தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, February 11, 2009

பொய் சொன்னால்... நேசிப்பாயா? - 3

"கண்டிப்பா முடியாதுனு சொல்லிட்டாங்களா?”

“ஆமாம். எந்த வீட்ல தான் ஒத்துப்பாங்க? நீ லவ் பண்றியானு கேட்டாங்க. நான் இல்லைனு சொன்னேன். அப்ப அந்த பையன்ட சொல்லிடுனு சொல்லிட்டாங்க”

“ஏன் தீபா, உனக்கு என்னை பிடிக்கலையா?”

“பிடிக்குதுங்கறது வேற காதலிக்கறதுங்கறது வேற. உன்னை எனக்கு பிடிக்கும் எங்க வீட்ல உன்னை பார்த்திருந்தாங்கனா நிச்சயம் கல்யாணத்துக்கு நான் ஒத்துக்குவேன். ஆனா உனக்காக எங்க வீட்ல சண்டையெல்லாம் போட எனக்கு விருப்பமில்லை”

“அப்ப உங்க வீட்ல நான் பேசட்டுமா?”

“அதெல்லாம் தேவையில்லை. அது இன்னும் பிரச்சனை தான் ஆகும்”

“எங்க வீட்ல சொல்லி உங்க வீட்ல பேச சொல்லவா?”

“உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிடுச்சா? இப்ப எல்லார்கிட்டயும் சொல்லி பெரிய பிரச்சனையாக்க போற. தயவு செஞ்சி அதெல்லாம் பண்ணிடாத. அப்பறம் எங்க வீட்ல என்னை தப்பா நினைப்பாங்க”

“நீ தானே உங்க வீட்ல சொன்னா சந்தோஷமா ஒத்துக்குவேனு சொன்ன?”

“நான் சந்தோஷமா எல்லாம் ஒத்துக்குவேனு சொல்லலை. சோகமா ஒத்துக்க மாட்டேனு சொன்னேன். உனக்கு உலகத்துல ரெண்டே கலர் தானா? வெள்ளை இல்லை கருப்பு. ஒண்ணு கருப்பா இல்லைனா வெள்ளையா இருக்குனு அர்த்தமா?”

””

“இப்ப ஏன் இப்படி அசிங்கமா அழுவுற. முதல்ல இங்க இருந்து எழுந்திரி. நான் சொல்றேன் இல்லை எழுந்திரி”

“டேய் நண்பா எழுந்திரிடா. நேத்து என்ன நடந்துச்சு? மச்சான், எழுந்திரிடா”

ஆ. இவ்வளவும் கனவா! நல்ல வேளை கனவா போச்சு.

“எழுந்திரிடா. நேத்து ராத்திரி நான் வரதுக்குள்ள நீ தூங்கிட்ட. எனக்கும் வேலை பிஸில மறந்தே போச்சு. இப்பவும் சீக்கிரம் கிளம்பனும். அதான், சீக்கிரம் சொல்லு”

“நேத்து அவ வரலைடா. ஃபோன் பண்ணலாமானு பார்த்தேன். எதுக்கு வீணா பிரச்சனைனு பண்ணலை. இன்னைக்கு வரலைனா ஃபோன் பண்ணி கேக்கணும்”

”ச்ச. இப்படி ஆகிடுச்சே. சரி பாஸிட்டிவா இருந்தா உடனே எனக்கு பண்ணு. சரியா. நான் கிளம்பறேன்.”

“சரிடா மச்சான். தேங்க்ஸ் ஃபார் வேக்கிங் மி அப்”

“எதோ மோசமா கனவு கண்டிருக்க போல. இனிமே படுக்காத. அப்படியே எழுந்திரிச்சி கிளம்பு”

”ஓகேடா”

“ஆல் தி பெஸ்ட் மச்சான்”

“தேங்க் யூ”

..............

”என்னடா, இவ்வளவு லேட்டு? நீ சீக்கிரம் வந்துடுவனு நான் சீக்கிரம் வந்துட்டேன். ஃபோன் பண்ணாலும் எடுக்கல. என்னடா ஆச்சு?”

“சாரிடா. கொஞ்சம் லேட்டாகிடுச்சி”

“டேய், இது என்ன காலேஜ்க்கு லேட்டா வந்தா, ஏன் லேட்டுனு லெக்சரர் கேட்டா, சாரி சார் லேட்டாகிடுச்சினு சொல்ற மாதிரி இருக்கு. பத்து மணிக்கு நீ வந்தா அது லேட்டு தான். என்ன நடந்துச்சுனு சொல்லி தொலை. டென்ஷன் தாங்கல”

“இரு சொல்றேன். காலைல எட்டு மணிக்கு ஆபிஸ் போயிட்டேன்”

“இப்ப அந்த கருமத்தை எல்லாம் எவன் கேட்டான். அவ ஓகே சொன்னாலா இல்லையானு சொல்லி தொலைடா”

“இருடா. சொல்றேன். காலைல அவ ஒன்பது மணிக்கு தான் வந்தா. எதுவும் பேசாம அவ சீட்டுக்கு போயிட்டா”

“ம்ம்ம்”

“மதியம், நாங்க நாலு பேர் லஞ்ச்க்கு போகும் போதும் எதுவும் அதை பத்தி பேசலை. நல்லா சிரிச்சி பேசிட்டு தான் வந்தா. ஆனா எதுவுமே தெரியாத மாதிரி”

“எல்லா பொண்ணுங்களும் இப்படி தான். சரி நீ மேட்டருக்கு வா”

“மதியம் மூணு மணிக்கா பிங் பண்ணி, மூன்ரைக்கா காபி குடிக்க போகலாம்னு சொன்னா”

“ம்”

“நான் சரியா மூணு இருபதுக்கு எல்லாம் புறப்பட்டு போயிட்டேன். அவளுக்காக காத்துட்டு இருந்தேன்”

“வந்தாளா வரலையா?”

“சரியா மூன்ரைக்கு வந்துட்டா. வந்து நேரா காபி வாங்க போயிட்டா. நானும் சரினு போய் அங்க காபி வாங்கினேன். அவ அவளுக்கு மட்டும் தான் வாங்கினா. எனக்கு நான் தான் தனியா வாங்கினேன்”

“ரொம்ப முக்கியம். கதையை சொல்லுடா”

“ரெண்டு பேரும் காபி வாங்கிட்டு வந்து சீட்ல உட்கார்ந்தோம். ரெண்டு சிப் குடிச்சிட்டு நான் பேச ஆரம்பிச்சேன். ’சொல்லு தீபா, வீட்ல என்ன சொன்னாங்க?’ அப்படினு கேட்டேன்.
‘நல்லபடியா பொயிட்டு பத்திரமா இருமானு சொன்னாங்க’ அப்படினு ரொம்ப கேஷ்வலா சொன்னா”

“டார்ச்சர்ஸ் ஆஃப் இந்தியாவா இருக்கு. சரி அப்பறம் என்ன ஆச்சு”

“எனக்கும் கடுப்பாயிடுச்சு. ‘தீபா, வீட்ல நம்ம கல்யாணத்தை பத்தி பேசறனு சொன்னியே. என்னாச்சு’.
‘நான் வீட்ல சொல்லலை. எனக்கு எப்படி ஆரம்பிக்கறதுனு தெரியலை. அவுங்க கேட்டா என்ன பதில் சொல்றதும்னு தெரியலை’”

“அடப்பாவி. அப்பறம் எதுக்கு வீட்ல கேட்டு சொல்றேனு சொன்னா?”

”இரு இன்னும் முடியலை. சொல்றேன் கேளு. ‘அப்ப வீட்ல கேட்டு சொல்றேனு சொன்ன’.
‘அப்ப ஏதோ ஒரு தைரியத்துல சொல்லிட்டேன். வீட்டுக்கு போனவுடனே அந்த தைரியமெல்லாம் பயமா மாறிடுச்சு. அவுங்க கல்யாண பேச்சு எடுத்தா அப்ப ஞாபகம் வந்தா சொல்றேன்’”

“விடு மச்சி. ரொம்ப புத்திசாலியா இருக்கா. வேற பொண்ணை பார்த்துக்கலாம்”

“டேய் நாயே இன்னும் முடியல. கேளு. ஒரு நிமிஷம் நானும் எதுவும் பேசாம உட்கார்ந்திருந்தேன். அவளே பேச ஆரம்பிச்சா, ‘எங்க வீட்ல பேசறனு சொன்னதுக்கு பதிலா, உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லைனு நான் அப்பவே சொல்லிருக்கலாம். என் தப்பு தான். சாரி’”

“”

“ஒரு நிமிஷம் எனக்கு மூளை எல்லாம் ப்ளாங்கா ஆகிடுச்சு. இதே பதிலை அவ அன்னைக்கு சொல்லிருந்தா கூட நான் இந்த அளவுக்கு ஃபீல் பண்ணியிருக்க மாட்டேன். ஆஃப் ஷோர்ல இருந்து கஷ்டப்பட்டு வீசாவெல்லாம் வாங்கிட்டு ஆன் சைட்டுக்கு கிளம்பி ஏர் போர்ட்டுக்கு போனதுக்கப்பறம் ஃபோன் பண்ணி, பிராஜக்ட் ஊத்திக்கிச்சி. நீ ஆன் சைட் எல்லாம் போக வேண்டாம். திங்க கிழமை ஆபிஸுக்கே வா, பேசிக்கலாம்னு சொன்னா எப்படி இருக்கும். விசா ரிஜக்ட் ஆகறதை விட இது கொடுமையில்லையா. அதே மாதிரி தான் எனக்கும் இருந்துச்சு. நிச்சயம் கண்ணு கலங்க கூடாதுனு ஒரு முடிவோட இருந்தேன்”

“வீட்றா மச்சி. இந்த மாதிரி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சி தான், நான் வரும் போது MC ஹாஃப் வாங்கிட்டு வந்துட்டேன். ஸ்பிரைட் கூட இருக்கு”

“இருடா. இன்னும் முடியல”

“இன்னும் முடியலையா. இப்பவே இவ்வளவு சொன்னா, இன்னும் அடிச்சிட்டு எவ்வளவு நேரம் பேசப்போறியோ. சரி சீக்கிரம் சொல்லு”

“ஒரு நிமிஷம் அமைதியா இருந்துட்டு, என் முகத்தை பார்த்து சிரிச்சிக்கிட்டே பேச ஆரம்பிச்சா, ’இந்த மாதிரி நான் பொய் சொன்னாலும், நீ என்னை கடைசி வரைக்கும் இதே மாதிரி நேசிப்பாயா’ அப்படினு கேட்டா”

“வாவ்.... சூப்பர்டா மச்சான் “

”டேய் விசிலடிக்கறதை நிறுத்துடா”

“மச்சி... பட்டையை கிளப்பிட்டடா. எப்படிடா ஒன்னைய போய் ஒரு பொண்ணு லவ் பண்ண ஒத்துக்கிச்சு?”

“டேய், இதுல ஒத்துக்கறதெல்லாம் ஒண்ணுமில்லை. அவளுக்கும் என்னை ரொம்ப பிடிக்குமாம். நான் சொன்னப்ப அவளுக்கு உடனே எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியலையாம். வீட்ல போய் யோசிக்கும் போது அவளுக்கு என்னை பிடிச்சிருக்குதுனு அவளேக்கே புரிஞ்சிடுச்சாம்”

“சூப்பர்டா மச்சான். இந்த மாதிரி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சி தான், நான் வரும் போது MC ஹாஃப் வாங்கிட்டு வந்துட்டேன். ஸ்பிரைட் கூட இருக்கு. வா இதை தண்ணி அடிச்சி எஞ்சாய் பண்றோம்”

(முற்றும்)

54 comments:

நாமக்கல் சிபி said...

அப்பாடா!

நாமக்கல் சிபி said...

இனி நாங்க நிம்மதியா இருப்போம்!

(ஆனா ஏதோ அவசரமா முடிச்ச மாதிரி இருக்கே! )

வெட்டிப்பயல் said...

//Namakkal Shibi said...
இனி நாங்க நிம்மதியா இருப்போம்!

(ஆனா ஏதோ அவசரமா முடிச்ச மாதிரி இருக்கே! )

12:20 AM//

:)

ரொம்ப வளர்க்க விருப்பமில்லை...

நாமக்கல் சிபி said...

இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறேன் உங்ககிட்டேர்ந்து!

Anonymous said...

//இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறேன் உங்ககிட்டேர்ந்து//

ஆமா!

ஸ்ரீதர்கண்ணன் said...

“விடு மச்சி. ரொம்ப புத்திசாலியா இருக்கா. வேற பொண்ணை பார்த்துக்கலாம்”

“டேய் நாயே இன்னும் முடியல. கேளு.
“”

“ஒரு நிமிஷம் எனக்கு மூளை எல்லாம் ப்ளாங்கா ஆகிடுச்சு. இதே பதிலை அவ அன்னைக்கு சொல்லிருந்தா கூட நான் இந்த அளவுக்கு ஃபீல் பண்ணியிருக்க மாட்டேன். ஆஃப் ஷோர்ல இருந்து கஷ்டப்பட்டு வீசாவெல்லாம் வாங்கிட்டு ஆன் சைட்டுக்கு கிளம்பி ஏர் போர்ட்டுக்கு போனதுக்கப்பறம் ஃபோன் பண்ணி, பிராஜக்ட் ஊத்திக்கிச்சி. நீ ஆன் சைட் எல்லாம் போக வேண்டாம். திங்க கிழமை ஆபிஸுக்கே வா, பேசிக்கலாம்னு சொன்னா எப்படி இருக்கும். விசா ரிஜக்ட் ஆகறதை விட இது கொடுமையில்லையா. அதே மாதிரி தான் எனக்கும் இருந்துச்சு. நிச்சயம் கண்ணு கலங்க கூடாதுனு ஒரு முடிவோட இருந்தேன்”

ரொம்ப நல்லா இருந்துச்சு கதை வாழ்த்துக்கள் பாலாஜி :))))

வெட்டிப்பயல் said...

//ரொம்ப நல்லா இருந்துச்சு கதை வாழ்த்துக்கள் பாலாஜி :))))//

மிக்க நன்றி ஸ்ரீதர் கண்ணன்... ஒருத்தராவது சொல்றாங்களானு பார்த்துட்டு தூங்கலாம்னு இருந்தேன்... இப்ப நிம்மதியா தூங்கலாம் :)

கைப்புள்ள said...

எனக்கு புடிச்சிருக்கு. Short and Sweet.

Hari said...

Its very nice story.... But it end very shortly.... I am expecting some more romance.... Any way very good...

வெட்டிப்பயல் said...

//கைப்புள்ள said...
எனக்கு புடிச்சிருக்கு. Short and Sweet.//

நன்றி தல :)

வெட்டிப்பயல் said...

// hari prakash said...
Its very nice story.... But it end very shortly.... I am expecting some more romance.... Any way very good...//

மிக்க நன்றி ஹரி பிரகாஷ்... சீக்கிரமே ஒரு ”நல்ல” காதல் கதை எழுதறேன் :)

KarthigaVasudevan said...

//“சூப்பர்டா மச்சான். இந்த மாதிரி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சி தான், நான் வரும் போது MC ஹாஃப் வாங்கிட்டு வந்துட்டேன். ஸ்பிரைட் கூட இருக்கு. வா இதை தண்ணி அடிச்சி எஞ்சாய் பண்றோம்”//

சோகமா இருந்தாலும் ...சந்தோசமா இருந்தாலும் ஒரே ரீஆக்சன் தானோ?

Anonymous said...

nice story!

G3 said...

:))))))))))))

//சீக்கிரமே ஒரு ”நல்ல” காதல் கதை எழுதறேன் :)//

:))))))))))))))))))))))))))))

மணிகண்டன் said...

பட்டைய கிளப்பிட்டீங்க பாலாஜி !

Prabu Raja said...

very nice story.. LOL after reading MC and Sprite part :-D

அன்புடன் அருணா said...

நான் இன்னும் இருக்கோன்னு நினைச்சுப் படித்தேன்...முற்றும் படித்தபின் ஒரு நிம்மதி..
அன்புடன் அருணா

நாகராஜன் said...

கதை நன்றாக இருந்தது பாலாஜி. பாராட்டுகள்.

ஆனாலும் இங்கே மற்ற நண்பர்கள் சொன்ன படி கதையை கொஞ்சம் அவசரமாக முடித்தது போல தோன்றியது.

Divyapriya said...

சூப்பர் அண்ணா...ரொம்ப நல்லா இருந்தது கதை. கனவு, அப்புறம் இரண்டு நண்பர்கள் பேசிக்கறதுன்னு அதை வச்சே முழு கதையை சொல்லி முடிச்சிட்டீங்க.. கலக்கல்...

நான் கூட ரெண்டு நண்பர்கள் மட்டுமே பேசிக்கற மாதிரி ஒரு கதை எழுதலாம்னு நினைச்சு, போன மாசம் ஆரம்பிச்சேன்...ஆனா அது கடைசில எங்கயோ போய்டுச்சு. நீங்க வழக்கம் போல கலக்கிட்டீங்க...ஆனா என்ன, 3 parts லயே முடிச்சது தான் சோகம் :(

வெட்டிப்பயல் said...

// மிஸஸ்.டவுட் said...
//“சூப்பர்டா மச்சான். இந்த மாதிரி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சி தான், நான் வரும் போது MC ஹாஃப் வாங்கிட்டு வந்துட்டேன். ஸ்பிரைட் கூட இருக்கு. வா இதை தண்ணி அடிச்சி எஞ்சாய் பண்றோம்”//

சோகமா இருந்தாலும் ...சந்தோசமா இருந்தாலும் ஒரே ரீஆக்சன் தானோ?//

அதே அதே! ரூம்ல பசங்க இண்டர்வியூ போய் வேலை கிடைச்சாலும் தண்ணி தான், வேலை கிடைக்கலனாலும் தண்ணி தான்... அடிக்கும் போது இருக்கற ஃபீலிங்க்ஸ் மட்டும் வேற :)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...
nice story!//

மிக்க நன்றி நண்பரே!!!

வெட்டிப்பயல் said...

// G3 said...
:))))))))))))

//சீக்கிரமே ஒரு ”நல்ல” காதல் கதை எழுதறேன் :)//

:))))))))))))))))))))))))))))//

G3 அக்கா சிரிச்சா ஆயிரம் அர்த்தம் இருக்கும் :)

வெட்டிப்பயல் said...

//மணிகண்டன் said...
பட்டைய கிளப்பிட்டீங்க பாலாஜி !

9:06 AM//

மிக்க நன்றி மணிகண்டன் :)

வெட்டிப்பயல் said...

// Valaipookkal said...
Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்//

டாங்கிஸ் வ.கு :)

வெட்டிப்பயல் said...

//Prabu Raja said...
very nice story.. LOL after reading MC and Sprite part :-D//

மிக்க நன்றி பிரபு ராஜா :)

வெட்டிப்பயல் said...

// அன்புடன் அருணா said...
நான் இன்னும் இருக்கோன்னு நினைச்சுப் படித்தேன்...முற்றும் படித்தபின் ஒரு நிம்மதி..
அன்புடன் அருணா

10:40 AM//

ஆஹா... நல்லா இருக்குனு சொல்றீங்களா இல்லை கேவலமா இருக்கு நல்ல வேளை முடிஞ்சிடுச்சினு சொல்றீங்களா?

CVR said...

Superu!!
LOVED the MC part!!!

You rock!!!! B-)

வெட்டிப்பயல் said...

//ராசுக்குட்டி said...
கதை நன்றாக இருந்தது பாலாஜி. பாராட்டுகள்.
//
மிக்க நன்றி ராசுக்குட்டி...

//
ஆனாலும் இங்கே மற்ற நண்பர்கள் சொன்ன படி கதையை கொஞ்சம் அவசரமாக முடித்தது போல தோன்றியது.//

:)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...
சூப்பர் அண்ணா...ரொம்ப நல்லா இருந்தது கதை. கனவு, அப்புறம் இரண்டு நண்பர்கள் பேசிக்கறதுன்னு அதை வச்சே முழு கதையை சொல்லி முடிச்சிட்டீங்க.. கலக்கல்...
//
ரொம்ப நன்றிமா... ஒரு எழுத்தாளர் கோணத்துல இருந்து கதையை பார்த்திருக்க. இல்லைனா இது அவ்வளவு சீக்கிரம் தெரியாது :)

கதைல ஹீரோயின் நேரடியா பேசற மாதிரி வந்திருந்தா இன்னும் நிறைய எழுதியிருக்கலாம். எல்லாரும் சொல்ற மாதிரி அவசரமா முடிச்ச மாதிரி தெரிஞ்சிருக்காது. ஆனா கதையோட ஒழுங்கு கெட்டிருக்கும். அது விருப்பமில்லாம தான் இப்படியே முடிச்சாச்சி :)

//நான் கூட ரெண்டு நண்பர்கள் மட்டுமே பேசிக்கற மாதிரி ஒரு கதை எழுதலாம்னு நினைச்சு, போன மாசம் ஆரம்பிச்சேன்...ஆனா அது கடைசில எங்கயோ போய்டுச்சு. நீங்க வழக்கம் போல கலக்கிட்டீங்க...ஆனா என்ன, 3 parts லயே முடிச்சது தான் சோகம் :(//

இதை நான் நிச்சயம் நம்ப மாட்டேன். அந்த கதையை பப்ளிஷ் பண்ணலைனா என் மெயிலுக்கு அனுப்பி வைம்மா. பார்க்கிறேன்...

CVR said...

//ஆனா என்ன, 3 parts லயே முடிச்சது தான் சோகம் :(///

நெறைய பேர் கதை ரொம்ப சின்னதா இருக்கறதை ஏன் ஒரு விஷயமா சொல்றாங்கன்னு தெரியல!!
இந்தக்கதைக்கு இந்த அளவு தான் சரியான அளவுன்னு எனக்கு தோணுது!!இதுக்கு மேல போனா ஒரே இழுவையா போய் கதையின் சுவையே போயிடும்!!
இருக்கற பாகத்துல கதையின் ஓட்டத்தில் வேகம் அதிகமாகவோ கம்மியாகவோ ஆகாமல் முழுமையான கதை இருக்கிறதா என்பது தான் முக்கியம்!!
அதன் படி பார்த்தால் என் பார்வையில் இது ஒரு தரமான சிறுகதையாகவே தெரிகிறது.
மூன்று பாகங்களில் முடித்தது இந்தக்கதைக்கும் அதுசொல்லப்பட்டிருக்கும் short and sweet style-க்கும் மிகப்பெரிய பலம் என்றுதான் சொல்லுவேன்.

May be its just me..

வெட்டிப்பயல் said...

// CVR said...
Superu!!
LOVED the MC part!!!

You rock!!!! B-)

7:21 PM//

தல,
உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பாராட்டு வரது ரொம்ப சந்தோஷமா இருக்கு... என்ன இருந்தாலும் சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியை பேஸ் பண்ணி கதை எழுத எனக்கு சொல்லி கொடுத்தது உங்க கதைங்க தான் :)

G3 said...

//G3 அக்கா சிரிச்சா ஆயிரம் அர்த்தம் இருக்கும் :)//

avvvvvvvvvvvv.. innuma indha ulagam nammala nambittirukku ;)

Divya said...

Read all the 3 parts now.........simply cute:))

Short & crispy:)

Dialogues are kalakkals asusuall!

Divya said...

\\“எதோ மோசமா கனவு கண்டிருக்க போல. இனிமே படுக்காத. எப்படியே எழுந்திரிச்சி கிளம்பு”\\

appadiyey .........elunthirichu kilambunu varumo??

வெட்டிப்பயல் said...

//G3 said...
//G3 அக்கா சிரிச்சா ஆயிரம் அர்த்தம் இருக்கும் :)//

avvvvvvvvvvvv.. innuma indha ulagam nammala nambittirukku ;)//

:))

வெட்டிப்பயல் said...

// Divya said...
Read all the 3 parts now.........simply cute:))

Short & crispy:)

Dialogues are kalakkals asusuall!//

ரொம்ப டாங்ஸ்மா...

ஆளை காணமேனு பார்த்திட்டு இருந்தேன் :)

வெட்டிப்பயல் said...

//Divya said...
\\“எதோ மோசமா கனவு கண்டிருக்க போல. இனிமே படுக்காத. எப்படியே எழுந்திரிச்சி கிளம்பு”\\

appadiyey .........elunthirichu kilambunu varumo??//

ஆமாம்மா... மாத்திட்டேன் :)

சரவணகுமரன் said...

பாலாஜி, கதை சூப்பர்...

ரொம்ப புதுசா இருந்துச்சி... வர்ணனையே இல்லாம, வசனங்களாலேயே நிரப்பி, ஒவ்வொரு பகுதியிலும் கனவில் ஆரம்பிச்சி, நகைச்சுவையோட கலக்கிட்டீங்க....

நாதஸ் said...

Sooper Thala !!!
I love happy endings :)

வெட்டிப்பயல் said...

// CVR said...
//ஆனா என்ன, 3 parts லயே முடிச்சது தான் சோகம் :(///

நெறைய பேர் கதை ரொம்ப சின்னதா இருக்கறதை ஏன் ஒரு விஷயமா சொல்றாங்கன்னு தெரியல!!
இந்தக்கதைக்கு இந்த அளவு தான் சரியான அளவுன்னு எனக்கு தோணுது!!இதுக்கு மேல போனா ஒரே இழுவையா போய் கதையின் சுவையே போயிடும்!!
இருக்கற பாகத்துல கதையின் ஓட்டத்தில் வேகம் அதிகமாகவோ கம்மியாகவோ ஆகாமல் முழுமையான கதை இருக்கிறதா என்பது தான் முக்கியம்!!
அதன் படி பார்த்தால் என் பார்வையில் இது ஒரு தரமான சிறுகதையாகவே தெரிகிறது.
மூன்று பாகங்களில் முடித்தது இந்தக்கதைக்கும் அதுசொல்லப்பட்டிருக்கும் short and sweet style-க்கும் மிகப்பெரிய பலம் என்றுதான் சொல்லுவேன்.

May be its just me..//

இல்லை தல... நானும் அதை ஃபீல் பண்ணி தான் எழுதினேன்... இந்த கதைக்கு இது தான் சிறந்த முடிவா எனக்கு பட்டுச்சு. இன்னும் நாலு பாகம் வளர்க்கறது பெருசில்லை. ஆனா இந்த கதைக்கு அது தேவையில்லை. இன்னும் ஒரு பாகம் அதிகமாயிருந்தாலும் சலிப்பை கொடுத்திருக்குங்கறது என் எண்ணம்...

இவ்வளவு அழகான, அர்த்தமான பின்னூட்டத்திற்கு நன்றி தல :)

வெட்டிப்பயல் said...

//சரவணகுமரன் said...
பாலாஜி, கதை சூப்பர்...

ரொம்ப புதுசா இருந்துச்சி... வர்ணனையே இல்லாம, வசனங்களாலேயே நிரப்பி, ஒவ்வொரு பகுதியிலும் கனவில் ஆரம்பிச்சி, நகைச்சுவையோட கலக்கிட்டீங்க....//

மிக்க நன்றி சரவணகுமரன்...

நேத்து வந்த பின்னூட்டங்கள் எல்லாம் ஒரு மாதிரி இருந்தது. இன்னைக்கு எல்லாம் பாராட்டி வருது... ரொம்ப சந்தோஷம் :)

வெட்டிப்பயல் said...

// nathas said...
Sooper Thala !!!
I love happy endings :)//

மிக்க நன்றி நாதஸ்...

ஃபோட்டோகிராஃபர்ஸ் எல்லாம் ஒரே மாதிரி தான் ஃபீல் பண்ணுவீங்க போல :)

வெண்பூ said...

நல்ல கதை.. நல்ல நடை.. நல்ல முடிவு.. ரசிச்சேன் வெட்டி..

MSV Muthu said...

க‌டைசி பாக‌ம் ப‌டிக்க‌ற‌துக்குள்ள‌ என‌க்கு டென்ஷ‌ன் ஆயிடுச்சு! ந‌ல்லாயிருந்த‌து!

வாழவந்தான் said...

///“வீட்றா மச்சி. இந்த மாதிரி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சி தான், நான் வரும் போது MC ஹாஃப் வாங்கிட்டு வந்துட்டேன். ஸ்பிரைட் கூட இருக்கு”

“சூப்பர்டா மச்சான். இந்த மாதிரி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சி தான், நான் வரும் போது MC ஹாஃப் வாங்கிட்டு வந்துட்டேன். ஸ்பிரைட் கூட இருக்கு. வா இதை தண்ணி அடிச்சி எஞ்சாய் பண்றோம்”
///

வெட்டி முதல் சுச்சுவேஷன் சோகம் தானே அதுக்கு ராவா அடிக்காம எதுக்கு ச்ப்ரைட்டு..
கதாநாயகனின் நண்பர் தெளிவா இருக்காரு என்ன ஆனாலும் சரக்கு உண்டு (கென்யா ஜெயிச்சா டைரிமில்க் சாப்டும் பையன் மாதிரி)
கதை சுமார் தான் முன்பு வந்தவை போல் இல்லை.. நான் கடவுள் மாதிரி அவசரமா முடிச்சுடீங்க. ஆனா எபோதும் போல் காமெடி சூப்பர்!!

வெட்டிப்பயல் said...

//வெண்பூ said...
நல்ல கதை.. நல்ல நடை.. நல்ல முடிவு.. ரசிச்சேன் வெட்டி..//

மிக்க நன்றி வெண்பூ. நச்சுனு சொல்லிட்டீங்க :)

வெட்டிப்பயல் said...

//MSV Muthu said...
க‌டைசி பாக‌ம் ப‌டிக்க‌ற‌துக்குள்ள‌ என‌க்கு டென்ஷ‌ன் ஆயிடுச்சு! ந‌ல்லாயிருந்த‌து!//

வாங்க தல,
நீங்க எல்லாம் நம்ம கதையை படிக்கறீங்கனு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குது :)

வெட்டிப்பயல் said...

// வாழவந்தான் said...
///“வீட்றா மச்சி. இந்த மாதிரி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சி தான், நான் வரும் போது MC ஹாஃப் வாங்கிட்டு வந்துட்டேன். ஸ்பிரைட் கூட இருக்கு”

“சூப்பர்டா மச்சான். இந்த மாதிரி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சி தான், நான் வரும் போது MC ஹாஃப் வாங்கிட்டு வந்துட்டேன். ஸ்பிரைட் கூட இருக்கு. வா இதை தண்ணி அடிச்சி எஞ்சாய் பண்றோம்”
///

வெட்டி முதல் சுச்சுவேஷன் சோகம் தானே அதுக்கு ராவா அடிக்காம எதுக்கு ச்ப்ரைட்டு..
கதாநாயகனின் நண்பர் தெளிவா இருக்காரு என்ன ஆனாலும் சரக்கு உண்டு (கென்யா ஜெயிச்சா டைரிமில்க் சாப்டும் பையன் மாதிரி) //

அவர் எப்படியும் வாங்கிட்டு வந்துட்டாரு. அதை சொல்லனுமில்லை :)

//
கதை சுமார் தான் முன்பு வந்தவை போல் இல்லை.. நான் கடவுள் மாதிரி அவசரமா முடிச்சுடீங்க. ஆனா எபோதும் போல் காமெடி சூப்பர்!!//

நன்றி வாழவந்தான்... நான் கடவுள் ரேஞ்சுக்கு பேசிட்டீங்களே :)

Poornima Saravana kumar said...

அண்ணா இவ்ளோ சீக்கிரம் முடிச்சிட்டிங்க.. கதையை அருமையா கொண்டு வந்திருக்கிங்க.. வாழ்த்துக்கள்:)

ஜியா said...

very good... recenta padicha oru nalla feel good love story :))

s@u$j!i said...

romba naal erunduchunga!!! nan bloguku romba pudusu. Apdiye ellarum yen blog a konjam visit panni comment kodututu pongapa!!!!

JSTHEONE said...

SOooper post ....read al the parts... ellame super flow...

final friendship touch soooper enna nadandhaalum MC irukuradhu nalla irukku :-)

Unknown said...

Lovely one.. enakku romba pidichirukku.. I enjoyed very much,, appadiya namma college padikumpothu irukra friends circle pesura mathiriye irukku

Ganesan said...

ஆஹா! மிக அருமை!
கதையும், கதை சொன்ன காதலும் ரசனை!