"தீபா, நான் இவ்வளவு சீக்கிரம் எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்கவேயில்லை”
“நானும்”
“ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்கிட்டு, இவ்வளவு க்ராண்டா கல்யாணம் நடத்தி, இவ்வளவு அழகான முதல் இரவு அறைல இப்படி நீயும், நானும் இருப்போம்னு நான் சத்தியமா எதிர்பார்க்கவேயில்லை”
”ம்ம்ம்”
“நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீயே”
“ “
“ஏன் அப்படி பாக்கற. நான் எதுவும் தப்பா கேக்க மாட்டேன்”
“மட சாம்பிராணி. நீ என் புருஷன். நீ எது கேட்டாலும் தப்பில்லை”
“அடிப்பாவி. நான் கேக்க வந்தது, நீ நிஜமாலுமே என்னை லவ் பண்ணியா இல்லை நான் பேசனதை கேட்டு என்னை பிடிக்க ஆரம்பிச்சிதா?”
”இப்ப எதுக்கு அது?”
”சும்மா தெரிஞ்சிக்கதான். என் கல்யாணம் காதல் கல்யாணமா, இல்லை அரேஞ்சிடு மேராஜானு எனக்கே சந்தேகமா இருக்கு”
“
ஓ! உங்க கல்யாணமா? நான் கூட நம்ம கல்யாணமோனு நினைச்சேன். உங்க கல்யாணம் எப்படினு நீங்க தான் சொல்லனும். என்னை கேட்டா?”
“ஆமாம். நான், நான் அவனில்லை ஜீவன். அப்படியே நாலஞ்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”
“ஏன் பண்ணி தான் பாருங்களேன்”
“கோச்சுக்காதடா. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுவியாம். ப்ளீஸ்”
”சொன்னா என்ன தருவீங்க?”
“நீ சொல்லு அதுக்கேத்த மாதிரி ஒண்ணு தரேன்”
”லவ் மேரேஜ் தான்”
“ச்சீ. என்ன இது இப்படி எச்சி பண்ணிட்டு. ச்சீ. நீ இப்படி பண்ணுவனு தெரிஞ்சிருந்தா நான் சொல்லியிருக்கவே மாட்டேன்”
“ஏ அதுக்கு ஏன் இப்படி அடிக்கற”
“இத்தனை தடவை எழுந்திரி எழுந்திரினு சொல்லி எழுந்திருக்கலனா, உன்னை அடிக்காம என்ன கொஞ்சியா எழுப்புவாங்க? எழுந்திருச்சி தொலைடா”
ச்சி. மறுபடியும் கனவா?
“சனிக்கிழமையானா போதும், இப்படி இழுத்து போட்டுட்டு தூங்கி தொலைய வேண்டியது. எழுந்திரிச்சி தொலைடா. எனக்கு பசிக்குது”
“மணி என்ன?”
“பதினொன்னு ஐம்பத்தஞ்சு. ஏன் இப்ப ஏதாவது கனவை கெடுத்துட்டனா?”
“ஆமாம். ஆனா நல்ல வேளை ஒரு பத்து செகண்ட் கழிச்சி எழுப்பன”
“ஓஹோ. அப்படி போகுது. அப்துல் கலாம் சொன்னதை ஒழுங்கா ஃபாலோ பண்றவன் நீ ஒருத்தன் மட்டும் தான். ஆனா அவர் வேற ஒரு மேட்டருக்கு கனவு காண சொன்னாரு”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை”
“சரி சரி. இந்த வாரமாவது சொன்னியா இல்லை வாஸ்து சரியில்லை, குரு பெயர்ச்சி வரட்டும்னு சொல்லாம விட்டுட்டயா?”
“சொல்லிட்டன்டா”
“வாவ். என்ன சொன்னா?”
“அவ என்ன சொன்னானு எனக்கு புரியல”
“புரியலையா? ஏன் தெலுகுல சொன்னாளா? அவ தமிழ் பொண்ணா இல்லை கொல்ட்டியா?”
“விளக்கெண்ணெய். அதெல்லாம் ஒண்ணுமில்லைடா. அவ தமிழ் பொண்ணுதான். ஆனா அவ சொன்னதுல இருந்து அவ என்னை காதலிக்கறால இல்லையான புரியல”
“இப்படி பசங்களை அலைய விடறதே அவளுகளுக்கு வேலையா போச்சு. என்ன நடந்ததுனு சொல்லு. நான் வேணா டீகோட் பண்ணி சொல்றேன்”
”இரு பல்லு விளக்கிட்டு வரேன்”
“ஏன்டா, காட்ல சிங்கம், புலி எல்லாம் பல்லா விளக்குது. சொல்லிட்டு போய் பல்லு விளக்கிக்கோடா”
“இரு வரேன்”
...
“சரி. இப்ப சொல்லு. எப்ப சொன்ன? என்ன சொன்ன?”
”நேத்து தான் சொன்னேன். எங்க கம்பெனில எல்லா ப்ராஜக்ட் பார்ட்டியும் நிறுத்திட்டாங்க”
“இது என்ன பிரமாதம், எங்க கம்பெனில எல்லாம் பாதி பேருக்கு வேலையை விட்டே நிறுத்திட்டாங்க”
“சொல்றதை கேளுடா. சும்மா குறுக்க குறுக்க பேசாத”
“சரி சொல்லி தொலை. இன்னைக்கு உனக்கு நல்ல நேரம்”
“கம்பெனில எப்படியும் பிராஜக்ட் பார்ட்டினு தலைக்கு 250 ரூபாய் கொடுப்பாங்க. அந்த பணத்தை நாமலே போட்டு பிராஜக்ட் பார்ட்டி போகலாம். ஒரு ரிலாக்சேஷன் கிடைக்கும்னு எங்க மேனஜர் சொன்னாரு”
“குட் மேனஜர். இவரை மாதிரி நாலு பேர் இருந்தா கம்பெனி தானா முன்னேறிடும்”
“சரி, எப்படியாவது பாதி நாள் ஃபிரியா இருந்தா போதும்னு எல்லாரும் ஓகே சொல்லிட்டோம்”
“இல்லைனா மட்டும் வேலை செய்யற மாதிரி”
“டேய் சொல்றதை கேளு.
நேத்து மதியம், அந்த ரிசார்ட்ல எல்லாரும் ஆளாளுக்கு ஏதோ விளையாடிட்டு இருந்தாங்க. நாங்க நாலு பேரும் ஷெட்டில் கார்க் விளையாடிட்டு இருந்தோம். ஒரு செட் முடிஞ்சவுடனே, ரெண்டு பேர் வந்து அவுங்களையும் சேர்த்துக்க சொல்லி சொன்னாங்க. அந்த சைட்ல இருந்து பேட்டை கொடுத்துட்டு தீபா போனா, நானும் சரினு எங்க சைட்ல இருந்து கொடுத்துட்டு வெளிய வந்துட்டேன்”
“டேய், அது பேட் இல்லைடா ஷெட்டில் ராக்கெட். கிரிக்கெட் பேட்டுக்கும் ஷெட்டில் ராக்கெட்டுக்கும் வித்யாசம் தெரியாம எப்படிடா ஒரு ஆட்டம் ஆடின?”
“இப்ப நீ வாய மூடலைனா நான் சொல்ல மாட்டேன்”
“சரி சரி. சொல்லு சொல்லு. நான் எதுவும் பேசல”
“விளையாடின களைப்புல தீபா தண்ணி குடிக்க போனா. நானும் அப்படியே தண்ணி குடிக்க போனேன்”
“இப்ப தான் விறுவிறுப்பா போகுது. சொல்லு சொல்லு”
“தண்ணி குடிச்சிட்டு ரெண்டு பேரும் அந்த ரூம்ல இருந்து வெளிய வந்தோம். வெளிய அழகா ரோடுக்கு ரெண்டு பக்கமும் செடியெல்லாம் வெச்சி கார்டென் மாதிரி இருந்துச்சு”
“ரொம்ப முக்கியம். கதையை சொல்லுடா”
”சரி இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காதுனு நானே அவள்ட பேச ஆரம்பிச்சேன்”
“சூப்பர்டா மச்சான். இப்ப தான் என் ரூமேட்னு ப்ரூவ் பண்ற”
“ம்ம்ம். தீபா, அப்படியே ஒரு வாக் போகலாமானு கேட்டேன்”
“ம்ம்ம்”
“என்னை ஒரு மாதிரி பார்த்தா. அவ பார்வைலயே ஒரு குழப்பம் தெரிஞ்சிது. சரினு சொல்லி ரெண்டு பேரும் நடக்க ஆரம்பிச்சோம்”
“ம்ம்ம்”
“ஒரு ரெண்டு நிமிஷம் ரெண்டு பேரும் அமைதியா நடந்து போனோம். நான் தான் பேச ஆரம்பிச்சேன். தீபா, ஒரு முப்பது வருஷம் கழிச்சி இப்படி நாம நடந்து போனாலும் நான் இப்ப இருக்கற மாதிரி சந்தோஷமா இருப்பேனு தோனுது. எனக்கு வேற எப்படி சொல்றதுனு தெரியல. உன் கூட இந்த வாழ்க்கை முழுசும் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது தீபா. எனக்கு இந்த ஃபீலிங்ஸ்க்கு பேற என்னனு சொல்ல தெரியல. ஆனா உன் கூட இருந்தா மன நிறைவா இருக்கு. நீ சந்தோஷப்பட்டா என் மனசும் சந்தோஷமடையுது, நீ கஷ்டப்பட்டா எனக்கும் கஷ்டமா இருக்கு. இந்த ஆயூசு முழுக்க உன்னை சந்தோஷமா வெச்சிட்டு நானும் சந்தோஷமா இருப்பேனு என் உள்மனசு சொல்லுது தீபா”
“வாவ். கலக்கிட்டடா மச்சான். எப்படிடா இப்படியெல்லாம்? சரி.. சரி. அவ என்ன சொன்னா?”
“அவ என்னை வித்தியாசமா பார்த்தா. ப்ரொபோஸ் பண்றியா”?னு கேட்டா. அதுக்கு நான், “தெரியலை. எனக்கு இதுக்கு பேரு என்னனு தெரியலை. என் மனசுல இருக்கறதுக்கு பேரு காதல்னா, நான் உன்னை காதலிக்கிறேன். இப்ப நான் உனக்கு என் மனசுல இருக்கறதை சொல்றதுக்கு பேரு ப்ரோபோஸ்னா நான் உனக்கு ப்ரொபோஸ் பண்றேனு தான் நினைக்கிறேன்”
“கலக்கல்டா மச்சான். அப்பறம்?”
“அவளுக்கு என்ன பேசறதுனே தெரியல. ஒரு நிமிஷம் அமைதியா இருந்தா. அப்பறம் பேச ஆரம்பிச்சா, to be frank, எனக்கு இதுக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியலை. நான் கொஞ்சம் யோசிக்கனும். எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுப்பீங்களா?”
“ஆஹா. அப்ப திங்க கிழமை தான் தெரியுமா?”
“இருடா. இன்னும் முடியலை”
“ஓ. சொல்லு சொல்லு”
“அப்படியே பார்ட்டி முடிஞ்சி எல்லாரும் ஆபிஸ்க்கு வந்தோம். ப்ளான் எப்படினா, எல்லாரும் ஆறு மணிக்கு ஆபிஸ்க்கு வந்து ஸ்வைப் அவுட் பண்ணிட்டு, அவுங்க அவுங்க பஸ் பிடிச்சி போகற மாதிரி”
“நல்ல விவரமா இருக்கீங்கடா. சரி சொல்லு”
“கொஞ்சம் வேலை இருந்ததால நான் என் சீட்டுக்கு போனேன். கொஞ்ச நேரம் வேலை பார்த்துட்டு இருக்கும் போது, அவ என் பின்னாடி வந்து நின்னு கூப்பிட்டா”
“ம்ம்ம்”
“இதுல நான் யோசிக்கறதுக்கு பதிலா எங்க வீட்லயே கேக்கலாம்னு யோசிக்கிறேன். எங்க அப்பா, அம்மாகிட்ட பேசிடலாம்னு பாக்கறேன். ஆர் யூ ரியல்லி சீரியஸ் அபோட் திஸ்? அப்படினு கேட்டா?”
“அடப்பாவி. என்னடா டைரக்டா, அப்பா, அம்மானு போயிட்டா?”
“எனக்கும் அது தான் ஷாக். இருந்தாலும் அதுல எனக்கும் சந்தோஷம் தான். அவளால மனசளவுல என்னை ஏத்துக்க முடிஞ்சிதுனு. நானும் தெளிவா பேச ஆரம்பிச்சேன், தீபா, வேணும்னா நான் நேர்ல வந்து பேசறதுனாலும் பேசறேன். உனக்கு விருப்பமிருந்தால்... இல்லைனா நீயே பேசிட்டு சொல்லு”
”அட்ரா சக்கை. எப்படிடா டாக் உனக்கு இந்த அளவுக்கு பேச வந்துச்சு?”
“அது என்னுமோ அப்ப வந்துடுச்சு. சரி நான் வீக் எண்ட் முடிஞ்சி வந்து சொல்றேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டா”
“அப்ப, திங்ககிழமை தான் தெரியுமா?”
“ஆமா...”
(தொடரும்...)
51 comments:
அப்போ இன்னிக்கு ரிசல்ட் தெரிஞ்சிடும்னு சொல்லுங்க!
ஆசை தோசை அப்பள வடை!
நான் சொன்னது அடுத்த திங்கள் கிழமை!
என்னைய வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்னலையே!
கதை நல்லா இன்ண்ட்ரச்டிங்கா போகுது!
மனசுல பக் பக்னு இருக்கு!
நல்ல ரிசல்டா வரணுமே!
:))
//Namakkal Shibi said...
அப்போ இன்னிக்கு ரிசல்ட் தெரிஞ்சிடும்னு சொல்லுங்க!
//
ரிசல்ட் அவுங்களுக்கு தெரிஞ்சிடும்... மத்தவங்களுக்கு எப்ப தெரியும்னு தெரியல :)
// தீபா said...
ஆசை தோசை அப்பள வடை!
நான் சொன்னது அடுத்த திங்கள் கிழமை!//
சொன்னது போன திங்க கிழமை :)
:))
//சொன்னது போன திங்க கிழமை ://
ஆனா தமிழ்மணத்துல தெரிஞ்சது இந்த திங்கள் கிழமைதானே!
தள,
ஏன் இந்த கொலை வெறி?
//தள,
ஏன் இந்த கொலை வெறி?//
யோவ்! கொலைவெறி கமெண்ட் போட்டது நானில்லை!
பாஸிடிவ்வா ரிசல்ட் வரலைன்னா சொல்லுங்க!
என் கிட்டே ரெண்டு பொண்ணு இருக்கு!
அங்கவை, சங்கவை!
வந்து பழகுங்க! பிடிச்சா கல்யாணம் பண்ணிக்குங்க! இல்லாட்டி பிரண்டா இருப்போம்!
லக்கலக்கலக்கலக்கலக்கலக்கலக்க!
தள,
போதும் நிப்பாட்டிக்குவோம்...
//தள,
போதும் நிப்பாட்டிக்குவோம்...//
!????????????????????????
ஏன்னா இது கும்மி பொஸ்டில்லை.. கஷ்டப்பட்டு கதை எழுதியிருக்கேன் :)
//ஏன்னா இது கும்மி பொஸ்டில்லை.. கஷ்டப்பட்டு கதை எழுதியிருக்கேன் :)//
ஓக்கே!
அப்போ சீக்கிரமா ஒரு கும்மி போஸ்ட் போட்டுட்டு இன்வைட் பண்ணுவீங்களாம்!
//கதை நல்லா இன்ண்ட்ரச்டிங்கா போகுது!//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
:)
// Namakkal Shibi said...
//ஏன்னா இது கும்மி பொஸ்டில்லை.. கஷ்டப்பட்டு கதை எழுதியிருக்கேன் :)//
ஓக்கே!
அப்போ சீக்கிரமா ஒரு கும்மி போஸ்ட் போட்டுட்டு இன்வைட் பண்ணுவீங்களாம்!
11:12 PM//
கண்டிப்பா :)
//கைப்புள்ள said...
//கதை நல்லா இன்ண்ட்ரச்டிங்கா போகுது!//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
:)//
டாங்கிஸ் தல...
மக்கள்ஸ்,
கதை பிடிச்சிருந்தா ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க. இது வரைக்கும் ரெண்டு பேர் தான் சொல்லியிருக்காங்க :)
//டேய், அது பேட் இல்லைடா ஷெட்டில் ராக்கெட். கிரிக்கெட் பேட்டுக்கும் ஷெட்டில் ராக்கெட்டுக்கும் வித்யாசம் தெரியாம எப்படிடா ஒரு ஆட்டம் ஆடின?”//
ஒரு நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி நாங்களும் டென்னிஸ் ஆடலாம்னு டென்னிஸ் பேட்..ச்சீ.. ராக்கெட் வாங்குனப்போ, இதே காமெடி நடந்துச்சு :))
கத செம விறுவிறுப்பு... :))
//“அப்ப, திங்ககிழமை தான் தெரியுமா?”//
Innikku dhaane thingatkizhamai.. resulta sollungappa :))
//கதை பிடிச்சிருந்தா ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க. //
Oru vaarththai :)))))
//மக்கள்ஸ்,
கதை பிடிச்சிருந்தா ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க. இது வரைக்கும் ரெண்டு பேர் தான் சொல்லியிருக்காங்க :)//
இதை நான் வழிமொழிகிறேன்!
ரிப்பீட்டேய்!
//கத செம விறுவிறுப்பு//
ரிப்பீட்டேய்!
திங்கட்கிழமை ஆகிடுச்சே!
Well narration... expecting for part 3... expectation meter at high....
செம நக்கல் வெட்டி..
//
”நேத்து தான் சொன்னேன். எங்க கம்பெனில எல்லா ப்ராஜக்ட் பார்ட்டியும் நிறுத்திட்டாங்க”
“இது என்ன பிரமாதம், எங்க கம்பெனில எல்லாம் பாதி பேருக்கு வேலையை விட்டே நிறுத்திட்டாங்க
//
வாய்விட்டு சிரிச்சேன்...
நல்லா இருக்கு பாலாஜி. சீக்ரமா அடுத்தடுத்த பாகத்தை எழுதுங்க.
கதை சூப்பரா செம ஸ்பீடா போகுது...அடுத்த பகுதிக்காக வெய்டிங்...
எப்ப பாரும் இந்த friend character கனவுல disturb பண்றதே வேலையா வச்சிருக்கார், இதெல்லாம் ரொம்ப பாவம்னு சொல்லி வைங்க :)
“டேய், அது பேட் இல்லைடா ஷெட்டில் ராக்கெட். கிரிக்கெட் பேட்டுக்கும் ஷெட்டில் ராக்கெட்டுக்கும் வித்யாசம் தெரியாம எப்படிடா ஒரு ஆட்டம் ஆடின?”
Super
கதை நல்ல இருக்கு பாஸ் நீங்க எழுதுங்க....
// Namakkal Shibi said...
//மக்கள்ஸ்,
கதை பிடிச்சிருந்தா ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க. இது வரைக்கும் ரெண்டு பேர் தான் சொல்லியிருக்காங்க :)//
இதை நான் வழிமொழிகிறேன்!
ரிப்பீட்டேய்!
//
avvvvvv...
//ஜி said...
//டேய், அது பேட் இல்லைடா ஷெட்டில் ராக்கெட். கிரிக்கெட் பேட்டுக்கும் ஷெட்டில் ராக்கெட்டுக்கும் வித்யாசம் தெரியாம எப்படிடா ஒரு ஆட்டம் ஆடின?”//
ஒரு நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி நாங்களும் டென்னிஸ் ஆடலாம்னு டென்னிஸ் பேட்..ச்சீ.. ராக்கெட் வாங்குனப்போ, இதே காமெடி நடந்துச்சு :))
//
இது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க ஏரியால நடந்துச்சு :)
//கத செம விறுவிறுப்பு... :))//
ஒரு கதையாசிரியர் இதை சொல்றது சந்தோஷமா இருக்கு :)
//G3 said...
//“அப்ப, திங்ககிழமை தான் தெரியுமா?”//
Innikku dhaane thingatkizhamai.. resulta sollungappa :))//
இப்ப தான் ஆபிஸ் போயிட்டு வீட்டுக்கு வந்திருக்கேன்... பொறுமையா சொல்றேன் :)
//
நாகை சிவா said...
திங்கட்கிழமை ஆகிடுச்சே!
1:38 AM//
ஆமாம்.. அதுக்கென்ன?
//JSTHEONE said...
Well narration... expecting for part 3... expectation meter at high....
2:32 AM//
Thx for the comment JSTHEONE. I am not sure whether I can fill the expectation :)
// வெண்பூ said...
செம நக்கல் வெட்டி..
//
என்ன பண்றது.. பிறவி குணம் :)
//
”நேத்து தான் சொன்னேன். எங்க கம்பெனில எல்லா ப்ராஜக்ட் பார்ட்டியும் நிறுத்திட்டாங்க”
“இது என்ன பிரமாதம், எங்க கம்பெனில எல்லாம் பாதி பேருக்கு வேலையை விட்டே நிறுத்திட்டாங்க
//
வாய்விட்டு சிரிச்சேன்...
2:51 AM//
டாங்கிஸ் வெண்பூ :)
//மணிகண்டன் said...
நல்லா இருக்கு பாலாஜி. சீக்ரமா அடுத்தடுத்த பாகத்தை எழுதுங்க.//
மணிகண்டன்,
இதோ எழுத உட்காருகிறேன்... கதையையே இன்னும் யோசிக்கல :)
// Divyapriya said...
கதை சூப்பரா செம ஸ்பீடா போகுது...அடுத்த பகுதிக்காக வெய்டிங்...
எப்ப பாரும் இந்த friend character கனவுல disturb பண்றதே வேலையா வச்சிருக்கார், இதெல்லாம் ரொம்ப பாவம்னு சொல்லி வைங்க :)
10:47 AM//
டாங்கிஸ் தங்கச்சி...
நீ சொல்லிட்ட இல்லை. இன்னைக்கு கனவுல டிஸ்டர்ப் பண்ண மாட்டாரு :)
//ஸ்ரீதர்கண்ணன் said...
“டேய், அது பேட் இல்லைடா ஷெட்டில் ராக்கெட். கிரிக்கெட் பேட்டுக்கும் ஷெட்டில் ராக்கெட்டுக்கும் வித்யாசம் தெரியாம எப்படிடா ஒரு ஆட்டம் ஆடின?”
Super
கதை நல்ல இருக்கு பாஸ் நீங்க எழுதுங்க....
//
நன்றி பாஸ்... இன்னைக்கு அடுத்த பகுதியை எழுதிடறேன் :)
antha propose panra part-a romba nalla ezhuthi irukeenga.
அண்ணா திங்கட்கிழமை எப்போ வரும்??
கதை சூடு பிடிக்க ஆரம்பிச்சிருச்சு!!
Kalakkala irukku Balaji. Waiting for the next part.
//Ullathil Irundhu.......... said...
antha propose panra part-a romba nalla ezhuthi irukeenga.//
மிக்க நன்றி உள்ளத்தில் இருந்து... மல்லாக்க படுத்துட்டு யோசிச்சி எழுதனது. யாருமே சொல்லலையேனு பார்த்துட்டு இருந்தேன் :)
//Poornima Saravana kumar said...
அண்ணா திங்கட்கிழமை எப்போ வரும்??//
ஞாயிறுக்கு அடுத்து, செவ்வாய்க்கு முன்னாடி :)
இதெல்லாம் கூட தெரியாத அப்பாவியா இருக்கியேமா...
//Poornima Saravana kumar said...
கதை சூடு பிடிக்க ஆரம்பிச்சிருச்சு!!//
டாங்கிஸ் தங்கச்சி :)
//Guna said...
Kalakkala irukku Balaji. Waiting for the next part.
5:57 AM//
மிக்க நன்றி குணா... இன்னைக்கு ராத்திரி போட்டுடறேன் :)
/இன்னைக்கு அடுத்த பகுதியை எழுதிடறேன் :)//
ரிப்பீட்டேய்!
நானாச்சும் 50 அடிக்க முடியுதா பார்க்கிறேன்!
Thala,
Kalakkal ...ippothikku verenna Solla
Anbu
Post a Comment