தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, November 15, 2006

அந்த இரண்டு படங்கள்!!!

நான் முதன்முதலில் எழுதிய தெலுகு பட விமர்சனத்தில் இரண்டு படங்களை குறிப்பிட்டிருந்தேன் "ஆ நலுகுரு", "அனுகோகுண்ட ஒக ரோஜு". இந்த படங்களுக்கு விமர்சனம் எழுத சொல்லி ஒரு அனானி நண்பர் கேட்டிருந்தார். கொஞ்சம் நாளானதற்கு அவர் மன்னிப்பாராக.

ஆ-நலுகுரு
இதன் அர்த்தம் அந்த நால்வர். எந்த நான்கு பேர்? என்பதே படத்தின் கதை.
படத்தின் கதாநாயகன் ராஜேந்திர பிரசாத். பொதுவாக நகைச்சுவை படத்தில் நடிப்பவர். ஆனால் இதில் குணச்சித்திர பாத்திரம். (நம்ம சிவக்குமார் மாதிரினு வெச்சிக்கோங்க)

படத்தின் நாயகன் தன்னை சுற்றி உள்ள மனிதர்களுக்கு தன்னால் இயன்றவரை உதவுகிறான். யாருக்கு பண பிரச்சனையென்றாலும் இவரிடம் போனால் எப்படியாவது உதவுவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கமளவுக்கு உயர்ந்த குணத்தை உடையவர்.

இவர் வசிக்கும் அதே தெருவில் வசிக்கிறார் கோட்டா சீனிவாசராவ். இவர் உலகை ஆள்வது பணமே என்ற கொள்கை உடையவர். பணமில்லையென்றால் பிணமும் மதிக்காது என்று தீவிரமாக நம்புபவர். யாராக இருந்தாலும் பத்திரம் எதுவுமின்றி பணம் தரமாட்டார்.

கதாநாயகனுக்கு அவன் பிள்ளைகள், மற்றும் மருமகனால் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. இவருக்கு இருக்கும் நல்ல பேரை பயன்படுத்தி ஃபைனன்ஸ் கம்பெனி ஆரம்பித்து மக்களை ஏமாற்றலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதை தடுக்க வேறு வழியில்லாமல் கோட்டாவிடம் கடன் வாங்குகிறார் நாயகன்.

ஏற்கனவே ஒரு ஏழைக்கு உதவ தன் வீட்டு பத்திரத்தை அடகு வைத்ததால், வேறு எதுவுமின்றி கடன் கேட்கிறார் நாயகன். ஏற்கனவே இருவருக்கும் இருந்த போட்டியில் தோற்பதாக ஒத்துக்கொள்கிறார் நாயகன் (உலகில் முக்கியம் மனித நேயமா அல்லது பணமா?). பணமே வெள்கிறது.

அன்று இரவே இறந்துவிடுகிறார் நாயகன். கடன்காரர்களுக்கு பயந்து தலைமறைவாகிறார்கள் நாயகனின் பிள்ளைகளும், மருமகனும். நடக்கும் காட்சிகளை நாயகனின் ஆவியும் எமதூதர்களும் பார்க்கிறார்கள். தன் பிள்ளைகளின் செயலையும், மருமகனின் செயலையும் கண்டு துடிக்கிறார் நாயகன். அவரால் வேறு எதுவும் செய்ய முடியாதே!!!

இறுதியில் அவர் மரணம் தற்கொலை என்று அவர் குடும்பத்தாருக்கு மட்டும் தெரியவருகிறது. பிள்ளைகளின் இழிசெயலால் தற்கொலை செய்து கொள்கிறார். இவரின் மரணத்திற்காக ஊரே மரியாதை செய்கிறது. ஊரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு அரசியல்வாதிகளும் வந்து மரியாதை செலுத்துகிறார்கள்.

கொள்ளி வைக்க பிள்ளைகள் வராததால் ஊர் மக்களே அவரை சுமந்து செல்கிறார்கள் (அந்த நால்வர்). அந்த நேரம் யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு போக பார்க்கிறார்கள் பிள்ளைகள். (அதுவரை அதே ஊரில் ஒரு ஹோட்டலில் மறைந்திருக்கிறார்கள்). அவர்கள் சவம் வரும் வழியில் தெரியாமல் சென்று ஊர் மக்களிடம் சிக்குகிறார்கள்.

மக்களும் இவர்கள் இதற்காகத்தான் வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று இவர்களை அழைத்து கொண்டு சுடுகாடு செல்கிறார்கள். அங்கே தன்னிடமிருந்து வாங்கிய பணத்தை கொடுத்தால்தான் எரிக்க விடுவேன் என்று கோட்டா சொல்ல, அவர் பிள்ளைகள் எங்களிடம் பணமில்லை, வேண்டுமென்றால் சவத்தை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று சொல்ல, ஊர் மொத்தமும் சேர்ந்து கோட்டாவிற்கு பணம் தருகிறார்கள்.

தான் பணம் கேட்டது நாயகனின் பெருமையை அவர் பிள்ளைகளுக்கு உணர்த்தவே என்று சொல்லி அவர்களை திருத்துகிறார். இறுதியில் அனைவரும் திருந்த மகிழ்கிறார் நாயகன். உடனே எமதூதர்கள் மறைந்து தேதூதர்கள் தோன்றுகிறார்காள்.

மக்களே நல்ல படத்தை கேவலமா சொல்லிட்டன்னு நினைக்கிறேன்... உண்மையாலுமே இது அருமையான படம்...

அனுகோகுண்ட ஒக ரோஜு த்ரில்லர் படம். காட்சிக்கு காட்சி நன்றாக இருக்கும். நான் கதை சொல்லி கெடுக்க விரும்பவில்லை... முடிந்தால் பார்க்கவும்... அனானி நண்பரே, நீங்கள் சொல்லி ஒரு மாதத்திற்கு மேலாகிறது என தெரியும். தாங்கள் இதை படித்து எனக்கு தெரியப்படுத்தினால் மகிழ்வேன்...


34 comments:

வேந்தன் said...

//அனுகோகுண்ட ஒக ரோஜு த்ரில்லர் படம். நான் கதை சொல்லி கெடுக்க விரும்பவில்லை... முடிந்தால் பார்க்கவும்...//
இது எனக்கு பிடித்த இரு தெலுகு படங்களுள் ஒன்று.திரில்லர் என்றாலும் அந்தப் படம் மிகவும் எதார்த்தமான முறையில் எடுக்கப்பட்டிருக்கும்.அந்தப் படத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் இது தெலுகு படம்தானா என்றே நம்பமுடியாத அளவிற்கு எதார்த்தமாக எடுத்திருப்பார்கள்.

ராம்குமார் அமுதன் said...

என்ன தல....

நான் நெல்லிக்காய்-II எதிர்பார்த்து ஒவ்வொரு நேரமும் உங்க பக்கத்த ஓப்பன் பண்ணா நீங்க தெலுங்கு பட விமர்சனம் எழுதீருக்கீங்க.....


சீக்கிரம் கதையோட ரெண்டாம் பாகம் போடுங்க.......

நாமக்கல் சிபி said...

//இது எனக்கு பிடித்த இரு தெலுகு படங்களுள் ஒன்று.திரில்லர் என்றாலும் அந்தப் படம் மிகவும் எதார்த்தமான முறையில் எடுக்கப்பட்டிருக்கும்.அந்தப் படத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் இது தெலுகு படம்தானா என்றே நம்பமுடியாத அளவிற்கு எதார்த்தமாக எடுத்திருப்பார்கள். //

ஆமாம் வேந்தன் நீங்கள் சொல்வது மிகவும் உண்மை.... படம் படு ஏதார்த்தம்

நாமக்கல் சிபி said...

அமுதா,
மன்னிக்கவும்...
10 நிமிடத்தில் இதை முடிக்கலாம் என்று முயற்சித்து வழக்கம் போல் பெரிதாகிவிட்டது...

சீக்கிரம் அடுத்த பாகம் போடுகிறேன்

Anonymous said...

// மக்களே நல்ல படத்தை கேவலமா சொல்லிட்டன்னு நினைக்கிறேன்...

:)

ஆனா தெலுங்கு பட விமர்சனம்ங்கிறனாலோ என்னவோ அநியாயத்துக்கு தமிழ்க்கொலை பண்ணியிருக்கீங்க ;)

கதிர் said...

மறுநாளே அடுத்த நெல்லிக்காய் தருவேன்னு பாத்தா ஆ-நலுகுரு, ஒக ரோஜு ன்னு விமர்சனம் போட்டுகிட்டு இருக்கே!

அடுத்த நெல்லிக்காய தூக்கி போடுய்யா!

நாடோடி said...

எனக்கு என்னமே 'கொலிடி' கதையில "இது உண்மை சம்பவம்"முனு ஒரு வரி இல்லையோனு தோணுது.

இராம்/Raam said...

பாலாஜி,

விமர்சனம் நன்றாக இருக்குப்பா!!! சீக்கிரம் நெல்லிக்காய் ரெண்டாம் பாகத்தே போடுப்பா.

நாமக்கல் சிபி said...

//
:)

ஆனா தெலுங்கு பட விமர்சனம்ங்கிறனாலோ என்னவோ அநியாயத்துக்கு தமிழ்க்கொலை பண்ணியிருக்கீங்க ;)//

விக்கி,
என்னுடைய தமிழ் ரொம்ப மோசமா இருக்கா? மன்னிக்கவும் திருத்தி கொள்ள முயற்சிக்கிறேன்!!!

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

மறுநாளே அடுத்த நெல்லிக்காய் தருவேன்னு பாத்தா ஆ-நலுகுரு, ஒக ரோஜு ன்னு விமர்சனம் போட்டுகிட்டு இருக்கே!

அடுத்த நெல்லிக்காய தூக்கி போடுய்யா! //

இது ரொம்ப நாள் பாக்கியாவே இருக்கு. சரினு முடிச்சிட்டேன். இனிமே நெல்லிக்காய முடிக்காம வேற எதுவும் எழுதமாட்டேன் :-)

நாமக்கல் சிபி said...

//நாடோடி said...

எனக்கு என்னமே 'கொலிடி' கதையில "இது உண்மை சம்பவம்"முனு ஒரு வரி இல்லையோனு தோணுது//

நாடோடி நண்பரே,
என்ன விளையாட்டு இது? நான் எத்தனை தடவை சொல்றது. தமிழ்ல வர நல்ல படங்களுக்கு எனக்கு முன்னாடியே பல ரிவியு வரதால நான் எழுதறதில்லை :-(

நாமக்கல் சிபி said...

//ராம் said...

பாலாஜி,

விமர்சனம் நன்றாக இருக்குப்பா!!! சீக்கிரம் நெல்லிக்காய் ரெண்டாம் பாகத்தே போடுப்பா. //

அண்ணாத்த இன்னைக்கு நைட் போட்டுடறேன் :-)

கப்பி | Kappi said...

எந்தரோ மகானுபாவலு அந்தரிக்கு வந்தனமு!இ விமர்சனமு பாக உந்தி! படம்தான் பார்க்கலேது..நேனு ட்ரை செய்ஸ்தானு

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கப்பி பய said
எந்தரோ மகானுபாவலு அந்தரிக்கு வந்தனமு!இ விமர்சனமு பாக உந்தி! படம்தான் பார்க்கலேது..நேனு ட்ரை செய்ஸ்தானு//

வழி மொழி சேஸ்தேனு! :-)
மரி, நெல்லிக்கா கத எக்கட பாலாஜி?

Anonymous said...

// மன்னிக்கவும் திருத்தி கொள்ள முயற்சிக்கிறேன்!!!

Achoo.. i'm jus' kidding. dont take it too serious :)

--Vicky

G.Ragavan said...

ஆ நலுகுரு படம் குறித்து நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய தெலுகு நண்பர் மிகவும் ரசித்துச் சொன்ன படம் அது. என்னையும் அழைத்தார். நாந்தான் தமிழ்ப் படத்துக்கே யோசிச்சி யோசிச்சி போறவன். தெலுங்குப் படத்துக்குப் போயிருவேனா.

சரி. இன்னொரு விஷயம். இந்தப் படம் ஒரு தமிழ்ப் படத்தோட இன்ஸ்பிரேஷனாத்தான் இருக்கனும். அந்தப் படத்தோட பேர் முதல்தேதின்னு நினைக்கிறேன். நடிகர் திலகம் நடித்த படம். பிழியப் பிழிய அழ வைத்த படங்களில் அதுவும் ஒன்று என்று நினைக்கிறேன். சிவாஜியின் மகளை ஒருவன் பலாத்காரம் செய்ய வருவான். ஆனால் அவரோ ஆவி. ஒன்றும் செய்ய முடியாது. ஒரு கட்டத்தில் ஒன்றும் முடியாமல் முகத்தை மூடிக்கொண்டே ஓடி வருவார். கையாகாதத்தனம் என்பது எவ்வளவு கொடுமை என்று அந்த ஒரு காட்சி பேசும்.

Syam said...

எது எப்படியோ இப்போ வட்டம் சதுரம் இல்லாம இந்த போஸ்ட் மெயின் பேஜ் லயே படிக்க முடியுது :-)

வஜ்ரா said...

ஆ நலுகுரு, நல்ல படம்.

நானும் பார்த்திருக்கிறேன். இதிலும் காமடி செய்யாமல் இல்லை ராஜேந்திரப் பிரசாத்.

எம தர்மராஜாவிடம் போய் பேசி தன் உடலை எவ்வாறு தகனம் செய்கின்றனர் என்பதை பார்க்கப் போவது எல்லாம் ஒரு அளவில் காமடி தான்.

மொத்தத்தில் நல்ல கதைகொண்ட ஒரு தெலுங்குப் படம்.!!

4 ஃபைட்டு 5 டான்ஸ் ஒரு மழையில் நனையும் வெள்ளைச்சேலைப்பாட்டு என்று தெலுங்குப் படம் தான் நம்மூரில் ஓடும்! :D

Divya said...

வெட்டி, உங்க 'நெல்லிக்காய் -part2' எத்தனை பேர், எவ்வளவு எதிர் பார்க்குறங்கன்னு தெரிஞ்சுக்கத்தான் இப்படி ஒரு விம்ர்சனம் பதிவு போட்டு பார்க்கிறீங்களா????

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...
எந்தரோ மகானுபாவலு அந்தரிக்கு வந்தனமு!இ விமர்சனமு பாக உந்தி! படம்தான் பார்க்கலேது..நேனு ட்ரை செய்ஸ்தானு//

சால தேங்ஸண்டி...

நாமக்கல் சிபி said...

//வழி மொழி சேஸ்தேனு! :-)
மரி, நெல்லிக்கா கத எக்கட பாலாஜி? //

போட்டாச்சு ;)

நாமக்கல் சிபி said...

//Achoo.. i'm jus' kidding. dont take it too serious :)

--Vicky //
விக்கி,
தப்பிருந்தா, திருத்த முயற்சிக்கலைனா நிலைக்க முடியாது ;)

அதனால்தான் அப்படி சொன்னேன் :-)

நாமக்கல் சிபி said...

ஜி.ரா,
இதுல ஆவி பகுதி ரொம்ப சின்னதுதான்...

ஆனா காப்பி அடிச்சிருந்தாலும் இருக்கலாம் ;)

நாமக்கல் சிபி said...

//Syam said...
எது எப்படியோ இப்போ வட்டம் சதுரம் இல்லாம இந்த போஸ்ட் மெயின் பேஜ் லயே படிக்க முடியுது :-) //

நாட்டாமை,
அதே ஓ.எஸ்ல தெரியுதா?

நாமக்கல் சிபி said...

//Vajra

Vajra said...
ஆ நலுகுரு, நல்ல படம்.

நானும் பார்த்திருக்கிறேன். இதிலும் காமடி செய்யாமல் இல்லை ராஜேந்திரப் பிரசாத்.

எம தர்மராஜாவிடம் போய் பேசி தன் உடலை எவ்வாறு தகனம் செய்கின்றனர் என்பதை பார்க்கப் போவது எல்லாம் ஒரு அளவில் காமடி தான்.

மொத்தத்தில் நல்ல கதைகொண்ட ஒரு தெலுங்குப் படம்.!!

4 ஃபைட்டு 5 டான்ஸ் ஒரு மழையில் நனையும் வெள்ளைச்சேலைப்பாட்டு என்று தெலுங்குப் படம் தான் நம்மூரில் ஓடும்! :D//

சங்கர்,
சரியா சொன்னிங்க...
இதே படத்தை நான் தமிழில் பார்த்திருந்தால் அசந்திருக்க மாட்டேன்...

மலாசா அதிகமா இருக்கற தெலுகு படத்தில் பார்த்ததால் தான் என் மனதில் இது நன்றாக பதிந்தது...

நாமக்கல் சிபி said...

//Divya said...
வெட்டி, உங்க 'நெல்லிக்காய் -part2' எத்தனை பேர், எவ்வளவு எதிர் பார்க்குறங்கன்னு தெரிஞ்சுக்கத்தான் இப்படி ஒரு விம்ர்சனம் பதிவு போட்டு பார்க்கிறீங்களா????//

ஏனுங்க... மக்களை சோதிச்சு பார்க்கற அளவுக்கு எல்லாம் நாம வளரலைங்க... ரொம்ப நாள் கடனை முடிச்சிடலாம்னு தான் :-)

Anonymous said...

ஆஹா, பயங்கர சென்டி படமாயிருக்கே.. எஸ்கேப்..

//மக்களே நல்ல படத்தை கேவலமா சொல்லிட்டன்னு நினைக்கிறேன்...//
வெட்டி நல்லா தான் சொல்லிருக்க.

//ஜி.ரா: சரி. இன்னொரு விஷயம். இந்தப் படம் ஒரு தமிழ்ப் படத்தோட இன்ஸ்பிரேஷனாத்தான் இருக்கனும். அந்தப் படத்தோட பேர் முதல்தேதின்னு நினைக்கிறேன்//

ஜி.ரா சொன்னது மிக சரி. 3 வருஷத்துக்கு முன்னாடி வீட்டுல இருந்தப்போ, காவியப் புதன்ல "முதல் தேதி" படத்த முளுசா பார்த்திருக்கேன். நெசமாலுமே, இதய பலவீனமா இருக்கிறவங்க இத பார்க்கக் கூடாது. படத்துல சிவாஜி உயிரோட இருக்கிற வரைக்கும், அவர் தற்கொலையே பண்ணிக்கலாம்னு தோனும். அவ்வளவு கஷ்டப்படுவார். ஆனா, தற்கொலை பண்ணினதுக்கு அப்புறம் நடக்கிறதெல்லாம் காட்டும் போது இதுக்கு அவர் உயிரோடவே போராடியிருக்கலாம்னு நினைக்க வச்சுடுவாங்க.. ரொம்ப கொருமையா இருக்கும். ஜி.ரா சொன்ன காட்சியும் ஒன்னு.

நிச்சயமா, அந்த காலத்துல மக்கள் எப்படி அழுதிருப்பாங்கனு நினைக்க வைத்த படம்...

ஆனாலும் இவ்வளவு சென்டி படத்துலையும் கலைவானர் காமெடில கலக்கிருப்பாரு..அது தான் படத்துல மிகப்பெரிய ஆறுதல்... உங்களுக்கு இந்த படம் பார்க்கும் ஐடியா/வாய்ப்பு இருந்தால் பின்குறிப்பைப் படிக்க வேண்டாம்!!

அடடா, இவ்வளவு பெரிய பின்னூட்டமாகிடுச்சே.. இதுக்கு ஒரு ப்ளாக் ஆறம்பிச்சு, "வெட்டிப்பயலின் பார்வைக்கு"னு ஒரு பதிவப் போட்டிருக்கலாம்..ச்சே ஜஸ்ட் மிஸ்ஸாகிடுச்சு!! :)

-விநய்

பி.கு:
இன்னொரு ஆறுதலான விஷயம் படம் முடியும் போது இதெல்லாம் சிவாஜியோட கனவு சொல்லி முடிச்சிடுவாங்க. அப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.

Anonymous said...

//Divya said...
வெட்டி, உங்க 'நெல்லிக்காய் -part2' எத்தனை பேர், எவ்வளவு எதிர் பார்க்குறங்கன்னு தெரிஞ்சுக்கத்தான் இப்படி ஒரு விம்ர்சனம் பதிவு போட்டு பார்க்கிறீங்களா????//

இவங்க பாயின்டும் சரியா படுதே...வெட்டி அப்படியெல்லாம் ஒரு எண்ணமும் இல்லையே?? :)

-விநய்

துளசி கோபால் said...

ஏடு கொண்டலவாடா...கோவிந்தா....பாலாஜி.....
இங்கேயும் சினிமா விமரிசனமா? :-)))))

பலே பாகுந்திண்டி.
நேனு இங்க்க ச்சூடலே

நாமக்கல் சிபி said...

//ஆஹா, பயங்கர சென்டி படமாயிருக்கே.. எஸ்கேப்..
//
செம்டி படமெல்லாம் இல்லை விநய்...
நல்லவன ஆண்டவன் சோதிப்பாம் ஆனா கைவிடமாட்டான்றத அருமையா சொல்லியிருப்பாங்க...

//
//மக்களே நல்ல படத்தை கேவலமா சொல்லிட்டன்னு நினைக்கிறேன்...//
வெட்டி நல்லா தான் சொல்லிருக்க.
//
மிக்க நன்றி விநய்

//
//ஜி.ரா: சரி. இன்னொரு விஷயம். இந்தப் படம் ஒரு தமிழ்ப் படத்தோட இன்ஸ்பிரேஷனாத்தான் இருக்கனும். அந்தப் படத்தோட பேர் முதல்தேதின்னு நினைக்கிறேன்//

ஜி.ரா சொன்னது மிக சரி. 3 வருஷத்துக்கு முன்னாடி வீட்டுல இருந்தப்போ, காவியப் புதன்ல "முதல் தேதி" படத்த முளுசா பார்த்திருக்கேன். நெசமாலுமே, இதய பலவீனமா இருக்கிறவங்க இத பார்க்கக் கூடாது. படத்துல சிவாஜி உயிரோட இருக்கிற வரைக்கும், அவர் தற்கொலையே பண்ணிக்கலாம்னு தோனும். அவ்வளவு கஷ்டப்படுவார். ஆனா, தற்கொலை பண்ணினதுக்கு அப்புறம் நடக்கிறதெல்லாம் காட்டும் போது இதுக்கு அவர் உயிரோடவே போராடியிருக்கலாம்னு நினைக்க வச்சுடுவாங்க.. ரொம்ப கொருமையா இருக்கும். ஜி.ரா சொன்ன காட்சியும் ஒன்னு.

நிச்சயமா, அந்த காலத்துல மக்கள் எப்படி அழுதிருப்பாங்கனு நினைக்க வைத்த படம்...

ஆனாலும் இவ்வளவு சென்டி படத்துலையும் கலைவானர் காமெடில கலக்கிருப்பாரு..அது தான் படத்துல மிகப்பெரிய ஆறுதல்... உங்களுக்கு இந்த படம் பார்க்கும் ஐடியா/வாய்ப்பு இருந்தால் பின்குறிப்பைப் படிக்க வேண்டாம்!!

அடடா, இவ்வளவு பெரிய பின்னூட்டமாகிடுச்சே.. இதுக்கு ஒரு ப்ளாக் ஆறம்பிச்சு, "வெட்டிப்பயலின் பார்வைக்கு"னு ஒரு பதிவப் போட்டிருக்கலாம்..ச்சே ஜஸ்ட் மிஸ்ஸாகிடுச்சு!! :)

-விநய்

பி.கு:
இன்னொரு ஆறுதலான விஷயம் படம் முடியும் போது இதெல்லாம் சிவாஜியோட கனவு சொல்லி முடிச்சிடுவாங்க. அப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.

//
படம் பார்க்கலாம்னுதா இருக்கேன்...
பாவங்களில் பெரிய பாவம் தற்கொலை...

நாமக்கல் சிபி said...

//இவங்க பாயின்டும் சரியா படுதே...வெட்டி அப்படியெல்லாம் ஒரு எண்ணமும் இல்லையே?? :)

-விநய் //
அப்படியெல்லாம் இல்லை விநய்...

நாமக்கல் சிபி said...

//துளசி கோபால் said...
ஏடு கொண்டலவாடா...கோவிந்தா....பாலாஜி.....
இங்கேயும் சினிமா விமரிசனமா? :-)))))
//
சினிமா இல்லாத இடமே இல்லை டீச்சர் :-)

//
பலே பாகுந்திண்டி.
நேனு இங்க்க ச்சூடலே
//
சால தேங்ஸ் டீச்சர்...
எப்புடைனா சான்ஸ் தொருகிந்தா தப்பக சூடுண்டி!!!

(கரெக்டா சொன்னனா?)

Anonymous said...

Besides all ur narration n writing skills, ur character of respecting the readers/viewers of ur blog (Ungal valaipathivai thodarndhu padippavargalai ennavendru vilipathu ?) is much appreciable!

I'm the anony friend who had asked u to post review on the two telugu movies including "those four!" (Aangilla-aakkam?!). Remembering me n my request n mentioning it (though it took time) in the intro is 'simply great'.

B'cos of my work burden i couldn read on ur blog during lastmonth, now i feel happy on seeing it. Hope u would've expected my comment as soon as the review was posted, sorry that i couldn make it up.

Again due to time shortage i'm not writing comment for ur other posts, This new template is better than the prev one and ur narration n presentation quality has improved very much. Wishes for ur bloggers' meet at Boston.

நாமக்கல் சிபி said...

Hi Friend,
Actually I felt very bad that I couldnt respond you properly. I could have written this long back but the issue is I dont want to fill my blog with Telugu moives. Later I thought of writing it after some time so that people wont get irritated...

Atleast I am happy now that I have somehow responded you and it reached you... Pls keep visiting :-)