தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, September 24, 2008

I am an Hosteler - 1

என்னுடைய ஹாஸ்டல் அனுபவங்களை பத்தி நிறைய எழுதனும்னு ஆசை. எனக்கு கடலூர் புனித வளனார் பள்ளியில படிச்சேன் என்பது ரொம்ப பெருமையான விஷயம். நான் அதுக்கு அப்பறம் +2 ராசிபுரம் SRVல படிச்சிருந்தாலும், நீ எந்த பள்ளியில படிச்சனு யாராவது கேட்டா உடனே கடலூர் St.Joseph Schoolனு சொல்லிடுவேன். எனக்கு அந்த பள்ளி அவ்வளவு சந்தோஷங்களை கொடுத்திருக்கிறது.

நல்ல ஆசிரியர்கள், நல்ல கல்வி, ஒழுக்கம் (ரொம்ப இல்லைனாலும் ஓரளவுக்கு பின்பற்ற முயல்கிறேன்), நல்ல நண்பர்கள் எல்லாத்தையும் எனக்கு கொடுத்தது அந்த பள்ளி. அப்பறம் என் பள்ளியோட தாரக மந்திரம் "உழைப்பே உயர்வு தரும்" எனக்கு இப்பவும் வாழ்க்கைல ஒரு பிடிப்பை தருகிறது.

நான் வேலைக்கு சேர்ந்த பிறகும், ஏன் இந்த மூணு நாள் உட்கார்ந்து சர்டிஃபிகேஷனுக்கு படிக்கும் போதும் கனவுல நான் அங்க படிக்கிற மாதிரியும் ஸ்டடி ஹால்ல உட்கார்ந்திருக்கிற மாதிரியும், கொடில துணி போடறது, மழை வந்தா வேகமா ஓடிப்போய் துணியெல்லாம் எடுத்து
ஏதாவது க்ளாஸ் ரூம் ஜன்னல்ல போடறது, மழை அடிக்கும் போது வேகமா எழுந்து நண்பர்களை எல்லாம் எழுப்பி வரண்டால இருந்து ஏதாவது க்ளாஸ் ரூம்ல எல்லாருக்கும் படுக்க எடம் பார்த்து படுக்குறது எல்லாம் ஞாபகம் வரும். படுக்க இடமில்லைனா டெஸ்க் பெஞ்ச் எல்லாம் நகற்றி போட்டு படுப்போம். காலைல எழுந்து எல்லாத்தையும் சரி பண்ணிடனும்.

சரி இதை பத்தி எழுதினா ஒரு பெரிய தொடரே வரும். இப்போழுது என்னோட தினசரி டைம் டேபிள் மட்டும் எழுதறேன். பின்னாடி எழுத பயன்படும். முக்கியமான ஒரு விஷயம், அமெரிக்கால இருந்து அமெரிக்கர்களோட இனிமையான அணுகுமுறையை உணர்வதற்கும் ஆப்கானிஸ்தான்லயோ ஈராக்லயோ இருக்கற அமெரிக்கர்களோட அணுகுமுறைக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கோ அதே அளவு காலேஜ் ஹாஸ்டலுக்கும் பள்ளிக்கூட ஹாஸ்டலுக்கும் வித்தியாசமிருக்கு. தெரியாதவங்க ஏ நாகூர் பள்ளில படிச்ச பசங்களை கேக்கறது உத்தமம். அங்க தான் நூத்துக்கு நூறு வாங்கினாலும் அடி விழும். (அந்த பயத்துல தான் அடுத்த தடவை ஒழுங்கா படிப்பாங்கனு)

ஹாஸ்டல்னா ஒரு நூறு இருநூறு பேரை நீங்க கற்பனை பண்ணிருந்தீங்கனா வெல்கம் டூ செயிண்ட் ஜோஸப்... இங்க ஆயிரம் பேருக்கு மேல ஹாஸ்டல்ல படிப்பாங்க. சாப்பாடே மூணு பேட்ச் நடக்கும். ஒரு க்ளாஸ்க்கு எண்பது பேர் இருப்பாங்க. நான் பத்தாவதுல "M" செக்ஷன்.
இப்ப இந்த பள்ளில எத்தனை பேர் படிப்பாங்கனு கணக்கு போட்டு பாருங்க.

காலை 5:30 : மணி அடிக்கும். எழுந்திரிக்கணும். அஞ்சு நிமிஷத்துல எழுந்திரிக்கலைனா வார்டன் இல்லை ஃபாதர் பிரம்போட வருவாங்க. அடியோட எழுந்திரிக்கணும். பத்தாவது, பதினோன்னாவது, பனிரெண்டாவது மக்களுக்கு மட்டும் தான் பெட் ரூம். மீதி மக்களுக்கு எல்லாம் க்ளாஸ் ரூம்
வராண்டா தான். அங்க இருந்து எழுந்து, போர்வையை மடிச்சி வெச்சி தலையணையும் போர்வையையும், பாயோட சுருட்டி எந்த பெட் ரூம்ல கொண்டு போய் ஏதாவது ஒரு இடத்தை பார்த்து வைக்கணும். தினமும் ஒரே ஏரியால வெச்சா ஞாபகமா ராத்திரி வந்து எடுத்துக்கலாம். இல்லைனா ராத்திரி கஷ்டப்படணும்.

எழுந்து போய் பல்லு விளக்கிட்டு முகம் கழுவிட்டு தலை சீவி, தெளிவான முகத்தோட படிக்க உட்காரணும்.

5:55 AM : ஸ்டெடி பெல். இந்த நேரத்துல எல்லாரும் ஸ்டெடி ஹால்ல புத்தகத்தை விரிச்சி உட்கார்ந்திருக்கனும். ஒவ்வொருவருக்கும் ஒரு டெஸ்க் இருக்கும். அதுல தான் புத்தகம், முகம் பார்க்கிற கண்ணாடி, சீப்பு, பவுடர், விபூதி (நான் எப்பவும் விபூதி வைப்பேன். பவுடர் அடிக்க மாட்டேன். அதுவே நல்லா தெளிவா இருக்கானு காட்டிடும்) எல்லாம் இருக்கும். 5:45க்கெல்லாம் பல்லு விளக்கிட்டு வந்து உட்கார்ந்துட்டா பத்து நிமிஷத்துல படிக்க தயாரா ஆகிடலாம்.

ஸ்டெடி டைம்ல இடத்தை விட்டு நகரக்கூடாது, பேசக்கூடாது. இந்த ஸ்டெடில எதுவும் எழுத கூடாது. காலைல படிச்சா தெளிவா மண்டைல ஏறும் என்பதால் இந்த ஸ்டெடி டைம் படிக்க மட்டுமே. நான் இந்த ஸ்டெடில சைன்ஸ் மட்டும் தான் படிப்பேன். கணக்கு பரிட்சை தவிர மத்த நாட்களில் கணக்கு கூட இந்த ஸ்டெடியில் பண்ண கூடாது.

6:45 - 6:55 - Recreation Time (அப்படி தான் சொல்லுவாங்களே. தமிழ்ல எல்லாம் சொல்ல மாட்டோம்). இந்த நேரத்துல நியூஸ் போடுவாங்க. நான் புயல் காலத்துல மட்டும் நியூஸ் கேட்பேன். முக்கால்வாசி சரியா இருக்கும். கடலோரமா இருக்கறதால வருஷா வருஷம் புயல் வரும். 8:45 முதல் 9:30 வரை ஓரளவு மழை பெய்தாலும் பள்ளி விடுமுறை தான். ஏன்னா பக்கத்து கிராமங்களிலிருந்து வரும் மக்கள் அதிகம். மழை இல்லாத காலங்களில் இந்த பத்து நிமிஷம் தூங்கிடுவேன். சில சமயம் 400 மீட்டர் கிரவுண்டை ஓட சொல்லுவாங்க. ஓடிட்டு வந்து தூங்குவேன்.

6:55 - 7:45 - அடுத்த ஸ்டெடி. இதுவும் படிக்க மட்டும் தான். ஆனா முதல் ஸ்டெடி அளவுக்கு நான் ஆக்டிவா இருக்க மாட்டேன். அதனால God
Father (அதாங்க வரலாறு) இல்லைனா தமிழ் படிக்க ஆரம்பிச்சிடுவேன். இது ரெண்டும் படிக்கும் போது தானா ஆக்டீவாகிடுவேன். எனக்கு பிடிச்ச ரெண்டு சப்ஜெக்ட்ஸ் இது தான். வேற ஏதாவது படிச்சா தூங்கறது வாய்ப்பு அதிகம். அப்படி ஸ்டெடி டைம்ல தூக்கம் வந்தா எழுந்து நின்னு படிக்கலாம். அப்படி இல்லாம தூங்கி வழிஞ்சா கண்டிப்பா ஒரு அஞ்சி பத்து நிமிஷத்துல மாட்டிக்குவோம். பிரம்பால இரண்டு முதல் நான்கு அடிகள் உறுதி.

7:45 - 8:45 - Break Fast டைம். இந்த நேரத்துல மொத்தம் மூணு பேட்ச் நடக்கும். முதல் பேட்ச் நர்சரி. அடுத்த பேட்ச் பத்தாவது வரை. கடைசி பேட்ச் +1, +2 மற்றும் கோச்சிங் சென்று வரும் மாணவர்கள். இந்த கோச்சிங் பத்தி இன்னொரு பதிவுல விவரமா சொல்றேன்.

(நானும் ரெண்டு வருஷம் கோச்சிங் போயிருக்கேன். இது படிக்க இல்லை. விளையாட. எங்க பள்ளி எப்பவுமே விளையாட்டுல கலக்கற பள்ளி. நான் படிக்கும் போது ஸ்டேட்ல ஃபுட் பால், ஹாக்கி, கோ-கோ, பால் பேட்மிட்டன் நாலுலயும் ரோலிங் கப் வாங்கினாங்க. ரோலிங் கப்னா தொடர்ந்து மூன்று வருஷம் ஸ்டேட்ல கோல்ட் மெடல்னு அர்த்தம். மீதி நிறைய ஸ்போர்ட்ஸ்லயும் வாங்கினாங்க. ஆனா தொடர்ந்து மூன்று வருஷம் வாங்க முடியல.)

இந்த நேரத்துல மத்த பேட்ச் பசங்க சாப்பிடும் போது நம்ம க்ளாஸிக்கு ரெடியாகிடனும். துணி வைக்கிற பெட்டி எல்லாம் ஒரு ரூம்ல ரேக்ல
இருக்கும். அதுக்கு பேரு பாக்ஸ் ரூம். இதுவும் ரெண்டு மூணு இடத்துல இருக்கும். எட்டாவது வரைக்கும் ஒரு இடம், ஒன்பது பத்தாவதுக்கு ஒரு
இடம், ஹையர் செகண்டரிக்கு ஒரு இடம்.

ஹாஸ்டல் பசங்க பொதுவா காலைல குளிக்க மாட்டாங்க. சாயங்காலம் விளையாடிட்டு வந்து தான் குளிப்பாங்க. கோச்சிங் போற பசங்க மட்டும் காலைல ப்ராக்டீஸ் முடிச்சிட்டு வந்து குளிப்பாங்க.

8:45 - 9:25 - அடுத்த ஸ்டெடி. இதுல ஏதாவது ஹோம் ஒர்க் இருந்தா எழுதலாம். கணக்கு போடலாம். இந்த ஸ்டெடி தான் பொதுவா நான் கணக்கு ஹோம் ஒர்க் எழுத பயன்படுத்துவேன். இந்த ஸ்டெடில இருந்து நேரா எழுந்து ஸ்கூலுக்கு போயிடனும். போகற வழியில பேசக்கூடாது. லைனா போகனும்...

முக்கியமான விஷயம். நான் படிச்சது 93ல இருந்து (சில்வர் ஜீபிலி இயர் - 125th Year) 97 அக்டோபர் வரை. +1 பாதியிலே பள்ளி மாறிட்டேன்.
நான் படிக்கும் போது Principal - Ref. Fr. Ratchagar. ஹாஸ்டல் ஃபாதர் - Ref.Fr. Agnel.

எங்க ஸ்கூல் பாடலோட முதல் பேரா மட்டும் ஞாபகமிருக்கு.

உழைப்பின் நல் மேன்மையை நாம் உணர்ந்திடுவோம்
உழைப்பினால் உயர்ந்திடுவோம் -
உண்மையுடன் நல் ஒழுக்கமும் சேர்ந்திட
உன்னத நிலையடைவோம்


(தொடரும்...)

25 comments:

Jayaprakash Sampath said...

காலேஜ் ஆஸ்டலோன்னு நினைச்சேன்... இஸ்கூல் ஆஸ்டல்னா, கொஞ்சம் 'ட்ரை' யா இருக்குமே :-)

வெட்டிப்பயல் said...

//Prakash said...
காலேஜ் ஆஸ்டலோன்னு நினைச்சேன்... இஸ்கூல் ஆஸ்டல்னா, கொஞ்சம் 'ட்ரை' யா இருக்குமே :-)
//

காலேஜ் ஹாஸ்டலை பத்தி எழுத நிறைய பேர் இருக்காங்களே. இது ஒரு டயரி மாதிரி.

இதுல மனித நேயம், நட்பு எல்லாம் நிறைய இருக்கும் :)

வெண்பூ said...

அது என்னா ஸ்கூலா? மிலிட்டரியா? :)))

அப்புறம், என் சொந்த ஊர் இராசிபுரம்தான். எஸ்.ஆர்.வி.யில் படித்தவர் நீங்கள் என்று கேட்கும்போது சந்தோசமாக இருக்கிறது.

வெட்டிப்பயல் said...

//வெண்பூ said...
அது என்னா ஸ்கூலா? மிலிட்டரியா? :)))
//

சேரும் போது மிலிட்டிரி மாதிரி தான் தெரியும். போக போக மிகவும் பிடித்து விடும்... இப்ப ஒரு டைம் மிஷின் கிடைத்தால் நான் என்னுடைய எட்டாவது வகுப்பிற்கு சென்று விடுவேன் :)

//
அப்புறம், என் சொந்த ஊர் இராசிபுரம்தான். எஸ்.ஆர்.வி.யில் படித்தவர் நீங்கள் என்று கேட்கும்போது சந்தோசமாக இருக்கிறது.
//

ராசிபுரமா நீங்க??? சூப்பர்... எனக்கு ராசிபுரம் க்ளைமேட் ரொம்ப பிடிக்கும். நிறைய மலை. சுத்தி பச்சை பசேல்னு. அங்க தயிர் சாப்பிட்ட மாதிரி வாழ்க்கைல எங்கயும் சாப்பிட்டதில்லை. அவ்வளவு அட்டகாசமான தயிர்.

அதே மாதிரி குருமா கொழம்பு எல்லாம் நல்லா சூப்பரா இருக்கும். மசாலா ஐட்டம்ஸ்க்கு பெஸ்ட் அது தான்... வருஷா வருஷம் அங்க சந்தைக்கு மசாலா வாங்க எங்க ஊர்ல இருந்து நிறைய பேர் போவாங்க :)

மங்களூர் சிவா said...

ஸ்கூலாவது கோ-எட்டா???
:((((

முரளிகண்ணன் said...

சுவராசியமாக இருக்கிறது. இன்னும் சுத்துங்கள் (கொசு வர்த்தியை)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...
ஸ்கூலாவது கோ-எட்டா???
:((((
//

சொல்ல மறந்துட்டேன்... அது பசங்க ஸ்கூல் :)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
சுவராசியமாக இருக்கிறது. இன்னும் சுத்துங்கள் (கொசு வர்த்தியை)
//

மிக்க நன்றி மு.க :)

ரவி said...

வெல்கம் டு த ஜங்கிள் !!!

நான் ஒரு போர்டிங்கர் அப்படீன்னு போர்டிங் பசங்க எழுதலாமா என்று குழலியை கேட்டு சொல்லவும்...:))))

ஒரு முறை நான் என்னுடைய பாக்ஸ் சாவியை தொலைச்சுட்டேன்...1992 அப்படீன்னு நினைக்கிறேன். அப்போ அவர் போர்டிங் ஹவுஸ்க்கு மட்டும் பாதர். சாவியை தொலைச்சவங்க மொதல்ல வார்டன் / பாதர் யார்கிட்டயாவது கேக்கவும். அது தான் ரூல்ஸ். காரணம், யார் சாவியை கண்டெடுத்தாலும் முதலில் இவர்களிடம் ஒப்படைக்கனும்....

அதனால அவருடைய ரூமுக்கு போனேன்...

ரொம்ப சீரியஸா ஏதோ எழுதிக்கிட்டிருந்தார்.

பாதர், என்னோட பாக்ஸ் சாவியை காணோம்னேன்...

"எங்க தொலச்ச" அப்படீன்னு கேட்டார்..

நான், பட்டுன்னு, "பாதர், எங்க தொலைஞ்சதுன்னு தெரிஞ்சா நானே எடுத்துக்கிட மாட்டேனா " அப்படீன்னேன்..

1996 ல +2 முடிஞ்சு போகும்போது கூட இதை மறக்காமே சொல்லிக்காட்டினார்...

:))))

வெட்டிப்பயல் said...

//செந்தழல் ரவி said...
வெல்கம் டு த ஜங்கிள் !!!

நான் ஒரு போர்டிங்கர் அப்படீன்னு போர்டிங் பசங்க எழுதலாமா என்று குழலியை கேட்டு சொல்லவும்...:))))

ஒரு முறை நான் என்னுடைய பாக்ஸ் சாவியை தொலைச்சுட்டேன்...1992 அப்படீன்னு நினைக்கிறேன். அப்போ அவர் போர்டிங் ஹவுஸ்க்கு மட்டும் பாதர். சாவியை தொலைச்சவங்க மொதல்ல வார்டன் / பாதர் யார்கிட்டயாவது கேக்கவும். அது தான் ரூல்ஸ். காரணம், யார் சாவியை கண்டெடுத்தாலும் முதலில் இவர்களிடம் ஒப்படைக்கனும்....

அதனால அவருடைய ரூமுக்கு போனேன்...

ரொம்ப சீரியஸா ஏதோ எழுதிக்கிட்டிருந்தார்.

பாதர், என்னோட பாக்ஸ் சாவியை காணோம்னேன்...

"எங்க தொலச்ச" அப்படீன்னு கேட்டார்..

நான், பட்டுன்னு, "பாதர், எங்க தொலைஞ்சதுன்னு தெரிஞ்சா நானே எடுத்துக்கிட மாட்டேனா " அப்படீன்னேன்..

1996 ல +2 முடிஞ்சு போகும்போது கூட இதை மறக்காமே சொல்லிக்காட்டினார்...

:))))
//

எழுதுங்க எழுதுங்க :)

நான் அவரோட ஃபேவரைட் ஸ்டூடண்டா இருந்தேன். அவர் ஸ்கூல்ல இருந்து போனவுடனே எனக்கும் அங்க படிக்க பிடிக்கலை. அதுவும் நான் பாதியில ஸ்கூல் மாற காரணம் :)

திவாண்ணா said...

அட! எங்க ஊர், எங்க ஸ்கூலா? சரி சரி!
:-))

வெட்டிப்பயல் said...

//திவா said...
அட! எங்க ஊர், எங்க ஸ்கூலா? சரி சரி!
:-))//

நீங்களும் கடலூர் புனித வளனாரா???

திவாண்ணா said...

ஆமாம் வெட்டி. 9,10,11 அங்கேதான். 60 கள் கடேசில...

:-))

வெட்டிப்பயல் said...

//திவா said...
ஆமாம் வெட்டி. 9,10,11 அங்கேதான். 60 கள் கடேசில...

:-))//

ஆஹா... உங்களுக்கு அவ்வளவு வயசா? எப்பவாது மரியாதை குறைவா பேசியிருந்தா மன்னிச்சிடுங்க...

திவாண்ணா said...

அட அப்படிக்கூட செஞ்சு இருப்பீங்களா என்ன?
மரியாதை குறைவா எழுதறவங்க ப்ளாக்கெல்லா பாக்கிறதை நிறுத்திடுவேன். :-)))))))
எனக்குன்னு இல்லை மத்தவங்களுக்கும்தான்..

வெட்டிப்பயல் said...

//திவா said...
அட அப்படிக்கூட செஞ்சு இருப்பீங்களா என்ன?
மரியாதை குறைவா எழுதறவங்க ப்ளாக்கெல்லா பாக்கிறதை நிறுத்திடுவேன். :-)))))))
எனக்குன்னு இல்லை மத்தவங்களுக்கும்தான்..

12:55 AM//

இல்லை... நிறைய பேர் நான் பின்னூட்டத்துல எல்லாம் போட்டு தாக்கறேனு சொல்றாங்க. அதான். மனசறிஞ்சி எதுவும் பேசனதில்லை :)

அப்பறம் 60களில் எல்லாம் நம்ம ஸ்கூல் எப்படி இருந்துச்சு. அப்பவும் ஸ்போர்ட்ஸ்ல எல்லாம் கலக்கினாங்களா?

சரவணகுமரன் said...

//அதே அளவு காலேஜ் ஹாஸ்டலுக்கும் பள்ளிக்கூட ஹாஸ்டலுக்கும் வித்தியாசமிருக்கு. //

ஆமாம்... அங்க ஸ்டுடன்ஸ் பயந்து இருப்பாங்க... இங்க வாத்தியாருங்க பயந்து இருப்பாங்க... நீங்க கூட உங்க வாத்தியார ரூமுக்குள்ள போட்டு பூட்டுனதா கேள்விப்பட்டேன்... :-)

வெட்டிப்பயல் said...

//சரவணகுமரன் said...
//அதே அளவு காலேஜ் ஹாஸ்டலுக்கும் பள்ளிக்கூட ஹாஸ்டலுக்கும் வித்தியாசமிருக்கு. //

ஆமாம்... அங்க ஸ்டுடன்ஸ் பயந்து இருப்பாங்க... இங்க வாத்தியாருங்க பயந்து இருப்பாங்க... நீங்க கூட உங்க வாத்தியார ரூமுக்குள்ள போட்டு பூட்டுனதா கேள்விப்பட்டேன்... :-)

1:06 AM//

பூட்டு போட்டு பட்டாசை உள்ளார போட்டதெல்லாம் நான் இல்லைப்பா. அது எங்கூட சுத்தன பசங்க :)

Anonymous said...

என்னாது 60 ல பியூசியா ? என்ன கொடுமை திவா அய்யா இது ? அப்போ உங்களுக்கு இப்ப அறுவத்தஞ்சு வயசுக்கு மேலயா ? அப்போ எல்லாம் நம்ப இஸ்கூல் எப்படி இருந்ததுன்னு எழுத கூடாதா ?

Divyapriya said...

நான் கூட காலேஜ் லூட்டி தான் எழுதி இருக்க போறீங்கன்னு, பயங்கர குஷியா படிக்க ஆரம்பிச்சேன் அண்ணா. ஆனா இது கூட, வித்யாசமா ரொம்ப நல்லா இருந்துச்சு...
ஆமா, இப்பெல்லாம் கோழியின் அட்டகாசங்கள் எல்லாம் போடறதில்லையா? அட்டகாசம் எல்லாம் முடிஞ்சிடுச்சா :-(

வெட்டிப்பயல் said...

//செந்தழல் ரவி said...
என்னாது 60 ல பியூசியா ? என்ன கொடுமை திவா அய்யா இது ? அப்போ உங்களுக்கு இப்ப அறுவத்தஞ்சு வயசுக்கு மேலயா ? அப்போ எல்லாம் நம்ப இஸ்கூல் எப்படி இருந்ததுன்னு எழுத கூடாதா ?
//

ஓ +1னா பியூசியா? அது தெரியாம, என்ன மாதிரி +2 மட்டும் வேற பள்ளிக்கூடம் போலிருக்குனு நினைச்சிக்கிட்டேன் :))

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
நான் கூட காலேஜ் லூட்டி தான் எழுதி இருக்க போறீங்கன்னு, பயங்கர குஷியா படிக்க ஆரம்பிச்சேன் அண்ணா. ஆனா இது கூட, வித்யாசமா ரொம்ப நல்லா இருந்துச்சு...//

இதை அனுபவிச்சவங்க ரொம்ப குறைவு. அதான் இதை எழுதலாம்னு எழுத ஆரம்பிச்சிட்டேன் :)

//ஆமா, இப்பெல்லாம் கோழியின் அட்டகாசங்கள் எல்லாம் போடறதில்லையா? அட்டகாசம் எல்லாம் முடிஞ்சிடுச்சா :-(
//
கோழியோட பேசியே நாளாச்சு. இந்தியா போனா நிறைய விஷயங்கள் கிடைக்கும். அப்ப எழுதலாம் :)

திவாண்ணா said...

//என்னாது 60 ல பியூசியா ?//

69

// என்ன கொடுமை திவா அய்யா இது ?//
இது என்ன கொடுமை ரவி?
:-))

// அப்போ உங்களுக்கு இப்ப அறுவத்தஞ்சு வயசுக்கு மேலயா ?//
54

// அப்போ எல்லாம் நம்ப இஸ்கூல் எப்படி இருந்ததுன்னு எழுத கூடாதா ? //

ம்ம்ம்ம். நேரம்தான் இல்லை. பாக்கலாம் ஒரு நாள்.....

விஜய் ஆனந்த் said...

:-))))...

அப்படியே ஊர்ப்பெருமையும் கொஞ்சம் எடுத்து வுடுங்க....

ஜே கே | J K said...

//+2 ராசிபுரம் SRVல படிச்சிருந்தாலும்//

நம்ம ஊர்ல தான் படிச்சீங்களா?