டேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு,
"ஆச்சர்யம் தான்!
நட்பு கடலில்
முத்து குளித்து
வைரத்தை அல்லவா
எடுத்திருக்கிறேன்!!"
பெருமை பொங்க கேட்டாள் சுஜா...
"லூசா நீ? கடல்ல போய் வைரம் கிடைக்குமா? சும்மா எதையாவது அடிச்சு விட்டு கவிதைனு சொன்னா நாங்க நம்பிடுவோமா?" பாலா சொல்லி கொண்டிருக்கும் போதே சுஜாவின் முகம் துவண்டு போனது.
"உங்கிட்ட போயி இதை காட்னேன் பாரு. என் புத்திய செருப்பாலத்தான் அடிச்சுக்கனும்" அவள் சொல்லி முடிக்கவும் பாலா அவள் காலை பார்த்தான்.
"கட் ஷு போட்டிருக்கங்கற தைரியத்துல சொல்லிட்ட. சரி வீட்டுக்கு போன உடனே உனக்கு போன் பண்ணி ஞாபகப்படுத்தறேன்"
"சரிங்க சார். முதல்ல நீங்க இங்க இருந்து கிளம்புங்க. இது எங்க ப்ராஜக்ட் ஏரியா. நீங்க இங்க வரதே தப்பு" கொஞ்சம் சூடாக சொன்னாள்.
"ஐயோ உன்னைய பார்க்க யார் வந்தா? நான் இங்க என் பிரெண்ட் அனிதாவை பார்க்க வந்தேன். என்ன அனிதா நான் உன்னை பார்க்க வரக்கூடாதா?"
"நீ தாராளமா வரலாம் கிருஷ்ணா. உன்னை யார் வர வேணாம்னு சொல்றது?" பாலாவிற்கு சப்போர்டாக பேசினாள் அனிதா.
"அது" சுஜாவை வென்ற சந்தோஷத்தில் சொன்னான் பாலா.
பாலா (எ) பாலகிருஷ்ணா, அனிதா, சுஜா மூவரும் ஒரே கல்லூரியில் படித்து கேம்பஸ் இண்டர்வியுவில் அந்த மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்திருந்தனர். பாலாவும் சுஜாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது கல்லூரியிலிருக்கும் போதே அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதே போல அவர்களுக்குள் தினமும் நடக்கும் சண்டையும் பிரபலமானதே.
சுஜாவிற்கு எப்போழுதுமே பாலா அவள் மேல் எந்த அளவிற்கு நட்பாயிருக்கிறான் என்பதே கேள்வியாக இருக்கும். நண்பர்களுக்கு மத்தியிலிருக்கும் பொஸ்ஸசிவ்னஸ் அவளுக்கு எப்போழுதுமே அதிகமாக இருந்தது. ஆனால் பாலாவிற்கு அது இல்லாததால் அவன் அவளளவுக்கு நட்பாயில்லையோ என்ற சந்தேகம் எப்போழுதுமிருந்து கொண்டிருந்தது. இதை அவனிடமும் அடிக்கடி கேட்டு கொண்டிருப்பாள்.அதற்கு பெரும்பாலும் அவன் பதில் நக்கல் தோனியிலே இருக்கும்.
சரியாக 10 மணிக்கு சுஜாவின் செல்போன் சிணுங்கியது. Bala calling...
"சொல்லு... என்ன விஷயம்"
"வீட்டுக்கு போனவுடனே ஞாபகப்படுத்துறேனு சொன்னேனே... அதுக்கு தான் கூப்பிட்டேன்"
"என்னது?"
"இல்லை உன் புத்திய எதாலயோ அடிச்சிக்கனும்னு சொன்னியே அதை சொன்னேன்"
"இப்ப இதுக்கு தான் கூப்பிட்டியா?"
"இல்லை. தூக்கம் வரலை அதுக்கு தான் நீ என்ன பண்றனு கேக்கலாம்னு கூப்பிட்டேன்"
இருவரும் வழக்கம் போல் பல மணி நேரம் பேசிக்கொண்டு தூங்க சென்றனர்...
அடுத்த நாள் காலை...
பாலாவின் எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது.
"பாலா ஹியர்"
"ஏய் நான் தான்"
"நான் தான்னா? எனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. அதுல நீங்க யாரு?"
"ஹிம்.. கெய்தான் ஃபேன். அடிச்சேன்னு வெச்சிக்கோ அவ்வளவுதான். ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசனும்னு போன் பண்ணேன்"
"என்ன சீக்கிரம் சொல்லு... இந்த பக்கம் அந்த கல்கத்தா ஃபிகர் என்னையே லுக் விட்டுட்டு இருக்குது"
"நீ தேறவே மாட்ட. அப்பறம் நான் எழுதின கவிதையெல்லாம் எனக்கே ஃபார்வேர்டா வந்திருக்கு. இந்த கவிதை ஞாபகமிருக்கா?
பார்த்து கொண்ட நட்பு
பார்க்காத நட்பு
கைகோர்த்து திரிந்த நட்பு
துயரங்களில் தோள் தந்த நட்பு
வெற்றிகளை கொண்டாடும் நட்பு
இமை போல் காத்த நட்பு
இப்படியாய் பலவித நட்புகளை
பாடிய தமிழ் காவியங்கள்
வெட்கி ஓடி ஒளிந்து கொண்டனவாம்!!!
ஒரு தாயை போன்ற
உனது தூய்மையான அன்பில்
மழலையாய் தவழும்
எனது நட்பை பற்றி
இதுவரை பாடாததால்!!!!!!
இது போன வாரம் வந்துச்சு. இப்பக்கூட ஒண்ணு வந்திருக்கு"
"இதுக்கு தான் இப்ப அவசரமா போன் பண்ணியா? நீயே எழுதி உனக்கு அனுப்பிட்டு இப்ப ஃபார்வேர்ட்ல வந்துச்சினு கதை விடறயா? வேணும்னா நீ யாருக்காவது அனுப்பிருப்ப.. அவன் படிச்சிட்டு இதெல்லாம் கவிதையானு சொல்லி உனக்கு ரிவர்ஸ்ல அனுப்பியிருப்பான். இதுக்கு இவ்வளவு பில்ட்-அப்பா?"
எதுவும் பேசாமல் அவள் ரிஸிவரை வைத்ததில் அவளுடைய கோபம் அவனுக்கு புரிந்தது.
ஐந்து நிமிடத்தில் சுஜாவின் கணினியில் புதிய மின்னணு கடிதம் எட்டி பார்த்தது. அதை அவள் சொடுக்கவும் அது பாலாவிடமிருந்து என்று புரிந்தது.
அன்புள்ள தோழிக்கு,
நீ எனக்காக எழுதிய கவிதைகளை எனக்கு காட்டாமலே வைத்திருந்ததை அன்று எதேச்சயாய் பார்த்தேன். அதில் இந்த கவிதை என்னை மிகவும் பாதித்தது
என் பாசத்தை
நீ புரியாமலிருக்கலாம்
என் அன்பை
நீ அவமதிக்கலாம்
என் கவிதைகளை
நீ நிராகரிக்கலாம்
என்றாலும்
எனது அகராதியில்
நட்பென்ற வார்த்தைக்கு
அர்த்தமாய் இருப்பது
நீதான்.............
நீ மட்டும்தான்...........
எனக்கு உன்னை போல் கவிதைகளை எழுதவோ ரசிக்கவோ தெரியாது... நான் முயற்சிக்கவும் இல்லை...
என் தோழி எனக்காக எழுதிய கவிதைகள் இது என்று பெருமையாக என் நண்பர்களுக்கு (நமக்கு பொதுவான நண்பர்கள் அல்ல) அனுப்பினேன். அதை அவர்கள் வழக்கம் போல் ஃபார்வேர்ட் செய்து அது உனக்கே வந்து சேர்ந்துவிட்டது. நீ எழுதிய கவிதைகளை எத்தனை பேர் ரசித்திருக்கிறார்கள் பார். நான் உனக்கு கொடுக்க தவறிய உற்சாகத்தை இதன் மூலம் நீ பெறுவாய் என்றே நம்புகிறேன்.
எனக்கு கவிதை தெரியாதென்றாலும் இந்த வரிகளை முதல்முறையிலிருந்து இன்று வரை கேட்கும் போது உன் முகம் மட்டுமே நினைவுக்கு வருகிறது.
சுஜா பல நாட்களுக்காக வருந்தியதற்காக இன்று வருந்தினாள்... சந்தோஷத்துடன்.
123 comments:
ஆஹா........
தனுஷ் உருகி உருகி பாடுன பாட்டுக்கு இவ்வளவு சூப்பரா இன்னொரு பரிமானத்த கொடுத்துட்டிங்க வெட்டி.
// நான் உனக்கு கொடுக்க தவறிய உற்சாகத்தை இதன் மூலம் நீ பெறுவாய் என்றே நம்புகிறேன். //
கலக்கல்..............
வெளில காமிச்சுக்கிட்டா மட்டும்தான் நட்பா??? அழகா சொல்லியிருக்கீங்க......
சான்சே இல்ல. கலக்கறீங்க :))))))))))
//"தாயக நீயும் தலை கோத வந்தால்..."//- தலைப்பு
தாயாக
நல்லா இருக்கு.. ரொம்ப சின்னதாவும் இனிமையாகவும் :)
இது நட்பில்லை. நட்பில்லை. நட்பேயில்லை. இதுதான் காதலென்பதா! ஆமாம். ஆமாம். ஆமாவே ஆமாம்.
// இம்சை அரசி said...
ஆஹா........
தனுஷ் உருகி உருகி பாடுன பாட்டுக்கு இவ்வளவு சூப்பரா இன்னொரு பரிமானத்த கொடுத்துட்டிங்க வெட்டி. //
அவரு எங்க உருகி உருகிப் பாடுறது. ஒருவேளை உருகி உருகிப் பாடித்தான் இப்பிடி ஆயிட்டாரோ!
vetti,
simply superb. :-)
kavithai ellam enga sutathu ;-)
சூப்பர் கதை தல.... அசத்தல்.... உண்மையான நட்புக்குத்தான் நம்ம நக்கலா சொல்ற விஷயத்துல இருக்க உள்ளர்த்தம் கூட புரியும்... ரொம்ப எதார்த்தமா இருந்துச்சு....
யோவ், என்ன இந்தப் ப்க்கம் வந்தாலே ஒரு காதல் வாடையாவே இருக்கு உடம்பு எதாவது சரியில்லையா?
அருமையா எழுதி இருக்கீங்க பாலாஜி..
சிலருடைய உணர்வுகள் வெளியில் இருந்து பார்க்க பலாப்பழத்தின் முள்ளாய் குத்தினாலும் பிளந்து பார்த்தால் தேன் சுவை தருகிறது..
தாயாக நீயும் தலை கோத வந்தால் என்னும் வரியில் காதல் புரிகிறது...
காமம் ஒன்றே என் காதல் அல்ல
கண்டேனே உன்னை தாயாக
என்னும் பாடல் வரிகளுகேற்ற கதை பாலஜி..
வெட்டி நல்லா எழுதியிருக்கப்பா!!!! கலக்கு...
/ இது நட்பில்லை. நட்பில்லை. நட்பேயில்லை. இதுதான் காதலென்பதா! ஆமாம். ஆமாம். ஆமாவே ஆமாம்./
ஜிரா... சொல்லவேயில்ல???
கலக்குறா ... பாலா .... அருமை ..
ஆழமான நட்பு அழகான கதையில்!
இப்படி ஒவ்வொரு உள்ளங்களும் அன்பு, பாசம், நேசம், நட்பு இவற்றை எல்லாம் புரிந்து நடந்து கொண்டால் வாழ்வில் துன்பம் என்ற சொல்லிற்கே இடமில்லை.
பாராட்டுக்கள்!
கதை நல்லாயிருக்கு வெட்டி! வழக்கம் போல ரொம்ப இயல்பான நடையில் அருமையா இருக்கு!
காதல் மன்னன்...
ஜிகுஜிகு ஜிக்ச்சான்
காதல் மன்னன்...
ஜிகுஜிகு ஜிக்ச்சான்
யாருப்பா அது... வெட்டிக்கு பின்னாடி இருந்து இது மாதிரி குரல் கொடுக்குறது.
போச்சுடா. சாஃப்டுவேரு பொண்ணு பையன். கேம்பஸ் இன்டர்வியூ....
கவிஜைங்கோ...
ஹி... ஹி.. இருந்தாலும் நமக்கு புட்சிக்கீதே... ஏன் அது... ?
//இதுவரை பாடாத்தால்//
கவிதை கொஞ்சம் பாடா படுத்துதோ...
:))
வெட்டிப்பயல்னு பேரை வச்சிட்டு உருப்படியா நல்லாத்தான் எழுதறீங்க..தலைப்புக் கவிதை நிஜம்மா அசத்தல்.. நட்பு நட்புதான் காதல் காதல்தான்!
ஷைலஜா
கதை சூப்பர் வெட்டி.
//
சுஜா பல நாட்களுக்காக வருந்தியதற்காக இன்று வருந்தினாள்... சந்தோஷத்துடன்.
//
அருமையான வார்த்தைகளில் முடித்திருக்கிறீர்கள்.
சாஃப்டுவேர் குலமகளிர்களே... யாராவது இந்த வெட்டிய காதலோ கல்யாணமோ பண்ணுங்களேன்..
இவரோட காதல் கவிஜ கதைங்க தாங்கலை...
காதலை ஒஸ்தியா தூக்கி புட்சிக்னுகீறாரு..
ஒரு சிலருக்கு நாம சொன்னா புரியாது. பட்டாதான் புரியும்.
காதலோ கல்யாணமோ மேல ஏறி ஒரு நசுக்கு நசுக்குனா அப்பாலிக்கா வெட்டி இந்த மாதிரி கதை கவிஜ எயுதுவாருன்றீங்கோ...
:))))
மத்தவங்களுக்கு எல்லாம் அப்பாளிக்கா பதில் சொல்றேன்...
முதல்ல அ.பி,
இது காதல் கதை இல்லை...
நட்பு... நட்பு.. நட்பு...
இந்த கவிதை நான் எழுதல...
என் நண்பர் அவுங்க நண்பருக்கு எழுதியது. கதையா எழுதி தர சொன்னாங்கனு நானும் எழுதி அவுங்களுக்கு கொடுத்ததோட என் ப்ளாக்ளையும் போட்டுக்கிட்டேன்...
Balaji,
Nice One!
Very nice one "Vetti".
- Unmai
வெட்டி இன்னாபா இது...
நட்பா இது ?
தாயாக தலை கோதுறது.. மடிமேல ஜனனம் எல்லாம் பண்ணிட்டு கேட்டா நட்பு அப்பிடிம்பீங்களா ?
நட்பை நீங்க இப்படி கேவலப்படுத்தறத வன்மையா கண்டிக்கறேன்....
நட்புன்ற பேர்ல பெண்கள் ஆண்களை அடிமையாக்கிடுவாங்கப்பா...
நட்புக்காக ஆட்டோ புடிச்சி கொடுக்கறது. பஸ் ரெயிலுக்கு டிக்கட் எடுத்து கொடுக்குறது.
அவங்க வூட்டுக்கு வேண்டிய மளிகை சாமான்லாம் வாங்கி கொடுக்கறது..
இது பத்தும் பத்தாததுக்கு அவங்க கவிஜைங்களை சகிச்சிக்க வேண்டியது ?
நம்மள நல்லா வேலை வாங்கிட்டு நாம என்ன சொன்னாலும் செய்யறாண்டா.. இவன் கேணையன்டான்னு அவங்க போயிக்னே இருப்பாங்க...
தேவையா இது எல்லாம்....
சொன்னால் தான் காதலா என்பது போல, சொன்னால் தான் நட்பா??
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித நட்பு அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது...
அ.பி,
தோழியின் பாசத்தில் அடுத்த பிறப்பில் அவளுக்கு பிள்ளையாய் பிறக்க வேண்டும்னு நினைப்பது எவ்வாறு தவறாகும்.
இங்கே பாலாவின் பின்புலம் நமக்கு தெரியாது...
நீங்க அம்மா பிள்ளை மேல வைக்கிற அன்பையே பணம் சம்பாதிச்சி கொடுக்கத்தான்னு சொல்லிட்டீங்க.. உங்கக்கிட்ட பசங்க பொண்ணுங்க நட்பை பத்தி சொன்னா ஆகுமா??? ;)
மிகவும் அழகான கதை பாலாஜி...இடை இடையே கவிதைகள் அற்புதம்!
//இம்சை அரசி said...
ஆஹா........
தனுஷ் உருகி உருகி பாடுன பாட்டுக்கு இவ்வளவு சூப்பரா இன்னொரு பரிமானத்த கொடுத்துட்டிங்க வெட்டி.
//
உண்மையாலுமே இந்த கதைல வர கவிதையும் கடைசி படமும் நண்பர் ஒருத்தவங்க எழுதி கொடுத்து என்னை கதையா மாத்தி தர சொன்னாங்க. உங்க வாழ்த்துக்கள் அவுங்களுக்கு தான் :-)
//
// நான் உனக்கு கொடுக்க தவறிய உற்சாகத்தை இதன் மூலம் நீ பெறுவாய் என்றே நம்புகிறேன். //
கலக்கல்..............
வெளில காமிச்சுக்கிட்டா மட்டும்தான் நட்பா??? அழகா சொல்லியிருக்கீங்க......
சான்சே இல்ல. கலக்கறீங்க :)))))))))) //
இது நம்ம எழுதுனது... மிக்க நன்றி!!!
//பொன்ஸ் said...
//"தாயக நீயும் தலை கோத வந்தால்..."//- தலைப்பு
தாயாக
நல்லா இருக்கு.. ரொம்ப சின்னதாவும் இனிமையாகவும் :) //
பொன்ஸக்கா மிக்க நன்றி!!!
மாத்தியாச்சு ;)
நீங்க சொல்லுறதும் கரீக்டோ .. நம்ம பார்வையே இப்படித்தான் போல ..
இன்னாமோ போப்பா..
நாட்டுல நட்புன்னு சொல்லிகிட்டு கட்டி பிடிச்சுக்னு பைக்ல பறக்கறவங்க நிறைய பேரு இருக்காங்கப்பா..
இவங்களால நீங்க சொல்லுற தூய்மையான நட்பை கூட நம்மளால புரிஞ்சிக்க முடியாம போயிடுது இல்லை....
நீங்க என்னதான் சொன்னாலும் தலைய கோதுறதையும் மடியில சாஞ்சிக்கறதையும் நம்மளால நட்புன்னு எடுத்துக்க முடியாது...
நீங்க கதையில சொல்லுற பொசசிவ்னஸ் காதல்ன்ற கருமத்துலதான் வரும். நட்புல வராது.
அது வந்துடுச்சினால கிரகம் இந்த காதல் வந்திடுச்சின்னு அர்த்தம்...
அதனாலதான் இத காதல் கதன்னு எடுத்துக்க வேண்டியதா பூடுது...
தலைய கோதுறதுன்னு தலைப்பு வெச்சிட்டு உள்ளாற நட்புன்னு காதுல பூ சுத்துனதுனாலதான் நாம குரல் குடுக்க வேண்டியதா பூடுச்சு...
எப்பிடியோ நட்போட நல்லா இருந்தா சரிதான்..
:)))))
//G.Ragavan said...
இது நட்பில்லை. நட்பில்லை. நட்பேயில்லை. இதுதான் காதலென்பதா! ஆமாம். ஆமாம். ஆமாவே ஆமாம். //
ஏன் இந்த கொல வெறி!!!
நட்பா இருக்க கூடாதா???
இது நட்பு தான் :-)
//நாகை சிவா said...
vetti,
simply superb. :-)
kavithai ellam enga sutathu ;-) //
புலி,
நீதான்யா என் இனம்...
கவிதை நான் எழுதியிருக்கமாட்டேனு நம்புன பாரு அங்க தான்யா நீ நிக்கிற...
கதை நல்லா இருக்குனு சொன்னதுக்கு ரொம்ப டாங்க்ஸ் ;)
//அமுதன் said...
சூப்பர் கதை தல.... அசத்தல்.... உண்மையான நட்புக்குத்தான் நம்ம நக்கலா சொல்ற விஷயத்துல இருக்க உள்ளர்த்தம் கூட புரியும்... ரொம்ப எதார்த்தமா இருந்துச்சு.... //
அமுதா,
உனக்கு புரியறது இங்க வயசானவங்களுக்கு எல்லாம் பிரிய மாட்டீங்குதே!!! நான் என்ன பண்ண???
//இலவசக்கொத்தனார் said...
யோவ், என்ன இந்தப் ப்க்கம் வந்தாலே ஒரு காதல் வாடையாவே இருக்கு உடம்பு எதாவது சரியில்லையா? //
யூ டூ கொத்ஸ்...
இது காதல் கதை இல்லை.
//மு.கார்த்திகேயன் said...
அருமையா எழுதி இருக்கீங்க பாலாஜி..
சிலருடைய உணர்வுகள் வெளியில் இருந்து பார்க்க பலாப்பழத்தின் முள்ளாய் குத்தினாலும் பிளந்து பார்த்தால் தேன் சுவை தருகிறது..
//
மிக்க நன்றி கார்த்தி...
சரியாக சொன்னீர்கள். எனக்கு தெரிந்த நிறைய நண்பர்கள் பலா பழம்தான் :-))
//
தாயாக நீயும் தலை கோத வந்தால் என்னும் வரியில் காதல் புரிகிறது...
காமம் ஒன்றே என் காதல் அல்ல
கண்டேனே உன்னை தாயாக
என்னும் பாடல் வரிகளுகேற்ற கதை பாலஜி.. //
இது காதல் இல்லை ;)
//அருட்பெருங்கோ said...
வெட்டி நல்லா எழுதியிருக்கப்பா!!!! கலக்கு...
//
மிக்க நன்றி MR. காதல்
//
/ இது நட்பில்லை. நட்பில்லை. நட்பேயில்லை. இதுதான் காதலென்பதா! ஆமாம். ஆமாம். ஆமாவே ஆமாம்./
ஜிரா... சொல்லவேயில்ல??? //
கொஞ்ச நாளாவே இப்படித்தான் இருப்பதாக கேள்வி... கொஞ்சம் பார்த்துக்கோங்கப்பா :-)
//சுந்தர் / Sundar said...
கலக்குறா ... பாலா .... அருமை .. //
சுந்தர்,
நண்பா... பாலா வேற பாலாஜி வேற. சரியா :-)
//சத்தியா said...
ஆழமான நட்பு அழகான கதையில்!
இப்படி ஒவ்வொரு உள்ளங்களும் அன்பு, பாசம், நேசம், நட்பு இவற்றை எல்லாம் புரிந்து நடந்து கொண்டால் வாழ்வில் துன்பம் என்ற சொல்லிற்கே இடமில்லை.
பாராட்டுக்கள்! //
மிக்க நன்றி சத்யா...
நீங்களாவது புரிஞ்சிக்கிட்டீங்களே!!!
//கப்பி பய said...
கதை நல்லாயிருக்கு வெட்டி! வழக்கம் போல ரொம்ப இயல்பான நடையில் அருமையா இருக்கு! //
ரொம்ப நன்றி கப்பி...
எல்லாம் நீங்க கொடுக்கற உற்சாகம் தான் :-)
//ஜி said...
காதல் மன்னன்...
ஜிகுஜிகு ஜிக்ச்சான்
காதல் மன்னன்...
ஜிகுஜிகு ஜிக்ச்சான்
யாருப்பா அது... வெட்டிக்கு பின்னாடி இருந்து இது மாதிரி குரல் கொடுக்குறது. //
எலேய்,
ஏன் உனக்கு இந்த கொல வெறி...
நான் காதல் கதை எழுதறதையே விட்டுடலாம் போல இருக்கே...
//அரை பிளேடு said...
போச்சுடா. சாஃப்டுவேரு பொண்ணு பையன். கேம்பஸ் இன்டர்வியூ....
கவிஜைங்கோ...
ஹி... ஹி.. இருந்தாலும் நமக்கு புட்சிக்கீதே... ஏன் அது... ?
//
ஏன்னு உங்களுக்கே தெரியும் :-)
//
//இதுவரை பாடாத்தால்//
கவிதை கொஞ்சம் பாடா படுத்துதோ...
:)) //
மாத்தியாச்சு ;)
மிக்க நன்றி!!!
//ஷைலஜா said...
வெட்டிப்பயல்னு பேரை வச்சிட்டு உருப்படியா நல்லாத்தான் எழுதறீங்க..
//
மிக்க நன்றி!!! பெயரில் என்ன இருக்கிறது :-)
//
தலைப்புக் கவிதை நிஜம்மா அசத்தல்.. நட்பு நட்புதான் காதல் காதல்தான்!
ஷைலஜா //
இதை அந்த கவிதை எழுதனவங்ககிட்ட சொல்லிடறேன் :-)
//Arunkumar said...
கதை சூப்பர் வெட்டி.
//
மிக்க நன்றி அருண்!!!
// //
சுஜா பல நாட்களுக்காக வருந்தியதற்காக இன்று வருந்தினாள்... சந்தோஷத்துடன்.
//
அருமையான வார்த்தைகளில் முடித்திருக்கிறீர்கள். //
ஆஹா...
எனக்கு பிடித்த வரிகளை சொல்லிவிட்டீர்கள்.. சந்தோஷம் :-)
//Sivabalan said...
Balaji,
Nice One! //
மிக்க நன்றி சிபா...
// Anonymous said...
Very nice one "Vetti".
- Unmai //
மிக்க நன்றி உண்மை!!!
//k@rthik said...
சொன்னால் தான் காதலா என்பது போல, சொன்னால் தான் நட்பா??
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித நட்பு அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது... //
கலக்கிட்டமா கார்த்தி!!!
மிக்க நன்றி!!!
//தமிழ்ப்பிரியன் said...
மிகவும் அழகான கதை பாலாஜி...இடை இடையே கவிதைகள் அற்புதம்! //
மிக்க நன்றி சங்கர்...
//எலேய்,
ஏன் உனக்கு இந்த கொல வெறி...
நான் காதல் கதை எழுதறதையே விட்டுடலாம் போல இருக்கே...//
எல... பின்னால இருந்து வேற எவனோதான்ல கொரல் கொடுத்தான். ஏம்ல என்னய சொல்லுத...
ஏன் இந்த கொலவெறி உமக்கு. நீங்க காதல் கதை எழுதினாத்தானே, இளவட்டங்கள் எங்களுக்கு பொழுது போகும்.
vankam,
iniku than intha kathai ya padichan.... inum en manasa vitu pogalaaaaaaa.... romba romba nala iruku.... suja , bala vin natpu migavum arumai.. ungal kathai payanam thodara valthukal
Irunga... ungala paarata dictionaryla vaartha thedittiruken... correcta edhuvum maata maatengudhu.. :(
Superb post.. idhoda 4 vaati padichitten.. koranjadhu innum oru 2 vaatiyaavadhu padippennu nenaikkaren :)
Indha line dhaan pudichirukkunnu solla mudiyaadha alavukku ella linesum super.. and kavidhaigal top class :)
dialogues ellam romba casuala practicala irukkaradhunaala romba easya unga kadhaiyoda atmospherela involve aagida mudiyudhu :)
Hats off!!! innnum neraya ezhudha vaazhthukkal :)
அ.பி,
வயசாயிடுச்சி இல்லை... அதனால உங்களுக்கு இதெல்லாம் புரியாது :-p
இது எனக்கு ஒருவர் சொன்ன கவிதைகளை வைத்து கற்பனையாக எழுதியது. நண்பர்கள் இருவரும் படித்து நன்றாக இருப்பதாகவே சொன்னார்கள். இங்க பார்த்திங்கனா சின்ன பசங்க எல்லாம் (திருமணமாகதவர்கள்) கதைல இருக்கறது நட்புனு சொல்றாங்க...
//ஜி said...
//எலேய்,
ஏன் உனக்கு இந்த கொல வெறி...
நான் காதல் கதை எழுதறதையே விட்டுடலாம் போல இருக்கே...//
எல... பின்னால இருந்து வேற எவனோதான்ல கொரல் கொடுத்தான். ஏம்ல என்னய சொல்லுத...
ஏன் இந்த கொலவெறி உமக்கு. நீங்க காதல் கதை எழுதினாத்தானே, இளவட்டங்கள் எங்களுக்கு பொழுது போகும். //
பின்னால இருந்து குரல் கொடுத்தாலும் அது முன்னால இருக்கறவங்களுக்கு கேக்க விடாம எதிர்த்து சவுண்ட் விட்டா தானே நம்ம நினைச்சத சாதிக்க முடியும்...
என்ன நான் சொல்றது ;)
// barathi said...
vankam,
iniku than intha kathai ya padichan.... inum en manasa vitu pogalaaaaaaa.... romba romba nala iruku.... suja , bala vin natpu migavum arumai.. ungal kathai payanam thodara valthukal //
பரணி,
மிக்க நன்றி!!!
கதை இன்று தான் எழுதினேன்...
இதை போலவே சில கதைகளை வலது பக்கத்தில் தொகுத்திருக்கிறேன்.. நீங்கள் படித்து மகிழலாம்.
//அ.பி,
வயசாயிடுச்சி இல்லை... அதனால உங்களுக்கு இதெல்லாம் புரியாது :-p//
:)))))))
சரி... சரி.. உங்களுக்கும் வயசாகும் இல்லை.. அப்ப புரிஞ்சிப்பீங்க.. :))
//G3 said...
Irunga... ungala paarata dictionaryla vaartha thedittiruken... correcta edhuvum maata maatengudhu.. :(
//
ஒரு வேளை Yellow Pagesல பார்த்திருப்பீங்களோ ;) (just kidding :-))
//
Superb post.. idhoda 4 vaati padichitten.. koranjadhu innum oru 2 vaatiyaavadhu padippennu nenaikkaren :)
//
ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களுக்கும் இந்த மாதிரி நண்பர் இருப்பாருனு நினைக்கிறேன்.
// Indha line dhaan pudichirukkunnu solla mudiyaadha alavukku ella linesum super.. and kavidhaigal top class :)
//
மிக்க நன்றி!!!
கவிதைக்கு சொந்தக்காரரே... இதை நோட் பண்ணிக்கோங்க :-)
//
dialogues ellam romba casuala practicala irukkaradhunaala romba easya unga kadhaiyoda atmospherela involve aagida mudiyudhu :)
Hats off!!! innnum neraya ezhudha vaazhthukkal :) //
கண்டிப்பா... நீங்க எல்லாம் கொடுக்கற உற்சாகம் தான் இதுக்கு காரணம்!!!
//அரை பிளேடு said...
//அ.பி,
வயசாயிடுச்சி இல்லை... அதனால உங்களுக்கு இதெல்லாம் புரியாது :-p//
:)))))))
சரி... சரி.. உங்களுக்கும் வயசாகும் இல்லை.. அப்ப புரிஞ்சிப்பீங்க.. :)) //
;)
சரி அப்ப நான் அ.பிஆ இருப்பேன்.. வெட்டியாக வேறு ஒருவர் இருப்பார் :-)
Balaji,
simply superb!!!
Romba romba romba nalla irukku....
//வேணும்னா நீ யாருக்காவது அனுப்பிருப்ப.. அவன் படிச்சிட்டு இதெல்லாம் கவிதையானு சொல்லி உனக்கு ரிவர்ஸ்ல அனுப்பியிருப்பான். இதுக்கு இவ்வளவு பில்ட்-அப்பா?//
:-))
பாலாஜி, யாராச்சும் உங்களை இப்படித் திட்டினாங்களா?
உங்க கதைகள் உங்களுக்கே வந்த கதை எங்களுக்கும் தெரியுமே! :-))
பாலாஜி, கதையுடன் கவிதையும் எழுதுங்களேன் என்று நேயர் விருப்பம் வைத்தேன்!
அதுக்காக இப்படியா? :-))
//ஒரு தாயை போன்ற
உனது தூய்மையான அன்பில்
மழலையாய் தவழும்
எனது நட்பு//
பாலாஜி, அடுத்த கதையின் கருவிற்கு லேசாக அடி போடற மாதிரி தெரியுதே!
//இது நட்பில்லை. நட்பில்லை. நட்பேயில்லை. இதுதான் காதலென்பதா! ஆமாம். ஆமாம். ஆமாவே ஆமாம்.//
இது காதலில்லை, காதலில்லை, காதல் இல்லவே இல்லை!
நட்பு, நட்பு, நட்பே!!!! :-)))
ரொம்ப நல்ல கதை!!!
its very correct that the friend ship also have possassiveness!
ரொம்ப எதிர்பார்த்தேன் ஏமாத்திட்டீங்களே
நட்பினை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் வெட்டி !! ரசித்தேன் !! :)
Nice story Balaji
// நீங்க என்னதான் சொன்னாலும் தலைய கோதுறதையும் மடியில சாஞ்சிக்கறதையும் நம்மளால நட்புன்னு எடுத்துக்க முடியாது...
//
அ.பி சார்....... சொல்றேன்னு என் மேல கோபப்படாதீங்க :)
உங்க இந்த lines-ஐ என்னால ஏத்துக்கவே முடியல.
உலகத்திலேயே எந்தவித உள்நோக்கமும் இல்லாத அன்புன்னா அது தாயன்புதான். அந்த மாதிரியானது friendship(நான் சொல்றது உண்மையான friendship பத்தி).
என்னோட தாயா நீ வந்தா உன் பிள்ளையா நான் வந்து பிறக்கனும்... உன்கிட்ட எனக்கு அந்த தூய்மையான அன்பு வேணும்னு சொல்ற வரிய இப்படி சொல்லிட்டீங்களேன்னு ரொம்ப கஷ்டமா இருக்குங்க அ.பி சார்......
காதல் கூட ஒருவிதத்துல சுயநலமான அன்புதான். தனக்கு மனைவி/கணவனா வரப் போறவங்க மேல இப்ப இருந்தே அன்பு வைக்கறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல.
ஆனா எந்த ஒரு விதத்துலயும் நமக்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தர் மேல வைக்கற அன்புதான் friendship.
overஆ பேசறேன்னு யாரும் என் மேல கோபபடாதீங்க. ஏதோ எனக்கு தோணினத சொன்னேன் :)))))))
சுஜா பல நாட்களுக்காக வருந்தியதற்காக இன்று வருந்தினாள்... சந்தோஷத்துடன். - idhu mudivu maadiri theriyalayae...;-)) nice one.. keep it up (sorry for typing in tanglish)
நல்ல கதை. அதை சொன்ன விதம் மிக அருமை.
http://ullathilirundhu.blogspot.com
// kala said...
Balaji,
simply superb!!!
Romba romba romba nalla irukku.... //
மிக்க நன்றி கலா...
தொடர்ந்து படிக்கவும்.
சூப்பர் VP.
// நான் உனக்கு கொடுக்க தவறிய உற்சாகத்தை இதன் மூலம் நீ பெறுவாய் என்றே நம்புகிறேன். //
அது!
நான் கூட இந்த மாதிரி பொஸசிவ் தான் எல்லா ரிலேஷன்ஸ்லயும். அது தேவையில்லாம காம்ளிகேர் பண்ணும்னு சொல்லியிருக்கிங்க. Agreed.
அருமையான குட்டி கதை.. super..
short and sweet!
அருமையான குட்டி கதை.. super..
short and sweet!
அருமையான குட்டி கதை.. super..
short and sweet!
ஆஹா.. அஹா..
வெட்டி தம்பி, எங்கேயோ சரியா எடக்கு முடக்கா அடி வாங்கியிருக்கப்பா காதல்ல. உன்னோட கொல்டியெ இன்னும் மனச பெசயுது.ஆனா இது லைட்டா கிக்கா இருக்கு.இதை கொஞ்சம் டெவலப்பன்னு..லாஸ்ட்ல எப்போதும்போல சோகத்துல விடாம எங்கள புது வருஷத்தில சநதோஷப்படுத்துப்பா.
hello vetti!!!
superappu... intha mathiri nalla chinna chinna kathai ezhuthina engala mathiri alungalukuellam evalavu vasathiya iruku.. officela aani pudungara velai jaasthiya achuna wait panna vendame enna agumo aduthathunu!!!
hellow araiblade....
ungaluku thaan vetti potu irukaru padivu padicha anubavikanum araya koodathunu.. ippadi ellam neenga pannakoodathunu thaan.. appadiyuma?? thiruthave mudiyathu
படிச்சிட்டு கன்னா பின்னான்னு ஃபீலிங்ஸ் ஆயிடுச்சுப்பா. இப்போதைக்கு வேற எதுவும் சொல்ல தோணலை.
//சுஜா பல நாட்களுக்காக வருந்தியதற்காக இன்று வருந்தினாள்... சந்தோஷத்துடன்//
எழுத்தாளர் டச். சூப்பர்.
:)
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//வேணும்னா நீ யாருக்காவது அனுப்பிருப்ப.. அவன் படிச்சிட்டு இதெல்லாம் கவிதையானு சொல்லி உனக்கு ரிவர்ஸ்ல அனுப்பியிருப்பான். இதுக்கு இவ்வளவு பில்ட்-அப்பா?//
:-))
பாலாஜி, யாராச்சும் உங்களை இப்படித் திட்டினாங்களா?
உங்க கதைகள் உங்களுக்கே வந்த கதை எங்களுக்கும் தெரியுமே! :-))//
ஆஹா.. இப்படி நமக்கே ரிவர்ஸ் லாஜிக் சொல்றீங்களே!!!
நம்ம கதை நமக்கு வரும்போது அது என் கதைனு நான் சொல்லிக்கறது இல்லை. கதை எப்படியிருக்குனு முதல்ல கேட்டுட்டு தான் நான் உண்மையையே சொல்லுவேன் :-)
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
பாலாஜி, கதையுடன் கவிதையும் எழுதுங்களேன் என்று நேயர் விருப்பம் வைத்தேன்!
அதுக்காக இப்படியா? :-))
//
இது நான் எழுதின கவிதை இல்லைங்கோ :-)
//
//ஒரு தாயை போன்ற
உனது தூய்மையான அன்பில்
மழலையாய் தவழும்
எனது நட்பு//
பாலாஜி, அடுத்த கதையின் கருவிற்கு லேசாக அடி போடற மாதிரி தெரியுதே!
//
அப்படியா தெரியுது? அடுத்த கதை தயாராத்தான் இருக்கு. நேரம் தான் இல்லை :-(
//
//இது நட்பில்லை. நட்பில்லை. நட்பேயில்லை. இதுதான் காதலென்பதா! ஆமாம். ஆமாம். ஆமாவே ஆமாம்.//
இது காதலில்லை, காதலில்லை, காதல் இல்லவே இல்லை!
நட்பு, நட்பு, நட்பே!!!! :-)))//
உங்களுக்காவது புரியுதே!!!
ரொம்ப சந்தோஷம்! :-)
//jvenga said...
Hai Balaji,
Regularly I am reading your blogs. All are very very nice. Even this story is also superb. Chanceless. Beautiful poetry lines. I like all the lines. Keep it up. We are expecting more and more from you.
by,
Your Fan,
V.Jeyaganapathi.//
Hi Jeyaganapathi,
thx a lot for ur comments...
Will try to give more :-)
//aparnaa said...
ரொம்ப நல்ல கதை!!!
its very correct that the friend ship also have possassiveness!//
மிக்க நன்றி அபர்ணா,
U r right!!! Possesiveness is more in Friendship...
//கார்த்திக் பிரபு said...
ரொம்ப எதிர்பார்த்தேன் ஏமாத்திட்டீங்களே//
சட்டியில இருக்கறதுதானே ஆப்பைல வரும் :-(
நமக்கு எழுத தெரிஞ்சது அவ்வளவுதான்...
//Naveen Prakash said...
நட்பினை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் வெட்டி !! ரசித்தேன் !! :)//
மிக்க நன்றி நவின் ப்ரகாஷ்...
சரியாக புரிந்து கொண்டீர்கள்!
//Anonymous said...
Nice story Balaji//
Tjx a lot friend :-)
இ.அரசி,
ரொம்ப சரியாக சொல்லியிருக்கிறீர்கள். ஓவரா எல்லாம் பேசல...
//Anonymous said...
சுஜா பல நாட்களுக்காக வருந்தியதற்காக இன்று வருந்தினாள்... சந்தோஷத்துடன். - idhu mudivu maadiri theriyalayae...;-)) nice one.. keep it up (sorry for typing in tanglish)//
கதைக்கு இதுதாங்க முடிவு...
நட்புக்கில்லை :-)
//Ullathil Irundhu.......... said...
நல்ல கதை. அதை சொன்ன விதம் மிக அருமை.
http://ullathilirundhu.blogspot.com//
உள்ளத்திலிருந்து வந்திருப்பது உண்மையாகத்தானிருக்கும்... மிக்க மகிழ்ச்சி :-)
//Priya said...
சூப்பர் VP.
// நான் உனக்கு கொடுக்க தவறிய உற்சாகத்தை இதன் மூலம் நீ பெறுவாய் என்றே நம்புகிறேன். //
அது!
நான் கூட இந்த மாதிரி பொஸசிவ் தான் எல்லா ரிலேஷன்ஸ்லயும். அது தேவையில்லாம காம்ளிகேர் பண்ணும்னு சொல்லியிருக்கிங்க. Agreed.//
நானுன் அப்படித்தாங்க...
இந்த மாதிரி சண்டை போட்டுட்டு சாப்பிடாம எல்லாம் இருந்திருக்கோம் (ஹாஸ்டல்ல படிக்கும் போது :-))
காம்ப்ளிகேட் ஆகும்னு நம்ம மனசுல இருக்கறதை மாத்தி சொல்ல முடியாது ;-)
//Dreamzz said...
அருமையான குட்டி கதை.. super..
short and sweet!//
மிக்க நன்றி ட்ரீம்ஸ்...
//.:: MyFriend ::. said...
ஆஹா.. அஹா..//
என்னங்க சொல்றீங்க? நல்லா இருக்கா?
//Abi Appa said...
வெட்டி தம்பி, எங்கேயோ சரியா எடக்கு முடக்கா அடி வாங்கியிருக்கப்பா காதல்ல. உன்னோட கொல்டியெ இன்னும் மனச பெசயுது.ஆனா இது லைட்டா கிக்கா இருக்கு.இதை கொஞ்சம் டெவலப்பன்னு..லாஸ்ட்ல எப்போதும்போல சோகத்துல விடாம எங்கள புது வருஷத்தில சநதோஷப்படுத்துப்பா.//
அப்படியெல்லாம் இல்லைங்க அபி அப்பா... கொல்ட்டி கதை முழுக்க முழுக்க கற்பனைதான்...
காதல் கதை எழுதினா அப்படி அர்த்தமா? நீங்க இப்படியெல்லாம் சொல்றதால நமக்கு இந்த மாதிரி கதை எழுதவே கஷ்டமா இருக்கு :-(
//dubukudisciple said...
hello vetti!!!
superappu... intha mathiri nalla chinna chinna kathai ezhuthina engala mathiri alungalukuellam evalavu vasathiya iruku.. officela aani pudungara velai jaasthiya achuna wait panna vendame enna agumo aduthathunu!!!
//
வாங்க சுதா... மிக்க நன்றி!!!
சிறுகதை எழுதி போர் அடிச்சா தொடர் கதை. தொடர் எழுதி போர் அடிச்சா சிறுகதை. அவ்வளவு தான் :-)
எதுவுமே தொடர்ந்து வராது...
//
hellow araiblade....
ungaluku thaan vetti potu irukaru padivu padicha anubavikanum araya koodathunu.. ippadi ellam neenga pannakoodathunu thaan.. appadiyuma?? thiruthave mudiyathu//
கரெக்டா சொன்னீங்க :-)
//கைப்புள்ள said...
படிச்சிட்டு கன்னா பின்னான்னு ஃபீலிங்ஸ் ஆயிடுச்சுப்பா. இப்போதைக்கு வேற எதுவும் சொல்ல தோணலை.
//
ரொம்ப நன்றி தல!!!
//
//சுஜா பல நாட்களுக்காக வருந்தியதற்காக இன்று வருந்தினாள்... சந்தோஷத்துடன்//
எழுத்தாளர் டச். சூப்பர்.
:)//
ஆஹா... நிஜமாவா சொல்றீங்க :-/
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//இது நட்பில்லை. நட்பில்லை. நட்பேயில்லை. இதுதான் காதலென்பதா! ஆமாம். ஆமாம். ஆமாவே ஆமாம்.//
இது காதலில்லை, காதலில்லை, காதல் இல்லவே இல்லை!
நட்பு, நட்பு, நட்பே!!!! :-))) //
என்னவோ போங்க. என்னமும் செய்யுங்க. விக்கிரமன் படம் பாக்குறவங்க நெறையப் பேரு இருக்காங்க போல. :-)
//G.Ragavan said...
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//இது நட்பில்லை. நட்பில்லை. நட்பேயில்லை. இதுதான் காதலென்பதா! ஆமாம். ஆமாம். ஆமாவே ஆமாம்.//
இது காதலில்லை, காதலில்லை, காதல் இல்லவே இல்லை!
நட்பு, நட்பு, நட்பே!!!! :-))) //
என்னவோ போங்க. என்னமும் செய்யுங்க. விக்கிரமன் படம் பாக்குறவங்க நெறையப் பேரு இருக்காங்க போல. :-)//
இது விக்ரமன் டச் இல்லை ஜி.ரா...
5 Star பாக்கலயா...
இல்லைனா நீங்க போற ஃபுட் கோர்ட்லயே பாருங்க.
பையனும் பொண்ணும் நல்ல பிரண்டா இருக்க முடியாதா???
நான் பார்த்து இருக்காங்க... ஒரு வேளை உங்க அனுபவம் வித்யாசமா இருக்கலாம் :-)
// என்னவோ போங்க. என்னமும் செய்யுங்க. விக்கிரமன் படம் பாக்குறவங்க நெறையப் பேரு இருக்காங்க போல. :-)//
இது விக்ரமன் டச் இல்லை ஜி.ரா...
5 Star பாக்கலயா...
இல்லைனா நீங்க போற ஃபுட் கோர்ட்லயே பாருங்க.
பையனும் பொண்ணும் நல்ல பிரண்டா இருக்க முடியாதா??? //
வெட்டி 5* முடிவு என்ன? அதையும் சொல்லு. நல்ல பிரண்டுன்னு எதச் சொல்ற நீ? நல்லா பழகுறது. ஆனா படுக்கையை மட்டும் பகுந்துக்காததா? அப்படிப் பகுந்துக்கிட்டா அது கெட்ட நட்பா? புரியலை சாமி. ஒருவேளை அப்படிப் பகுந்துக்கிட்டாலும் நல்ல நட்புதான்னு நான் சொல்வேன். அதுக்குப் பேர்தான் காதல். காதல்ல நட்பும் அடக்கம்.
// நான் பார்த்து இருக்காங்க... ஒரு வேளை உங்க அனுபவம் வித்யாசமா இருக்கலாம் :-) //
வித்தியாசமான அனுபவம். என்னோட அனுபவம். அடடா! நீ சொல்லும் போதே...ம்ம்ம்..அதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கனும். :-(
balaji..
nan barani ila barathi.... ungaloda ela pathivum nan padichutan.... kozhili.. super..
valthukal
ஜி.ரா,
5 Starல ஒரு நண்பன் மட்டும் பிரிஞ்சிடறான். மத்தவங்க எல்லாம் ஒண்ணாதான் இருக்கறாங்க...
நட்புக்கான இலக்கணங்களும், விதிமுறைகளும் நண்பர்களுக்கு மத்தியிலே தீர்மானிக்கப்படுகின்றன. அதை நாம் யாரும் சொல்வதற்கில்லை.
//barathi said...
balaji..
nan barani ila barathi.... ungaloda ela pathivum nan padichutan.... kozhili.. super..
valthukal
//
பாரதி,
மன்னிச்சிடுங்க.
சின்ன டெக்னிக்கல் ஃபால்ட் ;)
பாராட்டுக்கு மிக்க நன்றி!!!
கதை சூப்பரப்பு ;)
//இராம் said...
கதை சூப்பரப்பு ;)
//
மிக்க நன்றி ராயல் :-)
நானே 98
அபி சார்பாக 99
குடும்பத்தோடு வந்து ஒரு வோட்டு..வாழ்த்துக்கள். 100 க்கு.
எதுக்கும் இருக்கட்டும்...இது 101
அடுப்படியில கொஞ்சம் வேலையிருக்கு கெளம்புரேன்
போன தடவ மாதிரி கொத்ஸ் வந்து 100க்கு குத்தாட்டம் போடுறதுக்கு முன்ன நா வந்து போட்டேன்ல செம குத்து...எப்புடீடீடீ.. சந்தோசம் மகிழ்ச்சி
//கார்த்திக் பிரபு said...
ரொம்ப எதிர்பார்த்தேன் ஏமாத்திட்டீங்களே//
சட்டியில இருக்கறதுதானே ஆப்பைல வரும் :-(
நமக்கு எழுத தெரிஞ்சது அவ்வளவுதான்...
//
romba kaatammana padhil
//கார்த்திக் பிரபு said...
ரொம்ப எதிர்பார்த்தேன் ஏமாத்திட்டீங்களே//
சட்டியில இருக்கறதுதானே ஆப்பைல வரும் :-(
நமக்கு எழுத தெரிஞ்சது அவ்வளவுதான்...
//
romba kaatammana padhil
had a pleasant feeling after reading this story.
nice story.
--Sangeetha Kumaran
என்ன வெட்டி தம்பி, நா இங்க வந்து 100க்கு ஸ்லோ பால் போட்டுட்டு இருக்குற அந்த நேரத்துல நீங்க கொத்ஸ் வூட்டுக்கு போயி 100க்காக கும்மிட்டு இருந்தீங்க போல...பாத்தேன்...அவரு இப்போ 200 நோக்கி போயிட்டு இருக்கார்.
//Abi Appa said...
நானே 98//
மிக்க நன்றி!!!
//Abi Appa said...
அபி சார்பாக 99//
அபி பாப்பா,
மிக்க நன்றி!!!
//Abi Appa said...
குடும்பத்தோடு வந்து ஒரு வோட்டு..வாழ்த்துக்கள். 100 க்கு.//
மிக்க நன்றி அபி குட்டி மற்றும் குடும்பத்தினர்...
ஒரு வழியா இந்த கதையும் 100 அடிச்சாச்சி!!!
//Abi Appa said...
எதுக்கும் இருக்கட்டும்...இது 101 //
மொய் வெச்சதுக்கு நன்றி அபி அப்பா...
//Abi Appa said...
அடுப்படியில கொஞ்சம் வேலையிருக்கு கெளம்புரேன்//
ஆஹா நீங்க ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களே!!!
//Abi Appa said...
போன தடவ மாதிரி கொத்ஸ் வந்து 100க்கு குத்தாட்டம் போடுறதுக்கு முன்ன நா வந்து போட்டேன்ல செம குத்து...எப்புடீடீடீ.. சந்தோசம் மகிழ்ச்சி//
இப்படி எல்லாரும் போட்டி போட்டா ரொம்ப சந்தோஷமா இருக்குமே :-)
நன்றி நன்றி நன்றி!!!
//கார்த்திக் பிரபு said...
//கார்த்திக் பிரபு said...
ரொம்ப எதிர்பார்த்தேன் ஏமாத்திட்டீங்களே//
சட்டியில இருக்கறதுதானே ஆப்பைல வரும் :-(
நமக்கு எழுத தெரிஞ்சது அவ்வளவுதான்...
//
romba kaatammana padhil//
உண்மையத்தானே சொன்னேன்!!!
//Anonymous said...
had a pleasant feeling after reading this story.
nice story.
--Sangeetha Kumaran//
சங்கீத குமரன்,
மிக்க நன்றி!!!
ரொம்ப சந்தோஷமா இருக்கு!!!
// said...
என்ன வெட்டி தம்பி, நா இங்க வந்து 100க்கு ஸ்லோ பால் போட்டுட்டு இருக்குற அந்த நேரத்துல நீங்க கொத்ஸ் வூட்டுக்கு போயி 100க்காக கும்மிட்டு இருந்தீங்க போல...பாத்தேன்...அவரு இப்போ 200 நோக்கி போயிட்டு இருக்கார்.//
அபி அப்பா,
இங்க அநியாயத்துக்கு ஆணி புடுங்க வெச்சிட்டானுங்க... அதனாலதான் அதிகமா குத்தாட்டம் போட முடியல...
இப்பவே அங்க வரேன்...
ahh.. Kadhai yum kavithai yum Super nga!!
Vaazhthukal!!
கதை சூப்பரூ..
Mr. வெட்டிப்பயல்,
நல்ல கவிதைகளுடன் கூடிய கதைங்கோ!! தலைப்பும் மிகப் பொருத்தமாய்..
கலக்குறீங்க.. கவிதைகள் ரொம்ப நல்லாயிருக்கு.. "நட்பு என்னும் அகராதியில் நீ.. நீ மட்டும் தான்" நல்ல முத்தாய்ப்பாய் முடிச்சிருக்(கீ)காங்க...
வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிகள் மெருகடைய.
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
simply superb.
Super story. Kalakiteenga....
Super kavithai + Kathi...
kalakkeeteenganna....
வாவ் !
உணர்வுகளை கிளறும் கதைகளை நல்லா எழுதுறீங்க !!
ரொம்ப நல்லாருக்கு கதை.
Post a Comment