தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, March 22, 2009

கசினோ, காதல் கதைகள் - 2

“What is this story man? I will tell you a story" அப்படினு மொனிஷ் ஆரம்பிச்சாரு. சரி, இதுக்கு மேல தமிழ்ல சொல்றேன்.

“நானும் அந்த பொண்ணும் மூணாவதுல இருந்து பத்தாவது வரைக்கும் ஒண்ணா படிச்சோம். நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். நான் அந்த பொண்ணை பத்தாவதுல ப்ரொப்போஸ் பண்ணேன். அதை அவள் ஏத்துக்கல. அதுக்கு அப்பறம் காலேஜ் எல்லாம் வேற வேற இடத்துல. அதாவது டென் ப்ளஸ் டூ, இஞ்சினியரிங் எல்லாம். ஒரே ஏரியாவுல இருந்ததால அடிக்கடி பார்த்துக்குவோம். ஆனா பேசிக்கல. நான் யூ.எஸ்க்கு MS படிக்க புறப்பட்டேன். சரியா நான் செக் இன் பண்ண போறதுக்கு முன்னாடி எங்க இருந்தோ வந்தா. என் கைலை ஒரு பிள்ளையார் சிலையை கிப்ட் பண்ணா”

“வாவ்”

“நான் யூ எஸ் வந்தா ஆறாவது நாள், சரியா அவளும் இங்க MS படிக்க வந்தா”

எல்லாருக்கும் ஆச்சரியம்.

"அதுக்கு அப்பறம் ரெண்டு வருஷம். நானும் அவளும் தினமும் பேசிக்குவோம். ரெண்டு பேரும் வேற வேற யுனிவர்சிட்டி. ரெண்டு வருஷம் கழிச்சி நான் மறுபடியும் ப்ரொப்போஸ் பண்ணேன். இந்த தடவை அவ அதை ஏத்துக்கிட்டா”

“வாவ். சூப்பர்”

“அதுக்கு அப்பறம் மூணு வருஷம். நானும் அவளும் அமெரிக்காவுல சுத்தாத இடமே இல்லை. Florida, Vegas அப்படினு எல்லா இடமும் சுத்தினோம். We had lots of fun. ரொம்ப சந்தோஷமா இருந்தோம். அப்பறம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு வீட்ல பர்மிஷன் கேட்டோம். எங்க வீட்ல ஒத்துக்கிட்டாங்க. ஆனா அவுங்க வீட்ல பயங்கர பிரச்சனை. அவுங்க வேற ஜாதி. அதனால அவுங்க கொஞ்சம் கூட ஏத்துக்கற மாதிரி இல்லை. அவுங்க அம்மா சூசைட் பண்ணிக்குவோம்னு அவளை மிரட்டினாங்க. அவள் வீட்டுக்கு ஒரே பொண்ணு. என்ன பண்றதுனு என்கிட்ட கேட்டாள். உங்க வீட்ல சொல்ற மாதிரி செய்னு சொல்லிட்டேன். அடுத்த மூணாவது மாசத்துல அவ வீட்ல மாப்பிள்ளை பார்த்தாங்க. அவள் கல்யாணம் பண்ணிக்கிட்டா. ரெண்டு வருஷத்துல ஒரு பையன். நான் இங்க இப்படி இருக்கேன்”

ஒரு அஞ்சு நிமிஷம் கார்ல யாரும் பேசாம வந்தோம். என்ன பேசறதுனு யாருக்கும் தெரியலை.

செந்தில் பேச ஆரம்பிச்சாரு. “அதுக்காக நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கறது சரியா? நீயும் கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லை”

“நான் அவ கல்யாணம் பண்ண அந்த சமயத்துலயே கல்யாணம் பண்ணிக்கலாம்னு யோசிச்சேன். ஆனா அது ஏதோ சரியா தெரியலை. கல்யாணம் பண்ணிக்கறது இந்த மாதிரி காரணத்துக்காகவானு யோசிச்சி விட்டுட்டேன்”

“இருந்தாலும் வயசாகிட்டே போகுதில்லை” மறுபடியும் செந்தில். எனக்கு என்ன பேசறதுனே தெரியலை. மொனிஷ்க்கு முப்பது வயசுக்கு மேல ஆச்சு.

“Is age is the only criteria for marraige? I think I am still not ready for the marraige”

“ஆனா இந்த தனிமை கஷ்டமா இல்லையா?” ஏதாவது கேக்கனுமேனு கேட்டேன்.

“நான் தான் எப்பவுமே பசங்களோட இருக்கனே. எனக்கு எதுவும் கஷ்டமில்லை. நிஜமா பார்த்தா காதல்னு ஒண்ணு இல்லை. நமக்கு அந்த பொண்ணு வேண்டும்னு நினைக்கிற எண்ணம் தான் அது. உண்மையான பாசம்னா அது பிள்ளைங்க மேல அப்பா, அம்மாக்கு இருக்குறது தான். மத்தது எல்லாம் பொய்”

மறுபடியும் அமைதி. கொஞ்ச நேரம் கழிச்சி பேச ஆரம்பிச்சாரு.

“பசங்க எப்பவுமே ரொம்ப எமோஷனல். பொண்ணுங்க அப்படி இல்லை. Their brains are segregated. They can change their mind soon. They are very practical. ஆனா பசங்களுக்கு தான் கஷ்டம்”

“அந்த பொண்ணு அதுக்கப்பறம் உங்களுக்கு எதுவும் ஃபோன் பண்ணி உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்லலையா?” இது நான்.

“இல்லை. அதுக்கு அப்பறம் அவக்கிட்ட நான் எதுவும் பேசல”

ஒரு பத்து நிமிஷம் எல்லாரும் அமைதியா இருந்தோம்.

அடுத்து பாட்டு சிடி மாத்தினோம்.ஹாய் மாலினி. ஐ அம் கிருஷ்ணன் அப்படினு ஆரம்பிச்சது. நான் அவர்ட பேச ஆரம்பிச்சேன்.

”இந்த படம் தெலுகுல கூட வந்துச்சு. சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணா அப்படினு வந்துச்சு. அதுல ஹீரோ ஹீரோயினை முதல்ல ட்ரைன்ல பார்ப்பான். உடனே ப்ரப்போஸ் பண்ணிடுவான்...” அப்படினு படத்து கதையை சொன்னேன். முதல் ஹீரோயின் பாம் ப்ளாஸ்ட்ல செத்து போறதோட கதை முடிஞ்சிடுச்சினு நான் சொன்னேன்.

”இதை விட சில கொடுமைகள் எல்லாம் நிஜத்துலயும் நடந்திருக்கு” அப்படினு அவர் ஆரம்பிச்சாரு.

“என் ஃபிரண்ட் ஒருத்தன். காலேஜ்ல அவனும் ஒரு பொண்ணும் ரொம்ப நல்லா பழகிட்டு இருந்தாங்க. சம்மர் வெக்கஷனுக்கு அந்த பொண்ணு அவுங்க வீட்டுக்கு போச்சு. காலேஜ் ஆரம்பிச்சி மூணு மாசமாகியும் வரலை. அவன் ஒரு வழியா அவுங்க வீட்ல விசாரிக்கும் போது தான் தெரிஞ்சிது, அந்த வெக்கஷனுக்கு போகும் போது பஸ் ஆக்சிடெண்ட்ல அந்த பொண்ணு இறந்துடுச்சினு. அதுக்கு அப்பறம் அந்த பையன் தண்ணி, ட்ரக்னு தடம் மாறிட்டான். அவன் வாழ்க்கையே வீணா போயிடுச்சி”

இரண்டு நிமிஷம் கழிச்சி அவரே சொன்னாரு, ”கதையா கேக்க தான் இதெல்லாம் நல்லா இருக்கும். நிஜத்துல இந்த வலி எல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கொடுமை.” அவரோட குரல்ல அந்த வலி தெரிஞ்சிது.

25 comments:

சீமாச்சு.. said...

//பசங்க எப்பவுமே ரொம்ப எமோஷனல். பொண்ணுங்க அப்படி இல்லை. Their brains are segregated. They can change their mind soon. They are very practical. ஆனா பசங்களுக்கு தான் கஷ்டம்//

என்னை மாதிரி இன்னும் நிறைய பசங்க இருக்காங்க அப்படீன்னு தெரியுது..

இந்த தாடிக்குப் பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்குது அப்படீன்னு எங்க ஊரு டீ. ஆரு சொல்லியிருக்காரு...

கல்யாணம் ஆகி .. புள்ளங்க பிறந்து.. அந்த சிம்புவும அலம்பல் வுட்டுக்கிட்டிருந்தும் அவர் அந்த தாடியை எடுக்கலைன்னா.. அந்த ஏமாற்றம் எவ்வளவு ஆழம் பாருங்க !!

சீமாச்சு..

சீமாச்சு.. said...

//”கதையா கேக்க தான் இதெல்லாம் நல்லா இருக்கும். நிஜத்துல இந்த வலி எல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கொடுமை.” அவரோட குரல்ல அந்த வலி தெரிஞ்சிது.
//

படிக்கும் போதே வலிக்குதே.. அந்தப் பையனுக்கு எப்படி இருக்கும்?

சீமாச்சு..

வெட்டிப்பயல் said...

//ஸ்ரீதர்கண்ணன் said...
Good one.//

மிக்க நன்றி ஸ்ரீதர்கண்ணன் :)

மனுநீதி said...

என் நண்பர்கள் ரெண்டு பேருக்கு இது நடந்து இருக்கு. ரெண்டு பேருக்குமே காதல் ஓகே சொன்ன அப்புறம் பொண்ணுங்க ஆக்சிடண்ட்ல இறந்துட்டாங்க .
கேட்கும் பொது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

வெட்டிப்பயல் said...

// Seemachu said...
//பசங்க எப்பவுமே ரொம்ப எமோஷனல். பொண்ணுங்க அப்படி இல்லை. Their brains are segregated. They can change their mind soon. They are very practical. ஆனா பசங்களுக்கு தான் கஷ்டம்//

என்னை மாதிரி இன்னும் நிறைய பசங்க இருக்காங்க அப்படீன்னு தெரியுது..
//
ஓ... கொல்ட்டி கதை அதனால தான் உங்களுக்கு பிடிச்சிதா?

//இந்த தாடிக்குப் பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்குது அப்படீன்னு எங்க ஊரு டீ. ஆரு சொல்லியிருக்காரு...

கல்யாணம் ஆகி .. புள்ளங்க பிறந்து.. அந்த சிம்புவும அலம்பல் வுட்டுக்கிட்டிருந்தும் அவர் அந்த தாடியை எடுக்கலைன்னா.. அந்த ஏமாற்றம் எவ்வளவு ஆழம் பாருங்க !!

சீமாச்சு..//

ரொம்ப உண்மை. நாம இவ்வளவு கிண்டல் பண்ணாலும் அவர் அதைப் பத்தி கவலைப்படலை. அவர் கவலை எல்லாம் வேற :(

வெட்டிப்பயல் said...

// Seemachu said...
//”கதையா கேக்க தான் இதெல்லாம் நல்லா இருக்கும். நிஜத்துல இந்த வலி எல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கொடுமை.” அவரோட குரல்ல அந்த வலி தெரிஞ்சிது.
//

படிக்கும் போதே வலிக்குதே.. அந்தப் பையனுக்கு எப்படி இருக்கும்?

சீமாச்சு..//

அவர் அதுக்கு அப்பறம் ஆளே மாறிட்டாரு. எனக்கு தெரிஞ்சி அவருக்கு வாழ்க்கைல பெருசா பிடிப்பு இல்லை :(

வெட்டிப்பயல் said...

// உள்ளத்தில் இருந்து.. said...
என் நண்பர்கள் ரெண்டு பேருக்கு இது நடந்து இருக்கு. ரெண்டு பேருக்குமே காதல் ஓகே சொன்ன அப்புறம் பொண்ணுங்க ஆக்சிடண்ட்ல இறந்துட்டாங்க .
கேட்கும் பொது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.//

இதை படிக்கும் போது எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு :(

Anonymous said...

வெட்டி சார்.... உங்கள் பதிவுகள் அனைத்தும் பிரமாதம்.. பிரிவு தொடர் மிகவும் அருமை.. வாழ்த்துக்கள்..

Anonymous said...

Unbelievably touching :(

நாகை சிவா said...

:((

என்னத்த சொல்ல!

Karthik said...

நல்லாருக்குங்க. :)

//“பசங்க எப்பவுமே ரொம்ப எமோஷனல். பொண்ணுங்க அப்படி இல்லை. Their brains are segregated. They can change their mind soon. They are very practical. ஆனா பசங்களுக்கு தான் கஷ்டம்”

:)

Poornima Saravana kumar said...

//இரண்டு நிமிஷம் கழிச்சி அவரே சொன்னாரு, ”கதையா கேக்க தான் இதெல்லாம் நல்லா இருக்கும். நிஜத்துல இந்த வலி எல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கொடுமை.” அவரோட குரல்ல அந்த வலி தெரிஞ்சிது//

இது வெறும் கதையா மட்டும் இருந்திருக்கக் கூடாதானு தோனுது..

Poornima Saravana kumar said...

// வெட்டிப்பயல் said...
// Seemachu said...
//”கதையா கேக்க தான் இதெல்லாம் நல்லா இருக்கும். நிஜத்துல இந்த வலி எல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கொடுமை.” அவரோட குரல்ல அந்த வலி தெரிஞ்சிது.
//

படிக்கும் போதே வலிக்குதே.. அந்தப் பையனுக்கு எப்படி இருக்கும்?

சீமாச்சு..//

அவர் அதுக்கு அப்பறம் ஆளே மாறிட்டாரு. எனக்கு தெரிஞ்சி அவருக்கு வாழ்க்கைல பெருசா பிடிப்பு இல்லை :(

//

என்னோட பிரண்டுக்கும் இந்த மாதிரி நடந்து இருக்கு.

நீங்க சொல்லி இருக்கும் இதே பதில் என் பிரண்டுக்கும் பொருந்தும்.

இதை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் வலியும், வேதனையும், ஒவ்வொரு நிமிடமும் வந்து வந்து கொல்லும் பழைய நியாபகங்களும், தனிமையின் கொடுமையும், இப்படி எல்லாமே அவர்களுக்கு வெறும் வலியை மட்டும் தான் கொடுக்கும் படி இருக்கு...

Anonymous said...

உங்கள் அனைத்து பதிவுகளும் படித்தாயிற்று.. உங்கள் எழுத்து நடை அற்புதம்... வாழ்த்துக்கள்.

Rajeswari said...

கஷ்டமாதான் இருக்கு..

Rajeswari said...

இது கதையா ?உண்மை சம்பவமா?

எதுவா இருந்தாலும் பரபாயில்ல...அருமையா இருக்கு

வெட்டிப்பயல் said...

//Rajeswari said...
இது கதையா ?உண்மை சம்பவமா?
//
Unmai sambavam thaan :(

வெட்டிப்பயல் said...

// Subbu said...
வெட்டி சார்.... உங்கள் பதிவுகள் அனைத்தும் பிரமாதம்.. பிரிவு தொடர் மிகவும் அருமை.. வாழ்த்துக்கள்..//

மிக்க நன்றி சுப்பு சார்... தொடர்ந்து படிக்கவும்.

வெட்டிப்பயல் said...

//jovind said...
Unbelievably touching :(//

மிக்க நன்றி ஜோவிந்த்.

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...
:((

என்னத்த சொல்ல!//

எதுவும் சொல்றதுக்கு இல்லை புலி :(

வெட்டிப்பயல் said...

// Karthik said...
நல்லாருக்குங்க. :)

//“பசங்க எப்பவுமே ரொம்ப எமோஷனல். பொண்ணுங்க அப்படி இல்லை. Their brains are segregated. They can change their mind soon. They are very practical. ஆனா பசங்களுக்கு தான் கஷ்டம்”

:)//

இன்னும் ஒரு நாலு வருஷம் கழிச்சி படிச்சி பாருப்பா... இன்னும் பிடிக்கும் :)

வெட்டிப்பயல் said...

//Poornima Saravana kumar said...
//இரண்டு நிமிஷம் கழிச்சி அவரே சொன்னாரு, ”கதையா கேக்க தான் இதெல்லாம் நல்லா இருக்கும். நிஜத்துல இந்த வலி எல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கொடுமை.” அவரோட குரல்ல அந்த வலி தெரிஞ்சிது//

இது வெறும் கதையா மட்டும் இருந்திருக்கக் கூடாதானு தோனுது..//

ஆமாம் தங்கச்சி :(

வெட்டிப்பயல் said...

//
என்னோட பிரண்டுக்கும் இந்த மாதிரி நடந்து இருக்கு.

நீங்க சொல்லி இருக்கும் இதே பதில் என் பிரண்டுக்கும் பொருந்தும்.

இதை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் வலியும், வேதனையும், ஒவ்வொரு நிமிடமும் வந்து வந்து கொல்லும் பழைய நியாபகங்களும், தனிமையின் கொடுமையும், இப்படி எல்லாமே அவர்களுக்கு வெறும் வலியை மட்டும் தான் கொடுக்கும் படி இருக்கு...

5:35 AM//

:(

திவாண்ணா said...

ரெண்டு பதிவும் படிச்சு என்ன ஒண்ணுமே பெரிசா இல்லையேன்னு நினைச்சேன், கடேசில முத்திரை குத்திட்டீங்க!
பாராட்டுகள் வெட்டி!

வாழவந்தான் said...

//
கதையா கேக்க தான் இதெல்லாம் நல்லா இருக்கும். நிஜத்துல இந்த வலி எல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கொடுமை
//
வேறெதுவும் சொல்ல தெரியல. அவர் சொன்னது உண்மையான வார்த்தைகள்