தேசமுதுரு - மாபெரும் வெற்றிப்படம் போக்கிரியை இயக்கிய பூரி ஜகந்நாத்தின் மற்றோரு படம்.
அல்லு அர்ஜுனின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடிய படம். படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார் அல்லு அர்ஜுன். அவரை அத்தனை விதத்திலும் சரியாக உபயோகப்படுத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் துவக்க காட்சியிலேயே அவரின் உழைப்பு தெரியும் விதத்தில் அமைத்திருப்பது இயக்குனரின் சிறப்பு.
கதை என்று பார்த்தால் பெரிதும் கவரும் விதத்தில் எதுவுமில்லை. ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார் நாயகன். தூள் பேட் ஏரியாவில் நடக்கும் தவறுகளை யாருக்கும் தெரியாமல் படம் பிடிக்க செல்கிறார். அங்கே நடக்கவிருக்கும் ஒரு கொலையை தடுக்க வில்லன்களுடன் சண்டை. அங்கே வில்லனின் மகனை அவர் அடிக்க அவர் கோமாவிற்கு செல்கிறார் (போக்கிரியில் மகேஷ் பாபுவிடம் முதல் சண்டையில் அடி வாங்கும் அதே நபர்)
வில்லன்களிடமிருந்து அவரை காப்பாற்ற அவரை குலுமானியில் நடக்கவிருக்கும் ஒரு படப்பிடிப்பு குழுவுடன் அனுப்புகிறார்கள். அங்கே ஒரு சந்நியாசிகளின் கூட்டத்தை சந்திக்கிறார். அங்கே கதாநாயகி சந்நியாசியாக இருக்கிறார். பார்த்தவுடனே நாயகியின் மேல் காதல் வயப்படுகிறார் அல்லு அர்ஜுன். பிறகு அவர்களுக்குள் எப்படி காதல் மலர்கிறது,சந்நியாசினி எப்படி சம்சாரியாகிறார், கதாநாயகியின் பின்புலம் என்ன மற்றும் வில்லன்களை நாயகன் எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.
சராசரியான இந்த கதையில் மிளிர்கிறார் அல்லு அர்ஜுன். அவருடைய எதார்த்தமான நடிப்பும் வசனமும் எப்போழுதும் போல் அருமை. சந்நியாசினியாக இருக்கும் நாயகியிடம் அவர் பேசுமிடங்களும் நன்றாக அமைந்திருக்கிறது.கதாநாயகி ஹன்சிகா - மெழுகு பொம்மை போல் இருக்கிறார். இதுவே சந்நியாசினி வேடத்திற்கு பொருந்துகிறது. ஒரு ஜாடையில் பூமிகாவை நினைவுப்படுத்துகிறார். பின்பாதியிலும், பாடல் காட்சிகளிலும் அவருடைய பணியை(?) செவ்வனே செய்துள்ளார்.
வில்லன் (கஜினி, தொட்டி ஜெயாவில் வருபவர்) தமிழ் நாட்டுக்காராக காண்பித்திருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் பேசம் தமிழ் கொடுரம். வேண்டுமென்றால் அதை தமிலுகு (தமிழ் + தெலுகு) என்று சொல்லி திருப்திப்பட்டுக்கொள்ளலாம். அவருடைய சத்தத்தையே தாங்க முடியாதென்றால் அதற்கு போட்டியாக சகுந்தலா (சொர்ணா அக்கா) வேறு சத்தம் போடுகிறார்.ஆனால் தெலுகு படத்திற்கு இது சாதாரணம்.
பாடல்கள் போக்கிரி அளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவு நன்றாகவே அமைந்திருக்கிறது. சண்டை காட்சிகள் போக்கிரியை விட அருமையாக அமைந்திருக்கிறது. அல்லு அர்ஜுனினை பிழிந்து எடுத்திருக்கிறார்கள். அவரும் சந்தோஷமாக உழைத்திருக்கிறார். நடனத்திலும் படம் கிளப்புகிறார்.
கண்டிப்பாக இது மற்றொரு போக்கிரி கிடையாது. ஆனால் ஆக்ஷன் பிரியர்கள் சந்தோஷமாக பார்க்கலாம். தமிழில் ஆர்யாவை வைத்து ரீ-மேக் செய்யலாம்.
64 comments:
இன்னொரு தெலுங்கு பட விமர்சனமா.... :))))
யாருப்பா இந்த அல்லிஅர்ஜுனா... எதோ வாரிசு நடிகர்தானே...
அப்பாலிக்கா பொங்கல் வாழ்த்துக்கள் வெட்டி... :)))
தெலுங்கு படம்.. தமிழ்ல விமர்சனம்..
இங்லீஷ்ல டைட்டிலா.... :))))
வாங்க அ.பிளேடு!!!
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!!
இப்பதான் பார்த்துட்டு வந்தேன்...
தல படம் அடுத்த வாரம் தான் ரிலிஸ் :-)
அல்லு அர்ஜுனுடைய அப்பா தயாரிப்பாளர்னு நினைக்கிறேன்...
//அரை பிளேடு said...
தெலுங்கு படம்.. தமிழ்ல விமர்சனம்..
இங்லீஷ்ல டைட்டிலா.... :))))//
தமிழ் ஆளுங்க யாராவது தேடினாங்கனா படிக்கலாமே ;)
மீண்டும் தெலுங்கு படமா? நல்லா இரு சாமி. நாளைக்கு ஆபீஸ் போகும் போது பக்கத்தில் இருக்கறவங்க எல்லாம் ஒரே மசாலா வாசனை அடிக்குதுன்னு கம்பிளெயிண்ட் பண்ணப் போறாங்க.
அந்த இரண்டாவது படத்தைப் பார்த்துட்டு கதாநாயகி பூமிகான்னே நினைச்சேன்.
பொங்கல் வாழ்த்துக்கள் வாத்தியாரே.
அல்லு அர்ஜூனின் அக்கா சிரஞ்சீவியின் மனைவி.அல்லு அர்ஜூனின் அப்பா ஒரு சினிமா தயாரிப்பாளர்.அல்லு அர்ஜூன் சென்னையில் பிறந்தவர்.சிரஞ்சீவியின் மனைவியும் சென்னையில் பிறந்து சென்னையிலே வளர்ந்தவர்தான்.
சிரஞ்சீவி குடும்பத்திலும்,அல்லு அர்ஜுனா குடும்பத்திலும் தமிழ் நன்றாகப் பேசுவார்கள்.
பொங்கல் வாழ்த்துக்கள் வெட்டி..
படம் பத்தியெல்லாம் நமக்கு தெரியாது.. படத்தோட நாயகி பூமிகா தங்கைன்னு யாரோ சொல்லக் கேள்விங்க..
'தல'யோட 'அன்னாவரத்தை கண்டுக்கல போலிருக்கே
//இலவசக்கொத்தனார் said...

//
கொத்ஸ் நான் என்ன செய்ய? பக்கத்துல இருக்கிற தியேட்டர்ல தெலுகு படம் தான் வருது. ஆழ்வார் அடுத்த வாரம் 30 மைல் தள்ளி ஒரு தியேட்டர்ல வருது... படம் ரிவியூ பார்த்தா போக முடியாதுனு நினைக்கிறேன்.
பூமிகா மாதிரி தான் இருக்காங்க :-)
அதுதான் நமக்கு முக்கியமே.
பொங்கல் வாழ்த்துக்கள் கொத்ஸ்...
//பொங்கல் வாழ்த்துக்கள் கொத்ஸ்...//
நம்ம பொங்கல் போனஸ் பார்த்தீங்கதானே.
(ஒரு சின்ன விளம்பரம். ஹிஹி)
வெட்டிகாரு, நிமகூ பொங்கலூ ஷுபாகாஞ்சனலு. பொங்கலு பொங்கிந்தா? (தெலுங்குக்காரங்க மன்னிக்கவும்)
இந்தப் படத்தோட போஸ்டர்களை நேத்து பி.வி.ஆர்ல பாத்தேன். இவரு நடிச்ச படங்கள முன்னால பாத்ததில்ல. இந்த நடிகரப் பாத்தா கதாநாயகனைப் பாக்குறோங்குறத விட அழகான கதாநாயகியப் பாக்குறோம்னுதான் தோணும். அதுனாலயோ என்னவோ இந்தப் படத்துல சட்டையே இல்லாம எல்லாப் போஸ்டர்லயும் நிக்குறாரு.
அரதப்பழசான ஊசிப்போன கதைமாதிரி தெரியுது. மசாலா வாடை வேற தூக்கலா தெரியுது. ஹ்ம்ம் தமிழ்ல ரீமேக் கொஞ்சம் சிரமம்தான். ஒரு தமிழர் திருநாள்ல சுந்தர தெலுங்கு படத்துக்கு விமர்சனமா? பெரிய ஆள்தான் வெட்டி, நீங்க.
பொங்கல் நல்வாழ்த்துக்கல்.
//Anonymous said...
அல்லு அர்ஜூனின் அக்கா சிரஞ்சீவியின் மனைவி.அல்லு அர்ஜூனின் அப்பா ஒரு சினிமா தயாரிப்பாளர்.அல்லு அர்ஜூன் சென்னையில் பிறந்தவர்.சிரஞ்சீவியின் மனைவியும் சென்னையில் பிறந்து சென்னையிலே வளர்ந்தவர்தான்.
சிரஞ்சீவி குடும்பத்திலும்,அல்லு அர்ஜுனா குடும்பத்திலும் தமிழ் நன்றாகப் பேசுவார்கள்.
//
ஆஹா... கலக்கறீங்களே!!!
அதனால தான் பவன் கல்யானை படத்துல அநியாயத்துக்கு வாரனாங்களா?
// மு.கார்த்திகேயன் said...
பொங்கல் வாழ்த்துக்கள் வெட்டி..
படம் பத்தியெல்லாம் நமக்கு தெரியாது.. படத்தோட நாயகி பூமிகா தங்கைன்னு யாரோ சொல்லக் கேள்விங்க..
//
பொங்கல் வாழ்த்துக்கள் கார்த்திகேயன்.
நீங்க சொல்றது புது விஷயமா இருக்கே!!! ஆனால் பார்த்தா அப்படித்தான் தெரியறாங்க :-)
//icarus prakash said...
'தல'யோட 'அன்னாவரத்தை கண்டுக்கல போலிருக்கே
//
வாங்க ப்ராகாஷ்...
முதல் தடவையா வந்திருக்கீங்கனு நினைக்கிறேன்!!!
அன்னவரம் நம்ம திருப்பாச்சியோட ரீமேக்!!! அத திரும்ப பாக்கற அளவுக்கு நமக்கு தைரியமில்லை :-)
//இலவசக்கொத்தனார் said...
//பொங்கல் வாழ்த்துக்கள் கொத்ஸ்...//
நம்ம பொங்கல் போனஸ் பார்த்தீங்கதானே.
(ஒரு சின்ன விளம்பரம். ஹிஹி)
9:11 AM
//
பார்த்தாச்சி :-)
பின்னூட்டமும் போட்டாச்சி :-)
பொங்கள் வாழ்த்துக்கள் வெட்டி தம்பி. கொல்டின்னு கத எழுதற,அவங்ககூட போயி நடுப்பர உக்காந்துகிட்டு ஜாலியா ஆக்ஷன் படம் பாக்குர,தெலுகு பட விமர்சனம் பன்னுர,அது நல்லால்லன்னா உக்காந்து 'ஒ'ன்னு அழுவுர,ஏம்பா..அப்டீன்னா'கொல்டி' உண்மை கதை தனே?? விட்ட கொர தொட்ட கொரயா?
//அன்னவரம் நம்ம திருப்பாச்சியோட ரீமேக்!!! அத திரும்ப பாக்கற அளவுக்கு நமக்கு தைரியமில்லை :-)//
அன்னவரம் பாத்த நம்ம ரூம்மேட் பேயரஞ்ச மாதிரி இருந்தாரு. இத்துபோன ஒரு கதையோட ரீமேக்குக்கு என்னவொரு பில்டப் கொடுத்தாங்க.
நீங்க சொல்றத பாத்தா, தேசமுதுரு சூப்பர்ஹிட் ஆகும்ப்போல.
யோகி, மஹாரதி பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?
அட இத மறந்தாச்சு.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
எல்லாரும் குரு, போக்கிரி, அரைத்த மசாலக்கள் அரைத்தால், இண்டெர்னேஷனல் ரேஞ்சுக்கு இறங்கியிருக்கீங்க :)
நன்றீ
--ஒரு ஜாடையில் பூமிகாவை நினைவுப்படுத்துகிறார்.---
அதே.. அதே!
//G.Ragavan said...
வெட்டிகாரு, நிமகூ பொங்கலூ ஷுபாகாஞ்சனலு. பொங்கலு பொங்கிந்தா? (தெலுங்குக்காரங்க மன்னிக்கவும்)
//
பாக பொங்கிந்தி (என்னையும் மன்னிச்சிடுங்க :-))
//
இந்தப் படத்தோட போஸ்டர்களை நேத்து பி.வி.ஆர்ல பாத்தேன். இவரு நடிச்ச படங்கள முன்னால பாத்ததில்ல. இந்த நடிகரப் பாத்தா கதாநாயகனைப் பாக்குறோங்குறத விட அழகான கதாநாயகியப் பாக்குறோம்னுதான் தோணும். அதுனாலயோ என்னவோ இந்தப் படத்துல சட்டையே இல்லாம எல்லாப் போஸ்டர்லயும் நிக்குறாரு.
//
உடம்பை நல்லா டெவலப் பண்ணியிருக்காருங்க ஜி.ரா. அதுக்கு பாராட்டியே ஆகனும்...
//ஒரு ஜாடையில் பூமிகாவை நினைவுப்படுத்துகிறார்//
அப்போ அது பூமிகா இல்லயா?
நீ ஆந்திராவிலதான் வாக்கப்பட போற! :))
உள்ளம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
//ILA(a)இளா said...
அரதப்பழசான ஊசிப்போன கதைமாதிரி தெரியுது. மசாலா வாடை வேற தூக்கலா தெரியுது. ஹ்ம்ம்
//ஆமாம் விவா...
கதை எதுவும் புதுசு இல்லை...
//
தமிழ்ல ரீமேக் கொஞ்சம் சிரமம்தான். ஒரு தமிழர் திருநாள்ல சுந்தர தெலுங்கு படத்துக்கு விமர்சனமா? பெரிய ஆள்தான் வெட்டி, நீங்க.
//
சங்கராந்திக்கு போட்டேனு வெச்சிக்கோங்க :-)
//
பொங்கல் நல்வாழ்த்துக்கல்.//
தங்களுக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
//Abi Appa said...
பொங்கள் வாழ்த்துக்கள் வெட்டி தம்பி. கொல்டின்னு கத எழுதற,அவங்ககூட போயி நடுப்பர உக்காந்துகிட்டு ஜாலியா ஆக்ஷன் படம் பாக்குர,தெலுகு பட விமர்சனம் பன்னுர,அது நல்லால்லன்னா உக்காந்து 'ஒ'ன்னு அழுவுர,ஏம்பா..அப்டீன்னா'கொல்டி' உண்மை கதை தனே?? விட்ட கொர தொட்ட கொரயா?//
அண்ணே!!!
பல முறை ஏற்கனவே சொல்லியாச்சு. எங்க வீட்ல இருந்து ஒரு மைல்ல இருக்குற தியேட்டர்ல படம் போட்டாங்க. என்கிட்ட கார் இல்லை. எங்க பக்கத்து வீட்ல இருக்குற தெலுகுக்காரரோட தொத்திக்கிட்டு போயிட்டோம். தெலுகு ரூமேட் கூட ஆறு மாசம் தினமும் படம் பார்த்து எனக்கு தெலுகு படம் புரியும். பேச வராது. போதுமா???
கொல்ட்டி கதை... கதை தான் :-)
//அண்ணே!!!

கொல்ட்டி கதை... கதை தான் :-) //
சரி சரி ஏன் இத்தனை டென்ஷன்(சந்திரமுகி-ரஜினி-ஜோதிகா நாபகம் வருது)
பொங்கள் வாழ்த்துக்கள் !
- உண்மை
போன வாரம் தான் இவர் நடிச்ச ஒரு படம் பார்த்தேன்...பேரு பன்னோ பப்பாளியோ...படம் முழுக்க அதை சொல்லிட்டே இருப்பாங்க...சரத்குமார் கூட நடுவுல வந்து கத்திட்டு போனாரு...
இப்ப இவர் தான் மகேஷ் பாபுவுக்கு அடுத்து டோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாமே?
//அல்லு அர்ஜூனின் அக்கா சிரஞ்சீவியின் மனைவி.அல்லு அர்ஜூனின் அப்பா ஒரு சினிமா தயாரிப்பாளர்.அல்லு அர்ஜூன் சென்னையில் பிறந்தவர்.சிரஞ்சீவியின் மனைவியும் சென்னையில் பிறந்து சென்னையிலே வளர்ந்தவர்தான்.
சிரஞ்சீவி குடும்பத்திலும்,அல்லு அர்ஜுனா குடும்பத்திலும் தமிழ் நன்றாகப் பேசுவார்கள்.
//
//ஆஹா... கலக்கறீங்களே!!!
அதனால தான் பவன் கல்யானை படத்துல அநியாயத்துக்கு வாரனாங்களா?//
Allu Arjun's father Allu Arvind is brother-in-law of Chiranjeevi and Pawan Kalyan.
check this,
http://en.wikipedia.org/wiki/Allu_Aravind
http://en.wikipedia.org/wiki/Allu_Arjun
chiranjeevi married Allu Ramalingaih's
daughter,who is Allu Arjun's father.
check....check........
http://en.wikipedia.org/wiki/Chiranjeevi
//பெத்த ராயுடு said...
//அன்னவரம் நம்ம திருப்பாச்சியோட ரீமேக்!!! அத திரும்ப பாக்கற அளவுக்கு நமக்கு தைரியமில்லை :-)//
அன்னவரம் பாத்த நம்ம ரூம்மேட் பேயரஞ்ச மாதிரி இருந்தாரு. இத்துபோன ஒரு கதையோட ரீமேக்குக்கு என்னவொரு பில்டப் கொடுத்தாங்க.
//
ஆனா படம் வசூல் பட்டைய கிளப்பிடுச்சி. முதல் வாரத்திலே 5 கோடி கலெக்ஷன்...
//
நீங்க சொல்றத பாத்தா, தேசமுதுரு சூப்பர்ஹிட் ஆகும்ப்போல.
//
படம் ஹிட் எல்லாம் ஆகதுனு நினைக்கிறேன். ஆனா அல்லு அர்ஜினுடைய கெரியர்ல முக்கியமான படம்...
//
யோகி, மஹாரதி பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?
//
இல்லைங்களே :-(
//பெத்த ராயுடு said...
அட இத மறந்தாச்சு.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
//
மிக்க நன்றி!!!
தங்களுக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
// Boston Bala said...
எல்லாரும் குரு, போக்கிரி, அரைத்த மசாலக்கள் அரைத்தால், இண்டெர்னேஷனல் ரேஞ்சுக்கு இறங்கியிருக்கீங்க :)
//
என்னங்க தலைவா செய்ய? எல்லாரும் முன்னாடியே எழுதிடறாங்க. குரு பார்த்துட்டேன்... ஆனா என்ன எழுதறதுனு தெரியல :-)
//
--ஒரு ஜாடையில் பூமிகாவை நினைவுப்படுத்துகிறார்.---
அதே.. அதே!
//
:-))
//தம்பி said...
//ஒரு ஜாடையில் பூமிகாவை நினைவுப்படுத்துகிறார்//
அப்போ அது பூமிகா இல்லயா?
//
இல்லைப்பா.. இது புதுசு ;)
//
நீ ஆந்திராவிலதான் வாக்கப்பட போற! :))
//
அடப்பாவீ!!! ஏன் இந்த கொல வெறி உனக்கு???
//
உள்ளம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
//
தங்களுக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
//Abi Appa said...
//அண்ணே!!!
பல முறை ஏற்கனவே சொல்லியாச்சு. எங்க வீட்ல இருந்து ஒரு மைல்ல இருக்குற தியேட்டர்ல படம் போட்டாங்க. என்கிட்ட கார் இல்லை. எங்க பக்கத்து வீட்ல இருக்குற தெலுகுக்காரரோட தொத்திக்கிட்டு போயிட்டோம். தெலுகு ரூமேட் கூட ஆறு மாசம் தினமும் படம் பார்த்து எனக்கு தெலுகு படம் புரியும். பேச வராது. போதுமா???
கொல்ட்டி கதை... கதை தான் :-) //
சரி சரி ஏன் இத்தனை டென்ஷன்(சந்திரமுகி-ரஜினி-ஜோதிகா நாபகம் வருது)
//
கண்டபடி கேள்வி கேட்டா டென்ஷனாகாம என்ன செய்ய?
//Anonymous said...
பொங்கள் வாழ்த்துக்கள் !
- உண்மை
//
உண்மை மிக்க நன்றி!!!
தங்களுக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
//கப்பி பய said...
போன வாரம் தான் இவர் நடிச்ச ஒரு படம் பார்த்தேன்...பேரு பன்னோ பப்பாளியோ...படம் முழுக்க அதை சொல்லிட்டே இருப்பாங்க...சரத்குமார் கூட நடுவுல வந்து கத்திட்டு போனாரு...
//
bannyனு நினைக்கிறேன்பா...
//
இப்ப இவர் தான் மகேஷ் பாபுவுக்கு அடுத்து டோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாமே?
//
அப்படியெல்லாம் இல்லைப்பா...
நிறைய பேர் இருக்காங்க...
இருந்தாலும் இவர் நல்லா வருவார்னு நினைக்கிறேன்.
//Anonymous said...
//அல்லு அர்ஜூனின் அக்கா சிரஞ்சீவியின் மனைவி.அல்லு அர்ஜூனின் அப்பா ஒரு சினிமா தயாரிப்பாளர்.அல்லு அர்ஜூன் சென்னையில் பிறந்தவர்.சிரஞ்சீவியின் மனைவியும் சென்னையில் பிறந்து சென்னையிலே வளர்ந்தவர்தான்.
சிரஞ்சீவி குடும்பத்திலும்,அல்லு அர்ஜுனா குடும்பத்திலும் தமிழ் நன்றாகப் பேசுவார்கள்.
//
//ஆஹா... கலக்கறீங்களே!!!
அதனால தான் பவன் கல்யானை படத்துல அநியாயத்துக்கு வாரனாங்களா?//
Allu Arjun's father Allu Arvind is brother-in-law of Chiranjeevi and Pawan Kalyan.
check this,
http://en.wikipedia.org/wiki/Allu_Aravind
http://en.wikipedia.org/wiki/Allu_Arjun
//
விக்கிப்பீடியால கிடைக்காததே இல்லைனு ஆயிடுச்சு :-)
//Anonymous said...
chiranjeevi married Allu Ramalingaih's
daughter,who is Allu Arjun's father.
check....check........
http://en.wikipedia.org/wiki/Chiranjeevi
//
Thx a lot for the information my dear friend...
//சரி சரி ஏன் இத்தனை டென்ஷன்(சந்திரமுகி-ரஜினி-ஜோதிகா நாபகம் வருது)
//
கண்டபடி கேள்வி கேட்டா டென்ஷனாகாம என்ன செய்ய?//
சரி சரி ஏன் இத்தனை டென்ஷன்(சந்திரமுகி-ரஜினி-ஜோதிகா நாபகம் வருது)
//
திரு, பாலாஜி, மன்னிக்கவும்
//Anonymous said...
chiranjeevi married Allu Ramalingaih's
daughter,who is Allu Arjun's father.
check....check........
http://en.wikipedia.org/wiki/Chiranjeevi
//
Wrong!!...
Allu Ramalingiah's son is Allu Aravind.
Allu Aravind's son is Allu Arjun.
Allu Ramalingiah's daughter Sureka is married to Chiranjeevi.
So, Chiru is Allu Aravind's brother-in-law and Allu Arjun's uncle.
Chiranjeevi's brothers are Pawan Kalyan and Nagendra Babu.
Kosuru:
Now, Chiru's son Ram Saran Tej gonna debut very soon.
Hope this settles the issue once for all.
Pedharayudu
idhay sootula 'pokiri' vimarshanathayum podunga thoolaray..
- Guru
பாலாஜி,
நீ ரொமப நல்லவன்ப்பா... எப்பிடிதான் இந்தமாதிரி படமெல்லாம் பார்க்கிறீயோ.. :)
//Wrong!!...
Allu Ramalingiah's son is Allu Aravind.
Allu Aravind's son is Allu Arjun.
Allu Ramalingiah's daughter Sureka is married to Chiranjeevi.
So, Chiru is Allu Aravind's brother-in-law and Allu Arjun's uncle.
Chiranjeevi's brothers are Pawan Kalyan and Nagendra Babu.
Kosuru:
Now, Chiru's son Ram Saran Tej gonna debut very soon.
Hope this settles the issue once for all.
Pedharayudu//
ஒரு வழியா புரிஞ்சிடுச்சிங்க...
சாமீ... இப்பவே கண்ண கட்டுதே!!!
// Anonymous said...
idhay sootula 'pokiri' vimarshanathayum podunga thoolaray..
- Guru //
போக்கிரி வந்து 6 மாசத்துக்கு மேல ஆகுதே!!!
ஓ!!! நீங்க தமிழ் போக்கிரிய பத்தி சொல்றீங்களா? அது இங்க இன்னும் வரலை :-)
//இராம் said...
பாலாஜி,
நீ ரொமப நல்லவன்ப்பா... எப்பிடிதான் இந்தமாதிரி படமெல்லாம் பார்க்கிறீயோ.. :) //
உங்கள மாதிரி பெங்களூருல இருந்தா காசு கொடுத்தா கூட பார்க்க மாட்டேன்...
புலி பசிச்சா புல்ல தின்னு தான் ஆகனும் :-(
//Abi Appa said...
//சரி சரி ஏன் இத்தனை டென்ஷன்(சந்திரமுகி-ரஜினி-ஜோதிகா நாபகம் வருது)
//
கண்டபடி கேள்வி கேட்டா டென்ஷனாகாம என்ன செய்ய?//
சரி சரி ஏன் இத்தனை டென்ஷன்(சந்திரமுகி-ரஜினி-ஜோதிகா நாபகம் வருது)
//
திரு, பாலாஜி, மன்னிக்கவும் //
ஐயய்யோ, எதுக்குங்க பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு...
ஸ்மைலி போட மறந்துட்டேன் :-)))
பாலாஜி..படம் குப்பைன்னு கேள்விபட்டேன்..உன் விமர்சனம் பாஸிடிவா இருக்கே..இத தமிழ்ல வேற ரீமேக்கா வேண்டாம் சாமி..
இந்த வாட்டி நமக்கு போக்கிரிப் பொங்கல்..! படம் ஓடிடும்...வசந்தமுல்லை பாட்டு காமெடி..மத்தபடி வழக்கமான விஜய் டையலாக்ஸ்,போக்கிரி தெலுங்கில் பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது..
பார்த்துட்டு விமர்சனம் எழுது..
சங்கர்,
படம் குப்பையெல்லாம் இல்லை... ஆனா சூப்பர் படமும் இல்லை... அல்லு அர்ஜின் தான் படத்த தூக்கி நிறுத்தறார்...
முதல் பாதி கண்டிப்பா ரசிப்ப... ரெண்டாவது பாதி ஓரளவு சகிச்சி பார்ப்ப. ரிப்பீட்டட் ஆடியன்ஸ் கொஞ்சம் கஷ்டம் :-)
போக்கிரி பார்க்கணும்னு தான் ஆசை.. ஆனா தெலுகு போக்கிரி 20 தடவைக்கு மேல பார்த்தாச்சு... Frame by frame நியாபகம் இருக்கு. அதனால கண்டிப்பா விஜய் படம் பிடிக்காது...
விமர்சனம் நல்லா வந்திருக்கு.அந்த அம்மையாரை பார்த்தா சாமியார் மாதிரியா இருக்காங்க:))
ஐம்பதாவது பின்னூட்டம் எனது:)
படமும் ஐம்பது வாரம் ஓடும் என எதிர்பார்க்கலாமா?:)
ஏங்க நாந்தான் 50 அடிக்கறேனா?
//செல்வன் said...
விமர்சனம் நல்லா வந்திருக்கு.அந்த அம்மையாரை பார்த்தா சாமியார் மாதிரியா இருக்காங்க:))
ஐம்பதாவது பின்னூட்டம் எனது:)
படமும் ஐம்பது வாரம் ஓடும் என எதிர்பார்க்கலாமா?:) //
மிக்க நன்றி தலைவா!!!
சாமியார் கூட்டத்துல தவறி போய் சேர்ந்து சாமியாரா நடிப்பாங்க. நம்ம நாயகன் அவரை மாத்தி குத்துப்பாட்டு ரெண்டு ஆடறார் :-)
நீங்க தான் ஐம்பதாவது :-)
படம் 50 நாள் ஓடினாலே போதும் :-)
//இலவசக்கொத்தனார் said...
ஏங்க நாந்தான் 50 அடிக்கறேனா? //
கொத்ஸ்,
ஜஸ்ட் மிஸ்... இருந்தாலும் மொய் வெச்சிட்டீங்க :-)
யோவ் வெட்டி,தெலுங்கு போக்கிரி விமர்சனத்த பொடுப்பா.
பாலாஜி
விமர்சனத்திற்கு நன்றி
வெட்டி சார்,கொஞ்ச நாட்களாக உங்க blog எனக்கு square square a தெரியுது.ஏனுங்க அது? Sidelinks சரியா தமிழில் தெரியுது.comments,தொடுப்புகள் தெரியுது.ஆனா post மட்டும் படிக்க முடியலையே.நான் IE yil open செய்கிறேன்.மற்ற Blogs,comments படிக்க முடியுது.கொஞ்சம் என்ன பிரச்சனையா இருக்கலாம்னு யோசிச்சு உதவுங்களேன்.நன்றி.
//Anonymous said...
யோவ் வெட்டி,தெலுங்கு போக்கிரி விமர்சனத்த பொடுப்பா.
//
அனானி,
படம் வந்து 6 மாசத்துக்கு அப்பறம் விமர்சனமா?
புது படம் ஏதாவது வந்தா போடறேங்க :-)
//Sivabalan said...
பாலாஜி
விமர்சனத்திற்கு நன்றி
//
சிபா,
மிக்க நன்றி!!!
belated பொங்கல் வாழ்த்துக்கள் :-)
பொங்கல் ஸ்பெசலா தெலுங்கு பட விமர்சனமா...போட்டு தாக்குங்க... :-)
அதெப்படி ஒரு தெலுங்கு படத்தை இவ்வளவு அனுபவிச்சு பாத்திருக்கீங்க..
தெலுங்கு அவளோ நல்லா தெரியுமா..
http://ullathilirundhu.blogspot.com
//Syam said...
belated பொங்கல் வாழ்த்துக்கள் :-) //
நாட்டாமை,
மிக்க நன்றி!!!
தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!!
//Syam said...
பொங்கல் ஸ்பெசலா தெலுங்கு பட விமர்சனமா...போட்டு தாக்குங்க... :-) /
பொங்கலன்னைக்கு போனோம்...
சரினு வந்தவுடனே போட்டுட்டேன் :-)
//Ullathil Irundhu.......... said...
அதெப்படி ஒரு தெலுங்கு படத்தை இவ்வளவு அனுபவிச்சு பாத்திருக்கீங்க..
தெலுங்கு அவளோ நல்லா தெரியுமா..
http://ullathilirundhu.blogspot.com //
ஒரு மாசம் தொடர்ந்து பார்த்தா ஈஸியா புரிஞ்சிக்கலாம்... அப்பறம் யாராவது ஒரு தெலுகு ரூமேட் கூட தங்கிருங்க...
Post a Comment