"கிருஷ்ணா, நீ சொல்லி தானே இன்னைக்கு காலைல பொண்ணு பார்க்க வரோம்னு சொல்லியிருந்தோம். இப்ப திடீர்னு வேலை இருக்குனு ஆபிஸ் கிளம்பிட்டிருந்தா எப்படி?" சூடான காப்பியை ஆற்றி கொண்டே பேசி கொண்டிருந்த ராஜலக்ஷ்மிக்கு நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பது வயதிற்குள்ளிருக்கும்.
"அம்மா. திடீர்னு ஒரு ப்ரடக்ஷன் இஷ்ஷூமா. இன்னைக்கு ராத்திரிக்குள்ள முடிச்சாகணும். நாளைக்கு காலைல அவனுங்க ஆபிஸ் வரும் போது அது சரியா இருக்கனும். அமெரிக்கன் க்ளைண்டா இருந்தா பிரச்சனையில்லை. இது ஆஸ்ட்ரேலியன் ப்ராஜக்ட். அவுங்களுக்கு நமக்கு முன்னாடி விடிஞ்சிடும்"
"அதெல்லாம் எனக்கு தெரியாது. எப்படியாவது பர்மிஷன் போட்டுட்டு ஒரு மணி நேரமாவது வந்துட்டு போ"
"அம்மா. நான் என்ன பர்மிஷன் போடறதுக்கு அப்பா மாதிரி கவர்மெண்ட் எம்ப்ளாயியா? ரெண்டு மணி நேரம் பர்மிஷன்னு சொல்லிட்டு அரை நாள் லீவ் போட்டாலும் கண்டுக்காம விடறதுக்கு அது என்ன கவர்மெண்ட் ஆபிஸா?" சொல்லிவிட்டு டீவியில் கல்யாண மாலை பார்த்து கொண்டிருந்த அப்பாவை பார்த்து சிரித்தான்.
"ஏன் அம்மாவும் புள்ளையும் என் தலையை உருட்டறீங்க? அவன் வரலைனா என்ன நீயும் நானும் போய் பார்த்துட்டு வருவோம். பிடிச்சிருந்தா அடுத்த வாரம் இவனையும் கூப்பிட்டு போகலாம்"
"சூப்பர்ப்பா. இந்த டீல் எனக்கு ஓகே"
"என்னங்க இது? ஒரு பொண்ணு வீட்டுக்கு எத்தனை தடவை போவாங்க? அந்த வீட்ல ஒரு வாரம் முழுக்க டென்ஷனா வேற இருக்கும். அது அவுங்களுக்கு வீண் சிரமம் தான். இவன் இன்னைக்கு வரலைனா நாம போய் பார்ப்போம். பிடிச்சிருந்தா ஓகே சொல்லிடுவோம். நாங்க பார்த்து சொன்னா ஓகே தானே? அந்த காலத்துல எல்லாம் உங்க அப்பாவை கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் பார்க்கவேயில்லை"
"உன்னை மாதிரி உன் பையனுக்கும் அதிர்ஷ்டமடிக்குமா என்ன? என்னை மாதிரி அவனும் துரதிஷ்ட சாலியா இருந்தா என்ன பண்ண?"
"சொல்லுவீங்க சொல்லுவீங்க. இந்த வயசுக்கும் உங்களுக்கு வாயிக்கு ருசியா சமைச்சி போடறனில்ல. ஏன் சொல்ல மாட்டீங்க?"
"சரி. உங்க ரெண்டு பேர் ரொமான்ஸையும் நான் போனதுக்கப்பறம் வெச்சிக்கோங்க. நான் எப்படியும் சாயந்திரம் அஞ்சு மணிக்கு வர பார்க்கிறேன்"
"நாலரை ஆறு ராகு காலம். காலைல போயிட்டு வரது தான் உத்தமம். அவுங்களும் டென்ஷனில்லாம ஃப்ரியா இருப்பாங்க"
"ஏன்மா இப்படி உயிரை வாங்கற. எது சொன்னாலும் ஒத்து வராத மாதிரியே சொல்ற?"
"காலைல பதினோரு மணிக்கு நாங்க அங்க வரோம். நீ போய் ஒரு ரெண்டு மணி நேரம் வேலை பார்த்துட்டு நேரா வந்து சேர்ந்துடு. சரியா?"
"சரி. அங்க ரொம்ப நேரமாகாதில்லை?"
"பொண்ணு பாக்க தான் போறோம். நீ வந்து பார்த்துட்டு பத்து நிமிஷத்துல கிளம்பிடலாம். அப்படி ஏதாவது பேசனும்னா நானும் உங்கப்பாவும் பேசிட்டு வரோம். சரியா?"
"சரிம்மா"
வேகமாக வண்டியை எடுத்து கிளம்பினான் கிருஷ்ணா. இவ்வளவு நேரமாகியும் நம்ம கிருஷ்ணாவை சரியா பார்க்கல இல்ல. கிருஷ்ணா சென்னைல ஒரு.... சரி சரி நீங்க நினைக்கிற மாதிரி ஐடி கம்பெனில தான் வேலை பார்க்கிறான். ஐந்தடி பத்து அங்குலம் உயரம். பார்த்தவுடனே தமிழனு சொல்லக்கூடிய நிறம். அதனாலயே ரஜினி ரசிகனானான். வெள்ளைத் தோல் இருக்கறவங்க தான் சினிமால ஹீரோவா இருக்க முடியுங்கறதை உடைச்ச ஒரே காரணத்தாலே அவனுக்கு ரஜினி பிடிச்சிது. அப்பறம் அந்த ஸ்டைல், சுறுசுறுப்பு எல்லாமே பிடிச்சி போச்சு. அவன் முதல் நாள் பார்த்த ரஜினி படங்களின் எண்ணிக்கையும், அதுக்கு அவன் டிக்கெட் வாங்க பட்ட கஷ்டமும் இந்த கதைக்கு தேவையில்லை என்பதால் இதோட நிறுத்திக்கறோம்.
அவனுக்கு பொண்ணு பார்க்க போறோம்னு ஒரு பதட்டமிருந்தது. இருந்தாலும் இந்த ப்ரடக்ஷன் இஷ்ஷுவை முடிச்சிட்டா கொஞ்சம் நிம்மதியா பொண்ணு பார்க்க போகலாம். அங்க போய் என்ன என்ன கேள்வியெல்லாம் கேக்கனும்னு அவன் ஃபிரெண்ட் நித்யா அவனுக்கு ஒரு செக் லிஸ்ட் கொடுத்திருந்தா. அதெல்லாம் பல நாட்களுக்கு முன்னாடியே மனப்பாடம் பண்ணியிருந்தான்.
கிருஷ்ணா ஆபிஸிலிருந்து புறப்படும் பொழுது மணி பத்தரை முடிந்து ஏழரை நிமிடமாகியிருந்தது. அவன் அப்பாவிடம் வழி கேட்டு அவன் அங்கே சென்ற பொழுது மணி பதினொன்று இருபது. சரியாக அவன் வண்டியை நிறுத்தவும் அவன் அப்பாவும், அவன் அப்பா வயதையொத்த ஒருவரும் அவனை அழைத்து செல்ல வெளியே வந்தனர்.
"என்ன கிருஷ்ணா. ட்ராஃபிக் அதிகமா?"
"ஆமாம்பா. வழக்கம் போல தான். வீக் எண்ட் கொஞ்சம் குறைவா இருக்கும்னு நினைச்சேன்"
"இந்த நேரத்துல வீக் டேஸ்ல தான் ட்ராஃபிக் குறைவா இருக்கும். வீக் எண்ட் எல்லா நேரமும் கொஞ்சம் ட்ராஃபிக்கா தான் இருக்கு" சொல்லிவிட்டு அவனை பார்த்தார் அப்பாவோடு வந்தவர்.
"உள்ள வாங்க"
அவன் உள்ளே சென்றவுடன் அவன் அம்மா அருகில் சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.
"ஏன்டா ஏதாவது ஆட்டோ பிடிச்சி வந்திருக்கலாம் இல்ல. வண்டில வந்து தலை முடியெல்லாம் கலைஞ்சி, பொண்ணு பாக்க வந்தவன் மாதிரியா இருக்க?" பொறுமையாக யாருக்கும் கேட்காத வண்ணம் சொன்னாள்.
"நாங்க எல்லாம் உனக்காக தான் காபி கூட குடிக்காம வெயிட் பண்ணிட்டு இருக்கோம்" கிண்டலாக சொன்னார் அவன் அப்பா. அது காபி கொண்டு வரலாம் என்பதற்கான சிக்னல் என்பதை புரிந்து கொண்டான்.
உள்ளேயிருந்து கையில் ஒரு ட்ரேயும் அதில் மூன்று கப் காபியுடன் நீல நிறப்பட்டுப்புடவையில் வந்த பெண்ணை பார்த்தான் கிருஷ்ணா. அவன் கண்கள் விரிந்ததை பார்த்தவுடன் அவனுக்கு அந்த பெண்ணை ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம் என்பதை அவன் அம்மா உணர்ந்து கொண்டாள்.
அமைதியாக வந்த அந்த பெண், சரி இதுக்கு மேல எதுக்கு அந்த பெண்ணுனு சொல்லிட்டு ரம்யானே சொல்லலாம். ரம்யா அனைவருக்கும் காபி கொடுத்துவிட்டு கிட்சனுக்கு சென்றுவிட்டாள்.
.......
கிருஷ்ணா அவன் சீட்டிற்கு சென்று அமரும் போது மணி ஒன்றாக பத்து நிமிடமிருந்தது. அங்கே அவனை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த கார்த்திக், கிருஷ்ணாவின் குழப்பமான முகத்தை பார்த்ததும் அவனுடைய சுழற்நாற்காலியை நகற்றி அருகில் வந்தான்.
"ஏன் டல்லா இருக்க? பொண்ணை பிடிக்கலயா?"
"டேய் அங்க யார் இருந்தா தெரியுமா? நம்ம ஜீனியர் ரம்யாடா? ஞாபகமிருக்கா?"
அதை கேட்டதும் கார்த்திக் சிரித்த சத்தத்தை கேட்டு பக்கத்து க்யூபிக்களிலிருந்து சில தலைகள் எட்டி பார்த்து மறைந்தன.
"ஏன்டா ஜாதகத்துல எந்த காலேஜ்னு இல்லையா?"
"இல்லையே. வெறும் BEனு தான் இருந்தது"
"ஏதாவது பேசனயா?"
"இல்லை. என்ன பேசறதுனு எல்லாமே மறந்து போச்சு. அதுவுமில்லாம நான் அவசரமா வந்திருக்கேனு எங்க அம்மா சொல்லிருந்தாங்க. அதனால உடனே கிளம்பற மாதிரியாகிடுச்சி. எங்க அம்மா, அப்பா அங்க இன்னும் கொஞ்ச நேரமிருந்து பேசிட்டு வரேனு சொல்லியிருக்காங்க"
"நீ என்ன யோசிச்சிட்டிருக்க?"
"டேய் நான் அவளை வெச்சி வினோத்தை ஓட்னது மறந்துட்டியா?"
"ஏன்டா அவங்க ரெண்டு பேரும் சிம்போசியம்ல ஒரு ப்ரோக்ராம் ஆர்கனைஸ் பண்ணாங்க. அவுங்க ரெண்டு பேர் மட்டுமில்லை மொத்தம் அஞ்சு பேர் சேர்ந்து அந்த ப்ரோக்ராம் ஆர்கனைஸ் பண்ணாங்க. அப்ப அந்த பொண்ணுக்கூட அவன் எல்லாரோடையும் போடற மாதிரி கடலை போட்டான். உடனே நீ அவனை அதை வெச்சி ஓட்ட ஆரம்பிச்சிட்ட. அந்த சிம்போசியத்துக்கப்பறம் நீ அவன் அந்த பொண்ணுக்கூட பேசறதை பார்த்திருக்கியா?"
"இல்லை. நான் ஓட்னதுல பயந்து அவன் அதுக்கப்பறம் பேசவேயில்லை. கேண்டீன்ல பார்த்தா கூட வெளிய ஓடிடுவான்."
"நீ அந்த பொண்ணை வெச்சி அவனை ஓட்னது அந்த பொண்ணுக்கு தெரியுமா?"
"தெரியாதுனு தான் நினைக்கிறேன். ஆனா அவுங்க க்ளாஸ் பசங்க ஒரு சிலருக்கு தெரியுமே"
"சரி. இப்ப அதனால பிரச்சனையென்ன?"
"வேற ஒருத்தனை வெச்சி நான் ஓட்டின பொண்ணை எப்படி நானே கல்யாணம் பண்ணிக்கறதுனு ஒரு யோசனை"
"சரி. இப்ப காலேஜ் படிக்கும் போது ரம்யா உன்னை ப்ரப்போஸ் பண்ணியிருந்தா என்ன பண்ணியிருப்ப?"
"அக்சப்ட் பண்ணியிருக்கலாம்"
"ஏன், நான் உன்னை வெச்சி வினோத்தை ஓட்டிட்டு இருக்கேன். அதனால அவனை போய் ப்ரபோஸ் பண்ணுனு சொல்ல வேண்டியது தானே?"
"ஏன்டா நான் என்ன லூசா அப்படி சொல்ல?"
"ஓ இப்ப சமீப காலமா தான் அப்படி ஆகிட்டியோ?"
"டேய் ஏன்டா குழப்பற?"
"ஒழுங்கா உன்னை பிடிச்சிருக்கானு கேளு. பிடிச்சிருக்குனு சொன்னா ஓகே சொல்லிடு. உனக்கும் அவளை பிடிச்சிருக்குனு நல்லா தெரியுது. ஒழுங்கு மரியாதையா பேசி பார்த்துட்டு முடிவு பண்ணு"
"ஹும்ம்ம்"
"என்னடா ஹும்ம்ம்... இப்ப அப்பா அங்க தான இருக்காரு?"
"தெரியல. கிளம்பியிருக்கலாம்"
"சரி நான் ஃபோன் பண்ணி ரம்யா செல்ஃபோன் நம்பர் வாங்கறேன். கொஞ்ச நேரம் கழிச்சி நீ பேசு"
"தப்பா நினைக்க மாட்டாங்களா?"
"ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு"
கார்த்திக் வேகமாக கிருஷ்ணா அப்பாவின் அலைபேசிக்கு அழைத்தான்.
"அப்பா. இன்னும் நீங்க பொண்ணு வீட்ல தான் இருக்கீங்களா?"
" "
"ஆமாம்பா. ரம்யா எங்க ஜீனியர் தான். கிருஷ்ணா எதுவுமே பேசாம வந்துட்டானாம். பிடிச்சிருக்கானு ஒரு வார்த்தையாவது கேக்கனுமாம்.
அவனுக்கு ரம்யா ஃபோன் நம்பர் வாங்கி தாங்களேன்"
" "
"சொல்லுங்க. நோட் பண்ணிக்கறேன்"
" "
"சரி. அவுங்க வீட்ல முன்னாடியே சொல்ல சொல்லிடுங்க. பையன் ஒரு ரெண்டு வார்த்தை பேசனுமாம்னு. சாப்பிட்டு ஃபோன் பண்றோம்"
.....
கார்த்திக் ரம்யாவின் அலை பேசிக்கு அழைக்கும் பொழுது மணி இரண்டு.
"ஹலோ. நான் கிருஷ்ணா ஃபிரெண்ட் கார்த்திக் பேசறேன். நானும் உன் சாரி சாரி உங்களுக்கு சீனியர் தான்."
" "
"ஞாபகமிருக்கா? சூப்பர். இருங்க அவன்கிட்ட கொடுத்துட்டு நான் எஸ்கேப் ஆகறேன்"
கார்த்திக் கிருஷ்ணாவிடம் அலைபேசியை கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
"ரம்யா. சாரி எனக்கு வேலை அதிகமா இருந்துச்சு. அதான் ஒரு வார்த்தை கூட பேச முடியாம வந்துட்டேன்"
" "
"இப்ப மட்டும் எப்படி நேரமிருக்கா? லஞ்ச்க்கு எல்லாம் போயிருக்காங்க. நான் உன்கிட்ட பேசிட்டு போகலாம்னு வெயிட் பண்றேன்"
" "
"பேசிட்டு போய் எப்படியும் சாப்பிடத்தான் போறேன். சரி நான் இதை நேர்ல பார்த்து தான் கேட்கனும்னு நினைச்சேன். பட் சிச்சிவேஷன் சரியா அமைல. உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கறதுல ஓகே தானே?"
" "
"இங்க பாரு. எனக்கும் வீட்ல என்ன சொன்னாலும் ஓகே தான். ஆனா உனக்குனு ஒரு விருப்பம் இருக்குமில்லையா? அதை சொல்லு"
" "
"என்னாது எங்க அம்மா அப்பாவை பிடிச்சிருக்குனு ஓகே சொல்லிட்டியா? சரி தான். நீ கல்யாணம் பண்ணிக்க போறது என்னை தான். அதனால என்னை பிடிச்சிருக்கானு தான் முதல்ல யோசிக்கனும்"
" "
"ஓகே ஓகே. சரி, நான் இப்ப சாப்பிட போறேன். இது தான் என் செல் நம்பர். பேசனும்னு தோணும் போது பண்ணு"
" "
"நானும் பண்றேன். பை"
கிருஷ்ணா கேண்டின் நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
"நான் ஓகே சொல்லிட்டேனு சொன்னதுல இருந்துமா புரியல. இப்ப நீங்க என் விருப்பத்தோடத்தான் என்னை கைப்பிடிக்கனும்னு என் விருப்பத்துக்கு மரியாதை கொடுக்கறதுல இருந்து என் முடிவு சரினு எனக்கு கன்ஃபர்ம் ஆகிடுச்சு. போதுமா?" அவள் கடைசியாக சொன்னது அவன் காதுக்குள் ஒலித்து கொண்டே இருந்தது.
64 comments:
சொந்தக்கதையா...:)
\
பார்த்தவுடனே தமிழனு சொல்லக்கூடிய நிறம்
\
அது என்ன நிறம் அண்ணே...:)
இது காதல்கதைதானே...அப்பறம் ஏன் தலைப்பு இப்படி வச்சிருக்கு...:)
படிச்சாச்சு!! அப்புறமா சேட்டறேன்!!
அடடே பொண்ணு பாக்க போகும் போது கூட என்ன வேலை நல்லாயில்லே...
கதை செம்மயா இருக்கு..வழக்கமான வெட்டி அண்ணன் நக்கல் விக்கலோட ;)
//தமிழன்... said...
சொந்தக்கதையா...:)//
நேத்து அதிஷா பதிவை யாரோ ஆட்டையை போட்டுட்டாங்கனு இப்படி எல்லாம் கேக்கலாமா?
இது நானே எழுதின சொந்தக்கதை தான் :)
//தமிழன்... said...
\
பார்த்தவுடனே தமிழனு சொல்லக்கூடிய நிறம்
\
அது என்ன நிறம் அண்ணே...:)//
கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு :)
//தமிழன்... said...
இது காதல்கதைதானே...அப்பறம் ஏன் தலைப்பு இப்படி வச்சிருக்கு...:)//
வேற எங்கயோ போட வேண்டிய பின்னூட்டம் இங்க போட்டுட்டீங்க போல :)
//இலவசக்கொத்தனார் said...
படிச்சாச்சு!! அப்புறமா சேட்டறேன்!!//
ஆஹா... பயமா இருக்கே :)
// Ramya Ramani said...
அடடே பொண்ணு பாக்க போகும் போது கூட என்ன வேலை நல்லாயில்லே...
//
கிருஷ்ணா ரொம்ப சின்சியர் பையன் :)
// கதை செம்மயா இருக்கு..வழக்கமான வெட்டி அண்ணன் நக்கல் விக்கலோட ;)//
ரொம்ப நன்றி தங்கச்சி :)
//cable sankar said...
nice...//
மிக்க நன்றி சங்கர் :)
கலக்கல்...
//கார்க்கி said...
கலக்கல்...//
மிக்க நன்றி கார்க்கி :)
கதை நல்லா இருக்கு வெட்டி...
feel good story:))
அண்ணா கதை ரொம்ப நல்லாயிருக்கு!
முக்கியமா..... உரையாடல்கள் மிக மிக அருமை.
\அங்க போய் என்ன என்ன கேள்வியெல்லாம் கேக்கனும்னு அவன் ஃபிரெண்ட் நித்யா அவனுக்கு ஒரு செக் லிஸ்ட் கொடுத்திருந்தா. அதெல்லாம் பல நாட்களுக்கு முன்னாடியே மனப்பாடம் பண்ணியிருந்தான்.\\\
:)))
:-)))...
நல்லா இருக்கு..
நல்ல கதை வெட்டி.
கதையை இயல்பான உரையாடல்கள் மூலமாகவே சொல்லியிருக்கும் விதம் நல்லாருக்கு :)
//கிருஷ்ணா சென்னைல ஒரு.... சரி சரி நீங்க நினைக்கிற மாதிரி ஐடி கம்பெனில தான் வேலை பார்க்கிறான்.//
:))
இந்த கதை சூப்பரா இருக்கு :-)
//Sen22 said...
கதை நல்லா இருக்கு வெட்டி...//
மிக்க நன்றி செந்தில் :)
//Divya said...
feel good story:))
அண்ணா கதை ரொம்ப நல்லாயிருக்கு!
முக்கியமா..... உரையாடல்கள் மிக மிக அருமை.//
ரொம்ப நன்றிமா...
ஒரு டென்ஷன் நிறைந்த தொடருக்கு அப்பறம் எந்த டென்ஷனும் இல்லாம ஒரு கதை எழுதனும் ஆசை. அதான் :)
//விஜய் ஆனந்த் said...
:-)))...
நல்லா இருக்கு..//
மிக்க நன்றி விஜய் ஆனந்த் :)
// முரளிகண்ணன் said...
நல்ல கதை வெட்டி.//
மிக்க நன்றி முரளிகண்ணன் :)
//கவிநயா said...
கதையை இயல்பான உரையாடல்கள் மூலமாகவே சொல்லியிருக்கும் விதம் நல்லாருக்கு :)//
என் கதையே பெரும்பாலும் அப்படி தான் இருக்கும் :))
மிக்க நன்றி கவிநயா :)
// Divyapriya said...
//கிருஷ்ணா சென்னைல ஒரு.... சரி சரி நீங்க நினைக்கிற மாதிரி ஐடி கம்பெனில தான் வேலை பார்க்கிறான்.//
:))
இந்த கதை சூப்பரா இருக்கு :-)//
மிக்க நன்றி திவ்ய பிரியா :)
Story is really good
கதை நல்லா இருக்கு. ஆனா உங்க முந்தைய கதைகளோட ஒப்பிட்டா தேறலை.
//K said...
Story is really good//
மிக்க நன்றி K :)
// குமரன் (Kumaran) said...
கதை நல்லா இருக்கு. ஆனா உங்க முந்தைய கதைகளோட ஒப்பிட்டா தேறலை.//
ஹ்ம்ம்ம்...
எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு... என்ன பண்ண??? :)
ரெஸ்பான்ஸ் பார்த்தாலே தெரியுது.. அடுத்து ஒரு நல்ல கதை எழுத முயற்சி செய்யறேன் :))
// Blogger தமிழன்... said...
\
பார்த்தவுடனே தமிழனு சொல்லக்கூடிய நிறம்
\
அது என்ன நிறம் அண்ணே...:) //
ரிப்பீட்டேய் :) அதென்ன நிறமப்போய் :D
// பார்த்தவுடனே தமிழனு சொல்லக்கூடிய நிறம். அதனாலயே ரஜினி ரசிகனானான். //
அவரு மராட்டம்னு சொல்றாங்களேப்பு!
சரி கதைக்கு வர்ரேன். எனக்கு ரொம்பப் பிடிச்சது அந்த உரையாடலை நீ கொண்டு போயிருந்த விதம். நல்லாருந்துச்சு.
// G.Ragavan said...
// Blogger தமிழன்... said...
\
பார்த்தவுடனே தமிழனு சொல்லக்கூடிய நிறம்
\
அது என்ன நிறம் அண்ணே...:) //
ரிப்பீட்டேய் :) அதென்ன நிறமப்போய் :D//
அது நிச்சயம் உங்க நிறமில்லை :))))
// // பார்த்தவுடனே தமிழனு சொல்லக்கூடிய நிறம். அதனாலயே ரஜினி ரசிகனானான். //
அவரு மராட்டம்னு சொல்றாங்களேப்பு!
//
ஹா ஹா ஹா.. சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்க :)
நம்ம ஊரு சூப்பர் ஸ்டாரு ரஜினி காந்தும் கருப்பு தான் :)
கருப்பும் ஒர் அழகு என்று கண்டு கொண்டேன் உன்னாலே ;)
இதெல்லாம் உங்களை மாதிரி கலரா இருக்கறவங்களுக்கு பிரியாது :))
// சரி கதைக்கு வர்ரேன். எனக்கு ரொம்பப் பிடிச்சது அந்த உரையாடலை நீ கொண்டு போயிருந்த விதம். நல்லாருந்துச்சு.//
மிக்க நன்றி ஜி.ரா...
இதை தொடரா எழுதியிருந்தா பட்டையை கிளப்பியிருக்கலாம்.. ஆனா தொடர் எழுத கொஞ்சம் நாளாகும் :))
Thala , Feel Good Story than .,...analum
///குமரன் (Kumaran) said...
கதை நல்லா இருக்கு. ஆனா உங்க முந்தைய கதைகளோட ஒப்பிட்டா ....
///
Repeateyyy
Anbu
// Anbu said...
Thala , Feel Good Story than .,...analum
///குமரன் (Kumaran) said...
கதை நல்லா இருக்கு. ஆனா உங்க முந்தைய கதைகளோட ஒப்பிட்டா ....
///
Repeateyyy
Anbu//
ஹா ஹா ஹா...
சீக்கிரமே ஒரு நல்ல கதையோட வரேன்.. ஒரே பிரச்சனை காதல் இல்லாம எழுதனும்னு யோசிக்கிறேன் :)
ரொம்ப ரொம்ப கலக்கல்ங்க. கார்த்தி கிருஷ்ணா கான்வர்சேஷன் ரொம்ப ரொம்பப் பிடிச்சிருந்துது.
//
"இப்ப மட்டும் எப்படி நேரமிருக்கா? லஞ்ச்க்கு எல்லாம் போயிருக்காங்க. நான் உன்கிட்ட பேசிட்டு போகலாம்னு வெயிட் பண்றேன்//
இந்த மாதிரி பதில் தரக்கூடியக் கேள்விய அந்த பொண்ணு கேக்கறப்பவே புரிஞ்சிக்க வேண்டாமா, அவங்களுக்கு ஒகேன்னு. இதை விட அழகா நாசூக்கா எப்படி புரிய வெக்கிறது? பசங்க எப்பத்தான் உஷாராவாங்களோன்னு நீங்க ஆதங்கப்படறதை, நானும் வழிமொழிகிறேன்:):):) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................
கதை சுமாரா நல்லா இருக்கு பாலாஜி :) [வெட்டி ஃரொபைல் அப்படி... :) ]
//நம்ம ஜீனியர் ரம்யாடா?//
இத முதல்ல படிச்சப்போ "சீனியரோனு" கொஞ்சம் குழம்பிட்டேன் [கதை எங்கயோ வேற மாதிரி போகுதுன்னு நினச்சேன்]. அப்பறம் தான் தெரிஞ்சது ஜுனியர்னு.. :)
கதை அருமை. கார்த்திக்,கிருஷ்ணா உரையாடல் ரசித்தேன்.
// ""
போனில் மறுமுனையில் என்ன சொல்கிறார்கள் என்று சொல்லாமலே புரிய வைத்த விதம் புதிதாக இருந்தது.
அருமையான நடை . காதல் , குறும்பு , குசும்பு எல்லாம் கலந்து இருக்கு கரேய்க்கிட்டா
ஆடு புலி ஆட்டம் - 1 part naan padikanum
antha kathai konjam post panuga pa.
ஆடு புலி ஆட்டம் - 1 part naan padikanu
1 part enga thedinalum kediaka mattuthu atha konjam post panuuga pa.
ஆடு புலி ஆட்டம் - 1 part naan padikkanum
1 part enga thedinalum kedaika mattuthu konjam post pannuga pa
ஒ...அடுத்த கதையா....நடத்துங்க தல...வாழ்த்துக்கள்...
//rapp said...
ரொம்ப ரொம்ப கலக்கல்ங்க. கார்த்தி கிருஷ்ணா கான்வர்சேஷன் ரொம்ப ரொம்பப் பிடிச்சிருந்துது.
//
மிக்க நன்றி வெ.ஆ :)
// rapp said...
//
"இப்ப மட்டும் எப்படி நேரமிருக்கா? லஞ்ச்க்கு எல்லாம் போயிருக்காங்க. நான் உன்கிட்ட பேசிட்டு போகலாம்னு வெயிட் பண்றேன்//
இந்த மாதிரி பதில் தரக்கூடியக் கேள்விய அந்த பொண்ணு கேக்கறப்பவே புரிஞ்சிக்க வேண்டாமா, அவங்களுக்கு ஒகேன்னு. இதை விட அழகா நாசூக்கா எப்படி புரிய வெக்கிறது? பசங்க எப்பத்தான் உஷாராவாங்களோன்னு நீங்க ஆதங்கப்படறதை, நானும் வழிமொழிகிறேன்:):):) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................
//
பசங்க எப்பவுமே அப்பாவிங்க... எதையும் இப்படி சுத்தி வளைச்சி பேச மாட்டாங்க :)
//Ganesh said...
கதை சுமாரா நல்லா இருக்கு பாலாஜி :) [வெட்டி ஃரொபைல் அப்படி... :) ]
//
இந்த மாதிரி நாலு கதை எழுதினா குறைஞ்சிடும்னு நினைக்கிறேன்..
ஆனா அடுத்து ஒரு நல்ல தீம் இருக்கு. அதுக்கு முன்னாடி சுஜாதா எழுதன ஒரு புக் படிச்சா நல்லா இருக்கும்னு பாக்கறேன் :)
//
//நம்ம ஜீனியர் ரம்யாடா?//
இத முதல்ல படிச்சப்போ "சீனியரோனு" கொஞ்சம் குழம்பிட்டேன் [கதை எங்கயோ வேற மாதிரி போகுதுன்னு நினச்சேன்]. அப்பறம் தான் தெரிஞ்சது ஜுனியர்னு.. :)
//
ஹா ஹா ஹா...
//ஆனந்த்குமார் said...
கதை அருமை. கார்த்திக்,கிருஷ்ணா உரையாடல் ரசித்தேன்.
// ""
போனில் மறுமுனையில் என்ன சொல்கிறார்கள் என்று சொல்லாமலே புரிய வைத்த விதம் புதிதாக இருந்தது.
//
மிக்க நன்றி ஆனந்த்குமார்...
இது நம்ம பக்கத்துல ஒருத்தர் உட்கார்ந்து ஃபோன் பேசினா எப்படி இருக்கும்னு உணர வைக்கணும்னு நினைச்சி செஞ்சேன் :)
//நாடோடி - noMAD said...
அருமையான நடை . காதல் , குறும்பு , குசும்பு எல்லாம் கலந்து இருக்கு கரேய்க்கிட்டா
//
ஆஹா... மிக்க நன்றி நாடோடி :)
வெட்டிப்பயல் said...
//gayathri said...
ஆடு புலி ஆட்டம் -1 part ennga pa
naan padikanum 1 part konjam post panuga pa plese
//
பார்ட் 1 இதோ
http://vettipaiyal.blogspot.com/2008/07/blog-post_29.html
//தமிழினி..... said...
ஒ...அடுத்த கதையா....நடத்துங்க தல...வாழ்த்துக்கள்...
//
இது தொடர்கதை இல்லமா.. சிறுகதை :) (வேணும்னா பெருஞ்சிறுகதைனு சொல்லலாமா?)
Anne, suzhar naarkaaliyai suyar naarkaali endru ezhudhiviteergale, idhu nyaayama? :-)
ennamo ponga IT pozhappu naara pozhappu nu sollaama solliteenga..:-)
//நான் ஓகே சொல்லிட்டேனு சொன்னதுல இருந்துமா புரியல. இப்ப நீங்க என் விருப்பத்தோடத்தான் என்னை கைப்பிடிக்கனும்னு என் விருப்பத்துக்கு மரியாதை கொடுக்கறதுல இருந்து என் முடிவு சரினு எனக்கு கன்ஃபர்ம் ஆகிடுச்சு. போதுமா?" அவள் கடைசியாக சொன்னது அவன் காதுக்குள் ஒலித்து கொண்டே இருந்தது////
too complex. மூணு நாலு தடவ திரும்பத் திரும்ப படிச்சபிந்தான் என் தமிழறிவுக்கு இது புரிஞ்சுது ;)
நல்ல கதை.
katha rompa nalla irunthuchi.
Thala,
Naan ippothaan Blog ellam padikka arambichen.
Ennamo theriyala, unga blogla mattumthaan ungaloda old post ellam thedi poi padichittu irukken.
1. Ungaloda "Iru Thuruvam" 3rd partkku appuram kanomae?
ennada ivan 2 varusham kalichu vanthu kekkarannu thappa eduthukaatheenga.
Eairkenavae eluthi irunthaal link thaanga.
Illatti, thayavu seithu atha continue pannunga...
2. "Paartha Niyabagam Illaiyo?" 7th part Dev eluthavae illainnu ninaikiren.
Eluthi irunthaa link thaanga...
Illainna, neengalae periya manasu panni continue pannunga...
Ippadiyellam thodar elutha aarambichittu mudikkama pogappadaathu...
ரெண்டாவது வாட்டி படிச்சா புரியல
//Pradeep said...
Anne, suzhar naarkaaliyai suyar naarkaali endru ezhudhiviteergale, idhu nyaayama? :-)
//
ரொம்ப நன்றி பிரதீப்.. இப்ப மாத்தியாச்சு :)
//Syam said...
ennamo ponga IT pozhappu naara pozhappu nu sollaama solliteenga..:-)
//
அப்படியா???
//gayathri said...
hai
//
ஹாய் :)
//SurveySan said...
//நான் ஓகே சொல்லிட்டேனு சொன்னதுல இருந்துமா புரியல. இப்ப நீங்க என் விருப்பத்தோடத்தான் என்னை கைப்பிடிக்கனும்னு என் விருப்பத்துக்கு மரியாதை கொடுக்கறதுல இருந்து என் முடிவு சரினு எனக்கு கன்ஃபர்ம் ஆகிடுச்சு. போதுமா?" அவள் கடைசியாக சொன்னது அவன் காதுக்குள் ஒலித்து கொண்டே இருந்தது////
too complex. மூணு நாலு தடவ திரும்பத் திரும்ப படிச்சபிந்தான் என் தமிழறிவுக்கு இது புரிஞ்சுது ;)
//
ஆஹா... அவ்வளவு கஷ்டமாவா இருக்கு?
//நல்ல கதை.//
மிக்க நன்றி :)
//gayathri said...
katha rompa nalla irunthuchi.
//
மிக்க நன்றி காயத்ரி :)
//Rajan said...
Thala,
Naan ippothaan Blog ellam padikka arambichen.
Ennamo theriyala, unga blogla mattumthaan ungaloda old post ellam thedi poi padichittu irukken.
1. Ungaloda "Iru Thuruvam" 3rd partkku appuram kanomae?
ennada ivan 2 varusham kalichu vanthu kekkarannu thappa eduthukaatheenga.
Eairkenavae eluthi irunthaal link thaanga.
Illatti, thayavu seithu atha continue pannunga...
2. "Paartha Niyabagam Illaiyo?" 7th part Dev eluthavae illainnu ninaikiren.
Eluthi irunthaa link thaanga...
Illainna, neengalae periya manasu panni continue pannunga...
Ippadiyellam thodar elutha aarambichittu mudikkama pogappadaathu...
//
அந்த கதை ட்விஸ்ட் பின்னூட்டத்துல சொல்லிட்டாங்க... அதான் எழுத பிடிக்காம போயிடுச்சி... இப்ப வேற ஒரு தீம் யோசிச்சிட்டு இருக்கேன். அதுப்படி எழுதினா ஒரு பதினஞ்சி இருபது பாகம் போகலாம்... பார்க்கலாம் :)
\\குடுகுடுப்பை said...
ரெண்டாவது வாட்டி படிச்சா புரியல
\\
முதல் தடவை படிக்கும் போது புரிஞ்சிதா?
wow, excellent
Post a Comment