தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, February 07, 2008

பனி விழும் மலர் வனம் - 3

"எக்ஸ்க்யூஸ் மீ! நீங்க ஃப்ரெஷ்ஷரா வேலை தேடறீங்களா?"

"ஆமாங்க... நீங்க என்ன பண்றீங்க?"

"எனக்கு இங்க நாலு கம்பெனில வேலை கிடைச்சிருக்கு. எதுல சேரலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்" சொல்லிவிட்டு லேசாக சிரித்தாள்.

அந்த பொண்ணு சிரிக்கும் போது அழகா கன்னத்துல குழி விழறது அந்த வெளிச்சத்துலயும் நல்லா தெரியுது. இல்லைங்க? இப்ப பார்த்தா கொஞ்சம் கொஞ்சம் நம்ம திருடா திருடி சாயா சிங் மாதிரி தெரியறா. உங்களுக்கு கோபிகா மாதிரி தெரிஞ்சா நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை.

"கலக்கறீங்க. எப்படிங்க ஒரே சமயத்துல நாலு கம்பெனில வேலை? ஒரு கம்பெனில வேலை கிடைச்சா சேராம திரும்பவும் வேலை தேடுவீங்களா?"

"இல்லைங்க. போன மாசம் இன்ஃபோஸிஸ் அட்டெண்ட் பண்ணேன். இந்த மாசம் அக்சண்சர், ஐபிஎம், சத்யம் மூணும் அட்டெண்ட் பண்ணேன். எல்லாத்துக்கும் இந்த வாரம் தான் ரிஸல்ட் வந்துச்சு. ஃபிரெண்ட்ஸ்க்கு எல்லாம் ட்ரீட் கொடுத்துட்டு இன்னைக்கு தான் ஊருக்கு கிளம்பறேன். அங்க போய் எங்க வீட்ல அப்பா, அண்ணாகிட்ட எல்லாம் பேசி ஏதாவது ஒரு முடிவு செய்யனும்"

"நீங்க என்ன முடிவு செஞ்சிருக்கீங்க?"

"எனக்கும் எதை டிசைட் பண்றதுனு இன்னும் தெரியல. அனேகமா அக்சண்சர் தான் சேருவேனு நினைக்கிறேன்"

"ஆல் தி பெஸ்ட்ங்க"

"தேங்க்ஸ்ங்க. நீங்க வந்து ஆறு மாசமாச்சுனு சொன்னீங்க இன்னும் வேலை கிடைக்கலயா?"

"என்னங்க பண்ண. லக்கே இல்லைங்க"

"லக் எல்லாம் சொல்லாதீங்க. எல்லாத்துக்கும் முயற்சி தாங்க முக்கியம். இதே என்னை எடுத்துக்கோங்க. இன்ஃபோஸிஸ் மட்டும் அட்டெண்ட் பண்ணிட்டு நிறுத்தியிருக்கலாம். விடா முயற்சியால தான் இப்ப கைல நாலு ஆஃபர் வெச்சிருக்கேன்"

"என்னங்க பண்ண. எவனும் கால் லெட்டரே அனுப்ப மாட்றானுங்க. நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சி தான் பாக்கறேன்"

"நீங்க எப்படி எல்லா கம்பெனிக்கும் அப்ளை பண்றீங்க?"

"நான் ஒவ்வொரு கம்பெனிக்கா ரெஸ்யும் எடுத்துட்டு போய் அந்த கம்பெனி வாட்ச் மேன்கிட்ட கொடுப்பேங்க. அவர் வாங்கி வெச்சிக்குவார்"

"அப்பறமா அதை எல்லாம் எடைக்கு போட்டு சுண்டல் வாங்கி சாப்பிட்டுடுவாரு. என்னங்க இது தமிழ் சினிமா ஹீரோ மாதிரி பண்றீங்க? யாராவது தெரிஞ்சவங்க இருந்தா ரெஃபர் பண்ண சொல்றதை விட்டுட்டு இப்படி பண்ணிட்டு இருக்கீங்க?"

"எனக்கு தெரிஞ்சவங்க யாரும் இங்க இல்லைங்க. நாங்க தான் எங்க காலேஜ்ல முதல் செட்டு. அதனால சீனியர்ஸும் இல்லை. நாங்க நாலு ஃபிரெண்ட்ஸ் வீடு எடுத்து தங்கி வேலை தேடிட்டு இருக்கோம். ஒருத்தவனுக்கும் இன்னும் கால் லெட்டரே வரல"

"இப்படி வேலை தேடினா கால் லெட்டர் வராது. கால் வலி தாங்க வரும். ஆன் லைன்ல ஒழுங்கா அப்ளை பண்ணுங்க. அப்படியே உங்க மெயில் ஐடியும், ஃபோன் நம்பரும் எனக்கு கொடுங்க. எனக்கு ஏதாவது தெரிஞ்சா உங்களுக்கு அனுப்பறேன்"

"சரிங்க"

"உங்களுக்கு என்ன லாங்வேஜ் தெரியும்?"

"தமிழ், இங்கிலிஷ்"

"ஏன் கன்னடம், மலையாளம் எல்லாம் கத்துக்க வேண்டியது தானே? இந்த ஜன்மத்துல உங்களுக்கு வேலையே கிடைக்காதுனு நினைக்கறேங்க"

"ஏங்க இப்படி சொல்றீங்க?"

"நான் என்ன ப்ரோகராமிங் லாங்வேஜ் தெரியும்னு கேட்டேன். நீங்க என்னனா கற்றது தமிழ், இங்கிலிஷ்னு கதையை விட்டுட்டு இருக்கீங்க?"

"என்னங்க பண்ண உங்களை மாதிரி நிறைய இண்டர்வியு அட்டெண்ட் பண்ணிருந்தா தெரியும். எனக்கு C கொஞ்சம் கொஞ்சம் தெரியுங்க"

" 'C' யே கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியுமா? இப்பல்லாம் பொறக்கற குழந்தையே லினக்ஸ், ஜாவானு எல்லாம் தெரிஞ்சிட்டு தான் பொறக்குதுங்க. நீங்க என்னனா 'C' யே கொஞ்சம் தான் தெரியும்னு சொல்றீங்க"

"என்னங்க பண்றது. சட்டில இருக்கறது தான் அகப்பைல வரும்"

இவ்வளவு கேள்விக்கு பேசாம கூகுல வேலை செய்யறனே சொல்லியிருக்கலாம் போல இருக்குங்க. நல்லா கடலை வறுத்திருக்கலாம். இப்ப மொக்கையா போச்சு.

"ஹிம்ம்ம்... ஊருல இருந்து வந்தவுடனே எனக்கு மறக்காம ஃபோன் பண்ணுங்க. என் ஃபிரண்டு ஒருத்தன் 'C'ல பிஸ்து. அவன்கிட்ட உங்களுக்கு இண்ட்ரோ பண்ணிவிடறேன்"

"சரிங்க. கண்டிப்பா. ஆமா நீங்க திருண்ணாமலையேவா?" பேச்சை திசை திருப்பியே ஆகனுங்க.

"இல்லைங்க. நான் கள்ளக்குறிச்சி. திருண்ணாமலைல இருந்து பஸ் மாறி போகனும்"

"ஆமாம் இன்னைக்கு பௌர்ணமியாச்சே. நீங்க ஏன் சேலம் போய் போகாம இந்த ரூட்ல வறீங்க?"

"இன்னைக்கு பௌர்ணமியா? எனக்கு அது தெரியாதே. இந்த பக்கம் கொஞ்சம் சீக்கிரமா போகலாம்னு வந்துட்டேன். அப்படி போனா ரெண்டு மணி நேரம் பக்கம் அதிகமாகுமே"

"சரி விடுங்க. ஸ்பெஷல் பஸ் ஏதாவது இருக்கும் மாறி போயிக்கலாம்"

"சரிங்க. நீங்க எப்ப மறுபடியும் பெங்களூர் வறீங்க?"

"நான் திங்ககிழமை இங்க இருப்பேன். நீங்க?"

"நான் ஒரு வாரம் கழிச்சி தான். ஜாயினிங் டேட் இன்னும் ரெண்டு வாரம் கழிச்சி தான் இருக்கு. சீக்கிரம் வந்து மட்டும் என்ன செய்ய போறோம் சொல்லுங்க"

"அதுவும் சரிதான்"

"ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?"

"சொல்லுங்க"

"உங்க பேரு என்னானு சொல்லவேயில்லையே?"

"என் பேரு நித்யா. உங்க பேரு?"

"ரவி ஷங்கர்"

ஒரு வழியாக திருவண்ணாமலைக்கு வந்துட்டோங்க. அடப்பாவிகளா பஸ்ஸ எதுக்கு இங்க நிறுத்தனானுங்க? அநியாயமா ரெண்டு கிலோ மீட்டருக்கு முன்னாடியே நிறுத்திடானுங்களே. ஏன்டா திருவண்ணாமலைக்கு பௌர்ணமி அன்னைக்கு வரவனுங்க எல்லாருமே கிரிவலத்துகா வரானுங்க. உங்க பக்திக்கு ஒரு அளவே இல்லையா? ஒரே சாமியார் கூட்டமா தெரியுதே.

"என்னங்க இது பஸ் ஸ்டாண்ட் மாதிரி தெரியலையே?" தூக்க கலக்கத்திலிருந்தாள் நித்யா.

"ஆமாங்க. பஸ்ஸை மலை பக்கத்துல நிறுத்திட்டானுங்க. பாருங்க திருவிழா மாதிரி இருக்கு"

"ஆமாம். இப்ப என்ன பண்றது?"

"அப்படியே நடந்து போனா பஸ் ஸ்டேண்ட் வந்துடும் வாங்க"

ரெண்டு பேரும் பேசிக்கிட்டே வந்ததுல ரெண்டு கிலோ மீட்டர் நடந்ததே தெரியலைங்க. பேசாம பத்து கிலோ மீட்டருக்கு முன்னாடியே வண்டிய நிறுத்தியிருக்கலாம் போல. அண்ணாமலையார் மகிமையே தனிதான் போல.

கள்ளக்குறிச்சில இருந்து வந்த ஸ்பெஷல் பஸ்ஸெல்லாம் எடுக்காம நிறுத்தி வெச்சிருக்காங்க. எல்லாம் கூட்டமா இருக்காங்க ஆனா எவனும் அங்க இருக்குற ஆபிசர்ஸை போய் கேக்க மாட்றாங்கங்க. இருங்க நானே போய் கேக்கறேன். என்னங்க எல்லா பஸ்ஸும் நாலு மணிக்கு மேல தான் எடுப்பனு சொல்றானுங்க.
பாவம் இந்த பொண்ணை விட்டுட்டு போகவும் மனசு வரலை. இப்ப நான் என்ன பண்ண? மூணு மணி நேரம் பஸ் ஸ்டாண்ட்ல உக்காரதா?

நான் கேட்க ஆரம்பிச்சதும் எல்லா மக்களும் இந்த ஆபிஸ் பக்கம் வர ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாரும் கேட்டா எப்படியும் ஒரு பஸ்ஸாவது விடுவான். எப்படியும் ஏத்தி விட்டுட வேண்டியது தான்.

என்னடா கூட்டத்திலிருந்து வெளிய வந்துட்டனு பாக்கறீங்களா? அப்ப தானே பஸ்ல இடம் பிடிக்க முடியும். எப்பவும் கூட்டத்தோட கோவிந்தா போடவே கூடாதுங்க. ஆஹா அங்க ஒரு பஸ் வர மாதிரி தெரியுதே. ஆமா கள்ளக்குறிச்சி பஸ் தான். திருப்பதில இருந்து வந்துட்டு இருக்கு. எல்லாரும் உள்ள சண்டை போட்டுட்டு இருக்கறாங்க. எப்படியோ நமக்கு உதவறதுக்கு அந்த திருப்பதி பாலாஜியே பஸ் அனுப்பியிருக்கான்.

ஒரு வழியா பஸ்ல நித்யாக்கு சீட்டு போட்டு உக்கார வெச்சாச்சுங்க. வெள்ளிக்கிழமைங்கறதால ரிட்டர்ன் ட்ரிப்ல கூட்டம் இல்லை. ஜன்னல் சீட்லயே உக்கார வெச்சாச்சு. இருங்க அவ ஏதோ எங்கிட்ட பேசனும்னு முயற்சி பண்ற மாதிரி இருக்கு. ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க.

"ஏ ரவி... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். கண்டிப்பா பெங்களூர் வந்தவுடனே உனக்கு கால் பண்றேன். அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். எனக்கும் வேலையில்லை. நானும் உன்னை மாதிரி தான் வேலை தேடிட்டு இருக்கேன். பெங்களூர் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து வேலை தேடலாம்..."

(தொடரும்...)

29 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

.......//எனக்கும் வெலையில்லே//.

'நச்'னு ஒரு திருப்பம்!

அதுசரி, செந்தழல் ரவி ஊருதானெ
திருக்கோயிலுர்
ஹீரொ பெரும் ரவி...

பாலாஜி மனோஹர் கள்ளக்குறிச்சி;
நித்யா வும் கள்ளக்குறிச்சி........

என்னமோ புகை கிளம்புதே......

திவாண்ணா said...

ஆஹா! போட்டுட்டருய்யா கடேசில ஒரு திருப்பம். ஆமா கொஞ்சம் குழப்புதே. அந்த பொண்ணு சொன்னதெல்லாம் பொய்யினா ஏன் திருப்பி பங்களூர் வரணும்? வேலை தேடவா?

Anonymous said...

"உங்களுக்கு என்ன லாங்வேஜ் தெரியும்?"

"தமிழ், இங்கிலிஷ்"

"ஏன் கன்னடம், மலையாளம் எல்லாம் கத்துக்க வேண்டியது தானே? இந்த ஜன்மத்துல உங்களுக்கு வேலையே கிடைக்காதுனு நினைக்கறேங்க"

Really superb!!! nalla ezuthereenga.. Keep it up!!!

Anonymous said...

//"உங்களுக்கு என்ன லாங்வேஜ் தெரியும்?"

//"தமிழ், இங்கிலிஷ்"

//"ஏன் கன்னடம், மலையாளம் எல்லாம் கத்துக்க வேண்டியது தானே? இந்த ஜன்மத்துல உங்களுக்கு வேலையே கிடைக்காதுனு நினைக்கறேங்க"

Really superb!!! Keep up your good writing.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நான் எடுத்ததும் 3வது பாகம் படிச்சேன்.கடலை(கதை) பிரமாதம். பாகம் 1,2 படிச்சுட்டு, இதப் படிச்சா டிவி சீரியல் மாதிரி இருக்கு.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நான் எடுத்ததும் 3வது பாகம் படிச்சேன்.கடலை(கதை) பிரமாதம். பாகம் 1,2 படிச்சுட்டு, இதப் படிச்சா டிவி சீரியல் மாதிரி இருக்கு.

மெளலி (மதுரையம்பதி) said...

திருப்பமோ, திருப்பம்... :)

குமரன் (Kumaran) said...

முதல்ல இருக்குற ஒரே ஒரு எழுத்துப்பிழையைச் சொல்லிடறேன். :-) கண்ணத்துல = கன்னத்துல

கடலை நல்லா தான் இருந்தது. ஆனா நீங்க சொன்ன மாதிரி கொஞ்சம் மொக்கையாவும் போயிருச்சு. பேசாம கூகுள்ன்னு சொல்லி ஒரு அளப்பரை விட்டிருக்கலாம். பொழைக்கத் தெரியாத 'பயலா' இருக்கீங்களே ரவி 'ஷ'ங்கர். கந்தனுக்கு இப்படி சான்ஸ் கிடைச்சப்ப எல்லாம் அவன் விட்ட அளப்பரைக்கு அளவே இல்லை. இப்பவும் வீட்டுல அதெல்லாம் சொல்லி சிரிச்சுக்கிட்டு இருக்கான்.

போற போக்குல குத்து எந்த எந்த பக்கமோ விழுது. அந்த வகையில இந்தப் பயல் வெட்டிப் பயல் இல்லை; பொழைச்சிக்கும்.

இதென்ன எல்லாரும் ரெண்டு ரெண்டு தடவை பின்னூட்டம் போட்டிருக்காங்க?! நானும் ரெண்டு தடவை போடணுமா?

வெட்டிப்பயல் said...

//siva gnanamji(#18100882083107547329) said...

.......//எனக்கும் வெலையில்லே//.

'நச்'னு ஒரு திருப்பம்!

அதுசரி, செந்தழல் ரவி ஊருதானெ
திருக்கோயிலுர்
ஹீரொ பெரும் ரவி...
//
என் சொந்த ஊரும் திருக்கோவிலூர் தான்... நான் பிறந்த ஊரும் அது தான் ;)

அப்பறம் ஹீரோ பேரு ரவி ஷங்கர் ;)


// பாலாஜி மனோஹர் கள்ளக்குறிச்சி;
நித்யா வும் கள்ளக்குறிச்சி........
//
நாங்க செட்டிலான ஊர் கள்ளக்குறிச்சி. பொறந்த ஊர் வரும் போது இதுவும் வரனும் தானே. அது தான் ;)

//
என்னமோ புகை கிளம்புதே......//
அது ரவியும், நித்யாவும் போடற கடலைல வற புகை ;)

கப்பி | Kappi said...

சேர்ந்து வேலை தேடப்போறாங்களா..நல்ல வேலையா கிடைக்கட்டும் :)))

G.Ragavan said...

:) நல்ல திருப்பம். ரசிச்சேன். ரவி ஷங்கரா ரவி சங்கரா? இதுல ஷங்கர்னு சொன்னதுக்கு எதுவும் காரணமுண்டா?

திருக்கோயிலூர்...நல்ல பேரு... கள்ளக்குறிச்சி....இதுல வியப்பு என்னன்னா....குறிச்சிகள்ளாம் பாண்டிநாட்டுப் பேருக...எங்க சொந்த ஊரு குளக்கட்டாங்குறிச்சி. தூத்துடி மாவட்டம். பாஞ்சாலங்குறிச்சி..கல்லிடைக்குறிச்சி...இன்னும் நெறைய குறிச்சிக இருக்கு. கடலூர் மாவட்டத்துல குறிச்சி இருக்குறது வியப்புதான்.

ILA (a) இளா said...

அடங்கொய்யால, இன்னும் வேலை கிடைக்கலையா. அதுக்குள்ளேவா இத்தனை ஆர்ப்பாட்டம். பொண்ணுங்க மனச சரியா படம் புடிச்சு வெச்சு இருக்கீங்க வெட்டி.

cheena (சீனா) said...

பாலாஜி, கதே நல்லா நகச்சுவையாப் போவுது - பொண்ணுகளும் வர வர கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க - பசங்க தான் சாக்கிரதையா இருக்கணும்

வெட்டிப்பயல் said...

// திவா said...

ஆஹா! போட்டுட்டருய்யா கடேசில ஒரு திருப்பம். ஆமா கொஞ்சம் குழப்புதே. அந்த பொண்ணு சொன்னதெல்லாம் பொய்யினா ஏன் திருப்பி பங்களூர் வரணும்? வேலை தேடவா?//

ஆமாங்க வேலை தேடத்தான்... திருப்பம் நாமல ஆசைப்படலை தானா வந்தது...

இந்த காலத்துல பொண்ணுங்களும் பசங்களுக்கு குறையாம பொய் சொல்றாங்க. என்ன பண்ண?

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

"உங்களுக்கு என்ன லாங்வேஜ் தெரியும்?"

"தமிழ், இங்கிலிஷ்"

"ஏன் கன்னடம், மலையாளம் எல்லாம் கத்துக்க வேண்டியது தானே? இந்த ஜன்மத்துல உங்களுக்கு வேலையே கிடைக்காதுனு நினைக்கறேங்க"

Really superb!!! nalla ezuthereenga.. Keep it up!!!//

மிக்க நன்றி :-)

வெட்டிப்பயல் said...

//சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நான் எடுத்ததும் 3வது பாகம் படிச்சேன்.கடலை(கதை) பிரமாதம். பாகம் 1,2 படிச்சுட்டு, இதப் படிச்சா டிவி சீரியல் மாதிரி இருக்கு.//

மொக்கையா இருக்குனு சொல்றீங்க :-) அடுத்த பகுதில சரி பண்ண முயற்சி செய்யறேங்க :-)

Anonymous said...

வெட்டி...கதை நல்லா போகுது. கடைசி பத்தி நல்ல திருப்பம். அடுத்த பாகத்தை சீக்கிரம் போடுங்க.

-பிரபு

ச.பிரேம்குமார் said...

பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு எத்தனையோ முறை பௌர்ணமி சமயங்களில் வந்து மாட்டிக்கொண்டது உண்டு. அதையெல்லாம் அழகாக நினைவுப்படுத்து போனது இந்தக்கதை. வாழ்த்துக்கள் :)

(ஆனா ஒரு தடவக்கூட இப்படி பொண்ணுக்கூட பேசிட்டு வந்தது கிடையாது :))

//"எனக்கும் எதை டிசைட் பண்றதுனு இன்னும் தெரியல. அனேகமா அக்சண்சர் தான் சேருவேனு நினைக்கிறேன்"
//

ஹய்யா, இது நம்ம கம்பெனி :))))))))

அரை பிளேடு said...

:)

Julian Christo said...

Going good, waiting for the next part.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அந்த பொண்ணு சிரிக்கும் போது அழகா கன்னத்துல குழி விழறது அந்த வெளிச்சத்துலயும் நல்லா தெரியுது. இல்லைங்க?//

போன பதிவில் நாயகிக்கு ஒரு வர்ணனை கொடுக்க மாட்டீங்களான்னு கேட்டேன்!
கேட்டதும் கொடுப்பவனே பாலாஜி பாலாஜி! :-))

//எப்படியோ நமக்கு உதவறதுக்கு அந்த திருப்பதி பாலாஜியே பஸ் அனுப்பியிருக்கான்//

அவரு எப்போத்திலிருந்து உங்க பஸ் ரூட்டை எல்லாம் வெல பேசனாரு வெட்டி? :-)

சிவபெருமான் தலையில் கைவைக்கப் போன "பஸ்" மாசுரன் கிட்ட இருந்து காப்பாத்தினாரு! அதான் "பஸ்" அனுப்பி இருக்காரு-ன்னு சொன்னீங்களோ? :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்பறமா அதை எல்லாம் எடைக்கு போட்டு சுண்டல் வாங்கி சாப்பிட்டுடுவாரு//

//இப்படி வேலை தேடினா கால் லெட்டர் வராது. கால் வலி தாங்க வரும்//

//ஏன் கன்னடம், மலையாளம் எல்லாம் கத்துக்க வேண்டியது தானே? இந்த ஜன்மத்துல உங்களுக்கு வேலையே கிடைக்காதுனு நினைக்கறேங்க//

//ஏன்டா திருவண்ணாமலைக்கு பௌர்ணமி அன்னைக்கு வரவனுங்க எல்லாருமே கிரிவலத்துகா வரானுங்க. உங்க பக்திக்கு ஒரு அளவே இல்லையா?//

Bingo!
Vetti Back to form!!!!!
Rock on thala :-)

இலவசக்கொத்தனார் said...

மொக்கை போட்டு முடிச்சாச்சா? அடுத்த பதிவைப் போடுங்க! :)

Sathiya said...

ரொம்ப பெரிய கதை போல? நல்லா யதார்த்தமா கொண்டு போறீங்க. இந்த கதைக்கு சேரனும் சினேஹாவும் சரியா இப்பாங்க;)

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

:) நல்ல திருப்பம். ரசிச்சேன். ரவி ஷங்கரா ரவி சங்கரா? இதுல ஷங்கர்னு சொன்னதுக்கு எதுவும் காரணமுண்டா?//

"ஜி".ரானு சொல்றதுக்கு எப்படி எதுவும் காரணமில்லையோ அந்த மாதிரி ரவி "ஷ"ங்கருக்கும் காரணமில்லை :-)

Subramanian Vallinayagam said...

hi balaji,

enna achi .....

adutha part eppoo?????

aavaludan
Siva subramanian

Malar said...

வணக்கம் ரவி,

உங்களோட முழு பதிவையும் படித்தேன்..
பேச்சு நடையில் மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள்..

பனி வி.... மிகவும் அருமை.
நானும் கள்ளக்குறிச்சி பக்கம் தான்..ஆதலால்...
உங்களது பதிவையெல்லாம் படித்து நானும் இப்போ பதிவு போட ஆரம்பித்துள்ளேன்.
முடிந்தால் பாருங்கள்!!
tamilpuukkal.blogspot.com/

மலர்

Anonymous said...

Hey its really interesting...

கருப்பன் (A) Sundar said...

//
ஊருல இருந்து வந்தவுடனே எனக்கு மறக்காம ஃபோன் பண்ணுங்க. என் ஃபிரண்டு ஒருத்தன் 'C'ல பிஸ்து.
//
அவரு பேரு கருப்பன்னு வெக்கப்பட்டுக்கிட்டே சொன்னாங்களா??