இந்த முறை இந்தியா வந்திருந்த போழுது இரண்டு முறை கோவை வந்திருந்தேன். கோவைல தான் செட்டில் ஆகனும்னு இருக்குற எண்ணம் அநேகமா நிறைவேறிடும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்.
கோவைல இருந்து சென்னைக்கு ட்ரெயின்ல வந்தேன். ரெயில் வே ஸ்டேஷன் முழுக்க சிகப்பு கலர் ட்ரெஸ் போட்ட மக்கள். எல்லாரும் சமயபுரம் போகறாங்களாம். ஸ்பெஷல் ட்ரெயினாம். அடப்பாவிகளா, எப்படிடா இப்படி தானா போய் ஏமாறீங்கனு கேக்கனும்னு தோனுச்சு. கேக்கல. எங்க அம்மாக்கிட்ட சொன்னா அந்த அம்மன் சக்தியான அம்மனு சொல்லுவாங்க. ராமநாராயணன் படத்துல வர அம்மனுக்கு இருக்குற சக்தி இருந்தா கூட ஒரு டேன்ஸை போட்டு கைல வெச்சிருக்குற சூலத்தால குத்திருக்கும். இப்படி நாப்பது அம்பது கார்ல சுத்த விட்டுருக்காது. சரி நமக்கு எதுக்கு அது.
ட்ரெயின்ல அப்பர் பர்த் தான் நமக்கு ஒத்து வரும். அந்த ட்ரெயின்ல பார்த்தா சைட்லயும் மூணு பர்த் வந்ததால நமக்கு மிடில் பர்த் வந்துடுச்சி. என்ன கொடுமை சரவணன்னு யோசிச்சிட்டு இருக்கும் போது ஒரு அக்கா (டாக்டருக்கு படிக்கறாங்க போல) மிடில் பர்த் தான் வேண்டும்னு சொல்லிட்டு இருந்தாங்க. அந்த குளறுபடில அவுங்களுக்கு அப்பர் பர்த் வந்துடுச்சு. நைசா பேசி அப்பர் பர்த் வாங்கியாச்சு. மிடில் பர்த்தை கூட மக்கள் விரும்புவாங்கனு அப்ப தான் தெரிஞ்சிக்கிட்டேன்.
சென்னைக்கு காலைல வந்து சேர்ந்தேன். வீட்டு அம்மணிக்கு போன் பண்ணி KK நகருக்கு பஸ் நம்பர் கேட்டு ஏறி உட்கார்ந்தேன் (11Dனு நினைக்கிறேன்). பார்த்தா அது பெண்கள் உட்கார சீட்டாம். அந்த சீட்டுக்கு மேல கூட பெண்கள்னு எழுதல. தெரியாம நானும் போய் உட்கார்ந்துட்டேன். உடனே அங்க வந்த பொம்பளை மெட்ராஸ் பாஷைல “பையை வெச்சிக்கிட்டு வந்து லேடிஸ் சீட்ல உட்காருது பாரு. போய் அந்த பக்கம் உக்காரு” அப்படினு ரொம்ப மரியாதையா சொன்னாங்க. இத்தனைக்கும் அந்த சீட்டுக்கு முன்னாடி சீட்ல இடம் இருந்துச்சு.
சென்னைல யாரும் மனஷனை மனஷனா மதிக்க மாட்டாங்க போல. திடீர்னு எல்லார் தலையிலும் கொம்பு இருக்கற மாதிரி தெரிஞ்சுது.
..................
விசா இண்டர்வியூக்கு பெங்களூர்ல இருந்து ஷதாப்தி ட்ரெயின்ல சென்னைக்கு வந்தேன். உள்ளேயே ஹிக்கின்போத்தம்ஸ்ல கொஞ்சம் புக்கை பொறுக்கிட்டு வெளிய வந்தேன். டிசம்பர் 5 ராத்திரி. போலிஸ் கெடுபிடி அதிகமா இருந்தது. அந்த நேரம் நம்ம தலை கைப்ஸ் வேற ஃபோன் பண்ணி என்னப்பா இன்னைக்கு சென்னை புறப்படறாயானு கேட்டாரு. ஆபிஸ் விஷயமா வரதால கொஞ்சம் சீக்கிரமாவே புறப்பட்டு வந்தாச்சு.
முதல் முறையா அப்ப தான் சென்னை செண்டரலுக்கு வந்திருந்தேன். சரி கம்பெனி காசு தரும், அதனால வீட்டுக்கு ஆட்டோலயே போகலாம்னு முடிவு பண்ணிட்டு ஸ்டேஷனை விட்டு வெளிய வந்தேன். ப்ரீ பெய்ட் ஆட்டோல வர சொல்லி மாமனார் சொல்லியிருந்தாரு. நூறு இல்லைனா நூத்தி இருபது ரூபாய் கேப்பாங்கனு சொல்லியிருந்தாரு.
அன்னைக்கு போலிஸ் கெடு பிடியால அங்க எதுவும் ஆட்டோ இல்லை. கொஞ்சம் தள்ளி தான் ஆட்டோ எல்லாம் நிறுத்திருந்தாங்க. நாம வேற காதுல ஐ பாட், கைல ஹிக்கின்போத்தம்ஸ் பேக், பின்னாடி ஒரு ஷொல்டர் பேக் அதுல சைட்ல ஒரு வாட்டர் பாட்டில் எல்லாம் வெச்சிருந்தோம்.
ஆட்டோவா சார்னு ஒரு சின்ன பையன் வந்து கேட்டான். நானும், ஆமாம் KK Nagar, நெசப்பாக்கம்னு சொன்னேன். ஃபோர் ஹண்ட்ரட் சார்னு சொன்னான். எனக்கு ஒரே அதிர்ச்சி. இரண்டு மடங்கு கேட்டா கூட சரினு ஏமாத்தரதுலயும் ஒரு நியாய தர்மம் பாக்கறாங்கனு பார்க்கலாம். இது அநியாய கொள்ளையா தானே இருக்குது. நான் நூறு ரூபாய் தரேனு சொன்னேன். மனசுக்குள்ளே ஏதோ பேசிட்டு போயிட்டான். அப்பறம் விசாரிச்சி பஸ் பிடிச்சி போனேன். அஞ்சு ரூபாய் தான் செலவு.
..................
திங்க கிழமை காலைல விசா இண்டர்வியூ இருந்தது. KK நகர்ல இருந்து US Consulateக்கு நூறு ரூபாய் கேட்டாங்க. நானும் எவ்வளவோ பேரம் பேசி எண்பது ரூபாய்ல முடிச்சேன். அறுபது ரூபாய்னு சொல்லி தான் வீட்ல இருந்து அனுப்பினாங்க.
விசா கிடைச்சி வெளிய வந்தவுடனே ஆட்டோ இருந்தது.
“விசா கிடைச்சுதா சார்” ஆட்டோக்காரர்
“கிடைச்சிடுச்சுங்க”
“கங்க்ராட்ஸ் சார்”
“நன்றிங்க”
“எங்க சார் போகனும்?”
“KK நகர்”
“ஃபைவ் ஹண்ட்ரட் சார்”
“என்னது?”
“என்னங்க சார் டாலர்ல சம்பாதிக்க போறீங்க. பத்து டாலர் தானே சார்”
“நான் வரும் போது எண்பது ரூபாய் தான் கொடுத்தேன். வேணும்னா நூறு ரூபாய் தரேன்”
“இல்ல சார்”
வீட்ல வேற பாப்பாவை விட்டுட்டு நானும் மனைவியும் வந்திருந்தோம். என்ன பண்ணுதோனு தெரியலைனு ஒரு பயம் வேற. பவுடர் பால் கொடுத்து பழக்கமில்லை. அவுங்க பாட்டி தான் பார்த்துக்கிட்டாங்க. உடனே வீட்டு அம்மணியை கூப்பிட்டு பக்கத்துல இருக்கற பஸ் ஸ்டாப்புக்கு போனேன். ஐடி கார்ட், டை எல்லாம் எடுத்து பைல போட்டேன். சட்டை கையை மடிச்சி விட்டு, டக் இன் பண்ண சட்டையை வெளியே எடுத்து விட்டேன். தலை முடியை கொஞ்சம் கலைச்சி விட்டேன். முதல்ல வந்த ஆட்டோவை நிறுத்தி KK நகர்னு சொன்னேன்.
”ஹண்ட்ரட் ருப்பீஸ் சார்”
“இல்லைங்க நான் வரும் போது எண்பது ரூபாய் தான் கொடுத்தேன். எண்பதுனா சொல்லுங்க போகலாம்”
”சரிங்க சார். ஏறுங்க”
...................
நமக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே. மொழி தெரியாதவங்க சென்னை வந்தா என்ன பண்ணுவாங்க? Chennai is hellனு அவுங்க சொல்றது எனக்கு நியாயமாத்தான் பட்டுது. தமிழ் பேசறாங்கனு ஒரே காரணத்தால இவனுங்க ஏமாத்தறதை என்னால ஏத்துக்க முடியல. பெங்களூர் இஸ் பெட்டர். கோயமுத்தூர் இஸ் பெஸ்ட்.
52 comments:
///Chennai is hellனு அவுங்க சொல்றது எனக்கு நியாயமாத்தான் பட்டுது. //
:(
chennai hones your negotiation skills. :)
/என்னங்க சார் டாலர்ல சம்பாதிக்க போறீங்க. பத்து டாலர் தானே சார்”//
ஓ! அப்ப விசா கிடைக்கலைன்னு சொல்லியிருந்தா 50ரூவா சொல்லியிருப்பாங்களோ!
//இவனுங்க ஏமாத்தறதை என்னால ஏத்துக்க முடியல. பெங்களூர் இஸ் பெட்டர். கொயமுத்தூர் இஸ் பெஸ்ட்.//
அண்ணாத்தை, கோயமுத்தூர்ல ஆட்டோ ஏறுனதே இல்லீஙகளா?
தல,
ஆட்டோவை பொறுத்தவரையில் ஹைதை பெஸ்ட், பெங்களூரு பெட்டர் சென்னை.. ம்ஹூம்..
// SurveySan said...
///Chennai is hellனு அவுங்க சொல்றது எனக்கு நியாயமாத்தான் பட்டுது. //
:(
chennai hones your negotiation skills. :)
//
தல,
எவ்வளவு பேசினாலும் இறங்கி வராம அட்டகாசம் பண்றாங்க. காலங்காத்தால பஸ்ல இப்படி திட்டு வாங்கனதும் அந்த ஊர் மேல ஒரு வெறுப்பு வர காரணம் :(
// நாமக்கல் சிபி said...
/என்னங்க சார் டாலர்ல சம்பாதிக்க போறீங்க. பத்து டாலர் தானே சார்”//
ஓ! அப்ப விசா கிடைக்கலைன்னு சொல்லியிருந்தா 50ரூவா சொல்லியிருப்பாங்களோ!//
அப்படி இருந்தா விசா கிடைக்கலனு சொல்லியிருப்பேனே... நியாயமான விலைல போகறதுல எனக்கு கஷ்டமில்லை. ஆனா இப்படி பேசும் போது தான் கோபம் வருது :)
//நந்தவனத்தான் said...
//இவனுங்க ஏமாத்தறதை என்னால ஏத்துக்க முடியல. பெங்களூர் இஸ் பெட்டர். கொயமுத்தூர் இஸ் பெஸ்ட்.//
அண்ணாத்தை, கோயமுத்தூர்ல ஆட்டோ ஏறுனதே இல்லீஙகளா?
//
ஹா ஹா ஹா...
இப்ப சமீபத்துல ஏறனதில்லை. ஆனா காலேஜ் படிக்கும் போது அந்த நாலு வருஷத்துல நிறைய தடவை போயிருக்கேன். அதுவுமில்லாமல் இப்படி மரியாதை இல்லாம யாரும் பேச மாட்டாங்க.
// கார்க்கி said...
தல,
ஆட்டோவை பொறுத்தவரையில் ஹைதை பெஸ்ட், பெங்களூரு பெட்டர் சென்னை.. ம்ஹூம்..
11:42 PM//
ஹைத்ராபாத் நிச்சயம் சூப்பர் தான். அங்க ஒரு வாரம் வந்து தங்கியிருக்கேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எல்லா இடமும் ஆட்டோல தான் போனோம்...
பேரடைஸ், பாவர்ச்சி பிரியாணியும் சூப்பரா இருந்தது :)
இங்கேயே இருந்துவிட்டால் வேற மாதிரி அனுபவங்கள் கிடைக்கும்.
வெளியூர் போய் விட்டு வந்தால் எல்லாமே வித்தியாசம்தான்.
கொடுக்க முடிந்தால்(அதாவது சரியான ஃபேர்) ஆட்டோ.
இல்லாவிட்டால் நடைதான்.
அதுவும் பக்கத்தில இருக்கிற இடங்களோட வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும்.
வெட்டி உங்களை நான் கண்டிப்பாக பாராட்டியே தீரணும்..
ஆட்டோக்காரர்கள் கேட்கும் பணத்தை பேரம் பேசாமல் அப்படியே எடுத்து நீட்டி நீட்டி த்தான் அவர்களும் ஆளை பார்த்தவுடன் ஒரு ரேட் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
எனக்கு ஆட்டோக்காரர்களிடம் போய் நின்று எவ்வளவு என்று கேட்கவே யோசனையாக இருக்கும்..நம்ம டெம்பர்'க்கு அவன் எக்கச்சக்கமாக கேட்க.. அங்கேயே கோபம் வந்து பெரிய லடாய் ஆயிடுமே..ன்னு தவிர்க்கவே பார்ப்பேன்... :)
கோபம் என்பது ஆட்டோக்காரர்களிடம் இருப்பதை விட பேரம் பேச கெளரவம் பார்த்து நம் மக்கள் கொடுத்து கொடுத்து இப்படி ஆக்கிவிட்டார்களே என்று இவர்கள் மீது கோபம் திரும்பும்...
சென்னையை தவிர மற்ற இடங்களில் இந்த அளவு மோசம் இல்லை..
//அதுவுமில்லாமல் இப்படி மரியாதை இல்லாம யாரும் பேச மாட்டாங்க.//
அங்க ஓவர் மரியாதையாக இருக்கும்.. ஒவ்வொரு வார்த்தை முடிவிலும் "ங்க" இருக்கும்.. :)
//வல்லிசிம்ஹன் said...
இங்கேயே இருந்துவிட்டால் வேற மாதிரி அனுபவங்கள் கிடைக்கும்.
வெளியூர் போய் விட்டு வந்தால் எல்லாமே வித்தியாசம்தான்.
கொடுக்க முடிந்தால்(அதாவது சரியான ஃபேர்) ஆட்டோ.
இல்லாவிட்டால் நடைதான்.
அதுவும் பக்கத்தில இருக்கிற இடங்களோட வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும்.//
கண்டிப்பாம்மா. நிச்சயம் சென்னை மாதிரி பெருநகரங்களில் பல அனுபவங்கள் கிடைக்கும். ஆனா எனக்கு கிடைச்ச அனுபவத்தை நான் எழுதியிருக்கேன்.
சென்னைல ஆட்டோல போனா சொத்து சீக்கிரம் கரைஞ்சிடும். அதுவும் கொஞ்சம் டீசண்டா ட்ரெஸ் பண்ணிருந்தோம் ஆட்டம் க்ளோஸ். MTC தாங்க பெஸ்ட். ஆனா பீக்ஹவர்ல அதுவும் ரப்சர் தான்:)
//கவிதா | Kavitha said...
வெட்டி உங்களை நான் கண்டிப்பாக பாராட்டியே தீரணும்..
ஆட்டோக்காரர்கள் கேட்கும் பணத்தை பேரம் பேசாமல் அப்படியே எடுத்து நீட்டி நீட்டி த்தான் அவர்களும் ஆளை பார்த்தவுடன் ஒரு ரேட் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
எனக்கு ஆட்டோக்காரர்களிடம் போய் நின்று எவ்வளவு என்று கேட்கவே யோசனையாக இருக்கும்..நம்ம டெம்பர்'க்கு அவன் எக்கச்சக்கமாக கேட்க.. அங்கேயே கோபம் வந்து பெரிய லடாய் ஆயிடுமே..ன்னு தவிர்க்கவே பார்ப்பேன்... :)
கோபம் என்பது ஆட்டோக்காரர்களிடம் இருப்பதை விட பேரம் பேச கெளரவம் பார்த்து நம் மக்கள் கொடுத்து கொடுத்து இப்படி ஆக்கிவிட்டார்களே என்று இவர்கள் மீது கோபம் திரும்பும்...
சென்னையை தவிர மற்ற இடங்களில் இந்த அளவு மோசம் இல்லை..//
ரொம்ப நன்றிக்கா.
சின்ன வயசுல இருந்து அப்படியே வளர்ந்துட்டேன். தேவையில்லாமல் பணம் செலவு செய்வது பிடிக்காது. அதே போல் இந்த மாதிரி நம்ம கைல காசு இருக்குனு கொடுத்துட்டா அது இல்லாதவங்களையும் பாதிக்கும்னு ஒரு எண்ணம்.
கம்பெனி காசு கொடுக்குது ரீ இம்பர்ஸ் பண்ணிடலாம்னு நான் ஏறிடலாம். ஆனா நாளைக்கு வெளில இருந்து வரவனும் இதே மாதிரி ஏமாற்றப்படுவார்கள்னு ஒரு எண்ணம்.
இனிமே நீங்களும் ஆட்டோ ஏறினால் கூச்சப்படாம பேரம் பேசி ஏறுங்க. அப்ப தான் கொஞ்சமாவது குறைப்பாங்க.
//கவிதா | Kavitha said...
//அதுவுமில்லாமல் இப்படி மரியாதை இல்லாம யாரும் பேச மாட்டாங்க.//
அங்க ஓவர் மரியாதையாக இருக்கும்.. ஒவ்வொரு வார்த்தை முடிவிலும் "ங்க" இருக்கும்.. :)
12:31 AM//
ஆமாங்க அக்காங்க :)
/ஆமாங்க அக்காங்க :)//
:))))))
வெட்டிங்க'ங்க....நன்றிங்க'ங்க.!!
//இனிமே நீங்களும் ஆட்டோ ஏறினால் கூச்சப்படாம பேரம் பேசி ஏறுங்க. அப்ப தான் கொஞ்சமாவது குறைப்பாங்க.//
நிங்க வேற கூச்சமெல்லாம் இல்ல நான் குறைக்கிற ரேட்'கு அவன் என்னை கண்டிப்பாக திட்டடுவான்.. திருப்பி அவனை நான் திட்டனும்' கண்டிப்பாக சண்டையா ஆயிடும்..
அதான் எதுக்குடா இவங்கக்கூட பிரச்சனைன்னு வந்துடுவேன்..!! :)
//Chennai is hellனு அவுங்க சொல்றது எனக்கு நியாயமாத்தான் பட்டுது//
நீங்க சொல்றது நியாயம் தான். ஆனா நாம பார்க்கற வேலைக்கு, தமிழ்நாட்டுக்கு வரனும்ன்னா சென்னை க்குத்தானே வந்தாகனும்....
:((
// கோயமுத்தூர் இஸ் பெஸ்ட்.
ha! when was the last time you took an auto in coimbatore? Try catching an auto from Airport to Sitra - they would charge you nothing less than 50 bucks. I usually walk rather catching an auto. High prices are quite high in other places as well.
Bangalore is getting equally worse like Chennai. You can't trust any meters.
No matter which city it is, bus is always better.
கல்க்கல் பதிவுங்க. :)
சென்னை வந்த புதிதில் என் ப்ரெண்ட் வீட்டில் இருந்து என் காலேஜுக்கு 100 கொடுத்தேன். இப்ப கொடுக்குறது 50.
:)
புது ஊரில்லையா... போகப் போக பழகிடும் ;)
Coimbatore....Same distance Rs 1000... But they will ask you in polite way....So coimbatore bus is the best ..cheap and realllllly better.
நீங்க அதிர்ஷ்டக்காரன் என்கிட்டே எம்பஸி'ல இருந்த போலீஸ் அங்கிள் விசா என்ன ஆச்சுன்னு கேட்டாரு.... நானும் நம்பி ஸ்டாம்ப் ஆயிடுச்சுன்னு சொன்னேன்.... சரி உங்க சந்தோசத்துல நாங்க ஒரு அஞ்சு போலீஸ் காரங்க சாப்டுக்குறோம் ஒரு ஐநூறு தாங்கன்னு சொன்னாரு....
உண்மையில், குறிப்பிட்ட தூரத்திற்கு சென்னையில் வாங்குவதை விட, கோவையில் மிக அதிகமாகவே கேட்கிறார்கள். ஆனால், மரியாதையாகக் கேட்பதால் நமக்கு உறுத்தலாகத் தெரிவதில்லை.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வருகையில் பல ஆட்டோ/கால் டாக்ஸி ஓட்டுனர்கள் நம்மைத் தொடர்ந்து "ஆட்டோ வேணுமா?", "டாக்ஸி வேணுமா?" என்று கேட்டுக் கொண்டே தொடருவார்கள். நமக்குக் காதுகளே இல்லை என்பது போல நகர்ந்து விடுவது மிக்க நலம். 'ப்ரீ பெய்ட்' ஆட்டோவில் செல்வதை விட இரண்டு மடங்கு அதிகம் கேட்கிறார்கள். எப்படி இருந்தாலும் 'கோயமுத்தூர் இஸ் பெஸ்ட்'. :-)
சூப்பர் ஆட்டோ அனுபவம் தான்...சென்னையில இப்படி எல்லாம் பண்ணா தான் பிழைக்க முடியும் போல இருக்கு...ஆனா, கோவைல நீங்க ஆட்டோல போயிருக்கீங்களா? ஆறு கிலோமீட்டருக்கே 100 ரூபா கேப்பாங்க...
பெங்களூர் ஆட்டோவ பத்தி நானும் ஒரு பதிவு போட்ருக்கேன், படிச்சு பாருங்கண்ணா...
****
கோபம் என்பது ஆட்டோக்காரர்களிடம் இருப்பதை விட பேரம் பேச கெளரவம் பார்த்து நம் மக்கள் கொடுத்து கொடுத்து இப்படி ஆக்கிவிட்டார்களே என்று இவர்கள் மீது கோபம் திரும்பும்...
****
என் மேலயா ?
இதுக்கு எதாவது திட்டினா கம்யூனிசம் பேச ஆரம்பிச்சுடுவேன் சொல்லிட்டேன் !
நான் நெதெர்லாந்துல இருக்கேன். ரெண்டு மாசம் முன்னாடி திடீர்னு இந்தியா வரலாம்ன்னு முடிவு பண்ணி கிளம்பினோம். இங்கேந்து நேரா சென்னை வரணும்னா ப்ருச்செல்ஸ்லேந்து jet airways இருக்கு. விலை எவ்வளவுன்னு பாத்தேன். 1100 யூரோ காட்டிச்சு. இது எல்லாம் கட்டுப்படி ஆகாதுன்னு ட்ரைன்ல பிராங்க்பர்ட் போயிட்டு அங்கேந்து ப்ளைட் புடிக்கலாம்ன்னு தேடினேன். ஒரு connection 800 யூரோவுக்கு கிடைச்சது. என்ன கனக்க்ஷன்ன்னு பாத்தா
frankfurt - brussels (lufthansa)
brussels - chennai ( அதே ஜெட் airways. )
இதுக்கு யார் கிட்டயும் கேள்வி கூட கேக்க முடியாது. நம்ப கேக்கறதும் கிடையாது !
People see what they want to see!!
//கோவைல தான் செட்டில் ஆகனும்னு இருக்குற எண்ணம் அநேகமா நிறைவேறிடும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்//
அப்படியே ஆகட்டும்! ததாஸ்து! ஆமென்! :)
கோவைக்கு வாழ்த்துக்கள்! :)
//Chennai is hellனு//
என்ன தான் இருந்தாலும், உங்க புகுந்த ஊரை நீங்க இப்படிப் பேசலாமா? :))
வலது காலை எடுத்து வச்சி உள்ள வாங்க! பாபா சொன்ன அட்வைஸ் ரொம்பவே உதவும்! :)
//Chennai is hellனு//
Chennai Autos are Hell என்பது சரி!
Chennai is not hell! It is yet another waterless well! :)
நீங்க முன்பு சொன்னதே தான் பாலாஜி!
சில சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் மாலில் அட்டகாசம் கெளப்புறாங்க என்பதற்காக எப்படி ஒட்டு மொத்த சாஃப்ட்வேர் துறையையும் சொல்ல முடியாதோ...
அதே போல, ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் செய்கைக்காக ஊரையே திட்டுவதும் கூடாது! :)
பட், மனசுல ஒரு எண்ணம் விழுந்துரிச்சின்னா, அது சரியோ தவறோ, சீக்கிரம் போகாது இல்லையா? அதுனால சென்னை பற்றிய எண்ணம் விழாமப் பாத்துக்குங்க! ஆட்டோக்கள் இல்லாத சிங்காரச் சென்னை வேற வழிகளில் உங்களுக்குப் பிடித்துப் போகும்! :)
இந்தப் பதிவுக்கு ஆட்டோ ட்ரைவர்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன! :)))
மலேசியாவில் கார் டிரைவர் கூட சண்டை போட்ட சிபி அண்ணன் இந்த நேரம் பாத்து எங்கே போனாரு? :)
// வித்யா said...
சென்னைல ஆட்டோல போனா சொத்து சீக்கிரம் கரைஞ்சிடும். அதுவும் கொஞ்சம் டீசண்டா ட்ரெஸ் பண்ணிருந்தோம் ஆட்டம் க்ளோஸ். MTC தாங்க பெஸ்ட். ஆனா பீக்ஹவர்ல அதுவும் ரப்சர் தான்:)//
சொத்து இருந்தா கரையும். இல்லாதவங்க என்ன பண்றது :)
ஆமாங்க பஸ்ல முதல் முறை திட்டு வாங்கனதை தவிர வேற எதுவும் பிரச்சனையில்லை :)
//
கவிதா | Kavitha said...
/ஆமாங்க அக்காங்க :)//
:))))))
வெட்டிங்க'ங்க....நன்றிங்க'ங்க.!!//
நன்றிங்க’ங்கக்கு நன்றிங்கக்கா :)
//கவிதா | Kavitha said...
//இனிமே நீங்களும் ஆட்டோ ஏறினால் கூச்சப்படாம பேரம் பேசி ஏறுங்க. அப்ப தான் கொஞ்சமாவது குறைப்பாங்க.//
நிங்க வேற கூச்சமெல்லாம் இல்ல நான் குறைக்கிற ரேட்'கு அவன் என்னை கண்டிப்பாக திட்டடுவான்.. திருப்பி அவனை நான் திட்டனும்' கண்டிப்பாக சண்டையா ஆயிடும்..
அதான் எதுக்குடா இவங்கக்கூட பிரச்சனைன்னு வந்துடுவேன்..!! :)
1:30 AM//
ஆஹா. அவுங்க வயித்தல அடிக்கற ரேட்டுக்கும் பேசக்கூடாது. அதான் நான் முன்னாடியே யாரையாவது ஃபோன்ல கேட்டுக்குவேன். அப்பறம் பேரம் பேச வசதியா இருக்கும் :)
// Kathir said...
//Chennai is hellனு அவுங்க சொல்றது எனக்கு நியாயமாத்தான் பட்டுது//
நீங்க சொல்றது நியாயம் தான். ஆனா நாம பார்க்கற வேலைக்கு, தமிழ்நாட்டுக்கு வரனும்ன்னா சென்னை க்குத்தானே வந்தாகனும்....
:((//
ஆமாம் கதிர். அதான் பிரச்சனை.
Tier 2 சிட்டில வந்துடுச்சினா போய் செட்டில் ஆகிடலாம்...
//Prakash G.R. said...
// கோயமுத்தூர் இஸ் பெஸ்ட்.
ha! when was the last time you took an auto in coimbatore? Try catching an auto from Airport to Sitra - they would charge you nothing less than 50 bucks. I usually walk rather catching an auto. High prices are quite high in other places as well.
Bangalore is getting equally worse like Chennai. You can't trust any meters.
No matter which city it is, bus is always better.
2:41 AM//
பிரச்சனை அதிக விலை கேக்கறது மட்டுமில்லை. அசிங்கமா திட்றதும் தான் :(
// Karthik said...
கல்க்கல் பதிவுங்க. :)
சென்னை வந்த புதிதில் என் ப்ரெண்ட் வீட்டில் இருந்து என் காலேஜுக்கு 100 கொடுத்தேன். இப்ப கொடுக்குறது 50.
:)//
மிக்க நன்றி கார்த்திக்... விவரம் தெரிஞ்சவங்க பொழைச்சிக்கலாம் :)
// Boston Bala said...
புது ஊரில்லையா... போகப் போக பழகிடும் ;)//
சொந்த ஊர் இல்லையா? அதான் :)
போகறதை குறைச்சிக்கினும்னு தான் பாக்கறேன் ;)
//Anonymous said...
Coimbatore....Same distance Rs 1000... But they will ask you in polite way....So coimbatore bus is the best ..cheap and realllllly better.//
ரைட்டு :)
// கார்த்தி said...
நீங்க அதிர்ஷ்டக்காரன் என்கிட்டே எம்பஸி'ல இருந்த போலீஸ் அங்கிள் விசா என்ன ஆச்சுன்னு கேட்டாரு.... நானும் நம்பி ஸ்டாம்ப் ஆயிடுச்சுன்னு சொன்னேன்.... சரி உங்க சந்தோசத்துல நாங்க ஒரு அஞ்சு போலீஸ் காரங்க சாப்டுக்குறோம் ஒரு ஐநூறு தாங்கன்னு சொன்னாரு..//
அடப்பாவிகளா...
இது அதைவிட மோசமா இருக்கே :(
//நிலாக்காலம் said...
உண்மையில், குறிப்பிட்ட தூரத்திற்கு சென்னையில் வாங்குவதை விட, கோவையில் மிக அதிகமாகவே கேட்கிறார்கள். ஆனால், மரியாதையாகக் கேட்பதால் நமக்கு உறுத்தலாகத் தெரிவதில்லை.
//
இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனா ஏற்போர்ட்ல இருந்து ப்ரிபெய்ட் ஆட்டோ இருக்குமே.
//சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வருகையில் பல ஆட்டோ/கால் டாக்ஸி ஓட்டுனர்கள் நம்மைத் தொடர்ந்து "ஆட்டோ வேணுமா?", "டாக்ஸி வேணுமா?" என்று கேட்டுக் கொண்டே தொடருவார்கள். நமக்குக் காதுகளே இல்லை என்பது போல நகர்ந்து விடுவது மிக்க நலம். 'ப்ரீ பெய்ட்' ஆட்டோவில் செல்வதை விட இரண்டு மடங்கு அதிகம் கேட்கிறார்கள். எப்படி இருந்தாலும் 'கோயமுத்தூர் இஸ் பெஸ்ட்'. :-)//
ரைட்டு :)
//Divyapriya said...
சூப்பர் ஆட்டோ அனுபவம் தான்...சென்னையில இப்படி எல்லாம் பண்ணா தான் பிழைக்க முடியும் போல இருக்கு...ஆனா, கோவைல நீங்க ஆட்டோல போயிருக்கீங்களா? ஆறு கிலோமீட்டருக்கே 100 ரூபா கேப்பாங்க...
//
ஹ்ம்ம்ம்...
ஆனா மரியாதையா பேசும் போது நாம கொஞ்சம் சேஃபா இருக்குற மாதிரியாவது இருக்கோம். அங்க அது இல்லை :(
//Divyapriya said...
பெங்களூர் ஆட்டோவ பத்தி நானும் ஒரு பதிவு போட்ருக்கேன், படிச்சு பாருங்கண்ணா...//
இதோ வரேன்மா...
// மணிகண்டன் said...
****
கோபம் என்பது ஆட்டோக்காரர்களிடம் இருப்பதை விட பேரம் பேச கெளரவம் பார்த்து நம் மக்கள் கொடுத்து கொடுத்து இப்படி ஆக்கிவிட்டார்களே என்று இவர்கள் மீது கோபம் திரும்பும்...
****
என் மேலயா ?
இதுக்கு எதாவது திட்டினா கம்யூனிசம் பேச ஆரம்பிச்சுடுவேன் சொல்லிட்டேன் !
நான் நெதெர்லாந்துல இருக்கேன். ரெண்டு மாசம் முன்னாடி திடீர்னு இந்தியா வரலாம்ன்னு முடிவு பண்ணி கிளம்பினோம். இங்கேந்து நேரா சென்னை வரணும்னா ப்ருச்செல்ஸ்லேந்து jet airways இருக்கு. விலை எவ்வளவுன்னு பாத்தேன். 1100 யூரோ காட்டிச்சு. இது எல்லாம் கட்டுப்படி ஆகாதுன்னு ட்ரைன்ல பிராங்க்பர்ட் போயிட்டு அங்கேந்து ப்ளைட் புடிக்கலாம்ன்னு தேடினேன். ஒரு connection 800 யூரோவுக்கு கிடைச்சது. என்ன கனக்க்ஷன்ன்னு பாத்தா
frankfurt - brussels (lufthansa)
brussels - chennai ( அதே ஜெட் airways. )
இதுக்கு யார் கிட்டயும் கேள்வி கூட கேக்க முடியாது. நம்ப கேக்கறதும் கிடையாது !//
எல்லா மக்களும் தினமும் பயன்படுத்தற ஒரு விஷயத்துக்கும் நீங்க சொல்றதுக்கும் நிறைய வித்யாசம் இருக்குங்க :)
அரிசி விலை ஏறி போயிடுச்சினு சொன்னா நீங்க பீசா விலையும் ஏறிடுச்சி அதை என்ன சொல்றீங்கனு கேக்கற மாதிரி இருக்குது.
//CVR said...
People see what they want to see!!
//
:))
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கோவைல தான் செட்டில் ஆகனும்னு இருக்குற எண்ணம் அநேகமா நிறைவேறிடும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்//
அப்படியே ஆகட்டும்! ததாஸ்து! ஆமென்! :)
கோவைக்கு வாழ்த்துக்கள்! :)
//
மிக்க நன்றி...
//
//Chennai is hellனு//
என்ன தான் இருந்தாலும், உங்க புகுந்த ஊரை நீங்க இப்படிப் பேசலாமா? :))
வலது காலை எடுத்து வச்சி உள்ள வாங்க! பாபா சொன்ன அட்வைஸ் ரொம்பவே உதவும்! :)
//
யாரோ சொல்லி பின்னூட்டம் போட்ட மாதிரி இருக்குது ;)
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//Chennai is hellனு//
Chennai Autos are Hell என்பது சரி!
Chennai is not hell! It is yet another waterless well! :)
நீங்க முன்பு சொன்னதே தான் பாலாஜி!
சில சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் மாலில் அட்டகாசம் கெளப்புறாங்க என்பதற்காக எப்படி ஒட்டு மொத்த சாஃப்ட்வேர் துறையையும் சொல்ல முடியாதோ...
அதே போல, ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் செய்கைக்காக ஊரையே திட்டுவதும் கூடாது! :)
பட், மனசுல ஒரு எண்ணம் விழுந்துரிச்சின்னா, அது சரியோ தவறோ, சீக்கிரம் போகாது இல்லையா? அதுனால சென்னை பற்றிய எண்ணம் விழாமப் பாத்துக்குங்க! ஆட்டோக்கள் இல்லாத சிங்காரச் சென்னை வேற வழிகளில் உங்களுக்குப் பிடித்துப் போகும்! :)
இந்தப் பதிவுக்கு ஆட்டோ ட்ரைவர்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன! :)))
//
கண்டிப்பா இந்த ஒரு சில சம்பவங்களை வெச்சி மட்டும் ஒரு சிட்டியை மதிப்பிட முடியாது. ஆனா எனக்கு நடந்த அனுபவங்களை வெச்சி தான் நான் ஒரு முடிவுக்கு வர முடியும். ஒரு வேளை எனக்கு சென்னை ஒத்துவராதுனு நினைக்கிறேன்.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
மலேசியாவில் கார் டிரைவர் கூட சண்டை போட்ட சிபி அண்ணன் இந்த நேரம் பாத்து எங்கே போனாரு? :)//
அண்ணன் ரொம்ப பிஸி...
என்ன இருந்தாலும் கோயமுத்தூர் தாங்க பெஸ்ட். (ஆனா எனக்கு இந்த ஆட்டோ அனுபவம் எல்லாம் சுத்தமா இல்லே)... என்னோட சொந்த ஊருங்கரதுனாலே நான் எப்பவுமே கோயமுத்தூர் தான் பெஸ்ட்னு சொல்லுவேன்.
//சென்னைல யாரும் மனஷனை மனஷனா மதிக்க மாட்டாங்க போல. திடீர்னு எல்லார் தலையிலும் கொம்பு இருக்கற மாதிரி தெரிஞ்சுது.
//
//Chennai is hellனு அவுங்க சொல்றது எனக்கு நியாயமாத்தான் பட்டுது. தமிழ் பேசறாங்கனு ஒரே காரணத்தால இவனுங்க ஏமாத்தறதை என்னால ஏத்துக்க முடியல. பெங்களூர் இஸ் பெட்டர். கோயமுத்தூர் இஸ் பெஸ்ட். //
டைரி குறிப்புகள் படிக்கிறதுக்கு நல்லாருந்துச்சு. ஆனா மேல இருக்கற வரிகள் படிக்கிறதுக்கு கொஞ்சம் நெருடலா இருக்குது. ஒரு படிக்காத பொம்பளை பேசுனதை வச்சியும் ஆட்டோ காரங்க ஏமாத்தறதை வச்சியும் சென்னையில வாழறவங்க யாரும் மனுஷனை மனுஷனா மதிக்கறதில்லைன்னும் சென்னை நகரம் ஒரு நரகம்னு முடிவுக்கு வர்றது எனக்கு அவ்வளவு சரியாப் படலை. அதுவும் மக்களை ரொம்ப அப்சர்வ் பண்ணி கதையெல்லாம் எழுதற உங்க கிட்டேருந்து இது வரும்னு எதிர்பார்க்கலை. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஸ்பிரிட் இருக்குது...அது என்னன்னு அங்கே வாழ்ந்து பாத்தா தான் தெரியும். இந்த ஊரு நல்ல ஊரா இல்லை இந்த ஊர் நல்லா ஊராங்கிற விவாதம் எப்பவும் முடியடையறதில்லை. சென்னையா பெங்களூரான்னு ஒரு விவாதம் ஆங்கில வலைப்பூ உலகில் 2005லேருந்து இன்னும் கூட போயிட்டு இருக்கு. வேணா படிச்சிப் பாருங்க.
Chennai Vs Bangalore
சென்னைவாசிங்க பெங்களூரைத் திட்டறதும், பெங்களூரு காரங்க சென்னையைத் திட்டறதும் என்னிக்கும் முடியாது...ஆனா என்னை பொறுத்த வரைக்கும் ரெண்டு ஊருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டி இருக்கத் தான் செய்யுது. நீங்க ஆட்டோ காரங்களைப் பத்திச் சொன்ன விஷயங்களை நான் பெங்களூருலயே அனுபவிச்சிருக்கேன். இதுக்கு என்ன சொல்றீங்க? நான் பொறந்த ஊரு பெங்களூருன்னாலும் 2007லேருந்து 2008 கடைசி வரை நான் பெங்களூரில் வாழ்ந்த காலம் தான் நான் பெங்களூரில் உண்மையா வாழ்ந்த காலம். அதன் அடிப்படையில் சொல்றேன் - பெங்களூருக்குச் சாலை வசதிகள், போக்குவரத்து நெரிசல் அப்படிங்கிற பல குறைகள் இருந்தாலும் அது ஒரு நல்ல ஊரு தான்.
சென்னையில் ஆட்டோ காரங்க அடாவடி பண்றாங்க தான்..இல்லைன்னு சொல்லலை. ஆனா அது மட்டுமே ஒரு நகரம் நரகத்துக்கு ஒப்பானதுன்னு கம்பேர் பண்ண போதிய காரணமில்லைங்கிறது என்னோட தாழ்மையான கருத்து. அதை சொல்லறதுக்கு குறைஞ்சது ஒரு வருஷமாச்சும் ஒரு ஊர்ல வாழ்ந்து பாத்துட்டு சொல்றது நல்லதுன்னு நெனைக்கிறேன். "I love Chennai. I feel at home in Chennai" - இது உத்தராஞ்சல் மாநிலம் தெஹ்ராதூனைச் சொந்த ஊரா கொண்ட பெங்களூரில் பல வருஷம் படிச்சு வாழ்ந்த என் கூட வேலை செய்யற ஒருத்தர் சொன்னது(அவருக்கு பெங்களூரில் சொந்த வீடு கூட இருக்கு). மிலிட்டரி காரரான தன் தந்தையுடன் இந்தியாவின் பல ஊர்களிலும் வாழ்ந்து பார்த்த ஒருவர் என்னிடம் சொன்னது. நான் சென்னையைச் சேர்ந்தவன்னு தெரிஞ்சதும் தானாவே வலிய வந்து அவர் இதை என்கிட்ட சொன்னார். அப்படி என்ன இந்த "நரகத்துல" ஸ்பெஷல்னு ஆராய்ச்சி பண்ணா புரியாது... அனுபவிச்சிப் பாத்தா தான் தெரியும்.
:)
இது வரைக்கும் நான் நேத்தே அடிச்சி வச்சிருந்தது. வீட்டுல நெட் சரியா வேலை செய்யாததால நேத்து இந்த கமெண்ட் போட முடியலை.
//கண்டிப்பா இந்த ஒரு சில சம்பவங்களை வெச்சி மட்டும் ஒரு சிட்டியை மதிப்பிட முடியாது. ஆனா எனக்கு நடந்த அனுபவங்களை வெச்சி தான் நான் ஒரு முடிவுக்கு வர முடியும். ஒரு வேளை எனக்கு சென்னை ஒத்துவராதுனு நினைக்கிறேன்.//
ஒரு முடிவோட தான் இருக்கீங்க...இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்லை. இது மேல இருக்கற கமெண்டை இன்னிக்குப் போஸ்ட் பண்ண வந்து உங்க "முடிவைப்" படிச்சிட்டு இன்னிக்கு அடிச்சது.
:(
கைப்ஸ் அண்ணே,
இது எனக்கு குறுகிய காலத்துல சென்னைல இருந்த போது நிகழ்ந்த நிகழ்ச்சில ஏற்பட்ட எண்ணங்கள். அதிக நாட்கள் தங்கும் போது அந்த எண்ணங்கள் மாறலாம்.
Vetti Sir,
I agree with some of the comments you give. But as a whole don forget that intha country potta sooru matrum arivala than neenga ippo boston la irukeenga. yennamo, born with silver spoon mathiri nama pesa koodathu. Yella oorlayum intha prichinai irukku. Hyderabad la kanda padi kasu ketpan, 7 pera oru autola yethuvan, yevan ney theriyathu, yevanavathu yethyavathu adichikittu pona kooda theriyathu. Bangalore la kalaila poi yerakinona intha prichani irukku, illa nu sollala. Neenga romba naal US la iruntha la inga yenna nadakuthunu yeppadi namma makkal vazhkaya ootranganu puriyala. Konja naal ingaye iruntheengana unga mana nilai kandipa marum.
Post a Comment