அருண், கம்ப்யூட்டர் படித்துவிட்டு பெங்களூர் வந்தால் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பெங்களுர் வந்த ஆயிரக்கணக்கான இஞ்சினியரிங் படித்த மாணவர்களுள் ஒருவன்.
வந்து மூன்று மாதங்களாகியும் எந்த கம்பெனியிலுமிருந்தும் அழைப்பு வராத காரணத்தால் விரக்தியின் உச்சத்திலிருந்தான் அருண்.
அன்று ஞாயிற்று கிழமை. எந்நேரமும் அறையில் தங்கி புளித்து போயிருந்ததால் ஊர் சுற்ற நண்பர்கள் அனைவரும் முடிவெடுத்திருந்தனர்.
"டேய் வாரத்துக்கு ஒரு தடவைதான் வெளிய போறோம், அதனால வாரம் ஃபுல்லா மறக்காத மாதிரி கலர் ஃபுல் இடமா போகனும்" இது அருணின் நண்பன் சதீஷ்.
"அப்படினா வழக்கம் போல M.G Road தான்... பெயிண்டிங் பண்ண வசதியா இருக்கும்" இது வசந்த்.
"டேய் நானும் இந்த முறை வரேன்... இந்த சக்கரை போட்ட சாம்பாரை சாப்பிட்டு வாழ்க்கையே வெறுத்து போச்சு... அப்படியே நம்ம ஊர் சாப்பாடு கிடைக்கிற மாதிரி கடை ஏதாவதிருந்தா போயி சாப்பிட்டு வருவோம்" அருண்
"டேய் அது சக்கரையில்லை... வெல்லம். அப்பறம் கமெர்ஷியல் ஸ்ட்ரீட்ல மதுரை மெஸ் ஒண்ணு இருக்காம் நம்ம EEE குமார் சொன்னான்.பென்ஸ் கார்ல வரவனே அந்த தட்டு கடைல வாங்கி சாப்பிட்டு போவானாம். நம்ம அப்படியே அதுக்கும் போவோம். ஒகேவா?" இது குமார்
"சரி... அப்படியே MG Road, Brigade Road எல்லாம் சுத்திட்டு சிவாஜி நகர்ல போயி இறங்கினா கமர்ஷியல் ஸ்ட்ரீட் போயிடலாம்"
"சரிடா... எல்லாரும் பஸ் பாஸ் எடுத்துக்கோங்க"
அனைவரும் 201 பஸ் பிடித்து மேயோ ஹால் சென்று இறங்கினார்கள்.
ரெஸிடெண்ஸி ரோடிலிருந்து பிரிகேட் ரோட் சென்று கூட்டத்தோடு கலந்தனர்.
"டேய் அருண், நம்ம வசந்த மட்டும் பாத்துட்டே வா. இந்த ரோடு முடியறதுக்குள்ள 10 பாயிண்டாவது எடுத்துடுவான்" என்றான் சதீஷ்
"அது என்னடா பாயிண்ட்?"
"ஒரு ஒரு பொண்ணையும் இடிச்சா ஒரு பாயிண்ட்"
"டேய் அதெல்லாம் கேவலமான விஷயம். இந்த மாதிரி சீப்பா நடந்துக்கற மாதிரி இருந்தா அவன நாம கூப்பிட்டு வந்திருக்க வேண்டாம்"
அருண் கோபமாக பேசிய வார்த்தைகள் வசந்த் காதில் விழுந்தது.
"இங்க பாருடா நம்ம சாமியார... டேய் என்னை நீங்க கூப்பிட்டு வந்திருக்கீங்களா? நாங்க தான் வழக்கமா வரவங்க. நீ தாண்டி இங்க புது ஆளு. உனக்கு பிடிக்கலைனா நீ போ. நாங்க எல்லாம் இப்படித்தான்"
"டேய் அவன் பண்றது தப்புனு உங்க யாருக்கும் படலையா?"
சதீஷ், "டேய் ஏன் இப்படி டென்ஷன் ஆகற? நம்ம ஊர்லதான் அதெல்லாம் தப்பு. இந்த ஊர்ல இதெல்லாம் சகஜம். பொண்ணுங்களும் ஒண்ணும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க"
"சரி. இதுக்கு மேல உங்க கூட ஆர்கியூ பண்ண நான் விரும்பல. நான் உங்க கூட வரல. பாக்கலாம்"
அருண் கோபமாக திரும்பி ரெஸிடெண்சி ரோட் மேயோ ஹால் போய் சேர்ந்தான்.அவனுக்கு இவர்கள் செய்யும் விஷயம் அருவருப்பாக பட்டது. திரும்பவும் ரூம் போகவும் மனமில்லை.
சரி, நாம வந்தது நம்ம ஊர் சாப்பாடு சாப்பிடத்தானே, அதை செய்வோம் என்று சிவாஜி நகர் பஸ் பிடித்தான்.
ஒரு வழியாக கமர்ஷியல் ஸ்ட்ரீடில் இருக்கும் அந்த மதுரை கடையை கண்டுபிடித்தான். சித்திரை மாதத்தில் மாம்பழத்தை சுற்றி நிற்கும் ஈ போல அந்த கடையை சுற்றி கூட்டமிருந்தது.
அந்த கடை அருகில் 4-5 சிறுவர்கள் வருவோர் போவோரிடமெல்லாம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு பனிரெண்டு பதிமூன்று வயதிருக்கும் போல் தோன்றியது.
இந்த வயதில் வேலை செய்து பிழைக்காமல் பிச்சை எடுப்பவர்களை பார்த்ததும் அவனுக்கு கோபம் வந்தது.
ஒரு வழியாக இட்லி வாங்கி சாப்பிட்டான். பத்து ரூபாய்க்கு 4 இட்லி. பரவாயில்லை, சுவையாக இருந்தது. தோசை ஒன்று வாங்கி சாப்பிடலாம் என்று யோசித்தான். ஆனால் அந்த கூட்டத்தில தோசை கிடைப்பது கடினம் என்று அவனுக்கு புரிந்தது.
அங்கே 4-5 பெண்கள் வந்து இட்லி வாங்கி கொண்டிருந்தனர்.
அந்த பிச்சை எடுக்கும் சிறுவர்கள் அந்த பெண்களை குறி வைத்து தங்கள் கடமையை செய்ய, அதில் ஒரு பெண் மட்டும் இரக்கப்பட்டு அந்த நால்வருக்கும் ஆளுக்கு ஒரு இட்லி பாக்கெட் வாங்கி கொடுத்தாள்.
இதை பார்த்ததும் அருணுக்கு மேலும் கோபம் வந்தது. நேராக அந்த பெண்ணை நோக்கி நடந்தான்.
"ஹலோ மேடம். இந்த மாதிரி பசங்களை என்கரேஜ் செய்யாதீங்க. இந்த மாதிரி செஞ்சா இவங்களுக்கு உழைக்கணும்னு எண்ணமே வராது"
"ஹலோ சார். நீங்க அடுத்தவங்களுக்கு உதவலனாலும் உதவறவங்களை தடுக்காதீங்க" கோபமாக சொன்னாள் அந்த பெண்.
அவளுடனிருந்த மத்த பெண்களும் அவனை ஒரு மாதிரி பார்த்தார்கள்.
அதற்கு மேல் அங்கு நிற்க அவனுக்கு பிடிக்கவில்லை. அந்த பெண் மேல் வெறுப்பு வந்தாலும் அவளின் இறக்க குணம் அவனை அறியாமலே அவனுக்கு பிடித்திருந்தது.
ரூமிற்கு செல்லுமுன் இண்டர்நெட் சென்டர் சென்று மின்னஞ்சல் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்த்தான்.
"Congratulations from xxxxx company" என்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அவசரமாக திறந்து பார்த்தான். xxxxx கம்பெனியிலிருந்து அவனுக்கு தேர்வுக்கு அழைப்பு வந்திருந்தது. முதல் சுற்று ஆப்டிடுயுட் தேர்வு, இராண்டாம் சுற்றுக்கு GD, மூன்றாவது சுற்று பர்ஸனல் இண்டர்வியூ.
சந்தோஷமாக ரூமிற்கு வந்தான். ரூமில் 2 நாட்களாக யாருடனும் பேசாமல் தேர்வுக்கு தயாரானான்.
ஒரு வழியாக முதல் சுற்றில் தேர்வானான். இரண்டாம் சுற்று GDக்கு தயாரானான்.
GDக்கு குளிரூட்டப்பட்ட ஒரு கான்ஃபரன்ஸ் அறை தேர்ந்தெடுத்திருந்தார்கள். உள்ளே சென்றான் அருண். அங்கே அன்று சண்டை போட்ட பெண் உட்கார்ந்திருந்ததை அவன் கவனிக்கத்தவறவில்லை...
உள்ளே ஒரு போர் நடக்கவிருந்ததை யாரும் அறியாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர்...
(தொடரும்...)
அடுத்த பகுதி
62 comments:
கருத்துக்கள் மற்ற பாகங்களையும் படித்த பின்னர் ....
இன்பா,
பொறுமையா சொல்லுங்க...
ஆகா...
இந்த இட்லிப் பிரச்னை பெரும் பிரச்னையா இருக்கும் போல இருக்கே! :-))
GDயின் தலைப்பு என்னவோ?
பாலாஜி..அடுத்த தொடர் எப்போ?
மலரும் நினைவுகள் பாலாஜி!
கதையின் நடுநடுவே பெங்களூரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் சொல்லி....
freeஆ பெங்களூர் போய் வர டிக்கட் கொடுத்த பாலாஜிக்கு ஒரு "ஜே" போடுங்கப்பா!
எவ்வளவு பகுதிகள் வரப்போகுது?
201?
கோரமங்களாவுலயா பஸ் ஏறுனாங்க?
எத்தனவாட்டி MG ரோடு சிக்னல்ல இறங்கி சுத்தப் போயிருப்போம்?
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..
நேட்டிவிட்டி சூப்பர்போங்கோ.
தமிழ் உணவகங்கள்தான் புதுசா இருக்கு.
எதிர்பார்ப்புடன்,
பெத்தராயுடு
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆகா...
இந்த இட்லிப் பிரச்னை பெரும் பிரச்னையா இருக்கும் போல இருக்கே! :-))//
ஆமாங்க K, மல்லிகைப்பூ மாதிரி இட்லி கிடைக்கறது கஷ்டம்தாங்க...
அந்த மாதிரி நிஜமாலுமே கமெர்ஷியல் ஸ்ட்ரீட்ல ஒரு கடை இருக்கு...
//
GDயின் தலைப்பு என்னவோ?//
அது தானுங்க மேட்டரே :-)
//பாலாஜி..அடுத்த தொடர் எப்போ? //
அடுத்த பகுதி நாளைக்கு போடறேன்...
//கதையின் நடுநடுவே பெங்களூரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் சொல்லி....
freeஆ பெங்களூர் போய் வர டிக்கட் கொடுத்த பாலாஜிக்கு ஒரு "ஜே" போடுங்கப்பா!//
கதை எழுதற சாக்குல நானே ஒரு முறை போயிட்டு வந்துட்டேன் ;)
//எவ்வளவு பகுதிகள் வரப்போகுது? //
கொத்ஸ்,
இன்னும் முடிவாகல...
ஒரு அவுட்லைன் மட்டும்தான் ரெடியாயிருக்கு... போக போக தான் எனக்கே தெரியும் :-)
//பெத்த ராயுடு said...
201?
கோரமங்களாவுலயா பஸ் ஏறுனாங்க?
எத்தனவாட்டி MG ரோடு சிக்னல்ல இறங்கி சுத்தப் போயிருப்போம்?
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..
நேட்டிவிட்டி சூப்பர்போங்கோ.
//
விவேக் நகர் பாலாஜி தியேட்டர் பக்கத்துல இருக்கற விநாயகர் கோவில் முன்னாடினு வெச்சிக்குவோமே ;)
//
தமிழ் உணவகங்கள்தான் புதுசா இருக்கு.
எதிர்பார்ப்புடன்,
பெத்தராயுடு//
நீங்க அங்க சாப்பிட்டதில்லையா? நான் அங்கே சாப்பிட்டுருக்கேன்... அதே மாதிரி பசங்களையும் பார்த்திருக்கேன். அதை வைத்துதான் கதையையே ஆரம்பிச்சிருக்கேன் ;)
இது இட்லி பிரச்சனை மாதிரி தெரில.. நெல்லிக்கா பிரச்சனை.. தலைப்பை பாத்தா தெரில..
அடுத்து என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போம்..
//Karthikeyan Muthurajan said...
இது இட்லி பிரச்சனை மாதிரி தெரில.. நெல்லிக்கா பிரச்சனை.. தலைப்பை பாத்தா தெரில..
//
நெல்லிக்காய்னு பேர் வெச்சதுக்கு காரணம் இருக்குங்க...
போக போக உங்களுக்கு புரியும் ;)
//
அடுத்து என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போம்.. //
சீக்கிரமே வரும் ;)
ஆகா வெட்டி அடுத்த innings ஆ ஆரம்பிச்சிடப்போல ஹும் வழக்கம் போல அடிச்சி ஆடு.. :)) நல்ல துவக்கம்..
//சந்தோஷ் said...
ஆகா வெட்டி அடுத்த innings ஆ ஆரம்பிச்சிடப்போல ஹும் வழக்கம் போல அடிச்சி ஆடு.. :)) நல்ல துவக்கம்..//
இது ரொம்ப நாளா மனசுல இருந்த கதை... இப்பதான் ஆரம்பிச்சியிருக்கேன். எப்படி போகும்னு எனக்கும் தெரியல :-)
மிக்க நன்றி சந்தோஷ்!!!
//நீங்க அங்க சாப்பிட்டதில்லையா? நான் அங்கே சாப்பிட்டுருக்கேன்... அதே மாதிரி பசங்களையும் பார்த்திருக்கேன். அதை வைத்துதான் கதையையே ஆரம்பிச்சிருக்கேன் ;)
//
பெங்களூர விட்டு வந்து ஆறு வருசமாச்சு.
நமக்குத் தெரிஞ்ச கடைங்க 'ஆடுகோடி'ல இருக்கற பரோட்டா கடைகள்தான்.
//
எப்படி போகும்னு எனக்கும் தெரியல
//
நம்ம பேர் போட்டு ஆரம்பிச்சிருக்கீங்க. நல்லாத்தான் போகும் :)
போகும்ல????
///நம்ம பேர் போட்டு ஆரம்பிச்சிருக்கீங்க. நல்லாத்தான் போகும் :)
போகும்ல????//
கண்டிப்பா....
அப்பறம் கதாநாயகி பேர் என்ன வைக்கலாம்... நீங்களே சொல்லுங்க :-)
கதை நல்லாதான் இருக்கு.
ஒரே ஒரு விஷயம் சொல்லிக்கவா?
//அதில் ஒரு பெண் மட்டும் இறக்கப்பட்டு அந்த நால்வருக்கும் ஆளுக்கு ஒரு இட்லி பாக்கெட் வாங்கி கொடுத்தாள்//
இறக்கப்பட்டு = இரக்கப்பட்டு
இறப்பு= சங்கு
இரக்கம்= கருணை
எத்தனையோ படத்துல பாத்த சீன் மாதிரியே இருக்கு வெட்டி!
டயலாக் எல்லாம் நகைச்சுவை கலந்த ஜாலியா இருக்கறதினால படிக்கலாம்!
என்ன போர் நடக்க போகுதுன்னு பார்ப்போம்!
கதைக்கு பேரு நெல்லிக்காய் - எதுனா இஸ்கூல் ப்ளாஷ்பேக் இருக்கா?
நெல்லிக்காய்..வித்தியாசமா இருக்குங்க தலைப்பு!
பெங்களூர் சூப்பரா சுத்தி காட்டிடீங்க!
அடுத்த பாகத்தை எதிர்ப்பார்த்து..
-விநய்*
http://godshavespoken.blogspot.com/2006/11/deepa.html
நம்ம தீபா போதுங்க :)
தொடருமா! தொடர்கதையா! வெட்டிப்பயலா! நடக்கட்டும் நடக்கட்டும்.
நல்லதொரு சந்திப்புதான். என்ன ஆச்சோ தெரியலையே! காத்திருக்கேன்.
"வாழைப்பழமும்" நல்லாத்தான் இருக்கு..
//"டேய் நானும் இந்த முறை வரேன்... இந்த சக்கரை போட்ட சாம்பாரை சாப்பிட்டு வாழ்க்கையே வெறுத்து போச்சு... அப்படியே நம்ம ஊர் சாப்பாடு கிடைக்கிற மாதிரி கடை ஏதாவதிருந்தா போயி சாப்பிட்டு வருவோம்" அருண்//
//"டேய் அருண், நம்ம வசந்த மட்டும் பாத்துட்டே வா. இந்த ரோடு முடியறதுக்குள்ள 10 பாயிண்டாவது எடுத்துடுவான்" என்றான் சதீஷ்//
//அனைவரும் 201 பஸ் பிடித்து மேயோ ஹால் சென்று இறங்கினார்கள்.
//
//தோசை ஒன்று வாங்கி சாப்பிடலாம் என்று யோசித்தான். ஆனால் அந்த கூட்டத்தில தோசை கிடைப்பது கடினம் என்று அவனுக்கு புரிந்தது.//
பெங்களூரையும், அதன் தினப்படி நிகழ்வுகளையும் கண் முன் நிறுத்தியிருக்கீங்க... (ஒப்பனிங் அப்படியே பாய்ஸ் படம் மாதிரி இருக்கு)
////பெத்த ராயுடு said...
201?
கோரமங்களாவுலயா பஸ் ஏறுனாங்க?
எத்தனவாட்டி MG ரோடு சிக்னல்ல இறங்கி சுத்தப் போயிருப்போம்?
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..
நேட்டிவிட்டி சூப்பர்போங்கோ.
//
விவேக் நகர் பாலாஜி தியேட்டர் பக்கத்துல இருக்கற விநாயகர் கோவில் முன்னாடினு வெச்சிக்குவோமே ;)
////
நான் ஜய நகர் 9த் பிளாக்ல ஏறுனதா நினைச்சு படிச்சேன்....
//துளசி கோபால் said...
கதை நல்லாதான் இருக்கு.
//
ரொம்ப நன்றி டீச்சர்...
//
ஒரே ஒரு விஷயம் சொல்லிக்கவா?
//
உங்களுக்கு இல்லாத உரிமையா? தாராளமா சொல்லலாம்....
//
//அதில் ஒரு பெண் மட்டும் இறக்கப்பட்டு அந்த நால்வருக்கும் ஆளுக்கு ஒரு இட்லி பாக்கெட் வாங்கி கொடுத்தாள்//
இறக்கப்பட்டு = இரக்கப்பட்டு
இறப்பு= சங்கு
இரக்கம்= கருணை//
//
ஆஹா... எவ்வளவு பெரிய தப்பாயிடுச்சு. மாத்திட்டேன் டீச்சர்...
//தம்பி said...
எத்தனையோ படத்துல பாத்த சீன் மாதிரியே இருக்கு வெட்டி!
டயலாக் எல்லாம் நகைச்சுவை கலந்த ஜாலியா இருக்கறதினால படிக்கலாம்!
என்ன போர் நடக்க போகுதுன்னு பார்ப்போம்!
//
தம்பி,
எந்த படத்துலப்பா இந்த மாதிரி பாத்திருக்க?
பார்ப்போம் என்ன நடக்குதுனு :-)
//
கதைக்கு பேரு நெல்லிக்காய் - எதுனா இஸ்கூல் ப்ளாஷ்பேக் இருக்கா?//
அதெல்லாம் ஒண்ணும் இல்லை :-)
//Anonymous said...
நெல்லிக்காய்..வித்தியாசமா இருக்குங்க தலைப்பு!
//
பார்க்கலாம் கதைக்கும் தலைப்புக்கும் எப்படி சம்பந்தம் வரப்போகுதுனு :-)
//
பெங்களூர் சூப்பரா சுத்தி காட்டிடீங்க!
//
மிக்க நன்றி!!!
//
அடுத்த பாகத்தை எதிர்ப்பார்த்து..
-விநய்* //
சீக்கிரம் போடறேன் :-)
//Arunkumar said...
http://godshavespoken.blogspot.com/2006/11/deepa.html
நம்ம தீபா போதுங்க :)//
ஆஹா,
பேசாம ஹீரோக்கு பாலாஜினே பேர் வெச்சிருக்கலாம் போல இருக்கே :-)
ஓகே கதாநாயகி பேர் தீபா :-)
நாயகன் நம்ம அருணா? பாக்கலாம் :-)
//G.Ragavan said...
தொடருமா! தொடர்கதையா! வெட்டிப்பயலா! நடக்கட்டும் நடக்கட்டும்.
//
ஒரே கதைல முடிக்க கஷ்டமா இருக்கு ஜி.ரா.
அதனால தொடர் கதை போட்டாச்சு ;)
//
நல்லதொரு சந்திப்புதான். என்ன ஆச்சோ தெரியலையே! காத்திருக்கேன். //
நானும் :-)
//Udhayakumar said...
"வாழைப்பழமும்" நல்லாத்தான் இருக்கு..//
ஏன் இந்த கொலை வெறி???
//பெங்களூரையும், அதன் தினப்படி நிகழ்வுகளையும் கண் முன் நிறுத்தியிருக்கீங்க... (ஒப்பனிங் அப்படியே பாய்ஸ் படம் மாதிரி இருக்கு) //
கரெக்டா சொன்னீங்க...
இன்னும் அதிக எஃபக்ட் (பாய்ஸ்) கொண்டு வந்திருப்பேன் ஆனா நம்ம கதாநாயகனோட இமேஜிக்கு ஒத்து வராதுனு விட்டுட்டேன் :-)
ஆனால் உண்மை இதுதான் உதய். அதுவும் நம்ம பிரிகேட் ரோட் இருக்கே... அதுல பசங்க பண்ற ராவடிக்கு அளவே இல்லை. M.G ரோட் கொஞ்சம் பெருசா இருக்கு... அதனால பரவாயில்லை.
//நான் ஜய நகர் 9த் பிளாக்ல ஏறுனதா நினைச்சு படிச்சேன்.... //
201 ஸ்பெஷலே அதுதான் :-) ஊர்ல பாதி எடத்த கவர் பண்ணிடும்
விவேக் நகர்ல இருந்து சிவாஜி நகர்க்கு 141ல தான் பொதுவா போவோம் ;)
201லயும் போகலாம் :-)
Could you pls tell me the exact location of the mess ;-)
//Could you pls tell me the exact location of the mess ;-)//
செந்தில்,
நான் பொய் சொல்றேன்னு நினைச்சிட்டீங்களா?
சிவாஜி நகர்ல இருந்து கமர்சியல் ஸ்ட்ரீட்க்கு வரும் போது ரைட்ல Eastern store இருக்கும். அதுக்கு அடுத்த ரைட்ல போங்க ஒரு 300 - 400 மீட்டர்ல லெப்ட்ல இருக்கும். அதுக்கு கொஞ்சம் முன்னாடி Fruit Salad எல்லாம் தள்ளுவண்டில விப்பாங்க... நீங்க யாராயவது விசாரிச்சா கண்டுபிடிச்சிடலாம்...
ஆனா அந்த மாதிரி பொண்ணு யாராவது இருப்பாங்களானு சொல்ல முடியாது :-)
This stroy is diffrent from all your stories...is ther chances for romance in this story?
தல கத செமயா இருக்கு....
அடுத்த பாகம் எப்போ???
இவங்க ரெண்டு பேரும் அதே கம்பெனில வேலைக்குப் போய் லவ் பண்ணி...
சேருவாங்களா???
இல்ல
பிரிச்சுருவீங்களா???
நெல்லிக்காய்..... சாப்பிடும் போது கசக்கும்.... அப்புறம் தண்ணி குடிச்சா கற்கண்டு மாதிரி இனிக்கும்.... இத வச்சு தான தலைப்புக்கு சம்பந்தம் கொண்டு வரப் போறீங்க...... கரெக்டா????
இணைய ஒளவைகளுக்கு நெல்லிக்காய் கொடுத்த கலியுக அதியமானே! வாழ்க நீ! வளர்க நின் கொற்றம்.
வூட்டுக்கு போய் பொறுமையாப் படிச்சிட்டு அப்பாலே கமெண்டு போடறேன். வர்ட்டா?
ஆகா பாலாஜி,
அசத்திறியே சூப்பரா இருக்குப்பா!!!
அடுத்த பதிவு எப்போ...???
//கார்த்திக் பிரபு said...
This stroy is diffrent from all your stories...is ther chances for romance in this story? //
Is it so?
I think there may be some chances for romance too :-)
//அமுதன் said...
தல கத செமயா இருக்கு....
அடுத்த பாகம் எப்போ???
இவங்க ரெண்டு பேரும் அதே கம்பெனில வேலைக்குப் போய் லவ் பண்ணி...
சேருவாங்களா???
இல்ல
பிரிச்சுருவீங்களா??? //
அமுதா,
எப்படி இதெல்லாம் :-)
சேருவாங்களானு தெரியல ;)
//இறப்பு= சங்கு
இரக்கம்= கருணை//
ஓடி வந்து இங்கூ........
ஊதுங்கடா சங்கூ........
(எம்(டன்) மகன்)
//அமுதன் said...
நெல்லிக்காய்..... சாப்பிடும் போது கசக்கும்.... அப்புறம் தண்ணி குடிச்சா கற்கண்டு மாதிரி இனிக்கும்.... இத வச்சு தான தலைப்புக்கு சம்பந்தம் கொண்டு வரப் போறீங்க...... கரெக்டா???? //
அமுதா,
கலக்கிட்டப்பா!!!
அதுதான் இந்த கதையோட கரு...
எப்படி கண்டுபிடிச்சனு ஆச்சர்யமா இருக்கு. நான் கதைய சொல்லிட்டு தலைப்பை சொன்னப்பக்கூட சிலரால கண்டுபிடிக்க முடியல...
கலக்கல்...
//கைப்புள்ள said...
இணைய ஒளவைகளுக்கு நெல்லிக்காய் கொடுத்த கலியுக அதியமானே! வாழ்க நீ! வளர்க நின் கொற்றம்.
வூட்டுக்கு போய் பொறுமையாப் படிச்சிட்டு அப்பாலே கமெண்டு போடறேன். வர்ட்டா? //
தல,
ஔவை நம்ம தீபா மாதிரி இருந்து நெல்லிக்கனி கொடுத்தா நம்மல எல்லாம் நொங்கிடுவாங்க :-)
பொறுமையா ப்படிச்சு போடுங்க :-)
//ராம் said...
ஆகா பாலாஜி,
அசத்திறியே சூப்பரா இருக்குப்பா!!!
அடுத்த பதிவு எப்போ...??? //
மிக்க நன்றி ராம்...
சீக்கிரம் போடறேன் :-)
//ஆவி அண்ணாச்சி said...
//இறப்பு= சங்கு
இரக்கம்= கருணை//
ஓடி வந்து இங்கூ........
ஊதுங்கடா சங்கூ........
(எம்(டன்) மகன்) //
எல்லாம் மாத்தியாச்சு...
கதா நாயகிக்கு இந்த கதைல சங்கு இல்லை ;)
அது போன கதை :-)
நெக்ஸ்ட் பார்ட் சீக்கிரம் போடு நைனா :)
//கப்பி பய said...
நெக்ஸ்ட் பார்ட் சீக்கிரம் போடு நைனா :) //
சீக்கிரம் போட முயற்சி பண்றேனுங்க...
கதை நன்றாக துவங்கியுள்ளது பாலாஜி. எத்தனை எபிசோட்கள் திட்டமிட்டுள்ளீர்கள்?
வெட்டி! அருமையான நடை. அடுத்த பகுதியை வெகு சீக்கிரமே எதிர்பார்க்கிறேன்.
////உள்ளே ஒரு போர் நடக்கவிருந்ததை யாரும் அறியாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர்...//
போரின் முடிவுல "உன் மண்டையில நெல்லிக்கா அளவுக்குத் தான் மசாலா இருக்கு"ன்னு சொல்லி அடுத்த பகுதியில ஹீரோவை ஆஃபிலை விட்டுத் துரத்தப் போறாங்க சரியா?
இட்லில ஆரம்பிச்ச பிரச்சனை இண்டர்வியூல போய் முடிஞ்சுதா..எல்லோரயும் போல வெய்டிங் ஃபார் நெக்ஷ்ட் போஸ்ட்
:-)
//அப்படினா வழக்கம் போல M.G Road தான்... பெயிண்டிங் பண்ண வசதியா இருக்கும்//
ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே..
:-)
//செல்வன் said...
கதை நன்றாக துவங்கியுள்ளது பாலாஜி. எத்தனை எபிசோட்கள் திட்டமிட்டுள்ளீர்கள்? //
மிக்க நன்றி செல்வன்.
அந்த மாதிரி எல்லாம் பெருசா எதுவும் திட்டமிடவில்லை. இப்பதான் கதையே யோசிச்சிருக்கேன்... பாக்கலாம் ;)
//கைப்புள்ள said...
வெட்டி! அருமையான நடை. அடுத்த பகுதியை வெகு சீக்கிரமே எதிர்பார்க்கிறேன்.//
தல,
மிக்க நன்றி!!!
இன்று இரவு போடுகிறேன் ;)
//போரின் முடிவுல "உன் மண்டையில நெல்லிக்கா அளவுக்குத் தான் மசாலா இருக்கு"ன்னு சொல்லி அடுத்த பகுதியில ஹீரோவை ஆஃபிலை விட்டுத் துரத்தப் போறாங்க சரியா?//
இது என்ன நம்ம 'சொந்த' கதையா? :-)
//Syam said...
இட்லில ஆரம்பிச்ச பிரச்சனை இண்டர்வியூல போய் முடிஞ்சுதா..எல்லோரயும் போல வெய்டிங் ஃபார் நெக்ஷ்ட் போஸ்ட்
:-) //
சீக்கிரம் தெரியும் :-)
////அப்படினா வழக்கம் போல M.G Road தான்... பெயிண்டிங் பண்ண வசதியா இருக்கும்//
ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே..
:-)//
:-))
நல்ல துவக்கம் வெட்டி,அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், [ மோதலுக்குப் பின் காதல் - உங்கள் கதையின் கருவா??]
//Divya said...
நல்ல துவக்கம் வெட்டி,அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், //
மிக்க நன்றி... சீக்கிரம் போடுகிறேன்!!!
//
[ மோதலுக்குப் பின் காதல் - உங்கள் கதையின் கருவா??] //
அப்படியா? யாருக்கு தெரியும் ;)
நம்ம அருண் வேற ஆசையா தீபானு பேர் வைக்க சொல்லிட்டாரு... பார்க்கலாம் ;)
//அமுதா,
கலக்கிட்டப்பா!!!
அதுதான் இந்த கதையோட கரு...
எப்படி கண்டுபிடிச்சனு ஆச்சர்யமா இருக்கு. நான் கதைய சொல்லிட்டு தலைப்பை சொன்னப்பக்கூட சிலரால கண்டுபிடிக்க முடியல...//
என்னத்தான் சொல்லறீங்கன்னு தெரியுது... அதான் மன்னிச்சுகங்கன்னு சொன்னென்ல :)
//
என்னத்தான் சொல்லறீங்கன்னு தெரியுது... அதான் மன்னிச்சுகங்கன்னு சொன்னென்ல :)//
உதய்,
உங்களை இல்லை :-)
உங்கக்கிட்ட தலைப்பை சொல்லிட்டு தான் கதையை சொன்னேன் ;)
அப்பறம் உங்ககிட்ட அவுட்லைனை மட்டும் தானே சொன்னேன்... ஏன்னா அப்ப எனக்கே கதை தெரியாது :-)
இப்ப ஸ்க்ரிப்ட் ரெடி... ஆனா நம்ம தலைல இருக்கு.. .இன்னும் கம்ப்யூட்டர்ல வரலை :-)
Ayyayyo, neenga poi solreengannu ninaikkalai. nijamave oru aarvamthan. vazhi sonnathukku romba danks!!!
//அமுதன் said...
தல கத செமயா இருக்கு....
அடுத்த பாகம் எப்போ???
இவங்க ரெண்டு பேரும் அதே கம்பெனில வேலைக்குப் போய் லவ் பண்ணி...
சேருவாங்களா???
இல்ல
பிரிச்சுருவீங்களா??? //
அமுதா,
எப்படி இதெல்லாம் :-)
சேருவாங்களானு தெரியல ;)//
எல்லாம் தானா வருது தல..... சேத்து வையுங்க..... பாவம் சின்னஞ்சிறுசுங்க....
//அமுதன் said...
நெல்லிக்காய்..... சாப்பிடும் போது கசக்கும்.... அப்புறம் தண்ணி குடிச்சா கற்கண்டு மாதிரி இனிக்கும்.... இத வச்சு தான தலைப்புக்கு சம்பந்தம் கொண்டு வரப் போறீங்க...... கரெக்டா???? //
அமுதா,
கலக்கிட்டப்பா!!!
அதுதான் இந்த கதையோட கரு...
எப்படி கண்டுபிடிச்சனு ஆச்சர்யமா இருக்கு. நான் கதைய சொல்லிட்டு தலைப்பை சொன்னப்பக்கூட சிலரால கண்டுபிடிக்க முடியல...
கலக்கல்...
ஏதோ தோணுச்சு..... நான் அடிக்கடி சொல்ற உவமைகள்ல இதுவும் ஒண்ணு.....
அப்புறம் தல .....இலவசத்துக்கு ஒரு கத ரெடி பண்ணேன்.... ஆனா டைப்படிக்க நேரம் இல்ல.... பயங்கர வேல.... ஒரு மாசம் கழிச்சுதான் எதுவுமே பண்ண முடியும்னு நெனக்கிறேன்.......
//Simply Senthil said...
Ayyayyo, neenga poi solreengannu ninaikkalai. nijamave oru aarvamthan. vazhi sonnathukku romba danks!!! //
செந்தில்,
போய் நல்லா சாப்பிடுங்கள் ;)
//எல்லாம் தானா வருது தல..... சேத்து வையுங்க..... பாவம் சின்னஞ்சிறுசுங்க....//
ஹிம்... பாக்கலாம் ;)
//ஏதோ தோணுச்சு..... நான் அடிக்கடி சொல்ற உவமைகள்ல இதுவும் ஒண்ணு.....
அப்புறம் தல .....இலவசத்துக்கு ஒரு கத ரெடி பண்ணேன்.... ஆனா டைப்படிக்க நேரம் இல்ல.... பயங்கர வேல.... ஒரு மாசம் கழிச்சுதான் எதுவுமே பண்ண முடியும்னு நெனக்கிறேன்....... //
பார்த்து முயற்சி பண்ணி பாருப்பா...
எதுவுமே செய்யனும்னு நினைச்சா தானா நடக்கும் ;)
Post a Comment