ஆண்டவன் கட்டளை படத்திலிருந்து ... ஆறு மனமே ஆறு. அட்டகாசமான பாடல். நான் ஒன்பதாவது படிக்கும் போது, நாம பெருசாகி ஒரு படம் எடுக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஹீரோ The Perfect Manஆக இருக்கனும்னு காட்டற மாதிரி. இந்த படத்தை பார்த்தவுடன் எனக்கு ஒரே ஆச்சர்யம். நான் நினைச்ச கதைக்கு 60% ஒத்து வந்துச்சு. முதல் சீன்ல சிவாஜி காலேஜ் போகும் போது அதை பார்த்து ஒருத்தர் கடிகாரத்தை திருத்துவார். அந்த அளவுக்கு அட்டகாசமா ஒரே சீன்ல அவரோட கேரக்டரை விளக்கிருப்பாங்க. க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் சொதப்பல் (என்னை பொருத்தவரை). இந்த படத்துல எல்லா பாட்டும் அருமையான பாடல்கள் தான். சந்திரபாபு பாடுற புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை பாட்டு இந்த படம் தான்.
புதிய பறவை படத்திலிருந்து... பார்த்த ஞாபகம் இல்லையோ?
ஸ்டைல்னா என்னனு இந்த பாட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க. ரஜினி காந்த் சிவாஜியை ஸ்டைல் சாம்ராட்னு சொன்னது எவ்வளவு உண்மைனு இந்த ஒரு பாட்டை பார்த்தா தெரிஞ்சிக்கலாம். இந்த படத்துல வர உன்னை ஒன்று கேட்பேன், ஆஹா மெல்ல நட, மெல்ல நட பாட்டும், எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எனக்கு ரொம்ப பிடிக்கும். சரோஜா தேவி இந்த படத்துக்கு எத்தனை மை டப்பா காலி பண்ணாங்கனு எனக்கு ஒரு சந்தேகம்.
பாவ மன்னிப்பு படத்திலிருந்து... வந்த நாள் முதல் இந்த நாள் வரை. Excellent lyrics. இந்த பாடல் வரிகள் எத்தனை உண்மை.
பட்டிக்காடா பட்டணமா படத்திலிருந்து... அடி என்னடி ராக்கம்மா. செம்ம குத்து. இது செம மசாலா படம். இந்த கதையை கொண்டு நிறைய படம் வந்துடுச்சி. ஜெயலலிதா இதுல சூப்பரா நடிச்சிருப்பாங்க.
ஆலயமணி படத்திலிருந்து... கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? Excellent Lyrics
இந்த படத்துல சிவாஜி Anti-hero. பயங்கரமான சுயநலவாதி. முதல் காட்சிலயே அதை விளக்கிடுவாரு இயக்குனர். கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியும் இதுல பாந்தமா இருப்பாங்க. வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பாருங்க. இதுல எனக்கு பிடிச்ச இன்னொரு பாடல் சட்டி சுட்டதடா கை விட்டதடா.
Last but Not least... Kathazha kannala Remix
இது தொடர் பதிவா வரும். ஏன்னா ஒரு பதிவுல சிவாஜியை அடைக்க முடியாது.
இந்த பாடல்களை youtubeல் வலையேற்றியவர்களுக்கு என் நன்றி.
38 comments:
சந்திரபாபு பாடுற புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை பாட்டு
எனக்கு பிடித்த பாடல் :)
//ஸ்ரீதர்கண்ணன் said...
சந்திரபாபு பாடுற புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை பாட்டு
எனக்கு பிடித்த பாடல் :)
3:37 PM//
ஆஹா... அட்டகாசமான பாட்டு இவ்வளவு போட்டிருக்கேன். அதுல எதுவும் பிடிக்கலையா?
ஆண்டவன் கட்டளை படம் வந்தப்பல்லாம் நாம பொறக்கவேயில்லை. அப்பாவே பள்ளிக்கூட வயசுன்னு நெனைக்கிறேன்.
ஆனா நான் பாத்தது நான் பள்ளிக்கூடம் படிக்கிறப்ப. சென்னைக்கு விடுமுறைக்கு வருவோம். அப்பல்லாம் நாகேஷ் தியேட்டர் இருந்துச்சு. அதுல ஆண்டவன் கட்டளை ஓடுச்சு. சொன்னா நம்ப மாட்ட.... ஏதோ பழைய படத்துக்குப் போன மாதிரியே இல்லை. தியேட்டர்ல கூட்டம் நெறைய இருந்துச்சு. இப்பல்லாம் புதுப்படங்களே காத்து வாங்குது. படத்த மொதல்ல இருந்து கடைசி வரைக்கும் ரசிச்சுப் பாத்தேன். முடிவைச் சொதப்பல்னு சொல்ல மாட்டேன். சரியாத்தான் இருக்குங்குறது என் கருத்து.
இந்தப் படத்துல பாட்டுகள் எல்லாமே கலக்கல். அமைதியான நதியினிலே ஓடம் பாட்டு இருக்கே. அப்பப்பா... மெல்லிசை மன்னர் காலைத் தொட்டுக் கும்பிட்டுக்கனும். இளையராஜா ரொம்பச் சரியாச் சொல்லீருக்காரு. ஆதார சுருதின்னு.
அதே மாதிரி ஆறுமனமே ஆறுன்னு நடிகர் திலகம் பாடுறப்போ நமக்கே மனம் அமைதியாயிரும். அப்புறம்... அந்த மனசு மாறும் காட்சிகள். காதலிக்கலாமா வேண்டாமான்னு கொழம்புற காட்சிகள் அவர் நடிப்பு பிரமாதமா இருக்கும். அப்பப் பின்னணி இசை ரொம்பக் கலக்கல்.
புதிய பறவை... இந்தப் படத்தை முதன் முதலில் பாத்தப்போ பிரமிப்போடதான் பாத்தேன். யாருங்க அந்த தாதாமிராசி? புதிய பறவைக்கு முன்னாடி என்ன படம் எடுத்திருக்காரு? மூன்று தெய்வங்கள் இவர் எடுத்ததுதான். ஆனா அது பின்னால வந்தது.
பார்த்த ஞாபகம் இல்லையோ... பாட்டா அது.... தேன ஊத்துனாப்புல இசையரசி சுசீலா பாடுவாங்களே. அப்ப நாற்காலில கோட்டு சூட்டுப் போட்டுக்கிட்டு ஜிகரெட்டுப் பிடிச்சிக்கிட்டே ஒரு பார்வை பாப்பாரு பாருங்க. அடடா....
அதே மாதிரி...பலப்பல காட்சிகளைச் சொல்லலாம். ஆனா சரோஜாதேவிக்கு மட்டும் ஏன் அவ்ளோ ரோஸ்பவுடரும் கண்மையும்? சரோஜாதேவி கொஞ்சிக் கொஞ்சிப் பேசுறப்போ லேசா எரிச்சல் வந்தாலும்... சிட்டுக்குருவி முத்தம் கொடுத்துன்னு பி.சுசீலா பாடுறப்போ நம்மளையே மறந்துர்ரோம்.
இந்தப் படத்த மொதமொதலா வீடியோ கேசட்டுல பாத்தேன். எப்பன்னு நெனைவில்லை. கடைசிக் காட்சில.. உண்மையிலேயே காதலிச்சேன்னு சொல்வாங்க சரோஜாதேவி. அதுக்குப் பதிலா....நடிச்சாங்கன்னே இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்னு படம் பாக்குறப்போ தோணுச்சு. இப்பவும் அதேதான் கருத்து. பில்லா படத்த எடுத்த மாதிரி.. இந்தப் படத்தையும் திரும்ப எடுக்கலாம். சூர்யாவைத் தவிர வேற யாரையும் நெனைச்சிக்கூடப் பாக்க முடியலை. ஏ.ஆர்.ரகுமான் இசையா இருக்கனும். இல்லைன்னா மெல்லிசை மன்னரையும் இசைஞானியையும் சேத்து இசையமைக்க வெச்சிறனும். ரொம்பக் கலக்கலாயிருக்கும்.
பாவ மன்னிப்பு.... பா வரிசைப் படம். பீம்சிங்-மெல்லிசை மன்னர்-நடிகர் திலகம் கூட்டணியில் வந்த கலக்கல் படம். இந்தப் படம் வந்தப்ப இந்தப் படப் பாட்டுகளை வரிசைப் படுத்தச் சொல்லிப் போட்டியெல்லாம் வெச்சாங்களாம்.
இந்தப் படத்துல வர்ர அத்தான் என்னத்தான் பாட்டைக் கேட்டுட்டு இந்த மாதிரி எளிமையான தமிழ் பாட்டுகள் இருந்தா பாடக் குடுங்களேன்னு லதா மங்கேஷ்கர் கேட்டாங்களாம். ஆனாலும் இதுவரைக்கும் மெல்லிசை மன்னர் லதா மங்கேஷ்கரைத் தமிழில் பயன்படுத்தலை. ஏன்னா..மொழி தெரியாமப் பாடி பாட்டைக் கெடுத்துருவாங்கன்னுதான். இந்த நிகழ்ச்சியை இப்ப உள்ள இசையமைப்பாளர்களுக்கு எடுத்துச் சொல்லனும்.
இந்தப் படத்துல தொப்பி வெச்சிக்கிட்டு வித்யாசமான தோற்றத்துல வருவாரு. ஆனா ரொம்ப எளிமையான தோற்றம். முகத்துல அமிலத்த வேற ஊத்திருவாங்க. கதைப்படி பெத்த அப்பனே ஊத்துவாருன்னு நெனைக்கிறேன். அந்த முகத்தை வெச்சிக்கிட்டு.. சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்.. நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்னு.. உண்மையிலேயே சிரிச்சிக்கிட்டே அழுவாரு நடிகர் திலகம். ஆகா.... ஆகா. ம்ம்ம்...நடிப்பால நம்ம பசியைப் போக்க இன்னொருத்தர் வர்ர வரைக்கும் நடிகர் திலகத்தின் படங்கள்தான் நமக்கு உணவு.
பட்டிக்காடா பட்டணமா.... பி.மாதவன் இயக்கிய படம். இந்தப் படத்தை எத்தனை படமா தமிழ்ல எடுத்திருப்பாங்கன்னு கணக்குப் பாக்கவே முடியாது. அத்தன வாட்டி எடுத்துட்டாங்க. ஆனாலும் பட்டிக்காடா பட்டணமாவை மசாலாவுல அடிச்சிக்க முடியாது.
மூக்கையாங்குற கணவன் பேரை முக்கேஷ்னு ஜெயலலிதா மாத்திச் சொல்றதும். அவர் சொன்ன மாதிரியே முக்கேஷா ஸ்டைலா வந்து... நல்வாழ்த்து நான் சொல்லுவேன்னு பாடுறதும்...பட்டிக்காட்டு மாமனா...கொண்ட வெச்சிக்கிட்டு... அம்பிகையே ஈசுவரியே..எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரின்னு அம்மங்கொண்டாடியா ஆடுறதும்.... அடி ராக்கு..அடி மூக்கு....ன்னு தொடங்கி...தெய்வான சக்களத்தி வள்ளிக் கொறத்தி..நம்ம கதையிலும் இருக்குதடின்னு கிண்டலாப் பாடுறதும்... ஒரு மசாலாப் படத்துக்கு என்ன வேணுமோ...எல்லாம் அளவாப் போட்டுத் தாளிச்ச படம்.
இந்தப் படம் முடியுறப்போ கோழைக் கணவனா இருக்குற வி.கே.ராமசாமிக்கு வீரம் வந்து சுகுமாரியைச் சவுக்கால அடிப்பாரு. அதப் பாத்துட்டு.. எங்கம்மா... "படம் முடியுறப்போ வீரம் வந்துருமே"ன்னு சொன்னப்போ என்னால சிரிப்பை அடக்க முடியலை. படம் முடியுறப்போ போலீஸ் வர்ர காமெடி மாதிரி... படம் முடியுறப்போ வீரம் வர்ரதத் தொடங்கி வெச்ச படம் இது.
அடிச்சிச் சொல்றேன். ஆலயமணி மாதிரி இன்னொரு படம் வரலை. அந்த வகையில வந்த இன்னொரு படமாச் சிறையைச் சொல்லலாம். அந்த அளவுக்கு மிகவும் சிக்கலான காதலின் மனப்பரிமாணங்களைச் சொன்ன படம் ஆலயமணி.
ரொம்பவும் எளிய கேள்வி. ஒருவனைக் காதலித்த பெண்... இன்னொருவனைக் காதலித்து மகிழ்ச்சியோடு திருமண வாழ்க்கை வாழ முடியுமா? முடியும் என்று அறுபதுகளில் சொன்ன படம். கண்ணான கண்ணனுக்கு அவசரமா என்று எஸ்.எஸ்.ஆருடன் டூயட் பாடி விட்டு.... பின்னாடி கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா என்று சிவாஜியோடு காதலிப்பதாகட்டும்.... உண்மையிலேயே சரோஜாதேவி நடிச்ச படம் இது.
அதே போல நடிகர் திலகத்தின் பாத்திரமும் மிகச் சிக்கலான பாத்திரம். சிறுவயதில் ஒரு பொம்மைக்காக நண்பனைக் கொலை(!) செய்த பாத்திரம். அதாவது ஒருவிதமான "தன் பொருள்" மனநிலை கொண்ட பாத்திரம். ஒரு பொம்மைக்கே அவ்வளவு "தன் பொருள்" உணர்ச்சி இருக்கும் பொழுது..... தான் காதலிக்கும் பெண் இன்னொருவனைக் காதலித்தவள் என்று தெரிந்தால்?....கொலை வெறிதானே வரும். அப்படிக் கொலை செய்யப் போகையில்...அவள் தவறில்லாதவள் என்று தெரிந்தால்...படத்தை நீங்களே பாருங்கள். எறும்புத்தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா என்று கவியரசர் கண்ணதாசனை எழுத வைத்த பாத்திரம்.
திரும்பவும் சொல்கிறேன். இன்றைக்கும் இப்பிடியொரு படம் வருவது மிக அரிது.
கடைசியாக் கத்தாழைக் கண்ணாலே பாட்டுக்கு போட்டிருக்கிறது பாபு படப்பாட்டு. வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா என்று வரும் பாட்டு. செம லோக்கல் பாட்டு.
குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது
அது அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது
மேரியம்மா கேரியரில் எறா இருக்குது
அதில் பத்மநாப ஐயரு வீட்டுக் கொழம்பி கெடக்குது
இப்பிடிப் போகும் பாட்டு.
இந்தப் படத்துல வருமே.. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...அந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். I miss M.S.Viswanathan, Kannadasan and T.M.Soundararajan. அவங்களுக்கு வயசாச்சு. கவியரர் இப்ப நம்மகூட இல்லை. ஆனா ஒரு பாட்டை உருவாக்க அவங்க காட்டுன சிரத்தையைக் காட்டும் கூட்டணியை எதிர்பாக்குறேன்.
நல்ல தொகுப்பு பாலாஜி.
ஆறு மனமே ஆறு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. அது உங்க தொகுப்புல முதல்லயே இருக்கறது சந்தோஷம்.
உண்மையிலேயே "புதிய பறவை" படம் முழுசும் ஒரு தனி ஸ்டைல் காட்டிட்டே இருப்பாரு சிவாஜி. இந்தப் படம் டிவில வரும் போதெல்லாம் அந்த ஸ்டைலை எங்கப்பா புகழ்ந்து சொல்லுவாரு.
//பாவ மன்னிப்பு படத்திலிருந்து... வந்த நாள் முதல் இந்த நாள் வரை. Excellent lyrics. இந்த பாடல் வரிகள் எத்தனை உண்மை.//
இதே படத்துல வர்ற எல்லோரும் கொண்டாடுவோம் பாடல் வரிகளும் ரொம்ப பொருள் பொதிந்ததா இருக்கும். "ஆடையின்றி பிறந்தோமே...ஆசையின்றி பிறந்தோமா..."
அடுத்த பதிவையும் எதிர்பார்க்கிறேன்.
ஆண்டவன் கட்டளை படத்தைப் பற்றிய ஒரு சுவராசியமான தகவல்.
(பதிவர் நர்சிம் அவர்கள் சொன்னது)
இந்தப் படத்தில் பணிபுரிந்த எல்லோரும் ஜாம்பவான்கள். சிவாஜி,கண்ணதாசன், எம் எஸ் வி, சந்திரபாபு, டி எம் எச், பி பி எஸ் என.
இயக்குநர் இவர்களோடு ஒப்பிட்டால் ஜுனியர். அதனால் டைட்டில் கார்டில் கடைசியில் தன் பெயரை எப்படி போடுவது என தயங்கி ஒரு உபாயம் செய்தார்.
சிவாஜி நடந்து வரும் ஆரம்ப காட்சியில் ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் stop என்னும் கை பலகையை காட்டுவார். அப்பொழுது இயக்கம் என அவர் பெயர் வரும்.
அதாவது இவர்களிடம் நான் வேலை வாங்கவில்லை. அவர்கள் செய்வதை சரியான அளவோடு நிறுத்துவதுதான் என் பணி என.
// G.Ragavan said...
ஆண்டவன் கட்டளை படம் வந்தப்பல்லாம் நாம பொறக்கவேயில்லை. அப்பாவே பள்ளிக்கூட வயசுன்னு நெனைக்கிறேன்.
ஆனா நான் பாத்தது நான் பள்ளிக்கூடம் படிக்கிறப்ப. சென்னைக்கு விடுமுறைக்கு வருவோம். அப்பல்லாம் நாகேஷ் தியேட்டர் இருந்துச்சு. அதுல ஆண்டவன் கட்டளை ஓடுச்சு. சொன்னா நம்ப மாட்ட.... ஏதோ பழைய படத்துக்குப் போன மாதிரியே இல்லை. தியேட்டர்ல கூட்டம் நெறைய இருந்துச்சு. இப்பல்லாம் புதுப்படங்களே காத்து வாங்குது. படத்த மொதல்ல இருந்து கடைசி வரைக்கும் ரசிச்சுப் பாத்தேன். முடிவைச் சொதப்பல்னு சொல்ல மாட்டேன். சரியாத்தான் இருக்குங்குறது என் கருத்து.
இந்தப் படத்துல பாட்டுகள் எல்லாமே கலக்கல். அமைதியான நதியினிலே ஓடம் பாட்டு இருக்கே. அப்பப்பா... மெல்லிசை மன்னர் காலைத் தொட்டுக் கும்பிட்டுக்கனும். இளையராஜா ரொம்பச் சரியாச் சொல்லீருக்காரு. ஆதார சுருதின்னு.
அதே மாதிரி ஆறுமனமே ஆறுன்னு நடிகர் திலகம் பாடுறப்போ நமக்கே மனம் அமைதியாயிரும். அப்புறம்... அந்த மனசு மாறும் காட்சிகள். காதலிக்கலாமா வேண்டாமான்னு கொழம்புற காட்சிகள் அவர் நடிப்பு பிரமாதமா இருக்கும். அப்பப் பின்னணி இசை ரொம்பக் கலக்கல்.//
சூப்பர் ஜி.ரா
இதுல வர அமைதியான நதியிலே ஓடம் பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த பாட்டுக்கு அப்பறம் தான் கதையே மாறிடும். ஒரு அட்டகாசமான பேராரிசியரா இருப்பாரு.
க்ளைமாக்ஸ் எனக்கு பிடிக்கலைனு சொன்ன காரணம், இந்த படம் நேர்கோட்ல போகிற மாதிரி இல்லாம கொஞ்சம் காம்ப்லக்ஸா இருக்கும். தேவிகா ரொம்ப அழகு :)
//இந்தப் படத்த மொதமொதலா வீடியோ கேசட்டுல பாத்தேன். எப்பன்னு நெனைவில்லை. கடைசிக் காட்சில.. உண்மையிலேயே காதலிச்சேன்னு சொல்வாங்க சரோஜாதேவி. அதுக்குப் பதிலா....நடிச்சாங்கன்னே இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்னு படம் பாக்குறப்போ தோணுச்சு//
அதே அதே... ரியலிஸ்டிக்கா இருக்காது...
ஆனா இந்த படத்தை ரீமேக் பண்ணா யாராலும் இதே ஸ்டைலா நடிக்க முடியாது. நிச்சயம் சூர்யாவும் நடிக்க முடியாது.
// G.Ragavan said...
பாவ மன்னிப்பு.... பா வரிசைப் படம். பீம்சிங்-மெல்லிசை மன்னர்-நடிகர் திலகம் கூட்டணியில் வந்த கலக்கல் படம். இந்தப் படம் வந்தப்ப இந்தப் படப் பாட்டுகளை வரிசைப் படுத்தச் சொல்லிப் போட்டியெல்லாம் வெச்சாங்களாம்.
//
நான் இந்த படம் மிஸ் பண்ணிட்டேன் ஜி.ரா. ஆனா எல்லா பாட்டும் ரொம்ப பிடிக்கும். எப்படியும் அடுத்த முறை போகும் போது பாத்துடனும்.
// G.Ragavan said...
பட்டிக்காடா பட்டணமா.... பி.மாதவன் இயக்கிய படம். இந்தப் படத்தை எத்தனை படமா தமிழ்ல எடுத்திருப்பாங்கன்னு கணக்குப் பாக்கவே முடியாது. அத்தன வாட்டி எடுத்துட்டாங்க. ஆனாலும் பட்டிக்காடா பட்டணமாவை மசாலாவுல அடிச்சிக்க முடியாது.//
நிச்சயம். எத்தனை முறை இந்த கதையை எடுத்துருப்பாங்கனு கண்டுபிடிக்கறது கஷ்டம் தான். அவ்வளவு காப்பி அடிச்சிட்டாங்க. அதே மாதிரி தான் உத்தம புத்திரன் கதையும். எவ்வளவு ஆள் மாறாட்ட கதைகள் வந்துடுச்சி.
// G.Ragavan said...
அடிச்சிச் சொல்றேன். ஆலயமணி மாதிரி இன்னொரு படம் வரலை. அந்த வகையில வந்த இன்னொரு படமாச் சிறையைச் சொல்லலாம். அந்த அளவுக்கு மிகவும் சிக்கலான காதலின் மனப்பரிமாணங்களைச் சொன்ன படம் ஆலயமணி.//
நானும் அதே தான் நினைச்சேன். ஆனா கிட்ட தட்ட இந்த கதைல விஜயோட பிரியமுடன் வந்துச்சு. ஆனா அதை விட இந்த கதை களம் ரொம்ப ரொம்ப கனமானது.
எப்படி அவ்வளவு கனமான பாத்திரங்களை படைச்ச தமிழ் சினிமா இப்படி மாறுச்சுனு ஆச்சரியமா இருக்கு.
இந்த படத்தை நான் ஏதோ இரு நாள் சன் டீவில மதியம் போட்ட காவிய புதன்ல தான் பார்த்தேன். அசந்து போயிட்டேன். இப்படி ஒரு பாத்திரத்தை ஏற்று சிவாஜி நடிச்சிருக்காரேனு. எத்தனை முறை வேணா இந்த படத்தைப் பார்க்கலாம் :)
//உண்மையிலேயே சரோஜாதேவி நடிச்ச படம் இது.//
அட்டகாசமா நடிச்ச படம்னு சொல்லனும் ஜி.ரா. அவ்வளவு அட்டகாசமான நடிப்பு.
//
இந்தப் படத்துல வருமே.. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...அந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். I miss M.S.Viswanathan, Kannadasan and T.M.Soundararajan. அவங்களுக்கு வயசாச்சு. கவியரர் இப்ப நம்மகூட இல்லை. ஆனா ஒரு பாட்டை உருவாக்க அவங்க காட்டுன சிரத்தையைக் காட்டும் கூட்டணியை எதிர்பாக்குறேன்.//
நிச்சயம் கிடைக்காது :)
ஏன்னா இன்னைக்கு ரசனையும் அப்படி இல்லைனு இவுங்களே நினைச்சிக்கறாங்க. அதான் காரணம் :)))
//கைப்புள்ள said...
நல்ல தொகுப்பு பாலாஜி.
ஆறு மனமே ஆறு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. அது உங்க தொகுப்புல முதல்லயே இருக்கறது சந்தோஷம்.
//
உங்களுக்கு ரொம்ப பிடிச்சதுல சந்தோஷம்ண்ணே. இந்த படமும் எனக்கு ரொம்ப பிடிச்ச படம் :)
//
உண்மையிலேயே "புதிய பறவை" படம் முழுசும் ஒரு தனி ஸ்டைல் காட்டிட்டே இருப்பாரு சிவாஜி. இந்தப் படம் டிவில வரும் போதெல்லாம் அந்த ஸ்டைலை எங்கப்பா புகழ்ந்து சொல்லுவாரு.
//
ஆமாண்ணே. செம ஸ்டைலா இருப்பாரு சிவாஜி.
//பாவ மன்னிப்பு படத்திலிருந்து... வந்த நாள் முதல் இந்த நாள் வரை. Excellent lyrics. இந்த பாடல் வரிகள் எத்தனை உண்மை.//
இதே படத்துல வர்ற எல்லோரும் கொண்டாடுவோம் பாடல் வரிகளும் ரொம்ப பொருள் பொதிந்ததா இருக்கும். "ஆடையின்றி பிறந்தோமே...ஆசையின்றி பிறந்தோமா..."
அடுத்த பதிவையும் எதிர்பார்க்கிறேன்.
7:40 PM//
ஆமாம். அட்டகாசமான பாடல்கள் தான். எல்லாரும் கொண்டாடுவோம். அல்லாவின் பேரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி. எல்லோரும் கொண்டாடுவோம். எவ்வளவு அருமையான பாடல்.
வாரம் ஒரு முறை போடலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன் :)
'ஆறு மனமே ஆறு' மற்றும் 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை' தத்துவ பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது.
அதே மாதிரி கொஞ்சம் சோகமான லவ் பாடல்கள வல்லவனுக்கு வல்லவன் படத்துல வர 'ஓர் ஆயிரம் பார்வையிலே' பாடல் மறக்க முடியாதது .
சிவாஜிய பத்தின பதிவென்பதால் அநேகமாக இது மிக நீண்ட தொடராக இருக்க போகுது :)
வெட்டி அண்ணே,6 மாசம் கழிச்சு ஒரு பதிவு போட்ருக்கேன்...வந்து பாருங்க...பார்த்துட்டு மறக்காம உங்க கருத்தை சொல்லவும்..
//சரோஜா தேவி இந்த படத்துக்கு எத்தனை மை டப்பா காலி பண்ணாங்கனு எனக்கு ஒரு சந்தேகம்.//
டப்பா எல்லாம் இல்லை...ஒரு மை factory யே காலி பண்ணியிருப்பாங்க :))
// முரளிகண்ணன் said...
ஆண்டவன் கட்டளை படத்தைப் பற்றிய ஒரு சுவராசியமான தகவல்.
(பதிவர் நர்சிம் அவர்கள் சொன்னது)
இந்தப் படத்தில் பணிபுரிந்த எல்லோரும் ஜாம்பவான்கள். சிவாஜி,கண்ணதாசன், எம் எஸ் வி, சந்திரபாபு, டி எம் எச், பி பி எஸ் என.
இயக்குநர் இவர்களோடு ஒப்பிட்டால் ஜுனியர். அதனால் டைட்டில் கார்டில் கடைசியில் தன் பெயரை எப்படி போடுவது என தயங்கி ஒரு உபாயம் செய்தார்.
சிவாஜி நடந்து வரும் ஆரம்ப காட்சியில் ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் stop என்னும் கை பலகையை காட்டுவார். அப்பொழுது இயக்கம் என அவர் பெயர் வரும்.
அதாவது இவர்களிடம் நான் வேலை வாங்கவில்லை. அவர்கள் செய்வதை சரியான அளவோடு நிறுத்துவதுதான் என் பணி என.//
ஆண்டவன் கட்டளை படத்திற்கு இயக்கம் கே.சங்கர். அவருக்கு அதுதான் முதல் படமா என்று நினைவில்லை. அப்படியிருந்தால்..முதல் படத்திலேயே சிக்கலான கதையமைப்பை எடுத்துக் கொண்டமை மிகச் சிறப்பு. இவர் பின்னாளில் வருவான் வடிவேலன், வேலுண்டு வினையில்லை, சுப்ரபாதம், யாமிருக்க பயமேன், நவக்கிரக நாயகி, முப்பெருந்தேவியர் என்று பக்திப்படங்களாக எடுத்து இறையருட்கலைச்செல்வர் கே.சங்கர் என்று அழைக்கப்பட்டார். இவருடைய திரைப்பட வாழ்க்கை எடிட்டிங்கில் தொடங்கியது என்று நினைக்கிறேன். ஆகையால்தான் அவருடைய படங்களில் எல்லாம் எடிட்டிங் என்று வருகையில் கே.சங்கர் என்றும் இருக்கும். ஒரு சிலரைப் போல கதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம் என்று அவியலாக தன்னுடைய பெயரைப் போட்டுக்கொள்ள மாட்டார்.
அருமை!அருமை!!
ஜி.ராவின் பின்னூட்டங்கள் ப்ரமிப்பு.
பெரிய encylo-cinema-pedia போலருக்கே அவரு. super.
//அமைதியான நதியினிலே ஓடம் பாட்டு இருக்கே. அப்பப்பா... மெல்லிசை மன்னர் காலைத் தொட்டுக் கும்பிட்டுக்கனும்///
100%!
அனானி நண்பரே,
அது வேறு ஒருவரின் தவறால் ஏற்பட்டது. இதற்காக திருடினார்கள் என்று சொல்வது எல்லாம் அதிகம். அதற்கு விளக்கம் உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டு விட்டது. வலையுலகில் இதெல்லாம் சகஜம். என்னுடைய பதிவுகள் பலருடைய வலைப்பதிவுகளிலும் அவர்கள் பெயரில் இருக்கிறது. அதை பார்த்து நானும் வருத்தப்பட்டிருக்கிறேன்.
தவறு நடந்துவிட்டது என தெரிந்தவுடன் அவர்கள் எடுத்து கொண்ட முயற்சி தான் முக்கியம். அதை உங்கள் நண்பரிடம் கேட்டு தெளிவு படுத்தி கொள்ளவும்.
உங்களுடைய பின்னூட்டத்தை வெளியிட முடியாததற்கு என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் :(
ஜிரா,
எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' -ணை இயக்கியதும் இதே கே.சங்கர் தானே?
// முரளிகண்ணன் said...
ஆண்டவன் கட்டளை படத்தைப் பற்றிய ஒரு சுவராசியமான தகவல்.
(பதிவர் நர்சிம் அவர்கள் சொன்னது)
இந்தப் படத்தில் பணிபுரிந்த எல்லோரும் ஜாம்பவான்கள். சிவாஜி,கண்ணதாசன், எம் எஸ் வி, சந்திரபாபு, டி எம் எச், பி பி எஸ் என.
இயக்குநர் இவர்களோடு ஒப்பிட்டால் ஜுனியர். அதனால் டைட்டில் கார்டில் கடைசியில் தன் பெயரை எப்படி போடுவது என தயங்கி ஒரு உபாயம் செய்தார்.
சிவாஜி நடந்து வரும் ஆரம்ப காட்சியில் ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் stop என்னும் கை பலகையை காட்டுவார். அப்பொழுது இயக்கம் என அவர் பெயர் வரும்.
அதாவது இவர்களிடம் நான் வேலை வாங்கவில்லை. அவர்கள் செய்வதை சரியான அளவோடு நிறுத்துவதுதான் என் பணி என.//
கலக்கல் முக/நர்சிம்.
இது எனக்கு மட்டும் தான் பிடிச்ச படம்னு நினைச்சிட்டு இருந்தேன். இத்தனை பேருக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.
இதைவிட எனக்கு பிடிச்ச படம் ஆலயமணி. அந்த படம் இங்க எத்தனை பேருக்கு பிடிக்கும்னு தெரியலை.
// உள்ளத்தில் இருந்து.. said...
'ஆறு மனமே ஆறு' மற்றும் 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை' தத்துவ பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது.
//
cool...
//
அதே மாதிரி கொஞ்சம் சோகமான லவ் பாடல்கள வல்லவனுக்கு வல்லவன் படத்துல வர 'ஓர் ஆயிரம் பார்வையிலே' பாடல் மறக்க முடியாதது .
//
எனக்கு படம் ஞாபகமில்லை. வல்லவன் ஒருவன் ஜெயசங்கர் படம். இதுவும் ஜெயசங்கர் படமா?
அந்த பாட்டு அட்டகாசமான பாட்டு...
//
சிவாஜிய பத்தின பதிவென்பதால் அநேகமாக இது மிக நீண்ட தொடராக இருக்க போகுது :)
//
நிச்சயமா... ஆனா அந்த அளவுக்கு வீடியோ கிடைக்க மாட்டீங்குது :(
//தமிழினி..... said...
வெட்டி அண்ணே,6 மாசம் கழிச்சு ஒரு பதிவு போட்ருக்கேன்...வந்து பாருங்க...பார்த்துட்டு மறக்காம உங்க கருத்தை சொல்லவும்..//
வாம்மா.. எப்படி இருக்க?
வந்தாச்சு... பின்னூட்டம் போட்டாச்சு :)
//Divyapriya said...
//சரோஜா தேவி இந்த படத்துக்கு எத்தனை மை டப்பா காலி பண்ணாங்கனு எனக்கு ஒரு சந்தேகம்.//
டப்பா எல்லாம் இல்லை...ஒரு மை factory யே காலி பண்ணியிருப்பாங்க :))//
சான்ஸ் இருக்குமா... அப்படியே சில பல ரோஸ் பவுடர் ஃபாக்டரியும் :)
//ஜோ / Joe said...
அருமை!அருமை!!//
உங்களை தான் ரொம்ப நேரமா எதிர்பார்த்தேன் ஜோ :)
//SurveySan said...
ஜி.ராவின் பின்னூட்டங்கள் ப்ரமிப்பு.
பெரிய encylo-cinema-pedia போலருக்கே அவரு. super.
//அமைதியான நதியினிலே ஓடம் பாட்டு இருக்கே. அப்பப்பா... மெல்லிசை மன்னர் காலைத் தொட்டுக் கும்பிட்டுக்கனும்///
100%!//
சர்வேஸ்,
சிவாஜி, MSV, இசையரசி இவுங்கள்ல யாரை பத்தி பதிவு போட்டாலும் ஜிரா அங்க வந்து நிப்பாரு :)
//எனக்கு படம் ஞாபகமில்லை. வல்லவன் ஒருவன் ஜெயசங்கர் படம். இதுவும் ஜெயசங்கர் படமா?//
நீங்க சொல்ற பாட்டு "நான் மலரோடு தனியாக என் இங்கு வந்தேன்"
நான் சொல்ற படம் அசோகன் , RS மனோகர் படம். என் ப்ளோக்ல அந்த பாட்டோட youtube லிங்க் போட்ருக்கேன் பாருங்க.
//நடிப்பால நம்ம பசியைப் போக்க இன்னொருத்தர் வர்ர வரைக்கும் //
மறுபடியும் அவரே பொறந்து வந்தா தான் உண்டு.
சிவாஜி, MSV, இசையரசி இவுங்கள்ல யாரை பத்தி பதிவு போட்டாலும் ஜிரா அங்க வந்து நிப்பாரு :)//
நாங்களும் அப்படியே. அவர் எல்லாப் பாட்டையும் அலசிட்டாரு. அதனால் புதுசாச் சொல்ல ஒண்ணும் இல்லை எனக்கு.:)
அற்புதமான பதிவு.
ஆண்டவன் கட்டளை படம் பார்க்க எங்க அப்பா கிட்ட அனுமதி வாங்க சிரமப்பட்டது நினைவிருக்கிறது!!!!
சிவாஜி ஸ்பெஷல்னு போட்டுட்டீங்க. ரங்காராவ் ஸ்பெஷலும் போடுங்க.
இரசனையான பதிவு!
சிவாஜி, எம்.எஸ்.வி போன்ற சிங்கங்களை நேரில் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் உரையாடும் பாக்கியம் பெற்றவன் நான்.
ஆனால் வலைப் பதிவுகளில் அவர்களின் சாதனைகள் அவ்வளவாக கண்டு கொள்ளப்படவில்லை.
ஆனால் இது போன்ற பதிவுகள் என்னைப்போன்றவர்களின் ஆதங்கத்தை தீர்க்கக் கூடியதாக உள்ளது.
தொடரட்டும் இந்தப் பதிவு! நமது மனதிற்கினிய அந்தக் கலைஞர்களுக்கு இதுவே நாம் செய்யும் காணிக்கை.
// ஜோ / Joe said...
ஜிரா,
எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' -ணை இயக்கியதும் இதே கே.சங்கர் தானே? //
வாங்க ஜோ. ஒங்களத்தான் காணோம்னு நெனச்சேன்.
ஆமா. அதே சங்கர்தான். இவர்தான் ஆண்டவன் கட்டளை, கௌரி கல்யாணம் (திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்னு பாட்டு வருமே), மிருதங்கச் சக்கரவர்த்தின்னு நெறைய படங்கள் எடுத்தவரு. பெரும்பாலும் மெல்லிசை மன்னர்தான் இசை. மிருதங்கச் சக்கரவர்த்தி படத்தைப் பத்திச் சொல்லனுமா! ஆகா. அந்தப் படத்தைப் பாக்கனும் போல இருக்கு. எங்க கெடைக்குமோ!
Post a Comment