உள்ள போனவுடனே அறிமுகப்படலம் முடிஞ்சிது...
அப்பறம் அங்கே பேசியதை தென்றலும், KRSம் எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சிட்டாங்க. அப்பறம் இன்னாத்துக்கு நீ எழுதறனு கேக்காதீங்க. அதுல அவங்க சொன்ன ஒரு சில விஷயத்தை இன்னும் விளக்கமா சொல்லிடலாம்னு பாக்கறேன்.
விக்கிப்பீடியா தமிழ்ல 10,000 இடுகைகள் இருக்குனு பார்த்த கொத்ஸ் ஆச்சரியப்பட்டு போயிட்டாரு. அவர்களோட சேர்ந்து நம்ம எல்லாரும் தோள் கொடுக்கனும். தமிழ்ல தேடினா கிடைக்காததே இல்லைனு ஒரு நிலையை உருவாக்கனும்னு சொல்லி ஃபீல் பண்ணாரு. அதுக்கு என்னவெல்லாம் செய்யலாம்னு யோசிக்கும் போது வந்த கருத்துக்கள்
- விக்கிப்பீடியாக்குனு ஒரு ஃபார்மெட் இருக்கு. அதே ஃபார்மேட்ல எழுதினா தான் அதுல போட முடியும். அதனால அதுக்குனு ஒரு குழு மாதிரி ஆரம்பிச்சி, நம்ம பதிவர்கள் எழுதுற கட்டுரைகளை அந்த பாணிக்கு மாத்தி வீக்கிப்பீடியால ஏத்திட்டு, அந்த பதிவருக்கும் ஒரு லிங் கொடுத்தா அடுத்து அவரே அதே போல் எழுத ஒரு தூண்டுகோளாக இருக்கும். அதே மாதிரி நல்ல கட்டுரைகளை பாக்கறவங்க அந்த குழுவிற்கு தெரிவிக்கலாம்.
அவர்கள் உதவுவார்கள்.
- ஏற்கனவே ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரைகளை மொழி பெயர்க்கலாம். ஒரு சிலருக்கு கதை, கவிதை எழுத வராமலிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இதை போல் ஆங்கிலத்திலிருக்கும் கட்டுரையை மொழி பெயர்ப்பது எளிதாக இருக்கலாம். தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்பிலிருப்பவர்களுக்கு இதை போல் எழுதுவது சுலபமாக இருக்கலாம்.
- முடிந்த அளவு அனைத்து வலைப்பதிவர்களும் விக்கி தமிழிற்கு ஒரு லிங் கொடுக்கலாம்.
- வாரத்திற்கு ஒரு 4-5 தலைப்பு கொடுத்து அதை எழுத சொல்லலாம். இல்லையென்றால் ஆறு விளையாட்டு மாதிரி ஒரு விளையாட்டு ஆரம்பிச்சி ஒரு பதிவை எழுதி விக்கியில் போட சொல்லலாம்.
- எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு இதை செய்யனும்னு யோசிக்கறீங்களா? நமக்கு தேவையான தகவல்கள் தமிழில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைக்குமென்றால் அதைவிட மகிழ்ச்சியான விஷயம் வேறு என்ன?
- இது இப்ப ரொம்ப பெரிய விஷயமா தெரியலாம். ஆனா எழுத பழகிவிட்டதென்றால் அப்பறம் அடிச்சி ஆடலாம். சிறுதுளி பெருவெள்ளம்...
என்ன எல்லாம் ரெடிதானே???
கொத்ஸ் வந்து நீங்க ஆரம்பிங்க...
பதிவுலகில் ஆக்டிவிசம் எந்த அளவு சாத்தியம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது...
திருநேல்வேலியிலிருக்கும் ஒருவருக்கு மருத்துவ ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ ஒரு உதவி தேவைப்பட்டால் அது வலைப்பதிபவர்களால் எந்த அளவுக்கு உதவமுடியும் என்று ஆரம்பித்தார்கள்.
என்றென்றும் அன்புடன் பாலா, செந்தழல் ரவி போல் ஓரிருவர் செய்யும் உதவி போல் பெருமளவு செய்யக்கூடிய சாத்தியம் என்ன? என்று விவாதிக்கப்பட்டது. பாபா, இதை நீங்க தொடருங்க.
அடுத்து தமிழ்மண முக்கோண பட்டன் குறித்து பேசினாங்க...
தமிழ்சசி சிரிச்ச முகத்தோட பதில் சொன்னாரு. ஒரு நாளைக்கு 100 கணக்குல வருதுங்கனு. அவர் சொல்லும் போதுதான் ப்ராக்டிக்கலா ஒரு திரட்டில எவ்வளவு கஷ்டம்னு புரியுது. ஒரு குருப் பதிவு போட்டா அதுக்கு எதிர் குருப்ல இருந்து வரும்னு சொன்னாரு. தமிழ்மணத்துல இருக்கற எல்லாரும் இதை சுலபமா புரிஞ்சிக்கலாம்.
அதே மாதிரி எந்த ஒரு முடிவும் தனியா எடுக்கறதில்லை. எல்லாத்தையும் குழுவா சேர்ந்து தான் பண்றோம்னு சொன்னாரு.
அடுத்து user customization செய்யலாம்னு இருக்கோம். அதை செஞ்சிட்டா பாதி பிரச்சனை குறைஞ்சிடும்னு சொன்னார். அதுக்காகத்தான் ஆவலோட இருக்கேன்.
அப்பறம் புதுசா பதிவெழுத போவதாக சொல்லி சம்பத் என்பவர் வந்திருந்தார். எங்களின் உரையாடல்களுக்கு பிறகு கண்டிப்பாக மனதை மாத்தியிருப்பார்னு நினைக்கிறேன்... (இவனுங்க மொக்கை தாங்க முடியலைடானு)
பத்மா அரவிந்த மேடம் வயதான இந்தியர்களுக்கு எவ்வாறு இன்சூரன்ஸில் உதவுவது அப்பறம் இயற்கை சீற்றங்களில் உயிரிழக்கும் இந்தியர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு ஒரு பொதுவான வழி கொண்டு வருவது குறித்து பேசினார்.
அடத்ததாக ஜெயஸ்ரீ குழந்தைகளுக்கு எளிதாக புரியும் வகையில் தமிழ் சொல்லி தருவதற்காக அவர் எடுத்து கொண்ட முயற்சிகளை வலையெற்றுவது குறித்து பேசினார்.
VSK ஐயா மைசூர்பா கொடுத்து அசத்தினார். அதைவிட பல மடங்கு சுவையான திருவாசகத்தையும் பரிசளித்தார். சில நாட்களாக எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தையும் அவரிடம் தெளிவுபடுத்தி கொண்டேன். அது என்ன விஜய டீ ராஜேந்தர் மாதிரி விஜய SKவா என்று கேட்டேன். அதற்கு SK என்ற பெயரில் அவரைவிட வயதில் பெரிய ஒருவர் இருப்பதால் மாற்றிவிட்டேன் என்று கூறினார். (மனதிற்குள் உனக்கு எதுவும் பிரச்சனையில்லை உன்னைவிட பெரிய வெட்டி யாரும் இல்லை என்று நினைத்திருப்பாரோ??). SK ஐயா பழக இனிமையானவர்.
அப்பறம் எங்க மாவட்டத்துக்காரர் நெய்வேலி விச்சு இருந்தாரு. நான் புனித வளனார்னு சொன்னவுடனே ரட்சகர்னு பிரின்சிபால் பெயரை சொல்லி மனதில் மகிழ்ச்சியை வர வைத்தார். (I love my school like anything...) அப்பறம் அவர் ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதிய கதையை பற்றி சொன்னார். நான் கண்டிப்பா படிக்கிறேனு வழக்கம் போல சொல்லிட்டு எப்பவும் போல மறந்துட்டேன்.
அப்பறம் எடிசன் ரங்கா மைசூர்பா சாப்பிட்டதை யாரிடமும் சொல்ல வேண்டாமென்று சொன்னார். நாங்களும் யாரிடமும் சொல்லவில்லை :-)
புலி, ஷைலஜா அக்கா, சந்தோஷ் தொலைபேசியில் அழைத்து பேசினர்.
அப்பறம் பாபாவோட பத்து கேள்விகளுக்கு பதில் சொல்லலாம்னு ஏற்கனவே தயாராகாதது ரொம்ப நல்லதா போயிடுச்சி. (நேரமில்லை)
கொத்ஸ்ம், KRSம் எவ்வளவோ சொல்லியும் எங்களால் சாப்பிட போக இயலவில்லை. மதியம் சாப்பிட்டதே வயிறு முழுக்க இருந்துச்சி. அப்பறம் மைசூர்பா, நெய் முறுக்கு, கிரிம் பீஸ்கட், Diet Pepsi Lime (இதை யாருங்க செலக்ட் செஞ்சது???), பாப் கார்ன், சிப்ஸ், சல்சா அவ்வளவு தான்பா... எல்லாத்தையும் சாப்பிட்டு அதுக்கு மேல என்ன சாப்பிட முடியும்?
ஒரு வழியா புறப்பட்டு வந்து சேர்ந்தோம். தென்றல்தான் பாவம், என் மொக்கைய பாபா பல தடவை கேட்டிருக்கிறார். வழி முழுக்க நான் போட்ட மொக்கைய தாங்கிட்டு மனுசன் ரொம்ப தெளிவா வீட்டுக்கு வழி சொன்னாரு... அப்பறம் பாபா என்னை வீட்ல இறக்கிவிடும் போது 12:30.
அதுக்கு மேல வந்து கமெண்ட் மாடரேஷன் எல்லாம் பண்ணிட்டு, காலைல இருந்து வந்த பதிவெல்லாம் படிச்சி முடிச்சிட்டு படுக்கும் போது 3. அடுத்த நாள் காலை 7:30க்கு எல்லாம் போனை போட்டு ஆன்லைன் வர சொல்லி ஆணி புடுங்க சொல்லிட்டானுங்க :-(
இப்படி ஒரு வழியாக வெற்றிகரமாக முடிந்தது நியு ஜெர்ஸி வலைப்பதிவர் சந்திப்பு...
கொத்ஸ், KRS மிக்க நன்றி... பட்டையை கிளப்பிட்டீங்க...
12 comments:
விக்கிபீடியா பத்தி இவ்வளவு பேசப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியா இருக்கு..ஏற்கனவே இலவசக்கொத்தனார் அங்க வந்து ஒரு கட்டுரை எழுத ஆரம்பிச்சுட்டார்..இன்னும் பலரையும் வரவேற்கக் காத்திருக்கிறோம்.
//தமிழ்ல தேடினா கிடைக்காததே இல்லைனு ஒரு நிலையை உருவாக்கனும்னு சொல்லி ஃபீல் பண்ணாரு.//
இது தான் எங்க எல்லாருக்கும் உந்துதல்!
எல்லாரும் கட்டுரைகளை நேரடியா விக்கிபீடியாவுல வந்தே எழுதலாம். விக்கி வடிவத்துக்கு உதவுற பல கருவிகள் அங்க இருக்கிறது வேலைய எளிமைப்படுத்தும். விக்கி வடிவம், கட்டுரை இரண்டையும் கொஞ்சம் கொஞ்சம் மேம்படுத்தலாம். பிரச்சினையில்லை. அங்கேயே உருவாக்குவது ஏற்கனவே விக்கி அறிமுகம் உள்ளவர்கள் உங்களுக்கு உதவ இயலும்.
விக்கிபீடியா மட்டுமல்லாமல் விக்சனரிக்கும் பங்களிக்கலாம். அங்க சுமார் 6000 சொற்கள் இப்ப இருக்கு.
வெற்றிகரமாக முடிந்த சந்திப்பு இனிமையான சந்திப்பு என தெரிகிறது!!
நமக்கு தெரிந்தவர்களை பற்றி படிக்கும் போது மகிழ்ச்சி!! :-)
உங்கள் எழுத்துக்களில் சந்திப்பை பற்றி அருமையாக தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள்.
மேலும் இது போன்ற பல சந்திப்புகள் நிகழ வாழ்த்துகள். :-)
//இது இப்ப ரொம்ப பெரிய விஷயமா தெரியலாம். ஆனா எழுத பழகிவிட்டதென்றால் அப்பறம் அடிச்சி ஆடலாம். சிறுதுளி பெருவெள்ளம்...//
ரொம்ப சரி....
ரொம்ப நல்லா எழுதிருக்கிங்க, பாலாஜி!
/தமிழ்ல தேடினா கிடைக்காததே இல்லைனு ஒரு நிலையை உருவாக்கனும்../
கேட்கவே நல்லா இருக்கு! கண்டிப்பா நம்மால் முடியும்!
என்னங்க நீங்க!
நான் நினைக்காததையெல்லாம் நினைச்சிருக்கீங்க!
ஆனா, ரொம்ப நல்லா கவர் பண்ணியிருக்கீங்க, பதிவர் சந்திப்பை.
துடிப்பான உங்கள் முகமும், பேச்சும் என்றும் நினைவினில் இருக்கும்!
நன்றி.
உண்மையாவே நல்லா எழுதியிருக்கீங்க.
வாழ்த்து(க்)கள்.
---பதிவுலகில் ஆக்டிவிசம் எந்த அளவு சாத்தியம் ---
Konjam periya waitees :)
புதுவை கோ.சுகுமாரன்: துறைமுகத் திட்டத்தைக் கைவிட தொடர் முழக்கப் போராட்டம் - இந்த மாதிரி முயற்சிகள் இன்றைய அளவில் ஆர்வலரைத் திரட்டாவிட்டாலும், நேரடி அறிவிப்பு என்னும் அளவில் முக்கியமான துவக்கம். அடுத்த கட்டமாக போராட்டங்களுக்கு நிதி சேர்ப்பது, மக்களிடம் கொண்டு சேர்ப்பது, ஊடகங்களின் கவனிப்பைக் கோருவது, தெரிந்தவர்களை ஈடுபடுத்துவது என்று பல்கிப் பெருகும்.
மேலும் MoveOn.org: Democracy in Action குறித்து பேசிக் கொண்டிருந்தேன்.
ஒத்த அலைவரிசையில் உள்ளவர்கள் ஒன்று சேர்கிறார்கள். குறைந்தபட்சத் திட்டங்களை வழிவகுக்கிறார்கள். நேரம், பணம், உடல் உழைப்பு என்று விதவிதமாக நிறைவேற்றுகிறார்கள்.
//பதிவுலகில் ஆக்டிவிசம் எந்த அளவு சாத்தியம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது...//
இது பற்றி என்ன பேசினோம் என்பதை மறந்தேன். எடுத்துக் கொடுத்த பாலாஜிக்கு நன்றி.
பாபா சொன்னது போல் ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளுக்காகச் செயல்படும் moveon.org ஒரு நல்ல எடுத்துக்காட்டு!
//சம்பத் என்பவர் வந்திருந்தார். எங்களின் உரையாடல்களுக்கு பிறகு கண்டிப்பாக மனதை மாத்தியிருப்பார்னு நினைக்கிறேன்... //
அட ஆமாம்பா..
அதுவும் உங்களைப் பாத்து பேசினதுக்கு அப்புறம் மனுசன் ரொம்பவே இன்ஸ்பிரேசனில் இருக்காருப்பா! :-)
ennanga ithu achariyama irukku? enge pochu nan kodukkira comments ellam? gulab jamunaithan sapiduvanga! commentsaiyuma sapiduvanga? :)
அந்த விக்கிபீடியா விஷயத்தை மக்கள் எல்லோரும் இன்னும் கொஞ்சம் சீரியசா முன்னெடுத்து போனால் நல்லா இருக்கும்...
Post a Comment