தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, March 10, 2008

மீண்(டும்)ட வெட்டி... தமிழ் கணிமை... தம்பி, CVRக்காக ஒரு பாட்டு

எல்லாருக்கும் வணக்கம்... பதிவு போட்டு ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு. நடுவுல கொஞ்சம் உடம்பு சரியில்லாம போயிடுச்சு. இந்த ஊர்ல வேற டாக்டர்கிட்ட போகனும்னா முன்னாடியே அப்பாய்ன்மெண்ட் வாங்கனுமாம். நான் இங்க வந்து ரெண்டு வருஷமாகியும் எந்த டாக்டர்கிட்டயும் போனதில்லை.

முதல் முறை போகனும்னா ஒரு வாரம் கழிச்சி தான் அப்பாய்ண்மெண்ட் தராங்க. டேய் அதுக்குள்ள ஏதாவது ஆகிடுச்சுனானு கேட்டா, எமர்ஜன்சினு சொல்லி ஆஸ்பித்திரிக்கு போங்கனு சொல்றாங்க. அப்படி போனா அதுக்கே 50$ஆம். அப்பறம் ட்ரீட்மெண்டுக்கு தனியாம். ஒரு வழியா இங்க தேடி கண்டுபிடிச்சி ஒரு டாக்டரை பார்த்தேன். அப்பறம் மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்டு இப்ப ஓரளவுக்கு சரியாகியாச்சு.

KRS நிறைய தடவை சொல்லியிருக்காரு. சும்மாவாச்சம் ஒரு தடவை போய் ஏதாவது ஒரு டாக்டரை (Primary care Physician) பார்த்து மெடிக்கல் செக் அப் பண்ணி வெச்சிக்கோ. ஏதாவது எமர்ஜன்சினா உடனே அப்பாய்ன்மெண்ட் வாங்கிக்கலாம்னு. ஆனா அப்ப எனக்கு எல்லாம் எதுவும் ஆகாது. நாங்க எல்லாம் சிங்கம் மாதிரினு பில்ட் அப் கொடுத்து வெச்சிருந்தேன். கடைசியா இப்ப ஒரு இருபது நாள் பாடு படுத்திடுச்சு. இப்ப எல்லாருக்கும் நான் இந்த அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.

அமெரிக்கா வந்து கொஞ்ச மாசம் இருக்க போறீங்கனா, சும்மா ஒரு தடவை சாதரண செக் அப் போயிட்டு வந்துடுங்க. பின்னாடி ஏதாவதுனா ரொம்ப பயனா இருக்கும்.

...........................................................................

இப்பவெல்லாம் ஏதாவது படிக்கனும்னா தமிழ் கணிமை தான் பயன்படுத்தறேன். ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. முன்னெல்லாம் யாராவது தமிழ் வலைப்பதிவு படிக்கனும்னா தமிழ்மணம் தான் சொல்லுவேன். இப்பவெல்லாம் தமிழ் கணிமை தான் சொல்றேன். திரட்டிகளின் திரட்டி போல. நல்லா யோசிச்சி, அருமையா பண்ணியிருக்காங்க.

தமிழ் மணத்துல சூடான இடுகை வேலை செய்யல போல. ரொம்ப நல்ல விஷயம்.

.........................................................................

தம்பி, CVR

உங்களுக்காக இந்த பாடல்