தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, August 15, 2006

கோழியின் அட்டகாசங்கள் - 3

இது கடைசி வருடம் நடந்த நிகழ்ச்சி...

கோழியும், இருமியும் டூ- வீலரில் சாய்பாபா காலணி போயிட்டு திரும்ப காலேஜ் வந்து கொண்டிருந்தனர். துடியலூர் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வேண்டும்... (ஹாஸ்டலில் இருக்கும் அனைத்து வண்டியும் எப்போதும் ரிஸர்வில்தான் ஓடிக்கொண்டிருக்கும்)

(இருமி - வந்த புதிதில் அதிகமாக இறுமிக் கொண்டிருந்ததால் வந்த பெயர்)

இருமி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.

இருமி: கோழி ரைட்ல திரும்பனும் கையப் போடு...

கோழி: ஒகே

திரும்பும் போது பின்னால் இருந்த வந்த ஒருவன் கேவலமான வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றான்...

இருமி: டெய் கோழி கைப் போட்டியாடா???

கோழி: ஏண்டா நீ சொன்ன உடனே போட்டுட்டன்... இன்னும் எடுக்கவே இல்லை...

இருமிக்கு ஒரு நிமிஷம் புரியாம என்னனு பாத்தா, கோழி இருமியோட தோள்ல கையப் போட்டிருக்கான் :-)))

இருமி: ஏண்டா!!! நீ என்ன என் லவ்வராடா???
பில்லியன்ல உக்காந்து என் தோள்ல கைப் போட்டு வரதுக்கு...
திரும்பறதுக்கு ரைட்ல சிக்னலுக்கு கைப் போடுனா தோள்ல கையப் போட்ருக்க :-X

பெட்ரோல் பங்ல போனவுடனே பார்த்தா முன்னாடி சக்கரத்துல காத்து ரொம்ப கம்மியா இருந்தது... துடியலூர் பெட்ரோல் பங் ரொம்ப சின்னது...

இருமி பெட்ரோல் போடுபவனிடம்: அண்ணே!!! முன்னாடி வீல்ல காத்து கம்மியா இருக்கு.. பக்கத்துல எங்கயாவது காத்து பிடிக்கிற இடம் இருக்கா?

பெ.போ: முன்னாடி வீல் தானே!!! இங்கயே லெக் பம்ப் இருக்கு அடிச்சிக்கலாம்... உள்ள இருக்கு போய் எடுத்துக்கோங்க...

இருமி: கோழி போய் லெக் பம்ப் எடுத்துட்டு வாடா...

உள்ளே போன கோழி கைல எடுத்துட்டு வந்ததை பார்த்து எல்லோரும் அரண்டு போயிட்டாங்க!!!

அவன் கைல இருந்தது Fire Extinguisher :-)))

கடைசி வருட ஜாவா லேப்:
கோழி OPயோட சிஸ்டம் பக்கத்துல உட்கார்ந்து கடலைப் போட்டுட்டிருந்தான்...

OP ஏதோ டவுட்னு என் இடத்துக்கு வந்து கேட்டான்... நானும் சரினு OP சிஸ்டத்துல என்னனு பொயி பாக்கலாம்னு போனேன்...

அங்க போனா Notepad அப்ளிக்கேஷனக் கானோம் (Java Program நாங்க Notepadல தான் போடுவோம்)...

நான்: OP, பிரோக்ராம் எங்க???

OP: கோழி Notepad எங்க காணோம்???

கோழி: டேய் சத்தியமா நான் எடுக்கலைடா.... வேணும்னா என் எடத்துல வேணாலும் போய் பாத்துக்கோ!!!

இதை கேட்டு லேபில் இருந்த எல்லோரும் :-)))))))

அட்டகாசம் தொடரும்...

44 comments:

SnackDragon said...

:-))

நாமக்கல் சிபி said...

கார்த்திக்,
முதல் முறையா நம்ம பதிவுக்கு பின்னூட்டம் போடறிங்கனு நினைக்கிறேன்...

மிக்க நன்றி...

Unknown said...

இப்பத்தான் கோவத்தோட உச்சீல நின்னு ஒரு பின்னூட்டம் போட்டு வந்தா என்னை சிரிக்க சொல்றீங்க, முடீலப்பா முடீல :69

நாமக்கல் சிபி said...

மகி,
எப்பவெல்லாம் சிரிக்க சான்ஸ் கிடைக்குமோ அப்பவெல்லாம் சிரிச்சிடனும்...

எதுக்கும் இன்னொரு தடவை படிச்சி சிரிப்பு வருதானு பாருங்க ;)

கப்பி | Kappi said...

:)))

இதையெல்லாம் கோழி படிச்சா நொந்தே போவாரு :))

கோழி அட்டகாசங்கள் முடிஞ்சதும் உங்க கதை தானே?
;)

நாமக்கல் சிபி said...

//இதையெல்லாம் கோழி படிச்சா நொந்தே போவாரு :))//
அவர்ட பர்மிஷன் வாங்கிட்டேன் :-))
இதுவெல்லாம் வெச்சி அவரை 100 தடவைக்கு மேல ஓட்டிருக்கோம்... அதனால இதெல்லாம் அவருக்கு ஜிஜிபி...

//கோழி அட்டகாசங்கள் முடிஞ்சதும் உங்க கதை தானே?
;)
//
அநேகமா சர்ட்டிபிகேஷன்ல ஊத்தன கதையாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன் :-(

aaradhana said...

ஹி..ஹி...

Unknown said...

"முடி"யலப்பா "முடி"யல :))

கப்பி | Kappi said...

//அநேகமா சர்ட்டிபிகேஷன்ல ஊத்தன கதையாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன் :-(//

அப்ப எழுதலாம்னு முடிவு பண்ணிட்டீங்க :))

நாமக்கல் சிபி said...

ஆராதனா,
நன்றி.

//
மகேந்திரன்.பெ said...
"முடி"யலப்பா "முடி"யல :))
//
"முடி"யும் மகி நிச்சயம் "முடி"யும்...

//அப்ப எழுதலாம்னு முடிவு பண்ணிட்டீங்க :))
//
கப்பி நமக்கு சர்ட்டிபிகேஷன் ஊத்தறதுல உனக்கு என்னப்பா அப்படி சந்தோஷம்???

கதிர் said...

என்னடா இன்னிக்கு நாள் ரொம்ப சோகமா போகுதேன்னு பாத்தேன்.

இத படிச்ச உடனே சிரிச்சுட்டேன்!!:))

இனிமே போய் தூங்க வேண்டியதுதான்

வரம்பா!

நாமக்கல் சிபி said...

தம்பி,
//என்னடா இன்னிக்கு நாள் ரொம்ப சோகமா போகுதேன்னு பாத்தேன்.
//
என்ன சுதந்திர தினம் அதுவுமா இப்படி சொல்றீங்க???

//இத படிச்ச உடனே சிரிச்சுட்டேன்!!:))

இனிமே போய் தூங்க வேண்டியதுதான்
//
ரொம்ப சந்தோஷம்... நிம்மதியா தூங்குங்கோ :-))

VSK said...

:)) :)) !!

Syam said...

//Fire Extinguisher //

ROTFL :-)....

Syam said...

//Fire Extinguisher//

ROTFL.... :-)

நாமக்கல் சிபி said...

SK ஐயா,
கொஞ்ச நாளா நம்ம பக்கத்துல பாக்க முடியலையேனு யோசிச்சிட்டு இருந்தேன்... வந்துட்டீங்க... மிக்க நன்றி.

Syam,
இதை நேர்ல பார்த்தவனுக்கு எப்படி இருக்கும்னு நினைச்சி பாருங்க!!! கோழிக்கிட்ட பிடிச்சதே இதுதான், தெரியாதுனு எதுக்குமே சொல்ல மாட்டான் :-))

Nakkiran said...

//OP: கோழி Notepad எங்க காணோம்???

கோழி: டேய் சத்தியமா நான் எடுக்கலைடா.... வேணும்னா என் எடத்துல வேணாலும் போய் பாத்துக்கோ!!!//

too good.... i can not read this series at office.. i will read at home, so that i can laugh loudly..

நாமக்கல் சிபி said...

Nakkiran,
Thx... Still we have 2 more to go
in the series...

கப்பி | Kappi said...

//கப்பி நமக்கு சர்ட்டிபிகேஷன் ஊத்தறதுல உனக்கு என்னப்பா அப்படி சந்தோஷம்???
//

யப்பா வெட்டி..இப்படி அபாண்டமா பழி போடலாமா?? என்னை மாதிரி ஒரு நல்ல பையனை இப்படி சொல்லிட்டியேப்பா...எவ்ளோ பீலிங்ஸா இருக்கு ;)

சர்ட்டிபிகேஷன்லாம் ஊத்தாது..கவலைப்படாதீங்க...

அதுக்காக கதையை மறந்துடாதீங்க :D

நாமக்கல் சிபி said...

//யப்பா வெட்டி..இப்படி அபாண்டமா பழி போடலாமா?? என்னை மாதிரி ஒரு நல்ல பையனை இப்படி சொல்லிட்டியேப்பா...எவ்ளோ பீலிங்ஸா இருக்கு ;)//
சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்...
இப்ப தான் பிரிண்ட் அவுட் எல்லாம் எடுத்தேன்... இனி கொஞ்ச நாளைக்கு நைட் ஸ்டடி தான்...

//அதுக்காக கதையை மறந்துடாதீங்க :D
//
சரி கண்டிப்பா எழுதறேன். ஆனால் எவ்வளவு கேவலமா இருந்தாலும் ஒரு "+" போடனும்... டீல் ஓகேவா?

வஜ்ரா said...

ஏய்...யாருய்யா இந்த கோழி, நீங்க பாட்டுக்கு எழுதித் தள்ளிகிட்டு இருக்கீங்க...பாவம், அவனுக்குத் தெரியுமாய்யா? அனியாயக் கிண்டல்யா..!!

ஆனாலும் நல்லாதான் இருக்கு..!!

கோழியின் மதிப்பு என் நெஞ்சில் உயர ஏதேனும் ஒன்று நல்ல படியாக எழுதுங்க வெட்டி. ஒரு ஆளை ஒரே அடியா காமடியான் ஆக்கக் கூடாது.

கப்பி | Kappi said...

+ என்ன பத்து பின்னூட்டமும் சேர்த்து போட்டுடலாம் ;))

நாமக்கல் சிபி said...

//ஏய்...யாருய்யா இந்த கோழி, நீங்க பாட்டுக்கு எழுதித் தள்ளிகிட்டு இருக்கீங்க...பாவம், அவனுக்குத் தெரியுமாய்யா? அனியாயக் கிண்டல்யா..!! //
ஷங்கர்,
அவன்ட பெர்மிஷன் வாங்கித்தான் எழுத ஆரம்பிச்சேன்.

//ஆனாலும் நல்லாதான் இருக்கு..!!
//
மிக்க நன்றி.

//கோழியின் மதிப்பு என் நெஞ்சில் உயர ஏதேனும் ஒன்று நல்ல படியாக எழுதுங்க வெட்டி. ஒரு ஆளை ஒரே அடியா காமடியான் ஆக்கக் கூடாது.
//
இதுக்கு அடுத்து 2 பதிவு இருக்கு. அதை படிச்சி முடிக்கும் போது கோழி உங்க மனசுல ஹீரோவா இருப்பான். தொடர்ந்து படிங்க...

நாமக்கல் சிபி said...

//+ என்ன பத்து பின்னூட்டமும் சேர்த்து போட்டுடலாம் ;))
//
பின்னூட்டமெல்லாம் வேணாம்... அப்பறம் எல்லாரும் காறித் துப்புவாங்க!!! நாம "+"ஏ வெச்சிக்குவோம்.

நம்ம பதிவுக்கு யாரோ ஒரே ஒரு புண்ணியவாந்தான் எப்பவும் போடறாரு

நாமக்கல் சிபி said...

கப்பி,
அதெல்லாம் ஒன்னும் வேணாம்...
நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். பிடிச்சிருந்தா "+" போடுங்க. இல்லைனா வேணாம்.

அப்பறம் உண்மையாலுமே தகுதி உள்ள பதிவுகள் பாதிக்கப்படும்.

கப்பி | Kappi said...

//கப்பி,
அதெல்லாம் ஒன்னும் வேணாம்...
நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். பிடிச்சிருந்தா "+" போடுங்க. இல்லைனா வேணாம்.
//

வெட்டி எல்லாத்தையும் ரொம்ப சீரியசா எடுத்துக்கறீங்களே..
கூல் டவுன் ;)

கப்பி | Kappi said...

கோழி அட்டகாசம் உண்மையாவே நல்லா தாங்க இருக்கு...கலக்குங்க...

நாமக்கல் சிபி said...

//வெட்டி எல்லாத்தையும் ரொம்ப சீரியசா எடுத்துக்கறீங்களே..
கூல் டவுன் ;) //
இல்லைங்க நான் இதுவரைக்கும் பேசன ஒரே பிளாக் ஃபிரண்ட்... இந்த பின்னூட்ட கயமைத்தனத்தைப் பற்றி ரொம்ப ஃபீல் பண்ணாரு... அதுல இருந்து நான் அந்த விளையாட்டையே விட்டுட்டேன்...

இப்ப நம்ம ஏதோ புதுசா ஆரம்பிக்கற மாதிரி இருக்கேனு சொல்லிட்டுதான் வேண்டாம்னு யாரும் சொல்றதுக்கு முன்னாடி சொல்லிட்டேன். வேற ஒன்னும் இல்லை.

//கோழி அட்டகாசம் உண்மையாவே நல்லா தாங்க இருக்கு...கலக்குங்க...//
அப்படியா.. ரொம்ப நன்றி.
உங்களுக்காகத்தான் ரொம்ப யோசிச்சி கதை எழுதிட்டு இருக்கேன் :-))

Unknown said...

என்னங்க பாலாஜி கோழி இந்த குசும்பு செய்துட்டு இருக்கார்.கோழியடிச்சு குருமா வெச்சாதான் திருந்துவார் போல:))

துடியலூர்,சாய்பாபாகாலனி பத்தி படிச்சதும் ஒரு நிமிஷம் கோவைக்கு போய் வந்துட்டேன்.ஹ்ம்ம்...சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல் வருமா?

நாமக்கல் சிபி said...

//என்னங்க பாலாஜி கோழி இந்த குசும்பு செய்துட்டு இருக்கார்.//
இதெல்லாம் அவருக்கு சாதாரண விஷயம். இன்னும் அவர் செய்தது நிறையா இருக்கு...

//கோழியடிச்சு குருமா வெச்சாதான் திருந்துவார் போல:))
//
கோழி படம் போட்டிருந்த செல்வனா இப்படி சொல்வது??? நம்ப முடியவில்லை...இல்லை...இல்லை (Echo) :-))

//துடியலூர்,சாய்பாபாகாலனி பத்தி படிச்சதும் ஒரு நிமிஷம் கோவைக்கு போய் வந்துட்டேன்.ஹ்ம்ம்...சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல் வருமா?
//
சொர்க்கமே என்றாலும் அது கொயம்புத்தூர் போல வருமா??? :-)

வடுவூர் குமார் said...

நான் சொல்ல நினைத்ததை "நக்கீரன்" சொல்லிட்டார்.
நானும் கணினியை எப்படி ஷட்டவுன் செய்வது என்று தெரியாமல் பவர் கேபுளை புடிங்கினவன் தான்!!
ஆனாலும் உங்க நண்பர் நோட்பேட் ஐ அவர் எடுக்கவில்லை என்று சொன்னது தான் சூப்பர்.கோழி மன்னிப்பாராக.
பலரும் இப்படி அடிபட்டுத்தான் கற்றுக்கொண்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

பெத்தராயுடு said...

கோழியோட நல்ல டமாஸ்தான் போங்க.

எங்கூருல வச்சு கத சொல்றீங்க!.
'ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..'.

நாமக்கல் சிபி said...

வடுவூர்,
முதல் வருடம் சேர்ந்த புதிதில் எனக்கும் ஷட் டவுன் செய்ய தெரியாது. எல்லாமே கொஞ்ச கொஞ்சமா கத்துக்கிட்டதுதான் :-)

பெத்த ராயிடு,
நீங்களும் கோவையா??? வாங்க!!! வந்து ஜோதில ஐக்கியமாயிடுங்க!!

பெத்தராயுடு said...

இன்னும் நெருக்கமா, துடியலூருதானுங்க...

நாமக்கல் சிபி said...

பெத்தராயிடு,
துடியலூரா???
நாங்க அது பக்கத்துல இருக்கிற காலேஜ்ல தான் படிச்சோம் :-))

G.Ragavan said...

அடேங்கப்பா....கோழி படாதபாடு படுத்தியிருக்கு போல....ம்ம்ம்ம்....நம்மூர்லனா அடிச்சு கொழம்பு வெச்சிருப்பாங்க. நீங்கள்ளாம் நல்லவங்க போல. ஹி ஹி.

விழிப்பு said...

//இருமி: கோழி போய் லெக் பம்ப் எடுத்துட்டு வாடா...

உள்ளே போன கோழி கைல எடுத்துட்டு வந்ததை பார்த்து எல்லோரும் அரண்டு போயிட்டாங்க!!!

அவன் கைல இருந்தது Fire Extinguisher :-)))//

(ROF&L) :-D

நாமக்கல் சிபி said...

விழிப்பு,
நல்லா சிரிங்க... இதுல இருமியோட இருக்கிறதெல்லாம் உண்மையாலுமே நடந்தது :-)

கைப்புள்ள said...

//அநேகமா சர்ட்டிபிகேஷன்ல ஊத்தன கதையாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன் :-(//

சுதந்திர தினத்தன்னிக்கு ஊத்துனது தீபாவளி அன்னிக்கு சுபமா முடிஞ்சிருக்காக்கும்.

//இருமிக்கு ஒரு நிமிஷம் புரியாம என்னனு பாத்தா, கோழி இருமியோட தோள்ல கையப் போட்டிருக்கான் :-))//

சர்தார்ஜி ஜோக்ஸ் மாதிரி கோழி ஜோக்ஸ்னு போடலாம் போலிருக்கே? ஆனா இதையெல்லாம் படிச்சா கோழி வெக்கப் படுவாரு வேதனை படுவாரு வருத்தப் படுவாருடா கண்ணா
:)

நாமக்கல் சிபி said...

//சுதந்திர தினத்தன்னிக்கு ஊத்துனது தீபாவளி அன்னிக்கு சுபமா முடிஞ்சிருக்காக்கும். //
தல,
அது வேறு இது வேறு!!!
வருசத்துக்கு 4 பண்ணனும் :-(

இன்னும் 1 தான் இருக்கு :-)

//சர்தார்ஜி ஜோக்ஸ் மாதிரி கோழி ஜோக்ஸ்னு போடலாம் போலிருக்கே? ஆனா இதையெல்லாம் படிச்சா கோழி வெக்கப் படுவாரு வேதனை படுவாரு வருத்தப் படுவாருடா கண்ணா
:) //
தலை 5வது பார்ட் படிக்கலையா???

உங்களுக்கும் அவனுக்கும் ஒரு பெரிய ஒத்துமை இருக்கு... அவனும் உங்க கம்பெனி தான் ;)

நாமக்கல் சிபி said...

//வாஹித் ரகுமான் said...
நண்பரே,

தங்களுடைய படைப்பு அருமை.

அதனால், தமிழ்வாக்கு.காம் இடம் பெற செய்துள்ளேன்.

நன்றி
ரகுமான்//

ரகுமான்,
மிக்க நன்றி!!!

கைப்புள்ள said...

//தலை 5வது பார்ட் படிக்கலையா???

உங்களுக்கும் அவனுக்கும் ஒரு பெரிய ஒத்துமை இருக்கு... அவனும் உங்க கம்பெனி தான் ;) //

5வது பார்ட்டும் படிச்சாச்சு கட்டர்! கோழியும் அப்போ நம்மளைப் போலவே ஒரு ஜெண்டில்மேன்னு சொல்லு.
:)

நாமக்கல் சிபி said...

//5வது பார்ட்டும் படிச்சாச்சு கட்டர்! கோழியும் அப்போ நம்மளைப் போலவே ஒரு ஜெண்டில்மேன்னு சொல்லு.
:) //
தல,
கோழிக்கும் உனக்கும் நிறைய ஒத்துமை இருக்குனு சொல்லிட்டேன்...
மத்ததை எல்லாம் மக்களே தீர்மானிச்சுக்குவாங்க...

நீ அதெல்லாம் சொல்ல தேவையில்லை ;)

C.N.Raj said...

Sibhi,

Naan ippa singaporela irukken.Lunch timela unga blog padichukuttu irukken.
Kozhiyoda fire extinguisher joke padichchen ippa thaan lunch timela.
Thaanga mudiyaama vaay vittu saththamaa sirichchutten.
Pakkaththula iruntha chinese girl enna vinothamaa paarththuttu enthiruchchup poitta.
That was a real Damn good Joke Man.

Raj.