கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தை அடையும் பொழுது மணி சரியாக ஏழு ஆகியிருந்தது. இன்னும் கோவை மாநகரம் ஆறு வருடத்திற்கு முன் இருந்ததை போலவே மிதமான குளிரோடு இருந்தது. கோவையில் தங்கியவர்கள் வேறு எங்கும் போக முடியாததற்கு அங்கிருக்கும் பண்பான மக்கள், சிறுவாணி தண்ணிருக்கு அடுத்த காரணம் இந்த குளிர்ச்சி தான்.
பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தேன். மேட்டுப்பாளையம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. வெளியே தொங்கி கொண்டிருந்த அந்த பதின்ம வயது நடத்துனரிடம், துடியலூர் என்றேன்.
“ஏறிக்கோங்க”
ஏறி அமர்ந்தேன். சத்தமாக பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. சாய்பாபா காலனியை கடந்து செல்லும் போழுது ”தாலு சே தாலு மிலா” என்று என்னை பார்த்து கொண்டே ஆடிய ஷாலினி ஒரு நிமிடம் மனதில் வந்து மறைந்தாள். எட்டு ஐந்து மணிக்கு துடியலூர் சென்றடைந்தேன். துடியலூர் சுத்தமாக மாறியிருந்தது. நிறைய பேக்கரிகள் அழகழகான சீரியல் லைட்டுடன் இருந்தன. ஆலமரத்தடியில் இருந்த பெஞ்ச் கடை இல்லை.
ஐந்து நிமிட நடையில் மினி பஸ் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன். நான் இரண்டாமாண்டு படிக்கும் போது தான் மினி பஸ் அறிமுகமாகியிருந்தது. அதற்கு முன் டவுன் பஸ் தான்.
அதுவும் காலேஜிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு முன்னாலே வட்டமலைப்பாளையம் பிரிவில் இறக்கிவிடுவார்கள். முதல் வருடம் முழுவதும் அந்த டவுன் பஸ் தான். மினி பஸ்
வந்தபிறகு டவுன் பஸ்ஸை எல்லோரும் மறந்து போனோம்.
நான் வந்த இரண்டாவது நிமிடம் பஸ் வந்து சரியாக என் முன்னால் நின்றது. நான் எந்த தயக்கமும் இல்லாமல் ஏறி ஒரு ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டேன். ”ஏ அசைந்தாடும் காற்றுக்கும், அழகான பூவுக்கும் காதலா, காதலா” ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மினி பஸ்களின் தேசிய கீதம் போல. அடுத்த முப்பது நொடிக்குள் பேருந்து நிரம்பியது. ஐந்தாவது நிமிடத்தில் பயணம் ஆரம்பித்தது. என்னை சுற்றிலும் கல்லூரி மாணவர்கள். என் ஜூனியர்ஸ். எந்த வித பதட்டமோ, வருத்தமோ இன்றி ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டிருந்தனர். இருக்கை கிடைத்த மாணவிகள் அவர்களது வகுப்பு தோழர்களின் பைகளை வாங்கி காலுக்கு அடியிலும், பிடித்தமானவர்களின் பையை மடியிலும் வைத்து கொண்டார்கள்.
அனைவரது முகமும் மலர்ச்சியாக இருந்தது. ஆறு வருடத்திற்கு முன்பு என் முகமும் இப்படி தான் இருந்தது. எந்த வித வருத்தமும் இல்லாமல் அடுத்த நாளை பற்றி கவலைப்படாமல்
மிகவும் சந்தோஷமாக இருந்தேன். என் நினைவுகள் பின்னோக்கி செல்வதை தவிர்க்க நான் முயலவில்லை.
ஆகஸ்ட் இருபத்தி மூன்று, தொன்னுற்றி ஒன்பதாம் ஆண்டு. இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று தான் என் கல்லூரி வாழ்க்கையின் முதல் நாள். விடுதிக்கு ஒரு
நாள் முன்பே வந்துவிட்டதால் ஒரு சிலர் நண்பர்களாகி இருந்தார்கள். அவர்களுடன் முதல் நாள் வகுப்பிற்கு சென்று அமர்ந்தேன். அறுபது பேர் வகுப்பில் இருபது பெண்கள் இருந்தார்கள்.
எனக்கு ஒருத்தி மட்டும் தான் கண்ணுக்கு தெரிந்தாள். அவள் பெயர் என்னவாக இருக்கும் என்று நானே யோசிக்க ஆரம்பித்தேன்.
முதல் வகுப்பு கெமிஸ்ட்ரி வகுப்பு. கம்ப்யூட்டர் சயின்ஸிற்கும் கெமிஸ்டிரிக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. இருந்தாலும் பனிரெண்டாவதில் படித்த பாடம் என்றதால் கொஞ்சம் மகிழ்ச்சி. ஒவ்வொருவராக பெயர்களை சொல்லி கொண்டு வந்தார்கள். அவள் எழுந்திரிக்கும் பொழுது அவளை விட எனக்கு பதட்டம் அதிகமா இருந்தது. அவள் ஷாலினி என்று சொல்லி முடித்ததும் ”என்னை தாலாட்ட வருவாளா” பாடல் மனதில் ஒலித்தது.
ஹாஸ்டலுக்கு சென்றவுடன் ரேகிங் தொடங்கியது. தமிழில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளாலும் திட்டப்பட்டு மிச்ச மீதி இருந்த சொரனையை இழந்தோம். சீனியரை முறைத்தவர்கள்
அதிகமாக ரேகிங் செய்யப்பட்டார்கள். எகத்தாளம் பேசியவர்கள் அடி வாங்கினார்கள். ஒரு முறை என் அருகிலிருப்பவனிடம் ஒரு கெட்ட வார்த்தையை சொல்லி சொல்ல சொன்னார்கள்.
அவனோ ’புத்திசாலி’த்தனமாக “நான் நல்ல குடும்பத்துல இருந்து வந்தவன். நான் கெட்ட வார்த்தையெல்லாம் பேச மாட்டேன்”னு சொல்ல ”அப்ப நாங்க எல்லாம் என்ன @#$%&^ குடும்பத்துல இருந்து வந்தமா?” சொல்லிவிட்டு அவன் கன்னத்தில் ஒரு அரை கொடுத்தார். அவர் கையிலிருந்த சோறும் சாம்பாரும் அவன் கன்னத்தில் இருந்தது. கன்னத்தை தொடைக்காம சாப்பிட சொன்னார்கள். இந்த நல்ல குடும்பத்திலிருந்து வந்தவன் அந்த நான்கு ஆண்டுகளில் பேசாத “நல்ல” வார்த்தைகளே இல்லை என்று மாறி போனான்.
இந்த எல்லா கொடுமைகளிலும் எனக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம் காலேஜ் லேப் தான். முதல் ஆண்டில் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், வொர்க் ஷாப். மொத்தம் நான்கு லேப். இதில் மகிழ என்ன இருக்கு என்று நீங்கள் யோசிக்கலாம். அட்டெண்டென்ஸில் செந்தில்லுக்கு அடுத்த பெயர் ஷாலினி.
இருவரும் பிசிக்ஸ் லேபில் ஒரே குரூப். மீதி லேப்களில் அருகருகே இருந்தோம். ஷாலினி சாய்பாபா காலனியிலிருந்து வந்து கொண்டிருந்தாள். அவள் பிறந்தது படித்தது எல்லாமே கோயமுத்தூர் தான். கொஞ்சம் கொஞ்சமாக என்னுடன் பேச ஆரம்பித்தாள். பிசிக்ஸ் லேபிள் ஸ்பெக்ட்ரோமிட்டர் பிரசம் வைக்கும் போது அது முக்கோண வடிவத்திற்கு பதிலாக ஹார்டின் வடிவத்தில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. ரெசனன்ஸ் காலம் அப்பேரட்டஸ் செய்யும் போது கையில் வைத்திருக்கும் இரண்டு ஃபோர்க்கையும் அடித்து பக்கத்திலிருக்கும் மாணவர்கள் காதில் நான் வைக்க அவர்கள் அலறியதை பார்த்து சிரித்தாள். நான் மும்மரமாக ஏதோ செய்து கொண்டிருக்கும் போது என் காதுக்கருகில் அதை வைத்தாள். நான் அலறியதை பார்த்து பழிப்பு காட்டி சிரித்தாள். மத்தவங்களுக்கு இப்படி தானே இருக்கும் என்றாள். அவள் தான் அதை செய்கிறாள் என்று தெரிந்திருந்தால் அது இளையராஜா இசையை விட நன்றாக இருந்தது என்று தோன்றியிருக்கும்.
கெமிஸ்ட்ரி லேபில் அவளுக்கு பிப்பட்டை சரியாக பயன்படுத்த தெரியவில்லை. அவளுடைய பிப்பட்டை வாங்கி உதவ நான் முயலும் போது அவளுடைய துப்பட்டாவால் நன்றாக துடைத்து
கொடுத்தாள். ஒரு மாதிரி இருந்தது. பிப்பட் இனித்ததை போல் இருந்தது. இல்லை வேறு ஏதோ மோசமான சுவை. என்ன என்று நான் யோசிக்கும் முன் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். தவறுதலாக சோடியம் ஹைட்ராக்சைடை வேகமாக இழுத்துவிட்டேன். எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பேசன, இப்படி ஆகிவிட்டதே என்று சொல்வதை போல் இருந்தது அவள் பார்வை. இருந்தாலும் அழகாக சிரித்து கொண்டிருந்தாள். இப்படி நாளொரு லேபும், பொழுதொரு தவறுமாக எங்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது.
முதல் வருடம் முடிந்து இரண்டாம் வருடத்தில் காலடி எடுத்து வைத்திருந்தோம். பத்து நாட்கள் சென்ற நிலையில் லெட்ரல் எண்ட்ரி மாணவர்கள் வந்து சேர்ந்தனர். அன்று தான் கேசவனும் வந்தான். எங்கே அமர்வது என்று அவன் யோசித்து கொண்டிருக்கும் பொழுது நான் நகர்ந்து இடம் விட்டேன். அவன் பார்வையில் ஒரு அலட்சியம் இருந்தது. இண்டர்வெலில் எங்கள் வகுப்பு மாணவர்களே லேட்டரல்களை ரேகிங் செய்ய ஆரம்பித்தார்கள். நாட்டு சரக்கடிப்பவனை ”எங்க இந்த பீர் அடிச்சிட்டு பேசு”னு சொல்வதை போல் இருந்திருக்கும் . கேசவனை கூப்பிட்டு பாட சொன்னார்கள். அரை நிமிடம் யோசித்தவன், ”சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாலே” என்று கண்ணை மூடி பாட ஆரம்பித்ததும் அனைவரும் அமைதியானோம். நான்கு நிமிடத்தில் அவன் முடித்ததும் அனைவரும் கை தட்டினார்கள். எதையும் மதிக்காமல் வெளியே சென்றுவிட்டான். அடுத்த ரெண்டு வகுப்பிற்கு அவன் வரவில்லை.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் பழக ஆரம்பித்தான். அவன் வீடு காலேஜிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் தான். அதனால் அடிக்கடி அல்லு போட்டு இடிகரைக்கு சாப்பிட போகும் போது அவன் வீட்டிற்கும் செல்வோம். சில சமயம் சனி, ஞாயிறன்று சிக்கன் சாப்பிட அவன் வீட்டிற்கு அழைக்கப்படுவோம். வெக்கம் மானமில்லாமல் அனைவரும் பேய் தீனி தின்று வருவோம். அது மட்டுமில்லாமல் இண்டர்வெலில் அவனுடைய டிபன் பாக்ஸை காலி செய்துவிடுவோம். ஹாஸ்டலில் காலையில் டிபன் சாப்பிடுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சில சமயம் அவனிடம் முதல் நாள் மெனு சொல்லிவிடுவோம். அதிகமாக சொல்லப்படுவது அரிசி, பருப்பு சாதமும் உருளைகிழங்கு வறுவலும் தான். அவனும் சரியாக கொண்டு வந்துவிடுவான்.
எங்களுள் ஒருவனாக அவன் சீக்கிரம் மாறி இருந்தான். ஆனால் பெண்களுடன் பேசுவது அவனுக்கு சுத்தமாக பிடிக்காது. அவன் முதல் நாள் பாடிய பாட்டிற்கு அவனுக்கு ஒரு வழக்கமான ஒரு லவ் ஃபெயிலியர் ஃப்ளாஷ் பேக் இருக்கும் என்று நினைத்து கொண்டிருந்தேன். பின்பு ஒரு நாள் விசாரிக்கும் போது அப்படி எதுவும் இல்லையென்றும் ஏதோ அவனுக்கு பெண்களை பிடிப்பதில்லை என்றும் சொன்னான். அழக ரசிக்க கத்துக்கணும்னு நான் சொன்னவுடன், பருவத்துல பன்னிங்க கூட அழகா தாண்டா இருக்கும் என்றான். கண்டிப்பா ஆண் பன்னிகளுக்கு அழகாத்தான் தெரியும் என்று சொல்ல நினைத்து பேக் ஃபையர் ஆகிவிடும் என்று சொல்லாமல் விட்டுவிட்டேன்.
இந்த நேரங்களில் ஷாலினியுடன் என் நட்பு லேப் தவிற பிற நேரங்களிலும் தொடர்ந்தது. கேசவன் இல்லாத நேரங்களில் அவளுடைய இருக்கைக்கு எதிரில் சென்று அமர்ந்து பேசி கொண்டிருந்தேன். அவளுடைய தம்பி முதல் நாள் அவளிடம் சண்டை போட்டதிலிருந்து கடைசியாக அவள் வாங்கிய புஜ்ஜி வரை என்னிடம் பகிர்ந்து கொண்டாள். புஜ்ஜி அவளுடைய பிங் நிற டெட்டி பொம்மை. பூனைக்கு தான் புஜ்ஜி என்று வைப்பார்கள் என்று நான் சொன்னதை அவள் ஏற்று கொள்ளவில்லை. கடைசியாக டெட்டியிடமிருந்து எனக்கு அந்த பெயர் வந்துவிட்டது. செந்தில் என்று அவள் கூப்பிடுவதை விட புஜ்ஜி என்று கூப்பிடுவது எனக்கு பிடித்திருந்தது. கேசவனுக்கு அந்த பெயர் தெரிந்ததும் என்னடா புஜ்ஜி, பஜ்ஜி என்று கிண்டல் செய்தான்.
மினி பஸ் காலேஜ் நிறுத்தத்தில் வந்து நின்றது. பஸ் முழுதும் காலியானது. இடிகரைக்கு செல்பவர்கள் இரண்டு மூன்று பேர் தான் இருந்தார்கள். காலேஜ் முழுதாக மாறியிருந்தது. தெரிந்த முகங்கள் ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தேன். வாட்ச்மேன் மாறியிருந்தார். வேறு யாரும் தெரியவில்லை. வண்டி புறப்பட்டது. காம்பவுண்ட் சுவரையும் மீறி பிரமாண்டமான ஆடிட்டோரியம் கண்ணில் பட்டது. அங்கே நடந்த முதல் நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது.
அப்பொழுது நாங்கள் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருந்தோம். கல்சுரல்ஸ் நிகழ்ச்சி. ”தில் யே பே செனு வே, ரஸ்தே பே நெயின் வே” ஷாலினி வட இந்திய ஆடையுடன் ஆடி கொண்டிருந்தாள். வேகமாக சென்று முதல் சீட்டிலிருந்த ஜீனியர் ஒருவனை எழுப்பிவிட்டு அமர்ந்தேன். ”தாலு சே தாலு மிலா” என்னை பார்த்து கொண்டே ஆடி கொண்டிருந்தாள். அட்டகாசமான நடனம். அவள் நடனம் முடிந்ததும் மேடைக்கு பின்னால் சென்று அவளை வாழ்த்தலாம் என்று புறப்பட்டேன். சரியாக அந்த நேரம் பார்த்து கதவருகே கேசவன் நின்றிருந்தான். இறுதியாக நடக்கும் பாட்டு போட்டியில் அவனை கலந்து கொள்ள சொல்லி அனைவரும் வற்புறுத்தி கொண்டிருந்தனர். அவனை கேட்காமலே அவன் பெயரை நான் கொடுத்திருந்தேன். என்னை பார்த்ததும் பிடித்து கொண்டார்கள்.
எப்படியும் ஷாலினி ஒரு ப்ரைஸ் வாங்கிடுவா. பசங்க சைட்ல இருந்து ஒருத்தவங்க கலந்துக்க வேண்டாமா? சும்மா பாடுடா, நிச்சயம் ப்ரைஸ் நமக்கு தான். எவ்வளவோ ஏத்திவிட்டு அவனை ஒத்துக்கொள்ள வைத்தோம். பிறகு அந்த இடத்தை விட்டு நழுவி ஷாலினியை தேடி சென்றேன். அங்கே ஷாலினி குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். நான் அவளை கூப்பிட்டேன். திரும்பவில்லை. விசும்பல் சத்தம் கேட்டது. ஷாலினி அழுது கொண்டுருந்தாள்.
என்ன நடந்தது என்று கேட்டதற்கு எதுவும் சொல்லவில்லை. விசும்பல் மட்டும் வந்து கொண்டிருந்தது. ”என்னடா ஆச்சு. சொல்லுடா” என்று நான் சொன்னதும் என்னையே ஒரு நிமிடம் பார்த்தாள். பிறகு பேச ஆரம்பித்தாள். அவள் ஆடி முடித்து வந்ததும் அவள் மேல் யாரோ மோதிவிட்டானாம். அவள் திரும்பி முறைத்ததற்கு, ”என்னடி பெரிய பத்தினியாட்டம் முறைக்கற. எப்ப பார்த்தாலும் அந்த செந்திலோட உரசிக்கிட்டே தானே சுத்துவ. நான் உரசுனா என்ன வந்துச்சாம்” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவன் டிப்பார்ட்மெண்ட் பசங்கள் அவனை இழுத்து கொண்டு சென்றுவிட்டார்களாம். அவன் MSc சாப்ட்வேர் நான்காம் ஆண்டு மாணவன் என்றும், பெயர் தெரியவில்லை என்றும், தண்ணி அடித்திருந்தான் என்றும் சொன்னாள்.
ஷாலினியுடன் ஆடிய MSc மூன்றாம் ஆண்டு மாணவியின் துணை கொண்டு அவன் யாரென்று கண்டுபிடித்தேன். அவனை தேட ஆரம்பித்தேன். அவன் ஆடிட்டோரியத்திற்கு பின்னால் நின்று
யாராவது வருகிறார்களா என்று பார்த்து கொண்டு தம் அடித்து கொண்டிருந்தான். அவனுடன் நான்கைந்து பேர் இருந்தார்கள். என்னை பார்த்ததும் ஒரு நிமிடம் குழம்பி பிறகு நான் யார் என்பதை புரிந்து கொண்டான். ”சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாலே” கேட்டு கொண்டிருந்தது. ”வந்துட்டாருடா ரோமியோ” என்று நக்கலாக சொல்லி சிரித்தான். ஒரு நிமிடத்தில் அவன் கண்ணாடி உடைந்திருந்தது. என் சட்டை கிழிந்திருந்தது. என் இடது கண்ணத்தில் லேசாக ரத்தம் வந்து கொண்டிருந்தது. அவன்
நெற்றியில் லேசாக ரத்தம். அவனுடன் இருந்த ஒருவனுடைய சட்டை கை மட்டும் கிழிந்திருந்தது. அங்கே கேட்ட சத்தத்தில் EEE HOD அந்த பக்கம் வந்துவிட்டார். அனைவரும் இருந்த இடம் தெரியாமல் ஓடி விட்டோம்.
நான் ஹாஸ்டலில் என் அறையில் இருந்தேன். இருபது நிமிடத்தில் கேசவன் அங்கே வந்து சேர்ந்தான். அவனுக்கு என்னை அடித்துவிட்டார்கள் என்று மட்டும் தெரிந்திருந்தது. காரணம் தெரியவில்லை. பயங்கர கோபமாக வந்தான். எவன்னு சொல்லுடா, நாளைக்கு ஒருத்தவனும் NGGO காலனியை தாண்ட மாட்டானுங்க. துடியலூர்ல இருந்து பசங்கள வர சொல்லிடறேன். அவனுங்களுக்கு எல்லாம் சூ#$ கொழுப்பெடுத்து ஆடுது போல. நாளைக்கு வாங்கினா தான் தெரியும். சரி, இப்ப நீ என் கூட வா. இன்னைக்கு ராத்திரி எங்க வீட்ல தங்கிக்கோ. நாளைக்கு பார்த்துக்கலாம் என்றான். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனுக்கு காரணம் சொல்லவும் விருப்பமில்லை. வேறு சட்டை எடுத்து போட்டு கொண்டு கிளம்ப சொன்னான். தயங்கி கொண்டே கிளம்பினேன்.
ஆடிட்டோரியத்திற்கு முன்னால் நின்ற கேசவனுடைய சாமுராயை எடுத்து கொண்டு கிளம்பினோம். யாரோ, ”கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே” பாடி கொண்டிருந்தார்கள். முடிந்தவுடன் யாருக்கு பரிசு என்பதை கேட்டுவிட்டு செல்லலாம் என சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டுவிட்டேன். அங்கிருந்து கிளம்பி ஒரு கிலோமீட்டர் தூரத்தில் எங்கள் வண்டி நிறுத்தப்பட்டது. MSc நான்காம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் ஒரு பத்து பேர் இருந்தார்கள். அங்கே இருந்த NGGO காலனியை சேர்ந்தவனிடம் கேசவன் சமாதானம் பேச முயற்சி செய்தான். ஏன்டா நாளைக்கு ஒருத்தன் கூட காலனியை தாண்ட முடியாதுனு சொன்னியாம். விடுதியில் அவன் என்னிடம் பேசியது அதற்குள் அவர்களுக்கு வந்து சேர்ந்திருந்தது. அதில் ஒருத்தனிடம் செல் ஃபோன் இருந்தது.
அந்த இடத்தை சரியாக மினி பஸ் கடந்து கொண்டிருந்தது. இப்பொழுது முன்பு போல அங்கே முள் செடிகள் இல்லை. ரியல் எஸ்டேட் காரர்கள் அங்கே ஒரு குச்சியில் போர்ட் மாட்டியிருந்தார்கள். தார் ரோட் இருந்தது.
நீ என்ன பெரிய கூ*யாடா? துடியலூர்ல இருந்து பசங்களை வர வெச்சா நாங்க பயந்துடுவோமா? அப்படி அவனுங்க வந்தா மட்டும் எங்களை என்னடா பண்ணுவான். பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் கையில் மாட்டியிருந்த காப்பு வெளியே வந்து அவன் கைப்பிடிக்குள் வந்தது. ஏதோ தப்பு நடக்க போகிறது என்று எனக்கு தொன்றியது. அந்த நிலவொளியில் அங்கே நடக்கவிருந்த பயங்கரம் எனக்கு புரிய ஆரம்பித்தது. கேசவனும் அதை புரிந்து கொண்டான். ஆனால் அவன் செயல் பட ஆரம்பிப்பதற்குள் அந்த காப்பு கேசவனின் வலது பக்க நெற்றியை பதம் பார்த்தது.
என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்த நான், அங்கே அருகே ரோடு போட கொட்டி வைத்திருந்த ஒரு கல்லை எடுத்து அவன் பின் தலையில் அடித்தேன். இருவருடைய கெட்ட நேரமும் வேலை செய்தது. கல்லை எடுக்கும் போதோ அவனை அடிக்கும் போதே என் கையிலிருந்து நீண்டிருந்த அதன் ஆறு இஞ்ச் கூர்மையான பகுதியை நான் கவனிக்கவில்லை. அந்த கல் அவன் தலையில் அப்படியே சொறுகி கொண்டது. ஒரு பக்கம் கேசவன் நெற்றியிலிருந்து ரத்தம் ஒழுக, மறு பக்கம் பின் மண்டையில் கல் பாய்ந்த அந்த மாணவன். அவன் தலையிலிருந்து கல்லை என்னால் எடுக்க முடியவில்லை. அங்கே இருந்த அனைவரும் ஓடிவிட்டார்கள்.
நான் அப்படியே அந்த கொட்டி வைத்திருந்த ஜல்லியின் மேல் அமர்ந்து விட்டேன். என்ன நடந்தது, என்ன செய்வது என்றே புரியவில்லை. ஐந்து நிமிடத்தில் அந்த இடத்தில் ஆயிரம் பேர் இருந்தார்கள். ஆம்புலன்ஸ், போலிஸ் ஜீப் இரண்டும் வந்தது. போலிஸ் ஜீப்பில் நானும், ஆம்புலன்சில் கேசவனும், தலையில் கல் சொருகியிருந்தவனும் ஏற்றப்பட்டோம். அன்று அடிப்பட்டவுடன் ஓடியவர்கள் தவறாமல் வந்து சாட்சி சொன்னார்கள். நன்னடத்தையால் ஆறு ஆண்டுகள் முடித்து வெளியே விட்டார்கள். நேராக கேசவனை பார்க்க வந்துவிட்டேன். இதோ
இடிகரை வந்துவிட்டது.
இடிகரையில் இந்த ஆறு ஆண்டுகளில் எந்த மாற்றமும் பெரிதாக காணப்படவில்லை. நேராக என் கால்கள் கேசவன் வீட்டிற்கு அழைத்து சென்றது. கதவு திறந்திருந்தது. நண்பர்கள் புடை சூழ வந்து கேசவனையும், அப்பாவையும் கிண்டல் செய்து கொண்டே சாப்பிட்ட அந்த முன் அறை விரிச்சோடி இருந்தது. அந்த குரல்கள் இன்னும் அந்த சுவர்களுக்குள் ஒளிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உள்ளே சென்றேன். சிமெண்ட் தரையில் இன்னும் குளிர் இருந்தது. இடது பக்கம் இருந்த அறை இருட்டாக இருந்தது. கேசவன் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். பல நாள் வழிக்கப்படாத தாடி, காலில் விலங்குடன் இருந்தான். அவன் அருகே சென்று அமர்ந்தேன். அவன் கண்களை ஒரு நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. அவன் கால்களில் நிறைய தழும்புகள். நெற்றியில் வலது பக்கம் இன்னும் அந்த தழும்பு தெரிந்தது. அவனுக்கு நான் யார் என்று தெரியவில்லை. அம்மா சமையலறையில் பாத்திரத்தை உருட்டும் சத்தம் கேட்டது.
வீட்டை விட்டு வெளியே வந்து மினி பஸ்ஸில் சென்று அமர்ந்தேன். பத்து நிமிடம் கழித்து புறப்பட்டது. பஸ்ஸில் நான்கைந்து பேர் மட்டும் இருந்தார்கள். ஆடிட்டோரியத்தை கடந்து செல்லும் பொழுது உள்ளே இருந்து ”தாலு சே தாலு மிலா” கேட்டு கொண்டிருந்தது. ஷாலினி என்னை பார்த்து சிரித்து கொண்டு ஆடிக் கொண்டிருந்தாள்.
நான் சத்தம் போட்டு அழுவதை அந்த எட்டு கண்களும் கவனித்து கொண்டிருந்ததை பற்றி நான் வருத்தப்படவில்லை.
103 comments:
புனைவுதானா?
சங்கமம் போட்டிக்கா?
வழக்கம் கதை கொஞ்சம் (ரொம்ப) பெருசா போயிடுச்சி. பொறுமையா படிச்சி பார்த்து சொல்லுங்க. சங்கமம் போட்டிக்கு இதை அனுப்பலாமா இல்லை அடுத்து எழுத போற கதையை அனுப்பலாமானு யோசிச்சிட்டு இருக்கேன் :)
புனைவு தான் பாஸ்...
நல்லா இருக்கா இல்லையானு உங்களை மாதிரி பெரியவங்க தான் சொல்லனும் :)
\\நல்லா இருக்கா இல்லையானு உங்களை மாதிரி பெரியவங்க தான் சொல்லனும் :)\\
கும்மாங்குத்து குத்திட்டீங்க
//முரளிகண்ணன் said...
\\நல்லா இருக்கா இல்லையானு உங்களை மாதிரி பெரியவங்க தான் சொல்லனும் :)\\
கும்மாங்குத்து குத்திட்டீங்க
11:22 PM//
கடைசி வரைக்கும் கதையை பத்தி எதுவும் சொல்லாம எஸ் ஆகறீங்க பார்த்தீங்களா? :)
கலக்கலா இருந்தது வாசிப்பு.
கேசவன் பத்தி இன்னும் ஒரு பேரா முன்னால் சேத்திருந்தா, பிடிப்பு இன்னும் கூடியிருக்கும்.
//SurveySan said...
கலக்கலா இருந்தது வாசிப்பு.
//
அப்பாடா.. இத்தனை பேர் படிச்சி நீங்க ஒருத்தராவது சொன்னீங்களே. இனிமே நிம்மதியா தூங்க போகலாம்.
//கேசவன் பத்தி இன்னும் ஒரு பேரா முன்னால் சேத்திருந்தா, பிடிப்பு இன்னும் கூடியிருக்கும்.//
நிறைய இருந்தது சர்வேஸ். எல்லாம் எடிட்டிங்ல போயிடுச்சு :)
கதை ஏற்கனவே ரொம்ப பெருசு :)
நல்லாரூந்தது. தொய்வில்லாத நடை:)
கதை சூப்பர் சார்...!
As some one hailing from Thudiyalur, I can connect with your *story* though I've not studied in your college.
சோகம். நல்லா இருக்கு வெட்டி!
கடைசியில் கேசவனின் அம்மாவுடன் சந்திப்பதில் கதை சொல்ல பல வாய்ப்புகள் இருக்கும் போல இருக்கே!
ரொம்ப அருமையா இருந்தது.கண்டிப்பா போட்டிக்கு அனுப்புங்க..
கதை சூப்பர் !!
கல்லூரி நினைவுகள் 1 - நான்காம் ஆண்டுல் இதே போல் ஒரு உண்மை சம்பவம் இருக்கிறது
கதையின் நீளம் படிக்கும் போது தொய்வு ஏற்படுத்தவில்லை. கொஞ்சம் சோகமாக உள்ளது
//வித்யா said...
நல்லாரூந்தது. தொய்வில்லாத நடை:)//
மிக்க நன்றி வித்யா...
//நிமல்-NiMaL said...
கதை சூப்பர் சார்...!
2:44 AM
//
தொடர் ஆதரவிற்கு நன்றி விமல்... ஆனா சார் எல்லாம் வேண்டாமே :)
// பெத்தராயுடு said...
As some one hailing from Thudiyalur, I can connect with your *story* though I've not studied in your college.//
வாவ்.. நீங்க துடியலூர் தானா? நாலு வருஷத்துல எத்தனை முறை அங்க வந்து சாப்பிட்டிருப்போம்...
அது ஒரு அழகிய நிலாக்காலம் :)
//திவா said...
சோகம். நல்லா இருக்கு வெட்டி!
3:39 AM//
மிக்க நன்றி திவா சார்... அடுத்த கதை சந்தோஷம் :)
//திவா said...
கடைசியில் கேசவனின் அம்மாவுடன் சந்திப்பதில் கதை சொல்ல பல வாய்ப்புகள் இருக்கும் போல இருக்கே!
3:54 AM//
ஆமாம் திவா சார்.. கதையின் மொத்த சோகத்தையும் அந்த இடத்துல அந்த அம்மா உடைச்சி அழற மாதிரி வைக்கலாம்னு பார்த்தேன். ஆனா அப்படி விளக்கறதைவிட இப்படி முடிச்சா கொஞ்சம் வித்யாசமா இருக்கும்னு முடிச்சிட்டேன்...
// Rajeswari said...
ரொம்ப அருமையா இருந்தது.கண்டிப்பா போட்டிக்கு அனுப்புங்க..//
மிக்க நன்றி ராஜேஸ்வரி. அடுத்த கதையையும் முடிச்சிட்டு எது நல்லா இருக்கோ அதை அனுப்பலாம் :)
//புருனோ Bruno said...
கதை சூப்பர் !!
//
மிக்க நன்றி டாக்டர்...
//கல்லூரி நினைவுகள் 1 - நான்காம் ஆண்டுல் இதே போல் ஒரு உண்மை சம்பவம் இருக்கிறது
//
:(
கதைல படிக்கவே சோகமா இருக்கு. இந்த மாதிரி உண்மையாவே நடந்திருக்குனா.. ரொம்ப கஷ்டமா இருக்கு :(
//வாழவந்தான் said...
கதையின் நீளம் படிக்கும் போது தொய்வு ஏற்படுத்தவில்லை. கொஞ்சம் சோகமாக உள்ளது//
மிக்க நன்றி வாழவந்தான்...
yetho 14 varusathukku munnadi engineering physics,chemistry lab ku poitu vantha oru feeling. College la ponnukkaaga adi vaangrathu jagajam thaan aanalum kesavan kathai romba sogam
சோகம். நல்லா இருக்கு வெட்டி!
ரொம்ப நல்லா இருக்கு.. தண்டிக்கப்பட்டவர்களுக்குப் பின்னால் இது போல ஒரு கதை இருக்கும்.. அவரவர் சூழ்நிலையும், நியாயமும் அவரவர்க்கு..
முதல்ல சொந்த அனுபவம்ன்னு நினைச்சேன். அப்புறம் தான் கதைன்னு தெரிஞ்சிது. கதை நல்லா இருந்தது.
பயங்கரமான சோகக் கதையா இருக்குண்ணா...முதல்ல நான் கூட சொந்த கதையோன்னு நினைச்சுட்டேன்...
ரொம்ப நல்லா இருக்குங்க.....
நல்லா இருக்கு.
ஆனா சிறுகதைப்போட்டிக்கு இன்னும் கொஞ்சம் மெருகூட்டப்பட்ட கதை நலம்.
இந்தக்கதை கதை போல தெரிகிறது,அது இல்லாத சிறுகதை நலம்
as usual வெட்டி டச்..போட்டிக்கான வாழ்த்துக்கள்
கதை நன்றாக இருந்தது. ஆனால் //M.Sc மூன்றாம் ஆண்டு // M.Sc இரண்டு ஆண்டுகள் தானே?
'செந்தில்' இந்த பெயர் வரும்வரை இது உங்க கதை'யோன்னு படிச்சிட்டு இருந்தேன்.....
இருந்தாலும் கிளைமாக்ஸ் பாலா படம் பார்த்த எபக்ட் :).. ஆனா அவரு இரக்கமே இல்லாம போட்டு தள்ளிடுவாரு... நீங்க மன்னிச்சு விட்டுடீங்க போல :)
கதையை உணர்ச்சிகளை கொட்டி அருமையா நகர்த்தியிருக்கீங்க பாலாஜி. நல்லா விறு விறுப்பா கொண்டு போயிருக்கீங்க... கொஞ்சம் சோகம் தான் என்றாலும் ஒரு நல்ல கதையை படித்த திருப்தி.
கோயமுத்தூர் பின்னனியில் கதை நகர்வதால், கதையோடு கொஞ்சம் அதிகமாகவே ஒரு கோயமுத்தூர்காரனாக ஒன்றி விட்டேன். நீங்கள் சொல்லியிருக்கும் வழியில்/பாதையில் ஒரு சில சமயம் போயிருக்கிறேன்...
நல்ல படைப்பு... வாழ்த்துக்கள்...
// Anonymous said...
yetho 14 varusathukku munnadi engineering physics,chemistry lab ku poitu vantha oru feeling. College la ponnukkaaga adi vaangrathu jagajam thaan aanalum kesavan kathai romba sogam//
மிக்க நன்றி நண்பரே. சில சமயம் சிறு பொறி தான் பெரிய காட்டையே சாம்பளாக்குகிறது. இங்கும் அது தான் நடந்தது :(
// ச்சின்னப் பையன் said...
சோகம். நல்லா இருக்கு வெட்டி!
//
டாங்கிஸ் ச்சி.பை... அடுத்து ஒரு சந்தோஷமான கதை எழுதனும். அதுக்கு அடுத்து ஒரு சோக கதை :)
சோகமா முடிக்கிறது ரொம்ப ஈசியா இருக்கு :)
// நிலாக்காலம் said...
ரொம்ப நல்லா இருக்கு.. தண்டிக்கப்பட்டவர்களுக்குப் பின்னால் இது போல ஒரு கதை இருக்கும்.. அவரவர் சூழ்நிலையும், நியாயமும் அவரவர்க்கு..
//
ஆமாம் நிலாக்காலம். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். ஆனா சில விஷயங்கள் மிக வேகமாக நடந்து வாழ்க்கை திசையை மாற்றிவிடுகிறது.
// சரவணகுமரன் said...
முதல்ல சொந்த அனுபவம்ன்னு நினைச்சேன். அப்புறம் தான் கதைன்னு தெரிஞ்சிது. கதை நல்லா இருந்தது.
//
சரவணகுமரன்,
மொதல்ல இருக்கறது எல்லாம் சொந்த அனுபவம்னும் சொல்லலாம். ஏன்னா அந்த இடங்கள் எல்லாம் எங்க காலேஜ் சுத்தி இருக்குற இடங்கள் தான்.
அதே மாதிரி இதுல இருக்குற சில நிகழ்ச்சிகள் எங்க காலேஜ்ல நடந்திருக்கு. காப்புல அடி வாங்கின பையனுக்கு 21 தையல். ஆனா மத்தபடி ஒண்ணும் ஆகல. ஒரு அரை இஞ்ச் கீழ பட்டிருந்தா ஒரு கண்ணு போயிருக்கும் :(
கொலை எல்லாம் கற்பனை தான்.
அருமை...அருமை..அருமை....
கதை என் கண்முன்னே ஓடியதே அதற்கு சான்று.
உங்கள் சொந்த அனுபவமாகத்தான் இருக்கும் என்பது என் யூகம். ரொம்ப நல்லா இருந்துச்சு.
// Divyapriya said...
பயங்கரமான சோகக் கதையா இருக்குண்ணா...முதல்ல நான் கூட சொந்த கதையோன்னு நினைச்சுட்டேன்...
//
ஆமாம்மா. கொஞ்சம் சோகமாத்தான் போயிடுச்சி. அடுத்து ஒரு ஜாலி கதையை எழுத ட்ரை பண்றேன்...
//
Kathir said...
ரொம்ப நல்லா இருக்குங்க.....
//
மிக்க நன்றி கதிர்...
//குடுகுடுப்பை said...
நல்லா இருக்கு.
ஆனா சிறுகதைப்போட்டிக்கு இன்னும் கொஞ்சம் மெருகூட்டப்பட்ட கதை நலம்.
இந்தக்கதை கதை போல தெரிகிறது,அது இல்லாத சிறுகதை நலம்
//
ஹ்ம்ம்ம்...
நிச்சயம் வேற கதை எழுத முயற்சி செய்கிறேன் குடுகுடுப்பை.
// ILA said...
as usual வெட்டி டச்..போட்டிக்கான வாழ்த்துக்கள்
3:14 PM//
டாங்க் யூ இளா ;)
//அமர பாரதி said...
கதை நன்றாக இருந்தது. ஆனால் //M.Sc மூன்றாம் ஆண்டு // M.Sc இரண்டு ஆண்டுகள் தானே?//
அமர பாரதி,
அது MSc Software Engineering (5 Year Integrated Course)
// கார்த்தி said...
'செந்தில்' இந்த பெயர் வரும்வரை இது உங்க கதை'யோன்னு படிச்சிட்டு இருந்தேன்.....
//
அது வரை கிட்டதிட்ட சொந்த அனுபவம் மாதிரி தான். அது எங்க காலேஜ் இருக்கற இடத்தை சுத்தி தான்.
//இருந்தாலும் கிளைமாக்ஸ் பாலா படம் பார்த்த எபக்ட் :).. ஆனா அவரு இரக்கமே இல்லாம போட்டு தள்ளிடுவாரு... நீங்க மன்னிச்சு விட்டுடீங்க போல :)
//
ஹா ஹா ஹா...
அவர் ரேஞ்சே வேறங்க.
//
ராசுக்குட்டி said...
கதையை உணர்ச்சிகளை கொட்டி அருமையா நகர்த்தியிருக்கீங்க பாலாஜி. நல்லா விறு விறுப்பா கொண்டு போயிருக்கீங்க... கொஞ்சம் சோகம் தான் என்றாலும் ஒரு நல்ல கதையை படித்த திருப்தி.
கோயமுத்தூர் பின்னனியில் கதை நகர்வதால், கதையோடு கொஞ்சம் அதிகமாகவே ஒரு கோயமுத்தூர்காரனாக ஒன்றி விட்டேன். நீங்கள் சொல்லியிருக்கும் வழியில்/பாதையில் ஒரு சில சமயம் போயிருக்கிறேன்...
நல்ல படைப்பு... வாழ்த்துக்கள்...//
மிக்க நன்றி ராசுக்குட்டி. அந்த ரூட்ல போயிருக்கீங்களா? சூப்பர்...
//விஜயசாரதி said...
அருமை...அருமை..அருமை....
கதை என் கண்முன்னே ஓடியதே அதற்கு சான்று.
உங்கள் சொந்த அனுபவமாகத்தான் இருக்கும் என்பது என் யூகம். ரொம்ப நல்லா இருந்துச்சு.//
விஜயசாரதி,
எங்க காலேஜ் ஏரியாவை பேஸ் பண்ணி எழுதியிருக்கிறேன். மத்தபடி இது கற்பனை கதை தான். கேசவன், செந்தில் எல்லாம் கற்பனை பாத்திரங்கள் தான்.
Enakku puriyave illaye... why kesavan is like that in the end?
As others i also thought that u are writing abt the trip to college.Namma college and ooruku pona effect varuthu..but naan padikumpothu mini bus, auditorium ellam illa. :(
this is my first comment :)
// J said...
Enakku puriyave illaye... why kesavan is like that in the end?
//
ஜெ,
அவனுக்கு தலைல அடி பட்டதுல பழசெல்லாம் மறந்து மூளை குழம்பிடுச்சி :(
//
As others i also thought that u are writing abt the trip to college.Namma college and ooruku pona effect varuthu..but naan padikumpothu mini bus, auditorium ellam illa. :(
//
நீங்களும் என் காலேஜா? மினி பஸ், ஆடிட்டோரியம் எல்லாம் இல்லைனா நீங்க என் சீனியரா இருக்கனும்.
//this is my first comment :)//
மிக்க நன்றி அண்ணே!
:(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
// ஸ்ரீதர்கண்ணன் said...
:(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
10:26 PM//
ஏன் ஸ்ரீதர் நல்லாயில்லையா?
Athu enna "Thanks Anne" ?Unga college enna boys college'a? Illa pasanga mattum thaan comment poduvaangala? :)
//J said...
Athu enna "Thanks Anne" ?Unga college enna boys college'a? Illa pasanga mattum thaan comment poduvaangala? :)//
ஆஹா... மன்னிச்சிடுங்க. ஏதோ திடீர்னு அண்ணானு வந்துடுச்சி :(
நீங்க அண்ணாவா இல்லை அக்காவா?
// ஸ்ரீதர்கண்ணன் said...
:(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
10:26 PM//
ஏன் ஸ்ரீதர் நல்லாயில்லையா?
Super :(
முடிவில் என் இவ்வளவு சோகம்...
vetti-pinnitinga.
Good Narration Vetti!
செம ரகளை பாஸ்!
//ஸ்ரீதர்கண்ணன் said...
// ஸ்ரீதர்கண்ணன் said...
:(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
10:26 PM//
ஏன் ஸ்ரீதர் நல்லாயில்லையா?
Super :(//
மிக்க நன்றி ஸ்ரீதர் :)
// Subbu said...
முடிவில் என் இவ்வளவு சோகம்...//
சின்ன சின்ன விஷயங்கள்ல கல்லூரில வாழ்க்கையை இழக்கறவங்களும் இருக்காங்க. அதான் சோகமா போயிடுச்சி சுப்பு :(
//Anonymous said...
vetti-pinnitinga.//
மிக்க நன்றி நண்பரே :)
//நாமக்கல் சிபி said...
Good Narration Vetti!//
தள,
மிக்க நன்றி :)
//குசும்பன் said...
செம ரகளை பாஸ்!
12:31 AM//
தன்யனானேன் :)
Valakkam pola arumaiyana Kathai . . . Suuuppperrru thala
havent you sent this yet to Sangamam yet or they dint update the list?
I guess today/tomorrow is the last day.
Read the current entries posted, yours will definitely win. Please submit this.
Good luck!
//Anbu said...
Valakkam pola arumaiyana Kathai . . . Suuuppperrru thala//
மிக்க நன்றி அன்பு :)
//பூங்கோதை said...
havent you sent this yet to Sangamam yet or they dint update the list?
I guess today/tomorrow is the last day.
Read the current entries posted, yours will definitely win. Please submit this.
Good luck!//
பூங்கோதை,
மிக்க நன்றி.
வேற கதை ஒண்ணு எழுதலாம்னு பார்த்தேன். வேலை ரொம்ப அதிகமாயிடுச்சி. கதை எழுத ஒரு அஞ்சு மணி நேரமாவது ஆகும். அதனால இதையே அனுப்பிட்டேன்.
நினைவுப்படுத்தியமைக்கு மிக்க நன்றி :)
நன்றாக புனைந்து உள்ளீர். வெற்றி பெற வாழ்த்துக்கள்
// சந்துரு said...
நன்றாக புனைந்து உள்ளீர். வெற்றி பெற வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி சந்துரு :)
தல இந்த கதையை படிக்காம நானும் போடிக்கு அனுப்பிட்டேன்.. நர்சிம்மா வெட்டியான்னு பார்க்கனும்
வாழ்த்துகள்
// கார்க்கி said...
தல இந்த கதையை படிக்காம நானும் போடிக்கு அனுப்பிட்டேன்.. நர்சிம்மா வெட்டியான்னு பார்க்கனும்
வாழ்த்துகள்//
அதெல்லாம் பார்க்கவே வேண்டாம்பா. நிச்சயம் நர்சிம்க்கு தான் :-)
your flow of writing is amazing anna:))
though the post is a lengthy one.......unga ezuththu kathaiyoda onri poga vaichuduchchu:))
Superb anna!!
So sad but super
So sad But Super
இந்த கதை அப்படியே கார்த்திக் & ரேவதி நடித்த இதயத்தாமரை படத்தை ஞாபகபடுத்துது ஒரு சில விசயங்கள் மட்டுமே உங்கள் கதையில் மாறியிருக்கு மற்றபடி கதையை படிப்பதற்கு நல்லாவே இருக்கு
//Divya said...
your flow of writing is amazing anna:))
though the post is a lengthy one.......unga ezuththu kathaiyoda onri poga vaichuduchchu:))
Superb anna!!
//
Romba nandrima...
Short & Sweetaa innum kathai solla varalai :-))
//goindu said...
So sad but super
//
Thx a lot Goindu...
//Venkatesh subramanian said...
இந்த கதை அப்படியே கார்த்திக் & ரேவதி நடித்த இதயத்தாமரை படத்தை ஞாபகபடுத்துது ஒரு சில விசயங்கள் மட்டுமே உங்கள் கதையில் மாறியிருக்கு மற்றபடி கதையை படிப்பதற்கு நல்லாவே இருக்கு
//
Idhaya Thaamarai???
Padam per kelvi patta maathiri iruku but kathai nyabagam illaiye. ithe maathiri kathaiya?
நல்ல சிறுகதை!
போட்டிக்கு அனுப்புங்க!
// thevanmayam said...
நல்ல சிறுகதை!
போட்டிக்கு அனுப்புங்க//
மிக்க நன்றி பாஸ்...
சங்கமம் போட்டிக்கு அனுப்பியாச்சி. வேற ஏதாவது போட்டி சொல்றீங்களா?
வெற்றி பெற்றுத்தால்ல? வாழ்த்துக்கள் பயலே!
http://tamil.blogkut.com/contest0309.php
Conrats on the first prize. Really nice story!
கதை சூப்பர் !!
நல்ல ப்ளோ.
அருமையான கதை, முடிவு உட்பட.
//வகுப்பு தோழர்களின் பைகளை வாங்கி காலுக்கு அடியிலும், பிடித்தமானவர்களின் பையை மடியிலும் வைத்து கொண்டார்கள்//
நல்லாவே pbserve பண்ணியிருக்கீங்க:)
//அவள் ஷாலினி என்று சொல்லி முடித்ததும் ”என்னை தாலாட்ட வருவாளா” பாடல் மனதில் ஒலித்தது.//
ஆஹா...மனசுக்குள்ளே ஒரு fm வச்சுருக்காரா!! ம்ம்ம்...
//இப்படி நாளொரு லேபும், பொழுதொரு தவறுமாக எங்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது.//
ஆஹா..புச்சு புச்சா கண்டுபிடிச்சு எழுதுறாங்கப்பு! அவ்வ்வ்வ்வ்....ஆனா படிக்க சுவாரஸ்சியமா இருக்கு!:)
//பருவத்துல பன்னிங்க கூட அழகா தாண்டா இருக்கும் என்றான்.//
ஹாஹாஹா...
//அவனுங்களுக்கு எல்லாம் சூ#$ கொழுப்பெடுத்து ஆடுது போல. நாளைக்கு வாங்கினா தான் தெரியும்//
ஆஹா அண்ணா, நீங்களே censor வேலைகளையும் பார்ப்பீர்கள் போல
//ஆடிட்டோரியத்தை கடந்து செல்லும் பொழுது உள்ளே இருந்து ”தாலு சே தாலு மிலா” கேட்டு கொண்டிருந்தது. ஷாலினி என்னை பார்த்து சிரித்து கொண்டு ஆடிக் கொண்டிருந்தாள்.
நான் சத்தம் போட்டு அழுவதை அந்த எட்டு கண்களும் கவனித்து கொண்டிருந்ததை பற்றி நான் வருத்தப்படவில்லை.//
என்னங்க இது? அப்ப ஷாலினிகு என்ன ஆச்சு!
அட போங்க...ஏதோ செல்வராகவன் படம் பார்த்த மாதிரி இருக்கு...:(
Congrats Vettinna.....
The 1st article I read in ur blog was some movie review. Villu review. Write something funny yaar... At least for the SL tamils who are suffering, you should not write sad stories... We browse net to read something light. Athila sad stories ah? veendampa...
I follow ur blog regularly. But rarely comment on it... Sry :-|
பாராட்டுக்கள் :) :)
// அனுபவம் said...
வெற்றி பெற்றுத்தால்ல? வாழ்த்துக்கள் பயலே!//
ஆமாம். வெற்றி பெற்றாச்சி.
மிக்க நன்றி அனுபவம்
// Ramesh said...
http://tamil.blogkut.com/contest0309.php
Conrats on the first prize. Really nice story!
கதை சூப்பர் !!//
மிக்க நன்றி ரமேஷ் :-)
//அமிர்தவர்ஷினி அம்மா said...
நல்ல ப்ளோ.
அருமையான கதை, முடிவு உட்பட//
மிக்க நன்றி அமிர்தவர்ஷினி அம்மா :-)
// Thamizhmaangani said...
//ஆடிட்டோரியத்தை கடந்து செல்லும் பொழுது உள்ளே இருந்து ”தாலு சே தாலு மிலா” கேட்டு கொண்டிருந்தது. ஷாலினி என்னை பார்த்து சிரித்து கொண்டு ஆடிக் கொண்டிருந்தாள்.
நான் சத்தம் போட்டு அழுவதை அந்த எட்டு கண்களும் கவனித்து கொண்டிருந்ததை பற்றி நான் வருத்தப்படவில்லை.//
என்னங்க இது? அப்ப ஷாலினிகு என்ன ஆச்சு!
அட போங்க...ஏதோ செல்வராகவன் படம் பார்த்த மாதிரி இருக்கு...:(
//
ஹா ஹா ஹா...
செல்வராகவன் படமா? அதுல கொஞ்சம் சைக்கோத்தனம் தெரியுமே. இதுல ஹீரோவும் அவன் ஃபிரெண்டும் நார்மலாத்தானே இருந்தாங்க. நீங்க எதுக்கும் செல்வராகவன் படம் எல்லாம் இன்னொரு தடவைப் பார்க்கணும் ;)
"நான் சத்தம் போட்டு அழுவதை அந்த எட்டு கண்களும் கவனித்து கொண்டிருந்ததை பற்றி நான் வருத்தப்படவில்லை."
I can't understand that.
sorry. please explain.
//Anonymous said...
"நான் சத்தம் போட்டு அழுவதை அந்த எட்டு கண்களும் கவனித்து கொண்டிருந்ததை பற்றி நான் வருத்தப்படவில்லை."
I can't understand that.
sorry. please explain.
//
ஆடிட்டோரியத்தை கடந்து செல்லும் பொழுது உள்ளே இருந்து ”தாலு சே தாலு மிலா” கேட்டு கொண்டிருந்தது. ஷாலினி என்னை பார்த்து சிரித்து கொண்டு ஆடிக் கொண்டிருந்தாள்.
நியாபகம் வருதே.. நியாபகம் வருதே!!!
Hey.... Are u a student of SREC??? (me too anna)...really very happy to remember those days in college..... i joined there in 2000...... Really good.. i m confused abt the inccident u mentioned.... may i know ur real name???
//Hema R said...
Hey.... Are u a student of SREC??? (me too anna)...really very happy to remember those days in college..... i joined there in 2000...... Really good.. i m confused abt the inccident u mentioned.... may i know ur real name???//
Hi Hema,
Yes. I am from SREC. I am Balaji, 99 - 2003 batch (IT). This is a fiction inspired from some real incidents but not exactly the same. :)
Hi its really gr8 :),,, i think u knw shyam sundar frm ur class..i am ur junior..2000 - 2004 (IT).... but i dont remember u!!!!!! :((
//Hema R said...
Hi its really gr8 :),,, i think u knw shyam sundar frm ur class..i am ur junior..2000 - 2004 (IT).... but i dont remember u!!!!!! :((
//
:))
Sorry... I dont know Shyam Sundar(Irumi), OP, Kozhi :)))
Irumi kadalai poada maatanu illai ninaichitu irunthen :)
Nice but college pasangala ivlo mosama katiyiruka veandam
Post a Comment