மொழி படம் நல்லா இருக்குதுனு ஃப்ரெண்டு ஒருத்தவன் ஃபோன் பண்ணி சொன்னான். சரி அப்படி என்னடா ஸ்பெஷல்னு கேட்டா படத்துல ரத்தமே இல்லைடானு சொன்னான். என்னது தமிழ் படத்துல ரத்த வாட இல்லாம இருக்கா? என்னடா ஆச்சுனு நானும் படம் பார்க்கலாம்னு முடிவெடுத்து ஒரு வழியா இன்னைக்கு பார்த்துட்டேன்.
பார்த்துட்டு யார பாராட்டறதுனு தெரியாம போன் பண்ணவனுக்கு முதல்ல நன்றி சொன்னேன். ஆனா முதல்ல பாராட்டப்பட வேண்டிய நபர் பிரகாஷ்ராஜ் தானுங்க. நடிகர் பிரகாஷ்ராஜ் அசத்தியிருந்தாலும் (இதெல்லாம் அவருக்கு ஜிஜிபி. பொம்மரில்லுல மனுசன் பொளந்து கட்டியிருப்பாரு) தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜிக்கு முதல் வாழ்த்துக்கள். இந்த மாதிரி படங்கள் அப்பப்ப வந்தா தான் நல்ல படங்களும் மக்கள் பார்ப்பாங்கனு ஒரு நம்பிக்கை மத்தவங்களுக்கும் வரும். அடுத்து இயக்குனர் ராதா மோகனுக்கு நன்றி சொல்லனும். படம் ரொம்ப அருமைங்க...
படத்துல கதைனு பார்த்தா பெருசா எதுவுமில்லாத மாதிரி தான் இருக்கு. காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணை காதலிக்கும் நாயகன் அவளுக்காக அவள் மொழியை (மொழினா பேசறது மட்டும்தானு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் ஒரு கருவிதான் மொழினு புரிஞ்சிக்கிட்டேன்) கற்று கொண்டு அவளை கரம் பிடிப்பது தான் கதை. (நம்ம கொல்ட்டி கதையும் கிட்டதிட்ட இந்த மாதிரி தானே!)
ஆனா இதை ரொம்பவே ரசிக்கும் படியா பண்ணியிருக்காங்க. அதுல எனக்கு ரொம்பவும் பிடிச்ச காட்சி, ஜோக்கு கற்பனையா ஒரு குரலை பிரித்திவிராஜ் நினைத்து கொள்ள, அதற்கு ஜோ கோபப்பட்டு எனக்கு குரல் தேவையில்லை, இந்த மாதிரி கற்பனை பண்றத நிறுத்துனு அவுங்க சொல்லும் போது அந்த செய்கைக்கும் அவர் குரல் கொடுத்து கற்பனை பண்ணுவாரு.உடனே நிறுத்துனு அவுங்க சொல்லிட்டு போகும் போது தான் அவர் ஜோ திட்டும் போதும் அதுக்கும் குரல் கொடுத்து ரசிச்சிட்டு இருந்தாருனு நானும் உணர்ந்தேன். இந்த காட்சி ரொம்ப பிடிச்சிருந்துச்சி.
அடுத்து அந்த இசையை அவர் உணரும் போது ஜோ கொடுத்த முகபாவனை. ரொம்பவே நல்லா பண்ணியிருந்தாங்க. சிவக்குமார் சார், நீங்க உங்க குடும்பத்துல இருந்து 2 நல்ல நடிகர்களை (கார்த்தி எப்படியும் கலக்குவார்னு ஒரு நம்பிக்கைதான்) தமிழ் உலகுக்கு கொடுத்தாலும், அவுங்க 2 பேரையும் தூக்கி சாப்பிடற (சூர்யா அண்ணா! நோ பீலிங்ஸ். சில சமயம் அண்ணி உங்களை மிஞ்சிடுவாங்க) ஒருத்தவங்களை வீட்டுக்குள்ள வெச்சிக்கிட்டீங்களே. கொஞ்சம் யோசிங்களேன்...
அடுத்து ப்ரித்திவிராஜ். மனுசன் ரொம்ப நல்லா நடிக்கறாருங்க. நகைச்சுவை காட்சிகளாகட்டும், சீரியஸ் காட்சிகளாகட்டும். ரெண்டுமே கலக்கியிருக்காரு. படத்துல இவரும் பேசாமலே நடிச்சிருந்தாலும் நமக்கு புரியும்னு சொல்ற அளவுக்கு எக்ஸ்பிரஷன் கொடுத்து நடிக்கறாரு.பேச்சுல மலையால வாடை தெரியுது. ஆனா அதுவும் நல்லா தான் இருக்கு. (கோவைல நிறைய மல்லுங்களோட பேசி அதுவும் நமக்கு பிடிச்சி போச்சி). இயக்குனருங்களே! ஒரு நல்ல நடிகர் (ஸ்மார்ட்டாவும் இருக்காரு) கிடைச்சிருக்காரு. சரியா பயன்படுத்திக்கோங்க. சிம்பு, ஸ்ரீகாந்த், SJ சூர்யா இவுங்களை எல்லாம் வெச்சி எடுக்கறதுக்கு தாராளமா இவரை வெச்சி படம் எடுக்கலாம். ஈடுபாடோட நடிக்கற மாதிரி ஒரு ஃபீலிங்.
பிரகாஷ்ராஜ் கேரக்டர் இல்லைனா படம் ஒரு 10 - 15 நிமிஷத்துக்கு மேல பார்க்கமுடியாதுங்க. படத்துக்கு அந்த கதாபாத்திரம் அவ்வளவு முக்கியம். இந்த மாதிரி சீரியஸ் கதைய அவர் காமெடியால கலக்கியிருக்காரு. வடிவேலு பாணில அடிவாங்கறதோ, விவேக் பாணில மெசேஜ் சொல்றதோ இல்லாம இருக்கறதே இவர் இந்த படத்துல பண்ண காமெடிக்கு ஒரு பெரிய ப்ளஸ். சொர்ணமால்யாவை சர்ச்ல அவர் ரெண்டு தடவை மடக்கி பேசறதும் ரொம்ப நல்லா இருந்துச்சு. அதுவும் நான் CBI, லைசன்ஸ் இருக்கானு கேக்கறது கலக்கல். சொர்ணமால்யா இனிமே தாராளமா சொல்லிக்கலாம் நானும் படத்துல நடிச்சிருக்கேனு.
பாஸ்கர் கதாபாத்திரமும், பிரம்மானந்த் கதாபாத்திரமும், சித்தி புகழ் பாட்டியும் நல்லா பண்ணியிருக்காங்க.
பிரகாஷ்ராஜ் சார், இனிமே KB மாதிரி பெரிய தலைங்களுக்கு எல்லாம் சான்சு கொடுக்காம இந்த மாதிரி புதுசா வரவங்கள ஊக்குவிங்க. ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நல்ல படம் பார்த்த ஃபீலிங்.
24 comments:
first.....
ellam sarithan.....ean SriKanth i intha list la serkreengal :-((
//(இதெல்லாம் அவருக்கு ஜிஜிபி. பொம்மரில்லுல மனுசன் பொளந்து கட்டியிருப்பாரு)//
ஆஹா! ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்க!!
//(நம்ம கொல்ட்டி கதையும் கிட்டதிட்ட இந்த மாதிரி தானே!)//
இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா விஷயம் வெளிய வரணும். கில்லாடிய்யா நீரு!
//பேச்சுல மளையால வாடை தெரியுது. //
ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு?
//(கோவைல நிறைய மல்லுங்களோட பேசி அதுவும் நமக்கு பிடிச்சி போச்சி).//
அப்போ கொல்ட்டி, இப்போ மல்லு, இதெல்லாம் உமக்கே ஓவராத் தெரியலை?
மொதல்ல கொத்ஸ் கமெண்டுக்கு ஒரு ரிப்பீட்டு :)))
சுத்தமான ஃபீல் குட் படம்..சில இடங்கள்ல மட்டும் நாடகம் மாதிரி இருந்தது..நீங்க சொன்ன மாதிரி இயல்பான நகைச்சுவை தான் படத்துக்கு பலம்!
//நடிகர் பிரகாஷ்ராஜ் அசத்தியிருந்தாலும் (இதெல்லாம் அவருக்கு ஜிஜிபி. பொம்மரில்லுல மனுசன் பொளந்து கட்டியிருப்பாரு)//
யெஸ் யெஸ்.. பொம்மரில்லுவில் சூப்பராதான் நடித்தர்.. ஆனாலும் நம்ம சித்துவின் நடிப்பு அளவுக்கு வரலை.. :-P
சிம்பு, ஸ்ரீகாந்த், SJ சூர்யா இவுங்களை எல்லாம் வெச்சி எடுக்கறதுக்கு தாராளமா இவரை வெச்சி படம் எடுக்கலாம்.
100% true.
intha dhanusha vittuteengala!!!
porikki mathiri dance aduvaan....
apram intha Srikanth....sambaarnna athukku full definition kudutha maathiri oru sottha payan....
avankku poi oruthavanga, feel panraagna....hmmm....
//
(நம்ம கொல்ட்டி கதையும் கிட்டதிட்ட இந்த மாதிரி தானே!)
//
கெளம்பீட்டாங்கயா! கெளம்பீட்டாங்கயா!!
// Rasigan said...
first..... //
ஆமா ரசிகன் நீங்க தான் முதல் ஆள் :-)
//சினேகிதி said...
ellam sarithan.....ean SriKanth i intha list la serkreengal :-(( //
என்னங்க பண்ண?
மொக்கை போடறதுல ஸ்ரீகாந்த முந்த முடியாதுங்க...
//இலவசக்கொத்தனார் said...
//(இதெல்லாம் அவருக்கு ஜிஜிபி. பொம்மரில்லுல மனுசன் பொளந்து கட்டியிருப்பாரு)//
ஆஹா! ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்க!!
//
எவ்வளவு விஷயமிருக்கு... அதையெல்லாம் விட்டுட்டு இத மட்டும் பிடிச்சிக்குவீங்களே!
// //(நம்ம கொல்ட்டி கதையும் கிட்டதிட்ட இந்த மாதிரி தானே!)//
இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா விஷயம் வெளிய வரணும். கில்லாடிய்யா நீரு!
//
கொல்ட்டி கதையும் சொல்லியிருக்கேனே பார்க்கலையா?
//
//பேச்சுல மளையால வாடை தெரியுது. //
ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு?
//
ஆமா ;-) (இல்லைனு சொன்னா ஒத்துக்குவீங்களா???)
//
//(கோவைல நிறைய மல்லுங்களோட பேசி அதுவும் நமக்கு பிடிச்சி போச்சி).//
அப்போ கொல்ட்டி, இப்போ மல்லு, இதெல்லாம் உமக்கே ஓவராத் தெரியலை? //
//
ஹி ஹி ஹி
//கப்பி பய said...
மொதல்ல கொத்ஸ் கமெண்டுக்கு ஒரு ரிப்பீட்டு :)))
//
Grrrrrrrrrr :@
//
சுத்தமான ஃபீல் குட் படம்..சில இடங்கள்ல மட்டும் நாடகம் மாதிரி இருந்தது..நீங்க சொன்ன மாதிரி இயல்பான நகைச்சுவை தான் படத்துக்கு பலம்! //
ஏம்பா படம் பார்த்து ஒரு விமர்சனம் எழுதியிருக்கலாமே... சீக்கிரம் பார்த்திருப்பேன் இல்ல
// .:: மை ஃபிரண்ட் ::. said...
//நடிகர் பிரகாஷ்ராஜ் அசத்தியிருந்தாலும் (இதெல்லாம் அவருக்கு ஜிஜிபி. பொம்மரில்லுல மனுசன் பொளந்து கட்டியிருப்பாரு)//
யெஸ் யெஸ்.. பொம்மரில்லுவில் சூப்பராதான் நடித்தர்.. ஆனாலும் நம்ம சித்துவின் நடிப்பு அளவுக்கு வரலை.. :-P //
என்னது சித்து நடிப்பா???
படம் ஹிட்டானதுக்கு காரணம் "ஹா ஹா ஹாசினி"னு கலக்கன ஜெனியாலதான்... இது ஆந்திரா மொத்தத்துக்கும் தெரியும் :-)
// Anonymous said...
சிம்பு, ஸ்ரீகாந்த், SJ சூர்யா இவுங்களை எல்லாம் வெச்சி எடுக்கறதுக்கு தாராளமா இவரை வெச்சி படம் எடுக்கலாம்.
100% true.
intha dhanusha vittuteengala!!!
porikki mathiri dance aduvaan....
apram intha Srikanth....sambaarnna athukku full definition kudutha maathiri oru sottha payan....
avankku poi oruthavanga, feel panraagna....hmmm.... //
தனுஷ் கொஞ்சம் அடக்கமா பேசுவாங்க. அதனால தான் அவரை விட்டுட்டேன். பார்க்க அழகா இல்லைங்கறது வேற விஷயம்.
சிம்புக்கு ஓவர் பேச்சு, ஸ்ரீகாந்தும் சரியான மொக்கை, SJ சூர்யாவை பத்தி நான் எதுவுமே சொல்ல தேவையில்லை.
//மருதநாயகம் said...
//
(நம்ம கொல்ட்டி கதையும் கிட்டதிட்ட இந்த மாதிரி தானே!)
//
கெளம்பீட்டாங்கயா! கெளம்பீட்டாங்கயா!! //
நான் என்னங்க காபி அடிச்சாருனா சொன்னேன்??? ஒற்றுமை இருக்குதுனு தானே சொன்னேன் :-)
//இனிமே KB மாதிரி பெரிய தலைங்களுக்கு எல்லாம் சான்சு கொடுக்காம இந்த மாதிரி புதுசா வரவங்கள ஊக்குவிங்க/
கரெக்டா சொன்னப்பா வெட்டி.. சும்மா நாலு குத்து பாட்டு, ஏழு சண்டை இருந்தாத்தான் படம் ஓடும்னு இவங்களே ஒரு ஃபார்முலா வச்சுகிட்டு நம்மளை சாகடிக்கிறது கொஞ்சமும் நல்லா இல்லை..
ஏதோ இது மாதிரி அப்பப்போ படங்கள் வந்து தான் மனசை நிரப்புது
\\பிரகாஷ்ராஜ் சார், இனிமே KB மாதிரி பெரிய தலைங்களுக்கு எல்லாம் சான்சு கொடுக்காம இந்த மாதிரி புதுசா வரவங்கள ஊக்குவிங்க. ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நல்ல படம் பார்த்த ஃபீலிங்.\\
பாலாஜி
ராதா மோகனுக்கு பிரகாஷ்ராஜ் கொடுக்கும் ரெண்டாவது படம் இது. முதல் படம் "அழகிய தீயே".
இந்த ரெண்டு படத்திற்கும் பிரகாஷ்ராஜ் தான் தயாரிப்பளார்.
//வாய் பேச முடியாத பெண்ணை காதலிக்கும் நாயகன் அவளுக்காக அவள் மொழியை (மொழினா பேசறது மட்டும்தானு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் ஒரு கருவிதான் மொழினு புரிஞ்சிக்கிட்டேன்) கற்று கொண்டு //
நீங்க சு(ம்)மா காக தெலுங்கு கத்துக்கிட்ட மாதிரின்னு சொல்லுங்க :-)
நல்ல படம் தான்..
//சூர்யா அண்ணா! நோ பீலிங்ஸ். சில சமயம் அண்ணி உங்களை மிஞ்சிடுவாங்க) ஒருத்தவங்களை வீட்டுக்குள்ள வெச்சிக்கிட்டீங்களே. கொஞ்சம் யோசிங்களேன்...//
சிவக்குமார் இவங்கள பிடிச்சு வச்சுகிட்டு தமிழ்சினிமாவ காப்பாத்தின ஒரே காரணத்துக்காகவே சூர்யாவுக்கும் அவர் அப்பாவுக்கும் கோயில் கட்ட நான் நிதி திரட்டிகிட்டிருக்கேன்.. நீங்க என்னடான்னா.. அதுக்கு உலை வச்சுருவீங்க போலிருக்கே...
சந்திரமுகி hangover.. கண்ண உருட்டறது, தத்தக்கா பித்தக்கானு கைய ஆட்டறது - ஜோவோட ஆக்டிங் அகராதி இதோட ஓவர்... ஸ்நேகாவையோ அசினையோ போட்டிருந்தா பட்டைய கிளப்பிருப்பாங்க. IMHO..
தயாரிப்பாளரோட தைரியம் ரொம்ப பாராட்டத்தான் வேணும்... அப்புறம் பிரித்வி நல்லா நடிச்சாலும் எனக்கென்னவோ டயலாக் டெலிவரில்லாம் மல்லு ஸ்லாங்கோட பாக்யராஜ் பேசுற மாதிரி இருந்துச்சு... பாரிஜாதத்துல ரொம்ப க்ளாஸ் எடுத்திருப்பாரு போல.
சில இடங்களில் அபத்தம். ஆனால் மன்னிச்சிடலாம். ஆக மொத்தம் நல்ல படம் - ஜோ
//ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நல்ல படம் பார்த்த ஃபீலிங்//
100% உண்மைதான் வெட்டி.
//பிரகாஷ்ராஜ் சார், இனிமே KB மாதிரி பெரிய தலைங்களுக்கு எல்லாம் சான்சு கொடுக்காம இந்த மாதிரி புதுசா வரவங்கள ஊக்குவிங்க.
ஏற்கனவே ராதாமோகன் 2 படம் பண்ணிட்டாரே..
2 கோடி குடுத்து என் நண்பனுக்காக ஒரு படம் பார்க்க போறேன்னு பிரகாஷ் ராஜ் சொன்ன
1.அழகிய தீயே..
AM ரத்னம் எடுத்த
2. பொன்னியின் செல்வன்
//
ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நல்ல படம் பார்த்த ஃபீலிங்.
//
எனக்கும் அதே :-)
எந்த மொழி படம் பாத்தாலும் அங்க சுத்தி இங்க சுத்தி கொல்டுக்கு வந்துர்றீஙக... நடக்கட்டும் வெட்டி :P
//(இதெல்லாம் அவருக்கு ஜிஜிபி. பொம்மரில்லுல மனுசன் பொளந்து கட்டியிருப்பாரு)//
//(கோவைல நிறைய மல்லுங்களோட பேசி அதுவும் நமக்கு பிடிச்சி போச்சி).//
அடுத்தது...கன்னடிகா?
~சேரன்
எனக்கு இந்தப் படம் பாக்கனும்னு ஆசையா இருக்கு. ஆனா பாக்க முடியலை. நல்ல விமர்சனமா செஞ்சிருக்க. சரி...ஆம்ஸ்டர்டாமுல இந்தப் படம் பாக்க முடியுமா? அதுக்கு எதுவும் வழி இருக்கா?
G.Ragavan said...
எனக்கு இந்தப் படம் பாக்கனும்னு ஆசையா இருக்கு. ஆனா பாக்க முடியலை. நல்ல விமர்சனமா செஞ்சிருக்க. சரி...ஆம்ஸ்டர்டாமுல இந்தப் படம் பாக்க முடியுமா? அதுக்கு எதுவும் வழி இருக்கா?
///
http://www.tamilmovix.com/forum
ஹி ஹி ஜஸ்ட் எக்ஸாம்பில்
Post a Comment