தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, February 16, 2009

வெண்ணிலா கபடி குழு

எங்க ஏரியால தமிழ் படம் அதிகமா ரிலீஸ் ஆகாது. நிறைய தெலுகு படம் வரும். ஆனா தமிழ் படம்னு பார்த்தா ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள் தான் ரிலிஸ் ஆகும். இதுல நாம விஜய், அஜித் படமெல்லாம் காசு கொடுத்தாலும் பார்க்க முடியாது. இப்ப பார்க்கனும்னு ஆசைப்படற படங்கள் எதுவும் இங்க ரிலிஸாகாததால சீக்கிரம் பார்க்க முடியாது. அதுக்குள்ள நம்ம ஆளுங்க அக்கு வேற ஆணி வேறயா பிரிச்சி மேஞ்சிடறாங்க. 

அந்த பிரச்சனைக்கு இப்ப ஓரளவு தீர்வு வர மாதிரி இந்த சைட் வந்திருக்கு. http://www.onlycinema.com. இதுல சில பிரச்சனைகள் இருக்கு. திடீர்னு ஸ்ட்ரக் ஆகிடுது. திரும்ப ஆரம்பிச்சா, நிறைய சீன் மிஸ் ஆகிடுது. ரெசல்யூஷனும் கொஞ்சம் சரி செய்யனும். மத்தபடி இது நல்ல ஐடியா. திருட்டு சிடில பார்க்கலனு நமக்கும் ஒரு திருப்தி.

சரி இப்ப நாம இந்த படத்துக்கு வருவோம். First thing first, படம் அருமை. நிச்சயம் பார்க்கலாம். படத்துல சில குறைகள் இருந்தாலும் இது நிச்சயம் பாராட்டற முயற்சி தான். சில இடங்களை தவிர, படம் பார்க்கற ஃபீலே வரலை. அப்படியே நிஜ மனிதர்களை நம் முன் உலவ விட்டிருக்கிறார் இயக்குனர். படத்துல யாரை பாராட்டறது யாரை விடறதுனு தெரியல. ஒவ்வொருத்தரையும் தனி தனியா பாராட்டினா பதிவு தாங்காது. 

கிஷோர் ஸ்லேங் அருமை. அவரை தமிழ் இயக்குனர்கள் இன்னும் அதிகமா பயன்படுத்தனும். அவரோட பார்வையே பாதி பேசி விடுகிறது. அதுக்காக அவரை வில்லனாவே போட்டு டார்ச்சர் பண்ணிடாதீங்கய்யா. 

இதுக்கு மேல படம் பார்க்கனும்னு ஆசைப்படறவங்க படிக்காதீங்க. May contain spoilers.


படத்துல எனக்கு ரொம்ப நெருடின இடங்கள். ஸ்லாக் ஓவர்னு சொல்ற இண்டர்வெலுக்கு முன்னாடி ஒரு இருபது நிமிடம், அதுக்கு அடுத்து வரும் ஒரு இருபது நிமிடமும் எப்படி ஓட்றதுனு தெரியாம ரெண்டு பாட்டு போட்ட மாதிரி இருக்கு. பாட்டும் ரொம்ப சுமார் தான். அடுத்து, கபடி ஆட்டம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ஒரு சிலர் தொடையை தட்டி கையை நீட்டி வாடா, வாடானு சொல்ற மாதிரி கபடி, கபடினு சொல்லுவாங்க (தயவு செஞ்சி இதை கில்லி விஜய் கூட கம்பேர் பண்ணிடாதீங்க). ஒரு சிலர் லைட்டா ஜம்ப் பண்ணிட்டே கபட், கபட், கபட்னு சொல்லுவாங்க, ஒரு சிலர் கையை ரொம்ப நீட்டாம காலால அடிச்சி பாயிண்ட் எடுப்பாங்க. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு ஸ்டைல் இருக்கும். அது எல்லாம் விட்டுட்டு, அதிகமா ஜம்பிங்கே காட்டிட்டு இருந்த மாதிரி இருந்தது. 

அதுவுமில்லாம கபடி ஆடறவங்க கண்ணு எப்படி மூவ் ஆகும்ங்கறதே பார்க்க அட்டகாசமா இருக்கும். அவ்வளவு வேகமான கருவிழி நகர்வதும், அதுல இருக்குற ஒரு வெறியும் பார்க்க ஒரு புலி வேட்டையாடற மாதிரி இருக்கும். அது கொஞ்சம் மிஸ்ஸிங். ஆனா இந்த படத்துல காட்டிய மாதிரிக்கூட இது வரை எந்த படத்துலயும் காட்டியதில்லை.

அப்பறம் நிறைய க்ளிஷேக்கள். ஹீரோயின் நடக்கறது, சிரிக்கறது எல்லாம் பார்த்தா சுப்ரமணியபுரம் ஸ்வாதி மாதிரியே இருந்தது. கிராமத்து பொண்ணுங்களுக்கு இருக்கற துடுக்குத்தனம் சுத்தமா மிஸ்ஸிங். பொண்ணுங்களே பொதுவா வாயாடிங்க. அதுவும் மதுரைக்கார பொண்ணுங்கனா சொல்லனுமா. ஏதோ சும்மா சிரிச்சி சிரிச்சிட்டு போற மாதிரி இருக்கறது காப்பி, பேஸ்ட் மாதிரி இருக்குது. 

அப்பறம் ப்ராக்டீஸ் பண்றதுனா ஒரு உணர்ச்சிகரமான பாட்டு போடறது எல்லா படத்துலயும் தொடர்கிறது. லகான், சக் தே இந்தியா மாதிரி இந்த படத்துலயும் அந்த சீன்ல ஒரு பாட்டு. அப்பறம் முதல் ஆட்டத்துலயும், கடைசி ஆட்டத்துலயும், வெச்சா குடுமி செரைச்சா மொட்டைங்கற மாதிரி முதல் பாதி ஆட்டம் வரைக்கும் எதுவும் பாயிண்ட் எடுக்காத மாதிரியும், அடுத்த பாதில கிஷோர் அறிவுரையை கேட்டு ஜெயிக்கற மாதிரி காட்டறதும், நாம நிச்சயம் தமிழ் சினமா தான் பாக்கறோம்னு ஞாபகப்படுத்துது. அதே மாதிரி க்ளைமேக்ஸ்ல டிரால இருக்கறதும். ஒரு விறுவிறுப்பை கொண்டு வரணும்னு இந்த மாதிரி விளையாட்டை கதைக்களமா வெச்சி வர எல்லா படங்களும் இதையே ஃபாலோ பண்றாங்க. 

படம் பார்க்காதவங்க இதுக்கு மேல நிச்சயம் படிக்காதீங்க. 

அடுத்து இந்த கொடுமையை என்னால ஏத்துக்கவே முடியல. ஏன்யா நல்ல படம்னா கடைசியா யாராவது செத்து மக்கள் கனத்த இதயத்தோட போகனும்னு ஒரு விதி இருக்கா என்ன? தமிழ்நாட்ல நல்ல படம்னு பேர் வாங்கனும்னா கடைசியா ஹீரோ, ஹீரோயினை சாகடிச்சா போதும்னு ஒரு மோசமான க்ளிஷே உருவாயிடுச்சி. சேதுல ஆரம்பிச்சிதுனு நினைக்கிறேன். அதுல அது நேச்சுரலா இருந்துச்சு. மீதி எல்லா படத்துலயும் அது தினிக்கிற மாதிரி இருக்குது. அதுலயும் குறிப்பா இந்த படத்துல அந்த க்ளைமாக்ஸ் சுத்தமா தேவையே இல்லாத மாதிரி இருந்தது. இந்த படத்துக்கு அழகா எத்தனையோ க்ளைமாக்ஸ் வெச்சிருக்கலாம். ஹீரோ, ஹீரோயின் சேரனும்னு நான் சொல்லலை. ஆனா இப்படி செத்து தான் முடிக்கனும்னு அவசியமில்லை. 


என்னடா படத்துல இவ்வளவு குறையை சொல்லிட்டு படம் நல்லா இருக்குனு சொல்றானேனு பாக்கறீங்களா? இது எல்லாத்தையும் மீறி படத்தை நான் ரொம்ப ரசிச்சேன். அதுக்கு முக்கிய காரணம், படத்துல ரத்தமும், சதையுமாக நடமாடிய மனிதர்கள் தான். நிறைய இடங்கள்ல வாய் விட்டு சிரித்தேன். 

படத்துல நான் ரொம்ப ரசிச்ச சில இடங்கள்.

கதாநாயகன் வீட்ல அவுங்க அம்மா சமைக்கும் போது இட்லி தட்டுல போட்டிருக்கற துணி, அந்த இட்லி வெந்துடுச்சானு கையை விட்டு பார்க்கறது. அதை கை சுட சுட அவுங்க அம்மா எடுத்து போட்டு பாசமா சொல்றது. இதெல்லாம் அப்படியே வீட்டுக்கு கூப்பிட்டு போன மாதிரி இருந்தது.

டேய் தகப்பா, தாய் கிழவினு சொல்லி கொடுக்கற நம்ம தமிழ்சினிமால இப்படி அம்மா மேல பாசமா பையன், நான் நல்லா இருக்குனு சொன்னா எல்லாத்தையும் என்கிட்டயே வெச்சிடும்னு சொல்ற இடமும், அய்யப்பன், அவுங்க அப்புச்சி சைக்கிள்ல கனமா வெச்சி தள்ளிட்டு வரும் போது அதை வாங்கி, கொடு நான் உருட்டிட்டு வரேனு சொல்ற இடமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. 

பொங்கல் விழால நடக்குற போட்டியும், அங்க கொடுக்குற கமெண்ட்ரியும் அட்டகாசம். அதுவும் கிஷோர் எதிர் திசைல போகும் போது கொடுக்கற கமெண்ட்ரி அட்டகாசம். அப்பறம் சித்தப்பா புலிபாண்டியை சுத்திவிட்டே மயக்கம் போட வைக்கறது சான்சே இல்லை. அப்புக்குட்டி மாமியாரை அடிக்கறதும் வெயிட்டான சீன். அந்த மாமியார் கொடுக்கற கமெண்டும் செம அட்டகாசம். 

பரோட்டா சீனை எல்லாரும் சொல்லிட்டாங்க. ஆனா அதைவிட அவர் க்ளைமாக்ஸ்ல அழுவுற சீன்ல இன்னும் அருமையா நடிச்சிருக்காரு. 

சரண்யா மோகன் is cute. 

சுசீந்திரன், உங்களோட அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமா இருக்கும். இன்னும் நீங்க அதிகமா உழைக்க வேண்டியதிருக்கும். இப்பொழுதைக்கு ஒரு நல்ல படம் கொடுத்ததுக்கு நீங்க நிச்சயம் பெருமைப்படலாம், வாழ்த்துகள்!!!

35 comments:

யாத்ரீகன் said...

Suda Suda vimarsanam-na idhaana :-)

வெட்டிப்பயல் said...

//யாத்ரீகன் said...
Suda Suda vimarsanam-na idhaana :-)//

ஹி ஹி ஹி...

படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதான் :)

SurveySan said...

படம் ஸ்டில் பாத்தா நல்ல படம் மாதிரிதான் தெரியுது.

onlycinema - ஏன் இப்படி புக் பண்ணி பாக்கர மாத்ரி செஞ்சிருக்கானுவ? y not on-demand?
இது லீகலா?

வெட்டிப்பயல் said...

//SurveySan said...
படம் ஸ்டில் பாத்தா நல்ல படம் மாதிரிதான் தெரியுது.

onlycinema - ஏன் இப்படி புக் பண்ணி பாக்கர மாத்ரி செஞ்சிருக்கானுவ? y not on-demand?
இது லீகலா?//

சர்வேஸ்,
அந்த சைட்ல நிறைய மைனஸ் பாயிண்ட் இருக்கு. ஒரே ப்ளஸ் இது லீகல்.

தைரியமா ரிவியூ எழுதலாம் :)

வெட்டிப்பயல் said...

இதே மாதிரி நான் கடவுள் பார்க்கறதுக்கு ஏதாவது சைட் இருக்கா? I mean Legal site...

நாமக்கல் சிபி said...

Good Review!

பாபு said...

எனக்கும் இந்த படம் பிடித்திருந்தது.
ஹீரோ, பஸ்-உடன் ரேஸ் போகும்போது ,அந்த டிரைவர் வண்டியை slow பண்ணி ,கண்டக்டர் கேட்கும்போது காரணம் சொல்வார்,
திருவிழா என்றதுமே வெள்ளை அடிப்பதும்,புது வெட்டி(சாரி வேட்டி) சட்டை போடுவதும் என்று சின்ன சின்ன scenes நிறைய ரசிக்கும்படி இருந்தது.

வெட்டிப்பயல் said...

// Namakkal Shibi said...
Good Review!//

நன்றி தள!!!

வெட்டிப்பயல் said...

// பாபு said...
எனக்கும் இந்த படம் பிடித்திருந்தது.
ஹீரோ, பஸ்-உடன் ரேஸ் போகும்போது ,அந்த டிரைவர் வண்டியை slow பண்ணி ,கண்டக்டர் கேட்கும்போது காரணம் சொல்வார்,
திருவிழா என்றதுமே வெள்ளை அடிப்பதும்,புது வெட்டி(சாரி வேட்டி) சட்டை போடுவதும் என்று சின்ன சின்ன scenes நிறைய ரசிக்கும்படி இருந்தது.

//

ஆமாம் பாபு... நானும் அந்த சீன் எல்லாம் ரொம்ப ரசிச்சேன். இந்த மாதிரி நான் சொல்லாம விட்ட நிறைய நல்ல சீன்களும் படத்துல இருக்கு...

வந்து எடுத்து கொடுத்ததற்கு நன்றி :)

முரளிகண்ணன் said...

நல்ல படம்

ஆ! இதழ்கள் said...

இதுக்கு மேல படம் பார்க்கனும்னு ஆசைப்படறவங்க படிக்காதீங்க. May contain spoilers.//

அதுக்கு மேல படிக்க விட மாட்டேன்றீங்களே. :)

ரமேஷ் வைத்யா said...

வெட்டிப்பயல்,
பிரமாதமான விமர்சகரா இருக்கீங்களே தம்பீ...

bharat said...

hi vetti,

Testergarnala eppai padathoda minus mattum athigama sollitu, plus camiya solreengala?????

any way comments are good but add some positive comments also.

மனுநீதி said...

இந்த படம் உண்மையா நடந்த சம்பவங்களை தழுவி எடுக்கபட்டதுன்னு எங்கேயோ படிச்சேன். அந்த க்ளைமாக்ஸ் மரணமும் உண்மையா நடந்திருக்குமோ?
கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த க்ளைமாக்ஸ் மனதை நெருடியது.

தமிழன்-கறுப்பி... said...

படம் பாக்கணும்னு ஆசை இருக்கிறதால மீதி படிக்கல...:)

தமிழன்-கறுப்பி... said...

\\
திருட்டு சிடில பார்க்கலனு நமக்கும் ஒரு திருப்தி.
\\

நம்ம ஏரியாவுல படமே வராது அதனால நமக்கும் எந்த குற்றவுணர்ச்சியும் இருக்கறதில்லை...

வெட்டிப்பயல் said...

//
முரளிகண்ணன் said...
நல்ல படம்

//

நன்றி முக :)

வெட்டிப்பயல் said...

//ஆ! இதழ்கள் said...
இதுக்கு மேல படம் பார்க்கனும்னு ஆசைப்படறவங்க படிக்காதீங்க. May contain spoilers.//

அதுக்கு மேல படிக்க விட மாட்டேன்றீங்களே. :)

12:52 AM//

கதை தெரிஞ்சா பரவாயில்லைனு நினைக்கறவங்க படிக்கலாம் ;)

வெட்டிப்பயல் said...

// ரமேஷ் வைத்யா said...
வெட்டிப்பயல்,
பிரமாதமான விமர்சகரா இருக்கீங்களே தம்பீ...

//

மிக்க நன்றி ரமேஷ் வைத்யா... ஆனா நான் போட்டது விமர்சனமானு எனக்கே தெரியலை :)

வெட்டிப்பயல் said...

// bharat said...
hi vetti,

Testergarnala eppai padathoda minus mattum athigama sollitu, plus camiya solreengala?????

any way comments are good but add some positive comments also.

2:38 AM//

பரத்,
படம் அருமைனு எடுத்தவுடனே சொல்லிட்டேன். அப்பறம் ஒவ்வொருத்தரையும் பாராட்டினா பதிவு தாங்காதுனும் சொல்லிட்டேன். ரத்தமும், சதையுமா மனிதர்களை நடமாட விட்டுர்கார்னும் சொல்லிருக்கேன். இதுக்கு மேல ஒவ்வொரு சீனையுமா சொல்ல முடியும்?

BTW,
I am not a tester :)

வெட்டிப்பயல் said...

// Ullathil Irundhu.......... said...
இந்த படம் உண்மையா நடந்த சம்பவங்களை தழுவி எடுக்கபட்டதுன்னு எங்கேயோ படிச்சேன். அந்த க்ளைமாக்ஸ் மரணமும் உண்மையா நடந்திருக்குமோ?
கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த க்ளைமாக்ஸ் மனதை நெருடியது.//

ஆஹா... உண்மை சம்பவமா?

இருந்தாலும் க்ளைமாக்ஸ் எனக்கு பிடிக்கல...

வெட்டிப்பயல் said...

//தமிழன்-கறுப்பி... said...
படம் பாக்கணும்னு ஆசை இருக்கிறதால மீதி படிக்கல...:)//

நல்லது. படம் பார்த்துட்டு பிடிச்சிருந்தா சொல்லுங்க :)

வெட்டிப்பயல் said...

//தமிழன்-கறுப்பி... said...
\\
திருட்டு சிடில பார்க்கலனு நமக்கும் ஒரு திருப்தி.
\\

நம்ம ஏரியாவுல படமே வராது அதனால நமக்கும் எந்த குற்றவுணர்ச்சியும் இருக்கறதில்லை...//

இங்கயும் நாம பார்க்கனும்னு ஆசைப்படற படங்கள் வரதில்லை

Divyapriya said...

//அதுலயும் குறிப்பா இந்த படத்துல அந்த க்ளைமாக்ஸ் சுத்தமா தேவையே இல்லாத மாதிரி இருந்தது//

அதே தான் ண்ணா…நானும் climax பாத்து நொந்துட்டேன் :(

Anonymous said...

படத்துல நிறைய சப் டெக்ஸ்ட் இருக்கு பாலாஜி. அத அனுபவிக்கத் தெரிஞ்சா மிக நல்ல படம். நான் மிகசும் ரசித்தேன். பாஸ்கர் சக்தியின் வசனமும், கமெண்டரியும் மிகவும் பிடித்தது.

நல்ல விமர்சனம்.

வெட்டிப்பயல் said...

//வடகரை வேலன் said...
படத்துல நிறைய சப் டெக்ஸ்ட் இருக்கு பாலாஜி. அத அனுபவிக்கத் தெரிஞ்சா மிக நல்ல படம். நான் மிகசும் ரசித்தேன். பாஸ்கர் சக்தியின் வசனமும், கமெண்டரியும் மிகவும் பிடித்தது.

நல்ல விமர்சனம்.

11:32 AM //

Neenga solrathu sari thaannaa... I liked the movie very much. Thats the reason I recommended it to all my friends...

aana naduvula oru 30 nimishathai kathiri poatirunthalum perusa vithyasam irukathu...

Also I am very much disappointed with the Climax :(

Anonymous said...

டி ரெயிலர் பாத்ததுமே எதோ நல்ல படம் மாதிரி தெரிஞ்சுது...நல்ல படம் தான் போல...கண்டிப்பா பாத்திருவோம்..அநேகமா ஆன்லைன் தான்னு நெனைக்கறேன்.

லேசா பறக்குது மனசு பாட்டு ஒரு ரெண்டு மாசத்துக்கு மின்னாடியே என் மொபைல் பேவரைட்டா இருந்துது :)

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
//அதுலயும் குறிப்பா இந்த படத்துல அந்த க்ளைமாக்ஸ் சுத்தமா தேவையே இல்லாத மாதிரி இருந்தது//

அதே தான் ண்ணா…நானும் climax பாத்து நொந்துட்டேன் :(//

ஆமாம்மா... அது தான் கொஞ்சம் கடுப்பு. நல்ல படம்னா இப்படி க்ளைமாக்ஸ் வைக்கனும்னு ஒரு ரூல் வந்துடுச்சு போல...

வெட்டிப்பயல் said...

//balavin said...
டி ரெயிலர் பாத்ததுமே எதோ நல்ல படம் மாதிரி தெரிஞ்சுது...நல்ல படம் தான் போல...கண்டிப்பா பாத்திருவோம்..அநேகமா ஆன்லைன் தான்னு நெனைக்கறேன்.

லேசா பறக்குது மனசு பாட்டு ஒரு ரெண்டு மாசத்துக்கு மின்னாடியே என் மொபைல் பேவரைட்டா இருந்துது :)//

கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் பாலா :)

Anonymous said...

// bharat said...
hi vetti,

Testergarnala eppai padathoda minus mattum athigama sollitu, plus camiya solreengala?????

any way comments are good but add some positive comments also.

2:38 AM//

பரத்,
படம் அருமைனு எடுத்தவுடனே சொல்லிட்டேன். அப்பறம் ஒவ்வொருத்தரையும் பாராட்டினா பதிவு தாங்காதுனும் சொல்லிட்டேன். ரத்தமும், சதையுமா மனிதர்களை நடமாட விட்டுர்கார்னும் சொல்லிருக்கேன். இதுக்கு மேல ஒவ்வொரு சீனையுமா சொல்ல முடியும்?

BTW,
I am not a tester :) //


இதுக்கு அடுத்த பதிவ வச்சி நீங்க testerநு நினைசேன்

Poornima Saravana kumar said...

அருமையான விமர்சனம் அண்ணா :)

ஜியா said...

I also liked the movie very much... besides the climax scenes... ovvoru sceneum attakaasamaa eduthirupaanga...

athuvum Kishore pesura slang... appadiye ticket edukkaama ooru pakkam poyittu vantha maathiri oru feel... athuthaan agmark Tirunelveli (city) slang... ela pottu pesurathu ellaam Nellai cheemaithaan.... aana athellaam Nellai-Thoothukudi border side...

Nice one... But... itha vaasichathukappuram yaarum padam paaka maattaaangannu thonuthu...

வெட்டிப்பயல் said...

//Nice one... But... itha vaasichathukappuram yaarum padam paaka maattaaangannu thonuthu...

//

en?

ஜியா said...

athaan kathai fullaa sollitteengale... athaan :))

வெட்டிப்பயல் said...

//ஜி said...
athaan kathai fullaa sollitteengale... athaan :))
//

Naan kooda vera ennumoanu ninaichi bayanthuten :)

padathula enjoy panrathuku Visual Treats niraiya irukupa... so makkal ithai padichitu feel panna maataanga...

ithu directorsoa illai asst directorso padicha, avungaluku adutha padathuku thayaraga use aagumenu poatirukarathu :)

ninaipu thaan poayaipai kedukamaamnu ellam sollapadathu :)