தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, March 22, 2009

சிவாஜி ஸ்பெஷல்

இசை கேட்டால்



எங்கிருந்தோ வந்தான்




தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்




ஒரே ஒரு ஊரிலே




உள்ளதை சொல்வேன்



Happy இன்று முதல் Happy



அந்த நாள் ஞாபகம்.. நெஞ்சிலே வந்ததே நண்பனே




உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதடா



இதுக்கெல்லாம் நான் விளக்கம் சொல்றதை விட ஜி.ரா அருமையா வந்து சொல்லுவாரு... I am the waiting :)

14 comments:

G.Ragavan said...

திரும்பவும் ஒரு சிவாஜி ஸ்பெஷல். நன்றி பாலாஜி. ஒவ்வொரு பாட்டும் தேன். ஆகையால மொத்தமா எல்லாப் பின்னூட்டங்களையும் இன்னைக்கே போடாம...ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொன்னுன்னு பாப்போமா? ஒனக்குச் சரிதானே?

வெட்டிப்பயல் said...

ஓகே ஜி.ரா.

முதல் பாட்டுல இருந்து ஆரம்பிங்க :)

G.Ragavan said...

தவப்புதல்வன்... முக்தா சீனிவாசன் இயக்கிய படம். எனக்கும் ரொம்பப் பிடிச்ச படம். பரம்பரை பரம்பரையா குடும்பத்துல வர்ர மாலைக்கண் நோய் மகனுக்கு வந்துரக்கூடாதேன்னு கவலைப்படுற தாய். மாலைக்கண் நோய் வந்தப்புறம் அதைத் தாயிடமும் மத்தவங்களிடம் மறைக்க முயலும் மகன். அதனால் அவனுக்கு உண்டாகும் பிரச்சனைகள். காதலனோட நோய்களையும் பிரச்சனைகளையும் தெரிஞ்சிக்கிட்டு...அவனுக்கேத் தெரியாம குணப்படுத்தி பிரச்சனைகளைத் தீர்க்கும் டாக்டர் காதலி. இதுதான் கதை. அம்மா பண்டரிபாய். மகன் நடிகர் திலகம். காதலி கே.ஆர்.விஜயா.

இதுல ஒரு பாட்டு...கிருஸ்துமஸ் பாட்டு.... தாத்தா துள்ளி விளையாடுவாரு. சிவாஜிதான். கிண்கிணி கிண்கிணி என வரும் மாதா கோயில் மணியோசைன்னு ஒரு அருமையான பாட்டு. பாடிக்கிட்டிருக்குறப்பவே மாலையும் வந்துரும்.. நோயும் வந்துரும். தடுக்கிக் கீழ விழுந்துருவார். சின்னப்பிள்ளைகளெல்லாம் சிரிக்கும்... அப்ப... தாத்தாதானே பார்வை கொஞ்சம் குறைவாய் இருந்தால் என்ன... தட்டுத்தடவி தடுக்கி விழுந்தால் சிரிப்பாயோ என் கண்ணேன்னு டி.எம்.எஸ் பாடுறப்பவும்...நடிகர் திலகம் அழுறப்பவும்... இன்னைக்கும் எனக்குக் கண்ணுல தண்ணி வந்துரும். பாட்டைக் கேட்டாலே போதும். மெல்லிசை மன்னரை நாம ஒழுங்கா மதிக்கலைன்னு... இசை தெரிஞ்ச எல்லாருக்கும் தெரியும். இந்த மாதிரி இறவாப் பாடல்களைக் கொடுத்த அவருக்கு ஒரு தேசிய விருது கூடக் கொடுக்கலைன்னா... அந்த விருதுக்கு மதிப்பு பூச்சியந்தான்.

G.Ragavan said...

சரி.. பாலாஜி போட்டிருக்குற பாட்டுக்கு வருவோம்.

இசையால் வசமாகா இதயமெது? அந்த இசைக்கு எவ்வளவு பெரிய ஆற்றல்கள் உண்டு. அம்மா பாடுனா தாலாட்டுது. காதலி பாடுனா சீராட்டுது. கொழந்தை பாடுனா கண்களில் ஆனந்த நீராட்டுது. வயல்ல பாடுனா பயிர் வளருது. போரில் பாடுனா வீரம் வருது. இப்பிடி உலகத்துல இருக்குற அத்தனையையும் தட்டி எழுப்புற இசையால ஒரு விளக்கையா பொருத்த முடியாது? மன்னன் மகளுக்கு நோய். என்னன்னே தெரியாத நோய். உடம்புக்கு வந்தாத்தானே தெரியும். மனசுக்கு வந்தா? நோயும் பேயும் இருட்டுலதான் ஆடும். அப்ப வெளிச்சம் வரனுமே! அதுக்கு விளக்கேத்தனும். திரி போட்டு விளக்கேத்துறத விட... சுரம் போட்டு விளக்கேத்துனா உள்ளம் இளகி நோய் போயிருமே.

தான்சேன் என்கின்ற இசை மேதையைத் தவிர யார் அப்படிப் பாட முடியும்? கூப்புடுங்க. இது படத்துல வர்ர ஒரு கற்பனை நாடகக் காட்சி.

இந்தக் காட்சிக்குத்தான் மெல்லிசை மன்னர் இசையமைச்சிருக்காரு. இசை கேட்டால் புவி அசைந்தாடும். அது இறைவன் அருளாகும். ஏழாம் கடலும்...வானும் நிலவும்...என்னுடன் விளையாடும். இசை என்னிடம் உருவாகும். கேட்டுப்பாருங்க.... டி.எம்.எஸ்க்கு ஏழிசை வேந்தர்னு ஒரு பேர் உண்டு. இளையராஜா ஒரு பேட்டியில் சொன்னாரு. ஒரு இசையமைப்பாளருக்கு பாட்டுல என்ன வேணுமோ.. அதையெல்லாம் டி.எம்.எஸ்க்கு விளக்கவேண்டியதில்லை. எல்லாம் தானே வந்துரும். மெட்டை மட்டும் சொன்னாப் போதும். இது...சண்டையெல்லாம் போட்டுப் பிரிஞ்சப்புறம் சொன்னது. எம்.எஸ்.வி என்ன சொன்னாருன்னா... கோடி ரூவா கொடுத்தாலும் அவரால அபசொரமாப் பாட முடியாதுங்க.

அப்படிப் பட்ட டி.எம்.எஸ் இந்தப் பாட்டைக் கம்பீரமா பாடிருக்காரு. வேற யாரையுமே நெனைக்க முடியாத பாட்டு. கேளுங்க. கேட்டு ரசிங்க.

வெட்டிப்பயல் said...

ஜி.ரா,
கலக்கல்...

பேசாம இந்த சீரிஸை நீங்களே கண்டினியூ பண்ணலாம்... வாரத்துக்கு நாலு பாட்டு போட்டீங்கனா கூட ஓகே தான் :)

Poornima Saravana kumar said...

இனிமையான பாடல்கள்!!

நாகை சிவா said...

ஜி.ரா. கலக்கல்...

வெட்டி.. அந்த நாள் ஞாபகம் பாட்டு போட்டதுக்கு தாங்கஸ்ப்பா :)

ஜோ/Joe said...

http://cdjm.blogspot.com/2009/03/blog-post.html

G.Ragavan said...

நல்லா யோசிச்சிப்பாருங்க. இங்க நம்மள்ளாம் பேசிக்கிட்டிருக்கோமே... இதுல எல்லாரையும் பொறந்ததுல இருந்தேவா தெரியும்? இல்லையே. எங்கிருந்தோ வந்தோம்...சரிதானே. அந்த எங்கிருந்தோ வந்தது நல்லதா இருந்தா அருள்னும் சொல்லலாம்...கெட்டதா இருந்தா இருள்னு சொல்லலாம்.

இங்க இந்தத் தந்தைக்கு...அதாங்க...படிக்காத மேதை ரெங்காராவுக்கு....பிள்ளைகள் உண்டு. ஆனாலும்...எங்கிருந்தோ வந்தான் ஒருவன். அன்பை நாம எவ்ளோவோ கொட்டுனாலும் வாங்காமப் போறவங்களும் உண்டு. ஆனா இன்னும் வேணும்.. குடு குடுன்னு கேட்டு வாங்குறவங்களும் உண்டு. அப்படியொருத்தன் வந்தான். கூடவே இருந்தான். அவனை நம்ம பாத்துவோம்னு நெனச்சா..அவன் நம்மளப் பாத்துக்கிறான். அப்படிப்பட்டவனை வசச்சி வீட்ட விட்டுத் தொரத்தியாச்சு. தன்னோட பிள்ளைகள் மேல தகப்பனுக்கு இதுனால வெறுப்பு. பெத்தாதான் பிள்ளையா?

அப்பப் பாட்டு வருது... வந்தது யாரு? கண்ணன் என் காதலன்னு சொன்னாரு. கண்ணம்மா என் காதலின்னு சொன்னாரு. கண்ணம்மா என் குழந்தைன்னு சொன்னாரு. வேலைக்காரன்னு சொன்னாரு. தாய்னு சொன்னாரு. அந்தக் கண்ணனே இங்கயும் வந்தான்னு .. பாசத்துக்கு ஏங்குற தகப்பன் நம்புறாரு. ஆத்தாமையெல்லாம் மனசுக்குள்ள விம்மி வெடிச்சிப் பாடுறாரு. எங்கிருந்தோ வந்தான்... இடைச்சாதி நானென்றான்... இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்தேனோ!

சீர்காழி கோவிந்தராஜன் பற்றிச் சொல்லாம இந்தப் பாட்டைப் பத்திப் பேச முடியாது. வெண்கலத் தொண்டை. கணீர்னு பாடுறாரு.

பாட்டைப் பாருங்க. நல்ல படங்க. கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன் எழுதியது.

வெட்டிப்பயல் said...

ஜி.ரா,
வழக்கம் போல கலக்கல். ரங்கா ராவ் பத்தி இன்னும் நிறைய சொல்வீங்கனு எதிர்பார்த்தேன் :)

Malini's Signature said...

எப்பவும் கடைசி எக்சாம் முடிச்சுட்டு ஆஸ்டலே விட்டு வீட்டுக்கு முட்டை கட்டும் போது மறக்காமே பல வருடம் பாடிய பாடல்

Happy இன்று முதல் Happy....

முரளிகண்ணன் said...

ஜி ரா போல எனக்கும் இங்கே பின்னூட்ட ஆசை.

ஆனால் அவர் அளவுக்கு சிவாஜி படங்களை உணர்வு ரீதியாக ரசித்ததில்லை.

அவ்வப்போது தகவல்களைப் போடலாம்தானே?

வெட்டிப்பயல் said...

//ஹர்ஷினி அம்மா - said...
எப்பவும் கடைசி எக்சாம் முடிச்சுட்டு ஆஸ்டலே விட்டு வீட்டுக்கு முட்டை கட்டும் போது மறக்காமே பல வருடம் பாடிய பாடல்

Happy இன்று முதல் Happy....

8:25 PM//

ஆமாம்... நாங்களும் இதே பாட்டு தான் பாடுவோம்.

அப்பறம் ஏதாவது பீரியடுக்கு வாத்தியார் வரலனாலும் இந்த பாட்டு பாடுவோம் ;)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
ஜி ரா போல எனக்கும் இங்கே பின்னூட்ட ஆசை.

ஆனால் அவர் அளவுக்கு சிவாஜி படங்களை உணர்வு ரீதியாக ரசித்ததில்லை.

அவ்வப்போது தகவல்களைப் போடலாம்தானே?//

என்ன இது சின்னப்புள்ள தனமா கேள்வி கேட்டுட்டு... போட்டு தாக்குங்க தல :)