"திவ்யா, நான் வர வாரம் இல்லாம அடுத்த வாரம் சனிக்கிழமை சிக்காகோ கிளம்பறன்"
"ஹிம்... இப்பதான் ஐஸ் சொன்னா"
"இப்ப சந்தோஷமா???"
"என் ஃபிரெண்ட் ஆன் சைட் போனா எனக்கு சந்தோஷம்தான். ஏன் உனக்கு இல்லையா???"
"ஹிம்... அதெல்லாம் எதுக்கு. இந்த வாரம் ஷாப்பிங் போகனும்"
"ஆமாம் நிறைய வாங்க வேண்டியதிருக்கும். என் பிராஜக்ட் மேட் சவ்ரவ் இந்த வீக் என்ட் கிளம்பறான். அவன் ஒரு செக் லிஸ்ட் வெச்சிருந்தான். நான் அதை நாளைக்கு உனக்கு மெயில்ல அனுப்பறேன். இந்த சனிக்கிழமை போய் எல்லாம் வாங்கலாம்"
"சரி... "
..................
அடுத்த நாள் செக் லிஸ்ட் அனுப்பி 10 நிமிடத்திற்குள் போன் செய்தாள்.
"செக் லிஸ்ட் பாத்தியா???"
"ஹிம்.. பாத்துட்டே இருக்கேன்"
"நீ இன்னும் அதை பாத்திருக்க மாட்டன்னு எனக்கு தெரியும்... கதை விடாத"
"சரி... அனுப்பிட்ட இல்ல! அப்பறம் என்ன???"
"இரு... நாளைக்கு என்ன என்ன வாங்கலாம்னு முடிவு பண்னிக்கலாம். மீதியெல்லாம் நீ உன் ஃபிரெண்ட்ஸோட போய் சன்டே வாங்கிக்கோ"
"ஏன் சன்டே உன் பிளான் என்ன???"
"நான் உன்கிட்ட சொல்லலையா எங்க கிளாஸ் கெட்-டுகெதர் இருக்கு"
"சன்டே முழுசா ஒன்னா இருக்க போறீங்களா???"
"மதியம் லன்ச் சாப்பிட்டு, படத்துக்கு போயிட்டு அப்படியே சுத்திட்டு நைட் டின்னர் சாப்பிட்டு வரலாம்னு இருக்கோம்"
"நீ அவசியம் போகனுமா?"
"ஏய்!!! நாந்தான் பொண்ணுங்க சைட் ஆர்கனைசர்... நான் கண்டிப்பா போயாகனும்... ஏன் கேக்கற???"
"ஒன்னுமில்லை... அப்பறம் நாளைக்கு நீ வர தேவையில்லை. ஏற்கனவே என் ஃபிரண்ட்ஸ் ஷாப்பிங் வரன்னு சொல்லியிருக்காங்க"
"ஏன் வீணா டென்ஷன் ஆகற"
"அதெல்லாம் ஒன்னுமில்லை. நாங்க 4 பேர் ஏற்கனவே பிளான் பண்ணி வெச்சிட்டோம். எப்படியும் நீ வந்தா பெட்டியெல்லாம் வாங்க வசதியா இருக்காது. நிறையா வாங்க வேண்டியிருக்கும். நீ தான் லிஸ்ட் அனுப்பனியே அதுவே போதும். தேங்ஸ்"
"ஏன் இப்படியெல்லாம் பேசற"
"அதெல்லாம் ஒன்னுமில்லை. இப்ப எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நான் நைட் கூப்பிடறேன்"
"சரி"
............................
"சொல்லு"
"நைட் கூப்பிடறன்னு சொன்ன... ஏன் கூப்பிடல???"
"இன்னும் நைட் முடியலைனு நினைக்கிறேன்"
"மணி 10. எப்பவும் நீ 9 மணிக்கெல்லாம் கூப்பிடுவ இல்ல???"
"திவ்யா, வேலை அதிகமா இருக்கு. ஆன் சைட் போறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் முடிச்சிட்டு போக சொல்லியிருக்காங்க. அடுத்த வாரம் எப்படியும் 2 நாள் தான் வேலை செய்ய முடியும். மீதி நேரமெல்லாம் knowledge Transferலையும், லேப் டாப், செக்யுர் ஐடி வாங்கறதலையும் போயிடும். இதுக்கு நடுவுல நிறைய ட்ரெயினிங் வேற இருக்கும். எப்படி டிரெஸ் போடனும், எப்படி சாப்பிடனும்னு வேற சொல்லி கொடுப்பானுங்க... முன்ன பின்ன நம்ம இதெல்லாம் பண்ணாத மாதிரி. அப்பறம் எக்கசக்க ட்ரீட் வேற கொடுக்க வேண்டியதிருக்கும்... போதுமா?"
"இப்ப எங்க இருக்க?"
"ஆபிஸ்லதான்"
"சரி நீ வேலை பாரு... அப்பறமா கூப்பிடு..."
"சரி... நான் உனக்கு வீட்டுக்கு போய் போன் பண்றேன்"
"ஓ.கே.... பை"
..........................................
"தனா, ஏன் வீக் என்ட் போன் பண்ணல???"
"சனிக்கிழமை ஷாப்பிங் போயிட்டு வரத்துக்கு டைம் ஆகிடுச்சு. ஞாத்திக் கிழமை நீ உன் ஃபிரண்ட்ஸ் கூட இருப்பன்னு கூப்பிடல"
"நைட்டாவது கூப்பிட்டிருக்கலாம் இல்ல"
"நீ எப்ப வருவன்னு யாருக்கு தெரியும்... ஏன் நீ கூப்பிட்டு இருக்கலாம் இல்ல"
"நீ கூப்பிட்றயா இல்லையானு பாத்துட்டு இருந்தேன்"
"நீங்களா கூப்பிட மாட்டீங்க நாங்க தான் கூப்பிடனும்... இல்ல"
"சரி திட்டாத... இப்ப நாந்தானே கூப்பிட்டேன்... நீ ஒன்னும் கூப்பிடல இல்ல"
"சரி விடு... அப்பறம் நான் இந்த வாரம் லன்ச்க்கு வர முடியாது. வேலை அதிகமா இருக்கு... உள்ளையே சாப்பிட்டுக்கறேன்"
"சரி... நீ ஃபிரியா இருக்கும் போது கூப்பிடு"
"ஓகே... பை"
"பை"
...............................
வெள்ளி இரவு 11 மணி
"நான் தனா பேசறேன்"
"தெரியுது சொல்லு"
"நான் நாளைக்கு கிளம்பறேன். அதான் உன்கிட்ட சொல்லலாம்னு போன் பண்ணேன்"
"சரி. எல்லாம் வாங்கிட்டயா"
"எல்லாம் பேக் பண்ணியாச்சு. கிளம்ப வேண்டியதுதான் மிச்சம்"
"எப்ப திரும்ப வருவ???"
"தெரியல... இது வரைக்கும் போன எவனும் திரும்ப வரல... நான் மட்டும் என்ன லூசா???"
"அப்ப எங்களை எல்லாம் மறந்துடுவ இல்ல"
"உங்களை எல்லாம் மறப்பனா???"
"இந்த ஒரு வாரத்தில எனக்கு ஒரு தடவை கூட போன் பண்ணல... நீ தான் அமெரிக்கா போய் எனக்கு போன் பண்ணுவயா???"
"உனக்கு நானா முக்கியம். உன் ஃபிரெண்ட்ஸ்தான் முக்கியம்... "
"ஏன் இப்படி பேசற??? எனக்கு நீ முக்கியம் இல்லனு யார் சொன்னா???"
"இங்க இருக்கற ஃபிரெண்ட்ஸ அடுத்த வாரம் கூட நீ பாத்துக்கலாம். ஆனால் எனக்காக நீ அதை கூட விட்டுக்கொடுக்கல இல்ல?"
"நான் கெட் டூகெதர் போனனானு உனக்கு தெரியுமா???"
"நீ போகலயா???""
""அதை கேக்க கூட உனக்கு பொறுமையில்லை"
"அத நீ தான் சொல்லியிருக்கனும்"
"எப்ப தனா என்ன சொல்லவிட்ட??? உனக்கு போன வெள்ளி கிழமை நைட் நான் போன் பண்ணப்ப திரும்ப பண்றனு சொன்ன... ஆனால் பண்ணவே இல்லை. நீ போன் பண்ணுவனு நான் ரெண்டு நாளா வெளியவே போகலை. ஆனால் கடைசி வரைக்கும் நீ எனக்கு போன் பண்ணவே இல்ல"
"திவ்யா... இந்த ஒரு வாரம் எப்படி இருந்துச்சு திவ்யா????"
"ஏன் கேக்கற???"
"சொல்லு"
"எனக்கு தெரியல..."
"இந்த ஒரு வாரம் முழுசா நீ மதியம் சாப்பிடல. எனக்கு தெரியும். ஐஸ் என்கிட்ட சொன்னா... அது ஏன்னு நான் தெரிஞ்சிக்கலாமா???"
"எனக்கு சாப்பிட பிடிக்கல"
"ஏன் திவ்யா பொய் சொல்ற? ரெண்டு நாளா நீ அழுதுட்டு இருக்கறதும் எனக்கு தெரியும்."
"தெரிஞ்சும் நீ எனக்கு போன் பண்ணல.... என்ன விட்டுட்டு நீ போற... எப்படி உன்னால முடியுது தனா??? என்ன விட்டுட்டு நீ இருந்துடுவ இல்ல??? "
"எனக்கு தெரியல திவ்யா!!! உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியுமானு எனக்கு தெரியல. அதுக்காக நானா ஏற்படுத்திக்கிட்ட ஒரு பிரிவுதான் இது. ஆனால் இந்த ஒரு வாரம் எனக்கு ஒரு யுகமா இருந்துச்சு... நீ வாழ்க்கை முழுசா என் கூடவே இருக்கனும் போல இருக்கு திவ்யா! இருப்பியா?"
"தனா என்ன சொல்ற???"
"எனக்கு உன்ன பிடிச்ச்சிருக்குனு சொல்றன். நீ வாழ்க்க முழுசா என் கூடவே இருக்கனும்னு சொல்றன். என்ன கல்யாணம் பண்ணிக்குவியானு கேக்கறன்"
"நல்ல நேரம் பாத்து கேக்கற தனா... இவ்வளவு நாள் ஆச்சா இத கேக்கறதுக்கு?"
"அப்படினா... என்னை உனக்கு புடிச்சிருக்கா திவ்யா???"
"நான் எந்த பசங்க கூடயாவது இந்த அளவுக்கு பேசி பாத்திருக்கயா??? யார் கூடவாவது நான் வண்டில போய் பாத்திருக்கயா??? வேற எந்த பிரண்ட்ஸ்கிட்டயாவது ஐஸ்வர்யா பேசும் போது அவளை சீக்கிரம் பேச சொல்ல்லிருக்கனா???
உன் கூட இருக்கும் போதுதான் நான் சேஃபா இருக்கற மாதிரி ஃபீல் பண்றன். ஏன்னு எனக்கே தெரியல"
"திவ்யா நான் இப்ப உன்ன பாக்கனும்... நான் புறப்பட்டு வரன்"
"ஏய் லூசு... மணி 11:30... நான் வெளில வர முடியாது. நாளைக்கு பாக்கலாம்"
"சரி காலைல 6 மணிக்கு மீட் பண்ணலாம். போனை வைக்காத... நைட் ஃபுல்லா நான் உன்ட பேசிக்கிட்டே இருக்கனும் போல இருக்கு"
"முதல்ல நீ போய் தூங்கு. நம்ம காலைல மீட் பண்ணலாம். நான் ஏர்போர்ட்க்கு வர முடியாது"
"ஏன்???"
"உங்க அப்பா, அம்மா வருவாங்க இல்ல"
"யாரு உங்க மாமா, அத்தையா???
நீ வா... நான் இன் ட்ரடியூஸ் பண்ணி வெக்கறேன். உங்க மருமகளை பாருங்கனு சொல்றன்"
"ஏன் இவ்வளவு எக்ஸைட் ஆகற???
நான் கண்டிப்பா வர முடியாது. எனக்கு பயமா இருக்கு"
"லூசு... பயப்படாம வா. எங்க அப்பா, அம்மா இங்க வரலை. எல்லாம் சென்னை வராங்க. இங்க ஃபிரெண்ட்ஸ் மட்டும் தான்"
"அப்ப சரி... நான் ஐஸ்வர்யாவையும் கூப்பிட்டு வரேன். யாருக்கும் சந்தேகம் வராது"
"சரி. நீ போயிட்டு எப்ப வருவ???"
"நான் போறது பைலட் பிராஜக்ட். சரியா பண்ணலைனா 1 மாசத்துல தொறத்தி விட்டுடுவாங்க... "
"அப்படினா???"
"1 மாசத்துல நான் இங்க இருப்பனு அர்த்தம் ;)"
.............................
ஒரு வழியாக யு.எஸ் வந்து சேர்ந்து 6 மாசமாகிவிட்டது. 1 மாசத்துல ஊத்திக்கும்னு நினச்ச பிராஜக்ட் நல்ல படியா போயிடுச்சு. சிக்காகோவி்லிருந்து பாஸ்டன் வந்து சேர்ந்து 5 மாசமாகிவிட்டது. GTalk ஆல் மாத சம்பளம் ஓரளவிற்கு சேமிக்க முடிகிறது.
"சாப்பிட்டயா???"
" "
"திட்டாத... அடுத்த மாசம் கண்டிப்பா வந்துடுவன்... பாலாஜிக்கு எல்லா Trainingம் முடிஞ்சிது.. ."
" "
"நிஜமாதான் சொல்றேன்...
நாயி வேணும்னே பொறுமையா கத்துக்கிறான்"
" "
"'சும்மா சொன்னேன்... அவன் நல்ல பையன் தான்...
அப்பறம் ஓரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்.... அவன் நம்ம கதையை அவன் பிளாக்ல பிரிவுனு ஒரு தலைப்புல எழுதறான்... இது தான் அவன் பிளாக் URL : http://vettipaiyal.blogspot.com/ "
" "
"ஏய் திட்டாத!!! நான் தான் சும்மா விளையாட்டுக்கு எழுத சொன்னேன். இது அப்படியே பிரிண்ட் அவுட் எடுத்து எங்க மாமா, அத்தைக்கிட்ட கொடுத்துடு"
" "
(முற்றும்...)
பி.கு:
இது நிஜமா, கதையானு கேக்கறவங்களுக்கு என் பதில் "No Comments"...
16 comments:
சுபம்...!
//இது நிஜமா, கதையானு கேக்கறவங்களுக்கு//
:)
பிரிவை சீக்கிரம் சேர்த்துட்டிங்க போல :)
அண்ணா இது உண்மையாகவே உங்க நண்பரின் உண்மைக் கதையா இல்ல உங்களின் ____________ !
//இது நிஜமா, கதையானு கேக்கறவங்களுக்கு என் பதில் "No Comments"...
//
இப்படி எல்லாம் சொன்னா நாங்க விட்டுடுவோமா?
//"எனக்கு தெரியல திவ்யா!!! உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியுமானு எனக்கு தெரியல. அதுக்காக நானா ஏற்படுத்திக்கிட்ட ஒரு பிரிவுதான் இது. ஆனால் இந்த ஒரு வாரம் எனக்கு ஒரு யுகமா இருந்துச்சு... நீ வாழ்க்கை முழுசா என் கூடவே இருக்கனும் போல இருக்கு திவ்யா! இருப்பியா?"
//
கலக்கல்!!
ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க. :-)
மிஸ்டர் வெட்டி..
நீங்க நோ கமண்ட்ஸ்னு சொன்னத மக்கள் தப்பா புரிஞ்சிகிட்டாங்களா?? கதை முடிவு பத்தி கமண்ட்ஸ் எதுவும் இல்லயே..
அப்பால பாஸு..
'வெட்டி' தனமா ஆபிஸ்ல இருந்ததில நாலு பார்டையும் ஒரே நாள்ல படிச்சாச்சு..
கதை நல்லாத்தான் இருக்கு ஆனா முடிவு தான் 'எ பிலிம் பை பாரதிராஜா' ஸ்டைலில் இருக்கு.
ஆபீஸ் போன்ல ஆரம்பிச்சு ஜிடாக்ல முடிச்சிடிங்களே..
பிரிவுனு பேர் வெச்சதால மடிவாலா, எலெக்டிரானிக் சிட்டில ஆரம்பிச்சு பெங்களூரு-யு.எஸ் ல முடிசிடிங்களா??
ஹீரோவுக்கு ரிடர்ன் பிளைட் கெடைக்குமா?? கெடைக்காதா??
Beautiful!
:)
சட்டுபுட்டுன்னு சீக்கிரமா வேலையை கத்துக்கிட்டு அவரை ஊருக்கு அனுப்புப்பா!!!!!!!!
பிரிவு-ன்னு பெயர் வச்சதாலா சீக்கிரம் முடிச்சுட்டீங்களா? அடுத்த கதையை இவ்வளவு சீக்கிரம் முடிச்சிடாதீங்க. படிக்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.. இன்னும் கொஞ்சம் இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணுது.. :D
I have been following your blogs for a very long time and to be honest you are the inspiration behind my blog.
தங்கள் தூறல் பதிவிற்கு பிறகு எனக்கு மிகப்பிடித்த பதிவு இது. இது நிச்சயமாக நிஜ வாழ்வில் நடந்த சம்பவம் என்பது எனது கணிப்பு.
அருமை அருமை...
ரொம்ப நல்லா இருந்திச்சுங்க...
அட !!!! வெட்டிப்பயலே,
பலே பலே... நன்னா இருக்கு
பிரிவுன்னு பேரு வச்சு சேர்த்து வச்சுட்டீங்க :) வழக்கம்போல அருமை. வாழ்த்துகள்.
Hi Balaji இது நிச்சயமாக நிஜ வாழ்வில் நடந்த சம்பவம் என்பது எனது கணிப்பு.
ROMBA NALLA IRUKU.... PALAYA NEYABAKAM ELLAM VANDUTAE IRUKU ....
Post a Comment