NRI னா Non Returning Indiansனு மாறி பல வருஷமாயிடுச்சி. எங்கள மாதிரி ப்ராஜக்ட்க்காக வந்தவங்களுக்கு இனிமே PPIனு தான் சொல்லனும். அது என்ன PPI னு கேக்கறீங்களா? அதான் பொழைப்புக்காக புலம்பெயர்ந்த இந்தியர்கள் இல்லைனா பொட்டி தட்ட புலம்பெயர்ந்த இந்தியர்கள்னு வேணாக்கூட வெச்சிக்கலாம்.
ஆனா அப்படி ப்ராஜக்ட்டுக்காக வந்துட்டு ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ இருந்துட்டு இவுங்க எல்லாம் இந்தியா வந்து பண்ற அலும்புக்கு அளவேயில்லை. (Not me.. I am a good guy.. u know) அமெரிக்காவுல இருந்த இந்த மாதிரி வரவங்க எல்லாம் என்ன என்ன அலும்பு பண்றாங்கனு சொல்ற பதிவு தான் இது.
முதல் விஷயம் யாரும் ட்ராபிக் ரூல்ஸயே மதிக்கறதில்லை. லேன் சேஞ்ச் பண்ணும் போது யாரும் இண்டிக்கெட்டரே போட மாட்றானுங்கனு ஃபீல் பண்ணுவானுங்க. (ஏன்டா, நம்ம ஊர்ல இருந்த வரைக்கும் லேன் எதுக்குனு தெரியுமா? கவர்மெண்டே கைல காசு நிறைய இருக்குனு என்ன பண்ணனும்னு தெரியாம ரோடுல கோடு போட்டு வெச்சிருக்கானுங்க. நம்ம டூ வீலர்ல போறவங்க எல்லாம் அந்த கோட்டு மேலே போனா ஜாலியா இருக்கும்னு போவானுங்க. கார்ல போறவங்க ப்ராக்டீஸ் பண்ணறதுக்கு வசதியா இருக்கும்னு அந்த கோடு காருக்கு நடுவுல வர மாதிரி ஓட்டி பழகுவானுங்க. இதுல லேன் சேஞ்ச்க்கு இண்டிக்கேட்டரா? அவன் அவன் திரும்பறதுக்கே இண்டிக்கேட்டர் போட மாட்டானுங்க இதுல இது வேறையா?)
"Z" - இதை இசட்னு சொல்ல மாட்டானுங்க. Zeeனு தான் சொல்லுவானுங்க.
Curdனு சொல்ல மாட்டானுங்க. Yogurtனு தான் சொல்லுவானுங்க.
Sauceனு சொல்ல மாட்டானுங்க. Ketch Upனு தான் சொல்லுவானுங்க.
"301" இதை த்ரி சீரோ ஒன்னுனு சொல்ல மாட்டானுங்க. த்ரி "ஓ" ஒன்னுனு தான் சொல்லுவானுங்க.
Purseனு சொன்னா சிரிப்பானுங்க. Walletனு தான் சொல்லனும்னு சொல்லுவானுங்க. (பர்ஸ் பொண்ணுங்க தான் யூஸ் பண்ணுவாங்கனு சொல்லுவானுங்க)
பீசாக்கு சாஸ் தொட்டு சாப்பிடறதை பார்த்தா கிண்டல் பண்ணுவானுங்க.
மைக்ரோவேவ் இல்லாம எப்படி சமையல் செய்யறதுனு கேள்வி கேட்பானுங்க. (என்னுமோ Father of Foreign Country மாதிரி பில்ட் அப் கொடுப்பானுங்க.)
ரோட்டை க்ராஸ் பண்றதுக்குள்ள கூட வர நம்ம உயிர வாங்கிடுவானுங்க. கேட்டா நடந்து போறவனுக்கு கார்ல போறவன் வெயிட் பண்ணனும்னு சொல்லுவானுங்க. (அப்படி நம்ம ஊர்ல நின்னா கண்ணகி சிலைக்கு பக்கத்துல அதே மாதிரி நாமலும் சிலையா நிக்க வேண்டியது தான்)
வீட்டு அட்ரஸ் சொன்னா Map Questல வழி பார்ப்பானுங்க.
இண்டர் நெட்ல படம் டவுன்லோட் பண்ணி பார்க்கலாம்னு சொல்லுவானுங்க. (வெண்ட்ரு.. இங்க படம் DVDயே 20 ரூபாய்ல வாங்கிடலாம்னு சொன்னா. "Oh Yeah.. I forgot that" அப்படினு பில்ட் அப் கொடுப்பானுங்க).
அமெரிக்காவுல எடுத்த போட்டோவை எல்லாம் காட்டி தினமும் உயிர வாங்குவானுங்க.
பெங்களூர்ல இருந்த வரைக்கும் லால் பாக் கூட போயிருக்காது. ஆனா அமெரிக்கா போனவுடனே இயற்கையை ரசிச்சி ஃபோட்டோ எடுத்துன்னே சொல்லி நம்மல கொல்லுவானுங்க.
Petrolனு சொல்ல மாட்டானுங்க.. Gasனு தான் சொல்லுவானுங்க.
போலிஸ்னு சொல்ல மாட்டானுங்க. காப்னு தான் சொல்லுவானுங்க. (கிடைக்க போறது என்னுமோ ஆப்பு. அதுல என்ன காப்பு?)
அமெரிக்கால இருக்கும் போது எல்லாத்தையும் ரூபாய்க்கு மாத்தி யோசிப்பானுங்க. இந்தியா வந்தவுடனே எல்லாத்தையும் டாலர்ல கணக்கு பண்ணுவானுங்க. ஒரு தோசை 45 ரூபாய்னா, ஒரு டாலர் தானே. ரொம்ப சீப்னு சொல்லுவானுங்க.
...............
உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லலாம்... இதெல்லாம் கண்டிப்பா நான் பண்ணமாட்டேனு இப்பவே வாக்கு கொடுத்துக்கறேன்...
111 comments:
காப்பு மாட்டறவன் காப்பு இல்லாம என்ன? அவங்க சொல்லறது சரிதான்!!
//இலவசக்கொத்தனார் said...
காப்பு மாட்டறவன் காப்பு இல்லாம என்ன? அவங்க சொல்லறது சரிதான்!!//
பூனைக்குட்டி வெளிய வருது பாருங்க :-))
காரை cabனுதான் சொல்லுவாங்க. arizonaல அவிஞ்சி கெடந்திருந்தாலும், ஊட்டி வெயிலையே burning weatherனு வூடு கட்டுவாங்க. அங்க அத்துவானக் காட்டுக்கு நடுவுல வீட்ட கட்டிட்டு, அடையார் மூணு படுக்கயறை பிளாட்களை பார்த்து, 'இவ்ளோ சின்ன வீட்ல எப்படித்தான் இருக்க முடியுதோ, அங்க என்னோட மேன்ஷன வந்துப் பார்'னு அலப்பறை பண்ணுவாங்க
// rapp said...
காரை cabனுதான் சொல்லுவாங்க. arizonaல அவிஞ்சி கெடந்திருந்தாலும், ஊட்டி வெயிலையே burning weatherனு வூடு கட்டுவாங்க. அங்க அத்துவானக் காட்டுக்கு நடுவுல வீட்ட கட்டிட்டு, அடையார் மூணு படுக்கயறை பிளாட்களை பார்த்து, 'இவ்ளோ சின்ன வீட்ல எப்படித்தான் இருக்க முடியுதோ, அங்க என்னோட மேன்ஷன வந்துப் பார்'னு அலப்பறை பண்ணுவாங்க//
சூப்பரு...
Cabஐ எப்படி மிஸ் பண்ணேன் :-(
//யாரும் இண்டிக்கெட்டரே போட மாட்றானுங்கனு ஃபீல் பண்ணுவானுங்க//
இதை நான் வன்மையாய் கண்டிக்கிறேன். நான் எபொழுதும் இண்டிக்கெட்டரே போடுவேன் (I mean before I became NRI or PPI).
//உண்மை said...
//யாரும் இண்டிக்கெட்டரே போட மாட்றானுங்கனு ஃபீல் பண்ணுவானுங்க//
இதை நான் வன்மையாய் கண்டிக்கிறேன். நான் எபொழுதும் இண்டிக்கெட்டரே போடுவேன் (I mean before I became NRI or PPI).//
லேன் மாறும் போதா?
ஐயன்மீர்,
இந்த ரீ-மிக்ஸ் கலாச்சாரத்தை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க??? :))
// லேன் மாறும் போதா? //
ஆமாம்ங்ண்ணா.
எங்க பார்த்தாலும் கொசு, ஈ இப்படி எல்லாம் சுத்திட்டு இருக்கு மனுஷன் இருப்பானா இங்க..
Mail-In Rebate எல்லாம் இங்க கிடையாதா?
எங்க பார்த்தாலும் கொசு, ஈ இப்படி எல்லாம் சுத்திட்டு இருக்கு மனுஷன் இருப்பானா இங்க..
Mail-In Rebate எல்லாம் இங்க கிடையாதா?
//இராம்/Raam said...
ஐயன்மீர்,
//
நான் அவனில்லை :-))))
// இந்த ரீ-மிக்ஸ் கலாச்சாரத்தை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க??? :))//
அண்ணே,
நீங்க 18 மாசத்துக்கு முன்னாடி எழுதனதை ஞாபகம் வெச்சி எழுதற அளவுக்கு எல்லாம் நமக்கு ஞாபக சக்தி இல்லைங்கண்ணா...
நம்மல இன்னும் 3 மாசத்துல பொட்டி கட்ட சொல்லிடுவாங்க போல தெரியுது.. அதனால நாம எப்படி எல்லாம் தப்பு பண்ணக்கூடாதுனு யோசிச்சதுல வந்து பதிவுணா இது...
// உண்மை said...
// லேன் மாறும் போதா? //
ஆமாம்ங்ண்ணா.//
நீங்க ரொம்ப நல்லவரா இருந்துருக்கீங்களே!!!
//சக்தி said...
எங்க பார்த்தாலும் கொசு, ஈ இப்படி எல்லாம் சுத்திட்டு இருக்கு மனுஷன் இருப்பானா இங்க..//
கொசுவையே மறந்து போயிட்டேன்.. ஞாபகப்படுத்தியதற்கு நன்றி... எவ்வளவு கொசு அடிச்சிருப்போம், "ஈ" அடிச்சான் காப்பி அடிச்சிருப்போம் :-)))
// Mail-In Rebate எல்லாம் இங்க கிடையாதா?//
:-))
They will call district as County.
Always carry the Mineral water with them. Mainl they will become KANJUUUS
//ஆமாம்ங்ண்ணா.//
நீங்க ரொம்ப நல்லவரா இருந்துருக்கீங்களே!!!//
அது அப்போ. போன வருஷம் ஊருக்கு போனப்ப அந்த தப்பெல்லாம் பண்ணல.
உருவ அமைப்புல சேஞ்சஸ் பண்ணி வருவாங்களே அதை பத்தி சொல்லலையே! அதாங்க குழம்பை தலையில ஊத்திக்கிட்டு, ஸ்டைலா முடி கட்டிங்க் வெட்டிங்க்ஸ் :)
:)) நல்லா ரசிச்சேன்...
'z' மட்டும் இல்லங்க, 'a', 'e', இதெல்லாம் அவங்க உச்சரிப்பு கேட்டிருக்கீங்கள்ள? யாராச்சும் பேரு கேட்டா, "v as in victor, e as in elephant, t as in tom, ..." இப்படி போகும்..
//padippavan said...
They will call district as County.
Always carry the Mineral water with them. Mainl they will become KANJUUUS//
இதெல்லாம் NRI ங்க பண்றது.. நம்ம பசங்க அந்த அளவுக்கு மோசமா போக மாட்டாங்கனு நினைக்கிறேன்...
மினரல் வாட்டர் எல்லாம் இப்ப எல்லாருமே யூஸ் பண்றாங்க :-) (ஜீஸ் போடறதுக்கு கூட)
//உண்மை said...
//ஆமாம்ங்ண்ணா.//
நீங்க ரொம்ப நல்லவரா இருந்துருக்கீங்களே!!!//
அது அப்போ. போன வருஷம் ஊருக்கு போனப்ப அந்த தப்பெல்லாம் பண்ணல.//
நீங்க.. அப்படியே ஆப்போசிட்டா இருந்துருக்கீங்க போல :-)
//ஆயில்யன் said...
உருவ அமைப்புல சேஞ்சஸ் பண்ணி வருவாங்களே அதை பத்தி சொல்லலையே! அதாங்க குழம்பை தலையில ஊத்திக்கிட்டு, ஸ்டைலா முடி கட்டிங்க் வெட்டிங்க்ஸ் :)//
நான் பார்த்த வரைக்கும் இது கொஞ்ச கம்மி.. ஒரு சில பேர் இங்க ஹேர் கட்டிங் காஸ்ட்லினு நிறைய முடி வளர்த்துட்டு வருவானுங்க :-))
//கவிநயா said...
:)) நல்லா ரசிச்சேன்...
'z' மட்டும் இல்லங்க, 'a', 'e', இதெல்லாம் அவங்க உச்சரிப்பு கேட்டிருக்கீங்கள்ள?//
அது பெரும்பாலும் பசங்க இங்க படிச்சா தான்...
//யாராச்சும் பேரு கேட்டா, "v as in victor, e as in elephant, t as in tom, ..." இப்படி போகும்..//
இது ஏதாவது சபோர்ட் கால்ல தான் அதிகம் தேவைப்படும்...
சும்மா தெருவுல குப்ப கொட்ட போகும்போது கட்டிக்கிட்டுருக்க லுங்கிய கயட்டிட்டு, ஷார்ட்ஸ் மாட்டிகிட்டு போறது. நியூயார்க் போக்குவரத்து நெரிசல்ல அஞ்சுமணிநேரம் மாட்டிகிட்டு அல்லல்பட்டாலும், அந்த நெரிசல்ல மாட்டறதுக்கு பிறவிப் பயன அடைஞ்சா மாதிரி புளகாங்கிதப் பட்டுட்டு, சென்னை ட்ராபிக்கை கன்னா பின்னான்னு திட்டறது. பொறந்ததுலேருந்து வாயாலயே ஹாரன் அடிச்சி பக்கத்து வீட்டிலிருக்கவங்க காத கிழிச்சிட்டு, ரெண்டு வருஷம் அங்க இருந்திட்டு திரும்பின உடன், ஹோர்ரிபில் ஹாரன் கலாச்சாரங்கறது. பனகல் பார்க் சரவண பவன்ல உக்காந்துகிட்டு நியூயார்க் சரவண பவன் கிளையப் பத்தி பீல் பண்ணி டயலாக் உடறது. பீச்சுக்குப் போனா அலையில விளையாண்டமா, சுண்டல முழுங்கனோமான்னில்லாம, அமரிக்கால இருக்கும்போது அந்த தீவைப் பார்த்தேன், இந்த வாட்டர் ஸ்போர்ட்ஸ் ட்ரை பண்ணேன்னு கூட வந்தவங்கள அந்தக் கடல்ல உழுந்து தற்கொலை பண்ணிக்கத் தூண்டறதுன்னு அடுக்கிக்கிட்டே போகலாம். ஆனா இன்னைய தேதிக்கு இதெல்லாம் பண்ணாதாங்க நம்ம நாட்ல மதிக்கறாங்க, நான் போன தடவை ஊருக்குப் போனப்போ இந்தியாவ திட்டலைங்கர காரணத்தால சந்திச்ச அவமானங்கள் பலப்பல:):):)
// rapp said...
சும்மா தெருவுல குப்ப கொட்ட போகும்போது கட்டிக்கிட்டுருக்க லுங்கிய கயட்டிட்டு, ஷார்ட்ஸ் மாட்டிகிட்டு போறது. நியூயார்க் போக்குவரத்து நெரிசல்ல அஞ்சுமணிநேரம் மாட்டிகிட்டு அல்லல்பட்டாலும், அந்த நெரிசல்ல மாட்டறதுக்கு பிறவிப் பயன அடைஞ்சா மாதிரி புளகாங்கிதப் பட்டுட்டு, சென்னை ட்ராபிக்கை கன்னா பின்னான்னு திட்டறது. பொறந்ததுலேருந்து வாயாலயே ஹாரன் அடிச்சி பக்கத்து வீட்டிலிருக்கவங்க காத கிழிச்சிட்டு, ரெண்டு வருஷம் அங்க இருந்திட்டு திரும்பின உடன், ஹோர்ரிபில் ஹாரன் கலாச்சாரங்கறது. பனகல் பார்க் சரவண பவன்ல உக்காந்துகிட்டு நியூயார்க் சரவண பவன் கிளையப் பத்தி பீல் பண்ணி டயலாக் உடறது. பீச்சுக்குப் போனா அலையில விளையாண்டமா, சுண்டல முழுங்கனோமான்னில்லாம, அமரிக்கால இருக்கும்போது அந்த தீவைப் பார்த்தேன், இந்த வாட்டர் ஸ்போர்ட்ஸ் ட்ரை பண்ணேன்னு கூட வந்தவங்கள அந்தக் கடல்ல உழுந்து தற்கொலை பண்ணிக்கத் தூண்டறதுன்னு அடுக்கிக்கிட்டே போகலாம். ஆனா இன்னைய தேதிக்கு இதெல்லாம் பண்ணாதாங்க நம்ம நாட்ல மதிக்கறாங்க, நான் போன தடவை ஊருக்குப் போனப்போ இந்தியாவ திட்டலைங்கர காரணத்தால சந்திச்ச அவமானங்கள் பலப்பல:):):)//
அக்கா,
சேதாரம் ரொம்ப அதிகம் போல :-))
//சேதாரம் ரொம்ப அதிகம் போல//
எக்கச்சக்கங்க
---கிடைக்க போறது என்னுமோ ஆப்பு. அதுல என்ன காப்பு?--
இங்க உங்களோட டச் தெரியுது ;)
Mom please make oatmeal or cereal for breakfast....
no no no you mean idly...how to eat that...with hands ??? no no that is too bad....
and mom no eruamai milk. no cow mill. only skimmed milk...
// rapp said...
//சேதாரம் ரொம்ப அதிகம் போல//
எக்கச்சக்கங்க//
:-))))
//Boston Bala said...
---கிடைக்க போறது என்னுமோ ஆப்பு. அதுல என்ன காப்பு?--
இங்க உங்களோட டச் தெரியுது ;)//
பதிவு பூரா தேடிருக்கீங்க போல...
இது சும்மா மொக்கை போஸ்ட் தான் பாபா :-)
(உன் எல்லா பதிவுமே அப்படித்தானு சொல்லக்கூடாது.. அவ்வ்வ்வ்வ்)
//அகில் பூங்குன்றன் said...
Mom please make oatmeal or cereal for breakfast....
no no no you mean idly...how to eat that...with hands ??? no no that is too bad....
and mom no eruamai milk. no cow mill. only skimmed milk...//
இதெல்லாம் 6 மாசம் இருந்துட்டு வரவங்க பண்ற அட்டகாசம் கிடையாது.. இது எல்லாம் NRI ங்க பண்ற அலும்பு :-)
ஜி யின் இந்த பதிவை ஞாபகப்படுத்தியது உங்கள் பதிவு
http://veyililmazai.blogspot.com/2007/04/blog-post.html
லொள்ளுன்னு தலைப்பு மட்டும் இருப்பதாலே, சேஃபா விளையாடுரீங்க.... என்னவோ எல்லா என். ஆர். ஐ யையும் இவங்களே பாத்தா மாதிரியும்.... அறை எண் 305 , தமிழ் எம். ஏ ரேஞ்சுக்கு நீங்களே குத்துரீங்களே....... நீங்க பாத்த 2 பேர்.... அப்படி உங்க கிட்ட மொக்கை போட்டதுக்காக, எல்லாரையும் நுண்ணரசியலில் சம்பந்தபடுத்துவதை பார்த்தா... நீங்க தமிழக அரசியல் முன் அனுபவம் இருப்பவராக இருக்கனும்னு சொல்றேன்....
நீங்க என்ன சொல்றீங்க....
//Natty said...
லொள்ளுன்னு தலைப்பு மட்டும் இருப்பதாலே, சேஃபா விளையாடுரீங்க....//
Natty.. U r so naughty...
அது தலைப்பு இல்லை... லேபிள் :-)
// என்னவோ எல்லா என். ஆர். ஐ யையும் இவங்களே பாத்தா மாதிரியும்.... அறை எண் 305 , தமிழ் எம். ஏ ரேஞ்சுக்கு நீங்களே குத்துரீங்களே....... நீங்க பாத்த 2 பேர்.... அப்படி உங்க கிட்ட மொக்கை போட்டதுக்காக, எல்லாரையும் நுண்ணரசியலில் சம்பந்தபடுத்துவதை பார்த்தா... நீங்க தமிழக அரசியல் முன் அனுபவம் இருப்பவராக இருக்கனும்னு சொல்றேன்....
//
அரசியல்ல முன் அனுபவம் இல்லை... இனிமே பின் அனுபவம் ஏற்படுமானு தெரியல... நாளைக்கே நான் தமிழ் நாட்டுக்கு முதல் மந்திரியா வந்தா உங்களுக்கு இலக்கியத்துக்கு ஒரு அவார்ட் தரேன்... நுண்ணரசியல் பின்னரசியல்னு எல்லாம் என் பதிவுல கண்டு பிடிக்கறீங்களே... அதுக்கு தான் ;)
அப்பறம் இந்த பதிவுல ஒரு முக்கியமான விஷயத்தை நீங்க கவனிக்கல.. இது ஓட்ற மாதிரி இருந்தாலும் இந்தியாவுல இருந்து இங்க புதுசா வரவங்களுக்கு உதவும். இதையே நான் டிக்ஷனரி மாதிரி போட்டா ஒருத்தனும் படிக்க மாட்டான் :-).
ஹா ஹா...அடிக்கடி, "Customer Service" எல்லாத்துக்குமே சரி இல்லேன்னு சொல்ல வேண்டியது, குழந்தைங்க இங்க படிச்சிருந்தா அவங்க படிப்ப பத்தியும் பேசுவாங்க :)
கடையில ஏதாவது பொருள் வாங்கினா அதை போய் திருப்பித் தர முடியலையே ன்னு ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க...
காய்கறி வெட்டுனும்னா கூட கட்டிங்க ப்ளேட் தேடுவாங்க.... அரிவாள்மனையெல்லாம் ரொம்ப அன்கம்பொர்ட்டமல்லா இருக்கும் பில்டப் வேற....
வாஷிங்மெஷின் னோட டிரையரும் வேணுன்னு suggestion வேற சொல்லுவாங்க...
//முதல் விஷயம் யாரும் ட்ராபிக் ரூல்ஸயே மதிக்கறதில்லை. லேன் சேஞ்ச் பண்ணும் போது யாரும் இண்டிக்கெட்டரே போட மாட்றானுங்கனு ஃபீல் பண்ணுவானுங்க.//
நாலு பேருக்கு நல்லதுன்னு அத யாரு வேணாம்லும் சொல்லலாம்...
இது நல்ல விசயம் தானே.... இதுல என்ன தப்பு இருக்கு....
//வெண்ட்ரு.. இங்க படம் DVDயே 20 ரூபாய்ல வாங்கிடலாம்னு சொன்னா. "Oh Yeah.. I forgot that" அப்படினு பில்ட் அப் கொடுப்பானுங்க
:)
சிலர் இங்கே வந்த பிறகும் அங்கேயிருந்து புதுசா வாங்கிட்டு வந்த லாப்டாப்'ல அமெரிக்கன் டைமா மாத்தாம அப்படியே வச்சிட்டு இருக்காங்க. ஒரு வருஷம் கழிச்சு கேட்டாலும் "ஒ அதுவா, அங்க செட் பண்ணது... மாத்தனும்"ன்னு சொல்லிட்டு திரியிதுக...
அதே மாதிரி மொக்க இங்கிலீஷ் படத்த எல்லாம் DVD வாங்கி பார்த்திட்டு இருக்கானுங்க...
ROTFL.... :-)
லெட்டர் வந்துச்சான்னு கேட்க மாட்டாக மெயில் வந்துச்சான்னு தான் கேப்பாங்க..
freshஸா காய்கறி கிடைச்சா கூட வாங்க மாட்டாங்க...வண்டிக்காரன் கிட்ட போயி frozen வெஜிடபிள் இருக்கான்னு கேப்பாங்க...
இது அங்க இருக்க சொல்லோ போட்ட போஸ்டு.....
http://dhinamum-ennai-kavani.blogspot.com/2006_06_01_archive.html
மொழி பிரச்சினை என்னன்னா அவங்க பேசறது ஆங்கிலம் இல்லை, அது அமெரிக்கன். :-))
மத்தபடி "ப்ளடி இண்டியா" ன்னு அவங்க திட்டறதை நானும் கேட்டு நொந்திருக்கேன். :-(
இத எல்லாம் விட சூப்பரா ஒருத்தர் சீன போடுவாரு. அங்க இருந்து கிளம்பறதுக்கு முன்னாடியே.. நான் இந்தியா வந்ததும் என் போன் நம்பர் எல்லாருக்கும் தர்றேன். எல்லாரும் வீட்டுக்கு போன் பண்ணி கதாசிரியர் வெட்டி இருக்காரான்னு கேக்கனும்னு சொல்லுவாரு.. (அடடா.. மறந்து போய் பேரையும் டைப் பண்ணிட்டேனே ;))
இந்த மாதிரி ஆளுங்கள என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க :)
லண்டன் சிக்னலில் இன்னமும் குண்டு பல்புதான் இங்க எல்ஈடியா பரவாயில்லையேன்னு சொன்னார் ஒருத்தர் :)
டாலர
டாலழ்னு
சொல்லுவாங்க
:)
ஹஹா, ஏன் கேஆரேஸ்ஸை நேரடியாவே திட்டி இருக்கலாமே, இப்படியா பதிவு போட்டு தாக்கறது? :p
இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தேன் - இதோ போஸ்டர். :))
http://ammanchi.blogspot.com/2008/07/nri.html
//(Not me.. I am a good guy.. u know)//
இப்படி எல்லாம் செஞ்சி தானே அவிங்க அமெரிக்கா போயிட்டு வந்ததை தெரிய படுத்த முடியும். இதுக்கு போயி அவிங்கள கெட்ட பசங்கன்னு சொல்றீங்களே. பாவம் பேசிட்டு போட்டுமே;)
இங்க பாருங்க...
நல்லா தமிழ் பேச தெரியும் இருந்தாலும் ஆங்கிலம் தெரியதவன்கிட்ட போயிதான் இவனுக பீட்டரா வுடுவானுக... அதுலயும்
incase, actually இந்தமாதிரி.....
Few more important ones:
3. From the luggage bag, does not remove the stickers of the Airways by which he traveled back to India , even after 4 months of arrival.
2. Takes the cabin luggage bag to short visits in India and tries to roll the bag on Indian Roads.
The Ultimate one
1. Tries to begin any conversation with "In US ...."
or "When I was in US..."
Endrum Anbudan,
Chinnu...
பதிவில் உள்ள பெரும்பாலான அலும்புகளுக்கும் எனக்கும் சம்பந்தமிருக்கிற மாதிரி தெரிஞ்சாலும் என் நண்பன் மாதிரி கார் ரேடியேட்டருக்கெல்லாம் நான் மினரல் வாட்டர் ஊத்தருதில்லைங்கண்ணா!
//கிடைக்க போறது என்னுமோ ஆப்பு. அதுல என்ன காப்பு?//
superr....
இன்னொன்னு மறந்துட்டீங்களே...taxi க்கு cab ன்னு தான் சொல்லுவாங்க...
//இந்தியா வந்தவுடனே எல்லாத்தையும் டாலர்ல கணக்கு பண்ணுவானுங்க//
இதை நானும்தான் இந்த முறை செஞ்சேன். காரணம், சென்னை/பெங்களூரின் விலைவாசி. இங்கே வாங்க நினைச்சதெல்லாம் அங்கே போயி வாங்கிக்கலாம், அப்போதான்ன் காசு மீதி ஆவும்னு நினைச்சு அட்டவணை போட்டு அங்கே போனா அங்கே இங்கே இருக்கிறதை விட விலை ஜாஸ்தியா இருக்கு. அப்போ ரூ-டா (அ) டா-ரூ போட்டுத்தானே ஆவனும்.
லேன் மாத்துறது: நான் கார்ல ரொம்ப தூரம் அடிக்கடி ஓட்டுற ஆளு. அப்போவெல்லாம், NHல (இங்கே Freeway/highway) அங்கே லேன் மாத்த இண்டிக்கேட்டர் போடுவாங்க. அதுவும் IT பசங்க. அதைப் பார்த்து நானும் கத்துகிட்டேன். அப்புறம் வெளிநாடு வந்தப்புறம் சகஜமாகிருச்சு.
கேஸ் இல்ல மச்சின்னு சில call centre பசங்க சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன். இது அமெரிக்க call centreக்கு மட்டுமே பொருந்தும்..
ரைட்- லெஃப்ட் ட்ரைவிங்க மறந்துட்டீங்களா வெட்டி?
//நான் போன தடவை ஊருக்குப் போனப்போ இந்தியாவ திட்டலைங்கர காரணத்தால சந்திச்ச அவமானங்கள் பலப்பல//
நமக்கு வேற பேர் கிடச்சதுங்க.
1. அமெரிக்காவுலதான் வேலை பார்கிறானா?(5%)
2. very practical(10%)
3.எங்கே போனாலும் இதெல்லாம் தேறாது(85%)
//Divya said...
ஜி யின் இந்த பதிவை ஞாபகப்படுத்தியது உங்கள் பதிவு
http://veyililmazai.blogspot.com/2007/04/blog-post.html//
தங்கச்சி,
அது அட்டகாசமான பதிவு.. அதை படிச்சிட்டு நான் அப்ப ஒரு தொடர் எழுதலாம்னு கூட நினைச்சிட்டு இருந்தேன்...
Missed one more point, will carry Bisleri bottle in hand all the time.
// Ramya Ramani said...
ஹா ஹா...அடிக்கடி, "Customer Service" எல்லாத்துக்குமே சரி இல்லேன்னு சொல்ல வேண்டியது, குழந்தைங்க இங்க படிச்சிருந்தா அவங்க படிப்ப பத்தியும் பேசுவாங்க :)//
அது பெரும்பாலும் NRI பண்றது :-)
// Mukilarasi said...
கடையில ஏதாவது பொருள் வாங்கினா அதை போய் திருப்பித் தர முடியலையே ன்னு ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க...//
அப்படி கொடுக்க முடிஞ்சா நம்ம ஆளுங்க என்ன பண்ணுவாங்கனு நமக்கு தெரியாது ;)
// காய்கறி வெட்டுனும்னா கூட கட்டிங்க ப்ளேட் தேடுவாங்க.... அரிவாள்மனையெல்லாம் ரொம்ப அன்கம்பொர்ட்டமல்லா இருக்கும் பில்டப் வேற....
//
இப்பவெல்லாம் நம்ம ஊர்லயே சாப் போர்ட் தான் யூஸ் பண்றாங்க :-)
// வாஷிங்மெஷின் னோட டிரையரும் வேணுன்னு suggestion வேற சொல்லுவாங்க...//
இந்தியால பசங்க யாரும் பொதுவா துணி துவைக்க மாட்டாங்கன்றதால இதை விட்டுட்டேன் :-)
// //முதல் விஷயம் யாரும் ட்ராபிக் ரூல்ஸயே மதிக்கறதில்லை. லேன் சேஞ்ச் பண்ணும் போது யாரும் இண்டிக்கெட்டரே போட மாட்றானுங்கனு ஃபீல் பண்ணுவானுங்க.//
நாலு பேருக்கு நல்லதுன்னு அத யாரு வேணாம்லும் சொல்லலாம்...
இது நல்ல விசயம் தானே.... இதுல என்ன தப்பு இருக்கு....//
இதுல எதுவும் தப்பில்லை... ஆனா திடீர்னு உலகமே மாறிடும்னு நினைக்கறது தப்பு :-)
//சரவணகுமரன் said...
//வெண்ட்ரு.. இங்க படம் DVDயே 20 ரூபாய்ல வாங்கிடலாம்னு சொன்னா. "Oh Yeah.. I forgot that" அப்படினு பில்ட் அப் கொடுப்பானுங்க
:)
சிலர் இங்கே வந்த பிறகும் அங்கேயிருந்து புதுசா வாங்கிட்டு வந்த லாப்டாப்'ல அமெரிக்கன் டைமா மாத்தாம அப்படியே வச்சிட்டு இருக்காங்க. ஒரு வருஷம் கழிச்சு கேட்டாலும் "ஒ அதுவா, அங்க செட் பண்ணது... மாத்தனும்"ன்னு சொல்லிட்டு திரியிதுக...
//
நான் முதல் ஒரு வருஷம் இந்தியா டைம் தான் வெச்சிருந்தேன் :-)
// அதே மாதிரி மொக்க இங்கிலீஷ் படத்த எல்லாம் DVD வாங்கி பார்த்திட்டு இருக்கானுங்க...//
அவுங்களை எல்லாம் எதுவும் பண்ண முடியாது :-)
//Syam said...
ROTFL.... :-)
லெட்டர் வந்துச்சான்னு கேட்க மாட்டாக மெயில் வந்துச்சான்னு தான் கேப்பாங்க..
freshஸா காய்கறி கிடைச்சா கூட வாங்க மாட்டாங்க...வண்டிக்காரன் கிட்ட போயி frozen வெஜிடபிள் இருக்கான்னு கேப்பாங்க...
//
ஆமாம்... நான் அங்க இருந்த வரைக்கும் எது எனக்கு புரியவேயில்லை :-)
// இது அங்க இருக்க சொல்லோ போட்ட போஸ்டு.....
http://dhinamum-ennai-kavani.blogspot.com/2006_06_01_archive.html//
இதோ வரேன் :-)
முக்கியமான விசயத்த மறந்துட்டீங்களே? கொழந்தய ஸ்ட்ரோலர்லதான் கூட்டிட்டு போவாங்க (அசிங்கம் புடிச்ச மெட்றாஸ் ரோட்ல)
பின்னூட்டத்திலே கவுஜாயினி அடிச்சு ஆடியிருக்காங்க.... :)
//பீச்சுக்குப் போனா அலையில விளையாண்டமா, சுண்டல முழுங்கனோமான்னில்லாம, அமரிக்கால இருக்கும்போது அந்த தீவைப் பார்த்தேன், இந்த வாட்டர் ஸ்போர்ட்ஸ் ட்ரை பண்ணேன்னு கூட வந்தவங்கள அந்தக் கடல்ல உழுந்து தற்கொலை பண்ணிக்கத் தூண்டறதுன்னு அடுக்கிக்கிட்டே போகலாம்.//
ஹாஹாஹா
Man, the food here is spicy!could you cook food less spicy..
After eating nice rasam with a decent poriyal..
mm..
//இராம்/Raam said...
பின்னூட்டத்திலே கவுஜாயினி அடிச்சு ஆடியிருக்காங்க.... :)//
எந்த பதிவுல???
ஓ.. ராப் அக்கா தான் கவுஜாயினியா???
//வெட்டிப்பயல் said...
ஓ.. ராப் அக்கா தான் கவுஜாயினியா???//
அவங்க எழுதின கும்பளே கவுஜ'ய நீ படிக்கலையா???? அந்த வரலாற்று கவுஜ'ய பத்தி கேள்விப்பட்ட கும்ப்ளே பெங்களூரூ MG ரோடு, அனில்கும்ப்ளே சர்க்கிள், முக்குலே இவங்களுக்கு சிலை வைக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்காறாம்... :))
//அவங்க எழுதின கும்பளே கவுஜ'ய நீ படிக்கலையா???? அந்த வரலாற்று கவுஜ'ய பத்தி கேள்விப்பட்ட கும்ப்ளே பெங்களூரூ MG ரோடு, அனில்கும்ப்ளே சர்க்கிள், முக்குலே இவங்களுக்கு சிலை வைக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்காறாம்//
எனக்குக் கூட சேதி வந்துச்சுங்க இராம், ஆனா நமக்கெதுக்கு வெளம்பரம், அப்புறம் பேரரசு தனக்குப் போட்டியா இன்னொருத்தரான்னு மனசொடஞ்சிப் போயிடப் போறாருன்னுதான்
வலைச்சரத்தில் ஒரு பூவாக உங்கள் வலைப்பூ.
வந்து பாருங்கள் .
நன்றி.
http://blogintamil.blogspot.com/2008/07/blog-post_825.html
//(Not me.. I am a good guy.. u know)//
பாருங்கய்யா குசும்ப இவரு நல்லவராம்... மக்களே நான் நம்பீட்டேன் நீங்க??
//"Z" - இதை இசட்னு சொல்ல மாட்டானுங்க. Zeeனு தான் சொல்லுவானுங்க.
Curdனு சொல்ல மாட்டானுங்க. Yogurtனு தான் சொல்லுவானுங்க.
Sauceனு சொல்ல மாட்டானுங்க. Ketch Upனு தான் சொல்லுவானுங்க.
"301" இதை த்ரி சீரோ ஒன்னுனு சொல்ல மாட்டானுங்க. த்ரி "ஓ" ஒன்னுனு தான் சொல்லுவானுங்க.//
இதெல்லாம் அரசியல்ல சகஜமாப்பா இதெல்லாம் போய் வெளிய சொல்லிகிட்டு இப்படி பந்தா பண்ணினாத்தா கொஞ்சம் நல்ல பிகர பிக் பண்ணலாம் என்னுதான்...
//பெங்களூர்ல இருந்த வரைக்கும் லால் பாக் கூட போயிருக்காது. ஆனா அமெரிக்கா போனவுடனே இயற்கையை ரசிச்சி ஃபோட்டோ எடுத்துன்னே சொல்லி நம்மல கொல்லுவானுங்க.//
இதில ஏதோ உள்க்குத்து இருக்கிற மாதிரி இருக்கே
//இதெல்லாம் கண்டிப்பா நான் பண்ணமாட்டேனு இப்பவே வாக்கு கொடுத்துக்கறேன்...//
மறுபடியும் நான் நம்பீட்டேன் மக்களே நீங்க??
நாங்க எல்லாம் எங்க போனாலும் திருந்தமாட்டோம் இங்க வந்து லைசன்ஸ் இல்லாமத்தான் வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கிறோம்... இண்டிகேட்டரும் போட்டு பழக்கம் இல்லிங்கண்ணோவ்
//இதெல்லாம் கண்டிப்பா நான் பண்ணமாட்டேனு இப்பவே வாக்கு கொடுத்துக்கறேன்...//
பார்த்து பாலாஜி அண்ணே...ஓவர் டயலாகு உடம்புக்கு ஆகாதாம்.... ;)))))
ஹாய் பலாஜி,
ஆஹா, அனுபவம் பேசுதோ?
அது சரி இன்னொரு முக்கிய்மான பாயிண்ட்.
ஒரு முக்கால் காலு பேண்டும், சாயம் போன ஒரு தொள தொள டி சர்ட்டும் போட்டுட்டு சுத்துவனுங்கோ அதயும் சேத்துக்கோங்க. ம்ம்ம்
என்ன தான் கலாச்சாரமோ?
//திவா said...
மொழி பிரச்சினை என்னன்னா அவங்க பேசறது ஆங்கிலம் இல்லை, அது அமெரிக்கன். :-))//
நீங்க சொல்றது சரி தான் :-)
// மத்தபடி "ப்ளடி இண்டியா" ன்னு அவங்க திட்டறதை நானும் கேட்டு நொந்திருக்கேன். :-(//
அப்படி எல்லாம் நம்ம முன்னாடி சொன்னா நல்லா வாங்கி கட்டிக்குவானுங்க :-)
// G3 said...
இத எல்லாம் விட சூப்பரா ஒருத்தர் சீன போடுவாரு. அங்க இருந்து கிளம்பறதுக்கு முன்னாடியே.. நான் இந்தியா வந்ததும் என் போன் நம்பர் எல்லாருக்கும் தர்றேன். எல்லாரும் வீட்டுக்கு போன் பண்ணி கதாசிரியர் வெட்டி இருக்காரான்னு கேக்கனும்னு சொல்லுவாரு.. (அடடா.. மறந்து போய் பேரையும் டைப் பண்ணிட்டேனே ;))
இந்த மாதிரி ஆளுங்கள என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க :)//
எழுத்தாளர் இருக்காரானு கேட்டா தப்பில்லை... Writer இருக்காரானு கேட்டா தான் தப்பு ;)
இது எப்படியிருக்கு :-p
//பொன்வண்டு said...
லண்டன் சிக்னலில் இன்னமும் குண்டு பல்புதான் இங்க எல்ஈடியா பரவாயில்லையேன்னு சொன்னார் ஒருத்தர் :)//
இது சூப்பரு :-)
// SurveySan said...
டாலர
டாலழ்னு
சொல்லுவாங்க
:)//
இந்த மேட்டர் புதுசா இருக்கே :-)
// ambi said...
ஹஹா, ஏன் கேஆரேஸ்ஸை நேரடியாவே திட்டி இருக்கலாமே, இப்படியா பதிவு போட்டு தாக்கறது? :p
இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தேன் - இதோ போஸ்டர். :))
http://ammanchi.blogspot.com/2008/07/nri.html//
அவரெல்லாம் NRI :-)
உங்க பதிவு சூப்பர் :-)
//Sathiya said...
//(Not me.. I am a good guy.. u know)//
இப்படி எல்லாம் செஞ்சி தானே அவிங்க அமெரிக்கா போயிட்டு வந்ததை தெரிய படுத்த முடியும். இதுக்கு போயி அவிங்கள கெட்ட பசங்கன்னு சொல்றீங்களே. பாவம் பேசிட்டு போட்டுமே;)//
அப்படிங்கறீங்க???
இருந்தாலும் இதையே டெய்லி சொல்லி டார்ச்சர் பண்ணுவானுங்களே...
//J J Reegan said...
இங்க பாருங்க...
நல்லா தமிழ் பேச தெரியும் இருந்தாலும் ஆங்கிலம் தெரியதவன்கிட்ட போயிதான் இவனுக பீட்டரா வுடுவானுக... அதுலயும்
incase, actually இந்தமாதிரி.....//
இது நம்ம ஊர்லயே எல்லாரும் பண்றது தானே :-)
//ராஜ நடராஜன் said...
பதிவில் உள்ள பெரும்பாலான அலும்புகளுக்கும் எனக்கும் சம்பந்தமிருக்கிற மாதிரி தெரிஞ்சாலும் என் நண்பன் மாதிரி கார் ரேடியேட்டருக்கெல்லாம் நான் மினரல் வாட்டர் ஊத்தருதில்லைங்கண்ணா!//
ஆஹா...
இதெல்லாம் டூஊஊஊஉ மச்
//Divyapriya said...
//கிடைக்க போறது என்னுமோ ஆப்பு. அதுல என்ன காப்பு?//
superr....
இன்னொன்னு மறந்துட்டீங்களே...taxi க்கு cab ன்னு தான் சொல்லுவாங்க...//
ஆமாங்க.. முதல் விஷயமே அது தான்.. அதை மறந்துட்டேன் :-)
// ILA said...
//இந்தியா வந்தவுடனே எல்லாத்தையும் டாலர்ல கணக்கு பண்ணுவானுங்க//
இதை நானும்தான் இந்த முறை செஞ்சேன். காரணம், சென்னை/பெங்களூரின் விலைவாசி. இங்கே வாங்க நினைச்சதெல்லாம் அங்கே போயி வாங்கிக்கலாம், அப்போதான்ன் காசு மீதி ஆவும்னு நினைச்சு அட்டவணை போட்டு அங்கே போனா அங்கே இங்கே இருக்கிறதை விட விலை ஜாஸ்தியா இருக்கு. அப்போ ரூ-டா (அ) டா-ரூ போட்டுத்தானே ஆவனும்.//
இங்க திரும்ப வரதுக்கு ஷாப்பிங்கு போட்டா சரி. அதையே தினமும் ஆட்டோக்கும், ஹோட்டலுக்கும் போட்டா????
//
லேன் மாத்துறது: நான் கார்ல ரொம்ப தூரம் அடிக்கடி ஓட்டுற ஆளு. அப்போவெல்லாம், NHல (இங்கே Freeway/highway) அங்கே லேன் மாத்த இண்டிக்கேட்டர் போடுவாங்க. அதுவும் IT பசங்க. அதைப் பார்த்து நானும் கத்துகிட்டேன். அப்புறம் வெளிநாடு வந்தப்புறம் சகஜமாகிருச்சு.//
ஆமா... நீங்க அப்படியே தினமும் இங்க ஹை வேல ஓட்டிட்டாலும்.. முதல்ல லைசன்ஸ் எடுங்க :-)
// ILA said...
கேஸ் இல்ல மச்சின்னு சில call centre பசங்க சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன். இது அமெரிக்க call centreக்கு மட்டுமே பொருந்தும்..//
ஓ... இது நமக்கு தெரியாதே :-)
//ILA said...
ரைட்- லெஃப்ட் ட்ரைவிங்க மறந்துட்டீங்களா வெட்டி?//
ஆமாங்கண்ணா :-)
// ILA said...
//நான் போன தடவை ஊருக்குப் போனப்போ இந்தியாவ திட்டலைங்கர காரணத்தால சந்திச்ச அவமானங்கள் பலப்பல//
நமக்கு வேற பேர் கிடச்சதுங்க.
1. அமெரிக்காவுலதான் வேலை பார்கிறானா?(5%)
2. very practical(10%)
3.எங்கே போனாலும் இதெல்லாம் தேறாது(85%)//
சூப்பர் :-))))
//இது ஓட்ற மாதிரி இருந்தாலும் இந்தியாவுல இருந்து இங்க புதுசா வரவங்களுக்கு உதவும். //
சூப்பர். சிரிப்போட சிந்தனைகள அள்ளி தெளிக்கறீங்க. உங்களோட பல பதிவுகள் ஆங்கிலத்தில Fwd மெயில்லா உலா வர்றதுக்கும் இதான் காரணம்னு நினைக்கிறேன். :-))
i am new
//இம்சை said...
Missed one more point, will carry Bisleri bottle in hand all the time.//
அண்ணே,
இப்பவெல்லாம் ஊர்ல ஜீஸே பிஸ்லரி தண்ணில தான் போடறாங்களாம்...
//வெண்பூ said...
முக்கியமான விசயத்த மறந்துட்டீங்களே? கொழந்தய ஸ்ட்ரோலர்லதான் கூட்டிட்டு போவாங்க (அசிங்கம் புடிச்ச மெட்றாஸ் ரோட்ல)//
நான் ரொம்ப சின்னப்பையங்கறதால எனக்கு இதை பத்தி நாலேட்ஜ் ரொம்ப கம்மி ;)
// Vetrimagal said...
Man, the food here is spicy!could you cook food less spicy..
After eating nice rasam with a decent poriyal..
mm..//
அவரை என் சமையலை சாப்பிட்டு பார்க்க சொல்லுங்க.. சாப்பிடும் போதே கண்ணுல தண்ணி வரும் :-) (ஆனந்த கண்ணீர்)
//இராம்/Raam said...
//வெட்டிப்பயல் said...
ஓ.. ராப் அக்கா தான் கவுஜாயினியா???//
அவங்க எழுதின கும்பளே கவுஜ'ய நீ படிக்கலையா???? அந்த வரலாற்று கவுஜ'ய பத்தி கேள்விப்பட்ட கும்ப்ளே பெங்களூரூ MG ரோடு, அனில்கும்ப்ளே சர்க்கிள், முக்குலே இவங்களுக்கு சிலை வைக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்காறாம்... :))//
அங்க தான் நான் கமெண்ட் போட்டிருந்தேனே...
நான் கவிதாயினினு நினைச்சிட்டேன் :-)
// இவன் said...
//(Not me.. I am a good guy.. u know)//
பாருங்கய்யா குசும்ப இவரு நல்லவராம்... மக்களே நான் நம்பீட்டேன் நீங்க??//
மக்கள் என் பக்கம் :-))
//இதெல்லாம் அரசியல்ல சகஜமாப்பா இதெல்லாம் போய் வெளிய சொல்லிகிட்டு இப்படி பந்தா பண்ணினாத்தா கொஞ்சம் நல்ல பிகர பிக் பண்ணலாம் என்னுதான்...//
இப்படி பிக் அப் ஆச்சுனா சீக்கிரமே ட்ராப் ஆக வாய்ப்புகள் அதிகம் :-)
அதே ரா நாக்கு காவால்சிந்தினு சொல்றீங்களா?
//இதில ஏதோ உள்க்குத்து இருக்கிற மாதிரி இருக்கே//
உள்குத்தும் இல்லை வெளிகுத்தும் இல்லை :-)
//இவன் said...
நாங்க எல்லாம் எங்க போனாலும் திருந்தமாட்டோம் இங்க வந்து லைசன்ஸ் இல்லாமத்தான் வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கிறோம்... இண்டிகேட்டரும் போட்டு பழக்கம் இல்லிங்கண்ணோவ்//
அதானே.. நம்ம எல்லாம் எப்ப திருந்திருக்கோம் :-)
//தமிழினி..... said...
//இதெல்லாம் கண்டிப்பா நான் பண்ணமாட்டேனு இப்பவே வாக்கு கொடுத்துக்கறேன்...//
பார்த்து பாலாஜி அண்ணே...ஓவர் டயலாகு உடம்புக்கு ஆகாதாம்.... ;)))))//
நமக்கேவா :-)
//Sumathi. said...
ஹாய் பலாஜி,
ஆஹா, அனுபவம் பேசுதோ?
அது சரி இன்னொரு முக்கிய்மான பாயிண்ட்.
ஒரு முக்கால் காலு பேண்டும், சாயம் போன ஒரு தொள தொள டி சர்ட்டும் போட்டுட்டு சுத்துவனுங்கோ அதயும் சேத்துக்கோங்க. ம்ம்ம்
என்ன தான் கலாச்சாரமோ?//
இப்ப பெங்களூர்ல பாதி பேர் இப்படி தான் சுத்தராங்கனு அம்பி சொல்றாரு :-)
// ஸ்ரீதர் நாராயணன் said...
//இது ஓட்ற மாதிரி இருந்தாலும் இந்தியாவுல இருந்து இங்க புதுசா வரவங்களுக்கு உதவும். //
சூப்பர். சிரிப்போட சிந்தனைகள அள்ளி தெளிக்கறீங்க. உங்களோட பல பதிவுகள் ஆங்கிலத்தில Fwd மெயில்லா உலா வர்றதுக்கும் இதான் காரணம்னு நினைக்கிறேன். :-))//
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரண கலப்படுத்தறாங்கப்பா...
// AKARAMUDHALVAN said...
i am new//
Even Me :-)
முன்னாள்''தமிழகத்தின் தலைவன்''
இப்போது "புதுகைச் சாரல் "
நம்பளும் .......வந்துட்டோம்ல
டாய்லெட் - ரெஸ்ட் ரூம் ....இதை விட்டுடீங்களே
மாதவி.ர
முடியலை... என் பிரண்ட் இருத்தன் ஆஸ்திரேலியா ல ஒரு வருஷம் இருந்துட்டு வந்து ஒரு மாசம் வீட்டை விட்டு வெளியவே வரல.. என்னடான்னு கேட்டா, Hot air is spoiling my skin னு ஒரு டிஅலொக் வுட்டான் பாருங்க....
// வாஷிங்மெஷின் னோட டிரையரும் வேணுன்னு suggestion வேற சொல்லுவாங்க...//
இந்தியால பசங்க யாரும் பொதுவா துணி துவைக்க மாட்டாங்கன்றதால இதை விட்டுட்டேன் :-)//
உங்கள மாதிரி பொட்டித் தட்டுற ஆளுங்கள பத்தி எனக்குத் தெரியாது, எங்க கல்லூரி விடுதி யில, மகளிர் விடுதி ல்ல மட்டும் தான் washing machine இருக்கும்.
ஆடவர் விடுதியிலல்லாம், அடிச்சித்தான் துவைக்கனும். ;-))
//"Z" - இதை இசட்னு சொல்ல மாட்டானுங்க. Zeeனு தான் சொல்லுவானுங்க.
//
ada... ithellaam Indialaiye Zee nu thaan solraanga.... CBZ :))
munname vaaschitten... 97 la irukkuthennu comment potting...
100
101 ;))
அண்ணே இப்படி அடிக்கடி உங்க சைடு ஆளுங்களை பத்தியே பதிவு போட்டு ஸ்கோர் அள்ளினாலும்...!
ஆப்பு பலமா இருக்கும் பாத்து சாக்கிரதை...;)
பதிவு கலக்கல்...:))
//புதுகைச் சாரல் said...
முன்னாள்''தமிழகத்தின் தலைவன்''
இப்போது "புதுகைச் சாரல் "
நம்பளும் .......வந்துட்டோம்ல//
வாங்க வாங்கனு உங்களை அழைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்...
யாருப்பா அங்க.. ஒரு சோடா எடுங்கப்பா :-)
// Anonymous said...
டாய்லெட் - ரெஸ்ட் ரூம் ....இதை விட்டுடீங்களே
மாதவி.ர//
ஆஹா...
இதை எழுதாம விட்டுட்டேனே!
இதை வெச்சி நக்கல் எல்லாம் பண்ணனும்னு நினைச்சிட்டு இருந்தேன் :-)
ரொம்ப நன்றிங்க
//Raghav said...
முடியலை... என் பிரண்ட் இருத்தன் ஆஸ்திரேலியா ல ஒரு வருஷம் இருந்துட்டு வந்து ஒரு மாசம் வீட்டை விட்டு வெளியவே வரல.. என்னடான்னு கேட்டா, Hot air is spoiling my skin னு ஒரு டிஅலொக் வுட்டான் பாருங்க....//
ஏன்டா நீ என்ன உலக அழகி போட்டிக்கா கலந்துக்க போறனு கேக்க வேண்டியது தானே ;)
//Mukilarasi said...
// வாஷிங்மெஷின் னோட டிரையரும் வேணுன்னு suggestion வேற சொல்லுவாங்க...//
இந்தியால பசங்க யாரும் பொதுவா துணி துவைக்க மாட்டாங்கன்றதால இதை விட்டுட்டேன் :-)//
உங்கள மாதிரி பொட்டித் தட்டுற ஆளுங்கள பத்தி எனக்குத் தெரியாது, எங்க கல்லூரி விடுதி யில, மகளிர் விடுதி ல்ல மட்டும் தான் washing machine இருக்கும்.
ஆடவர் விடுதியிலல்லாம், அடிச்சித்தான் துவைக்கனும். ;-))//
யார் யாரை அடிச்சி துவைப்பாங்க ;)
பொண்ணுங்க பசங்க ஹாஸ்டலுக்கு போகலாமா? ;)
// ஜி said...
//"Z" - இதை இசட்னு சொல்ல மாட்டானுங்க. Zeeனு தான் சொல்லுவானுங்க.
//
ada... ithellaam Indialaiye Zee nu thaan solraanga.... CBZ :))//
ஆஹா... அசத்தறயே மக்கா...
//ஜி said...
munname vaaschitten... 97 la irukkuthennu comment potting...//
இதுக்கு நான் என்ன கைமாறு செய்ய போறேனோ :-)
//ஜி said...
100//
ரொம்ப நன்றி மக்கா...
just now i saw ur post. it was so nice yeah. when i was in kulalambur and cameron highland you know...there wer lot of similar incidents. i also thought to paste a post in my blog. what u thought. tell me.
Post a Comment