தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Saturday, April 14, 2007

நல்ல தமிழ் பேர் சொல்லுங்கப்பா

நம்ம வலைப்பதிவை தொடர்ந்து படிக்கும் நண்பர் ஒருவருக்கு அழகான குட்டி தேவதை பிறந்திருக்கிறாள். அவளுக்கு அழகான தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அது தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் எழுதுவதற்கும் எளிமையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதுக்கு நம்ம தமிழ்மணத்துல இருக்குற நீங்க எல்லாம் நல்ல பேரா சொல்லனும்னு ஆசைப்படறேன்...

யார் சொல்ற பேர் செலக்ட் ஆகுதோ அவருக்கு ஒரு பட்டம் கொடுத்துடுவோம். அத வேற பதிவுல போடுவோம்...

ரெடி ஸ்டார்ட் தி மீசிக் (My friend - நாந்தான் ஃபர்ஸ்ட்னு எல்லாம் சொல்லக்கூடாது. அப்படி எல்லாம் பேர் வைக்க முடியாது. கோபி ரீப்பிட்டுனு போட்டுடாத)

48 comments:

தென்றல் said...

1. மதுமிதா
2. மதுரீமா
3. சங்கமித்ரா
4. வெண்ணிலா
5. கவி

உண்மைத்தமிழன் said...

உடனே 'இங்க' http://www.anbutamil.com/GirlNamesA.htm போங்கண்ணா..

எம்புட்டு பேர் இருக்கு தெரியுமா?

எனக்குப் பரிசெல்லாம் வேணாம்.. நீங்களே என் பேரைச் சொல்லி சாப்புட்டுக்குங்க..

மாசிலா said...

//நல்ல தமிழ் பேர் சொல்லுங்'கப்பா'// அப்ப பெண்கள் எல்லாம் இதுல வரக்கூடாதா? :-)

மைதிலி
மீனா
சுந்தரி

நன்றி.

MyFriend said...

//My friend - நாந்தான் ஃபர்ஸ்ட்னு எல்லாம் சொல்லக்கூடாது. //

:-P
Naanthaan fourth.. (first endru sollalai.. hehe)

Gopi vanthu repeatnnu solla poraar.. hehehe ;;-)

Anonymous said...

http://www.kalanjiam.com/babynames/index.php?titlenum=4101

இங்கேயும் இருக்கு

Mani - மணிமொழியன் said...

அமுதா
இனியா
இன்பா

கதிர் said...

தேன்மொழி
கனிமொழி
மீரா
யசோதா

என்னோட முந்தின கமெண்ட ஏன் மேன் ஒளிச்சி வச்சிருக்க?

கதிர் said...

இந்துமதி

Floraipuyal said...

அவ்வை
கொற்றவை
உமை
கண்ணகி
கயல்விழி
கலைமகள்
மலைமகள்
நாமகள்
சிலம்பி
அங்கவை
சங்கவை

ALIF AHAMED said...

தம்பி உன் பிளாக்குக்கு என்ன ஆச்சி ....??

This profile cannot be displayed

ulagam sutrum valibi said...

paary magalir anagavai,sangavai .eppadi

வல்லிசிம்ஹன் said...

1, விபா,

2,ரூபா

3,ஓவியா

4,நித்திலா
5,
துரியா
6,சில்பா

இன்னும் தெரிந்தால் சொல்கிறேன்.
புதுப் பாப்பாக்கு ஆசீர்வாதங்கள்.

Machi said...

இங்கு சில பெயர்கள் உள்ளன.

http://kurumban.blogspot.com/2006/10/blog-post.html

நாமக்கல் சிபி said...

1.பூங்குழலி
2.எழிலரசி

நாமக்கல் சிபி said...

3.ஓவியா
4.தமிழரசி

சுந்தரவடிவேல் said...

பூமணி
அனிச்சம்
ஆம்பல்
தாமரை
நெல்லி
கயல்விழி
நித்திலா
தேமலர்
மேகலை
முத்தணி
சுடர்
கதிர் (பெண்ணுக்கும் வைக்கலாம்)
பொன்னொளி

கொஞ்ச நாளைக்கு முந்தி எழுதி வச்சிருந்தேன். கிடைச்சா சொல்றேன்.
அன்னைக்கும் (நண்பருக்கும்), குழந்தைக்கும் வாழ்த்துக்கள்!

Anonymous said...

சங்கமித்ரா, சுந்தரி, மைதிலி, யசோதா இதெல்லாம் தமிழ் பெயர் கிடையாது!

மதுமிதா,மதுரீமா தமிழ் பெயரா? அப்படின்னா அதுக்கு பொருள் என்ன?

சில்பா'லாம் ரொம்பஓவர்!!

MSATHIA said...

அமுதா,
முகிலழகி,
முகிலரசி,
மல்லிகா,
அப்பிடின்னெல்லாம் இருந்தாலும் எனக்கு பிடிச்ச தமிழ் பேர்னா அது: யாழினி

Rasigan said...

NILA - நிலா.

Anonymous said...

dhamayanthi.
illana porkodi nu vaikkalam! :-)

கோபிநாத் said...

ஆனந்தி

காவியா

தாமரை

அமுதா

தமிழரசி

பூங்கோதை

கோபிநாத் said...

\\கோபி ரீப்பிட்டுனு போட்டுடாத)\\

எல...வரவர உனக்கு குசும்பு ஓவர ஆகிடுச்சுல

குமரன் (Kumaran) said...

http://babynames.indastro.com/tamilonefA.html
http://www.anbutamil.com/GirlNamesA.htm
http://www.shaivam.org/snmgtham.htm

G.Ragavan said...

குழந்தைக்கும் பெற்றோருக்கும் எனது வாழ்த்துகள்.

மேகலை....புதுமையா வேணும்னா மேகலா

அங்கவை...புதுமையா வேணும்னா அங்கவி

நானானி said...

புது வரவுக்கு வாழ்த்துக்களும் ஆசிகளும்!
என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்..?
'இந்தியா..குமுதா..மலர்..குஞ்சு..?

ஷைலஜா said...

திருமாமகள்
தாமரைச் செல்வி
தென்றல்கனி
அல்லிராணி
எழிலரசி
மணிமேகலை
தமிழ்க்கொடி
திருவரமங்கை
முல்லைநாயகி
மலர்க்கொடி
மலர்விழி
மதுரநாயகி


வெட்டிப்பயல் இதுல ஏதாவது தேறுமா பாருங்க
ஷைலஜா

யாத்ரீகன் said...

Poovithal

கருப்பு said...

தமிழினி
வாசுகி
தேன்மொழி
பூவிழி
கவிதா
பூங்குழலி
அனிதா
அன்புமலர்
தேம்பாவணி
கண்மணி
புனிதா
ரேணுகா
மலர்விழி

Anonymous said...

Hridhya
Sakthi
Dhurka

--Bala

Anonymous said...

shivani
thulasi
nandhini

Anonymous said...

srinithi

வெட்டிப்பயல் said...

பின்னூட்டத்தில் பெயர் சொல்லிய அனைவருக்கும் நன்றி...

யாரது யாரது எல்லாரும் கேக்கறாங்க... யாருனு எனக்கும் தெரியாது...

அப்படியே அந்த பெயர் எந்த மதத்திற்கும் சம்பந்தமில்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்...

தற்போது தான் நன்றாக கவனித்தேன்... அவர் இஸ்லாமிய நண்பர் என்பதை.

இதோ அவர் அனுப்பிய மடல்
//
உங்கள் வலைப்பதிவின்முலம், உங்களை அறிவேன். ஆனால் பின்னுட்டம் இட்டதில்லை. எனக்கு பெண் குழந்தைகளுக்கு சூட்டக்கூடிய தமிழ் பெயர்கள் வேண்டும். ஒரு நிபந்தனை, எழுதுவதற்கு தமிழிழும் சரி ஆங்கிலத்திலும் சரி, எளிமையாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஒரு வலைப்பதிவிட்டு, ஏனய வலைப்பதிவு அன்பர்களின் பங்களிப்பையும் பெறமுடியும்.
//

யாரும் திட்டாதீங்க...

பேர வெச்சி அந்த மதம்னு தெரியாத மாதிரி அழகான தமிழ் பேரா சொல்லுங்களேன்.. ப்ளீஸ்...

அபி அப்பா said...

அபிராமி

Thiru said...

Sakura - is the name of a Japanese flower, and a famous girl name...

மு.கார்த்திகேயன் said...

சங்கவி
மணிமேகலை (மேகலா)

மேல நிறைய பேர் நிறைய சொல்லி இருக்காங்களே வெட்டி.. உங்க பிரண்ட் பாடு திண்டாட்டம் தான் ;-)

சேதுக்கரசி said...

http://www.pudhucherry.com/pages/baby.html

களவாணி said...

அவ்வை
கொற்றவை
உமை
கண்ணகி
கயல்விழி
கலைமகள்
மலைமகள்
நாமகள்
சிலம்பி
அங்கவை
சங்கவை

என்னங்க இது ஒரே பாட்டிங்க பேரா இருக்கு பிறந்து இருக்குறது குழந்தை...

எனக்கு பிடித்த தமிழ் பெயகள்ன்னா

பவித்ரா
தமிழ்ச்செல்வி
தமிழ் (தமிழ் பேர் கேட்டிங்களே)
செல்வி (சத்தியமா எனக்கு சீரியல்லாம் பிடிக்காது இல்லாட்டி 'அபி'ன்ற பேரையும் சேர்த்திருப்பேனே.

Syam said...

வெட்டி எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் வைக்கலாம்னு செலக்ட் பண்ணி வெச்சுருந்த பேரு இங்க...இந்த ஊர்காரங்களுக்கும் சொல்ல ஈஸியா இருக்கும்...

நிதி - Nithi

Anonymous said...

மகிழ்யா

i dont think its suitable for english writing..

இராம்/Raam said...

பனிமலர்


இந்த பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும்ப்பா :)

Anonymous said...

நிஹிலா>NIHILA சிறினிதி SRINITHI

நல்ல பேரு வாங்க குழந்தைக்கு வாழ்த்துக்கள்.


புள்ளிராஜா

கருப்பையா said...

Kamala - கமலா

Anonymous said...

Kamini
Jayasree
Rishika
Anu

Anonymous said...

malar - easy and simple name

கோழை said...

பானு
இது எல்லா மதத்துக்கும் பொருந்தும்...
உச்சரிப்பும் இலகுவானது...

இரா.செந்தில் said...

வாழ்த்துகள், தமிழில் பெயர் வைப்பதற்கு மற்றொரு வாழ்த்துகள்

இந்த தளம் நிறைய பெயர்களைக் கொண்டுள்ளது,
http://www.nithiththurai.com/name/index.html

Unknown said...

குமார் தமிழ் பெயரா?

Unknown said...

ராசி -மினம்
நட்சத்திரம்− ரேவதி
முதல் எழுத்து − ச,சா ,சி ,சீ , தோ, தொ,தே , தெ. நல்ல புதிய பெயர் சொல்லவும்