மக்கள்ஸ் கதை எழுதி போர் அடிச்சிடுச்சு... சரினு என்னோட முதல் தெலுகு பட அனுபவத்தை உங்களோட பகிர்ந்துக்கலாமனுதான் இந்த பதிவு... (எல்லா பதிவுக்கும் ஒரு விளக்கம் குடுக்க வேண்டியதா இருக்கே)
பெங்களூர்ல எலக்ட்ரானிக் சிட்டில தங்கி இருந்த சமயம். பக்கத்து ரூம்ல ஒரு பத்து ஆந்திர மக்கள்ஸ் ரூம் எடுத்து தங்கியிருந்தாங்க. ரொம்ப நல்ல பசங்க. நம்மகிட்டயும் ரொம்ப பாசமாவும் மரியாதையாவும் பேசுவாங்க.
ஒரு முக்கிய காரணம் நான் தினமும் எல்லாருக்கும் ஏதாவது சொல்லி கொடுத்துட்டு இருப்பேன். சொல்லி கொடுக்கறதுக்கு உனக்கு என்ன தெரியும்னு இங்க கேள்வி கேக்கப்படாது. அதே மாதிரி அவுங்களுக்கு தமிழ் படத்துல ஏதாவது டவுட்னாலும் நம்ம கிட்டதான் கேட்பாங்க. பாதி டிஸ்கஷன் ரீ-மேக் பத்திதான் இருக்கும்.
ஒரு நாள் ஞாயிற்று கிழமை மதியம், பாலாஜி இன்னைக்கு சிக்கன் செய்யறோம் நீயும் எங்க கூட வந்து சாப்பிடனும்னு ரொம்ப பாசமா கூப்பிட்டாங்க. சரி ஆந்திரா சாப்பாடும் காரமா நல்லாதான் இருக்கும்னு போனேன்.
அங்க போனவுடனே அவனுங்க என்னை கூப்பிட்டதுக்கான இன்னொரு காரணத்தை சொன்னாங்க. அவுங்க தலைவர் பாலக்கிருஷ்ணா நடிச்ச படத்தை நான் பார்க்கணும்தான் என்னைய கூப்பிட்டானுங்களாம். அந்த படம் ஆந்திரால பயங்கர ஹிட்டாம். படத்து பேரு "சமரசிம்மா ரெட்டி".
சரி சிக்கனுக்காக அந்த கொடுமைய தாங்கிக்கலாம்னு நானும் உக்கார்ந்திட்டேன். படத்துல பார்த்தா நம்ம சிம்ரனும் அஞ்சலா ஜவேரியும் இருந்தாங்க. சரினு ரொம்ப சந்தோஷமா அட நம்ம பசங்கனு கூட்டத்துக்கு நடுவுல போய் உக்கார்ந்துட்டேன். அதுதான் நான் பண்ண பெரிய தப்பு.
வழக்கம் போல ஒரு மணி நேரம் வரைக்கும் ஒரு பெரிய மேட்டரும் இல்லாம சாதரணமா போயிட்டு இருந்தது. திடீர்னு ஒரு ஃப்ளாஷ் பேக் . பொதுவா தெலுகு மசாலா படத்துல எல்லாம் ஒரு பயங்கரமான ஃப்ளாஷ் பேக் இருக்கும். அது எனக்கு அப்ப தெரியலை.
பாலைய்யா ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்... ரெட்டிதான். வழக்கம் போல ஒருத்தர ஒருத்தர் மாத்தி மாத்தி கொன்னுக்கறானுங்க. அப்பறம் ஹை-பிட்ச்ல டயலாக் வேற அப்பப்ப...
பாலாஜி இப்ப வரப்போறதுதான் படத்துலயே சூப்பரானு சீனு. தொன தொனனு பேசாம படம் பாருனு ஒருத்தவன் சொன்னான். அவன் கண்ணில கொஞ்சம் லேசா கொலை வெறி தெரிஞ்சிது.
நானும் அப்படி என்னடா முக்கியமா சீன்னு பார்த்தா... வில்லனோட கைய பாலைய்யா தொரத்தி தொரத்தி வெட்டறார். அந்த வெட்டு பட்ட கையோட ரத்தம் ஒழுக ஒழுக அந்த வில்லன் தெரிச்சி ஓடறார். தெரு தெருவா ஓடறான். இவனுங்களா அங்க போறான் பிடி இங்க போறான் பிடினு சவுண்ட் விட்டுட்டு இருக்கானுங்க.
எனக்கா பீதி கிளம்புது. ஆஹா. இதுக்கு மேல இங்க உக்கார்ந்தா நம்மல போட்டு தள்ளிடுவானுங்களோனு பயந்து எழுந்திரிக்க முயற்சி செஞ்சேன். அப்ப பார்த்து பின்னாடி இருந்து ஒரு சவுண்ட்... டேய் எந்துக்குடா லேசாவு??? கூச்சோடானு.
ஆஹா!!! நடவுல உக்கார்ந்து இப்படி மாட்டிக்கிட்டேனே? அபிமன்யூ சக்கர வியூகத்துல மாட்ன மாதிரி சிம்ரன பார்த்து நடுவுல உக்கார்ந்து மாட்டிக்கிட்டேனே!!! ஓரமா உக்கார்ந்தாவாது அப்படியே எஸ்ஸாகிருக்கலாம். இப்ப அதுக்கும் வழியில்லாம போச்சே!!!
அதுக்கு அப்பறம் சும்மா ஒரு நூறு பேத்த மட்டும் வெட்டி கொன்னாருங்க... எங்க நடுவுல எழுந்திரிச்சா நம்மல போட்டு தள்ளுடுவானுங்களோனு ஒரு பயம். அப்படியே எதுவும் பேசாமல் அமைதியா உக்கார்ந்திருந்தேன். கடைசியா அந்த ஒத்த கைய வெட்னவற தலைய வெட்டி கொன்னுடறாரு... எல்லாரும் ஜோரா கை தட்னானுங்க...
அடப்பாவிகளா!!! இத்தன நாளா நல்லவங்கலாத்தானடா பழகனீங்க. உங்களுக்குள்ள இவ்வளவு கொல வெறியா??? நான் இத்தன நாளா கொல கார கும்பலோடவா சவகாசம் வெச்சிருந்தேன்???
சரி இதுக்கு மேலையும் எப்படி தெலுகு படம் பார்த்தனு கேக்கறீங்களா? அதுக்கு பேருதான் விதி :-)
தோழர்களே அடுத்த பதிவு ஒரு ஸ்பெஷல் பதிவு... என்னனு கெஸ் பண்ணி வைங்க பார்க்கலாம் ;-)
82 comments:
//ரொம்ப நல்ல பசங்க. நம்மகிட்டயும் ரொம்ப பாசமாவும் மரியாதையாவும் பேசுவாங்க.//
பாசாக்காரா பயபுள்ளைகாளா இருக்காகலே.
//நாடோடி said...
//ரொம்ப நல்ல பசங்க. நம்மகிட்டயும் ரொம்ப பாசமாவும் மரியாதையாவும் பேசுவாங்க.//
பாசாக்காரா பயபுள்ளைகாளா இருக்காகலே.//
மேக்ரோ,
அது படத்துக்கு முன்னாடி... படத்துப்ப மட்டும் நான் ஏதாவது ரவுஸ் ப்ண்ணிருந்தேன்... இந்நேரம் நான் ப்ளாக் எழுதிட்டு இருக்க மாட்டேன் ;)
கலக்கிபுட்டீங்க போங்க!
//தோழர்களே அடுத்த பதிவு ஒரு ஸ்பெஷல் பதிவு... என்னனு கெஸ் பண்ணி வைங்க பார்க்கலாம் ;-)//
வல்லவன் படம் பார்த்த அனுபவம் தானே?
பொதுவ அடுத்தவங்க துன்பத்தைப் பார்த்து சிரிக்கரது தப்புன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா துன்பபட்டவரே அதை நகைச்சுவை மிக சொன்னால்...சிரிப்பது தப்பு இல்லையே :]
நீங்க அந்த கொல்டீஸ்க்கு என்ன சொல்லிக் கொடுத்தீங்கன்னு தெரிஞ்சா, உங்க மேல அவங்களுக்கு எதுக்கு அவ்வளவு வெறித்தனமான் பாசம்ன்னு தெரிஞ்சிடும்
நான் இதுவரைக்கும் நிறைய திரை விமர்சனங்களை படித்திருக்கிறேன். ஆனால், இதுதான் best of the best
உங்களுக்கு தெலுங்கு புரியுமா? இல்லை படத்தில் subtitle இருந்தததா?
//ரொம்ப நல்ல பசங்க. நம்மகிட்டயும் ரொம்ப பாசமாவும் மரியாதையாவும் பேசுவாங்க.//
இது வடிவேலு வாத்தியார் படத்திலே சொல்லுற மாதிரியே இருக்கு. அவரோட tone-லேயே படிக்கனுமா?
//தோழர்களே அடுத்த பதிவு ஒரு ஸ்பெஷல் பதிவு... என்னனு கெஸ் பண்ணி வைங்க பார்க்கலாம் ;-)//
ஒரு க்ளுவும் கொடுக்காமல் கண்டு பிடிங்கன்னு சொன்னா எப்படி கண்டு பிடிக்கிறது?
super vimarsanam saamiyooov!!
சரி. விஷயத்துக்கு வாங்க. சிக்கன் எப்படி இருந்தது? :)
/* தோழர்களே அடுத்த பதிவு ஒரு ஸ்பெஷல் பதிவு... */
Are you going to annnounce to the world about your love / engagement ?
- Unmai
மத்த எல்லாருக்கும் அப்பறம் பதில் சொல்றேன்..
இப்ப நம்ம உண்மைக்கு மட்டும்!!!
இந்த தலைப்பை ஒரு முறை படிச்சி பாருங்க!!!
// Anonymous said...
கலக்கிபுட்டீங்க போங்க! //
மிக்க நன்றி!!!
//லொடுக்கு said...
//தோழர்களே அடுத்த பதிவு ஒரு ஸ்பெஷல் பதிவு... என்னனு கெஸ் பண்ணி வைங்க பார்க்கலாம் ;-)//
வல்லவன் படம் பார்த்த அனுபவம் தானே? //
வல்லவன் இன்னும் பார்க்கலைங்க :-)
இது பதிவுகளின் எண்ணிக்கைய வெச்சி :-)
//lakshmi said...
பொதுவ அடுத்தவங்க துன்பத்தைப் பார்த்து சிரிக்கரது தப்புன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா துன்பபட்டவரே அதை நகைச்சுவை மிக சொன்னால்...சிரிப்பது தப்பு இல்லையே :] //
இது சிரிக்கறதுக்காக சொன்ன பதிவு தாங்க...
தாராளமா சிரிங்க :-))
//Divya said...
நீங்க அந்த கொல்டீஸ்க்கு என்ன சொல்லிக் கொடுத்தீங்கன்னு தெரிஞ்சா, உங்க மேல அவங்களுக்கு எதுக்கு அவ்வளவு வெறித்தனமான் பாசம்ன்னு தெரிஞ்சிடும் //
இது ஒரு நல்ல கேள்வி...
C, Testing concepts, DB Basics, Data Structure, OOPS எல்லாமே பேசிக் லெவெல் சொல்லி கொடுத்தேன்...
ஒரு வேளை இது தான் காரணமா இருக்குமோ ;)
//Alien said...
:-))))))) //
நல்லா சிரிங்க அன்னியன் ;)
ஏண்ணே
பாலையா கூலிங் கிளாஸ் போட்ருந்தாருல்ல - இருட்லயும் போட்டுக்கிட்டுத்தான திரிவாய்ங்க அவிய்ங்க.
நல்லா போனாங்கய்யா - தெலுங்குப்படம் பாக்க. அடுத்தவாட்டியாவது சூதானமா இருந்துக்கண்ணே!
//
C, Testing concepts, DB Basics, Data Structure, OOPS எல்லாமே பேசிக் லெவெல் சொல்லி கொடுத்தேன்...//
அடங்கொக்கமக்கா.., ப்ஃரீயா ஒரு BSc கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ் சொல்லிக்கொடுத்திருக்கீங்க!. பசங்க சிக்கன் கொழம்பால தாக்குனதில ஆச்சரியமில்ல.
ஜிங்தாத்தா.. ஜிங்தாத்தா.. ஜிங்தாத்தத்தா... ;-)
//:: My Friend ::. said...
//
நான் இதுவரைக்கும் நிறைய திரை விமர்சனங்களை படித்திருக்கிறேன். ஆனால், இதுதான் best of the best
//
மிக்க நன்றி!!!
// உங்களுக்கு தெலுங்கு புரியுமா? இல்லை படத்தில் subtitle இருந்தததா?
//
இந்த படம் பார்க்கும் போது புரியாமத்தான் தொன தொனனு கேட்டுக்கிட்டே இருந்தேன்... இப்ப நல்லா புரியுது :-)
//
//ரொம்ப நல்ல பசங்க. நம்மகிட்டயும் ரொம்ப பாசமாவும் மரியாதையாவும் பேசுவாங்க.//
இது வடிவேலு வாத்தியார் படத்திலே சொல்லுற மாதிரியே இருக்கு. அவரோட tone-லேயே படிக்கனுமா?
//
ஆமாங்க... கரெக்ட்டா புடிச்சிக்கிட்டீங்க!!!
//
//தோழர்களே அடுத்த பதிவு ஒரு ஸ்பெஷல் பதிவு... என்னனு கெஸ் பண்ணி வைங்க பார்க்கலாம் ;-)//
ஒரு க்ளுவும் கொடுக்காமல் கண்டு பிடிங்கன்னு சொன்னா எப்படி கண்டு பிடிக்கிறது? //
//
விடுகதை சொன்னா விடைய கண்டுபிடிக்கலாம். விடுகதையே சொல்லலைனானு சொல்றீங்களா???
Its related to the count :-)
//நாகு said...
super vimarsanam saamiyooov!! //
மிக்க நன்றி நாகு ;)
//இலவசக்கொத்தனார் said...
சரி. விஷயத்துக்கு வாங்க. சிக்கன் எப்படி இருந்தது? :) //
கொத்ஸ்,
சிக்கன் சூப்பர்... ஆனா படம் பார்த்து முடிக்கறதுக்குள்ள எல்லாம் செரிமானமாயிடுச்சு ;)
//சுந்தர் said...
ஏண்ணே
பாலையா கூலிங் கிளாஸ் போட்ருந்தாருல்ல - இருட்லயும் போட்டுக்கிட்டுத்தான திரிவாய்ங்க அவிய்ங்க.
//
அது ஃப்ளாஷ் பேக்ல ;)
// நல்லா போனாங்கய்யா - தெலுங்குப்படம் பாக்க. அடுத்தவாட்டியாவது சூதானமா இருந்துக்கண்ணே! //
இப்ப எல்லாம் விவரம் தெரிஞ்சே போறோம்.. கேப்டன் படத்துக்கு போற மாதிரி ;)
நல்லா கெளப்புனாங்கய்யா பீதிய...சிக்கனுக்கு நாக்கு ஆசைபட்டதுல தலயே போயிருக்கும் போல இருக்கு :-)
அடுத்தது 100ஆ?
//
அடங்கொக்கமக்கா.., ப்ஃரீயா ஒரு BSc கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ் சொல்லிக்கொடுத்திருக்கீங்க!. பசங்க சிக்கன் கொழம்பால தாக்குனதில ஆச்சரியமில்ல.
ஜிங்தாத்தா.. ஜிங்தாத்தா.. ஜிங்தாத்தத்தா... ;-)//
ரொம்ப டீட்டய்லா சொல்லி தர மாட்டேங்க (ஏன்னா நமக்கு தெரியாது)
கொஞ்சம் Interview க்ளியர் பண்ற மாதிரி இருக்கும்... அவ்வளவுதான்
ரொம்ப நல்ல பசங்க. இப்ப கூட (கிட்ட திட்ட 2 வருஷமாகுது) மறக்காம மெயில் அனுப்புவாங்க :-)
//Syam said...
நல்லா கெளப்புனாங்கய்யா பீதிய...சிக்கனுக்கு நாக்கு ஆசைபட்டதுல தலயே போயிருக்கும் போல இருக்கு :-) //
நாட்டாமை,
அதேதான் :-)
அதுக்கு அப்பறம் எதுவா இருந்தாலும் ரூமுக்கு பார்சல்னு சொல்லியாச்சு :-)
கப்பிமா,
நீ சொன்னது கரெக்ட்... அதனால அதை இப்ப பப்ளிஷ் பண்ணல ;)
வெட்டிதனமான, இல்லை வெற்றிகரமான ஐம்பதாவது பதிவா அடுத்தது :-)
அடுத்து 50வது பதிவா?
//முத்துகுமரன் said...
வெட்டிதனமான, இல்லை வெற்றிகரமான ஐம்பதாவது பதிவா அடுத்தது :-) //
ஆஹா... கொஞ்சம் நெருங்கிட்டீங்க...
ஐம்பது போட்டு பல நாளாச்சே ;)
//நாமக்கல் சிபி @15516963 said...
அடுத்து 50வது பதிவா? //
பாதி கிணத்ததான் தாண்டியிருக்கீங்க...
என் ப்ளாக்ல முதல் கமெண்ட் போட்டது யாருனாவது ஞாபகம் இருக்கா?
இல்லைனா வீட்ல கண்ணாடி எடுத்து பாருங்க :-)
//பாதி கிணத்ததான் தாண்டியிருக்கீங்க//
ஓ! புரியுது! அப்போ இது 99 வது பதிவு! கரெக்டா?
//என் ப்ளாக்ல முதல் கமெண்ட் போட்டது யாருனாவது ஞாபகம் இருக்கா?
இல்லைனா வீட்ல கண்ணாடி எடுத்து பாருங்க //
அட! இதெல்லாம் ஞாபகம் வெச்சிருக்கீங்களா?
மிக்க நன்றி!
எனிவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
//அட! இதெல்லாம் ஞாபகம் வெச்சிருக்கீங்களா?
மிக்க நன்றி!
எனிவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!//
அது எப்படிங்க மறக்க முடியும்...
ஆசையா யாராவது கமெண்ட் போட்டாங்களானு பார்த்ததாச்சே... இப்பவும் கண் முன்னாடி நிக்குது :-)
மிக்க நன்றி சிபியாரே!!!
//அது எப்படிங்க மறக்க முடியும்...
ஆசையா யாராவது கமெண்ட் போட்டாங்களானு பார்த்ததாச்சே... இப்பவும் கண் முன்னாடி நிக்குது//
ரொம்பவும் நெகிழ வைக்கிறீங்களே!
அவ்வ்வ்வ்..........
//
ரொம்பவும் நெகிழ வைக்கிறீங்களே!
அவ்வ்வ்வ்..........//
சரி சரி...
ரொம்ப ஃபீல் பண்ணாம படுத்து தூங்குங்க...
சதமடிக்க போறதுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! மல்லி
//தோழர்களே அடுத்த பதிவு ஒரு ஸ்பெஷல் பதிவு... என்னனு கெஸ் பண்ணி வைங்க பார்க்கலாம் ;-)//
//அடுத்து 50வது பதிவா? //
யாரைப் பாத்து என்ன கேள்வி கேட்டுபுட்டீங்க?
களம் பல கண்டு,
"சங்கம்" வைத்து தமிழ் வளர்த்த சிங்கம்
"நூறு" குதிரைகள் பூட்டிய தேரில் உலா வரப்போகிறது!
என்ன...அது ஒரு தெலுங்குப் பதிவு!
சரியா பாலாஜி? :-))
கப்பி,
நீ ரொம்ப ஃபீலிங்காயிடுவனு பப்லிஷ் பண்ணிட்டேன்!!!
இது என்ன ஷங்கர் படமா சஸ்பென்ஸ் வைக்கறதுக்கு ;)
//நாமக்கல் சிபி @15516963 said...
//பாதி கிணத்ததான் தாண்டியிருக்கீங்க//
ஓ! புரியுது! அப்போ இது 99 வது பதிவு! கரெக்டா? //
சரியா சொன்னீங்க சிபி :-)
// Anonymous said...
சதமடிக்க போறதுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! மல்லி //
மிக்க நன்றி மல்லி!!!
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//தோழர்களே அடுத்த பதிவு ஒரு ஸ்பெஷல் பதிவு... என்னனு கெஸ் பண்ணி வைங்க பார்க்கலாம் ;-)//
//அடுத்து 50வது பதிவா? //
யாரைப் பாத்து என்ன கேள்வி கேட்டுபுட்டீங்க?
களம் பல கண்டு,
"சங்கம்" வைத்து தமிழ் வளர்த்த சிங்கம்
"நூறு" குதிரைகள் பூட்டிய தேரில் உலா வரப்போகிறது!
//
மிக்க நன்றி KRS...
ஆனா சங்கம் வெச்சி தமிழ் வளர்க்கற கூட்டத்துல நான் இல்லை :-(
சங்கம் வெச்சி சிரிக்க வைக்கிற கூட்டத்துல இருக்கேன் :-))
//
என்ன...அது ஒரு தெலுங்குப் பதிவு!
சரியா பாலாஜி? :-)) //
தலைப்பை மூன்று முறை படிக்கவும்.
2வது 3வது முறை எதிரோலி கேக்கற மாதிரி படிக்கவும் :-)
/கப்பிமா,
நீ சொன்னது கரெக்ட்... அதனால அதை இப்ப பப்ளிஷ் பண்ணல ;) //
அது! ;))
தல மாதிரி கேள்வி மட்டும் கேட்டுட்டு ப்ரைஸ் கொடுக்காம விட்டுடாதீங்க ;)
//கப்பி பய said...
/கப்பிமா,
நீ சொன்னது கரெக்ட்... அதனால அதை இப்ப பப்ளிஷ் பண்ணல ;) //
அது! ;))
தல மாதிரி கேள்வி மட்டும் கேட்டுட்டு ப்ரைஸ் கொடுக்காம விட்டுடாதீங்க ;) //
எலேய்,
நான் எங்கப்பா கேள்வி கேட்டேன்...
கெஸ் பண்ணிதானே வைக்க சொன்னேன்....
ப்ரைஸ் அடுத்த பதிவுல தரேன்...
நானும் சொல்லிக்கறேன், சதம் அடிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! அது எப்படி, தெலுகு உன் வாழ்க்கைல இப்படி புகுந்து விளையாடிருக்கு!! எப்படியோ, சிக்கன் ஓசில கெடச்சுதேனு சந்தோஷ பட்டுக்க வேண்டியது தான்.
-விநய்
//நானும் சொல்லிக்கறேன், சதம் அடிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! அது எப்படி, தெலுகு உன் வாழ்க்கைல இப்படி புகுந்து விளையாடிருக்கு!! எப்படியோ, சிக்கன் ஓசில கெடச்சுதேனு சந்தோஷ பட்டுக்க வேண்டியது தான்.
-விநய்//
மிக்க நன்றி விநய்!!!
ஆமாம் சந்தோஷப்பட்டுத்தான் ஆகனும்... வேற வழி ;)
கே.எஸ்.ரவிக்குமார் மாதிரி அடிச்சி ஆடிருக்கீங்க இது வரைக்கும்... 100 க்கு வெயிட்டிங்.
ஆமா, இப்போ எதுக்கு இந்த தன்னிலை விளக்க்ம்? (நான் தப்பு பண்ணிட்டனோ?)
//Udhayakumar said...
கே.எஸ்.ரவிக்குமார் மாதிரி அடிச்சி ஆடிருக்கீங்க இது வரைக்கும்... 100 க்கு வெயிட்டிங். //
ரவிக்குமாரா??? காட் பாதர் பார்த்துட்டு கொல வெறில இருக்கேன் ரவிக்குமார் மேல... தலயோட ஆக்ஷன முழுசா பயன்படூத்திக்கலனு...
நாளைக்கு போட்டுடறேன் :-))
Nanba . where got this Blog skin . Really super . Send it to me a372844@fmr.com
//சுந்தர் said...
Nanba . where got this Blog skin . Really super . Send it to me a372844@fmr.com//
நண்பா,
இதோ லிங்க்
http://blogger-templates.blogspot.com/
உங்களுக்கு ஏற்பட்ட சோகத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். நானும் ஒரு முறை இங்கே தெரியாத்தனமாகத் தியேட்டருக்கே போயிட்டு வந்த கொடுமை ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
நல்ல வேளை, அங்கே நான் பாலைய்யாவைப் பத்தி எந்தக் கமெண்டும் அடிக்கலை. எப்ப உணர்ச்சி வசப்பட்டு நம்மள அடிக்கப் போறாய்ங்களோன்னு ஒரு பயம் உள்ள உருண்டுக்கிட்டே இருக்கும்.
சரி ஆனாலும் நம்ம கேப்டன் அளவுக்கு முடியுமா என்ன?
வெட்டி அடுத்த பதிவு 100வது பதிவு. :))))))
பாலாஜி
இதைவிட சூப்பர் அனுபவம் வேனும் என்றால் செலவு பார்க்காமல்,ஆந்திரா பக்கம் போய் ஒரு சுமாரான ஊரில் NTR படம் பாருங்க!!
ஓசியிலேயே பீடி புகையுடன் எல்லாம் ஸ்பெசல் எபெக்ட்டுடன் கிடைக்கும்.
உங்க 100ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!! The Bestஆ போடுங்க ;-)
//பிரதீப் said...
உங்களுக்கு ஏற்பட்ட சோகத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். நானும் ஒரு முறை இங்கே தெரியாத்தனமாகத் தியேட்டருக்கே போயிட்டு வந்த கொடுமை ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
நல்ல வேளை, அங்கே நான் பாலைய்யாவைப் பத்தி எந்தக் கமெண்டும் அடிக்கலை. எப்ப உணர்ச்சி வசப்பட்டு நம்மள அடிக்கப் போறாய்ங்களோன்னு ஒரு பயம் உள்ள உருண்டுக்கிட்டே இருக்கும்.
சரி ஆனாலும் நம்ம கேப்டன் அளவுக்கு முடியுமா என்ன? //
ஆஹா நானாவது 10 பேர் கூடத்தான் பார்த்தேன் ஆனா நீங்க தியேட்டருக்கே போய் பார்த்திருக்கீங்கனா உங்களை பாராட்டியே ஆகனும் :-)
//நாடோடி said...
வெட்டி அடுத்த பதிவு 100வது பதிவு. :)))))) //
நாடோடி,
வந்து 1 மாசத்துலயே 100வது பதிவா???
வாழ்த்துக்கள்!!! ;)
//வடுவூர் குமார் said...
பாலாஜி
இதைவிட சூப்பர் அனுபவம் வேனும் என்றால் செலவு பார்க்காமல்,ஆந்திரா பக்கம் போய் ஒரு சுமாரான ஊரில் NTR படம் பாருங்க!!
ஓசியிலேயே பீடி புகையுடன் எல்லாம் ஸ்பெசல் எபெக்ட்டுடன் கிடைக்கும். //
ஊருப்பக்கம் எப்ப வருவன்னு வீட்ல அம்மா காத்துட்டு இருக்காங்க.. அதைவிட்டு NTR படம் பார்க்க இந்தியா வரணுமா? இது டூ மச் :-)
//aparnaa said...
உங்க 100ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!! The Bestஆ போடுங்க ;-) //
மிக்க நன்றி அபர்ணா...
அதுக்கு தான் யோசிச்சிட்டு இருக்கேன் :-)
ada..pasakara payaluga..avanugala poi thappa pesaringa! unga mela evalovu paasam irundha, ungalukku chicken um samaichu pottu, 100 pera paliyum koduthirupaanga LOL
athu sarii..intha koothukku tamil padam evalovo thevalai pola theriyuthu!
சிக்கன் குனியா என்பது இதுதானோ?
என்ன கொடுமைங்க இது சரவணன்?
//ஆவி அண்ணாச்சி said...
சிக்கன் குனியா என்பது இதுதானோ?
//
அப்படித்தான்னு நெனைக்கிறேன் :-(
அதுவும் 2 வருஷத்துக்கு முன்னாடியே ;)
//
என்ன கொடுமைங்க இது சரவணன்? //
உங்க கூட்டத்துக்கு தான் ஆள் சேக்கறாங்க :-)
//Dreamzz said...
ada..pasakara payaluga..avanugala poi thappa pesaringa! unga mela evalovu paasam irundha, ungalukku chicken um samaichu pottu, 100 pera paliyum koduthirupaanga LOL
//
ட்ரீம்ஸ் பாசக்கார பயலுக அன்னைக்கே போட்டு தள்ளிருப்பானுங்க... நல்ல வேளை நான் எஸ்கேப் :-)
//
athu sarii..intha koothukku tamil padam evalovo thevalai pola theriyuthu! //
அப்படி கிடையாது. நல்ல படங்களும் தெலுகில வரும்... அவுங்க ஆடியன்ஸ் டேஸ்ட்க்கு அவுங்க எடுக்கறாங்க. நம்ம ஆடியன்ஸ் டேஸ்ட்க்கு நம்ம ஆளுங்க எடுக்கறாங்க... அவ்வளவுதான் ;)
பாலாஜி,
//இத்தன நாளா நல்லவங்கலாத்தானடா பழகனீங்க. உங்களுக்குள்ள இவ்வளவு கொல வெறியா??? //
Ha Ha Ha...
சுவாரசியமான பதிவு.
கலக்கல்..
//Sivabalan said...
பாலாஜி,
//இத்தன நாளா நல்லவங்கலாத்தானடா பழகனீங்க. உங்களுக்குள்ள இவ்வளவு கொல வெறியா??? //
Ha Ha Ha...
சுவாரசியமான பதிவு.
கலக்கல்.. //
மிக்க நன்றி சிபா...
//ஒரு முக்கிய காரணம் நான் தினமும் எல்லாருக்கும் ஏதாவது சொல்லி கொடுத்துட்டு இருப்பேன்.//
வா வாத்தியாரே ஊட்டாண்ட நீ வராக்காட்டி நான் வுட மாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு
நீ சைதாப்பேட்டை
கொக்கு.
வாத்தியார்னு ஒரு படம் பார்த்துட்டேம்பா :(((
அதுக்காக என்னை யாரும் தவறா நினைக்காதிங்க!
எல்லா விதமான படத்தையும் பார்க்கணும்ல!
அதுக்காக எல்லா விதமான படமும் இல்ல... உதாரணத்துக்கு வல்லவன் படம் பாதி வரைக்கும்தான் பாத்தேன்னா பாத்துக்கோயேன்!!!
அதுக்கு மேல பாக்கறதுக்கு என் மனசாட்சி இடம்கொடுக்கல!
வெட்டி கொஞ்ச நாளைக்கு பாலகிருஷ்ணாவையும், என்.டி.ஆரையும் நூட்ரல்ல உட்டுட்டு கோலிவுட்டு உதாரணபுருஷர்கள தொவச்சி காய போடுப்பா!
அப்படியே நிமிர்ந்து பாரு நாலு நாள் லீவு போட்ட கவருமெண்டு ஆபிசரு டேபிள் மாதிரி ஏகப்பட்ட படம் குமிஞ்சி கெடக்கு!
பாவம் நீயும் என்னதான் பண்ணுவ ரெண்டு கண்ணுதான இருக்கு உனக்கும்!!
அப்பால இன்னா சொல்றது!
வழக்கம்போல...
நூறாவது பதிவ கொஞ்சம் வித்யாசமா அழகா மறக்கவே முடியாத மாதிரி போடு!
கடுப்பு குறைந்த அன்புடன்
தம்பி
Hello Vetti Payal,
Naan kooda unga pakathu oorlathaan irukken. Nashua, NH. Thamiz blogla pattaasu kelapureenga. Naanum ippathaan aarmabitchirukken. Budding blogger. Koodiya veraivil meet pannalaam.
தம்பி,
வாய்யா!!! நல்லா இருக்கயா?
ஆள பார்த்து ரொம்ப நாளாச்செனு கேட்டேன் :-)
தமிழ் படமும் பார்த்துட்டு தாம்பா இருக்கேன். கேடி பார்த்தேன்... தமண்ணா சூப்பர்.. இலியானாவை சரியா பயன்படுத்தல ;). ரவிகிருஷ்ணா... சரி வேணாம் விட்டுடு
அப்பறம் 100வது பதிவுக்கு பேசாமா எதுவும் போடாம 101 போயிடலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்.. அதுவே வித்யாசமா இருக்காது ;)
ஆந்திரா ஜனம் மஞ்சி ஜனம்...
அன்னம் பெட்னவாருக்கே மீரு அபவாதம் சேஸ்தாரா...
அவரு குறிஞ்சு மீரு செப்புன விஷயம் குறிஞ்சு மீரு சாரி செப்பண்டி...
:))))))))
பாலகிருஷ்ணா படம் பாத்தா அவரு சட்டயல்லாம் பாத்து கலர் பிளைண்டுனஸ் வருமே... எதுக்கு நைனா இம்மாம் பெரிய ரிஸ்க்கு...
//போடாம 101 போயிடலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்.. அதுவே வித்யாசமா இருக்காது ;)//
ஒருக்காலும் இருக்காது!
அப்புறம் உன்னையே நம்பிட்டு இருக்குற என்னை மாதிரி ரசிகர்களுக்கும், அனானிகளுக்கும் நீ செய்யிற துரோகம்! இந்த காரியத்த மட்டும் நீ செஞ்ச!
ஸ்பெசலா எழுதுவேன்னு காத்திருக்கிற உள்ளங்களின் சார்பாகவும் இந்த முடிவை
மாற்றக்கோரியும் ஒரு கையெழுத்து போராட்டம் நடத்தணுமா?
//Zia said...
Hello Vetti Payal,
Naan kooda unga pakathu oorlathaan irukken. Nashua, NH. Thamiz blogla pattaasu kelapureenga. Naanum ippathaan aarmabitchirukken. Budding blogger. Koodiya veraivil meet pannalaam. //
Hi Zia,
நானும் வந்த புதுசுல 6 மாசம் நேஷ்வாலதான் இருந்தேன்... இப்பதான் லோவல் வந்தேன்...
உங்களை ப்ளாக் உலகிற்கு வருக வருக என வரவேற்கிறேன்...
விரைவில் சந்திப்போம் ;)
//அரை பிளேடு said...
ஆந்திரா ஜனம் மஞ்சி ஜனம்...
அன்னம் பெட்னவாருக்கே மீரு அபவாதம் சேஸ்தாரா...
அவரு குறிஞ்சு மீரு செப்புன விஷயம் குறிஞ்சு மீரு சாரி செப்பண்டி...
:))))))))
//
அ.ப்ளேடு,
நேனு சொப்பேஸ்தந்தி அந்தி நிஜம். ஏமி அபத்தம் லேது...
அந்தரும் மஞ்சவாலே...
//
பாலகிருஷ்ணா படம் பாத்தா அவரு சட்டயல்லாம் பாத்து கலர் பிளைண்டுனஸ் வருமே... எதுக்கு நைனா இம்மாம் பெரிய ரிஸ்க்கு... //
எனக்கு தெரிஞ்சிருந்தா போயேருக்க மாட்டேனே... அவரோட டேன்ஸ்தான் ஹைலைட்டே ;)
//ஒருக்காலும் இருக்காது!//
ஏன் உடைச்சிடுவியா?
//
அப்புறம் உன்னையே நம்பிட்டு இருக்குற என்னை மாதிரி ரசிகர்களுக்கும், அனானிகளுக்கும் நீ செய்யிற துரோகம்! இந்த காரியத்த மட்டும் நீ செஞ்ச!
ஸ்பெசலா எழுதுவேன்னு காத்திருக்கிற உள்ளங்களின் சார்பாகவும் இந்த முடிவை
மாற்றக்கோரியும் ஒரு கையெழுத்து போராட்டம் நடத்தணுமா?//
சரிப்பா.. இன்னைக்கு இரவே சரி பண்ணிடறேன் :-)
//சரிப்பா.. இன்னைக்கு இரவே சரி பண்ணிடறேன் :-)//
அடச்சே நீ இவ்ளோதானா!
சரி பண்ற அளவுக்கு இன்னாபா தப்பு பண்ணே???
யோவ் காக்கா தூக்கினு போச்சா இல்ல நீயே ரிஜக்ட் பண்ணீட்டியா?
என்னோட பின்னூட்டத்த காணும்!
இதுக்கு தனியா ஒரு போராட்டம் நடத்தணும்!
//தம்பி said...
//சரிப்பா.. இன்னைக்கு இரவே சரி பண்ணிடறேன் :-)//
அடச்சே நீ இவ்ளோதானா!
சரி பண்ற அளவுக்கு இன்னாபா தப்பு பண்ணே??? //
எலேய்,
சரி பண்ணிடறேன்னு சொன்னது உன்னய ;)
//தம்பி said...
யோவ் காக்கா தூக்கினு போச்சா இல்ல நீயே ரிஜக்ட் பண்ணீட்டியா?
//
இல்ல கழுத புலி கவ்வினு பூடுச்சு...
//
என்னோட பின்னூட்டத்த காணும்!
இதுக்கு தனியா ஒரு போராட்டம் நடத்தணும்! //
தனியா நடத்துர போராட்டமெல்லாம் செல்லாது மாமு ;)
நல்லவேல இந்த பய நம்ம படத்த பாக்கல!
// கேப்டன் said...
நல்லவேல இந்த பய நம்ம படத்த பாக்கல! //
நல்ல வேல அந்த படத்த எல்லாம் நீங்க பாக்கல...
கஜெந்திராவே தாங்க முடியலை ;)
//ஏன் உடைச்சிடுவியா?//
தெலுகு படமெல்லாம் பாக்காதன்னு சொன்னா எங்க கேக்குற!!!
//தம்பி said...
//ஏன் உடைச்சிடுவியா?//
தெலுகு படமெல்லாம் பாக்காதன்னு சொன்னா எங்க கேக்குற!!! //
தம்பி,
தெலுகு படம் பார்த்தா கால் எல்லாம் உடைக்க மாட்டோம்.. நேரா தலைய சீவ வேண்டியதுதான்...
ஜினியர் என்.டி.ஆர்னு ஒருத்தர் இருக்காரு... அவரப்பத்தி அப்பாலிக்கா சொல்லறேன் ;)
//ஜினியர் என்.டி.ஆர்னு ஒருத்தர் இருக்காரு... அவரப்பத்தி அப்பாலிக்கா சொல்லறேன் ;) //
ஆஹா....
கிளம்பிட்டியா???
எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேஏஏஏஎப்
//ஆஹா....
கிளம்பிட்டியா???
எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேஏஏஏஎப்//
என்ன அதுக்குள்ள பயந்துட்டா எப்படி???
வளர புள்ளைக்கூ இது அழகா?
Post a Comment