தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, November 13, 2009

அப்பாவாக‌ இருப்ப‌து...

பாப்பா வந்ததற்கு பிறகு எதுவும் எழுத முடிவதில்லை. வீட்டிற்கு செல்வதற்குள் இருட்டி விடுகிறது. நான் கதவை திறந்தவுடனே என்னை நோக்கி ஓடி வருகிறாள். ஓடி என்றால் ததக்கா புதக்கானு வேகமா நடப்பதை தான் சொல்கிறேன். வந்து காலை பிடித்துக் கொண்டவளை தூக்கலாமா என்று ஒரு நிமிடம் சிந்திக்கிறேன். வெளியே குளிரிலிருந்து வருவதால் கை மிகவும் குளுமையாக இருக்கும்.

இருந்தாலும் அவங்க‌ விட மாட்டாங்க‌. நான் துணி மாற்றி கை அலம்பி அவுங்கள‌ தூக்கும் வரை என்னை பின் தொடர்ந்து கொண்டே இருப்பாங்க. அப்பறம் தூக்கினதுக்கு அப்பறம் இரண்டு பேருக்குமே சந்தோஷம். ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக இருப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம்னு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சர்க்கரையின் சுவையை சுவைத்தால் தான் உணர முடியும். அதை ஆயிரம் பக்கம் எழுதி உணர வைக்க முடியாது. அது போல தான் இந்த உணர்வையும் எனக்கு விளக்க தெரியவில்லை.

என் மனைவியிடம் நீயும் உன் அப்பாவை இப்படி தான் குழந்தைல கொஞ்சிருப்பியா? அவரும் உன் மேல இதே மாதிரி தான் பாசமா இருந்திருப்பாரு இல்ல அப்படினு அசட்டுத்தனமான கேள்விகளை கேட்கிறேன். என் அக்காவைக் கூட என் அப்பா இப்படி தான் பாசமா வளர்த்திருப்பாருனு நினைத்து பார்க்கிறேன். எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன்.

லேப் டாப் முன்னாடி உட்கார்ந்த உடனே வந்து மடியில் அமர்ந்து கொள்கிறாள். அப்பறம் என்ன பண்ண முடியும். அவுங்க பாட்டு தான் யூ ட்யூப்ல ஓடும். வரான் வரான் பூச்சாண்டினு ஒரு பாட்டு இருக்கு. அது என் லாப் டாப்ல ஆயிரம் முறைக்கு மேல ஓடியிருக்கும். அடுத்து குவா குவா வாத்து, அம்மா இங்கே வா வா, எலியாரே எலியாரே, நிலா நிலா இப்படி ஒரு இருபது பாட்டு கேட்பாங்க.

அப்பறம் அவுங்களோட சாப்ட் டாய்ஸ் பிங்கி, டெட்டி, புலி, எலி எல்லாத்தையும் வெச்சிட்டு விளையாடுவாங்க. புலியை விட்டு அப்பாவை கடிக்க வைக்கிறது தான் விளையாட்டு. அதைப் பார்த்து பயங்கரமா சிரிப்பாங்க. ஒவ்வொரு அறையா புலி பொம்மையை எடுத்துட்டு நடப்பாங்க. அவுங்க எங்க சுவற்றுல இடிச்சிப்பாங்களோனு நாங்களும் அவுங்க பின்னாடியே போகனும்.

எனக்கு யாராவது ஃபோன் பண்ணா ஒரு பத்து நிமிஷம் இவுங்க பேசுவாங்க. அப்பவும் ஃபோன் வாங்கிட்டு நடந்துட்டே பேசுவாங்க. இப்படி நடந்து டயர்டானவுடனே குவா குவா வாத்து பார்த்துட்டே ஏதாவது சாப்பிடுவாங்க. அப்பறம் ஒவ்வொரு பாட்டா பார்த்துட்டே தூங்கிடுவாங்க. எப்படியும் மணி பதினொன்று பனிரெண்டு ஆகிடும். அதற்கு பிறகு ஏதாவது மெயில் வந்திருக்கானு பார்த்துட்டு முடிந்த வரை பதில் சொல்லிவிட்டு படுக்கவே நேரம் சரியாக இருக்கிறது.

ஊரில் இருந்தால் இவுங்கள‌ பார்த்துக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கு. சீக்கிரம் ஊருக்கு போகணும்.

53 comments:

ILA (a) இளா said...

சரிங்க அப்பா சார்!

sriram said...

ஏன் பதிவே எழுதுவதில்லைன்னு நாங்க கேக்கவே இல்லயே
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

குமரன் (Kumaran) said...

தலைப்புல 'பெண் குழந்தைக்கு அப்பாவாக இருப்பது'ன்னு போட்டிருக்கணுமோ? எங்களுக்குப் பிறந்த மாதிரி அடுத்து ஒரு பையன் பொறந்தான்னா அவுங்களுக்கு அப்பாவா இருக்குறது எப்படின்னு தெரிஞ்சு போகும். அப்புறம் சொல்லலாம் எதுல இன்பம் மிகுதின்னு. :-)

PKS said...

நீங்க எழுதி நான் படிச்சதிலேயே இதுதான் பெஸ்ட்.

- பி.கே. சிவகுமார்

பாலாஜி சங்கர் said...

"எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன். "

மிகவும் கவர்ந்த வரிகள்

வெட்டிப்பயல் said...

// ILA(@)இளா said...
சரிங்க அப்பா சார்!

//

சூர்யா ஊருல இருந்து வந்துட்டாரா?

வெட்டிப்பயல் said...

// sriram said...
ஏன் பதிவே எழுதுவதில்லைன்னு நாங்க கேக்கவே இல்லயே
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

//

பதிவு எழுதாததுக்கு இது மட்டும் காரணமில்லை. வேலை பளு தான் காரணம் :)

வெட்டிப்பயல் said...

// குமரன் (Kumaran) said...
தலைப்புல 'பெண் குழந்தைக்கு அப்பாவாக இருப்பது'ன்னு போட்டிருக்கணுமோ? எங்களுக்குப் பிறந்த மாதிரி அடுத்து ஒரு பையன் பொறந்தான்னா அவுங்களுக்கு அப்பாவா இருக்குறது எப்படின்னு தெரிஞ்சு போகும். அப்புறம் சொல்லலாம் எதுல இன்பம் மிகுதின்னு. :-)

//

பையனை விட பெண் குழந்தைகள் மனதை அதிகம் இளக வைத்துவிடுகிறார்கள் என்பது என் எண்ணம் :)

வெட்டிப்பயல் said...

// PKS said...
நீங்க எழுதி நான் படிச்சதிலேயே இதுதான் பெஸ்ட்.

- பி.கே. சிவகுமார்

//

நீங்க எனக்கு பின்னூட்டம் இடறது இது தான் ஃபர்ஸ்ட்னு நினைக்கிறேன் :)

நன்றி தல :)

pudugaithendral said...

பையனை விட பெண் குழந்தைகள் மனதை அதிகம் இளக வைத்துவிடுகிறார்கள் //

அப்பாக்களே இப்படித்தான். அப்பா-மகள், அம்மா -மகன் இது எப்போதும் சுவாரசிய கூட்டணி.

அம்மாவுக்கு மகன் என்ன செய்தாலும் சந்தோஷம். இந்த அதீத பாசம்தான் பிற்காலத்தில் கஷ்டமாகிப்போகிறது.

குட்டிம்மாவுக்கு எனதன்பு முத்தங்கள்.

பேரண்ட்ஸ் கிளப்ல அழகு குட்டிச் செல்லங்களுக்கு வாழ்த்து சொல்லியிருக்கேன்.

http://parentsclub08.blogspot.com/2009/11/blog-post_13.html

ஆ! இதழ்கள் said...

சீக்கிரம் ஊருக்கு போகணும்.//

முடியும்னு நினைக்கிறீங்க?

kunthavai said...

// எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன்.

அப்பப்ப இந்த வரியை எடுத்து படிச்சிக்கோங்க . பொன்னான வரிகள்.

Anonymous said...

//"எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன். "//

Sabash!!!!!!!

Once the kids grow, girls become close to mom n guys become close to dad.. no matter what... :)

Spending time with kids make you forget ur worries... I met a family friends kid a couple of days back. didnt feel to leave him.. he is only 3 yrs but so smart... Kids are blessings..

நர்சிம் said...

மிகப் பிடித்திருந்தது.

SUFFIX said...

குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் அழகு தான் நண்பரே, வாழ்த்துக்கள்.

சீமாச்சு.. said...

ரொம்ப நல்ல விஷயம் ராஜா..

3 பெண் குழந்தைகளுக்குத் தகப்பன் என்ற முறையில் இந்தப் பதிவை கன்னா பின்னா வென்று ரிப்பீட்டுகிறேன்..

சீமாச்சு...

கணேஷ் said...

Awesome :)

Rajalakshmi Pakkirisamy said...

toooooooooooooooooooooooooooooooooooooooooooooo good :)

Rajalakshmi Pakkirisamy said...

romba naaliku apporam vanthurukeenga... konjam adikadi post elutha try pannunga sir

Anonymous said...

photo poturuntha nangalum parthiruppomla...

திவாண்ணா said...

பொண்ணு கொழந்தைக்கு அப்பாவா இருக்கறத பத்தி ஒரு பொண்ணு கொழந்தைக்கு தாத்தாவா இருக்கறவங்களுக்கும் நல்லா தெரியும்!
என்சாய்!
:-))

மங்களூர் சிவா said...

//"எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன். "//

nice
:)))

மங்களூர் சிவா said...

nice post

Kavinaya said...

ச்சோ ச்வீட் :)))

Divyapriya said...

:)) வீட்டுக்கு வந்தவுடனே ஓடி வந்து காலை கட்டிக்குதா பர்மிதா? cho chweet...

Divyapriya said...

"எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன். "

அம்மா மனசு கூட தான் கஷ்டப்படும் ;)

பாலகுமார் said...

feel good :)

Keerthi said...

Simple yet very well written!!! This post was fwded by Rajalakshmi to me... Otherwise I wldnt have come across such a wonderful experience tat a father has with his daughter!!!

வெட்டிப்பயல் said...

//பாலாஜி said...
"எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன். "

மிகவும் கவர்ந்த வரிகள்

//

மிக்க நன்றி பாலாஜி :)

வெட்டிப்பயல் said...

//புதுகைத் தென்றல் said...
பையனை விட பெண் குழந்தைகள் மனதை அதிகம் இளக வைத்துவிடுகிறார்கள் //

அப்பாக்களே இப்படித்தான். அப்பா-மகள், அம்மா -மகன் இது எப்போதும் சுவாரசிய கூட்டணி.

அம்மாவுக்கு மகன் என்ன செய்தாலும் சந்தோஷம். இந்த அதீத பாசம்தான் பிற்காலத்தில் கஷ்டமாகிப்போகிறது.

குட்டிம்மாவுக்கு எனதன்பு முத்தங்கள்.

பேரண்ட்ஸ் கிளப்ல அழகு குட்டிச் செல்லங்களுக்கு வாழ்த்து சொல்லியிருக்கேன்.

http://parentsclub08.blogspot.com/2009/11/blog-post_13.html

//

ஆமாம்... நானும் அம்மா செல்லம் தான்.

வாழ்த்து சூப்பர் :)

வெட்டிப்பயல் said...

//ஆ! இதழ்கள் said...
சீக்கிரம் ஊருக்கு போகணும்.//

முடியும்னு நினைக்கிறீங்க?

//

முடியும்னு தான் தோனுது.. பார்க்கலாம் :)

வெட்டிப்பயல் said...

// kunthavai said...
// எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன்.

அப்பப்ப இந்த வரியை எடுத்து படிச்சிக்கோங்க . பொன்னான வரிகள்.

//

என் வீட்டு அம்மணியும் இதை தான் சொல்றாங்க :)

வெட்டிப்பயல் said...

// Mukilini said...
//"எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன். "//

Sabash!!!!!!!

Once the kids grow, girls become close to mom n guys become close to dad.. no matter what... :)

Spending time with kids make you forget ur worries... I met a family friends kid a couple of days back. didnt feel to leave him.. he is only 3 yrs but so smart... Kids are blessings..

//

whatever, I am still closer to my Mum :)

வெட்டிப்பயல் said...

// நர்சிம் said...
மிகப் பிடித்திருந்தது.

//

மிக்க நன்றி நர்சிம் :)

வெட்டிப்பயல் said...

// ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் அழகு தான் நண்பரே, வாழ்த்துக்கள்.

3:42 AM//

மிக்க நன்றி ஷஃபிக்ஸ் :)

வெட்டிப்பயல் said...

//Seemachu said...
ரொம்ப நல்ல விஷயம் ராஜா..

3 பெண் குழந்தைகளுக்குத் தகப்பன் என்ற முறையில் இந்தப் பதிவை கன்னா பின்னா வென்று ரிப்பீட்டுகிறேன்..

சீமாச்சு...

//

அப்ப ஒரு தடவைக்கு மூணு தடவை சொல்றேனு சொல்லுங்க :)

வெட்டிப்பயல் said...

//கணேஷ் said...
Awesome :)//

Danks Boss !!!

வெட்டிப்பயல் said...

//Rajalakshmi Pakkirisamy said...
romba naaliku apporam vanthurukeenga... konjam adikadi post elutha try pannunga sir

//

ஹி ஹி ஹி :)

முடிந்த வரை எழுத முயற்சி செய்கிறேன் மேடம் :)

வெட்டிப்பயல் said...

//MAHA said...
photo poturuntha nangalum parthiruppomla...//

ஏற்கனவே ப்ளாக்ல ஒரு தடவை ஃபோட்டோ போட்டு உடம்பு சரியில்லாம போயிடுச்சி... I am very sentimental :)

வெட்டிப்பயல் said...

//திவா said...
பொண்ணு கொழந்தைக்கு அப்பாவா இருக்கறத பத்தி ஒரு பொண்ணு கொழந்தைக்கு தாத்தாவா இருக்கறவங்களுக்கும் நல்லா தெரியும்!
என்சாய்!
:-))//

அது இன்னும் மகிழ்ச்சியான விஷயம்னு என் அப்பாவையும், மாமனாரையும் பார்க்கும் போது தெரிகிறது :)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...
//"எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன். "//

nice
:)))//

Danks Sivanne :)

வெட்டிப்பயல் said...

//கவிநயா said...
ச்சோ ச்வீட் :)))

//

நன்றி கவிநயா :)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...
:)) வீட்டுக்கு வந்தவுடனே ஓடி வந்து காலை கட்டிக்குதா பர்மிதா? cho chweet...

//

ஆமாம்மா...

வந்தவுடனே ஓடி வந்துடுவாங்க... ஒரு தடவை எதிர்வீட்டு கதவை யாரோ திறக்க நம்ம வீடு தான் நினைச்சி கதவு பக்கம் ஓடினாளாம் பாப்பா. உடனே வீட்டிலிருந்து ஃபோன். சீக்கிரம் வருகிறேனு சொல்லி ஏழு மணிக்கு தான் போனேன் :(

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
"எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன். "

அம்மா மனசு கூட தான் கஷ்டப்படும் ;)

//

இதை நீ ஞாபகத்துல வெச்சிட்டு நாளைக்கு வர போற மச்சானைப் பார்த்து திட்டும்மா :)

ஏதோ அண்ணனால முடிஞ்ச அட்வைஸு ;)

வெட்டிப்பயல் said...

// பாலகுமார் said...
feel good :)//

Thanks Boss :)

வெட்டிப்பயல் said...

// Keerthi said...
Simple yet very well written!!! This post was fwded by Rajalakshmi to me... Otherwise I wldnt have come across such a wonderful experience tat a father has with his daughter!!!//

Thanks Keerthi...

கொ.ப.செ ராஜிக்கும் என் நன்றிகள் பல :)

அறிவு GV said...

வாழ்த்துக்கள் வெட்டிப்பயல் சார்.
//பையனை விட பெண் குழந்தைகள் மனதை அதிகம் இளக வைத்துவிடுகிறார்கள்// நான் உங்க பக்கம் தான்.
அப்படியே நம்ம கடைப்பக்கம் வாங்க சார்...! http://arivugv.blogspot.com மத்த பின்னூட்ட நண்பர்களுக்கும் "வருக வருக".

Vasanth said...

Enna sir "Reported Attack Site!" nu varuthu.. any problem

Ravikumar said...

அடுத்து குவா குவா வாத்து, அம்மா இங்கே வா வா, எலியாரே எலியாரே, நிலா நிலா இப்படி ஒரு இருபது பாட்டு கேட்பாங்க.

Can i have the links in the youtube. Becuase i need to show to my daughter

வெட்டிப்பயல் said...

Dear Ravikumar,
go to youtube and search for Dosai amma. You will get all the songs...

Unknown said...

//என் மனைவியிடம் நீயும் உன் அப்பாவை இப்படி தான் குழந்தைல கொஞ்சிருப்பியா? //

made me smile...appa magalai konjra alavukku magalum appavai konjuvaa...

கார்த்தி said...

Thala thala thala Veliya vaa thala....

அமைதி அப்பா said...

என்ன ஆச்சு சார்?
பதிவே காணோம்...!