல்ல முயற்சி....//
மிக்க நன்றி கல்கி :)
//Seemachu said...
வெட்டிப்பயல் மாதிரி ஒரு ஹ்யூமனாய்ட் உடனே ஆர்டர் பண்ணுங்க.. ஆசை தீர 4 சாத்து சாத்தணும்.. இந்தமாதிரி கதையெல்லாம் "அருமையா" எழுதறதுக்கு..
சீமாச்சு..//
ஆஹா சீமாச்சு அண்ணா... அப்படி சாத்தனும்னா நீங்க பாஸ்டனுக்கே வரலாம் :)
மிக வித்தியாசமான அருமையான முயற்சி. சூப்பர் :)
ஆஹா... என்னங்க இப்படி வித்தியாசமான கதையலாம் எழுதி அசத்துறீங்க!
நல்லா இருந்துச்சு. ரசித்து படித்தேன்.:)
முடிவை முன்னமே யூகிக்க முடிந்தது, ஆனாலும் நன்றாகவே இருக்கு கான்செப்ட்
இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்திருக்கிறேன். நல்ல நடையில் தெளிவாக எழுதுறீங்க. இனும இங்க அடிக்கடி வரணும்.
//ஸ்ரீதர்கண்ணன் said...
மிக வித்தியாசமான அருமையான முயற்சி. சூப்பர் :)//
மிக்க நன்றி ஸ்ரீதர்கண்ணன் :)
//Thamizhmaangani said...
ஆஹா... என்னங்க இப்படி வித்தியாசமான கதையலாம் எழுதி அசத்துறீங்க!
நல்லா இருந்துச்சு. ரசித்து படித்தேன்.:)
//
மிக்க நன்றி தமிழ்மாங்கனி... எல்லாம் வாத்தியார் கதைகளை படிச்ச எஃபக்ட் தான் :)
//பாபு said...
முடிவை முன்னமே யூகிக்க முடிந்தது, ஆனாலும் நன்றாகவே இருக்கு கான்செப்ட்//
மிக்க நன்றி பாபு... அடுத்த கதையில் முடிவை வித்தியாசமாக வைக்க முயற்சி செய்கிறேன்...
//மாதவராஜ் said...
இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்திருக்கிறேன். நல்ல நடையில் தெளிவாக எழுதுறீங்க. இனும இங்க அடிக்கடி வரணும்.
10:48 PM//
வாங்க தலைவா... முதல் முறையா வந்திருக்கீங்க. நன்றி.
தொடர்ந்து வந்து கருத்துக்களை சொல்லவும். நான் இப்ப தான் எழுத பழகிக்கறேன். உங்களை மாதிரி அனுபவஸ்தர்கள் அறிவுரைகள் நிச்சயம் தேவை.
ஒரு வித புது பாணியில் (புரியும்படி) அருமையாக இருக்கிறது கதை.
பாதிக் கதைலயே ஊகிக்க முடிந்தது கிளைமாக்ஸ் என்னன்னு!
சீக்கிரம் வீட்டுக்குப் போவான்! அன்னிக்கு செல்வியும் வழக்கத்துக்கு மாறா சீக்கிரம் வருவா!
நிஜமான செல்வியைக் கொன்ன பிறகுதான் பொம்மை வரும்னு!
ஆனா நல்ல முயற்சி!
//
வெயிலான் said...
ஒரு வித புது பாணியில் (புரியும்படி) அருமையாக இருக்கிறது கதை.
1:19 AM//
மிக்க நன்றி வெயிலான்... புரியாத மாதிரி எழுத எனக்கு தெரியாது :)
//நாமக்கல் சிபி said...
பாதிக் கதைலயே ஊகிக்க முடிந்தது கிளைமாக்ஸ் என்னன்னு!
சீக்கிரம் வீட்டுக்குப் போவான்! அன்னிக்கு செல்வியும் வழக்கத்துக்கு மாறா சீக்கிரம் வருவா!
நிஜமான செல்வியைக் கொன்ன பிறகுதான் பொம்மை வரும்னு!
ஆனா நல்ல முயற்சி!//
ஹா ஹா ஹா...
அப்படியா இருக்குது க்ளைமாக்ஸ்...
நான் கூட அவன் அழ முடியாம வேற யாரோ வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டாங்க. அவன் காசு எல்லாம் வேஸ்டா போச்சுனு நினைச்சேன்...
BTW, இது நீங்க எப்படி வேணா கெஸ் பண்ணலாம். முடிவு உங்க கைல.
உங்களோட வழக்கமான கதைகளிலிருந்து மாறுபட்டு, முற்றிலும் வேறு ஸ்டைலில் இருக்கு.. பாதி கதையிலேயே முடிவு தெரிஞ்சாலும், கதை நல்லா இருக்கு. :-)
நான்கூட நாமக்கல் சிபி மாதிரி தான் முடிவு செய்து கொண்டேன்
நம்ம மண்டைலதான் ஏறலையா?
அப்ப முன்னால சொன்ன கமெண்ட் வாபஸ் வாங்கிக்கிறேன்
good science fiction story.
like the EQH readers can decide the end as they like :-)
கதை நல்லா இருந்துதுங்க வெட்டி!!!
Wow, Superb story..!
I never liked Sci-Fi's. May be its time to read some.
I really liked your story.
:)
கடைசியில் அவன் கொன்றது அவனது மனைவியா?
எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க?
ரூம் போட்டு யோசிக்கிறீங்களோ? :))
நானும் நாமக்கல் சிபி சார் சொன்ன மாதிரி நிஜ செல்விய தான் கொலை பண்ணிட்டார்னு நினைச்சேன். அந்த சிச்சுவேஷனுக்கு முன்னாடி இருக்கிற பில்டப் அப்படி தான் நினைக்க தோணுது. அநேகமா படிச்சவங்க எல்லாருமே இப்படிதான் நினைச்சிருப்பாங்க.
எப்படி வேண்டுமானாலும் முடிவை யோசிக்கலாம்..சூப்பர்
***
ஆனா அது வெறும் இரும்பு சிலை. இது மனிதனை போல இயங்கும் பொம்மை
****
ஆமாம். :)- குருடனுக்கு இரும்பு சிலையும் இதுவும் ஒண்ணு தான ! உண்மையான பீமன் வேற "வலிக்குது, வலிக்குதுனு" டப்பிங் கொடுத்தானாம். (நம்ப அண்ணாச்சி உண்மைதமிழன் நண்பர் சொன்னாராம் அவர்கிட்ட. !!! )
கலக்கல் தலைவா...
முடிவுலதான் இருக்கு மாட்டரே...!
நல்ல கதை; நல்ல கற்பனை.
// நிலாக்காலம் said...
உங்களோட வழக்கமான கதைகளிலிருந்து மாறுபட்டு, முற்றிலும் வேறு ஸ்டைலில் இருக்கு.. பாதி கதையிலேயே முடிவு தெரிஞ்சாலும், கதை நல்லா இருக்கு. :-)//
நிலாக்காலம்,
மிக்க நன்றி.
பாதி கதைல உங்களுக்கு என்ன முடிவு தெரிஞ்சிது? இப்படி தெளிவில்லாம வாசகர்களு ஊகத்திற்கு விட்டுவிடுவேனு தோனுச்சா என்ன?
// பாபு said...
நான்கூட நாமக்கல் சிபி மாதிரி தான் முடிவு செய்து கொண்டேன்
நம்ம மண்டைலதான் ஏறலையா?
அப்ப முன்னால சொன்ன கமெண்ட் வாபஸ் வாங்கிக்கிறேன்
//
பாபு,
இந்த மாதிரி நிறைய கதைகளை தலைவர் எழுதியிருக்கார். அவர் விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பை படிச்சிருந்தா நிச்சயம் இந்த மாதிரி முடிவை எதிர்பார்த்திருக்கலாம் :)
//வாழவந்தான் said...
good science fiction story.
like the EQH readers can decide the end as they like :-)
3:12 AM//
வாழவந்தான்,
You are absolutely right :)
Thx for the comment.
//
ச்சின்னப் பையன் said...
கதை நல்லா இருந்துதுங்க வெட்டி!!!
7:04 AM//
மிக்க நன்றி ச்சி.பை :)
// Karthik said...
Wow, Superb story..!
I never liked Sci-Fi's. May be its time to read some.
I really liked your story.
:)//
கார்த்திக்,
ரொம்ப சந்தோஷம்...
வாத்தியாரோட விஞ்ஞான சிறுகதைகள் தோகுப்பு ஒன்று வந்திருக்கிறது. அதை வாங்கி படிக்கவும். அட்டகாசமா இருக்கும் :)
//Partha&Parames said...
கடைசியில் அவன் கொன்றது அவனது மனைவியா?
எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க?
ரூம் போட்டு யோசிக்கிறீங்களோ? :))
//
கடைசியா அவன் யாரை கொல்கிறான் என்பது வாசகர்களின் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன் நண்பரே!
யார் செத்திருப்பாங்கனு நீங்க நினைக்கறீங்களே அவுங்க தான் செத்தாங்க :)
//உள்ளத்தில் இருந்து.. said...
நானும் நாமக்கல் சிபி சார் சொன்ன மாதிரி நிஜ செல்விய தான் கொலை பண்ணிட்டார்னு நினைச்சேன். அந்த சிச்சுவேஷனுக்கு முன்னாடி இருக்கிற பில்டப் அப்படி தான் நினைக்க தோணுது. அநேகமா படிச்சவங்க எல்லாருமே இப்படிதான் நினைச்சிருப்பாங்க.//
இந்த மாதிரி நிறைய கதைகளை வாத்தியார் எழுதியிருக்காருங்க. நீங்க எப்படி வேணா எடுத்துக்கலாம்.
Humanoid செத்ததற்கு பிறகு நிஜ செல்வி கூட வந்து அதை பார்த்திருக்கலாம். அவளுக்கு அதை பார்த்தால் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள்.
இந்த மாதிரி நிறைய வாய்ப்பிருக்கு. அவன் நண்பன் கூட வந்திருக்கலாம். இதுக்கு தான் என்கிட்ட வந்து இப்படி விசாரிச்சியானு அவன் கேட்டு இவர் வழிந்திருக்கலாம். இப்படி நிறைய.
//வினையூக்கி said...
எப்படி வேண்டுமானாலும் முடிவை யோசிக்கலாம்..சூப்பர்//
வாங்க சிறுகதை செல்வரே!
வாழ்த்திற்கு மிக்க நன்றி :)
// மணிகண்டன் said...
***
ஆனா அது வெறும் இரும்பு சிலை. இது மனிதனை போல இயங்கும் பொம்மை
****
ஆமாம். :)- குருடனுக்கு இரும்பு சிலையும் இதுவும் ஒண்ணு தான ! உண்மையான பீமன் வேற "வலிக்குது, வலிக்குதுனு" டப்பிங் கொடுத்தானாம். (நம்ப அண்ணாச்சி உண்மைதமிழன் நண்பர் சொன்னாராம் அவர்கிட்ட. !!! )//
ஹ்ம்ம்ம்ம்... இருக்கலாம். ஆனா அதை பார்த்து பீமன் அதிர்ச்சி அடைந்திருப்பான் என்று தான் நினைத்தேன். சரியாக ஞாபகமில்லை :)
//தமிழன்-கறுப்பி... said...
கலக்கல் தலைவா...
முடிவுலதான் இருக்கு மாட்டரே...!//
மிக்க நன்றி த.க :)
//கவிநயா said...
நல்ல கதை; நல்ல கற்பனை.//
மிக்க நன்றி கவிநயா :)
நல்லாருக்கு கத - சஸ்பென்ஸ் - திரில்லர் - ச.பி ( Sci-Fi)- முடிவு சாதாரணமா எல்லோரும் நினைக்கிறது - நிஜ செல்வி இறப்பதும் - அப்புறம் அந்த அது வரதும்தான்.......
நல்வாழ்த்துகள் வெட்டி
//நிலாக்காலம்,
மிக்க நன்றி.
பாதி கதைல உங்களுக்கு என்ன முடிவு தெரிஞ்சிது? இப்படி தெளிவில்லாம வாசகர்களு ஊகத்திற்கு விட்டுவிடுவேனு தோனுச்சா என்ன?//
ஆமாங்க..
*உலகத்தின் கடைசி மனிதன் தனியாக அமர்ந்திருந்தபோது அறைக் கதவு தட்டப்பட்டது,
*'இதுவே பிரபஞ்சத்தின் எல்லை' என்று எழுதப்பட்டிருந்தது, தலைகீழாக! இது போல ஒரு முடிவு இருக்கும் என்று நினைத்தேன்.. :-)
juper!
may be it lost, because of your title?
//cheena (சீனா) said...
நல்லாருக்கு கத - சஸ்பென்ஸ் - திரில்லர் - ச.பி ( Sci-Fi)- முடிவு சாதாரணமா எல்லோரும் நினைக்கிறது - நிஜ செல்வி இறப்பதும் - அப்புறம் அந்த அது வரதும்தான்.......
நல்வாழ்த்துகள் வெட்டி//
மிக்க நன்றி சீனா சார்...
//நிலாக்காலம் said...
//நிலாக்காலம்,
மிக்க நன்றி.
பாதி கதைல உங்களுக்கு என்ன முடிவு தெரிஞ்சிது? இப்படி தெளிவில்லாம வாசகர்களு ஊகத்திற்கு விட்டுவிடுவேனு தோனுச்சா என்ன?//
ஆமாங்க..
*உலகத்தின் கடைசி மனிதன் தனியாக அமர்ந்திருந்தபோது அறைக் கதவு தட்டப்பட்டது,
*'இதுவே பிரபஞ்சத்தின் எல்லை' என்று எழுதப்பட்டிருந்தது, தலைகீழாக! இது போல ஒரு முடிவு இருக்கும் என்று நினைத்தேன்.. :-)
8:33 AM//
அப்ப ஓகே :)
// SurveySan said...
juper!
may be it lost, because of your title?//
வெட்டிப்பயல் டேக் போதாதா? :)
Hi,
Its good and with a different theme
Regards,
Praharika
இந்த கதை படிக்க மிஸ் பண்ணிட்டேன்.........இப்பதான் படிச்சேன், சிம்ப்ளி சூப்பர்ப் அண்ணா:)))
நல்லதொரு முயற்சி:))
கலக்கிருக்கிறீங்க!
excellent
இவ்ளோ நாள் கழிச்சு படிக்கிறேன்..
சூப்பரா இருக்கு தலைவா!
Post a Comment