தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, January 14, 2009

பிரிவு - 3

ஞாயிறு இரவு 9 மணி.
செல்போன் சிணுங்கியது

"ஏய் சொல்லு. எங்க இருக்க? ஊருல இருந்து வந்துட்டியா?"

"ஒரு சின்ன பிரச்சனை"

"என்னாச்சு. எங்க இருக்க?"

"நான் கிருஷ்ணகிரியில இருந்து வந்துட்டு இருக்கேன்"

"என்ன கிருஷ்னகிரில இருக்கியா? மணி என்னாச்சு"

"நீ டென்ஷன் ஆகாத. நான் வந்த பஸ் பிரேக் டவுன் ஆகிடுச்சு. ஒரு மணி நேரம் லேட். அதுவும் இந்த டிரைவர் இதுக்கு முன்னாடி கட்ட வண்டி ஓட்டிருப்பான் போல இருக்கு"

"எத்தனை மணிக்கு புறப்பட்ட??"

"4 மணிக்கு"

"ஏன் மேடமால கொஞ்சம் சீக்கிரம் புறப்ப்பட்டிருக்க முடியாதா?"

"சேலத்துல இருந்து வரதுக்கு எதுக்கு சீக்கிரம்ம் புறப்படணும்"

"சேலத்துல இருந்து நீ பெங்களூர் வரதுக்கே 9-10 ஆயிடும். அதுக்கு அப்பறம் நீ உன் PGக்கு எப்படி போவ? என்ன சாப்பிடுவ?"

"எங்க அம்மா பார்சல் பண்ணி கொடூத்திருக்காங்க. மடிவாளாலா எறங்கி நான் PGக்கு ஆட்டோல போயிடுவேன்"

"பெங்களூர் இருக்கற நிலைமைக்கு நீ தனியா 10 மணிக்கு ஆட்டோல போவ? சரி நீ ஓசூர் வந்தவுடனே எனக்கு போன் பண்ணு"

"சரி"

........................

ஓசூர், இரவு 10::30

"தனா நான் ஓசூர் வந்துட்டேன்"

"இப்ப எங்க இருக்கற???"

"ஓசூர்ல தான்"

"லூசு, ஓசூர்ல எங்க இருக்கற??"

"நீ எங்க இருக்கற???"

"நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு"

"இப்ப தான் பஸ் ஸ்டாண்டுக்குள்ள பஸ் வருது. நான் இனிமே தான் இறங்கனும்"

செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

"ஏய் நீ எதுக்கு இங்க வந்த???"

"எதுவும் பேசாத அடிச்சிட போறேன்"

"ஏன் இப்படி கோவப்படற???"

"மணி இப்பவே 10:30 நீ பஸ் பிடிச்சி மடிவாளா போய் சேரத்துக்குள்ள 11:30 ஆயீடும்.. அப்பறம் ஆட்டோ பிடிப்பயா???"

"பஸ் பிரேக் டவுன் ஆனதுக்கு நான் என்ன பண்ண முடியும்"

"மனுசனை டென்சன் ஆக்காத! வந்து வண்டில உக்காரு"

"எதுக்கு இப்படி டென்ஷன் ஆகறன்னு எனக்கு புரியல"

"இப்ப வரியா! இல்ல நான் கிளம்பட்டுமா???"

"இரு வரன்"

..............................

பெங்களூரை நோக்கி இரு சக்கர வண்டியில்...

"ஏன் இப்படி டென்ஷன் ஆகற??? உனக்கு பொண்டாட்டியா வரவ பாவம்"

"சரிங்க... உங்களுக்கு புருஷனா வரவன் புண்ணியம் பண்ணியிருப்பான் போதுமா???"

"உனக்கு என்னுமோ ஆயிடுச்சி"

"பேசாம வா"

.........................................

BTM, PG

"ஏய் திவ்யா, என்ன இவ்வளவு லேட்"

"பஸ் பிரேக் டவுன்"

"இனிமே இந்த மாதிரி லேட்டா தனியா வராத"

"ஏன்???"

"வெள்ளிக்கிழுமை நைட், தனியா Cabல வந்த பொண்ணை டிரைவரே கடத்திட்டு போயி ரேப் பண்ணி கொன்னுட்டான். பெங்களூர் முழுக்க இதுதான் பேச்சு. அதுவும் இல்லாம இந்த மாதிரி ஏற்கனவே நிறைய நடந்திருக்காம். யாரும் வெளில சொல்லாம இருந்த்திருக்காங்க... இப்ப தான் எல்லாம் வெளிய வருது"

"ஓ இதனால தான் அவன் அவ்வளவு ட்டென்ஷனா திட்டிக்கிட்டே இருந்தானா???"

"யாரு"

"தனாதான். நான் தனியா வரன்னு ஓசூர்க்கே வந்துட்டான். இங்க வந்து அவன் தான் விட்டுட்டு போனான்"

"நல்லதா போச்சு"

"நான் வேற அவனை இது தெரியாம திட்டீக்கிட்டே வந்தேன்"

"அடிப்பாவி!!! வேலையத்து அவன் ஓசூர் வந்து உன்னைக் கூப்பிட்டு வந்தா... அவனை நீ திட்டியிருக்க!!!"

"எனக்கும் கஷ்டமா இருக்கு. இரு நான் அவனுக்கு போன் பண்ணிட்டு வந்துடறேன்"

"மணி 1 ஆச்சி. தூங்கு நாளைக்கு பேசிக்கலாம்"

"சரி"

ஐந்து நிமிடம் கழித்து...

"அவன் பத்தரமா வீட்டுக்கு போயிருப்பானா???"

"அவனுக்கு என்ன குறைச்சல். அதெல்லாம் போயி தூங்கிருக்கும்"

"இரு நான் எதுக்கும் போன் பண்ணிட்டு வந்திடறேன்"

..................

மணி 1:30. செல்போன் சிணுங்கியது.

"என்ன தூங்கலையா???"

"நீ எங்க இருக்க???"

"ஹிம்... சுடுகாட்டுல"

"ஏய் சொல்லு"

"நைட் ஒன்ற மணிக்கு எங்க இருப்பாங்க??? வீட்லதான்"

"சரி. சாரி"

"எதுக்கு"

"நான் உன்னை திட்டினதுக்கு"

"சாரியும் வேணாம் பூரியும் வேணாம். இனிமே ஊர்ல இருந்து சீக்கிரம் வா. அதுவே போதும். இப்ப எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு பேசலாம். நீயும் போய் தூங்கு"

"சரி... குட் நைட்"

"குட் நைட்"

....................

2 நாட்களுக்கு பிறகு. PGயில்

"ஏய் ஐஸு!!! யாருக்கிட்ட இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்க?"

"தனாட்ட"

"கொஞ்சம் சீக்கிரம் பேசிட்டு வெக்கறியா? நான் அவன்ட கொஞ்சம் அவசரமா பேசனும்"

"டேய்! அவ ஏதோ உன்கிட்ட பேசனுமாம். நான் அவள்ட போனைக் கொடுக்கறன்"

"ஏய் வேண்டாம்!!! நீ பேசி முடி. நான் என் மொபைல்ல இருந்து குப்புட்டுக்கறேன்"

"சரி. நான் பேசி முடிச்சிட்டேன். கட் பண்றேன். நீங்க ஆரம்பிங்க :-x"

"இப்ப ஏன் கட் பண்ண... நான் உன்னை பேசி முடிச்சிட்டுதான வெக்க சொன்னேன்"

"எதுக்கு டென்ஷன் ஆகற???? நான் அவன்ட பேசி முடிச்சிட்டேன்"

"என்ன ஏதோ சீரியஸ்ஸா பேசிட்டு இருந்த???"

"அந்த நாயிக்கு ஆன் - சைட் ஆப்பர்சுனிட்டி வந்திருக்கு... போக மாட்டேனு மேனஜர்ட்ட சொல்லி இருக்கான். கேட்டா பர்சனல் பிராப்ளம்னு சொல்றான்.
6 மாசத்துக்கு முன்னாடி மேனஜர்கிட்ட ஆன் சைட் அனுப்ப சொல்லி பிரச்சனை பண்ணிட்டு இருந்தான். இப்ப என்னன்னா இப்படி பேசறான். மேனஜர் என்னை கூப்பிட்டு பேச சொன்னார்"

"நீ கேட்டயா???"

"கேட்டேன். என்கிட்டயும் அதுதான் சொல்றான். நீ வேணும்னா பேசி பாரேன்"

"எவ்வளவு நாள்???"

"லாங் டெர்ம் தான். மினிமம் 6 மாசம். H1 வெச்சிருக்கான். சும்மாவா?"

""

"நீ என்டீ பேயறைஞ்ச மாதிரி உக்கார்ந்திருக்க???"

"ஒன்னுமில்லை நான் அவன்ட பேசறேன்"

..............................

"தனா... நான் திவ்யா பேசறேன்"

""சொல்லு"

"ஏன் ஆன் சைட் வேண்டாம்னு சொன்ன?"

"ஐஸ்வர்யா சொல்லிட்டாளா???"

"ஆமாம். சொல்லு"

"எனக்கு போக பிடிக்கல. எனக்கு இங்கதான்ன் பிடிச்சியிருக்கு"

"அப்பறம் எதுக்கு 6 மாசத்துக்கு முன்னாடி போகனும்னு சொன்ன???"

"இப்ப என்ன வேணும் உனக்கு???"

"நீ ஏன் போக மாட்டனு சொல்றனு எனக்கு தெரிஞ்சாகனும்???"

"காரணம் எதுவும் கிடையாது"

"நீ போகனும். அவ்வளவுதான்...... இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல முடியாது"

"நீ எதுவும் சொல்ல வேணாம்... எங்களுக்கு எல்லாம் தெரியும். நீ போய் தூங்கு"

"உன் இஷ்டம்... நான் சொன்னா நீ கேக்கவா போற????"

"சரி. நீ ஒன்னும் சொல்ல வேணாம்"

"பாக்கலாம். குட் நைட்"

"பை"

................................

"ஏய் திவ்யா! தனா 2 வாரத்துல சிக்காகோ போறான். கன்பர்ம் ஆகிடுச்சி. உன்ட சொன்னானா???"

"இல்லை. இன்னும் 2 வாரத்துலயா???""

"ஆமாம்"

"என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்ப சொல்றாங்க"

"அவனை இந்த வார காடைசிலதான் கிளம்ப சொன்னாங்க... அவன் தான் கஷ்டப்பட்டு கெஞ்சி கூத்தாடி ஒரு வாரம் தள்ளி போட்டிருக்கான்"

" "

(தொடரும்...)

13 comments:

sindhusubash said...

சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க...ரொம்ப இன்ரெஸ்டிங்கா இருக்கு.

Poornima Saravana kumar said...

Superb:)

Poornima Saravana kumar said...

கதை சூடு பிடிக்க ஆரம்பிச்சாச்சு ...

Nimal said...

நல்லா இருக்கு...
அடுத்த பகுதி நாளைக்கா...?

சின்னப் பையன் said...

சூப்பர். பின்றீங்க.

Divyapriya said...

//"சேலத்துல இருந்து நீ பெங்களூர் வரதுக்கே 9-10 ஆயிடும். அதுக்கு அப்பறம் நீ உன் PGக்கு எப்படி போவ? என்ன சாப்பிடுவ?"//

அடடா! என்ன ஒரு அக்கறை :))

//"பெங்களூர் இருக்கற நிலைமைக்கு நீ தனியா 10 மணிக்கு ஆட்டோல போவ? சரி நீ ஓசூர் வந்தவுடனே எனக்கு போன் பண்ணு"//

நாங்கெல்லாம் அப்படி தான் போய்ட்டு இருக்கோம் :(

sriram said...

அன்பின் வெட்டி
பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள். 11 ஆண்டுகள் முன் இதே மாதிரி ஒரு துபாய் வேலையை வேண்டாம் என்று கூறிவிட்டேன், பின்னர் 2 ஆண்டுகள் கழித்து துபாய் வேலை வேண்டாம் என்று கூறிய காரணத்தை கை பிடித்து பின்னர் டெல்லி சென்று அங்கிருந்து 2 ஆண்டுகள் முன் USA வந்தேன். சீக்கிரம் அடுத்த பாகம் வரட்டும்
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்

வெட்டிப்பயல் said...

//sindhusubash said...
சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க...ரொம்ப இன்ரெஸ்டிங்கா இருக்கு//

போட்டாச்சுங்க :)

மிக்க நன்றி சிந்துசுபாஷ்.

வெட்டிப்பயல் said...

// PoornimaSaran said...
Superb:)//

மிக்க நன்றி பூர்ணிமா :)

வெட்டிப்பயல் said...

//நிமல்-NiMaL said...
நல்லா இருக்கு...
அடுத்த பகுதி நாளைக்கா...?

9:48 AM//

ஆமா நிமல். போட்டாச்சு

வெட்டிப்பயல் said...

// ச்சின்னப் பையன் said...
சூப்பர். பின்றீங்க.//

மிக்க நன்றி ச்சி.பை :)

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
//"சேலத்துல இருந்து நீ பெங்களூர் வரதுக்கே 9-10 ஆயிடும். அதுக்கு அப்பறம் நீ உன் PGக்கு எப்படி போவ? என்ன சாப்பிடுவ?"//

அடடா! என்ன ஒரு அக்கறை :))
//
நண்பர்கள் மேல அக்கறை இருக்க கூடாதா?

//
//"பெங்களூர் இருக்கற நிலைமைக்கு நீ தனியா 10 மணிக்கு ஆட்டோல போவ? சரி நீ ஓசூர் வந்தவுடனே எனக்கு போன் பண்ணு"//

நாங்கெல்லாம் அப்படி தான் போய்ட்டு இருக்கோம் :(

12:31 PM//

ஆட்டோல இந்த மாதிரியெல்லாம் ராத்திரி நேரத்துல தனியா போகாதம்மா...

வெட்டிப்பயல் said...

//sriram said...
அன்பின் வெட்டி
பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள். 11 ஆண்டுகள் முன் இதே மாதிரி ஒரு துபாய் வேலையை வேண்டாம் என்று கூறிவிட்டேன், பின்னர் 2 ஆண்டுகள் கழித்து துபாய் வேலை வேண்டாம் என்று கூறிய காரணத்தை கை பிடித்து பின்னர் டெல்லி சென்று அங்கிருந்து 2 ஆண்டுகள் முன் USA வந்தேன். சீக்கிரம் அடுத்த பாகம் வரட்டும்
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்
//

ஸ்ரீராம்,
நீங்க சொல்றதை கேக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. நிஜமாலுமே என் கதைல வர மாதிரி மனிதர்கள் இருக்காங்கனு. பின்னூட்டத்திற்கு நன்றி :)