இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த "கரகாட்டக்காரன்" பார்ட்-II
நம்ம டவுசர் புகழ் கி"ராமராஜன்" ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார்.
ராமராஜன் - CEO/CTO
கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.
செந்தில் - டீம் லீட்
ஜுனியர் பாலைய்யா - சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர்.
கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர்.
காட்சி 1:
புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள். மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள்.
ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க!!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க!!!
கவுண்ட்ஸ்: என்ன தம்பி அப்படி சொல்லிட்ட. இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை.
ரா.ரா: யார் யாரு???
கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க! அப்பறம் டி.சி.எஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ-கதவு மெயிண்டெயின் பண்ணாங்க!!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு!!!
செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார்.
கவுண்ட்ஸ்: யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட...
ரா.ரா: ஏன்ன அடிச்சிங்க???
கவுண்ட்ஸ்: ஏன் அடிச்சனா? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட???
....
2 நிமிடம் கழித்து
கவுண்ட்ஸ்:அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா?
1 நிமிடம் கழித்து:
கவுண்ட்ஸ்: ஹும்!!! ஐயோ!!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட?
மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது.
ரா.ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க? அப்படி என்னதான் கேட்டான்?
கவுண்ட்ஸ்: என்ன கேட்டானா? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம்... ஐ-கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான்.
ஜி.பாலையா: ஹாஹாஹா
கவுண்ட்ஸ்: அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை. இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா. ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன்.
காட்சி - 2:
செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார். பக்கத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார்.
புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு...
கவுண்ட்ஸ்: ஏய் ஏய்... நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா?
புதுசு: இல்ல
கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?
புதுசு: இல்ல
கவுண்ட்ஸ்: அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன...ஏய் சொல்லு...சொல்லு
புதுசு: சொல்றங்க!!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் "A" போட்றன்னு சொன்னாருங்க..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!
கவுண்ட்ஸ்: ஓடிப்போ நாயே!!! (செந்திலைப் பார்த்து): ஏண்டா இப்படி பண்ண?
செந்தில்: ஒரு விளம்பரம்தான்...
கவுண்ட்ஸ்: ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான்!!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?
(சரளாவைப் பார்த்து): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி?
லொல்லு????
கோ.சரளா: தோ!! கொஞ்சம் சும்மா இருக்கீகளா!!! என்னை TCSல கூப்டாகோ, Wiproல கூப்டாகோ, infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன்...
கவுண்ட்ஸ்: ஹிம்ம்ம்ம்ம்ம்......ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracleல கூப்டாகோ .... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா?
கோ.சரளா: ஹிக்க்க்க்ம்...இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை...
கவுண்ட்ஸ்: ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க!!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன்! ஜாக்கிரதை!!!
ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்...
36 comments:
இது தான் நான் முதல்ல எழுதன கவுண்டர் காமெடி :)
மறுபதிப்பு...
புதுசு: சொல்றங்க!!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் "A" போட்றன்னு சொன்னாருங்க..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!
Super
//ஸ்ரீதர்கண்ணன் said...
புதுசு: சொல்றங்க!!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் "A" போட்றன்னு சொன்னாருங்க..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!
Super//
Thank you boss :)
கவுண்ட்ஸ்: ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான்!!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?
கவுண்ட்ஸ்: ஹிம்ம்ம்ம்ம்ம்......ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracleல கூப்டாகோ, நியூ யார்க்ல IBMல கூப்டாகோ.... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா?
Ultimate :)))))))

Ultimate :)))))))//
Danks Boss :)
மறக்க முடியுமா...
:))
அந்த காமெடியை எப்ப பாத்தாலும் சரிப்புங்கறாமாதிரி இதையும் எப்ப படிச்சாலும் சிரிப்புத்தான் அண்ணே..
எப்போது படித்தாலும் சிரிப்பு வரவைக்கும் பதிவு
//தமிழன்-கறுப்பி... said...
மறக்க முடியுமா...//
இன்னும் நியாபகம் வெச்சிருக்கறதுக்கு நன்றி தமிழன்-கறுப்பி :)
//தமிழன்-கறுப்பி... said...
அந்த காமெடியை எப்ப பாத்தாலும் சரிப்புங்கறாமாதிரி இதையும் எப்ப படிச்சாலும் சிரிப்புத்தான் அண்ணே..//
மிக்க நன்றி தமிழன்-கறுப்பி :)
//முரளிகண்ணன் said...
எப்போது படித்தாலும் சிரிப்பு வரவைக்கும் பதிவு
//
தொடர் ஆதரவுக்கு நன்றி முக :)
ம்ம்.. படிச்ச ஞாபகம் இருக்குங்க.. மறுபடியும் சிரிக்க முடியுது.. :))
//கார்க்கி said...
ம்ம்.. படிச்ச ஞாபகம் இருக்குங்க.. மறுபடியும் சிரிக்க முடியுது.. :))//
நன்றி கார்க்கி :)
ada gonka makka!!!
வெட்டி..
வெட்டிக்கொன்னுட்டிங்க.. ஹஹஹ..
ஒரு டயலாக் மிஸ்ஸிங்..
கவுண்டர்: ஏண்டா நீ வங்குற பத்துக்கும் அஞ்சுக்கும் இது தேவதானா??... அந்த சினிமாக்காரன் தான்...
எங்க குரூப்ல இது ரொம்ப கலாய்த்தலான வசனம்... உங்க கைவண்ணத்துல அதையும் அப்படியே பில்டப் பண்ணி சேத்துடுங்க. :)
haha...அந்த காமெடிய அப்படியே கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டீங்க...:)நல்லா இருந்துச்சு.
நல்ல காமெடி....ரசித்து படித்தேன்...தொடர்ந்து பதியவும்...
ஹிம்ம்ம்ம்ம்ம்......ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracleல கூப்டாகோ, நியூ யார்க்ல IBMல கூப்டாகோ.... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா?
எங்களுக்கும் இனி வரும் காலத்தில யாருடைய காதிலையாவது பூ சுத்த வசதி இருந்தால்... இதே மாதிரி ட்ரை பண்ணி பார்க்கலாம் போல இருக்கு...
ஹாஹா........
ஹா......
ஹ//
//. ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன்.//
ஹா ஹா :D
//25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு//
தெரியாத் தனமா அஃபீஸ்ல படிச்சிட்டனே! முடியல…ஆனாலும் அவங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்க வேண்டாம் :D
one of ur best :))) chance less...காலையிலேயே படிச்சுட்டேன், இன்னும் மேல இருக்க ரெண்டு dialogue அ நினைச்சு நினைச்சு சிரிச்சிட்டே இருக்கேன் :)
/////புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு...///////
சூப்பரா இருக்கு பாலாஜி!
//Swami www ji said...
ada gonka makka!!!//
ஒரு ஸ்வாமிஜி பேசற பேச்சா இது :)
// இசை said...
வெட்டி..
வெட்டிக்கொன்னுட்டிங்க.. ஹஹஹ..
ஒரு டயலாக் மிஸ்ஸிங்..
கவுண்டர்: ஏண்டா நீ வங்குற பத்துக்கும் அஞ்சுக்கும் இது தேவதானா??... அந்த சினிமாக்காரன் தான்...
எங்க குரூப்ல இது ரொம்ப கலாய்த்தலான வசனம்... உங்க கைவண்ணத்துல அதையும் அப்படியே பில்டப் பண்ணி சேத்துடுங்க. :)//
இதை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சொல்லிருந்தா நம்மல அடிச்சி தொவைச்சிருப்பாங்க :)
//Thamizhmaangani said...
haha...அந்த காமெடிய அப்படியே கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டீங்க...:)நல்லா இருந்துச்சு.//
மிக்க நன்றி தமிழ்மாங்கனி :)
//RAMASUBRAMANIA SHARMA said...
நல்ல காமெடி....ரசித்து படித்தேன்...தொடர்ந்து பதியவும்...
//
மிக்க நன்றி ராமசுப்ரமணிய ஷர்மா :)
// தங்கம் said...
ஹிம்ம்ம்ம்ம்ம்......ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracleல கூப்டாகோ, நியூ யார்க்ல IBMல கூப்டாகோ.... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா?
எங்களுக்கும் இனி வரும் காலத்தில யாருடைய காதிலையாவது பூ சுத்த வசதி இருந்தால்... இதே மாதிரி ட்ரை பண்ணி பார்க்கலாம் போல இருக்கு...//
சூப்பர்... ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க :)
//ஆதவா said...
ஹாஹா........
ஹா......
//
மிக்க நன்றி ஆதவா :)
//Divyapriya said...
//. ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன்.//
ஹா ஹா :D
//25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு//
தெரியாத் தனமா அஃபீஸ்ல படிச்சிட்டனே! முடியல…ஆனாலும் அவங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்க வேண்டாம் :D
one of ur best :))) chance less...காலையிலேயே படிச்சுட்டேன், இன்னும் மேல இருக்க ரெண்டு dialogue அ நினைச்சு நினைச்சு சிரிச்சிட்டே இருக்கேன் :)//
மிக்க நன்றிமா...
இது தான்மா என்னுடைய ஃபர்ஸ்ட் :)
//SP.VR. SUBBIAH said...
/////புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு...///////
சூப்பரா இருக்கு பாலாஜி!
//
மிக்க நன்றி வாத்தியாரய்யா :)
சூப்பர் சுப்பர்... இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன். கலக்கல்.
:))))
இனி எப்போவாவது கரகாட்டக்காரன் சீன் பார்த்தா இந்த பதிவு தான் ஞாபகத்துக்கு வரும்...
:-)
வெட்டி.. கலக்கல்.. சாதாரணமா சிரிப்பு காட்சிகளை நையாண்டி செய்யுறது கொஞ்சம் கஷ்டம், நீங்க பின்னூறீங்க..
//இனி எப்போவாவது கரகாட்டக்காரன் சீன் பார்த்தா இந்த பதிவு தான் ஞாபகத்துக்கு வரும்...
:-)//
ஹி...ஹி...ரிப்பீட்டேய். ஆனா இந்த போஸ்டை நான் இப்போ தான் முதல் தடவையா படிக்கிற மாதிரி இருக்கு. காலங்காத்தால செம சிரிப்பு. சூப்பர்.
:)
நான் இப்பதான் படிகிறேன். ஹா..ஹா.
ROFL. :))
கலக்கல்:)
Post a Comment