தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, November 26, 2006

நெல்லிக்காய் - 4

காய் 3
காய் 2
காய் 1

ஒரு வழியாக ட்ரெயினிங் முடித்து அனைவரையும் அவரவர் கற்றதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ப்ராஜக்டில் போட்டனர். ஒரு வழியாக அருண், தீபா, ராஜி மூவரும் ஒரே ப்ராஜக்டில் வர கார்த்திக் மட்டும் ப்ராஜக்ட் எதுவும் இல்லாமல் பெஞ்சில் இருந்தான்.

பெரும்பாலும் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கும், ஆர்வக் கோளாறுகளுக்கும் அவ்வளவு சீக்கிரம் ப்ராஜக்ட் கிடைக்காது.பெஞ்சில் இருந்த காரணத்தால் அவனும் பெரும்பாலும் இவர்கள் க்யூபிக்களிலே இருந்தான்.

ட்ரெயினிங்கில் அருணும் கார்த்திக்கும் நன்றாக பழகி நல்ல நண்பர்களாகி இருந்தனர். ட்ரெயினிங் முடியும் சமயத்தில் இருவரும் ஒன்றாக வீடெடுத்து தங்கினர்.வீட்டில் பெரும்பாலும் டீவியும் கம்ப்யூட்டரிலுமே இருவரும் நேரத்தை செலவிட்டு கொண்டிருந்தனர்.

அன்று நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டில் கரெண்டும் இல்லாததால் இருவரும் பழைய காலேஜ் விஷயங்களை பேசி கொண்டிருந்தனர்.தீடிரென்று பேச்சு ராஜீயைப் பற்றி வந்தது.

"கார்த்திக், நீயும் ராஜியும் காலேஜ்லயே நல்ல ஃபிரெண்ட்ஸா"

"நல்ல ஃபிரெண்ட்ஸ்னு சொல்ல முடியாது. ஆனா ஓரளவுக்கு பேசுவோம் அவ்வளவுதான். பொதுவா ராஜீ காலேஜ் பசங்கக்கிட்ட பேச மாட்டா"

"டேய் அடிச்சி விடாதே! அப்பறம் எப்படி ட்ரெயினிங்ல உன் பக்கத்துல வந்து உக்கார்ந்துக்கிட்டா. அதுவும் முதல் நாளே"

"டேய் நாயே! ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து சிஸ்டம்ல உக்கார்ந்திருந்தோம். அந்த முட்டை கண்ணன் (ராஜிவ்) பக்கத்துல இருக்கவங்க் கூட ஷேர் பண்ணிக்கோங்கனு சொன்னவுடனே வேற வழியில்லாம அவ என் கூட சிஸ்டம் ஷேர் பண்ணிக்கிட்டா"

"மச்சி நான் பொறந்து பத்து மாசத்திலே எனக்கு காது குத்தியாச்சு... திரும்பவும் நீ முயற்சி பண்ணாத. அவளோட அந்த பக்கத்துல ஒரு பொண்ணு உக்கார்ந்திருந்தா. அவ கூட உக்காராம எதுக்கு உன் கூட உக்கார்ந்தா?"

"என்னய கேட்டா நான் என்ன சொல்லுவேன். அவளைத்தான் கேக்கனும். ஒரு வேளை நான் எங்க க்ளாஸ் டாப்பர்னு டவுட் கேட்டு படிக்க வசதியா இருக்கும்னு உக்கார்ந்திருக்கலாம்"

"என்ன டவுட் கேட்டு படிக்க பக்கத்துல உக்கார்ந்தாளா? டேய் காதுல வாழைபூவ வைக்க முயற்சி பண்ணாதடா.
நாளைக்கு மதியம் நான் அவளையே கேக்கறன். நீயும் என் பக்கத்தில இருக்க... ஓ.கேவா?"

"தெய்வமே... நான் இருக்கும் போது அவளை கேட்டு தொலைச்சிடாத. அப்பறமா நான் இல்லாதப்ப கேளு"

"ஏன்?"

"வேணாம். எனக்கு ஒரு மாதிரி இருக்கும்"

"என்னட ஓவரா பொண்ணு மாதிரி வெக்கப்படற? நீ இருக்கும் போது கேட்டாத்தான் சரியா இருக்கும். சரி அவளை உனக்கு பிடிச்சிருக்கா?"

"அது எதுக்கு உனக்கு?"

"புரிஞ்சிடுச்சு.. எனக்கு புரிஞ்சிடுச்சு"

"டேய் அதெல்லாம் ஒண்ணும் இல்லைடா..."

"இதையே தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் சூர்யாவும் சொல்லிட்டு இருந்தாரு. நீ சும்மா இரு... நான் பாத்துக்கறேன்"

"டேய் எதாவது பண்ணி கெடுத்துடாதடா ப்ளீஸ்"

"நீ சும்மா இரு... அவளை நான் பார்த்துக்கறேன்"

"டேய்... என்னடா சொல்ற?"

"டேய் சந்தேகப்படாதடா நாயே... அவள் என்ன நினைக்கிறானு நான் கண்டுபிடிச்சி சொல்றேன்"

"டேய் அவள்ட எனக்கு அவளை பிடிச்சிருக்குனு சொல்லிடாதட. அப்பறம் அவளுக்கு பிடிக்கலைனு கடைசி வரைக்கும் பேசாமலே போயிடுவா"

"மச்சி... யாமிருக்க பயமென். நீ ஜாலியா ராஜிய நினைச்சிக்கிட்டே தூங்கு. உங்களை எப்படி சேத்து வைக்கிறதுனு நான் யோசிக்கிறேன்"

"சரி அதெல்லாம் இருக்கட்டும். உனக்கும் தீபாவுக்கும் என்ன பிரச்சனை. ஏன் எப்பவும் எலியும் பூனையுமாவே இருக்கீங்க?"

"அது பெரிய கதை. பெங்களூர்ல இருந்தே சண்டைதான்" ஒருவழியாக பழைய கதையை சொல்லி முடித்தான் அருண்.

"டேய் மோதல்ல ஆரம்பிச்சா... காதல்ல தான் முடியும்னு ஒரு லாஜிக் இருக்கு. பாரு கடைசியா நீ அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போற" கார்த்திக் சொல்லி முடிக்கவும் கரெண்ட் வரவும் சரியாக இருந்தது.

"பாத்தியா. கரெண்ட் வந்துடுச்சு... அப்படினா என் வாக்கு பலிக்க போகுது" கார்த்திக் உற்சாகத்தோடு கூறினான்.

"டேய் இப்படித்தான் இந்தியா வேர்ல்ட் கப்ல ஜெயிக்கும்னு ஆயிரம் லாஜிக் சொன்னீங்க. கடைசியா படு கேவலமா தோத்தோம். இப்படி லாஜிக் சொல்றத முதல்ல நிறுத்துங்க. அப்பறம் அவளுக்கு என்னை சுத்தமா பிடிக்காது" சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து டி.வி பார்க்க சென்றுவிட்டான் அருண்.

அடுத்த நாள் காலையில் வழக்கமாக காபி குடிக்குமிடத்தில் கார்த்திகைத் தவிர மீதி மூவரும் இருந்தனர். கார்த்திக்கிற்கு புது ப்ராஜக்ட் வந்திருப்பதாக மெயில் வந்ததால் அருணுக்கு போனில் சொல்லிவிட்டு மேனஜரை பார்க்க சென்றிருந்தான்.

"ஏய் எங்க கார்த்திக்க காணோம்" அக்கரையாக விசாரித்தாள் ராஜி.

"அவனா... ஒரு சின்ன பிரச்சனை. மதியம் லஞ்சுக்கு வந்துடுவான்"

"என்ன பிரச்சனை?" இன்னும் கொஞ்சம் அதிக அக்கரையுடனும் ஆர்வமுடனும் விசாரித்தாள் ராஜி

"நம்ம கவிதா இல்லை. நேத்து நைட் அவனுக்கு போன் பண்ணி ஓனு அழுகை"

"ஏன்? எதுக்கு? என்ன பிரச்சனை" கேள்வி மேல் கேள்வியாக அடுக்கினாள் ராஜி

"அவ கார்த்திக்க லவ் பண்றாளாம். அவளை தான் அவன் கல்யாணம் பண்ணிக்கனுமாம்"

"அதுக்கு அவன் என்ன சொன்னான்?"

"தெரியல.. நைட் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தான். நான் தூங்கிட்டேன். சரி இன்னைக்கு நைட் பேசிக்கலாம்னு விட்டுட்டேன்." அப்பாவியாக சொல்லிவிட்டு ராஜியின் முகத்தை பார்த்தான் அருண்.

ராஜியால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை. அமைதியாக சிலை போல் நின்றாள். அவளை அறியாமலே அவள் கண்ணிலிருந்து த(க)ண்ணீர் வந்து கொண்டிருந்தது. அவளால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை. யாருடனும் எதுவும் சொல்லாமல் உடனே அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.

அங்கு நடப்பதை அமைதியாக பார்த்து கொண்டிருந்த தீபா, பொறுமையாக அருணிடம் பேசினாள்.

"ஏன் பொய் சொன்ன?"

"என்ன நான் பொய் சொல்றனா?"

"ஆமாம். உன் முகத்துல இருந்தே தெரியுது. அதுவும் இல்லாம இது உண்மையா இருந்தா நீ அவள்ட இப்ப சொல்லியிருக்க மாட்ட"

அருணுக்கு ஆச்சர்யமாக இருந்தது. தீபா எப்படி அவனை நன்றாக புரிந்து வைத்திருக்கிறாள் என்று. இருந்தாலும் பாம்பின் கால் பாம்பறியும் என்பதை போல அருணை அவள் அறிந்து வைத்திருந்தாள் என்று சமாதனப்படுத்தி கொண்டான்.

"அதுவா? ஒரு உண்மை தெரிஞ்சாகனும். அதுக்குத்தான்..."

"என்ன உண்மை?"

"அதெல்லாம் உனக்கு வேணாம். நீ சின்ன பொண்ணு"

"என்ன ராஜி கார்த்திக்க லவ் பண்றாளானு தானே?"

அருணுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

"உனக்கு எப்படி தெரிஞ்சிது?"

"பசங்களைவிட பொண்ணுங்க என்னைக்கும் ஸ்மார்ட்... ஆனா நீ அத ஒத்துக்கமாட்ட"

"இங்க பாரு. பொண்ணுங்க ஸ்மார்ட்னா அவ இந்நேரம் கண்டு பிடிச்சிருக்கணுமே. நான் சொன்னத அவ நம்பிட்டுதானே போறா. அப்பவே தெரியல பசங்க என்னைக்குமே ஸ்மார்ட்னு"

"இங்க பாரு. காதல்னு வந்துட்டா அறிவுக்கு இடமே இல்லை. அது பசங்களா இருந்தாலும் சரி பொண்ணுங்களா இருந்தாலும் சரி. அது போகட்டும். அவுங்களுக்குள்ள இருக்க வேண்டியதுல நீ ஏன் தலையிடற?"

"ஆமாம். அவன் கஷ்டம் எனக்கு தானே தெரியும். பாவம் அவ லவ் பண்றாளா இல்லையானே அவனுக்கு தெரியல"

"அதுக்கூட தெரியல. அவன் எதுக்கு லவ் பண்ணனும்"

"பொண்ணுங்க என்ன நினைக்கிறாங்கனு தெரிஞ்சிட்டா உலகத்துல பாதி பிரச்சனை தீர்ந்திருக்கும். சரி... முதல்ல நான் போய் கார்த்திக்கை விட்டு அவளை சமாதனப்படுத்தறேன்"

"அவன் எங்க? சரி, இது அவன் ப்ளானா இல்லை உன்னுதா? உன்னுதாதான் இருக்கும். அவனுக்கு இந்த மாதிரி க்ரிமினல் யோசனை எல்லாம் வராது"

"என்ன ஓவரா பேசிட்டே போற... அந்த பிரச்சனைய முடிச்சிட்டு உன்னைய கவனிச்சிக்கிறேன்"

இருவரும் சண்டை போட்டு கொண்டே கேபினுக்கு சென்றனர். அங்கே ராஜியை காணவில்லை...

(தொடரும்...)

அடுத்த பகுதி

39 comments:

நாமக்கல் சிபி said...

மக்களே!!! கதையை போர் அடிக்கிற மாதிரி கொண்டு போனா தயங்காமல் சொல்லவும்... கொஞ்சம் சீக்கிரம் முடிக்க முயற்சி செய்யறேன். :-)

கைப்புள்ள said...

//மக்களே!!! கதையை போர் அடிக்கிற மாதிரி கொண்டு போனா தயங்காமல் சொல்லவும்... கொஞ்சம் சீக்கிரம் முடிக்க முயற்சி செய்யறேன். :-)//

சான்ஸே இல்ல. ரொம்ப நல்லா போவுது. அப்படியே மெயிண்டேயின் பண்ணிக்கப்பு
:)

நாமக்கல் சிபி said...

//சான்ஸே இல்ல. ரொம்ப நல்லா போவுது. அப்படியே மெயிண்டேயின் பண்ணிக்கப்பு
:)//

மிக்க நன்றி தல...
மக்கள்ஸ் யாரையும் காணோமெனு கொஞ்சம் டென்ஷனாகிட்டேன் அவ்வளவுதான்...

இனிமே நிம்மதியா தூங்க போகலாம் ;)

G.Ragavan said...

என்னது ராஜியக் காணமா! எங்க போயிருப்பா....எங்கையாவது தனியா மரத்தடி புல்தரை வானம் கண்ணீர் சோகம் பெரிய மனுசத்தனம்...திடீர்னு 10வயது கூடுனாப்புல எண்ணம்..இத்தனையோடையும் கடவுளை வேண்டிக்கிட்டு....கார்த்திக் நல்லாயிருக்கனும்னு பைத்தியக்காரத்தனமா நெனச்சிக்கிட்டு இருப்பா!

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...

என்னது ராஜியக் காணமா! எங்க போயிருப்பா....எங்கையாவது தனியா மரத்தடி புல்தரை வானம் கண்ணீர் சோகம் பெரிய மனுசத்தனம்...திடீர்னு 10வயது கூடுனாப்புல எண்ணம்..இத்தனையோடையும் கடவுளை வேண்டிக்கிட்டு....கார்த்திக் நல்லாயிருக்கனும்னு பைத்தியக்காரத்தனமா நெனச்சிக்கிட்டு இருப்பா!//
ஹா ஹா ஹா...
அடுத்த பதிவுல பாருங்க.. தெரியும் :-)

Divya said...

நல்லா போகுது வெட்டி கதை, போர் எல்லாம் அடிக்கல, இந்த மோதலே இன்னும் கொஞ்ச நாள் கொண்டு போங்க...........அது தான் இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்.

நாமக்கல் சிபி said...

/Divya said...

நல்லா போகுது வெட்டி கதை, போர் எல்லாம் அடிக்கல, இந்த மோதலே இன்னும் கொஞ்ச நாள் கொண்டு போங்க...........அது தான் இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்.///
மிக்க நன்றி திவ்யா...
மோதல் கடைசி வரைக்கும் இருக்கும் :-)

Anonymous said...

//மக்கள்ஸ் யாரையும் காணோமெனு கொஞ்சம் டென்ஷனாகிட்டேன் அவ்வளவுதான்...

போர் எல்லாம் அடிக்கலை வெட்டி :)

-- Comment எழுதமா அமைதியா படிக்கிற லட்சோப லட்சம் ரசிகர்களின் சார்பாக

Vicky

Anonymous said...

super thalaiva

kattuvasi

Santhosh said...

வெட்டி,
கதை நல்லா போயிட்டு இருக்கு போர் எல்லாம் அடிக்கலை. பொதுவா கூட இருப்பவர்கள் ஏத்தி விட்டு தான் மக்கள் காதலிக்கவே ஆரம்பிப்பாங்க :))..

Udhayakumar said...

//மக்களே!!! கதையை போர் அடிக்கிற மாதிரி கொண்டு போனா தயங்காமல் சொல்லவும்... கொஞ்சம் சீக்கிரம் முடிக்க முயற்சி செய்யறேன். :-)//

என்ன இது? போன வாழக்காயில பஜ்ஜி போடலை... சாரி, நெல்லிக்காய்-3 ல கமெண்ட் போடலைன்னா இப்படியா கேக்குறது?

சீக்கிரம் எல்லாம் முடிக்க வேண்டாம். நிதானமா சொல்லுங்க...

Udhayakumar said...

//நல்லா போகுது வெட்டி கதை, போர் எல்லாம் அடிக்கல, இந்த மோதலே இன்னும் கொஞ்ச நாள் கொண்டு போங்க...........அது தான் இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். //

மக்களே, கேட்டுக்குங்க... சண்டைன்னா பொண்ணுகளுக்கு ரொம்ப பிடிக்கும் போல இருக்கு. பாடத்தை இங்கிருந்து ஆரம்பிங்க...

திவ்யா கோபப்பட மாட்டார் என்ற நம்பிக்கையில், உதய்.

நாமக்கல் சிபி said...

//Vicky said...

//மக்கள்ஸ் யாரையும் காணோமெனு கொஞ்சம் டென்ஷனாகிட்டேன் அவ்வளவுதான்...

போர் எல்லாம் அடிக்கலை வெட்டி :)

-- Comment எழுதமா அமைதியா படிக்கிற லட்சோப லட்சம் ரசிகர்களின் சார்பாக

Vicky//

மிக்க நன்றி விக்கி...

இருந்தாலும் லட்சோப லட்ச ரசிகர்கள் கொஞ்சம் டூ மச் இல்ல ;)

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

super thalaiva

kattuvasi//

மிக்க நன்றி வாசி ;)
அப்பறம் உங்க ப்ளாக் என்னாச்சி?

நாமக்கல் சிபி said...

//சந்தோஷ் said...

வெட்டி,
கதை நல்லா போயிட்டு இருக்கு போர் எல்லாம் அடிக்கலை. பொதுவா கூட இருப்பவர்கள் ஏத்தி விட்டு தான் மக்கள் காதலிக்கவே ஆரம்பிப்பாங்க :)).//

மிக்க நன்றீ சந்தோஷ்...
நச்சுனு சொன்னீங்க...

நாமக்கல் சிபி said...

//Udhayakumar said...

//மக்களே!!! கதையை போர் அடிக்கிற மாதிரி கொண்டு போனா தயங்காமல் சொல்லவும்... கொஞ்சம் சீக்கிரம் முடிக்க முயற்சி செய்யறேன். :-)//

என்ன இது? போன வாழக்காயில பஜ்ஜி போடலை... சாரி, நெல்லிக்காய்-3 ல கமெண்ட் போடலைன்னா இப்படியா கேக்குறது?

சீக்கிரம் எல்லாம் முடிக்க வேண்டாம். நிதானமா சொல்லுங்க...//

மிக்க நன்றி உதய்....
அப்படினா பொறுமையா எழுதறேன்...

ஜொள்ளுப்பாண்டி said...

வெட்டி நல்லாதேன் இருக்கு நெல்லிக்காய்:)) மூட்டை மூட்டையா இருக்கும் போல ? அவுத்து வுடுங்க சொகமா படிக்கலாம் :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//போன வாழக்காயில பஜ்ஜி போடலை... சாரி, நெல்லிக்காய்-3 ல கமெண்ட் போடலைன்னா இப்படியா கேக்குறது?//

பாலாஜி, இந்த வசனத்தை அப்படியே புடிச்சிக்குங்க; கதைக்குத் தேவைப்பட்டாலும் படும் இல்லியா?:-))

என்ன பாலாஜி இப்படியெல்லாம் சீக்கிரம் முடிச்சா, சன் டி.வி சீரியலுக்கு நீங்க எப்படி எழுத முடியும்! நம்ம கைப்பு சொல்றா மாறி "அப்படியே மெயிண்டேயின் பண்ணிக்கப்பு"!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நீ சும்மா இரு... அவளை நான் பார்த்துக்கறேன்"

"டேய்... என்னடா சொல்ற?"

"டேய் சந்தேகப்படாதடா நாயே... அவள் என்ன நினைக்கிறானு நான் கண்டுபிடிச்சி சொல்றேன்"//

ஹா ஹா ஹா ஹா ஹா!

நாமக்கல் சிபி said...

//ஜொள்ளுப்பாண்டி said...

வெட்டி நல்லாதேன் இருக்கு நெல்லிக்காய்:)) மூட்டை மூட்டையா இருக்கும் போல ? அவுத்து வுடுங்க சொகமா படிக்கலாம் :)))//

ஜொள்ளு,
ஆமாம்... என்ன பண்றது...
காதல்னா மட்டும் அவ்வளவு லேசா அமைஞ்சிடுமா என்ன?

இன்னும் ஒரு 4 - 5 பதிவு இருக்கும் :-)

நாமக்கல் சிபி said...

//என்ன பாலாஜி இப்படியெல்லாம் சீக்கிரம் முடிச்சா, சன் டி.வி சீரியலுக்கு நீங்க எப்படி எழுத முடியும்! நம்ம கைப்பு சொல்றா மாறி "அப்படியே மெயிண்டேயின் பண்ணிக்கப்பு"!//

தலைவா,
இது என்ன கொடுமை...
அந்த மாதிரி நான் என்ன மொக்கையா போடறேன் :-)

நாமக்கல் சிபி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நீ சும்மா இரு... அவளை நான் பார்த்துக்கறேன்"

"டேய்... என்னடா சொல்ற?"

"டேய் சந்தேகப்படாதடா நாயே... அவள் என்ன நினைக்கிறானு நான் கண்டுபிடிச்சி சொல்றேன்"//

ஹா ஹா ஹா ஹா ஹா!//

பராவாயில்லை...
இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களை புரிஞ்சி ரசிப்பதற்கு நன்றி!!!

நாடோடி said...

ஹாலோ என்னாது?..
சொல்லாமா கில்லாமா 2நாள்குள்ளா templateஆ மாத்தியாச்சு.

:)))

நாமக்கல் சிபி said...

//நாடோடி said...

ஹாலோ என்னாது?..
சொல்லாமா கில்லாமா 2நாள்குள்ளா templateஆ மாத்தியாச்சு.

:)))//

வாங்க மேக்ரோ...
ரொம்ப நாளாயிடுச்சுனு போரடிச்சுது...
சரினு மாத்திட்டேன் ;)

ராம்குமார் அமுதன் said...

Super aaaaaaaaaaa poittu Irukku Thala..... :))

நாமக்கல் சிபி said...

//அமுதன் said...

Super aaaaaaaaaaa poittu Irukku Thala..... :)//

மிக்க நன்றி அமுதா...

Anonymous said...

/* "அவ கார்த்திக்க லவ் பண்றாளாம். அவளை தான் அவன் கல்யாணம் பண்ணிக்கனுமாம்"
*/

pattha vatchitiye parattai :)

nice going ... keep writing more.

- Unmai

Anonymous said...

ada..kadhai por ellam illainga nalla irukku...

ippo thaan padikka aarambichathala..ithukku munndai nadantha kadhaikkum oru link easya potathukku oru nanri :)

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

/* "அவ கார்த்திக்க லவ் பண்றாளாம். அவளை தான் அவன் கல்யாணம் பண்ணிக்கனுமாம்"
*/

pattha vatchitiye parattai :)
//
எல்லாம் தமிழ் சினிமா பாத்து கெட்ட கேசுங்க.. என்ன பண்றது? இப்படித்தான் யோசிப்பானுங்க... அதுவும் அடுத்தவன் காதல்னா அல்வா சாப்பிடற மாதிரி.. சிலருக்கு :-))

//
nice going ... keep writing more.

- Unmai //
Thx a lot unmai :-)

இராம்/Raam said...

பாலாஜி,

இப்போதான் எல்லா பாகத்தையும் வரிசையா படிச்சேன்!!! சூப்பரா போகுதுப்பா!!!!

வாழ்த்துக்கள்.... :)

நாமக்கல் சிபி said...

//Dreamzz said...

ada..kadhai por ellam illainga nalla irukku...

ippo thaan padikka aarambichathala..ithukku munndai nadantha kadhaikkum oru link easya potathukku oru nanri :) //

மிக்க நன்றி ட்ரீம்ஸ்...

மக்களுக்கு எளிமையா இருக்கறதுக்கு தான் அந்த லின்க் எல்லாம்... இல்லைனா பாதி பேர் படிக்காம போயிடுவாங்க ;)

நாமக்கல் சிபி said...

//ராம் said...

பாலாஜி,

இப்போதான் எல்லா பாகத்தையும் வரிசையா படிச்சேன்!!! சூப்பரா போகுதுப்பா!!!!

வாழ்த்துக்கள்.... :) //

மிக்க நன்றி ராமண்ணா ;)

கப்பி | Kappi said...

நெல்லிக்காய்-3 ல போட்ட கமெண்டை போய் படிச்சுக்கோங்க ;)

Anonymous said...

Arumaiyaga pokirathu. melum oru 10 nellikkai yavathu koduthuvidungal.

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

நெல்லிக்காய்-3 ல போட்ட கமெண்டை போய் படிச்சுக்கோங்க ;) //

சரிப்பா... நீயும் அப்படியே அந்த பதில போய் படிச்சிக்கோ ;)

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

Arumaiyaga pokirathu. melum oru 10 nellikkai yavathu koduthuvidungal. //

10 நெல்லிக்காயா???

பாக்கலாங்க...கொஞ்சம் கஷ்டம்னுதான் நினைக்கிறேன்...

எப்படியும் குறஞ்சது இன்னும் 4-5 இருக்கும் :-)

Anonymous said...

ஸாரி... கொஞ்சம் லேட் ஆகிடுச்சு! அதுக்குள்ள மூனு பதிவ போட்டு கலக்குற.

கதை நல்லா போகுது வெட்டி!

-விநய்

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

ஸாரி... கொஞ்சம் லேட் ஆகிடுச்சு! அதுக்குள்ள மூனு பதிவ போட்டு கலக்குற.

கதை நல்லா போகுது வெட்டி!

-விநய்//
நன்றி விநய்...

நேத்து ஏதோ எழுதனும் போல இருந்துச்சு... ஆர்வமா உக்கார்ந்து எழுதிட்டேன் ;)

Arunkumar said...

இந்த பதிவு ரொம்ப சூப்பரா இருக்கு. நல்ல நகைச்சுவை+காதல்+கலாட்டா...

மோதல் பின் காதல் லாஜிக் சூப்பர் :)

//
மோதல் கடைசி வரைக்கும் இருக்கும் :-)
//

இத நான் எதிர் பார்க்கலையே :(

4 பதிவயும் ஒரே தம்ல படிச்சிட்டு இருக்கேன். இது வரைக்கும் சத்தியமா
போர் அடிக்கல... நீங்களே இப்டியெல்லான் திங்க் பண்ணப்படாது !!!