தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, January 12, 2009

பிரிவு 1

"தனா, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?""சொல்லு... பாக்கலாம்"

"ஒண்ணும் இல்லை... என் ரூம் மேட் திவ்யாக்கு அவ பிராஜக்ட்ல எக்ஸெல்ல மேக்ரோ பண்ண சொல்லியிருக்காங்க. அவ எனக்கு போன் பண்ணி ஹெல்ப் பண்ண முடியுமானு கேட்டா. நீ தான் அதுல பெரிய ஆளேச்சே! கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன் ப்ளீஸ்"

"திவ்யானா? அன்னைக்கு கமெர்ஷில் ஸ்ட்ரீட்ல உன்கூட லூசு மாதிரி ஒண்ணு இருந்துச்சே அதுவா?"

"ஏய், லூசு கீசுன்ன அவ்வளவுதான்"

"சரி சொல்லு என்ன பண்ணனும்"

"இரு நான் அவள்ட டீட்டெயிலா கேட்டு சொல்றேன்"

.........................

"ஹலோ திவ்யா நான் ஐஸூ பேசறேன். அந்த எக்ஸல்ல ஏதோ பண்ணனும்னு சொன்னியே, கொஞ்சம் டீட்டயிலா சொல்லு, தனா பண்ணி தரன்னு சொல்லி இருக்கான்""

"இரு நீ என்ன சொல்றனே எனக்கு புரியல. நான் தனா எக்ஸ்டென்ஷனுக்கு கால் ஃபார்வேர்ட் பண்ணறேன். அவன்ட நீயே பேசிக்கோ"

......................

"தனா உன் எக்ஸ்டென்ஷனுக்கு கால் ஃபார்வேர்ட பண்றேன். கொஞ்சம் அவள்ட என்ன செய்யனும்னு டீட்டெயிலா கேட்டுக்கோ"

"சரி"

"டேய்! அவளை எல்லாரையும் ஓட்டற மாதிரி ஓட்டாத"

"சரி.... சொல்லிட்ட இல்ல ஃபிரியா விடு"

.....................

"ஹலோ! நான் தனா பேசறேன். சொல்லுங்க என்ன செய்யனும்"என்ன வேணும்னு தெளிவாக சொன்னாள்.

"சரிங்க.. இது செய்யறதுக்கு ஒரு 5 மணி நேரமாகும். ஒரு மணி நேரத்துக்கு $60. மொத்தம் $300. எப்படி அனுப்பறீங்க?. இண்டர் நெட் டிரான்ஸ்பர் பண்ணிடறீங்களா?"

"என்னங்க இப்படி சொல்றிங்க? உங்களூக்கே இது அநியாயமா தெரியலையா?"

"சரி நீங்க ஐஸ்வர்யா ஃபிரண்ட்ன்றதால பாதி ரேட்ல பண்ணி தரேன். ஓகேவா?"

"ஐயய்யோ வேணாங்க... நான் வேற ஆளை பாக்கறேன்"

"கவலைப்படாதீங்க! சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். எப்ப வேணும்னு சொல்லுங்க?"

"நாளைக்கு மதியத்துக்குள்ள பண்ணி தர முடியுமா?"

"சரிங்க நாளைக்கு மதியம் சாப்பிட போறதுக்கு முன்னாடி அனுப்பி வெச்சிடறேன்"

ஒரு மணி நேரத்துக்குள் முடித்துவிட்டு அனுப்பிவிட்டேன். நன்றி சொல்லி மெயில் அனுப்பினாள்....................................

ஒரு வாராத்திற்கு பிறகு...எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது

"ஹலோ தனா ஹியர்"

"நான் ஐஸ்வர்யா ஃபிரெண்டு திவ்யா பேசறேன்"

"எந்த ஐஸ்வர்யா?""

"நீங்க தனபாலன் தான?"

"ஆமாம் அப்படிதான் என்னை எல்லோரும் கூப்பிடறாங்க"

"உங்க பிராஜக்ட் மேட் ஐஸ்வர்யா பிரண்ட் திவ்யா. அன்னைக்கு கூட எக்ஸேல்ல மேக்ரோ பண்ணி குடுத்தீங்களே"

"நியாபகம் இருக்குங்க. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். அப்பறம் ஐஸ்கிட்ட நான் இந்த மாதிரி கேட்டன்னு சொல்லிடாதிங்க"

"சரிங்க. அப்பறம் ஒரு சின்ன பிரச்சனை"

"சொல்லுங்க உங்க மேனஜரை போட்டு தள்ளனுமா?"

"ஐயய்யோ அதெல்லாம் இல்லை. அன்னைக்கு நீங்க பண்ண மேக்ரோவை நான் பண்ணன்னு சொல்லி குடுத்துட்டேன். அது எங்க மேனஜ்ருக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. இப்ப அதைவிட கொஞ்சம் அட்வான்சா ஒன்னு கொடுத்து பண்ண சொல்லி இருக்காரு. ப்ளீஸ் நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். "

"இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? நான் பண்ணதை நீங்க பண்ணீங்கனு கதைய விட்ருக்கீங்க"

"ஸாரிங்க. நீங்க வேற கம்பனி. இதை சொன்னா பிரச்சனையாயிடும்"

"புரியுது. என்ன செய்யனும்னு சொல்லுங்க? எப்படி செய்யனும்னு உங்களுக்கு நான் சொல்லி தரேன்"

ஒரு வழியாக விளக்கினாள்.

"உங்களுக்கு VB தெரியுமா?"

"தெரியாதே! காலேஜ்ல நாலாவது செமஸ்டர்ல படிச்சேன். மறந்து போச்சு"

"ஃபிரியா விடுங்க... எனக்கு நாலாவது செமஸ்டர் படிச்சமானே நியாபகம் இல்லை. எப்ப வேணும்?"

"திங்க கிழமை காலைல. முடியுமா?"

"என்னங்க மணி 4 ஆயிடுச்சி. நான் பொதுவா வெள்ளிக்கிழமை 1 மணிக்கு மேல எந்த வேலையும் பண்ணமாட்டேன்"

"சாரிங்க... இந்த ஒரு தடவை மட்டும்"

"இந்த தடவை நானே பண்ணி தரன். ஆனால் எனக்கு ட்ரீட் கொடுக்கனும். ஓகேவா???"

"ட்ரீட்டா??? "

"பின்ன... போன தடவையே 300 டாலர் வாங்கியிருக்கனும். மிஸ் பண்ணிட்டேன். இந்த தடவை எப்படியும் ட்ரீடாவது கொடுக்கனும்""

""என்னங்க பேச்சையே கானோம்"

"சரிங்க. நீங்க பண்ணி குடுங்க. ட்ரீட் வெச்சிக்கலாம்.....எங்கனு நீங்களே சொல்லுங்க"

"லீலா பேலஸ்"

"இதெல்லாம் கொஞ்சம் ஓவர்..."

"சரி ப்ரிகேட் ரோட்ல இருக்கற "Cafe Coffee Day"ல வெச்சிக்கலாம். அடுத்த வீக் என்ட். ஓகேவா???"

"சரிங்க"

"திங்க கிழமை காலைல உங்க மெயில் பாக்ஸ்ல எக்ஸல் இருக்கும்"

"ரொம்ப தேங்ஸ்ங்க"

.....................................

"டேய்! மேக்ரோ பண்ணி குடுக்கறதுக்கு ட்ரீட் கேட்டயாமே... உண்மையா???"

"ஆமாம்... அப்ப தான் அடிக்கடி கேக்க மாட்டா. கத்துக்கனும்னு தோனும்"

"கிழிக்கும்... இனிமே ட்ரீட் கொடுத்தே உங்கிட்ட வேலை வாங்கிடலாம்னு அவ நேத்து கூட ரூம்ல சொல்லிட்டு இருந்தா!!!"

"ஓ!!! பாத்தா லூசு மாதிரி இருக்கா... இப்படியெல்லாம் வேற பேசறாளா??? அவளுக்கு இருக்கு.நான் வேற அவளுக்கு முன்னாடியே அந்த எக்ஸெல அனுப்பி வெச்சிட்டேன்"

"சரி வீக் என்ட்தான் பாக்க போறியே அப்பறமென்ன??? அப்ப கேட்டுக்கோ"

"ஏய் டுபுக்கு.. நான் சும்மா பேச்சுக்கு சொன்னா, சீரியசா எடுத்துக்க்கிட்டயா? ட்ரீட் எல்லாம் எதுவும் வேணாம். அவள்ட சோல்லிடு"

"சரி"

.....................

அடுத்த நாள் எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது.

"ஹலோ! தனா ஹியர்"

"நான் திவ்யா பேசறேன்"

"சொல்லுங்க திவ்யா!!! அடுத்த எக்ஸல் ரெடியாயிடுச்சா???"

"ஐயய்யோ அதெல்லாம் இல்லைங்க. சும்மா தான் போன் பண்ணேன்""

"சொல்லுங்க"

"நேத்து ஐஸ்வர்யாட்ட ட்ரீட் வேணாம்னு சொன்னிங்களாமே? நிஜமாவா?"

"இல்லையே நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லையே"

"நீங்க வேணாம்னு சொன்னிங்கனு அவ சொன்னா"

"சும்மா சொன்னங்க. நான் தான் வேணாம்னு சொன்னேன்"

"நான் அவள்ட சும்மா ஓட்றத்துக்காக சொன்னதை அவ உங்ககிட்ட வந்து சொல்லிட்டா. சீரியஸா எடுத்துக்காதீங்க. நான் உங்களுக்கு கண்டிப்பா ட்ரீட் கொடுக்கறேன்"

"உங்க இஷ்டம். சரி நீங்க எந்த பிரான்ச்ல வேலை பாக்கறீங்க? உங்க கம்பனிதான் ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலையும் வெச்சிருக்கானே""

"நான் எலக்ட்ரானிக் சிட்டில இருக்கேன். போன வாரம் வரைக்கும் மடிவாளால இருந்தேன்"

"சரி அப்ப ஏதாவது ஓரு நாள் லன்ச்க்கு மீட் பண்ணுவோம்"

"வாவ்!!! இது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே... இன்னைக்கு நான் என் பிரெண்ட்ஸ் கூட போகனும்.. நாளைக்கு மீட் பண்ணுவோமா?"

"சரிங்க......"

(தொடரும்)

23 comments:

வெட்டிப்பயல் said...

This is my second story (after Golti). My roomie asked me to write a story with positive climax. So I started this story with his name for the lead role.

Now when I read this I still feel the freshness in the story. Its like a drama where there is no narration. Just dialogs. But still I can feel the presence of the characters when I read it.

I dont know whether I can write these kind of stories again.

Whatever the critics say about my stories (with SW Background), I like to read and write these kind of stories.

உண்மை said...

Vetti, Welcome back.

வந்தவுடனே சுட சுட போட்டு தாக்குறீங்க. ஜாமாய் ராஜா.

சின்னப் பையன் said...

போட்டு தாக்குங்க...

Natty said...

ஹூம்... நானுந்தான் நல்லா கோடிங் அடிப்பேன்.. நம்மள எல்லாம் யாரும் கேக்க மாட்டேங்கறாங்க.. எல்லாம் விதி பாஸூ.. விதி ;)

இலவசக்கொத்தனார் said...

கதை எழுதறதுக்காக புதரகம் (இன்னும் ஒரு வாரம் இப்படிச் சொல்லலாமே!) வரது எல்லாம் இரண்டாம் மாடி!!

வெட்டிப்பயல் said...

//உண்மை said...
Vetti, Welcome back.

வந்தவுடனே சுட சுட போட்டு தாக்குறீங்க. ஜாமாய் ராஜா.//

வாங்க உண்மை. எப்படி இருக்கீங்க?

இது ஏற்கனவே எழுதின கதை தான் :)

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...
போட்டு தாக்குங்க...//

மிக்க நன்றி ச்சி பை :)

வெட்டிப்பயல் said...

// Natty said...
ஹூம்... நானுந்தான் நல்லா கோடிங் அடிப்பேன்.. நம்மள எல்லாம் யாரும் கேக்க மாட்டேங்கறாங்க.. எல்லாம் விதி பாஸூ.. விதி ;)//

ஹா ஹா ஹா :)

நல்லா கோட் அடிக்கிறது மேட்டரில்லை. நீங்க நல்லா கோட் அடிப்பீங்கனு உங்க டீம்ல இருக்குற பொண்ணுங்களுக்கு தெரியனும் :)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...
கதை எழுதறதுக்காக புதரகம் (இன்னும் ஒரு வாரம் இப்படிச் சொல்லலாமே!) வரது எல்லாம் இரண்டாம் மாடி!!//

தல,
இது மறு ஒளிபரப்பு :)

சரவணகுமரன் said...

வரிக்கு வரி கலக்கல்...

SUBBU said...

Marupadiyum aarambichaachaa ;)

வெங்கட்ராமன் said...

தல அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பிச்சாச்சா

அதிரடி ஆரம்பம். . . .

Anonymous said...

Vetti....
Palaya kadhayaa irundhalum, thirumba padikumpodhu nallave iruku...
Pudhiya muyarchigalai edhirparkiren.

திவாண்ணா said...

//Whatever the critics say about my stories (with SW Background), I like to read and write these kind of stories.//

யார் எந்த சூழ்நிலையை சரியா புரிஞ்சு வெச்சு இருக்காங்களொ அதே சூழ் நிலைல எழுதினா நல்லாதான் இருக்கும். தெரியாத சூழலையோ கற்பனை சூழலையோ கொண்டு வந்தா கொஞ்சம் பிரச்சினைதான்.

பெங்களூர்ல செட்டில் ஆயாச்சுன்னு நினைச்சேன்! அது தற்காலிகந்தானா?

Poornima Saravana kumar said...

வெட்டி அண்ணா மறுபடியும் கதை எழுத ஆரம்பிச்சுட்டிங்களா? ஒரே கலக்கல்ஸ் தான் போங்க. நீங்க திரும்ப வந்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.. கதை அருமையா இருக்கு. தொடரட்டும் உங்கள் கதைப் பணி:)

வெட்டிப்பயல் said...

//சரவணகுமரன் said...
வரிக்கு வரி கலக்கல்...

//

மிக்க நன்றி சரவணகுமரன் :)

வெட்டிப்பயல் said...

//Subbu said...
Marupadiyum aarambichaachaa ;)

//

ஆமாம் சுப்பு... ஆரம்பிச்சாச்சி :)

வெட்டிப்பயல் said...

//வெங்கட்ராமன் said...
தல அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பிச்சாச்சா

அதிரடி ஆரம்பம். . . .//

இது பழைய பதிவு தான் தல... மீள் பதிவு :)

வெட்டிப்பயல் said...

//BHASKAR said...
Vetti....
Palaya kadhayaa irundhalum, thirumba padikumpodhu nallave iruku...
Pudhiya muyarchigalai edhirparkiren.//

சீக்கிரமே பதியறோம் தல :)

வெட்டிப்பயல் said...

//திவா said...
//Whatever the critics say about my stories (with SW Background), I like to read and write these kind of stories.//

யார் எந்த சூழ்நிலையை சரியா புரிஞ்சு வெச்சு இருக்காங்களொ அதே சூழ் நிலைல எழுதினா நல்லாதான் இருக்கும். தெரியாத சூழலையோ கற்பனை சூழலையோ கொண்டு வந்தா கொஞ்சம் பிரச்சினைதான்.
//
ஆமாம்... இருந்தாலும் ஒரே மாதிரி இருக்குனு நிறைய கம்ப்ளைண்ட் :)

//பெங்களூர்ல செட்டில் ஆயாச்சுன்னு நினைச்சேன்! அது தற்காலிகந்தானா?//

திவா சார்,
எல்லாமே தற்காலிகம் தான் :) (திரும்ப வருவேன் :))

வெட்டிப்பயல் said...

// PoornimaSaran said...
வெட்டி அண்ணா மறுபடியும் கதை எழுத ஆரம்பிச்சுட்டிங்களா? ஒரே கலக்கல்ஸ் தான் போங்க. நீங்க திரும்ப வந்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.. கதை அருமையா இருக்கு. தொடரட்டும் உங்கள் கதைப் பணி:)//

மிக்க நன்றி தங்கச்சி... இது பழைய கதை தான்மா... ஆனா மறுபடியும் போட்டிருக்கேன்.. புது கதைகள் விரைவில் வரும் :)

Nimal said...

ஆரம்பம் அருமை....!

வெண்பூ said...

அருமையா எழுதுறீங்க வெட்டி.. அப்படியே சீன் பை சீன் கண்ணு முன்னால ஓடுது.. வர்ணனைகள் அதிகம் இல்லாம டயலாக் மட்டுமே அதிகமா இருக்குறது நல்லா இருக்கு.. பாராட்டுக்கள்.