தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, November 27, 2006

நெல்லிக்காய் - 5

காய் 4

கார்த்திக் புது மேனஜரை பார்க்க அவர் இடத்திற்கு சென்றான். அவர் திடீரென்று ஒரு மீட்டிங் வந்துவிட்டதால் அவனை மதியம் 3 மணிக்கு மேல் வர சொல்லி அனுப்பினார். அவனும் சரி என்று சொல்லிவிட்டு நண்பர்கள் ஜோதியில் ஐக்கியமாக கேன்டினை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

கேன்டினிலிருந்து ராஜி வந்து கொண்டிருந்தது அவனுக்கு நன்றாக தெரிந்தது. அவள் கீழே குனிந்து கொண்டே வந்தது அவனுக்கு விநோதமாக இருந்தது. அவள் அவனை கவனிக்கவே இல்லை. அவள் அருகில் வந்ததும்...

"ஏய் ராஜி! நீ மட்டும் என்ன தனியா வர?"

அவள் நிமிர்ந்து கார்த்திக்கை பார்த்தாள். அவள் அழுது முகம் சிவந்திருந்ததும் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

"ஏய் ஏன் அழுவுற? என்னாச்சு? அவுங்க ரெண்டு பேரும் எங்க?"

அவள் எதுவும் பேசாமல் அவனை மௌனமாக பார்த்தாள். இருந்தும் அவள் கண்ணிலிருந்து நீர் வந்து கொண்டே இருந்தது.

"என்னாச்சு? சொல்லு... ஏன் இப்படி அழுவற. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு"

"எல்லாம் உன்னால தான். நேத்து என்ன நடந்துச்சு?" அழுகையும் கோபமுமாக கேட்டாள் ராஜி.

கார்த்திக்கிற்கு திக்கென்று இருந்தது. அருண் ராஜியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான் என்று கோபமும் வந்தது.

"ப்ளீஸ் என்னை தப்பா நினைக்காத. நான் அந்த மாதிரி தப்பான எண்ணத்துல பழகல"

"அப்படினா ஒரு வார்த்தைல முடிச்சிருக்கலாம் இல்லை. நைட் முழுசா பேசிருக்க"

"நேத்து நைட் கரெண்ட் இல்லைனு பேச வேண்டியாத போச்சி. இல்லைனா நான் கம்ப்யூட்டர் முன்னாடிதான் உக்கார்ந்திருப்பேன். ப்ளீஸ் என்னை தப்பா நினைச்சிக்காத" வார்த்தைக்கு வார்த்தை அதையே சொல்லி கொண்டிருந்தான்.

"என்னது கரெண்ட் இல்லைனு அவ்வளவு நேரம் பேசினய? என்ன லூசுனு நினைச்சிட்டியா?
உனக்கு பிடிச்சிருக்குனு சொன்னியா?" முன்பைவிட கோபம் அதிகமாக கேட்டாள்.

"ஆமாம்... ஸாரி. ப்ளீஸ் என்னை தப்பா நினைச்சிக்காத"

அவள் மீண்டும் முன்பை விட அதிகமாக அழ ஆரம்பித்தாள்.

"உனக்கும் அவளை பிடிச்சியிருக்கா? இத்தனை நாள் ஏன்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலை. இல்ல?"

"எவளை பிடிச்சிருக்கா?" கார்த்திக்கிற்கு ஒன்றும் புரியவில்லை.

"ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்காத. அருண் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான்"

கார்த்திக்கிற்கு டென்ஷன் அதிகமாகியது. அருண் என்ன சொன்னானென்றும் தெரியவில்லை. இவள் ஏன் இப்படி கோபம், அழுகை என வேறு வேறு விதமாக நடந்து கொள்கிறாள் எனவும் புரியவில்லை.

"நீ கவிதாவை லவ் பண்றியா இல்லையா? உண்மைய சொல்லு"

கார்த்திக்கிற்கு தலையில் இடி விழுந்தது போலிருந்தது.

"நான் கவிதாவ லவ் பண்றனா? என்ன உளற? அவள்ட நான் ஒரு வார்த்தை கூட இது வரைக்கும் பேசனதில்லை"

"பொய் சொல்லாத கார்த்திக். அப்பறம் சத்தியமா உன்கூட நான் சாகற வரைக்கும் பேச மாட்டேன். கடைசியா கேக்கறேன் நீ கவிதாவ லவ் பண்ணல?"

கார்த்திக் கோபம் தலைக்கேறியது. அருண் மட்டும் அங்கிருந்தான் என்றால் கண்டிப்பாக கார்த்திக் நரசிம்ம அவதாரம் எடுத்திருப்பான். அவள் "சாகும் வரை" என்று சொல்லிய வார்த்தையும் அவனுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது

"நீ என்ன லூசா? நான் உன்னை லவ் பண்ணும் போது அவளை எப்படி நினைக்க முடியும்"

அவனையறியாமலே வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வந்தன. சொல்லி முடித்தவுடன் தான் அவன் தான் செய்த தவறை உணர்ந்தான்.

அவளுக்கும் இந்த வார்த்தைகளை கேட்டவுடன் அதிர்ச்சியும் ஆனந்தமும் ஒரு சேர வந்தது.

"என்ன சொன்ன கார்த்திக்?" மீண்டும் ஒருமுறை அதை தெளிவுப்படுத்தி கொள்ள கேட்டாள்.

"ராஜி ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு. எனக்கு மத்தவங்க மாதிரி கவிதையா காதல சொல்ல தெரியாது. கோர்வையா பேச வராது. ஆனா இதுதான் உண்மை. எனக்கு தெரியாமலே நீ என் மனசுக்குள்ள வந்துட்ட. நீ என்கூட இருந்தா வாழ்க்கை முழுசும் சந்தோஷமா இருக்கும்னு நான் நம்பறேன். உன்னை கடைசி வரைக்கும் நானும், என்னை கடைசி வரைக்கும் நீயும் நல்லா பார்த்துக்குவோம்னு நான் தீர்க்கமா நம்பறேன். நான் ஏதாவது தப்பா பேசிருந்தா என்னை மன்னிச்சிடு. ஆனா என்கூட பேசறத மட்டும் நிறுத்திடாத" அவன் சொல்லிமுடிப்பதற்குள் அவள் முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

ஆனால் முன்னால் அழுததற்கும் இதற்கும் வித்யாசம் தெரிந்தது. அவள் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது. வாழ்க்கையில் முதன்முதலாக ஆனந்த கண்ணீரை அவன் பார்த்தான். மகிழ்ச்சியிலும் கண்ணீர் வரும் என்பதை இருவரும் அன்றுதான் உணர்ந்து கொண்டனர்.

கார்த்திக்கிற்கு உலகையே வெற்றி கொண்ட சந்தோஷமிருந்தது. அவன் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் எது என்றால் அடுத்து நொடிக்குள் சொல்ல கூடிய தருணமாக அது அமைந்தது. சரியாக அந்த நேரம் அவனுடைய செல்போன் சிணுங்கியது.

அருணிடமிருந்து போன்.

"டேய் ராஜிய பார்த்தியா? அவளை ஆளையே காணோம். 10 நிமிஷமா தேடிக்கிட்டு இருக்கோம்"

"சரி நீ இங்க வா!!!"

"இங்கனா? எங்க?"

"கேன்டினுக்கு"

"இப்பதான் அங்க இருந்து வறோம்"

"நீ நம்ம காபி குடிக்கற பக்கமாவா திரும்பி போன?"

"இல்லை. காபி வாங்கும் போது அவர்ட சில்லைரையில்லைனு அப்பறம் தரேனு சொல்லிட்டாரு. அதனால அத வாங்கிட்டு அந்த கேட் பக்கமா வந்தோம்"

"சரி... இப்ப நீ முடிகிட்டு இங்க வர. ஓகேவா?"

"ராஜி அங்க இருக்காளா?"

"இருக்கா. நீ இங்க வந்து சேரு முதல்ல"

"அப்பாடியா... இரு நான் அங்க வரேன்"

அருண் திரும்பி தீபாவிடம்...

"ஹலோ... ராஜி கார்த்திக்கோடத்தான் பேசிக்கிட்டு இருக்கலாம். நான் போயிட்டு வந்துடறேன்"

"ஆஹா... இந்நேரம் என்ன ஆயிருக்கும்னு தெரியலை. எப்படியும் அவன் சொல்லலனாலும் ராஜியே அவன்ட சொல்லியிருப்பா. இரு, நானும் உங்கூட வரேன்"

"நீ இங்க இரு. மேனஜர் வந்து பார்த்தாருனா யாரையும் காணோம்னு டென்ஷனாயிடுவாரு. நான் போயி அவளை கூப்பிட்டு வரேன். நம்ம லஞ்ச்ல பேசிக்கலாம்"

"இல்லை... நானும் வருவேன்"

"சரி... நீ போ! நான் இங்கயே இருக்கேன்"

"சரி.. நீயே போயிட்டு வா. ஆனா நீ திட்டு வாங்கறத பார்க்கலாம்னு ஆசை பட்டேன் அது முடியாம போச்சு"

"திட்டுதானே... அவுங்களை நீ இருக்கும்போது வேணும்னா ஒரு தடவை திட்ட சொல்றேன். நீ அப்ப பார்த்து சந்தோஷப்பட்டுக்கோ... இப்ப நான் போயிட்டு வரேன்" சொல்லிவிட்டு அருண், கார்த்திக் ராஜி இருக்குமிடத்திற்கு சென்றான்.

அவர்கள் அங்கு இல்லாததால் கேன்டினுக்குள் சென்று பார்க்க இருவரும் அங்கே காபி வாங்கி வைத்து கொண்டு குடிக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர். ராஜி முகத்தில் ஒருவித சந்தோஷத்தை அவனால் உணரமுடிந்தது...

(தொடரும்...)

அடுத்த பகுதி

35 comments:

நாமக்கல் சிபி said...

சரி வழக்கம் போல நானே முதல் கமெண்டை போடறேன்...

நம்ம பதிவு தமிழ்மணம் முகப்புல வரமாட்டீங்குது. அடைப்பலகைல ஏதோ பிரச்சனைனு நினைக்கிறேன்...

Divya said...

வெட்டி கதை கலக்கல்ஸ் ஆ போகுது, ஒரு ஜோடியை சேர்த்து வைச்சுட்டீங்க, அடுத்த ஜோடியின் மோதல் இன்னும் தொடருமா????

நாமக்கல் சிபி said...

//Divya said...
வெட்டி கதை கலக்கல்ஸ் ஆ போகுது, ஒரு ஜோடியை சேர்த்து வைச்சுட்டீங்க, அடுத்த ஜோடியின் மோதல் இன்னும் தொடருமா????
//

மிக்க நன்றி திவ்யா...
யார் யார் சேருவாங்க யார் யார் பிரிவாங்கன்றது நம்ம கைலயா இருக்கு...

பார்க்கலாம்...

நாமக்கல் சிபி said...

//Alien said...

The Story is going well. This is my first comment thou, I have been reading all your posts. Thanks.//

Thx a lot Alien...
Hope to see u more for the next posts:-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நம்ம பதிவு தமிழ்மணம் முகப்புல வரமாட்டீங்குது. அடைப்பலகைல ஏதோ பிரச்சனைனு நினைக்கிறேன்//

இப்ப நல்லாவே வருதுப்பா!

ஆமா நெல்லிக்காய் ன்னு தலைப்புல இருக்கு; இது வரைக்கும் அது சம்பந்தமா கதைல ஏதாச்சும் வந்துச்சா? இல்லை நான் தான் அருண்-தீபா லடாய்ல அதை மறந்துட்டேனா?

நாமக்கல் சிபி said...

//
இப்ப நல்லாவே வருதுப்பா!
//
முதல்ல அனுப்பும் போது வர மாட்டீங்குதுங்க...

//
ஆமா நெல்லிக்காய் ன்னு தலைப்புல இருக்கு; இது வரைக்கும் அது சம்பந்தமா கதைல ஏதாச்சும் வந்துச்சா? இல்லை நான் தான் அருண்-தீபா லடாய்ல அதை மறந்துட்டேனா?//
உங்களுக்கு விளக்கம் தேவையா?

அருண்-தீபாவிற்கு இடையில் பல கசப்பான சம்பவங்கள் நடைபெற்று இறுதியில் அதை அவர்கள் நினைத்து பார்க்கையில் இனிப்பாக அமைய வேண்டும்னு யோசிச்சிதான் தலைப்பை அப்படி கொடுத்தேன். எந்த அளவுக்கு சரியா போறேனு தெரியலை :-(

Anonymous said...

Vetti,

If i direct a film, you will be the writer. It's official!!!

by
Mess-ku vazhi ketta Senthil

Anonymous said...

wow! wonderful story!!
சினிமா பாக்ற மாதிரி இருக்கு!!
we feel as if we are in the same atmosphear with them..watching them!
ரொம்ப நல்லா எழுதறிங்க.next post சீக்கிறம் போடுங்க.

நாமக்கல் சிபி said...

//Vetti,

If i direct a film, you will be the writer. It's official!!!

by
Mess-ku vazhi ketta Senthil//

Thx a lot Senthil...
We can go for action too...

Even for comedy I have a good story for Gaptain :-)

BTW,
entha messuku yaarukitta vazhi keteenga ;)

நாமக்கல் சிபி said...

//aparnaa said...

wow! wonderful story!!
சினிமா பாக்ற மாதிரி இருக்கு!!
we feel as if we are in the same atmosphear with them..watching them!
ரொம்ப நல்லா எழுதறிங்க.next post சீக்கிறம் போடுங்க.//
மிக்க நன்றி அபர்ணா...

சீக்கிரம் போடறேன் :-)

G.Ragavan said...

ம்ம்ம்...நான் அடுத்து இப்படி நடக்கும்னு சொன்னதும்..கதைய வேணுக்குன்னே வேற மாதிரி மாத்தீட்டியா? ;-) சரி..எப்படியோ ரெண்டு பேரு காதிலிக்குறாங்க. அடுத்து டேட்டிங்தானே. மகாபலிபுரம் டூர் போவாங்களே ;-)

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...

ம்ம்ம்...நான் அடுத்து இப்படி நடக்கும்னு சொன்னதும்..கதைய வேணுக்குன்னே வேற மாதிரி மாத்தீட்டியா? ;-)//
இல்லை... எப்பவும் அடுத்த பார்ட் ரெடியா இருக்கும்... மைண்ட்குள்ள ;)

//
சரி..எப்படியோ ரெண்டு பேரு காதிலிக்குறாங்க. அடுத்து டேட்டிங்தானே. மகாபலிபுரம் டூர் போவாங்களே ;-)//
மகாபலிபுரமேல்லாம் இல்லை ;)

Anonymous said...

//Even for comedy I have a good story for Gaptain :-)//

En cinema aasai-la mann alli poda pakkaringale? Ithu nyayama?

//BTW,
entha messuku yaarukitta vazhi keteenga ;) //

Vazhi sonna neengale ippadi kekkalama? yaaravathu partha thappa ninaikka poranga

athey Senthil

கப்பி | Kappi said...

முதல்ல கார்த்திக்-ராஜி சேர்த்து வச்சுட்டு அடுத்து அருண்-திவ்யாவா?? ;)

கைப்புள்ள said...

//அவர்கள் அங்கு இல்லாததால் கேன்டினுக்குள் சென்று பார்க்க இருவரும் அங்கே காபி வாங்கி வைத்து கொண்டு குடிக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர். ராஜி முகத்தில் ஒருவித சந்தோஷத்தை அவனால் உணரமுடிந்தது...//

காதல் வயப்பட்ட அன்றில் பறவைகளைச் சேர்த்து வைத்த கலியுக கேப்டன் "செந்தூரபாண்டி", "பூந்தோட்டக் காவல்காரன்" நெல்லிக்கா நெஞ்சன், பாஸ்டன் ஜில்லாவின் வருங்கால மாநகராட்சித் தலிவர், எங்கள் சிங்கம் கட்டர் பாய் வாழ்க! வாழ்க!!

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

//Even for comedy I have a good story for Gaptain :-)//

En cinema aasai-la mann alli poda pakkaringale? Ithu nyayama?
//
சும்மாதாங்க... லவ் சப்ஜக்டே ரெடி பண்ணிடுவோம் ;)

// //BTW,
entha messuku yaarukitta vazhi keteenga ;) //

Vazhi sonna neengale ippadi kekkalama? yaaravathu partha thappa ninaikka poranga

athey Senthil //

இப்படி வாழ்க்கையில பல பேருக்கு வழி காட்டியா இருந்ததால ஞாபக்கம் வெச்சிக்க முடியல ;)

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

முதல்ல கார்த்திக்-ராஜி சேர்த்து வச்சுட்டு அடுத்து அருண்-திவ்யாவா?? ;) //
போக போக தெரியும்...

சரி கதாநாயகி பேரு தீபா தானே???

யார் இந்த திவ்யா???

கப்பி, என்னம்மா ஆச்சு உனக்கு ;)

நாமக்கல் சிபி said...

//காதல் வயப்பட்ட அன்றில் பறவைகளைச் சேர்த்து வைத்த கலியுக கேப்டன் "செந்தூரபாண்டி", "பூந்தோட்டக் காவல்காரன்" நெல்லிக்கா நெஞ்சன், பாஸ்டன் ஜில்லாவின் வருங்கால மாநகராட்சித் தலிவர், எங்கள் சிங்கம் கட்டர் பாய் வாழ்க! வாழ்க!!//

ஏன் இந்த கொலைவெறி!!!
பறவைகள் சேர்ந்துச்சானு போக போகத்தானே தெரியும்...

அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி???

Syam said...

ஹீரோ ஹீரோயின பத்தி சொல்லாம சைடு டிராக்லயே போகுதே கதை...
:-)

நாமக்கல் சிபி said...

//Syam said...

ஹீரோ ஹீரோயின பத்தி சொல்லாம சைடு டிராக்லயே போகுதே கதை...
:-) //

காரணமிருக்கு தலைவா...
இது யார் சேர்த்து வைத்த காதல்னு யோசிங்க ;)

கைப்புள்ள said...

//காரணமிருக்கு தலைவா...
இது யார் சேர்த்து வைத்த காதல்னு யோசிங்க ;)//

அருணும் தீபாவும் நெல்லிக்காயால ஒன்னு சேரப் போறாங்க...அப்படித் தானே?

நாமக்கல் சிபி said...

//கைப்புள்ள said...

//காரணமிருக்கு தலைவா...
இது யார் சேர்த்து வைத்த காதல்னு யோசிங்க ;)//


அருணும் தீபாவும் நெல்லிக்காயால ஒன்னு சேரப் போறாங்க...அப்படித் தானே? //

ஆமாம்... தீபாக்கு ஔவையார்கிட்ட இருந்து நெல்லிக்காய பிடுங்கிட்டு வந்து அருண் குடுப்பான்.. அப்பறம் ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. போதுமா?

எத்தனை தடவை சொன்னாலும் மறந்துட வேண்டியது...

தல, வயசான காலத்துல எதுக்கு இத்தன மணி வரைக்கும் முழிச்சிட்டு... சீக்கிரம் தூங்குங்க :-)

Anonymous said...

machi...only if love was that easy and all our girls were that good....keep dreaming...cos it will always be a dream....i prefer strip clubs...thats my salvation...lmao..good story though...nice style too...style is the tough part...u got it...work on it to make more better...neenga st.joseph na....nan A.R.L.M...varata

நாமக்கல் சிபி said...

//Wyvern said...

machi...only if love was that easy and all our girls were that good....keep dreaming...cos it will always be a dream....
//
Machi... if luv is that easy then even I wont be writing some stories like this :-)

This is just my imagination...but I believe some people are lucky though... :-)

//
i prefer strip clubs...thats my salvation...lmao..good story though...nice style too...style is the tough part...u got it...work on it to make more better...//
Thx a lot...

//
neenga st.joseph na....nan A.R.L.M...varata //
ARLMaa... good!!!

கோழை said...

யோவ்!!! முதல்ல இந்த தொடர்கதை எழுதுரத நிறுத்து.......... இதெல்லாம் ரொம்ப ஒவர்........ நான் அடுத்து என்ன நடக்கும் என்று wait பண்ண வேண்டி இருக்குதய்யா இருக்குது.... அப்புறம் சொல்ல மறந்திட்டேன்.... கதை நல்லா இருக்கு...... (அதாலதானே இவ்வளவும்)

நாமக்கல் சிபி said...

//ஆதவன் said...

யோவ்!!! முதல்ல இந்த தொடர்கதை எழுதுரத நிறுத்து.......... இதெல்லாம் ரொம்ப ஒவர்........ நான் அடுத்து என்ன நடக்கும் என்று wait பண்ண வேண்டி இருக்குதய்யா இருக்குது.... அப்புறம் சொல்ல மறந்திட்டேன்.... கதை நல்லா இருக்கு...... (அதாலதானே இவ்வளவும்)//

வாழ்க்கையில பொறுமை அவசியம்...
அதுக்கு தான் உங்களுக்கு ட்ரெயினிங் தரேன் ;)

Anonymous said...

ஆஹா, கார்த்திக்-ராஜி சேர்ந்தாச்சா. நல்லா போகுது.. அப்படியே பீச், பார்க், டூயட்டுனு ஏதாவது கலர்ஃபுல்லா எழுதுங்க வெட்டி ;) (படம் எடுக்க போறதா பேசிட்டு இருந்தீங்களே..)

சரி அடுத்த பதிவு எப்போ??

-விநய்

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

ஆஹா, கார்த்திக்-ராஜி சேர்ந்தாச்சா. நல்லா போகுது.. அப்படியே பீச், பார்க், டூயட்டுனு ஏதாவது கலர்ஃபுல்லா எழுதுங்க வெட்டி ;)
//
அடுத்த பாகத்துல இருக்கும் விநய் ;)

//
(படம் எடுக்க போறதா பேசிட்டு இருந்தீங்களே..)
//
அது சும்மாச்சிக்கு...
நமக்கு இதுலயே நல்ல சாப்பாடு கிடைக்குது ;)

//
சரி அடுத்த பதிவு எப்போ??

-விநய்//
சீக்கிரமே வரும் :-)

கோழை said...

அடப்பாவி ட்ரெயினிங் தர்ரேன்னு இப்படியா....... என் நிலைமை.... wait பண்ணுறன் என்ன செய்ய??? எப்பய்யா அடுத்த part வரும்.... இந்த லொள்ளுக்கு பயந்துதான்யா நான் serial பாக்கிறதே இல்ல.... இப்ப இது....

கப்பி | Kappi said...

//சரி கதாநாயகி பேரு தீபா தானே???

யார் இந்த திவ்யா???

கப்பி, என்னம்மா ஆச்சு உனக்கு ;) //


சாரி...ஸ்மால் டெக்னிகல் ஃபால்ட் ;)

நாமக்கல் சிபி said...

//ஆதவன் said...

அடப்பாவி ட்ரெயினிங் தர்ரேன்னு இப்படியா....... என் நிலைமை.... wait பண்ணுறன் என்ன செய்ய??? எப்பய்யா அடுத்த part வரும்.... இந்த லொள்ளுக்கு பயந்துதான்யா நான் serial பாக்கிறதே இல்ல.... இப்ப இது.... //

ஆதவன்,
நல்ல ட்ரெயினிங் கொடுக்கனும்னு தான் கொஞ்ச நாள் வெயிட்டிங்ல வைக்கிறேன்... நாளைக்கு போடறேன்...

இன்னைக்கு ஃபுல் டைட்டு ;)

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

//சரி கதாநாயகி பேரு தீபா தானே???

யார் இந்த திவ்யா???

கப்பி, என்னம்மா ஆச்சு உனக்கு ;) //


சாரி...ஸ்மால் டெக்னிகல் ஃபால்ட் ;) //

சரி... ரைட்டு :-)
எல்லாம் டினா செய்யற வேலை ;)

Anonymous said...

sorry machi...didn't mean to comment on ur story in diya's website...no hard feelings

நாமக்கல் சிபி said...

//Wyvern said...

sorry machi...didn't mean to comment on ur story in diya's website...no hard feelings //

np ;)
Please feel free to talk anything abt my story here...
BTW, If you find time read my other stories and check whatever you said is true in those stories too ;)

Arunkumar said...

குஷி படம் ரேஞ்க்கு போகுது கதை...

குஷி பட க்ளைமேக்ஸ் வச்சிருங்க. என்ன இப்போ... அருண் சந்தோஷப்படுவான் :)

நிஜமாவே ரொம்ப அருமையா எழுதுறீங்க வெட்டி.

அடுத்ததுக்கு வெயிட்டிங்க்...