தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, February 05, 2009

பொய் சொன்னால்... நேசிப்பாயா?

"ஏ! பயங்கரமா குளிருது. ஒரு முத்தம் கொடேன்”

“என்ன?”

“குளிருக்கு முத்தம் தான் மருந்துனு வெள்ளைக்காரன் சொல்லியிருக்கான். அதான் கேக்கறேன். ப்ளீஸ்”

“உதை வாங்கப் போற. இத்தனை நாள் நல்லா பையனா இருந்துட்டு திடீர்னு அட்டகாசம் பண்றியா?”

“முத்தம் கேட்டா கெட்ட பையனா? லவ் பண்ற பொண்ணுக்கிட்ட கேட்காம தெருவுல போற வரவக்கிட்டயா கேட்பாங்க?”

“ஏன் தைரியமிருந்தா கேட்டு பாரேன்”

“நான் என்ன காரணமில்லாமலா கேட்டேன். -10 டிகிரி ஃபேரன்ஹீட்ல இருந்து உள்ள வந்திருக்கோம். நம்ம ஊர் கணக்கு படி பார்த்தா -25 டிகிரி செல்சியஸ். அதனால தானே கேட்டேன்”

“ “

“என்னது இது கன்னத்துல கொடுக்கற. அதுவும் இதுக்கு பேரு முத்தமா? வெறும் சத்தம்”

“இதுக்கு மேல நீ பேசன உன் கன்னத்துல வரும் ரத்தம்”

“என்ன டீ.ஆர் மாதிரி பேசற. பெரிய கவிஞினு மனசுல நினைப்பா?”

“என்னது கவிஞியா?”

”கவிஞர்க்கு பெண் பால் கவிஞி தானே”

“அப்பா. செம்ம மொக்கை”

“சரி அது இருக்கட்டும். நான் கேட்ட முத்தம் என்னாச்சு”

“நான் சொன்ன ரத்தம் மறந்து போச்சா ?”

“டேய் மணி பன்னெண்டு ஆச்சு... எழுந்திரி”

“ஆஹா முத்தத்துக்கும், ரத்தத்துக்கும் நடுவுல இது என்ன புது சத்தம்?”

“டேய் எழுந்திரிடா. சாப்பிட போகலாம். பசிக்குது”

ஆஹா. இவ்வளவும் கனவா? 

“டேய் இந்த வெயில்ல இழுத்து போத்திட்டு தூங்கிட்டு இருக்க. எழுந்திரிடா”

“டேய் நீ போய் சாப்பிடு. இப்படி ஒரு முக்கியமான கனவு கண்டுட்டு இருக்கும் போது எழுப்பிட்டியேடா பாவி. போய் தொலை”

“டேய் பகல் கனவு பலிக்காதுடி. ஒழுங்கா எழுந்திரி. அப்பறம் தனியா போக போர் அடிக்குதுனு என்னைய மறுபடியும் கூப்பிட்டு டார்ச்சர் பண்ணுவ”

“மச்சான். பகல் கனவு பலிக்காதா?” வேகமாக எழுந்து உட்கார்ந்தான்.

“நாதாரி. பன்னெண்டு மணிக்கு காணறது பகல் கனவாடா? அது மதிய கனவு. இந்த நேரம் வரைக்கும் எந்த நாயும் தூங்காதுனு நினைச்சி எவனும் இது வரைக்கும் பழமொழி சொன்னதில்லை.  நான் வேணா புது மொழியா உனக்காக ஒண்ணு க்ரியேட் பண்றேன். மதிய கனவு மறக்காது. ஓகேவா?”

”அப்படினா?”

“பழமொழி சொன்னா அனுபவிக்கனும். ஆராயக்கூடாது. புரியுதா?”

“டேய். எவ்வளவு சூப்பர் கனவு தெரியுமாடா? இப்படி அநியாயமா கெடுத்துட்டடா”

“சரி என்ன கனவு சொல்லி தொலை”

“நானும் தீபாவும் கார்ல ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு வரோம். வெளிய -10 டிகிரி ஃபேரன்ஹீட். கார் பார்க் பண்ற இடத்துல இருந்து வீட்டுக்கு வர வழியெல்லாம் செம குளிர். அதுல அஞ்சு நிமிஷம் நடந்து வீட்டுக்கு வறோம். பயங்கர குளிர்”

“அதான் இந்த சென்னை வெயில்லையும் போர்வையை இழுத்து போட்டு தூங்கனையாக்கும்? அது சரி, இது நடக்கறது எங்க? ஸ்விசர் லேண்ட்லயா? செலவே இல்லாம கூப்பிட்டு போயிட்ட போல?”

”அதெல்லாம் இல்லைடா. நாங்க ரெண்டு பேரும் பாஸ்டன்ல ஆன்சைட்ல இருக்குற மாதிரி கனவு. நேத்து ஆன்சைட் கால்ல ரெண்டு பேரும் இருக்கும் போது அங்க -10னு சொன்னாங்க. அதுக்கு அவ அந்த ரூம்லயே அந்த குளிரோட எஃபக்டை கொடுத்தா. அது மனசுல பதிஞ்சு போச்சு. அதான் கனவுல வந்துடுச்சு. ரெண்டு பேரும் ஒரே அப்பார்ட்மெண்ட். டூ பெட்ரூம்.”

“ஓ. அந்த ரேஞ்சுக்கு போயிட்ட. சரி, அப்பவாது லவ் பண்றனு சொல்லி தொலைச்சயா இல்லை இதயம் முரளி மாதிரி டார்ச்சர் பண்ணிட்டு இருந்தியா?”

“நான் லவ் சொன்னனானு தெரியலை. ஆனா ரெண்டு பெருக்கும் காதலிக்கறோம்னு தெரிஞ்சிருந்தது. முத்தம் கொடுக்க வந்தா, அந்த நேரம் பார்த்து எழுப்பிட்ட. பாவி”

”ஓ. அந்த அளவுக்கு. மொதல்ல லவ்வை சொல்லி தொலைடா. இல்லைனா எவனாவது பிக் அப் பண்ணிட்டு போயிட போறான்”

“நானும் சொல்லலாம்னு தான்டா பாக்கறேன். ஆனா அவக்கிட்ட போனாலே அவ பார்க்கற பார்வைலயே என் வாய்ல வார்த்தை நின்னுடுது”

“இந்த பார்வை, போர்வைனு சொல்லியே வீணா போக போற. மூடிட்டு திங்க கிழமை போனவுடனே சொல்லிடு. சரியா?”

“எப்படி சொல்றதுனு ஏதாவது ஐடியா கொடேன்”

“நான் ஐடியா கொடுக்கறது இருக்கட்டும். நீ போய் பல்லு விளக்கிட்டு வா. கப்பு தாங்கல. இந்த கப்புல நான் யோசிச்சா எதுவும் ஒர்க் அவுட் ஆகாது”

...

“சரி இப்ப சொல்லு”

“நான் சொல்றது இருக்கட்டும், எப்படி சொல்லலாம்னு ஏதாவது நீயே யோசிச்சி வெச்சிருப்பியே. அதை எடுத்து விடு”

"எனக்கும் அடிக்கது தோணும். ரொம்ப சாதாரணமா இப்படி சொல்லலாமா? I want to share the rest of my life with you னு”

“ஏதோ ஷேர் ஆட்டோ பிடிக்க கூப்பிடறனு நினைச்சிக்க போறாடா. என்னுமோ ஃபாதர் ஆஃப் பாரின் கண்ட்ரி ரேஞ்சுக்கு பேசறியே. இந்த மாதிரி எல்லாம் பேசறதுக்கு இது என்ன கௌதம் மேனன் படமா? தமிழ்ல சொல்லுடா என் வெண்ட்ரு”

“கவிதை மொழியில சொல்லலாமா?”

”எங்க சொல்லு பார்க்கலாம்?”

“வானமோ நீலம்...
நீதான் என் பாலம்”


”நிறுத்து நிறுத்து... இது எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே”

“சென்னை 28ல அவன் இதை ஆரம்பிப்பான். முடிக்காம விட்டுடுவான். அதான் நான் கண்டினியூ பண்ணலாம்னு பார்த்தேன்”

“அதுக்கு 
இலையோ பச்சை
நீ ஒரு எச்சை” னு அவ கண்டினுயூ பண்ணா என்ன பண்ணுவ?”


“ஏன்டா அபசகுனமா பேசிட்டு இருக்க?”

“டேய், ரொம்ப சாதாரணமா சொல்லுடா. இதை இவ்வளவு காம்ப்ளிக்கேட்டடா மாத்தாத. புரியுதா?”

“சாதாரணமானா எப்படி? 

”அவளை உனக்கு எதுக்காக பிடிக்கும்னு யோசிச்சி பாரு. அதையே அவக்கிட்ட சொல்லி புரிய வை”

“அப்படி நான் சொல்லி அவ புரிஞ்சிக்கலைனா?”

“அவ புத்திசாலினு புரிஞ்சிட்டு ஃபிரியா விடு. நல்ல பொண்ணா உங்க வீட்ல பார்ப்பாங்க, அவளை கல்யாணம் பண்ணிக்கோ”

“போடா நாயே. இப்படியெல்லாம் சொல்லாத”

“எப்படியாவது சொல்லி தொலை. இப்ப எனக்கு பசிக்குது. வா சாப்பிட போகலாம்”

(தொடரும்...)

53 comments:

வெட்டிப்பயல் said...

இந்த கதை எப்படி போகும்னு எனக்கே தெரியாது... இன்னும் எத்தனை பார்ட்னும் தெரியாது... இனிமே தான் யோசிக்கனும் :)

முரளிகண்ணன் said...

நல்லாத்தாங்க இருக்கு. ஆனா நிறைய நாள் இழுத்திடாதீங்க. சுவராசியம் குறைஞ்சிடும்

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
நல்லாத்தாங்க இருக்கு. ஆனா நிறைய நாள் இழுத்திடாதீங்க. சுவராசியம் குறைஞ்சிடும்

11:04 PM//

மிக்க நன்றி முக... அடுத்த வாரத்துக்குள்ள முடிஞ்சிடும் :)

ஸ்ரீதர்கண்ணன் said...

எனக்கும் அடிக்கது தோணும். ரொம்ப சாதாரணமா இப்படி சொல்லலாமா? I want to share the rest of my life with you னு”

“ஏதோ ஷேர் ஆட்டோ பிடிக்க கூப்பிடறனு நினைச்சிக்க போறாடா. என்னுமோ ஃபாதர் ஆஃப் பாரின் கண்ட்ரி ரேஞ்சுக்கு பேசறியே.


Super Super Super :))))))

ஸ்ரீதர்கண்ணன் said...

“அப்படி நான் சொல்லி அவ புரிஞ்சிக்கலைனா?”

“அவ புத்திசாலினு புரிஞ்சிட்டு ஃபிரியா விடு.

Ultimate.....

Vino said...

annathae superb narrating.

வெட்டிப்பயல் said...

// ஸ்ரீதர்கண்ணன் said...
எனக்கும் அடிக்கது தோணும். ரொம்ப சாதாரணமா இப்படி சொல்லலாமா? I want to share the rest of my life with you னு”

“ஏதோ ஷேர் ஆட்டோ பிடிக்க கூப்பிடறனு நினைச்சிக்க போறாடா. என்னுமோ ஃபாதர் ஆஃப் பாரின் கண்ட்ரி ரேஞ்சுக்கு பேசறியே.


Super Super Super :))))))//

மிக்க நன்றி ஸ்ரீதர் கண்ணன் :)

வெட்டிப்பயல் said...

// ஸ்ரீதர்கண்ணன் said...
“அப்படி நான் சொல்லி அவ புரிஞ்சிக்கலைனா?”

“அவ புத்திசாலினு புரிஞ்சிட்டு ஃபிரியா விடு.

Ultimate.....//

thk u boss :)

வெட்டிப்பயல் said...

// Vino said...
annathae superb narrating.

//

மிக்க நன்றி வினோ :)

ஆனா இதுல எந்த நரேஷனும் இல்லையே. முழுக்க முழுக்க டயலாக்ஸ் தானே :)

கைப்புள்ள said...

எப்படி இப்படியெல்லாம்? கொஞ்ச நாள் பொண்ணுங்க மனசை புரிஞ்சுக்க விவேக் பண்ண மாதிரி எல்லாம் எதாச்சும் பண்ணியாப்பா?

:)

வெட்டிப்பயல் said...

// கைப்புள்ள said...
எப்படி இப்படியெல்லாம்? கொஞ்ச நாள் பொண்ணுங்க மனசை புரிஞ்சுக்க விவேக் பண்ண மாதிரி எல்லாம் எதாச்சும் பண்ணியாப்பா?

:)//

இதுல பொண்ணுகிட்ட எப்படி காதல் சொல்றதுனு தெரியாமத்தான் கதாநாயகன் தடுமாறறான். இதுல பொண்ணுங்க மனசை நான் எங்க புரிஞ்சிக்கிட்டேன் :)

ரமேஷ் வைத்யா said...

குறைச்சிக்கங்கன்னு சொன்னா, முடியை வெட்டிக்கணும், காலை வெட்டிக்கக்கூடாது.

வெட்டிப்பயல் said...

//ரமேஷ் வைத்யா said...
குறைச்சிக்கங்கன்னு சொன்னா, முடியை வெட்டிக்கணும், காலை வெட்டிக்கக்கூடாது.

12:24 AM//

புதசெவி :)

FunScribbler said...

ம்ம்...நல்லா தான் போகுது...

Divyapriya said...

//“ஆஹா முத்தத்துக்கும், ரத்தத்துக்கும் நடுவுல இது என்ன புது சத்தம்?”//

LOL :-D

//இந்த நேரம் வரைக்கும் எந்த நாயும் தூங்காதுனு நினைச்சி எவனும் இது வரைக்கும் பழமொழி சொன்னதில்லை//

பன்னென்டு மணிக்கு எந்திருக்கறவங்களுக்காக நீங்க ஒரு புதுமொழி சொல்லுங்க அண்ணா ;)

//“வானமோ நீலம்...
நீதான் என் பாலம்”//

அண்ணா…ஒரு முடிவோட தான் எழுத ஆரம்பிச்சிருக்கீங்க போல :)
ஆனா ஹீரோ பேரை நீங்க இன்னும் சொல்லலை :) கதை தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு…

நானும் ஒரு தொடர் எழுத ஆரம்பிச்சிட்டேன்…படிச்சிட்டு சொல்லுங்க…

Raghav said...

சூப்பர்.. தொடக்கம் நல்லாருக்கு சாமியோவ்..

உங்ககிட்டருந்து இப்புடி ஒரு ஜாலியான கதை படிச்சு ரொம்ப நாளாச்சு.. கலக்கிஃபையிங் பாலாஜி :)

Karthik said...

ha..ha. Really nice. :))

G3 said...

//“அப்படி நான் சொல்லி அவ புரிஞ்சிக்கலைனா?”

“அவ புத்திசாலினு புரிஞ்சிட்டு ஃபிரியா விடு. //

:))))))))))))))))))))))))))))))))))))

Adutha part-kku waiting :D

கிரி said...

//ஆஹா முத்தத்துக்கும், ரத்தத்துக்கும் நடுவுல இது என்ன புது சத்தம்?”//

:-)))))))

வெட்டிப்பயல் said...

//Thamizhmaangani said...
ம்ம்...நல்லா தான் போகுது...//

மிக்க நன்றி தமிழ்மாங்கனி :)

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
//“ஆஹா முத்தத்துக்கும், ரத்தத்துக்கும் நடுவுல இது என்ன புது சத்தம்?”//

LOL :-D

//இந்த நேரம் வரைக்கும் எந்த நாயும் தூங்காதுனு நினைச்சி எவனும் இது வரைக்கும் பழமொழி சொன்னதில்லை//

பன்னென்டு மணிக்கு எந்திருக்கறவங்களுக்காக நீங்க ஒரு புதுமொழி சொல்லுங்க அண்ணா ;)
//
மதிய தூக்கத்துக்கு தான் புது மொழி அங்க இருக்கேமா. கதை சரியா படிக்கலையா?

//
//“வானமோ நீலம்...
நீதான் என் பாலம்”//

அண்ணா…ஒரு முடிவோட தான் எழுத ஆரம்பிச்சிருக்கீங்க போல :)
ஆனா ஹீரோ பேரை நீங்க இன்னும் சொல்லலை :) கதை தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு…
//
ஹீரோ பேரா முக்கியம்.... ஹீரோயின் பேரு தான் இருக்கே :)

ஹீரோ பேர் அடுத்த பகுதில வரும்மா.

கதை தலைப்பு - உபயம் : ஜாவா பாவலர் கப்பிப்பய. இப்பெல்லாம் தலைப்பு வைக்க தான் கஷ்டமா இருக்கு :)

//
நானும் ஒரு தொடர் எழுத ஆரம்பிச்சிட்டேன்…படிச்சிட்டு சொல்லுங்க…
//
சூப்பர்... இன்னைக்கு ஆபிஸ் போய் படிச்சிட்டு சொல்றேன்மா :)

எப்படியும் நச்சுனு தான் இருக்கும் :)

வெட்டிப்பயல் said...

//Raghav said...
சூப்பர்.. தொடக்கம் நல்லாருக்கு சாமியோவ்..
//
டாங்கிஸ் ராகவ் :)

//
உங்ககிட்டருந்து இப்புடி ஒரு ஜாலியான கதை படிச்சு ரொம்ப நாளாச்சு.. கலக்கிஃபையிங் பாலாஜி :)//
நானும் இப்படி ஒரு ஜாலியான பதிவு எழுதி ரொம்ப நாள் ஆச்சு. அதான் :)

வெட்டிப்பயல் said...

// Karthik said...
ha..ha. Really nice. :))//

மிக்க நன்றி கார்த்திக் :)

வெட்டிப்பயல் said...

//G3 said...
//“அப்படி நான் சொல்லி அவ புரிஞ்சிக்கலைனா?”

“அவ புத்திசாலினு புரிஞ்சிட்டு ஃபிரியா விடு. //

:))))))))))))))))))))))))))))))))))))

Adutha part-kku waiting :D//

சீக்கிரமே யோசிச்சிட்டு போடறேன் G3 அக்கா :)

வெட்டிப்பயல் said...

// கிரி said...
//ஆஹா முத்தத்துக்கும், ரத்தத்துக்கும் நடுவுல இது என்ன புது சத்தம்?”//

:-)))))))//

டாங்கிஸ் கிரி :)

மணிகண்டன் said...

//அப்படி நான் சொல்லி அவ புரிஞ்சிக்கலைனா?”

அவ புத்திசாலினு புரிஞ்சிட்டு ஃபிரியா விடு. //

டாப் டக்கரு !

நிலாக்காலம் said...

ஹைய்யா.. புதுசா ஒரு கதை!! :D

கப்பி | Kappi said...

:))

வெட்டிப்பயல் said...

//மணிகண்டன் said...
//அப்படி நான் சொல்லி அவ புரிஞ்சிக்கலைனா?”

அவ புத்திசாலினு புரிஞ்சிட்டு ஃபிரியா விடு. //

டாப் டக்கரு !
//

Dank u Manikandan :)

CVR said...

சூப்பர் காமெடி
//அதுக்கு
இலையோ பச்சை
நீ ஒரு எச்சை” னு அவ கண்டினுயூ பண்ணா என்ன பண்ணுவ?///

LOL!
Nice narration!
Sogama mudikkadheenga please

பாபு said...

கலாய்க்கறது, உங்களுக்கு கை வந்த கலைன்னு நல்லா தெரியுது

Sanjai Gandhi said...

//இந்த கதை எப்படி போகும்னு எனக்கே தெரியாது... இன்னும் எத்தனை பார்ட்னும் தெரியாது... இனிமே தான் யோசிக்கனும் :)//

இதெல்லாம் ஒரு பொழப்பு!

வெட்டிப்பயல் said...

//நிலாக்காலம் said...
ஹைய்யா.. புதுசா ஒரு கதை!! :D//

நன்றி நிலாக்காலம் :)

வெட்டிப்பயல் said...

//கப்பி | Kappi said...
:))//

:)

வெட்டிப்பயல் said...

//CVR said...
சூப்பர் காமெடி
//அதுக்கு
இலையோ பச்சை
நீ ஒரு எச்சை” னு அவ கண்டினுயூ பண்ணா என்ன பண்ணுவ?///

LOL!
Nice narration!
Sogama mudikkadheenga please//

டாங்கிஸ் தல...

சோகமா எல்லாம் முடிக்க மாட்டேன்... நோ ரென்சன் :)

தொடர் கதை எப்பவுமே சோகமா இருக்காது.. இது ரவுசுக்கு எழுதற கதை :)

வெட்டிப்பயல் said...

// பாபு said...
கலாய்க்கறது, உங்களுக்கு கை வந்த கலைன்னு நல்லா தெரியுது//

ஹி ஹி ஹி... ரத்தத்துலயே ஊறி போச்சு :)

வெட்டிப்பயல் said...

//SanJaiGan:-Dhi said...
//இந்த கதை எப்படி போகும்னு எனக்கே தெரியாது... இன்னும் எத்தனை பார்ட்னும் தெரியாது... இனிமே தான் யோசிக்கனும் :)//

இதெல்லாம் ஒரு பொழப்பு!//

ஹி ஹி ஹி...

இப்படி தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நெல்லிக்காய்னு ஒரு தொடர் எழுதினேன்.. அது பனிரெண்டு பாகம். அந்த கதைக்கு அப்ப விமர்சனமே மூணு பேர் எழுதினாங்க :)

Sanjai Gandhi said...

//SanJaiGan:-Dhi said...

//இந்த கதை எப்படி போகும்னு எனக்கே தெரியாது... இன்னும் எத்தனை பார்ட்னும் தெரியாது... இனிமே தான் யோசிக்கனும் :)//

இதெல்லாம் ஒரு பொழப்பு!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இது நான் இல்ல... மாநக்கல் சிபியின் திரு விளையாடல்.. :((

வெட்டிப்பயல் said...

//SanJaiGan:-Dhi said...
//SanJaiGan:-Dhi said...

//இந்த கதை எப்படி போகும்னு எனக்கே தெரியாது... இன்னும் எத்தனை பார்ட்னும் தெரியாது... இனிமே தான் யோசிக்கனும் :)//

இதெல்லாம் ஒரு பொழப்பு!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இது நான் இல்ல... மாநக்கல் சிபியின் திரு விளையாடல்.. :((//

சேட்ல சொல்லிட்டாரு... பரவாயில்லை ஃபிரியா விடுங்க :)

இம்சை அரசி said...

நல்லா இருக்கு :)

இதுவும் த்ரில்லர் ஸ்டோரியா மாறிடுமா??

மனுநீதி said...

Nalla start pannirukeenga. Mudivu sogamanatha irukkathunu namburen.

Poornima Saravana kumar said...

//இந்த கதை எப்படி போகும்னு எனக்கே தெரியாது... இன்னும் எத்தனை பார்ட்னும் தெரியாது... இனிமே தான் யோசிக்கனும் :)

//

ம்ம்ம் பெரிய ஆளுங்கன்னா அப்படி தான்!!

Poornima Saravana kumar said...

இண்டரஸ்ட்டா போகுது அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறோம்...

Poornima Saravana kumar said...

//நாதாரி. பன்னெண்டு மணிக்கு காணறது பகல் கனவாடா? அது மதிய கனவு. இந்த நேரம் வரைக்கும் எந்த நாயும் தூங்காதுனு நினைச்சி எவனும் இது வரைக்கும் பழமொழி சொன்னதில்லை//

ரசித்து படித்துச் சிரித்தேன் :)

நாகை சிவா said...

//பொய் சொன்னால்... நேசிப்பாயா?//

பொய் சொன்னா மட்டும் தான் நேசிப்பாங்களாம்...

அதுனால தான் உண்மை சொன்னால் நேசிப்பாயா என்று எழுதினான்...

;))))

வெட்டிப்பயல் said...

//இம்சை அரசி said...
நல்லா இருக்கு :)
//
மிக்க நன்றி இம்சை அரசி...

//
இதுவும் த்ரில்லர் ஸ்டோரியா மாறிடுமா??//
To be frank, தெரியல :)

வெட்டிப்பயல் said...

//Ullathil Irundhu.......... said...
Nalla start pannirukeenga. Mudivu sogamanatha irukkathunu namburen.//

மிக்க நன்றி உள்ளத்தில் இருந்து...

கண்டிப்பா சோகமா இருக்காது :)

வெட்டிப்பயல் said...

// Poornima Saravana kumar said...
//இந்த கதை எப்படி போகும்னு எனக்கே தெரியாது... இன்னும் எத்தனை பார்ட்னும் தெரியாது... இனிமே தான் யோசிக்கனும் :)

//

ம்ம்ம் பெரிய ஆளுங்கன்னா அப்படி தான்!!

9:39 AM//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரண்களப்படுத்திடறாங்கப்பா :)

வெட்டிப்பயல் said...

// Poornima Saravana kumar said...
இண்டரஸ்ட்டா போகுது அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறோம்...//

அடுத்த பாகத்தை இன்னைக்கு ராத்திரி போட்டுடறேன் சிஸ்டர் :)

வெட்டிப்பயல் said...

// நாகை சிவா said...
//பொய் சொன்னால்... நேசிப்பாயா?//

பொய் சொன்னா மட்டும் தான் நேசிப்பாங்களாம்...

அதுனால தான் உண்மை சொன்னால் நேசிப்பாயா என்று எழுதினான்...

;))))//

நம்ம ஹீரோயின் எந்த ரகம்னு தெரியலையே :)

Divyapriya said...

//மதிய கனவு மறக்காது//

சரியா கவணிக்கலண்ணா! இப்ப தான் பாக்கறேன்! சூப்பர் புதுமொழி :))

SUBBU said...

நல்லா இருக்கு.

JSTHEONE said...

Sooooooper dhool