தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, August 14, 2006

கோழியின் அட்டகாசங்கள் - 2

இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் லேப்:

பிரோக்ராம் அவுட்புட் காட்டிவிட்டு, லேப் இன்ஸ்ட்ரெக்டரிடம் அப்செர்வேஷன் நோட்டில் கையெழுத்து வாங்கிவிட்டு என் இடத்திற்கு வந்து பார்த்தா என் எலிக்குட்டியக் (மவுஸ்) காணோம்...

எனக்கு அருகில் அமர்ந்திருப்பவனிடம் (அருண்): டேய் எங்கடா என் மவுஸ்ஸ காணோம்??

அருண்: தெரியல... கோழிதான் இங்க ஏதோ நோண்டிட்டு இருந்தான்.

சரின்னு நான் கோழி எடத்துக்கு போய் பார்த்தால், கோழி என் மவுஸ்ஸ அவன் சிஸ்டத்துல இனைத்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.

நான்: கோழி ஏண்டா, என் மவுஸ்ஸ எடுத்துட்டு வந்த???

கோழி: கொஞ்சம் இரு...தரன்... இது வேற இந்த நேரம் பாத்து காப்பி ஆக மாட்டிங்குது. ஒரு அஞ்சி நிமிஷம் வெயிட் பண்ணு

நான்: சரி சீக்கிரம் தா...

கோழி திரும்ப அவன் சிஸ்டத்தில இருந்து மவுஸ் கழுட்டி என் சிஸ்டத்துல மாட்டினான். அங்க என் பிரோகராமை ரைட்-கிளிக் பண்ணி காப்பி பண்ணான்...
திரும்ப என் சிஸ்டத்துல இருந்து கழுட்டி அவன் சிஸ்டத்துக்கு எடுத்துட்டு போனான்.

சரி என்ன பண்றான்னு பார்த்தா!!! அங்க திரும்ப கனெக்ட் பண்ணி, ரைட் கிளிக் பண்ணி பேஸ்ட் பண்ண ட்ரை பண்ணிட்டு இருந்தான்.

நான்: டேய் கோழி, என்ன பண்ற???

கோழி: ஏண்டா உன் மவுஸ் ஒலுங்கா வேலை செய்யாதா??? காப்பி ஆகுது ஆனால் பேஸ்ட் பண்ண முடியல...

நான்: :-((((

சம்பவம் - 2:
மூன்றாம் ஆண்டு....

OP: டேய்!!! கோழி முதல் முறையா அவுட்-புட் வாங்கிட்டாண்டா!!!

நான்: OP, நிஜமாவா???

OP: ஆமாம், யாரையோ பாத்து போட்டு வாங்கிட்டான்.

நான்: சரி வா!!! நம்ம போயி என்ன பிரோக்ராம்னு பாப்போம்.

நானும், OPயும் கோழி எடுத்துக்கு பொனா, கோழி ரொம்ப சந்தோஷத்துல குதிச்சிட்டு இருந்தான்...

OP: டேய்ய்ய் கோழி, அவுட்புட் வாங்கிட்டியாம்... இன்னைக்கு டிப்பார்ட்மெண்லையே இது தான் ஹாட் டாபிக். HODக்கு ஹார்ட்-அட்டாக் வந்திடுச்சாம்.

கோழி: டேய், இதெல்லாம் எனக்கு சாதரணம்டா...நாங்கெல்லாம் யாரு!!!

நான்: டேய் கோழி அந்த பிரோக்ராம காட்டு...OP நம்ப மாட்றான்...

கோழி: இந்தா நீயே தேடிக்கோ!!! ஐயா பிஸி!!!

நானும் பிரோக்ராம ஒவ்வொரு foldera தேடி பார்க்கிறேன்... எங்க இருக்குனே கண்டுபிடிக்க முடியல...

நான்: டேய் கோழி பிரோக்ராமக் காணோம்டா!!!

கோழி: என்ன காணோமா? இரு நான் பார்க்கிறேன்...

கோழியும் தேடிக்கிட்டே இருந்தான்.

கோழியப் பத்தி அவனை விட நல்லா தெரிஞ்ச OP...டேய் கோழி!!! இரு நான் பார்க்கிறேன்னு சொல்லிட்டு..மவுஸ்ஸ வாங்கினான்.

நேரா Recycle Bin போனான்...பிரோக்ராம் Recycle Binல இருந்தது...

OP: டேய் கோழி பிரோக்ராம யாருக்கும் தெரிய கூடாதுனு Recycle Binல Save பண்ணி வெச்சிருக்காண்டா...

இது காட்டுத் தீ போல பரவி...டிப்பார்ட்மென்ட்ல இருக்கிற எல்லா ஸ்டாஃபும் Recycle Binல Save பண்ண முடியுமானு முயற்சி பண்ணி பார்த்தாங்க ;-)

அட்டாகசங்கள் தொடரும்...

31 comments:

Unknown said...

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

நாமக்கல் சிபி said...

மகி,
இப்படி ஏதாவது ரெஸ்பான்ஸ் கொடுங்க.. அப்பத்தான் நமக்கும் எழுத கொஞ்சம் வசதியா இருக்கும் :-)

கப்பி | Kappi said...

:)))
அட்டகாசங்கள் தொடரட்டும் ;)

நாமக்கல் சிபி said...

கப்பி,
கோழியோட அட்டகாசகங்கள் இன்னும் தொடர்ந்துகிட்டுதான் இருக்கு :-))
(பெங்களூர்ல...ஒரு மூணு எழுத்து MNCல)

வணக்கத்துடன்,
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து படிக்கவும்.

G.Ragavan said...

கோழி கிண்டல்னு சொல்வாங்க. அது இதுதான் போல.

Unknown said...

ஹ்லோ இங்க தனியா என்ன பன்னுறீங்க? அங்கன ஒரு பக்கா கடலை சீன் ஓடிட்டு இருக்கு

நாமக்கல் சிபி said...

//கோழி கிண்டல்னு சொல்வாங்க. அது இதுதான் போல.
//
:-)))

//ஹ்லோ இங்க தனியா என்ன பன்னுறீங்க? அங்கன ஒரு பக்கா கடலை சீன் ஓடிட்டு இருக்கு //
எங்கனு சொன்னா நாமலும் கலந்துக்குவோமில்ல...

Vaikunth said...

:-))))
கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க

நாமக்கல் சிபி said...

//கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க
//
வாங்க வாங்க!!! இனிமேதான் மேட்டரே!!!

வடுவூர் குமார் said...

:-)))
ஏன் சிரிக்கிறேன் என்று அலுவலகத்தில் எல்லோரும் திரும்பிப்பார்க்கிறார்கள்,.
நல்லாருக்கு."நினைத்து நினைத்து சிரித்தேன்" 7B ரெயின்போ காலனி மெட்டுடன் பாடலாம்.
ஆமாம் முடியுமா??சும்மா..

Unknown said...

Ha..ha.....:-)

Super.sirippe nikkalai

Syam said...

அட இப்படி ஒரு அறிவு ஜீவி கூட படிக்காம போய்டோம்னு ஏக்கமா இருக்கு...தொடருங்கள் யாகத்தை :-)

நாமக்கல் சிபி said...

வடுவூர் குமார்/செல்வன்,
உண்மையாத்தான் சொல்றீங்களானு தெரியலை ;)
ஆனால் இதே ஜோக்கை கோழியை வெச்சிக்கிட்டு சொன்னா எஃபக்ட் படம் கிளப்பும்...

syam,
இதுக்கே இப்படி சொல்லிட்டா... இனிமே தான் முக்கியமான மேட்டருங்களே இருக்கு

tamizhppiriyan said...

கோழியின் அட்டகாசகங்கள் தொடரட்டும்...மீண்டும் மலர்ந்த நினைவுகள்!
நன்றி பாலாஜி

நாமக்கல் சிபி said...

சங்கர்,
உனக்கு தெரியாததும் இதுல கொஞ்சம் வரும்...
காலேஜ் முடிஞ்சதுக்கு அப்பறம் பெங்களூர்ல நடந்தது :-))
(பாதிக்கு மேல OP போட்ட பிட்டுதான்)

தொடர்ந்து படிக்கவும்

Unknown said...

hai hai hai come on man

ரவி said...

Vetti...Just Disclose that MNC name...people are supecting me and mailing me !!!!! hehehe..

நாமக்கல் சிபி said...

மகி,
இன்னைக்கு வேலை கொஞ்சம் அதிகம்... அதனால விளையாட்டுக்கு வர முடியாதுனு நினைக்கிறேன் :-(

ரவி அண்ணா,
I cannot disclose the name of the MNC right now :-))

Friends,
Its not Ravi...

அண்ணா,
போதுமா???

Unknown said...

அட வெளையாட்டில்லப்பா பதிவே போட்டாச்சி கயல்விழி

பெருசு said...

கோயம்புத்தூர் மக்கள்ஸ்னாலே குசும்புதான்.

அதிலும் இந்த காரமடை கோழி கொஞ்சம் ஸ்பெஷல்.

அவுங்க ஊர் தேர் மிட்டாய் சாப்பிட்டிருக்கீங்களா

நாமக்கல் சிபி said...

//அட வெளையாட்டில்லப்பா பதிவே போட்டாச்சி கயல்விழி //
ஸாரி. கவனிக்கலை... பின்னூட்டம் போட்டாச்சி :-)

//கோயம்புத்தூர் மக்கள்ஸ்னாலே குசும்புதான்.

அதிலும் இந்த காரமடை கோழி கொஞ்சம் ஸ்பெஷல்.//
பெருசு,
சரியா சொன்னிங்க... இதைவிட இந்த பொள்ளாச்சிகாரங்க குசும்பு தாங்க முடியாது :-))

//அவுங்க ஊர் தேர் மிட்டாய் சாப்பிட்டிருக்கீங்களா//
காரமடை ரங்க நாதர் கோவிலுக்கு போயிருக்கேன்... ஆனால் தேர் மிட்டாய் சாப்பிட்டதில்லையே :-(

சரி கோழிட்ட சொன்னா வாங்கிட்டு வர போறான்... சாப்பிட்டுவோம்

Unknown said...

கொக்கரக்கோ கோ கொக்கரக்கோ கோ கோழிதாங்க கூவுது:))

Unknown said...

//தேர் மிட்டாய் சாப்பிட்டிருக்கீங்களா //

பெருசு இன்னும் சின்னப் புள்ளயா வே இருக்காறப்பா :))

நாமக்கல் சிபி said...

//கொக்கரக்கோ கோ கொக்கரக்கோ கோ கோழிதாங்க கூவுது:))
//
என்னாங்க இது விடிஞ்சி இவ்வளவு நேரமாகி கூவுது :-))

ஓ!!! சேவல்தான் விடிய காலைல கூவுமா??? நம்ம எல்லாம் அதை என்னைக்கு கேட்டிருக்கோம் ;)

//பெருசு இன்னும் சின்னப் புள்ளயா வே இருக்காறப்பா :))//
பெருசு அது தேர் மிட்டாயா இல்லை தேன் மிட்டாயா???

Nakkiran said...

//இது காட்டுத் தீ போல பரவி...டிப்பார்ட்மென்ட்ல இருக்கிற எல்லா ஸ்டாஃபும் Recycle Binல Save பண்ண முடியுமானு முயற்சி பண்ணி பார்த்தாங்க ;-)//

I cant stop laughing man.. too good...

நாமக்கல் சிபி said...

Nakkiran,
Thx for the comments...
நல்லா சிரிங்க!!!

கால்கரி சிவா said...

அப்பா கோழிகள் எத்தனை வகை. என் கோழி கதை கேளுங்கள், இது நடந்தது 1997. அந்த காலக் கட்டத்தில் மானேஜர்களிடம் இந்தியாவில் அவ்வளவு கணிணி பரிச்சயம் கிடையாது.

நான் அனைந்திய சேல்ஸ் மானேஜர்களுக்கு ஒரு டேடா பேஸ் ப்ரண்ட் எண்ட் ப்ரொக்ரமை எப்படி இயக்குவது என டிரெய்னிங் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தேன். எல்லாருக்கும் அவர்களின் பெயரே யுஸர் நேமாகவும் அதே பெயரை பாஸ்வேர்டாகவும் போட்டிருந்தேன்.

என்னுடைய கணிணியில் நான் லாகான் செய்து அதை திரையில் காட்டி மற்ற மானேஜர்களையும் என்னை பின் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது

டெல்லி கோழி (மற்றதெல்லாம் சேவல்) ஒரே கூச்சல் லாகான் செய்ய முடியவில்லை என.

மேடம் என்ன யுசர் நேம் போட்டீர்கள் என கேட்டேன் அவர் கரெக்டாக சொன்னார். என்ன பாஸ்வேர்ட் எனக் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலைக் கேட்ட எல்லா சேவல்களும் ஆ என மூர்ச்சையாயினர்

அவர் போட்ட பாஸ்வேர்ட் "********"
ஆம் ஸ்டார் ஸ்டார் என 6 முறைக் கூறினார்

கால்கரி சிவா said...

இந்த மாதிரி அலுவலக கோழி கதை போடாலம் போலிருக்கே.

நன்றி வெட்டிப் பயல்.

----------------------------------
முடிந்தால் calgarysiva@gmail.com தொடர்பு கொள்ளவும்

நாமக்கல் சிபி said...

சிவா,
//அவர் போட்ட பாஸ்வேர்ட் "********"
ஆம் ஸ்டார் ஸ்டார் என 6 முறைக் கூறினார்
//
இந்த அனுபவம் நமக்கும் உண்டு...
நானே முதல்ல கம்ப்யூட்டர் பார்த்தப்ப என் பக்கத்துல இருக்கறவங்க ஸ்டாஃபோட பாஸ்வேர்டை பாக்க சொன்னாங்க...
நான் சொன்னது "7 ஸ்டார்" :-))
(ஆனால் எனக்கு அப்ப பாஸ்வேர்ட்னா என்னனே தெரியாது :-))

//முடிந்தால் calgarysiva@gmail.com தொடர்பு கொள்ளவும் //
நான் இப்ப அலுவலகத்தில் இருக்கிறேன். வீட்டிற்கு சென்றவுடன் கண்டிப்பாக மெயில் அனுப்புகிறேன்.

கைப்புள்ள said...

//கப்பி,
கோழியோட அட்டகாசகங்கள் இன்னும் தொடர்ந்துகிட்டுதான் இருக்கு :-))
(பெங்களூர்ல...ஒரு மூணு எழுத்து MNCல)//

இப்படியெல்லாம் அட்டகாசம்னு தப்பா பேசப்பிடாது. ரத்தத்தை வேர்வையைச் சிந்தி உழைக்கிற எந்த ஒரு மனுசனும் அட்டகாசம் பண்ணறவன் கெடையாது.
:)

நாமக்கல் சிபி said...

//இப்படியெல்லாம் அட்டகாசம்னு தப்பா பேசப்பிடாது. ரத்தத்தை வேர்வையைச் சிந்தி உழைக்கிற எந்த ஒரு மனுசனும் அட்டகாசம் பண்ணறவன் கெடையாது.
:) //
இது நம்ம 'தலை'யோட அட்டகாசம் மாதிரி தல... ;)