இந்தப் பதிவு நான் ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சிட்டு இருந்த ஒண்ணு. இன்னைக்கு தான் சரியா நேரம் கிடைச்சிருக்கு.
இன்னைக்கு எல்லாம் பைப்பத் திறந்தா தண்ணி வருது. மோட்டார் போட்டா வீட்ல தண்ணி தொட்டி ரொம்பிடுது. அதை நம்ம இஷ்டத்துக்கும் பயன்படுத்தறோம், நிறைய பேர் தண்ணீரை தேவைக்கு அதிகமா பயன்படுத்தறதும் பார்த்திருக்கேன். ஆனா இந்த தண்ணிக்காக ஒரு காலத்துல நாங்க பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை.
எங்க ஊர்ல ஆறுனு பேருக்கு தான் ஒண்ணு இருக்கு. மழை காலத்துல நிறையா தண்ணி ஓடும், ஆனா அது ரெண்டு மூணு மாசத்துலயே வறண்டு போய் மண்ணு தெரிய ஆரம்பிச்சிடும். இன்னமும் அப்படி தான். ஆனா இப்ப திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆத்து தண்ணி எங்க ஊருக்கும் கிடைக்குது. அப்ப எல்லாம் அப்படி இல்லை.
நான் சொல்றது தொன்னூறுகளின் ஆரம்பத்தில். எங்க ஊரை நான் எப்பவும் காஞ்சிப் போன கள்ளக்குறிச்சினு தான் சொல்லுவேன். எப்ப பார்த்தாலும் தண்ணி பஞ்சம் தான் இருக்கும். வீட்டு உபயோகத்துக்கு தேவையான தண்ணீரை (குளிக்கறது, துணி துவைக்கிறது) கிணத்துல இருந்து இறைச்சி தான் பயன்படுத்தனும். அப்ப நான் நாலாவது, அஞ்சாவது தான் படிப்பேன். ஒரு குடத்து தண்ணீரை என்னால முழுசா இறைக்க முடியாது. பொதுவா அப்பா, அம்மா தான் இறைப்பாங்க. ஆனா சில சமயம் அவசரத்துக்கு நானும், அக்காவும் சேர்ந்து தண்ணி இறைப்போம். எங்க கிணறு ஒரு அம்பது அடி ஆழம் இருக்கும். தண்ணி எப்பவும் குறைவா தான் இருக்கும்.
கிணத்துல தண்ணி இறைக்கறதும் ஒரு கலை தான். குடத்தை கீழ விடும் போது ரொம்ப வேகமா விடறோம்னு விட்டா கயிறு கையை கிழிக்கும். கொஞ்சம் பொறுமையா பார்த்து விடணும். அப்பறம் குடத்தை இந்த பக்கம், அந்த பக்கம்னு ஆட்டி முழுசா நிரப்பணும். அப்பறம் ரெண்டு பேர் சேர்ந்து இழுக்கும் போது மாத்தி மாத்தி இழுக்கறதுல ஒரு சின்க் இருக்கனும். இதை விட பெரிய விஷயம், அந்த குடம் மேல வந்தவுடனே, அதிக தண்ணி கீழ சிந்தாம கிணத்தை விட்டு வெளிய எடுக்கனும். கொஞ்சமும் தண்ணீரை வீணாக்காம அதை அண்டா, குண்டா, பக்கெட் எல்லாத்துலயும் ஊத்தணும். எப்படியும் ஒரு நாளைக்கு இருபது குடமாவது தேவைப்படும்.
இது சாதா தண்ணிக்கு, அதே குடிக்கிற தண்ணி பிடிக்கிறது இதை விட ரொம்ப கஷ்டமான விஷயம். ஊரை விட்டு தள்ளி அடிக்கிற பம்ப் இருக்கும். அங்க தண்ணி பிடிக்க சைக்கிள்ல குடத்தை கட்டிக்கிட்டு காலங்காத்தாலயே அப்பா போவாரு. ரொம்ப விடிஞ்சதுக்கு அப்பறம் போனா கூட்டம் அதிகமா இருக்கும். சில சமயம் தண்ணியும் வராம போற வாய்ப்பு இருக்கும். அதனால காலைல அப்பா போகும் போது என்னையும் சைக்கிள்ல உக்கார வெச்சி கூப்பிட்டு போவாரு.
இந்த சைக்கிள்ல குடத்தை வெச்சிட்டு போறதே ஒரு டெக்னிக் தான். ரெண்டு குடத்தை கயிறு போட்டு கட்டி பின்னாடி கேரியர்ல வைப்பாங்க. இது ரெண்டு பக்கமும் தொங்கிட்டு வரும். ஒரு குடத்தை சைக்கிள் கேரியர் மேல நிக்க வெச்சி, முன்னாடி சீட்ல இருந்து சைக்கிள் டயர் டியூப் போட்டு மாட்டியிருப்பாங்க. அது அப்படியே நிக்கும். சில பேர் இன்னும் ரெண்டு குடத்தை முன்னாடி இருக்குற பார்ல தொங்கவிட்டு எடுத்துட்டு வருவாங்க. ஆனா நான் அப்பாவோட போறதால அந்த முன்னாடி இருக்குற பார்ல நான் உக்கார்ந்துட்டு போவேன். அப்பாவோட அட்லஸ் சைக்கிள்ல முன்னாடி அந்த பார்ல சின்னதா ஒரு குஷன் வெச்ச சீட்டு இருக்கும். அது எனக்கு தான். இதெல்லாம் இப்ப நினைச்சா ஆச்சரியமா இருக்கு.
அப்படி குடத்தை எடுத்துட்டு தண்ணி அடிக்கிற பம்ப்க்கு போனா அங்க நாலு மணில இருந்து க்யூ இருக்கும். எப்படியும் நமக்கு முன்னாடி ஒரு இருபது பேராவது இருப்பாங்க, ஆளுக்கு நாலு அஞ்சி குடத்தோட. இந்த மாதிரி தினமும் தண்ணி பிடிக்க வந்து நண்பர்கள் ஆனவங்களும் இருப்பாங்க. அவுங்க் எல்லாம் அடிச்சி முடிச்சதுக்கு அப்பறம் அப்பா அடிக்க ஆரம்பிப்பாரு. முதல்ல குடத்தை கழுவிட்டு அப்பறம் குடத்து மேல ஒரு துணி போட்டு அடிப்பாங்க. மண்ணு ஏதாவது வந்தா வடிகட்டிடும். நானும் சில சமயம் அடிக்கறனு பிரச்சனை பண்ணுவேன், ஆனா அதுக்கு நேரமாகும் பின்னாடி இருக்கறவங்க எல்லாம் பிரச்சனை பண்ணுவாங்கனு சொல்லி என்னை அடிக்க விட மாட்டாங்க. சில சமயம் கூட்டம் இல்லாத போது நான் முயற்சி செஞ்சி பார்ப்பேன். ஆனா அதுல தண்ணி அடிக்கறது ரொம்ப கஷ்டம்.
இதெல்லாம் எங்களை மாதிரி ஊருல இருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளி இருக்கறவங்களுக்கு. டவுன்லயே இருக்கறவங்களுக்கு தெருலயே தண்ணி வரும். ஒரே ஒரு பைப் தான் இருக்கும். அதுல அந்த தெருவே தண்ணி பிடிக்கனும். இது பெண்கள் ராஜியம். ஒரு ஆம்பிளை கூட இந்த இடத்துக்கு வர மாட்டாங்க. எங்க பாட்டி வீட்டுக்கு எதிர்லயே இந்த பைப் இருக்கும். அங்க திண்ணைல உட்கார்ந்து பார்த்தா போதும், ஊருல இருக்குற அத்தனை கெட்ட வார்த்தையும் தெரிஞ்சிக்கலாம். தண்ணி பைப் சண்டை அப்படி நடக்கும். யாராவது குடத்தை வெச்சிட்டு வீட்டுக்கு போயிடுவாங்க. பின்னாடி வரவங்க அதை நகர்த்திட்டு தண்ணி பிடிக்க ஆரம்பிச்சிடுவாங்க. இது தான் தொன்னூறு சதவீதம் நடக்கும். அப்ப திட்டிக்குவாங்க பாருங்க. அப்படியே காதுல தேனா பாயும். குடும்பத்துல ஒருத்தவங்களை விட மாட்டாங்க. டோட்டல் ஃபேமிலி டேமேஜ் தான்.
சில சமயம் எங்க ஏரியால தண்ணி லாரி வரும். இது பொதுவா மே மாசம் தான் வரும். அந்த லாரி வருதுனு தெரிஞ்சவுடனே எல்லாரும் குடத்தோட ரெடி ஆகிடுவோம். வண்டி எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற க்ரவுண்ட்ல தான் வந்து நிக்கும். இப்ப எல்லாம் அங்க ஃபுல்லா வீடு கட்டிட்டாங்க. லாரி வரும் போது அது பின்னாடி தெருவே ஓடுவோம். ஏன்னா லாரில தண்ணி தீரதுக்கு முன்னாடி கிடைக்கணும்னு தான். அதுவும் இதுல ஆளுக்கு ஒரு குடம்னு ரூல்ஸ் இருக்கும். அதனால வீட்ல நாலு பேருமே குடத்தை எடுத்துட்டு ஓடுவோம். அந்த லாரி எப்பவும் உச்சி வெயில்ல தான் வரும்.
வேர்க்க விறுவிறுக்க தண்ணி குடத்தோட ஓடிப்போய் க்யூல நின்னு தண்ணி பிடிக்கனும். இதுல நான், அக்கா எல்லாம் பிடிச்ச உடனே குடத்தை கொஞ்ச தூரம் தள்ளி வெச்சிடுவோம். அப்பா, அம்மா அதை கொண்டு போவாங்க. இங்கயும் பல சண்டைகள் நடக்கும். யாரு முன்னாடி வந்தா, யாரு பின்னாடி வந்தானு செம சண்டை நடக்கும். சில சமயம் பொம்பளைங்க முடிய பிடிச்சி சண்டை போடறதையும் பார்க்கலாம்.
இப்படி கஷ்டப்பட்டு பிடிக்கிற தண்ணீரை கொஞ்சமும் வீணாக்காம சிக்கனமா பயன்படுத்தறது ரொம்ப முக்கியம். எங்க அம்மா அதை ரொம்ப வலியிருத்துவாங்க. இப்ப கூட எங்க அம்மா தண்ணீரை சிக்கனமா தான் பயன்படுத்துவாங்க. எனக்கும் அது தான் பிடிக்கும். இன்னைக்கும் தண்ணி எடுக்க ஏழு எட்டு கிலோ மீட்டர் நடக்குற மக்கள் இருக்காங்க. அதனால தண்ணியோட
சிறப்பை உணர்ந்து சிக்கனமா பயன்படுத்துங்க மக்களே. தண்ணி சிக்கனமா பயன்படுத்தறவங்க வீட்ல தான் மகாலட்சுமி தங்குவானு எங்க பெரியம்மா சொல்லுவாங்க. அது எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது ஆனா தண்ணி சிக்கனமா பயன்படுத்துலனா சீக்கிரமா அவுங்க அக்கா நம்ம வீட்டுக்கும், நாட்டுக்கும் வந்துடுவாங்கனு மட்டும் எனக்கு தெரியுது.
தண்ணிரை சிக்கனமாக பயன்படுத்த சில ஆலோசனைகள்.
பல்லு விளக்கும் போது பைப்பை திறந்து விட்டுட்டு விளக்காதீங்க. முடிஞ்ச வரை Mugல தண்ணி பிடிச்சி பயன்படுத்துனா நல்லது.
ஷவர்ல குளிக்கறதை விட பக்கெட்ல தண்ணி பிடிச்சி குளிக்கறது நல்லது.
வெஸ்டர்ன் டாய்லட் பயன்படுத்தினா தேவையில்லாம ஃபிளஷ் பண்ணாதீங்க. (அதுக்குனு தேவையானப்ப ஃபிளஷ் பண்ணாம விட்டுட்டாதீங்க).
ஷேவ் பண்ணும் போது பைப்பை திறந்து விட்டுட்டே ஷேவ் பண்ணாதீங்க. ரேசரை கழுவும் போது மட்டும் தண்ணீரை திறந்து விடவும்.
ஏதாவது பைப்ல இருந்து தண்ணி சொட்டிட்டு இருந்தா பைப்பை டைட்டாக மூடவும். அப்படி இல்லைனா கீழ பக்கெட் ஏதாவது வைத்து தண்ணிரை சேகரிக்கவும்.
பாத்திரம் விளக்கும் போதும் தேவையில்லாமல் பைப்பைத் திறந்து வைக்காதீர்கள்.
ரஜினியோட ஒரு துளி வியர்வையை விட ஒரு துளி தண்ணீருக்கு மதிப்பு அதிகமா குடுங்க. அதான் ஒரு பவுன் காசுக்கு கொடுக்கற மதிப்பை கொடுங்கனு சொன்னேன்.
42 comments:
வெட்டிப்பையா,
உங்க அனுபவம் என்னை என்னோட பள்ளிப்பருவத்துக்கு கூட்டிட்டு போயிடுச்சி. உங்க இடுகையில இருந்து கிட்டத்தட்ட 80% என்னோட வாழ்க்கையிலேயும் நடந்திருக்கு, அப்பாவோட மிதிவண்டியில தண்ணி பிடிக்க போனது தவிர.
அந்த பைப்படிச் சண்டை, தண்ணீர் லாரி சண்டை... எல்லாத்தையும் பார்த்திருக்கேன். :)
சைக்கிள் கேரியர்ல - 3 குடமும் 5 குடமும் வைச்சி தண்ணி பிடிச்சிட்டு போவாங்க. 5 குடம் வைச்சு பிடிச்சுட்டு போற ஆம்பிளைங்களை ஊர்ல எல்லாரும் பெரிய பலசாலிமாதிரி பார்ப்பாங்க. இப்படி எல்லாம் தண்ணி புடிக்குற திறமை இருந்தாதான் பொண்ணு குடுப்பாங்கடா என்றெல்லாம் சொல்லி பெரிய பெண்மணிகள் கலாய்ப்பார்கள்.
நான் 1 குடத்துல ஆரம்பிச்சு 2, 3 அப்புறம் 4 குடத்து வரை முயற்சிபண்ணியிருக்கேன். அதுக்கு அப்புறம் கல்லூரி படிப்புக்காக வெளியூரில் தங்கி படிக்க வேண்டியிருந்ததால் அதற்கு பிறகு 5-வதுக்கான முயற்சிக்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
A quote regarding flushing a toilet
"if its yellow, let it mellow,
if its brown Flush it down"
கொஞ்சம் நீளமா இருந்தாலும் நல்ல பதிவு பாலாஜி. படிக்கிற நிறைய பேருக்கு பழைய நியாபகங்களை தூண்டும்னு நினைக்கின்றேன்( எனக்குப்போல ). மேல சொன்ன ஆலோசனையெல்லாம் நீங்க தவறாம கடைபிடிக்கிறவர் தானே? :)
keep up the good work.
ராஜ்.
ரொம்ப நல்ல பதிவு வெட்டி...இவ்வளவு இல்லன்னாலும் நாங்களும் பல சமயம் மோட்டார் கெட்டுப்போனா தண்ணிக்கு அலைஞ்சுருக்கோம்.. அதெல்லாம்நினைவுக்கு வந்தது..
மார்ச் 22 உலகத்தண்ணீர் தினம்ன்னு இதேமாதிரி எழுதசொன்னாங்க.. என்ன எழுதன்னு தெரியாம விட்டுட்டேன்.. இப்படி கஷ்டப்பட்டதையே கொசுவத்தியா எழுதி இருக்கலாம்..
நல்ல அறிவுரைகள்..
கள்ளக்குறிச்சியா வெட்டி நீங்க? நான் இராசிபுரம்.. இப்போதும் எங்க ஊர்ல தண்ணி கஷ்டம்தான்ன்னாலும் நீங்க சொல்ற 80களின் கடைசி மற்றும் 90களின் ஆரம்பத்துல இருந்த மாதிரி இல்லை. நீங்க சொன்ன ஒவ்வொண்ணையும் நானும் அனுபவிச்சிருக்கேன்.. நல்ல பதிவு வெட்டி. பாராட்டுகள்.
super padhivu annaa....office la niraiya per mugam kaluvarennu pipea thirandhu vittuttu, kannaadiyila avanga azhaga paathukittu nippaanga, adha paathaale pathikittu varum :(
நல்ல விழிப்புணர்வு பதிவு
இப்ப பிறக்கிற குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லிய கஷ்டங்கள் தெரிவதில்லை அதனால் தண்ணீரை எப்படி உபயோகிக்கனும் என்றும் தெரிவதில்லை.
என் தாத்தா 1960 களில் நான் கிணற்று நீரில் கால் கழுவும் போது சொல்வார் "தண்ணீரை பணம் மாதிரி கொஞ்சமாக செலவு செய்யனும்,தேவையில்லாமல் வீனாக்கினால் உன் கையில் பணம் நிற்காது" என்றார்.
நல்ல அனுபவங்கள்.
உங்கள் பதிவில் முதல் வாய்த் தண்ணீர் பருகுகிறேன்,மனுநீதி.யதார்த்த்மான பிரச்னை.சொன்ன விதமும் நன்றாக இருந்தது.முடிவில் ஏதேனும் ஒரு 'பஞ்ச்' இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இப்போது தேவையான பதிவு
தேவையான பதிவு வெட்டி!
இது போல எனக்கு சில பல அனுபவங்கள் உண்டு. ஆனா இப்போ எல்லாம் தண்ணீர் கொட்டோ கொட்டுனு கொட்டுது.... :)
சிக்கனம் கட்டாயம் தேவை!
me the first? unlikely.
superb post. :)
உலக தண்ணீர் தினம் பற்றிய கட்டுரைகள் செய்திகள் பல படித்திருந்தாலும்,நாம் அனுபவித்த,இன்னும் பல இடங்களில் தினசரி நடந்துவரும் சம்பவங்களை,நினைவுகளில் மீட்டு பகிர்ந்துகொண்டமைக்கும்,தண்ணீர் சேமிப்பு பற்றிய சாதாரணமாக நம்மால் செய்துவிடக்கூடிய எளிய முறைகள் பகிர்ந்துக்கொண்டமைக்கும் நன்றிகள்!!!
//நான் முயற்சி செஞ்சி பார்ப்பேன். ஆனா அதுல தண்ணி அடிக்கறது ரொம்ப கஷ்டம்.
//
நீண்ட் கைப்பிடிகளை கொண்ட மத்திய அரசுதிட்டத்தின் விசேஷ பம்புகளில் நானும் பழகியதுண்டு ஆனால் நொம்ப கஷ்டமாக இருக்கும்!அதுவே சின்ன கைப்பம்பு என்றால் சுகானுபவம் விடுமுறை நாட்களில் துணி துவைக்க பாத்திரங்கள் கழுவி வைக்க என்று முழு நாளும் கொல்லைப்புறத்தில் கைப்பம்புடன் விளையாடிய நாட்கள் நியாபகத்திற்கு வருகின்றது :)
me the first ?
அருமையான கொசுவத்தி பதிவு. தேவையான விஷயத்த சொல்லி இருக்கீங்க. தண்ணி அதிகமா இருக்கிற ஊருல வாழ்ந்தவங்களுக்கு புரியற மாதிரி சொல்லி இருக்கீங்க. நல்ல முயற்சி.
அட்டகாசம்... அருமையான தேவையான பதிவு...
அருமையான பதிவு சார்...
அதே கால கட்டத்துல எங்க ஊர்லயும் (சேலம்) அதே மாதிரி தான்..
இன்னும் ஞயாபகம் இருக்கு, நானு எங்க அக்கா எல்லாம் போய் வரிசைல நின்னு தண்ணி புடிச்சிட்டு வருவோம்....
:)
தேவையான பதிவு!! அடுத்த உலகப் போரெல்லாம் தண்ணியாலேயே வரலாம்னு சொல்றாங்க..... தெரியல :((
// ஊர் சுற்றி said...
வெட்டிப்பையா,
உங்க அனுபவம் என்னை என்னோட பள்ளிப்பருவத்துக்கு கூட்டிட்டு போயிடுச்சி. உங்க இடுகையில இருந்து கிட்டத்தட்ட 80% என்னோட வாழ்க்கையிலேயும் நடந்திருக்கு, அப்பாவோட மிதிவண்டியில தண்ணி பிடிக்க போனது தவிர.//
உங்க அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி ஊர் சுற்றி. நான் ஏழாவது படிக்கும் போதே ஹாஸ்டலுக்கு போயிட்டேன். அதனால அதுக்கு அப்பறம் நான் தண்ணி பிடிக்க போகல. இல்லைனா நமக்கும் இந்த நாலு குடம், அஞ்சு குடம் அனுபவம் எல்லாம் கிடைச்சிருக்கும் :)
// Shrek said...
A quote regarding flushing a toilet
"if its yellow, let it mellow,
if its brown Flush it down"//
:))))
// rajadhi raj said...
கொஞ்சம் நீளமா இருந்தாலும் நல்ல பதிவு பாலாஜி. படிக்கிற நிறைய பேருக்கு பழைய நியாபகங்களை தூண்டும்னு நினைக்கின்றேன்( எனக்குப்போல ). மேல சொன்ன ஆலோசனையெல்லாம் நீங்க தவறாம கடைபிடிக்கிறவர் தானே? :)
keep up the good work.
ராஜ்.//
ராஜ்,
ரொம்ப நீளமாகிடுச்சினு தான் இதை சின்னதா போட்டுட்டேன் ராஜ் :)
ஏன்னா நாங்க தண்ணிக்கு அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கோம். இப்பவும் தண்ணிக்கு அடிக்கடி சண்டை வரும்.
இந்தியாவுல இருக்கும் போது இதையெல்லாம் தவறாம கடைப்பிடிக்கிறேன் :)
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ரொம்ப நல்ல பதிவு வெட்டி...இவ்வளவு இல்லன்னாலும் நாங்களும் பல சமயம் மோட்டார் கெட்டுப்போனா தண்ணிக்கு அலைஞ்சுருக்கோம்.. அதெல்லாம்நினைவுக்கு வந்தது..
//
நாங்க இப்ப இந்த மாதிரி அனுபவிக்கறோம். மோட்டர்ல பிரச்சனை வந்தா :)
//
மார்ச் 22 உலகத்தண்ணீர் தினம்ன்னு இதேமாதிரி எழுதசொன்னாங்க.. என்ன எழுதன்னு தெரியாம விட்டுட்டேன்.. இப்படி கஷ்டப்பட்டதையே கொசுவத்தியா எழுதி இருக்கலாம்..
நல்ல அறிவுரைகள்..
//
மிக்க நன்றிக்கா...
// வெண்பூ said...
கள்ளக்குறிச்சியா வெட்டி நீங்க? நான் இராசிபுரம்.. இப்போதும் எங்க ஊர்ல தண்ணி கஷ்டம்தான்ன்னாலும் நீங்க சொல்ற 80களின் கடைசி மற்றும் 90களின் ஆரம்பத்துல இருந்த மாதிரி இல்லை. நீங்க சொன்ன ஒவ்வொண்ணையும் நானும் அனுபவிச்சிருக்கேன்.. நல்ல பதிவு வெட்டி. பாராட்டுகள்.//
வெண்பூ,
நான் ராசிபுரத்துல SRVல தான் படிச்சேன்...
பாராட்டுக்கு நன்றி :-)
//Divyapriya said...
super padhivu annaa....office la niraiya per mugam kaluvarennu pipea thirandhu vittuttu, kannaadiyila avanga azhaga paathukittu nippaanga, adha paathaale pathikittu varum :(
//
ஆமாம்மா... பொண்ணுங்களுக்கே தண்ணி பிரச்சனை தெரியலைங்கறது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு.
எப்பவும் குடும்பத்துல பொறுப்பா இருக்கறது பொண்ணுங்க தான். அவுங்களே இப்படி தண்ணியை வீணாக்கறது கொடுமை :(
//முரளிகண்ணன் said...
நல்ல விழிப்புணர்வு பதிவு//
மிக்க நன்றி முக...
//வடுவூர் குமார் said...
இப்ப பிறக்கிற குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லிய கஷ்டங்கள் தெரிவதில்லை அதனால் தண்ணீரை எப்படி உபயோகிக்கனும் என்றும் தெரிவதில்லை.
என் தாத்தா 1960 களில் நான் கிணற்று நீரில் கால் கழுவும் போது சொல்வார் "தண்ணீரை பணம் மாதிரி கொஞ்சமாக செலவு செய்யனும்,தேவையில்லாமல் வீனாக்கினால் உன் கையில் பணம் நிற்காது" என்றார்.
நல்ல அனுபவங்கள்.//
அதையே தான் நானும் சொல்லியிருக்கேன் குமார். இதை நிறைய பேர் வீட்டிலும் பார்த்திருக்கேன்...
//தண்ணி சிக்கனமா பயன்படுத்தறவங்க வீட்ல தான் மகாலட்சுமி தங்குவானு எங்க பெரியம்மா சொல்லுவாங்க//
//ஷண்முகப்ரியன் said...
உங்கள் பதிவில் முதல் வாய்த் தண்ணீர் பருகுகிறேன்,மனுநீதி.யதார்த்த்மான பிரச்னை.சொன்ன விதமும் நன்றாக இருந்தது.முடிவில் ஏதேனும் ஒரு 'பஞ்ச்' இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.//
மிக்க நன்றி ஷண்முகப்ரியன்... பஞ்ச் வைச்சி கடைசியா அதையே எல்லாரும் காப்பி பேஸ்ட் பண்ணி நச்சுனு சொல்லிட்டீங்கனு சொல்றது வேண்டாம்னு தான் அதை தவிர்த்திட்டேன். கடைசியா சொன்னதை ஒரு சிலராவது கடைப்பிடித்தாலே எனக்கு மகிழ்ச்சி தான்.
//
T.V.Radhakrishnan said...
இப்போது தேவையான பதிவு
3:07 AM//
மிக்க நன்றி ராதாகிருஷ்ணன்!
//நாகை சிவா said...
தேவையான பதிவு வெட்டி!
இது போல எனக்கு சில பல அனுபவங்கள் உண்டு. ஆனா இப்போ எல்லாம் தண்ணீர் கொட்டோ கொட்டுனு கொட்டுது.... :)
சிக்கனம் கட்டாயம் தேவை!//
ரொம்ப நன்றி புலி.
இப்பவெல்லாம் நல்ல மழை தான். இருந்தாலும் தண்ணீரை சிக்கனமா பயன்படுத்த பழகணும். இன்னும் நம்ம ஏரியால தண்ணி பிரச்சனை பல இடங்கள்ல இருக்கு.
//Karthik said...
me the first? unlikely.
superb post. :)//
பதிவை போட்டுட்டு உடனே தூங்க போயிட்டேன். அதனால முன்னாடி வந்த பின்னூட்டங்களை வெளியிட முடியாம போயிடுச்சி...
மிக்க நன்றி கார்த்திக் :)
// ஆயில்யன் said...
உலக தண்ணீர் தினம் பற்றிய கட்டுரைகள் செய்திகள் பல படித்திருந்தாலும்,நாம் அனுபவித்த,இன்னும் பல இடங்களில் தினசரி நடந்துவரும் சம்பவங்களை,நினைவுகளில் மீட்டு பகிர்ந்துகொண்டமைக்கும்,தண்ணீர் சேமிப்பு பற்றிய சாதாரணமாக நம்மால் செய்துவிடக்கூடிய எளிய முறைகள் பகிர்ந்துக்கொண்டமைக்கும் நன்றிகள்!!!
5:58 AM//
மிக்க நன்றி ஆயில்ஸ் :-)
//ஆயில்யன் said...
//நான் முயற்சி செஞ்சி பார்ப்பேன். ஆனா அதுல தண்ணி அடிக்கறது ரொம்ப கஷ்டம்.
//
நீண்ட் கைப்பிடிகளை கொண்ட மத்திய அரசுதிட்டத்தின் விசேஷ பம்புகளில் நானும் பழகியதுண்டு ஆனால் நொம்ப கஷ்டமாக இருக்கும்!//
நான் சொன்ன பம்ப் அதே தான் ஆயில்ஸ் :-)
//
அதுவே சின்ன கைப்பம்பு என்றால் சுகானுபவம் விடுமுறை நாட்களில் துணி துவைக்க பாத்திரங்கள் கழுவி வைக்க என்று முழு நாளும் கொல்லைப்புறத்தில் கைப்பம்புடன் விளையாடிய நாட்கள் நியாபகத்திற்கு வருகின்றது :)
//
இது டவுன்ல அடிக்கிற பம்ப். எங்க பாட்டி வீட்டுக்கு போகும் போது நான் இந்த பம்ப்ல அடிப்பேன். இதுல அடிக்கிற சுகமே தனி தான் :-)
// Dwarak R said...
good.//
மிக்க நன்றி த்வாரக்...
//மணிகண்டன் said...
அருமையான கொசுவத்தி பதிவு. தேவையான விஷயத்த சொல்லி இருக்கீங்க. தண்ணி அதிகமா இருக்கிற ஊருல வாழ்ந்தவங்களுக்கு புரியற மாதிரி சொல்லி இருக்கீங்க. நல்ல முயற்சி.
//
மிக்க நன்றி மணிகண்டன்...
இந்த பிரச்சனை நிறைய பேர் அனுபவிச்சிருப்பாங்கனு தான் நினைக்கிறேன். இப்ப மறந்திருக்கலாம். நினைவுப்படுத்த தான் இந்த பதிவு.
//ச்சின்னப் பையன் said...
அட்டகாசம்... அருமையான தேவையான பதிவு...//
டாங்க் யூ ச்சி.பை :-)
// கார்த்தி said...
அருமையான பதிவு சார்...
//
இந்த சார் மோர் எல்லாம் வேண்டாமே கார்த்தி :-)
//
அதே கால கட்டத்துல எங்க ஊர்லயும் (சேலம்) அதே மாதிரி தான்..
இன்னும் ஞயாபகம் இருக்கு, நானு எங்க அக்கா எல்லாம் போய் வரிசைல நின்னு தண்ணி புடிச்சிட்டு வருவோம்....
:)//
சேலமா நீங்க? சூப்பர்...
பழசை நினைச்சி பார்க்கறதே ஒரு சுகம் தான். இல்ல?
//ஜி said...
தேவையான பதிவு!! அடுத்த உலகப் போரெல்லாம் தண்ணியாலேயே வரலாம்னு சொல்றாங்க..... தெரியல :((
12:25 PM//
நானும் அதை நம்பறேன் ஜியா :-)
ஹைய்யோ ஹைய்யோ..... கொசுவத்தி பத்தவச்சுட்டீங்களே!!!!
அருமையான நினைவுகள்.
தண்ணீர் அதிகம் செலவு செய்யும் இடத்தில் நிதானம் இருக்காதாம்.
எங்க பாட்டி சொல்மொழி
நீளு ஆங்கன இண்ட்டிலோ நிதானம் ஆங்கது
nalla pathivu annaa.. evlo kastamanu ithai patichu thaan therinchi kitten.
aanal ippo chennaila kudikkum thanni kaasu koduththu vaanguvathal ippo ellam mutincha varai thanniya naan waste seyyarathillai..
Post a Comment