தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, July 06, 2009

அன்புள்ள வெட்டிப்பயல் அவர்களுக்கு...

அன்புள்ள வெட்டிப்பயல் அவர்களுக்கு, (மன்னிக்கவும்...இப்படி தான் உங்கள் பெயர் வெப் சைட்-இல் இருந்தது)

முதலில் இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்பும் எண்ணம் எனக்கு ஒரு இருபது நிமிடத்துக்கு முன்புதான் வந்தது. நானும் கடந்த ஆறு மாதங்களாக அனைவரது படைப்புகளையும் மிகுந்த விருப்பத்துடன் படித்து வருகிறேன். முதன் முதலில் இங்கு இருக்கும் நகைசுவையான படைப்புகளுக்காக மட்டும் எல்லாவற்றையும் படித்து கொண்டிருந்தேன். முதன் முதலில் இருந்து என்ன நேற்று இரவு வரை கூட அதே மாதிரிதான்... ஆனால் நேற்று இரவு இரண்டு மணிக்கு மேல் என்னால் என்ன சொல்வதென்றே தெரிவதில்லை. எங்கோ கிடைத்த ஒரு லிங்க் -இல் இருந்து உங்கள் ப்லாக்-க்கு வந்தேன்... முதலில் ஏதோ ஒரு உங்களின் படைப்பை பார்த்துகொண்டிருக்கும் பொது வலது பக்கத்தில் இருக்கும் கதைகள் எனும் தலைப்பை பாத்தேன்... அங்கு "தூறல்" என்ற தலைப்பில் இருந்த ஒரு கதையை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது... நான் உண்மையாக சொல்கிறேன் ... இதுவரை அந்த கதையை எத்தனை முறை திரும்ப திரும்ப படித்தேன் என்று எனக்கு தெரியவில்லை...
கதையை முதன் முறை படித்து முடித்த போது எத்தனை துளி கண்ணீர் வந்தது என்றும் எனக்கு தெரியவில்லை. அந்த கதையில் வரும் உரையாடல்களும், நேர்த்தியும் எனக்கு அப்படியே மனப்பாடம் ஆகிவிட்டது. என்னிடம் உள்ள ஒரே நல்ல பழக்கம் என்று நான் சொல்வது, படிப்பது... நான் படித்தது நன்றாக இருந்தால் ஒரு இரண்டு பேரிடமாவது அதை பற்றியும், அதை எழுதியவரை பற்றியும் என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. ஆனால் இந்த முறை மட்டும் என்னோவோ தெரியவில்லை, உங்களுக்கு என் வாழ்த்துகளுடன் கூடிய நன்றியை சொல்ல வேண்டும் போல் இருந்தது.. நான் முதன் முதலாக அரை பக்கத்துக்கு மேல் ஒரு மெசேஜ் டைப் பண்ணுவது இதுவே முதன் முறை அதுவும் தமிழில். (எதாவது பிழை இருந்தால் மன்னிக்கவும்)

இன்று (சண்டே) முழுவதும் நான் பேருந்தில் மட்டுமே இந்த பெங்களூர் முழுவதயும் சுற்றி வந்தேன் (வேலை விசயமாக). ஆனால் என் முன்னால் எத்தனை கார்த்திக்கும், ஆர்த்தியும் கடந்து சென்றார்கள் என்பதே எனது கனவாக இருந்தது. இன்னும் எத்தனை பேரை சந்திப்பேன் என்பது மட்டுமே என் மனதில் ஓடி கொண்டிருக்கிறது.

( நான் படித்தவர்களில் சிலர் பரிசல், அதிஷா, லக்கிலுக், கார்கி,நர்சிம் என ஒரு பெரிய லிஸ்ட் உள்ளது...) அவர்களின் எழுத்துகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். (Edited by Vettipayal)

ஒரு வேண்டு கோள், எனக்காக இந்த கடிதத்தை உங்கள் ப்ளாகில் நீங்கள் பதிய வேண்டும்... நான் அதை பார்க்கும் சந்தோஷம் எனக்கு கிடைக்க வேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
உங்களின் புது வாசகன்...

.............................................

நண்பரே,
உங்களுடைய மடலுக்கு மிக்க நன்றி.

உங்களுடைய மடலில் இருந்து ஒரு வரியை மட்டும் நீக்கி விட்டேன். அது வீணாக பிரச்சனையை உருவாக்கும்...

நீங்கள் முதல் முறை தமிழில் டைப் செய்வதாக சொல்லியிருக்கிறீர்கள். எப்படி செய்தீர்கள் என்று தெரியவில்லை. http://tamileditor.org/ பயன்படுத்தலாம். அல்லது nhm பயன்படுத்தலாம்.

தூறல்” அளவிற்கு எனக்கு பேர் வாங்கி கொடுத்த கதை எதுவும் இல்லைனு நினைக்கிறேன். அந்த கதை தேன்கூடு போட்டி மரணம் என்ற தலைப்புக்காக எழுதியது. ஆனால் ஏனோ அனுப்பவில்லை. தூறல் என்னோட மூணாவது சிறுகதை. அதற்கு பிறகு இருபது கதைகள் எழுதிவிட்டேன். ஆனால் அது அளவுக்கு எதுவும் பிரபலமாகவில்லை :)

கார்த்திக்கும், ஆர்த்திக்கும் நன்றி

நண்பர் சதீஷுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

.................................................

நண்பர்கள் பல முறை சேட்ல என் கதையைப் பற்றி சொல்லும் விஷயங்கள்.

பெங்களூர்
செல் ஃபோன் உரையாடல்கள்
ட்ராஃபிக் ஜாம்
கிருஷ்ணா கஃபே
பஸ் பயணம்
ஃபுட் கோர்ட்
சண்டை
சமாதானம்

இதையெல்லாம் மாத்தி மாத்தி போட்டா ஒரு புது கதை. இது தான் வெட்டி ஸ்டைல்னு :)

உண்மையாக்கூட இருக்கலாம். மாத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

29 comments:

Anonymous said...

Ethanai peruyya ipdi kelambi irukkeenga?

mothalla ethaachum uruppadiya ezhuthara vazhiya paarungayya...peethhikkarathukku nerayya time irukku.

குசும்பன் said...

எனக்கும் ஒரு வாசகர் சிக்காமலா போய்விடுவார், அப்ப வெச்சுக்கிறேன் உங்களை!:))))

தல ஒரே ஒரு டவுட் நான் பதிவு போட்டா மட்டும் இருக்கும் வாசகரும் தெறிச்சு ஓடி போய்விடுகிறார்களே அவுங்களை கட்டி போடுவது எப்படி?

nila said...

வெட்டி அண்ணா
நான் இன்னிக்குத்தான் உங்க தூறல் கதைய படிச்சேன்.. இதனை நாள் அதை படிக்காம போயிட்டேன்னு வருத்தப்பட்டேன்...
ஏதோ புரியாத பாரம் மனச அழுத்திகிட்டு இருக்கு... ரொம்ப அருமையான படைப்பு... உங்களின் புது வாசகனுக்கும் என் நன்றிகள்.. இந்த பதிவ பார்கலைனா நான் அந்த கதைய என்னைக்கும் படிச்சிருக்க மாட்டேன்னு நினைகிறேன்
வாழ்த்துக்கள் அண்ணா...

Sathish K Ramadoss said...

Thanks vettipayan avargaley....

Sathish K Ramadoss said...

Romba thanks vettipayan avargaley...

ஆ! இதழ்கள் said...

இந்த மடல் எழுதிய வாசகர் போல் பல உண்மையுள்ள வாசகர்கள் உங்களுக்கு இருக்காங்க. அதே போல அந்த வாசகருக்கு மரியாதை தந்து அதை வெளியிட்ட உங்களுக்கும் பாராட்டுக்கள். நீங்கள் அவ்வளவு எளிதாக அவர்களை உதாசீனப்படுத்த முடியாது.

அதே போல இவரையும், இவரும் உங்கள் வாசகர் தானே...

”mothalla ethaachum uruppadiya ezhuthara vazhiya paarungayya...peethhikkarathukku nerayya time irukku.”

மறுபடியும் எழுதற வழிய பாக்கவேண்டியது தான்... ஒரு சிரிப்ப போட்டுட்டு.. நமக்கு எப்பவும் ஒரு குத்தூசி தேவைதானே...

:))

வெட்டிப்பயல் said...

//Anonymous said...
Ethanai peruyya ipdi kelambi irukkeenga?
//
இதுக்கெல்லாம் கவுண்டிங் வெச்சிக்க முடியுமாண்ணே :)

//
mothalla ethaachum uruppadiya ezhuthara vazhiya paarungayya...peethhikkarathukku nerayya time irukku.//

உருப்படியா எழுத தான் பாஸ் முயற்சி செஞ்சிட்டு இருக்கேன் :)

வெட்டிப்பயல் said...

//குசும்பன் said...
எனக்கும் ஒரு வாசகர் சிக்காமலா போய்விடுவார், அப்ப வெச்சுக்கிறேன் உங்களை!:))))

தல ஒரே ஒரு டவுட் நான் பதிவு போட்டா மட்டும் இருக்கும் வாசகரும் தெறிச்சு ஓடி போய்விடுகிறார்களே அவுங்களை கட்டி போடுவது எப்படி?

//

குசும்பரே,
உங்களால சத்தியமா இப்படி வாசகர்களை கட்டி போட முடியாது.

ஒரு இடுகை படிச்சவுடனே அடுத்து எப்படி இருக்குனு போவாங்க. அதுவும் நல்லா இருக்கும். உடனே அடுத்து போவாங்க. அதுவும் நல்லா இருக்கும். அப்படியே படிச்சிட்டே சிரிச்சிட்டு இருக்க வேண்டியது தான். நடுவுல போர் அடிச்சா தானே நிறுத்தி இப்படி மெயில் அனுப்ப முடியும் ;)

அதே மாதிரி படிச்சி முடிச்ச உடனே இவருக்கு மெயில் அனுப்பினா நம்மல அந்தர் பண்ணிடுவாருனு டெர்ரர் ஆகிடுவாங்க :)

வெட்டிப்பயல் said...

//nila said...
வெட்டி அண்ணா
நான் இன்னிக்குத்தான் உங்க தூறல் கதைய படிச்சேன்.. இதனை நாள் அதை படிக்காம போயிட்டேன்னு வருத்தப்பட்டேன்...
ஏதோ புரியாத பாரம் மனச அழுத்திகிட்டு இருக்கு... ரொம்ப அருமையான படைப்பு... உங்களின் புது வாசகனுக்கும் என் நன்றிகள்.. இந்த பதிவ பார்கலைனா நான் அந்த கதைய என்னைக்கும் படிச்சிருக்க மாட்டேன்னு நினைகிறேன்
வாழ்த்துக்கள் அண்ணா...

//

ரொம்ப நன்றிமா...

எனக்கு என் கதைகள்ல பிடிச்சது கொல்ட்டி தான். இப்ப படிச்சாலும் மனசை ஏதோ பாரம் அழுத்துற மாதிரி இருக்கும் :-)

வெட்டிப்பயல் said...

//Sathish Kumar R said...
Romba thanks vettipayan avargaley...

//

மிக்க நன்றி பாஸ்... தொடர்ந்து எல்லாருக்கும் தமிழ்ல பின்னூட்டம் போட ஆரம்பிச்சி ஒரு ப்ளாக் ஆரம்பிங்க :-)

வெட்டிப்பயல் said...

//ஆ! இதழ்கள் said...
இந்த மடல் எழுதிய வாசகர் போல் பல உண்மையுள்ள வாசகர்கள் உங்களுக்கு இருக்காங்க. அதே போல அந்த வாசகருக்கு மரியாதை தந்து அதை வெளியிட்ட உங்களுக்கும் பாராட்டுக்கள். நீங்கள் அவ்வளவு எளிதாக அவர்களை உதாசீனப்படுத்த முடியாது.
//
மிக்க நன்றி ஆனந்த். ஒரு நாளைக்கு நான் ரெண்டு பதிவு போட்டு ரொம்ப வருஷம் ஆகுது. இன்னைக்கு அவர் எதிர்பார்ப்பாரேனு தான் பதிவு போட்டுட்டேன். நம்மல திட்றவங்களுக்கு கொடுக்குற மரியாதையை விட நம்மல மதிக்கறவங்களுக்கு அதிகமா கொடுக்கணும் இல்லையா? அதான் பதிவு போட வேண்டியதா போச்சி :)

//
அதே போல இவரையும், இவரும் உங்கள் வாசகர் தானே...

”mothalla ethaachum uruppadiya ezhuthara vazhiya paarungayya...peethhikkarathukku nerayya time irukku.”

மறுபடியும் எழுதற வழிய பாக்கவேண்டியது தான்... ஒரு சிரிப்ப போட்டுட்டு.. நமக்கு எப்பவும் ஒரு குத்தூசி தேவைதானே...

:))//

நிச்சயமா... இதுக்கெல்லாம் ஃபீல் ஆகற பார்ட்டியா நாம :-)

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள் பாலாஜி.

உங்களுக்கு போட்டியா நானும் கதை எழுதறேன். இதுவரைக்கும் ஒரு கதை எழுதிருக்கேன்.

Jayaprakash Sampath said...

charu-vai kindal paNRingaLo? with a straight face :)

கார்க்கிபவா said...

தல என்ன பத்தி என்ன சொன்னாரு? ஏன் எடிட் செஞ்சீங்க? :)))

வாழ்த்துகள்...

வெட்டிப்பயல் said...

//Prakash said...
charu-vai kindal paNRingaLo? with a straight face :)
//

ஆஹா... எ.கொ.ச இது?
விடாது கருப்பு பத்தி எழுதனதால எனக்கும் MPD ச்ச்னு நினைச்சிட்டீங்களா?
எங்களுக்கு எல்லாம் இப்படி கடுதாசி வரக்கூடாதா? ;)

அதான் சதிஷ் குமாரே ஒரு பின்னூட்டம் போட்டிருக்காரே பாஸ். இப்படி பாராட்டி வர மெயில் எல்லாம் பொதுல வைக்கறதில்லை. இவர் ரொம்ப விருப்பப்பட்டிருக்கார். அதுவுமில்லாம முதல் முறை தமிழ்ல இவ்வளவு டைப் பண்ணிருக்கார். அந்த எண்ணத்துக்கு நிச்சயம் மரியாதைக் கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை.

வெட்டிப்பயல் said...

//குடுகுடுப்பை said...
வாழ்த்துக்கள் பாலாஜி.

உங்களுக்கு போட்டியா நானும் கதை எழுதறேன். இதுவரைக்கும் ஒரு கதை எழுதிருக்கேன்.
//

தல,
நீங்க எதுக்கு எனக்கு போட்டியா எழுதனும்? உங்களோட முதல் கதைக்கு போட்டியா எழுதுங்க.

நானும் அப்படி தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். என்னுடைய முதல் கதையை என்னால இன்னும் முந்த முடியலை :(

வெட்டிப்பயல் said...

//கார்க்கி said...
தல என்ன பத்தி என்ன சொன்னாரு? ஏன் எடிட் செஞ்சீங்க? :)))

வாழ்த்துகள்...
//

நீங்க என்ன தான் மாஞ்சி மாஞ்சி எழுதினாலும் கார்க்கி அளவுக்கு எழுத முடியுமானு கேட்டிருந்தாரு.. அதான் ;)

Just Kidding.. I dont like comparing any two bloggers (especially myself with anyone) :-)

உங்களுக்கும் வாழ்த்துகள் சகா :)

♫சோம்பேறி♫ said...

வாழ்த்துக்கள் வெட்டிப்பயல்..

பை த வே, நேத்து நீங்க எனக்கு அனுப்பின லெட்டரை நான் பப்லிஷ் பண்ணிக்கலாமா?

ஸ்ஸ்ஸ்ஸப்பா.. வந்த வேலை முடிஞ்சதுடா சாமி!

(பி.கு: இது ஒரு டெம்ப்ளேட் கமெண்ட்..)

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் வெட்டி.

you deserved it.

Sanjai Gandhi said...

க்ரேட் மாமனாரே.. :)

வெட்டிப்பயல் said...

//♫சோம்பேறி♫ said...
வாழ்த்துக்கள் வெட்டிப்பயல்..

பை த வே, நேத்து நீங்க எனக்கு அனுப்பின லெட்டரை நான் பப்லிஷ் பண்ணிக்கலாமா?

ஸ்ஸ்ஸ்ஸப்பா.. வந்த வேலை முடிஞ்சதுடா சாமி!

(பி.கு: இது ஒரு டெம்ப்ளேட் கமெண்ட்..)

//

இதுக்கெல்லாமா சின்னப்புள்ள மாதிரி பர்மிஷன் கேட்பாங்க... போட்டுத் தாக்கு :)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
வாழ்த்துக்கள் வெட்டி.

you deserved it.//

மிக்க நன்றி முக :)

வெட்டிப்பயல் said...

// $anjaiGandh! said...
க்ரேட் மாமனாரே.. :)

//

டாங்க் யூ மாப்ஸ் :)

பாலா said...

பாலாஜி,
நான் படித்த முதல் (ரசித்த) வலைப்பூ சிறுகதை (forward) "தூறல்" தான். இன்று தான் அது நீங்கள் எழுதியதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி...

வாழ்க வளமுடன் :)

அன்பன்,
பாலா.

நாமக்கல் சிபி said...

தூறல்:

உண்மையிலயோ அருமையான கதைதான் வெட்டி! நான் அப்பவே படிச்சி மனசு கனத்துப் போயிருக்கேன்! அந்த இடுகைலயே பின்னூடத்துல சொல்லியிருப்பேன்னு நினைக்கிறேன்!

யூ டிசர்வ் திஸ்!

Athisha said...

உங்க பதிவுலாம் படிச்சுதான் தல எழுதவே வந்தேன்

உங்கள் பதிவில் என் பெயர் வந்திருக்கறதே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

அந்த வாசகருக்கும் உங்களுக்கும் நன்றி

வெட்டிப்பயல் said...

//பாலா said...
பாலாஜி,
நான் படித்த முதல் (ரசித்த) வலைப்பூ சிறுகதை (forward) "தூறல்" தான். இன்று தான் அது நீங்கள் எழுதியதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி...

வாழ்க வளமுடன் :)

அன்பன்,
பாலா.
//

மிக்க‌ ந‌ன்றி பாலா... தூற‌ல் 2006ல‌ எழுதிய‌ சிறுக‌தை...

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...
தூறல்:

உண்மையிலயோ அருமையான கதைதான் வெட்டி! நான் அப்பவே படிச்சி மனசு கனத்துப் போயிருக்கேன்! அந்த இடுகைலயே பின்னூடத்துல சொல்லியிருப்பேன்னு நினைக்கிறேன்!

யூ டிசர்வ் திஸ்!
//

Danks ThaLa :)

வெட்டிப்பயல் said...

//அதிஷா said...
உங்க பதிவுலாம் படிச்சுதான் தல எழுதவே வந்தேன்

உங்கள் பதிவில் என் பெயர் வந்திருக்கறதே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

அந்த வாசகருக்கும் உங்களுக்கும் நன்றி
//

அதிஷா...
மிக்க‌ ம‌கிழ்ச்சி...

உன்னுடைய‌ சினிமா விம‌ர்ச‌ன‌த்திற்கும், சாமியார் க‌தைக‌ளுக்கும் ர‌சிக‌ன் நான் :)

தொட‌ர்ந்து எழுதி க‌ல‌க்க‌வும்...