தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, May 03, 2007

வலைப்பதிவர் சந்திப்பு - நியு ஜெர்சி - 1

வலைப்பதிவர் சந்திப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னே என் டீம் லீடரிடம் சொல்லி வைத்தேன். எந்த காரணத்திற்காகவும் இந்த வார சனிக்கிழமை என்னால் வேலை செய்ய முடியாது. ஒரு முக்கியமான சொந்த வேலை இருக்கிறது என்று. இதை தான் சொந்த செலவுல சூனியம்னு நம்ம வலைப்பதிவுலகில் சொல்றாங்க. சரி சனிக்கிழமை தானே சொந்த வேலை, அப்ப ஞாயித்தி கிழமை பையன் சும்மா தான் இருக்கானு ஆணி புடுங்க சொல்லிட்டாங்க.

தமிழ்சசிக்கிட்ட எப்படியும் பேசி 40சட்டத்தை தூக்க வைக்கனும்றதுதான் என்னோட முக்கியமான திட்டம். ஆனா அதுக்கு தேவையே இல்லைனு சரியா வெள்ளிக்கிழமை ராத்திரியே அதை மாத்திட்டாங்க. சரி இதுக்கு மேல நம்ம கண்டிப்பா இந்த சந்திப்புக்கு போகனுமானு யோசிச்சிட்டு இருந்தேன். சரவண பவன்ல சாப்பிடறதுக்காவது போகலாம்னு முடிவு செஞ்சி புறப்பட்டுவிட்டேன். அதுவுமில்லாம பாபாட்ட பேசினா ஒரு நாள் முழுக்க கூட பேசலாம். அவ்வளவு விஷயம் பேசுவாரு. அதுவும் கூட புதுசா தென்றல் வேற வராரு. அவர்ட கொஞ்சம் மொக்கை போடலாம்னு முடிவு பண்ணிருந்தேன்.

ஒரு வழியா 7 மணிக்கு எழுந்து Comment moderation பண்ணிட்டு இருந்தேன். பாபா ஆன்லைனில் வந்து 8:30க்கு வீட்டுக்கு வந்துடுவேனு சொன்னாரு. சரி இதுக்கு மேல ஆன்லைன்ல இருந்தா ஆபத்துனு கிளம்பி ரெடியாகி 8:15க்கு எல்லாம் வெளியே வந்து போட்டோ எடுத்துட்டு இருந்தேன். Spring ஆரம்பமானதால் பூக்கள் எல்லாம் ரொம்ப அழகா இருந்துச்சு.

பாபா சொன்ன நேரத்துக்கு சரியா வந்தாரு. அப்படியே நம்ம தென்றல் வீட்டை நோக்கி போனோம். அவர் வீட்ல இருந்து ஒரு பத்து வீடு தள்ளி போய் காரை நிறுத்தி அவருக்காக காத்து கொண்டிருந்தோம் (தவறுதலாக). தூரத்தில் ஒரு இளைஞர் வந்து கொண்டிருந்தார். அவர் எங்களை நோக்கி வர, சின்ன பையன் மாதிரி இருக்காரேனு பார்த்தோம். சரி எதுக்கும் ஜன்னலை திறந்து வைப்போம்னு வெச்சோம். பக்கத்துல சிரிச்சிக்கிட்டே வந்து "நிலால நெருப்பு வெச்சா நெப்ட்யூன்ல வெடி வெடிக்கும்"னு கோட் வேர்டை சொன்னவுடனேதான் அது தென்றல்னு உறுதியாச்சி. உடனே பாபாவும் "வெட்டுக்கிளி தங்கச்சரம் செவ்வாய் கிரகத்துல ஃப்ளாப்"னு எங்க கோட் வேர்டை சொல்லி நாங்கதான் தமிழ் வலைப்பதிவர்கள்னு உறுதி செஞ்சோம். உடனே தென்றல் காரில் ஏறினார்.

அப்படியே தென்றல் எத்தனை நாளா ப்ளாக் படிக்கிறாரு, எந்த எந்த ப்ளாக் எல்லாம் படிப்பாருனு பாபா கேட்டுட்டு வந்தாரு. அவர் 6 மாசமா படிக்கிறார்னு சொன்னாரு. அவள் விகடன் மூலமாகத்தான் வலைப்பதிவுலகம் பழக்கமானதுனு சொன்னாரு. ஆனா 6 மாசமா ரொம்ப அதிகமா படிச்சி இருக்காரு. அவர் சொன்னதுல பாதி ப்ளாக் எனக்கு தெரியல. ஆனா பாபாக்கு எல்லாம் தெரிஞ்சிருந்துச்சி.

அப்பறம் KRS வேற ரெண்டு மூணு தடவை போனுக்கு கூப்பிட்டிருக்காரு. ஆனா பாட்டு சத்தத்துல நான் கவனிக்கவே இல்லை. என்னடா இவ்வளவு நேரமாச்சி பொறுப்பா போன் பண்ணலையே KRSம், கொத்ஸ்ம் என்ன பண்ணிட்டு இருக்காங்கனு தெரிஞ்சிக்கலாம்னு போன எடுத்து பார்த்தா 4, 5 மிஸ்டு கால்ஸ். ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பண்ணியிருக்காங்க. அப்பறம் KRSக்கு போன் பண்ணா, வேற ஒரு குரல். எப்படி இருக்கீங்கனு கேக்கறாரு. நல்லா இருக்கேனு சொல்லிட்டு, ஆமா நீங்க யாருனு கேட்டா VSKனு சொல்லி சிரிச்சாரு. அவர்ட நேர்ல பார்த்தா ரொம்ப நாளா கேக்கனும்னு நினைச்சிட்டு இருந்த கேள்வியை எப்படியும் இன்னைக்கு கேக்கனும்னு மனசுல ஒரு எண்ணம் வந்துச்சி.

அப்படியே மதியம் சாப்பாட்டை KRS வீட்ல சாப்பிடலாம்னு அவருக்கு வலை விரிக்க ஆரம்பிச்சோம். மதியம் ஜெர்ஸி வந்து சேர எப்படியும் ஒரு 1:30 ஆயிடும் அந்த நேரத்துக்கு ஏதாவது ஹோட்டல் திறந்திருக்குமானு கேட்டேன். அவரா அப்பாவியா 4 - 5 மணி வரைக்கும் லஞ்ச் கிடைக்கும் அதெல்லாம் பயப்படத்தேவையில்லைனு சொல்லி ஏமாத்திட்டாரு. சரி நம்ம லேசுப்பட்ட ஆளானு அப்படியே இங்க தமிழ்நாடு சாப்பாடு கிடைக்குமானு ஒரு பிட்ட போட்டேன். உடனே 4 - 5 கடை சொல்றாரு. அதுல வேற செட்டிநாடு ஸ்டைல், கொங்கு ஸ்டைல் இப்படி பல ஸ்டைல் சொல்றாரு. இதுக்கு மேல எப்படி கேக்கறதுனு யோசிக்கும் போது தான் ஒரு முக்கியமான மேட்டரு தெரிஞ்சிது. அவர் வீட்ல வெளியூர் போயிருக்காங்க அவர்தான் சமையல்னு. நல்ல வேளை மாட்லனு ஒரு அட்டகாசமான ஹோட்டல் போய் சாப்பிட்டோம்.

அந்த ஹோட்டல் பன்னீர் புர்ஜி அட்டகாசமா இருக்குனு பாபா எவ்வளவு சொல்லியும் நான் சாப்பிடல. முக்கிய காரணம் குலாப் ஜாமுனை உள்ளே நுழைந்தவுடனே பார்த்தது தான் :-). வயிறு முழுக்க சாப்பிட்டு மீட்டிங் சென்றோம். அப்படியே விட்டுருந்தா அங்கயே ஒரு நல்ல தூக்கம் போட்டிருப்பேன்...

மீட்டிங் நடக்கற இடத்துக்கு போனவுடனே கீழ வந்து கதவு திறந்து பாசமா கூப்பிட்டு போனாரு நம்ம KRS...

அங்க போனா எல்லாரும் Cricket Match பார்த்துட்டு இருந்தாங்க. இது தான் பதிவர்கள் ஆடும் கிரிக்கெட் மேட்ச்னு பதிவு போட்டாரா? தென்றல் வேற நம்ம எந்த டீமுக்கு ஆடனும்னு அப்பாவியா கேட்டாரு. பாஸ்டன் Red Soxனு சொல்லி ஏமாத்தளாமானு பார்த்தேன்.ஆனா பாபா அதுக்கு சான்ஸ் கொடுக்கல.

உள்ளே போய் எல்லாரிடமும் நான் தான் வெட்டினு பெருமையா சொல்லிக்கிட்டேன்.எல்லாரும் உன்னைய பார்த்தாலே தெரியுதுங்கற மாதிரி ஒரு லுக் கொடுத்தாங்க. கொத்ஸ் அட்டகாசமா ஆபிஸ் ரூம் பிடிச்சிருந்தாரு. அவருக்கு தான் முதல்ல நன்றிய சொல்லனும். அட்டகாசமா அரெஞ்ச் பண்ணியிருந்தாரு. அடிக்கடி ப்ளாக் எல்லாம் refer பண்ண, ப்ரொஜக்டர் எல்லாம் வெச்சியிருந்தாரு. அப்பறம் Power point எல்லாம் போட்டு டைவர்ட் ஆகாம இருக்கற மாதிரி பாத்துக்கிட்டாரு. அப்பறம் சாப்பிட வேற பல ஐட்டங்கள் இருந்துச்சி. அதெயல்லாம் நான் சரியா நோட் பண்ணல. KRS கரெக்டா போட்டிருக்காரு ;)

அங்கே என்ன பேசினோம்... இது அடுத்த பதிவில்...

18 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்படியே மதியம் சாப்பாட்டை KRS வீட்ல சாப்பிடலாம்னு அவருக்கு வலை விரிக்க ஆரம்பிச்சோம்//

அதான் சந்திப்பின் போது நீ விரிச்ச வலையில எல்லாருமே விழுந்துட்டோமே! அப்பறம் என்னப்பா பாலாஜி?
ஏதேது? பாஸ்டன்ல இருந்து, வலையும் கையுமாத் தான் புறப்பட்டு இருக்கீங்க போல!

//முக்கிய காரணம் குலாப் ஜாமுனை உள்ளே நுழைந்தவுடனே பார்த்தது தான் :-).//

ஆகா...பாலஜி...யார் அது? யாரைப் பாத்தீங்க? சரியாச் சொல்லுங்க!
ரசோய் ஓட்டலில் நமக்குத் தெரியுமா யாரைப் பாத்து ஜாமூன், ரசகுல்லா என்று இந்த வெட்டி கதைக்கிறார்? :-)

Arunkumar said...

supera poguthu.. waiting for "enna pesineenga" post :)

code words matter TOPPU

ஜி said...

ஆஹா... நல்லா எஞ்சாய் பண்ணியிருக்கீங்க போல... நான் இல்லாத நேரத்தில சந்திப்பைப் போட்டதற்கு மறுபடியும் ஒருமுறை எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

தென்றல் said...

/அங்கே என்ன பேசினோம்... இது அடுத்த பதிவில்...
/
அப்ப்ப்..பா.... கடைசில 'மேட்டருக்கு' வந்துட்டீங்க!

குமரன் (Kumaran) said...

எங்கே மேட்டருக்கு வந்தாரு? அதான் அடுத்த பதிவில்ன்னு சொல்லிட்டாரே?!

உண்மை said...

//
நான் இல்லாத நேரத்தில சந்திப்பைப் போட்டதற்கு மறுபடியும் ஒருமுறை எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
//

எங்க ஊருக்கு வந்துட்டு போயிருக்கிங்க, நானும் உங்கள எல்லாம் பார்க்கனும் இருந்தேன். சரி அடுத்தவாட்டி பார்த்துக்கலாம்.

பாலராஜன்கீதா said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆகா...பாலஜி...யார் அது? யாரைப் பாத்தீங்க? சரியாச் சொல்லுங்க!
ரசோய் ஓட்டலில் நமக்குத் தெரியுமா யாரைப் பாத்து ஜாமூன், ரசகுல்லா என்று இந்த வெட்டி கதைக்கிறார்? :-) //

யாருமில்லை. அதெல்லாம் ச்சு(ம்)மா
:-)

CVR said...

அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் வெட்டி!! :-)

குமரன் (Kumaran) said...

Communication Skills இன்னும் நல்லா வளர்த்துக்கணும் பாலாஜி. நீங்க சொல்றதை அரைகுறையா சொல்லிட்டு உங்க குழுத்தலைவரை நொந்தா எப்படி? சனியும் ஞாயிறும் வேற வேலை இருக்குன்னு சொல்லியிருந்தீங்கன்னா சரி. :-)

Syam said...

code word சூப்பரு :-)

மணிகண்டன் said...

//நிலால நெருப்பு வெச்சா நெப்ட்யூன்ல வெடி வெடிக்கும்"னு கோட் வேர்டை சொன்னவுடனேதான் அது தென்றல்னு உறுதியாச்சி. உடனே பாபாவும் "வெட்டுக்கிளி தங்கச்சரம் செவ்வாய் கிரகத்துல ஃப்ளாப்"னு எங்க கோட் வேர்டை சொல்லி நாங்கதான் தமிழ் வலைப்பதிவர்கள்னு உறுதி செஞ்சோம்.//
கோட்வெர்டெல்லாம் பலமா இருக்கு. 128 பிட் என்கிரிப்ஷன் எல்லாம் பண்ணலையா?

இராம்/Raam said...

//சரி சனிக்கிழமை தானே சொந்த வேலை, அப்ப ஞாயித்தி கிழமை பையன் சும்மா தான் இருக்கானு ஆணி புடுங்க சொல்லிட்டாங்க.//

ஐயோ பாவம்ப்பா :)

//"நிலால நெருப்பு வெச்சா நெப்ட்யூன்ல வெடி வெடிக்கும்"னு கோட் வேர்டை சொன்னவுடனேதான் அது தென்றல்னு உறுதியாச்சி. உடனே பாபாவும் "வெட்டுக்கிளி தங்கச்சரம் செவ்வாய் கிரகத்துல ஃப்ளாப்"னு எங்க கோட் வேர்டை சொல்லி நாங்கதான் தமிழ் வலைப்பதிவர்கள்னு உறுதி செஞ்சோம். உடனே தென்றல் காரில் ஏறினார்.//

:)))) ROFTL

//அங்கே என்ன பேசினோம்... இது அடுத்த பதிவில்...//

அடுத்த போஸ்ட்'க்கு வீ ஆர் வெயிட்டிஸ் :)

இலவசக்கொத்தனார் said...

ஜாமூனா? இது பத்தி யாரும் வாயே திறக்கலயே! சீக்கிரம் அடுத்த பகுதியைப் போடும்.

துளசி கோபால் said...

பதிவுலே சூப்பர் பிட் அந்தக் கோட் வேர்ட்தான்யா:-)))))))

இலவசக்கொத்தனார் said...

//Communication Skills இன்னும் நல்லா வளர்த்துக்கணும் பாலாஜி. நீங்க சொல்றதை அரைகுறையா சொல்லிட்டு உங்க குழுத்தலைவரை நொந்தா எப்படி? //

வந்துட்டாருப்பா. ஒரு டேமேஜரைப் பத்தி சொன்னா தாங்காதே!! என்னா பாசம் என்னா பாசம்!!

//சனியும் ஞாயிறும் வேற வேலை இருக்குன்னு சொல்லியிருந்தீங்கன்னா சரி. :-)//

அப்போ வெள்ளிக்கிழமை விடிய விடிய வேலை வாங்குவீங்களா கும்ஸ்?

இலவசக்கொத்தனார் said...

//பதிவுலே சூப்பர் பிட் அந்தக் கோட் வேர்ட்தான்யா:-)))))))//

என்னய்யா வெட்டி, இப்படி மானத்தை வாங்கிட்ட?

முதலில் பதிவில் கோட் வேர்ட் தவிர மீதி எதுவும் நல்லா இல்லைன்னு சொல்லிட்டாங்க.

இரண்டாவது அதுவும் சொந்த சரக்கு இல்லை பிட் அடிச்சி இருக்கேன்னு கண்டிபிடிச்சுட்டாங்க.

என்ன இருந்தாலும் டீச்சர் இல்லையா! நல்லவேளை நம்ம டீச்சர் வந்து என்ன ஆனாலும் கிரேஸ் மார்க் போட்டு பாஸ் பண்ணி விட்டுடுவாங்க. ஆனா அடுத்த பகுதியாவது நல்லா எழுது ராசா!!

இலவசக்கொத்தனார் said...

//CVR said...

அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் வெட்டி!! :-) //

பாரு இவரும் சொல்லறாரு, இதெல்லாம் ஒரு பதிவுன்னு போடறயே, உனக்கு வெக்கமா இல்ல? அடுத்த பதிவாவது ஒழுங்காப் போடு அப்படிங்கறாரு பாரு!!

Radha Sriram said...

எல்லாத்தையும் விட அந்த கோட் வேர்ட்தாங்க சூப்பர்!!

மீதிய சீக்கரமா எழுதவும்!