என்னங்க இப்படி அநியாயமா நம்மள நடுசீட்ல உக்கார வெச்சிட்டாங்க. இன்னும் அஞ்சு மணி நேரம் இந்த சீட்ல உக்கார்ந்துட்டு போகனும். அதுவும் அந்த பக்கம் கொஞ்சம் நிறைய இடம் விட்டு. ஏன்னா இந்த காலத்துல பசங்களை எவனும் நம்ப மாட்றானுங்க. அதனால தான். ரொம்ப புழுக்கமா இருக்குற மாதிரி இருக்குது இல்லைங்க. இருங்க வரேன்
"அண்ணே! அந்த ஜன்னலை கொஞ்சம் திறங்களேன். வண்டி புறப்பட்டதுக்கப்பறம் மூடிக்கலாம்"
"நானும் தொறக்க முயற்சி செஞ்சேன்பா. முடியல. நீ வேணா முயற்சி செஞ்சி பாரேன்"
"கொஞ்சம் நகருங்க"
...
"அதான் சொன்னேன் இல்லை தம்பி. என்னால தொறக்க முடியலைனு. பாத்தீங்களா. உங்களாலையும் முடியல"
ச் சே!!! இன்னைக்கு நமக்கு நேரமே சரியில்லைங்க. அந்த ஜன்னலை தொறக்க முடியலைங்கறது கூட பிரச்சனையில்லைங்க. என்னால தொறக்க முடியலைனு அவர் சொன்னவுடனே அந்த பொண்ணு "களு"க்குனு சிர்ச்சதுதான் அசிங்கமா போயிடுச்சி. இதுக்கு கூடவாங்க சிரிப்பாங்க.
"தம்பி திருண்ணாமலையேவா?"
"இல்லைங்க. பக்கத்துல திருக்கோயிலூருங்க. திருண்ணாமலை போய் மாறி போகனும்"
"இன்னைக்கு பௌர்ணமியாச்சே! பஸ்ல இடம் கிடைக்குமா?"
"மணி இப்ப 8 தானே ஆகுது. பன்னெண்டு, ஒரு மணிக்கெல்லாம் பஸ் திருண்ணாமலைக்கு போயிடும். நாலு அஞ்சு மணிக்கு தான் எல்லாம் கிரிவலம் சுத்தி முடிப்பாங்க. அதனால ஸ்பெஷல் பஸ்ல அட்டகாசமா உக்கார்ந்துட்டே போயிடலாங்க"
"அதுவும் சரிதான். தம்பி பெங்களூர்ல என்ன பண்றீங்க?"
ஆஹா... ஆரம்பிச்சிட்டாங்கய்யா. என்ன சொல்லலாம்? இதுக்கு முன்னாடி ஒருத்தர்கிட்ட இப்படி தாங்க கூகுல்ல வேலை செய்யறேனு சொன்னேன். அதுக்கு அவர் அங்க என்ன தம்பி பண்றீங்கனு கேட்டாரு. நானும் என்ன சொல்றதுனு தெரியாம, கம்யூட்டர்ல ஏதாவது தேடறவங்களுக்கு கண்டு பிடிச்சி கொடுக்கறதுனு சொன்னேன். உடனே அவர் பக்கத்துல உக்கார்ந்திருந்த அந்த பாட்டி, "தம்பி! என் சுருக்கு பைய ஒரு வாரமா காணோம். கொஞ்சம் கண்டு பிடிச்சி கொடு"னு கேட்டுட்டாங்க. இந்த தடவை மறுபடியும் நல்லவனா மாறிட வேண்டியது தான்.
"நான் இங்க வேலை தேடிட்டு இருக்கேங்க"
"என்ன படிச்சிருக்கீங்க தம்பி"
"நான் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் படிச்சிருக்கேங்க. ஆறு மாசமா வேலை தேடிட்டு இருக்கேன்"
"இங்க தான் அந்த படிப்புக்கு நிறைய வேலை இருக்குனு சொல்றாங்களே?"
"அதெல்லாம் சும்மாங்க. அதுக்கும் நிறைய இருக்கு. முக்கியமா நல்ல காலேஜ்ல படிச்சா கேம்பஸ்லயே வேலைக்கு சேர்ந்திருக்கலாம். நான் சுமாராதான் படிச்சேன். அதான் கொஞ்சம் லேட்டாகுது"
"கவலைப்படாத தம்பி. பௌர்ணமி அன்னைக்கு மலைல கால் வெக்கற இல்லை. சீக்கிரமே வேலை கிடைக்கும்"
"சரிங்க. ரொம்ப நன்றி"
என்னங்க. இவர் எதுவும் அதிகமா பேச மாட்றாரு. இதுக்கு முன்னாடி வந்தவங்க நிறைய பேர் அவுங்க சொந்தக்கார பசங்க இங்க வேலை செய்யறதை பத்தி எல்லாம் கதை அளந்து விட்டுட்டு இருப்பாங்க. கம்பெனி பேரு, சம்பளம் இதை எல்லாம் சரியா தெரிஞ்சி வெச்சிருப்பாங்க. ஆனா யாருக்கும் அதுல டேக்ஸ் எவ்வளவு கட்டறாங்கனு தெரியாது.
"எக்ஸ்க்யூஸ் மீ! நீங்க ஃப்ரெஷ்ஷரா வேலை தேடறீங்களா?"
என்னங்க அந்த பொண்ணு பேச ஆரம்பிச்சிடுச்சி... சரி விடுங்க கடலைய ஆரம்பிப்போம்...
மனதில் தோன்றிய குறள்
கடலைபோட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
மொக்கைபோட்டு பின் செல்பவர்
(ஆட்டம் தொடரும்...)
25 comments:
//தம்பி! என் சுருக்கு பைய ஒரு வாரமா காணோம். கொஞ்சம் கண்டு பிடிச்சி கொடு..//
ஜூப்பரு. கண்டுபிடிச்சீங்களா இல்லையா சுருக்குப் பைய?????????
:-))))))))))))
//மனதில் தோன்றிய குறள்
கடலைபோட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
மொக்கைபோட்டு பின் செல்பவர்//
இது குறள் இல்லை இல்லை இல்லை! வெட்டியின் குரல் மட்டுமே!!
/
"எக்ஸ்க்யூஸ் மீ! நீங்க ஃப்ரெஷ்ஷரா வேலை தேடறீங்களா?"
/
அட்ரா சக்கை
:))
/
என்னங்க அந்த பொண்ணு பேச ஆரம்பிச்சிடுச்சி... சரி விடுங்க கடலைய ஆரம்பிப்போம்...
/
அதானே அதவிட என்ன முக்கியமான வேல!?!?!
:)))
தீயாமல் வருக்கவும்!!
/
மனதில் தோன்றிய குறள்
கடலைபோட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
மொக்கைபோட்டு பின் செல்பவர்
/
குறள் 3331
/
ப்ரசன்னா said...
//தம்பி! என் சுருக்கு பைய ஒரு வாரமா காணோம். கொஞ்சம் கண்டு பிடிச்சி கொடு..//
ஜூப்பரு. கண்டுபிடிச்சீங்களா இல்லையா சுருக்குப் பைய?????????
:-))))))))))))
/
ரிப்பீட்டு
மூனாவது பாகத்துக்கு வெயிட்டிங்!!
:)
//ப்ரசன்னா said...
//தம்பி! என் சுருக்கு பைய ஒரு வாரமா காணோம். கொஞ்சம் கண்டு பிடிச்சி கொடு..//
ஜூப்பரு. கண்டுபிடிச்சீங்களா இல்லையா சுருக்குப் பைய?????????
:-))))))))))))//
அப்படி அவர் அதை கண்டுபிடிச்சிருந்தா அடுத்த லிஸ்ட்ல என்னோடது நிறைய இருக்கு.. சுருக்கு பையை சொல்லலை.. தொலைந்த பொருட்கள் நிறைய இருக்குனு சொன்னேன் :-)
//இலவசக்கொத்தனார் said...
//மனதில் தோன்றிய குறள்
கடலைபோட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
மொக்கைபோட்டு பின் செல்பவர்//
இது குறள் இல்லை இல்லை இல்லை! வெட்டியின் குரல் மட்டுமே!!//
இதை தான் முன்னாடியும் சொன்னீங்க. இப்பவும் சொல்றீங்க. சரியா மாத்தி கொடுங்கனு அப்ப கேட்டேன். எஸ்கேப் ஆகிட்டீங்க. இப்பயாவது தளை தட்டாத மாதிரி மாத்தி கொடுங்க :-)
//மங்களூர் சிவா said...
/
"எக்ஸ்க்யூஸ் மீ! நீங்க ஃப்ரெஷ்ஷரா வேலை தேடறீங்களா?"
/
அட்ரா சக்கை
:))//
அட்ரா சக்கை.
அட்ரா சக்கை! அட்ரா சக்கை!! அட்ரா சக்கை!!! :-)
//மங்களூர் சிவா said...
/
என்னங்க அந்த பொண்ணு பேச ஆரம்பிச்சிடுச்சி... சரி விடுங்க கடலைய ஆரம்பிப்போம்...
/
அதானே அதவிட என்ன முக்கியமான வேல!?!?!
:)))
//
அதானே :-)
// தீயாமல் வருக்கவும்!!//
முடிஞ்ச வரைக்கு வறுக்க வேண்டியது தான் ;)
என்ன சிவா? சரி தானே ;)
//மங்களூர் சிவா said...
/
மனதில் தோன்றிய குறள்
கடலைபோட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
மொக்கைபோட்டு பின் செல்பவர்
/
குறள் 3331//
கொத்ஸ்கிட்ட மாட்டிக்கிட்டியே சிவா :-)
//மங்களூர் சிவா said...
மூனாவது பாகத்துக்கு வெயிட்டிங்!!
:)//
நாளை வரும் :-)
ஆஹா அடுத்த பார்ட் சூப்பர்...
தொடர்ச்சிக்காக காத்திருக்கேங்க :):):)
//"இன்னைக்கு பௌர்ணமியாச்சே! பஸ்ல இடம் கிடைக்குமா?"
//
பஸ்ல இடம் கிடைக்குறதாங்க முக்கியம்... பக்கத்து சீட்டு பொண்ணு மனசில இடம் கிடைக்குதான்னு பாக்குறது தானே important..
//கடலைபோட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
மொக்கைபோட்டு பின் செல்பவர்//
காத்து வராம வெக்கை யில இருந்தாலும் மொக்கை போடுறத வுடாத எங்கள் அண்ணன் வாழ்க வாழ்க...
இதுக்கு முன்னாடியே படிச்சா மாதிரி இருக்கே...அந்த தொடர ஸ்டாப் பண்ணிட்டு வேற பேர்ல எழுதறீங்களா..
//கடலைபோட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
மொக்கைபோட்டு பின் செல்பவர்//
super!!!
///என்னங்க அந்த பொண்ணு பேச ஆரம்பிச்சிடுச்சி... சரி விடுங்க கடலைய ஆரம்பிப்போம்...
//
பாவம்...புலி விரிச்ச வலைல ஆடு மாட்டிகிச்சு போல... :))
// Ramya Ramani said...
ஆஹா அடுத்த பார்ட் சூப்பர்...//
மிக்க நன்றி ரம்யா
//rapp said...
தொடர்ச்சிக்காக காத்திருக்கேங்க :):):)//
சீக்கிரமே வரும் :-)
நாளைக்கு 4 முடிச்சிட்டா 5வது பாகம் சனிக்கிழமை போடலாமா இல்லை இந்திய நேரம் திங்கள் காலை 9 மணிக்கு போடலாமானு சிந்திச்சிட்டு இருக்கேன் :-)
// Raghav said...
//"இன்னைக்கு பௌர்ணமியாச்சே! பஸ்ல இடம் கிடைக்குமா?"
//
பஸ்ல இடம் கிடைக்குறதாங்க முக்கியம்... பக்கத்து சீட்டு பொண்ணு மனசில இடம் கிடைக்குதான்னு பாக்குறது தானே important..//
அதானே. விவரமா இருக்கீங்க :-)
// //கடலைபோட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
மொக்கைபோட்டு பின் செல்பவர்//
காத்து வராம வெக்கை யில இருந்தாலும் மொக்கை போடுறத வுடாத எங்கள் அண்ணன் வாழ்க வாழ்க...//
அண்ணனுக்கு இதெல்லாம் ஜகஜம் :-)
/ Syam said...
இதுக்கு முன்னாடியே படிச்சா மாதிரி இருக்கே...அந்த தொடர ஸ்டாப் பண்ணிட்டு வேற பேர்ல எழுதறீங்களா..//
நாட்ஸ்,
யூ ஆர் ரைட் :-)
இதுக்கு முன்னாடி இது பனி விழும் மலர் வனம்னு வந்துச்சு :-)
// Divyapriya said...
//கடலைபோட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
மொக்கைபோட்டு பின் செல்பவர்//
super!!!//
மிக்க நன்றி திவ்யப்ரியா
//தமிழினி..... said...
///என்னங்க அந்த பொண்ணு பேச ஆரம்பிச்சிடுச்சி... சரி விடுங்க கடலைய ஆரம்பிப்போம்...
//
பாவம்...புலி விரிச்ச வலைல ஆடு மாட்டிகிச்சு போல... :))
//
ஆஹா ஆஹா... எப்படி இப்படியெல்லாம் சிந்திக்கறீங்க? :-)
Post a Comment