தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, March 30, 2009

இது கண்ணன் பாடல் இல்லையா???

இந்த பாட்டு கண்ணன் பாட்டு இல்லைனு ஒரு ஆன்மீக பதிவர் சொல்றாரு. மக்களே! நீங்களே சொல்லுங்க. இது கண்ணன் பாட்டா இல்லையானு...

இந்த பாடலை பாடியவர் பரவை நாச்சியார் . அவர் கண்ணனை தன் பேரனாக நினைத்து பாடுகிறார்.

மதுர வீரன் தானே...
அவன உசுப்பிவிட்ட வீணே
இனி விசுலு பறக்கும் தானே
என் பேராண்டி மதுரை வீரன் தானே

(இங்கே அவர் சொல்ல வருவது என் பேரன் மதுராவில் அவதரித்த வீரன் (கண்ணன் மதுரா வீரன் தானே). கம்சா அவனை வீணாக உசுப்பி விட்டாய்.
இனி சங்கு (விசில்) முழங்குவது உறுதி. என் பேரன் மதுரா வீரன் தானே...)

ஏ சிங்கம் போல
ஏ சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

(காட்டின் அரசனான சிங்கம் போல கம்பீரமாக நடந்து வருகிறான் என் செல்ல பேரன். அவன் சாதாரணமாக யாரிடமும் வம்புக்கு போக மாட்டான். அவனை உன் அசுரர்களை அனுப்பி சீண்டினால், அவர்கள் உதை பட்டு சாவார்கள். வேண்டாம் கம்சா...)

ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு
ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு

(கண்ணனை நோக்கி, சீமானே, இவர்கள் செய்வது தெரியாமல் பாவ காரியங்களை செய்கிறார்கள். இவர்களை நீ கொல்லாமல், வில்லிப்புத்தூருக்கு அனுப்பு. அங்கே ஆண்டாளின் அழகிய தமிழ் பாசுரங்களை கேட்டால் தானாக மனமுருகி மாறிவிடுவார்கள்)

ஏ புலிய போல
ஏ புலிய போல துணிஞ்சவன்டா எங்க பேராண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல பிச்சு வீச போராண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ இந்தா ஏ இந்தா ஏ இந்தா இந்தா இந்தா இந்தாஆஆஆ
ஆ ஆ ஆ இந்தா

(போராடும் குணம் கொண்ட புலியை போல் எதற்கும் அஞ்சாதவன் என் பேரன். அசுரர்களாகிய உங்கள் அனைவரையும் பஞ்சு மிட்டாய் போல் பிய்த்தெரிய போகிறான்.அந்த காலத்தில் பெரும்பாலும் மல்யுத்தமே நடைபெறும். அதில் அனைவரையும் பஞ்சை பிய்ப்பது போல் எளிதாக கொன்றனர் பலராமனும், கண்ணனும்)

ஏ சூறாவளி
ஏ சூறாவளி காத்து போல சுழண்டு வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்க எல்லாம் மிரண்டு போராண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ கோவில்பட்டி முறுக்கு சும்மா குனிய வெச்சி நொறுக்குடாடே

(கண்ணனை அழிக்க சடகாசுரனை அனுப்புகிறான் கம்சன். அவனோ சூறாவளி கற்றாக மாறி ஊரையே அழித்து கொண்டு வருகிறான். அந்த சூறாவளி காற்றை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்குகிறார்கள். ஆனால் கண்ணனோ சடகாசுரனை அழித்து மக்களை காப்பாற்றுகிறான். அதனால் மகிழ்ந்து அனைவரும் முறுக்கு செய்து தீபாவளி அன்று சாப்பிடுகிறார்கள்.

ஏ ஜல்லிக்கட்டு
ஏ ஜல்லிக்கட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்கள பனைமரமா புடுங்கி இப்ப வீச போராண்டி
ஏ கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மா
ஏ கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மா

மீண்டும் கண்ணனை அழிக்க விருத்திகாசுரனை அனுப்புகிறான் கம்சன். அவனோ காளையை போல் உருமெடுத்து வருகிறான். அதை உணர்ந்த கண்ணன் அருகிலிருக்கும் பனைமரத்தை பிடுங்கி அடித்து விருத்திகாசுரனை கும்மென்று அடித்து கொன்று விடுகிறான்

இவ்வளவு பலம் வாய்ந்த என் கண்ணனோடு மோதாதே கம்சா என்று எச்சரிக்கிறார் பரவை நாச்சியார்...

இப்பவாது சொல்லுங்க, இது கண்ணன் பாட்டு தானே ;)

37 comments:

Prabu Raja said...

Doubte illa. Ithu Kannan paatethaan.
Ithu mattum illa.. Innum rendu kannan paatu irukku:
1) vaazha meenukkum velaangu meenukkum kalyanam..
2) Kathazha kannala kuthatha nee enna..
:-))))))))))

வெட்டிப்பயல் said...

Ithu oru meelpathivu :-)

ILA (a) இளா said...

ஆளை விடுங்கய்யா.. கட்டிப்புடி கட்டிபுடி பாட்டு கண்ணன் பாட்டா இல்லையான்னு விசாரிச்சு சொல்லுங்க

சின்னப் பையன் said...

:-)))))))))))

தோழி said...

kandippa kannan pattu. aana avanga paravai naachiyar illai paRavai nachiyar. Nadathunga

மணிகண்டன் said...

kalakkal balaji

Malini's Signature said...

அய்யோ அய்யோ.... ஆனாலும் படம் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு!!!

சரவணகுமரன் said...

ஆமாம்... ஆமாம்...

Poornima Saravana kumar said...

appatiya anna?

நாதஸ் said...

:)
;)

குமரன் (Kumaran) said...

//ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு
ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு

(கண்ணனை நோக்கி, சீமானே, இவர்கள் செய்வது தெரியாமல் பாவ காரியங்களை செய்கிறார்கள். இவர்களை நீ கொல்லாமல், வில்லிப்புத்தூருக்கு அனுப்பு. அங்கே ஆண்டாளின் அழகிய தமிழ் பாசுரங்களை கேட்டால் தானாக மனமுருகி மாறிவிடுவார்கள்)
//

இந்த வரிகள் போதுமே இது கண்ணன் பாட்டு தான்னு சொல்ல. யாரு சொன்னா இது கண்ணன் பாட்டு இல்லைன்னு? :-)

வெட்டிப்பயல் said...

// Prabu Raja said...
Doubte illa. Ithu Kannan paatethaan.
Ithu mattum illa.. Innum rendu kannan paatu irukku:
1) vaazha meenukkum velaangu meenukkum kalyanam..
2) Kathazha kannala kuthatha nee enna..
:-))))))))))//

இந்த மாதிரி அதுக்கு நீங்க அர்த்தம் சொல்லனும் ;)

வெட்டிப்பயல் said...

// ILA said...
ஆளை விடுங்கய்யா.. கட்டிப்புடி கட்டிபுடி பாட்டு கண்ணன் பாட்டா இல்லையான்னு விசாரிச்சு சொல்லுங்க//

நியூ ஜெர்சில தான் ஆள் இருக்காரே... நீங்களே ஒரு லோக்கல் கால் பண்ணி பேசிக்கோங்க ;)

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...
:-)))))))))))

//

டாங்கிஸ் ச்சி.பை :-)

வெட்டிப்பயல் said...

// தோழி said...
kandippa kannan pattu. aana avanga paravai naachiyar illai paRavai nachiyar. Nadathunga//

பறவை நாச்சியாரா?

இருங்க எதுக்கும் செக் பண்ணிக்கறேன் :-)

வெட்டிப்பயல் said...

//மணிகண்டன் said...
kalakkal balaji

//

நன்றி மணிகண்டன் :-)

வெட்டிப்பயல் said...

//ஹர்ஷினி அம்மா - said...
அய்யோ அய்யோ.... ஆனாலும் படம் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு!!!//

நன்றி ஹர்ஷினி அம்மா.. படத்தை வெச்சி தான் பதிவையே ஓட்ட வேண்டியதா போச்சு :-)

ஆனா பாட்டுக்கு பொருத்தமான படமா இருக்கு. பார்த்தீங்களா?

வெட்டிப்பயல் said...

//சரவணகுமரன் said...
ஆமாம்... ஆமாம்...//

நன்றி சரவணகுமரன் :-)

வெட்டிப்பயல் said...

//Poornima Saravana kumar said...
appatiya anna?//

ஏம்மா படிச்சா தெரியலையா? ;)

வெட்டிப்பயல் said...

// nathas said...
:)
;)//

இந்த புன்னகைக்கு என்ன அர்த்தமோ ;)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...
//ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு
ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு

(கண்ணனை நோக்கி, சீமானே, இவர்கள் செய்வது தெரியாமல் பாவ காரியங்களை செய்கிறார்கள். இவர்களை நீ கொல்லாமல், வில்லிப்புத்தூருக்கு அனுப்பு. அங்கே ஆண்டாளின் அழகிய தமிழ் பாசுரங்களை கேட்டால் தானாக மனமுருகி மாறிவிடுவார்கள்)
//

இந்த வரிகள் போதுமே இது கண்ணன் பாட்டு தான்னு சொல்ல. யாரு சொன்னா இது கண்ணன் பாட்டு இல்லைன்னு? :-)

5:46 PM//

நீங்க தான் இதை அப்பவே சொல்லிட்டீங்களே... இருந்தாலும் மறுபடியும் வந்து சொன்னதுக்கு நன்றி :-)

ஆ! இதழ்கள் said...

ஒத்துக்கிறோம் கண்ணன் பாட்டுதான்.

(இப்படித்தான் நம்ம தமிழ் வாத்தியாரெல்லாம் பொருளுரை சொன்னாங்களா?)

ஆ! இதழ்கள் said...

இந்த அம்மா பரவைதான்.

உழைப்பாளி said...

ஆபீஸ்-ல வேலை அதிகம் போல
:)

திவாண்ணா said...

சந்தேகமே இல்ல வெட்டி!

கார்த்திகைப் பாண்டியன் said...

ஐயா..நீரே புலவர்.. இப்படி எப்படி யோசித்தீர்? அருமை..

Sampath said...

// Ithu oru meelpathivu :-) //
அதானே என்னடா முதல்லியே எங்கியோ படிச்சா மாதிரி இருக்கேன்னு நெனச்சேன் ... ஆனாலும் வெட்டி நீங்க அநியாயத்துக்கு யோசிக்கிறீங்க .... இப்படியே போனா இதுல ஒரு பி.ஹெச்.டி.யே வாங்கிடலாம் ....

ஊர்சுற்றி said...

மீள் பதிவோ, மீண்ட பதிவோ.. இடுகையோ!!!

விளக்கமும், படங்களும் அருமை பாஸூ....

Karthik said...

இது ஏதாவது டாக்டரெட் திஸிஸா???
ha..ha..!
;)

வெட்டிப்பயல் said...

// ஆ! இதழ்கள் said...
ஒத்துக்கிறோம் கண்ணன் பாட்டுதான்.

(இப்படித்தான் நம்ம தமிழ் வாத்தியாரெல்லாம் பொருளுரை சொன்னாங்களா?)

//

ஹி ஹி ஹி...

நாம வாத்தியாரா ஆகிருந்தா இப்படி தான் விளக்கம் சொல்லியிருப்போம் ;)

வெட்டிப்பயல் said...

//
ஆ! இதழ்கள் said...
இந்த அம்மா பரவைதான்.

//

வந்து காப்பாத்தினதுக்கு நன்றி ஆ! இதழ்கள்!!!

வெட்டிப்பயல் said...

// உழைப்பாளி said...
ஆபீஸ்-ல வேலை அதிகம் போல
:)//

ஆமாம் பாஸ்... கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே :-)

வெட்டிப்பயல் said...

//திவா said...
சந்தேகமே இல்ல வெட்டி!

//

வாங்க திவா சார்... சந்தேகமே இல்ல.. நீ வெட்டினு சொல்றீங்களா? ;)

வெட்டிப்பயல் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
ஐயா..நீரே புலவர்.. இப்படி எப்படி யோசித்தீர்? அருமை..

//

ஹி ஹி ஹி...

எல்லாம் மல்லாக்கப் படுத்துட்டு தான் ;)

வெட்டிப்பயல் said...

//Sampath said...
// Ithu oru meelpathivu :-) //
அதானே என்னடா முதல்லியே எங்கியோ படிச்சா மாதிரி இருக்கேன்னு நெனச்சேன் ... ஆனாலும் வெட்டி நீங்க அநியாயத்துக்கு யோசிக்கிறீங்க .... இப்படியே போனா இதுல ஒரு பி.ஹெச்.டி.யே வாங்கிடலாம் ....

//

வாங்க சம்பத்.

பி.ஹெச்.டி எல்லாம் வேண்டாங்க. நமக்கு ஒரு நாப்பது பின்னூட்டம் வந்தா போதாது ;)

வெட்டிப்பயல் said...

//ஊர் சுற்றி said...
மீள் பதிவோ, மீண்ட பதிவோ.. இடுகையோ!!!

விளக்கமும், படங்களும் அருமை பாஸூ...//

மிக்க நன்றி ஊர் சுற்றி :-)

வெட்டிப்பயல் said...

// Karthik said...
இது ஏதாவது டாக்டரெட் திஸிஸா???
ha..ha..!
;)//

இப்படி ஒரு இருபது முப்பது பண்ணா டாக்டரேட் பட்டம் வாங்கலாம் :-)