தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, January 25, 2012

கவுண்டர்ஸ் டெவில் ஷோ - கௌதம் வாசுதேவ் மேனன்

கவுண்டர்: சில பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டெவில் ஷோல உங்களை எல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு நம்ம டெவில் ஷோல கெஸ்டா வந்திருக்குறது படத்து பேரை அழகா தமிழ் பாட்டுல இருந்து காப்பி அடிச்சிட்டு உள்ள இங்கிலிபிஸ்ல பேசற டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனன்.

இப்ப நிகழ்ச்சிக்கு போகலாம்.

க: வணக்கம் கௌதம் வாசுதேவ் மேனன்

கௌ: வணக்கம் கவுண்டர் சார்.க: அது என்னது அது முதல் படத்துல கௌதம், ரெண்டாவது படத்துல கௌதம் மேனன், அடுத்து கொஞ்ச நாள்ல கௌதம் வாசுதேவ் மேனன். உன் மண்டைல முடி வளர்றதை விட உன் பேர் அதிகமா வளருதே.

கௌ: படத்துல என்ன புதுசா இருக்குனு யாரும் கேள்விக் கேட்டுட கூடாது இல்ல. அதனால தான் என் பேர்லயே புதுசா ஒரு வார்த்தை சேர்த்துக்கறேன். இதுவரைக்கும் உலகத்துலயே எந்த டைரக்டரும் இது போல புது முயற்சி பண்ணதில்லை.

க: டேய் கோக்கனட் மண்டையா, இது தான் உன் புதுமையா? அது என்ன விஜய் கூட சண்டைப் போட்டுட்டு இப்ப சேர்ந்துட்டீங்க?

கௌ: நான் ”ஏ” க்ளாஸ் ஆடியன்ஸ்க்கு படம் எடுக்கறவன். என்கிட்ட ”லோ” க்ளால் ஆடியன்ஸ்க்கு படம் எடுக்க சொன்னாரு. அது தான் பிரச்சனை. இப்ப எல்லாம் சரியாகிடுச்சு.

க: அது என்னடா “ஏ” க்ளாஸ், ”லோ” க்ளாஸ் ஆடியன்ஸ்க்கு படம்

கௌ: இங்கிலிஸ் சிடில இருந்து காப்பி அடிச்சா அது ”ஏ” க்ளாஸ் ஆடியன்ஸ் படம். தெலுகு பட சிடில இருந்து காப்பியடிச்சா அது ”லோ” க்ளாஸ் ஆடியன்ஸ்க்கான படம்.

க: அப்ப மலையாள படத்துல இருந்து காப்பி அடிச்சா?

கௌ: அது மிடில் க்ளாஸ் ஆடியன்ஸுக்கான படம்.

க: ஆஹா. என்ன ஒரு தத்துவும். இதை அப்படியே மஹாபலிபுர சிற்பங்களுக்கு நடுல செதுக்கி வெச்சிட்டு பக்கத்துலயே நீயும் உக்காந்துக்கோ. உனக்கு பின்னால வந்து காப்பி அடிச்சி படம் எடுக்குற இயக்குனர்களுக்கு பயனுள்ளதா இருக்கும். டேய் காப்பி கேட் மண்டையா, அடிக்கறது காப்பி, இதுல என்னடா உனக்கு ஏ க்ளாஸ், லோ க்ளாஸ் எல்லாம். சொந்தமா படம் எடுங்கடா.

கௌ: இப்படி எல்லாரும் காரி துப்பறாங்கனு தான் பச்சைக் கிளி முத்துச்சரத்துக்கு அப்பறம் எல்லாப் படமும் என் சொந்தக் கதையையே படமா எடுக்கறேன்.

க: ஆமாம். அது என்ன பச்சைக் கிளி முத்துச்சரம் படத்தை நான் Derailed படத்துல இருந்து திருடல. நாவல்ல இருந்து தான் எடுத்தேனு ஒரு விளக்கம். ரெண்டுத்துக்கும் என்ன மேன் வித்தியாசம்? தயிரைத் திருடி சாப்ட்ருக்கான் பாருனு சொன்னா, இல்லை நான் பாலத் திருடி உறை ஊத்தி தயிரா மாத்திருக்கேனு ஸ்டேட்மண்ட் விடற. உங்களுக்கு எல்லாம் இந்த வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதமே இருக்காதா?

கௌ: நாவல்ல இருந்து எடுத்தா இன்ஸ்பிரேஷன், படத்துல இருந்து எடுத்தா தான் அது காப்பி. ஆனா அந்த படத்தைத் தவிற என்னோட மத்த படத்துல எல்லாம் என்னோட வாழ்க்கைல நடந்த சொந்தக் கதையைத் தான் எடுத்திருக்கேன்.

க: ஆமாண்டா, ஹீரோ மெக்கானிக்கல் இஞ்சினியரு, படிக்காத தறுதலை, அரியர் வெச்சிருப்பான், ஹீரோயின் மேக்ஸ் படிச்சிட்டு சாப்ட்வேர் இஞ்சினியரு, லவ் அட் ஃபர்ஸ்ட் சைட், ஹீரோயின் குழப்பமாவே இருப்பா. அப்பறம் ஹீரோயினைத் தேடி ஹீரோ போவான், வளைஞ்சி வளைஞ்சி டேன்ஸ் ஆடுவான். இது தான உன் கதை. இதையே எத்தனைப் படத்துலடா எடுப்ப?

கௌ: அப்படி இதுவரைக்கும் எத்தனைப் படத்துல எடுத்திருக்கேன்? மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா? அப்பறம் காக்க காக்க, வேட்டையாடு விளையாடுல ஹீரோயின் மேக்ஸ், கம்ப்யூட்டர் இஞ்சினியர் அவ்வளவு தானே?
க: டேய் இங்கிலிபிஸு மண்டையா, நீ எடுத்ததே அவ்வளவு படம் தாண்டா. அப்பறம் என்னுமோ ஏ க்ளாஸ், லோ க்ளாஸ்னு கதை விடற. உன் படத்துல வில்லனுங்க எல்லாம் கெட்ட கெட்ட வார்த்தை தாண்டா பேசறானுங்க.

கௌ: ஓ அதுவா? இங்கிலிஸ் கெட்ட வார்த்தை பேசனா அது தான் ஏ க்ளாஸ்.

க: டேய் நாயே, காக்க காக்கல ஜீவன் பேசறது எல்லாம் என்ன தெலுங்கு கெட்ட வார்த்தையா? அதுவும் இல்லாம அதுக்கு டப்பிங் கொடுத்ததே நீ தான். அப்பறம் அதுல என்ன இங்கிலிஸ்ல பேசினா ஏ க்ளாஸ்? பாதி படம் ”ஏ” படமா எடுத்துட்டு பேசற பேச்சைப் பாரு? எந்த மொழில கெட்ட வார்த்தைப் பேசினாலும் அது ஒண்ணு தாண்டா அமெரிக்கா மண்டையா? அது என்னடா நாயே நடுநிசி நாய்கள்னு ஒரு படம். பத்து நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியலை. அதுக்கு நீ, நடுநிசி பேய்கள்னு தான் பேர் வெச்சிருக்கணும். படமாடா அது?

கௌ: அக்சுவலி பார்த்தீங்கனா, இது வரைக்கும் நான் பண்ணதுலயே வித்தியாசமான படம் தான் நடுநிசி நாய்கள். வெரைட்டியா கொடுக்கணும்னு பண்ண முயற்சி தான் அது. மக்களுக்கு அது புரியலை.

க: ஆமாம். இவர் பெரிய இன்சப்ஷன் எடுத்துட்டாரு. மக்களுக்கு புரியலைனு சொல்றதுக்கு.

கௌ: இருந்தாலும் தமிழ்ல இது ஒரு வித்தியாசமான முயற்சி இல்லையா?

க: டேய் மொன்ன நாயே, அது தான் உங்க ஊர்ல வித்தியாசமாடா? வேட்டையாடு விளையாடுல வர ரெண்டு சைக்கோங்களையே மொத்தமா ஒரு படமா எடுத்துட்டு வித்தியாசமான முயற்சி, பயிற்சினு பில்ட் அப் கொடுடா. கல்யாண பரிசு, தேன் நிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லைனு படம் எடுத்தார் பாரு டைரக்டர் ஸ்ரீதர், அது தான் மேன் வித்தியாசம். இரண்டு கதையை வெச்சிட்டு மாத்தி மாத்தி எடுத்துட்டு வித்தியாசமாம் வித்தியாசம்.

கௌ: என் படம் யூத்துக்குத் தான் பிடிக்கும். உங்களை மாதிரி ஓல்ட் மேன்களுக்கு எல்லாம் பிடிக்காது.

க: டேய் பரக்காவட்டித் தலையா. அடிக்கறது காப்பி. படத்து பேரை தமிழ் பாட்டுல இருந்து திருடற. படக்கதையை இங்கிலிஷ் படத்துல இருந்து திருடற, இல்லை உன் முந்தன படத்துல இருந்தே திருடற, அதுலயும் பாதி ஏ சர்டிபிகேட் வாங்கன படம். இதை எடுத்துட்டு என்னுமோ ஏ செண்டர், யூத்துனு பீலா விட்டுட்டு திரியறயறையே. உனக்கே இது நியாயமா இருக்கா? இத்தனைக்கும் அந்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்துல அந்த திருஷா புள்ள பின்னாடியே கேமராவை வெச்சி படம் பிடிச்சிருக்க.

கௌ: அதுக்கு காரணம் நான் இல்லை. சிம்பு அவ பின்னாடியே சுத்தினார்னு சிம்பாலிக்கா காட்டத்தான் அப்படி வெச்சது. அது மட்டும் இல்லாம படத்துலயே சிம்பு அதை சொல்லுவாரே.

க: சொம்பு கூட எல்லாம் உன்னை யார் மேன் சேர சொன்னது. உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டேனு அப்பறம் புலம்ப வேண்டியது தான். இனிமேலாவது ஒழுக்கமா படம் எடு. அப்பறம் முக்கியமான ஒண்ணு, இந்த ஒன்றையனா படம் எடுத்துட்டு ஸ்பீல்பர்க் ரேஞ்சுக்கு பேசாத. புரியுதா?

கௌ: சரி கவுண்டரே!

க: மறுபடியும், அவனைப் போட்டுத் தாக்கணும், பேக்கணும், தூக்கணும்னு படத்துல டயலாக் பேசிட்டு திரிஞ்ச நான் பேச மாட்டேன், என் காலு தான் பேசும்.

கவுண்டர் காலைத் தூக்க, கௌதம் வாசு தேவ் மேனன் எஸ்கேப் ஆகிறார்.